திருவள்ளுவர்

திருவள்ளுவர்

“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதைமனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்” மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.இவரது ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது இறுதி.

திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.எ.கா: 2014 +31 = 2045 (கி.பி.2014-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2045 என்று கூறுவோம்)* திரு+குறள்= திருக்குறள்* திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.* திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.*

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்* திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250* திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.*

திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.* அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் – (பொருட்பால் – அதிகாரம் 71) குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.*

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி*

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்*

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை* திருக்குறளில் 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.*

திருக்குறள் மாந்தர்கள் தம் அகவாழ்வில் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.* திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.

* திருக்குள் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் – அனிச்சம், குவளை* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்* திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.*

திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.* திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.* உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள். இது பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.* உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்.* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்* திருக்குறள் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.*

‘ஆலும் வேலும் பல்லுக்குறுதிநாலும் இரண்டும் சொல்லுக்குறதி’ இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.*

மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-ல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.* ‘”தொடிற்கடின் அல்லது காமநோய் போல விடிற்கடின் ஆற்றுமோ தீ” (1159) என்ற குறள் ஒரே எழுத்தில் முடிந்துள்ளது.*

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்* திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்- பரிமேலழகர்*

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.* எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்*

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.* ெே என்ற இந்தக் கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன.*

சிறப்புப்பெயர்கள்: வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்.

* திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.*

திருக்குறள் இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகப் பொது மறை” என்றும் அழைக்கப்படுகிறது*

திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.

* திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர். மேலும் மு.வரததாசனார், மணக்குடவர் என பலர் எழுதியுள்னர்.*

விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.* திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர் தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குதவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர்.* திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் – வீரமாமுனிவர்.*

அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை என வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.*

“ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து” – என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள் குறிபிடப்பட்டுள்ளன.*

அன்னம், கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் மீன். மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.* பலோடு தேன்கலந் த்ற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர் (112) – என்ற குறளில் பால், தேன், நீர் என்ற மூன்று நீர்மங்கள் இடம் பெற்றுள்ளன.*

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு” – என்ற குறளில் ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ளது.*

ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும், ஒறே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.* “துணை எழுத்தே இல்லாத குறள்”கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக”. (391)*

திருக்குறளில் தமிழ் என்ற சொல் இடம் பெறவில்லை.* முதன் முதலில் 1812 ஆம் ஆண்டு ஓலைச்சுவடியிலிருந்து அச்சிடப்பட்டதே திருக்குறளின் முதற்பதிப்பாகும்.* திருக்குறளில் ஒரு முறை மட்டுமே இடம் பெற்றுள்ள எழுத்துகள் ‘”வீ, ங”.*

1330 குறட்பாக்களில் எந்த இடத்திலும் கடவுள் என்ற சொல் இடம் பெறவில்லை.* திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

இதுபோன்று பல சுவையான அரிய தகவல்களுடன், கீழ்வரும் 19 அதிகாரங்களின் குறள்களையும், அவற்றின் அர்த்தங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். மேலும் இந்த 19 அதிகாரத்திலுள்ள எந்த ஒரு குறளும் எந்த அதிகாரத்தில் உள்ளது என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு பயன் பெறுங்கள்.

குறள்கள் அறிவோம்…அன்புடைமை71. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்.

பொருள்: அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை அன்புக்குரியவரின் துன்பத்தைப் பார்த்ததுமே நம் அன்பு கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும்.

72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்குபொருள்: அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது எண்ணுவர் அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

73. அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்புபொருள்: உடம்போமு உயிர் இமைந்து இருப்பதைப் போல, வாழ்க்கை நெறியோடு அன்பு இணைந்து இருக்கிறது.

74. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்புஎன்னும் நாடாச் சிறப்புபொருள்: அன்பு விருப்பத்தைத் தரும். விருப்பம் அனைவரிடமும் நட்புக்கொள்ளும் பெருஞ்சிறப்பைத் தரும்.

75. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்புபொருள்: அந்போடு பொருந்திய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்தவர் உலகத்தில் மகிழ்ச்சி உடையவர் ஆவர்.

76. அறத்திற்கே அன்புசார் என்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணைபொருள்: அன்பு அறத்தை மட்டும் சார்ந்தது என்று கூறுவோர் அறியாதவர் வீரத்திற்கும் அன்புதான் துணை.

77. என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்பொருள்: எலும்பில்லாத உயரிகளை வெயில் வருத்தி அழிப்பதுபோல, அன்பில்லாத உயரிகளை அறம் வருத்தி அழிக்கும்.

78. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரம்தளிர்த் தற்றுபொருள்: பாலை நிலத்தில் உள்ள வாடிப்போன மரம் தளிர்க்காது. அதுபோல, நெஞ்சில் அன்பு இல்லாத மனிதர் வாழ்க்கை தளிர்க்காது.

79. புறத்துறப்பு எல்லாம் எவனசெய்யும் யாக்கைஅகத்துறப்பு அன்பி லவர்க்குபொருள்: நெஞ்சில் அன்பு இல்லாதவர்கு, கைகால் போன்ற உடல் உருப்புகளால் என்ன பயன்?

80. அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்புபொருள்: அன்பு செய்வதுதான் உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளம் அன்பில்லாதவர் உடம்பு வெறும் தோலால் மூடப்பட்ட எலும்புதான். அங்கு உயிர் இல்லை. இனியவை கூறல்

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.பொருள்: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

92. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.பொருள்: முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

93. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.பொருள்: முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.பொருள்: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.பொருள்: வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்.பொருள்: பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்.பொருள்: பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

98. சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.பொருள்: பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும். 99. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது.பொருள்: இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

100. இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.பொருள்: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது. செய்ந்நன்றி அறிதல்.

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.பொருள்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.பொருள்: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.பொருள்: இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.

104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.பொருள்: ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

105. உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.பொருள்: உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.பொருள்: குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.பொருள்: ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.

108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.பொருள்: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.பொருள்: ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.பொருள்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

https://www.facebook.com/permalink.php?story_fbid=510102012427464&id=417457115025288

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply