ஈழம் தமிழரின் தொன்மையும் வரலாற்றுத் தாயகமும்!
மனிதகுல நாகரிக வளர்ச்சிப் போக்கில் எல்லாமே இடையறாது மாறிக்கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் வளர்ச்சிப் படிமுறைகளின் தொடர்ச்சியான தொகுப்பையே வரலாறு என்கின்றோம்.
இவ்வரலாற்றில் மனிதனுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற போது சமூகவிஞ்ஞானம் என்கிறோம். இத்தகைய மனிதனது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் விளங்கிக் கொள்ள வரலாறு என்கின்ற இறந்த காலத் தொகுப்பை ஆராய முற்படுகிறோம்.
இந்தவகையில் ஈழத் தமிழரின் எதிர்கால இருப்பை தக்கவைக்க தமிழரின் தொன்மையின் மூலத்தை அறியவேண்டியது அவசியமாகின்றது.
ஈழத்தமிழரின் தொன்மையை விளக்குவதற்கு இற்றைய காலம் வரையும் பயன்படுத்தப்பட்ட இலக்கிய ஆதாரங்களையும், கர்ணபரம்பரைக் கதைகளையும் விடுத்து தொல்லியல், மரபணுவியல், விஞ்ஞான பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தரவுகளும் முடிவுகளுமே நம்பகத்தன்மை வாய்ந்தனவாகும். இவ்வாறன ஆய்வு முடிவுகளையே இன்றை உலகம் எற்கும்.
இலங்கையின் வரலாற்றை கி.மு.5 (கி.மு 463)ஆம் நூற்றாண்டில் விஜயனின் வருகையுடன் ஆரம்பிப்பதாக சிங்கள வரலாற்றாசிரியர்கள் மகாவம்சத்தை ஆதாரம்காட்டி கூறிவந்த பொய்யான கருத்தினை முற்றுமுழுதாக மாற்றியமைக்கவல்ல நம்பகத் தன்மை வாய்ந்த வரலாற்று தொல்லியல், ஆதாரங்கள் ஏராளமானவை வட இலங்கையிலேயே கண்டுபிடிக்கபட்டிருக்கின்றன.
</div><p>குறிப்பாக இரணைமடு மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கால அதாவது மேலைப் பழங்கால கற்கால மனிதர்களின் எச்சங்கள் 1970 களின் பிற்பகுதியில் சிங்களத் தெர்ல்லியலாளரான சிரான் தெரணியகல மேற்கொண்ட ஆய்வில் வெளிக் கொணரப்பட்டது.
இவ்வெச்சங்கள் 1,25,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை எனக் கணிப்பிடப்பிட்டிருக்கின்றன. அவ்வாறே ஆனைக்கோட்டை, பொம்பரப்பி, ஆனைவிழுந்தான், குஞ்சுப்பரந்தன் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட ஈமைத் தாழிகள் 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தனவாகவும் உள்ளன.
ஈழத்தின் மூத்த குடிகளாக இயக்கர், நாகர் என்போரே வாழ்ந்தனர். இவர்களில் நாகர்கள் கி.மு 7ம் நுாற்றாண்டளவில் இத்தீவில் அரசமைத்து வாழ்ந்தார்கள் என்பதற்கான தொல்லியல் ஆதாரங்கள் இன்று மிகத் தெளிவாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செட்டிகுளம் கப்பாச்சிப் பகுதியில் பரல் உயர் பதுகைச் கல்வட்டச் சவ அடக்கம் ஒன்று 2012 ஆண்டு யாழ் தொல்லியற் பேராசிரியர் புஸ்பரட்ணத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது.. இவை இற்றைக்கு 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை எனக் கணிப்பிடப்படுகிறன.
மேற் குறிப்பிட்ட இரண்டு சவ அடக்கங்களும் தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட இவ்வகைச் சவ அடக்கங்களுடன் ஒத்துப் போவது குறிப்பிடக் கூடிய விடயமாகும்.
எனவே தமிழர்கள் தென்னிற்தியத் தீபகர்ப்பத்திலும், இலங்கையிலும் தொடர்ச்சியாக நாகரிகமான சமூதாயமாக இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்தார்கள் என்பது ஐயந்திரிபுற நிமூபிக்கப்படுகிறது.
இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து இறுதிப் பனியுகத்தின் முடிவில் ஏறத்தாள 7000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்தியாவிலிருந்து இலங்கை நிலத் தொடர்பின்றி கடலால் தனியாக பிரிக்கப்பட்டதைபுவிச்சரிதவியலாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
எனவே தமிழர்கள் இந்நிலப் பிரிப்பின் பின்னரும் இரு பிரதேசங்களிலும் தங்களுடைய பாரம்பரிய வழக்கங்களைப் பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
அனுராதபுரத்தை ஆண்ட பெரும்பாலான மன்னர்கள் நாக அரசர்களாவர். கிமு 4ம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பண்டுகாபயன் ”சிவிகாசல” ”லோபக்சால” என்ற தலங்களை அமைத்தான். இவை ‘சிவலிங்கத்தை உடைய வீடு‘ என பரணவிதான கூறுகிறார்.
பண்டுக்காபயன் ஒரு சிவ பக்தனாக இருந்தமையினாலேயே தன் மகனுக்கு மூத்தசிவன் என பெயரிட்டான். மூத்தசிவனும் தன் பிள்ளைகளுக்கு அபயன், தீசன், மகாநாகன், உத்தியன், மத்தபயன், மித்தன், மகாசிவன், சூரதீசன், அசேலன், கீரன் என ஒன்பது ஆண் மகன்களும், அனுலா மற்றும் சிவாலி என்று மகள்களுக்கும் சைவப் பெயர்களையே சூட்டினான்.
மூத்தசிவனின் தீசன் என்ற மகனே தேவநம்பிய தீசன் என அசோகப் பேரரசனால் பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டான்.
சிங்களத்தின் காவலன் என மார்பு தட்டப்படும் துட்டகைமுனு ஒரு நாகஇளவரசன் என இ.ரீ .கன்னங்கரா எனும் சிங்கள அறிஞர் கூறுகிறார். மகா பராக்கிரமபாகு ஒரு பாண்டியன் என வரலாறு நிரூபிக்கிறது. தீசன், பாகு என்னும் பெயர்கள் தமிழரின் மூதாதையரான நாகர்களுடைய பெயர்களாகும்.
கி-மு 259 -கி-மு 205 வரையான தேவநம்பிய தீசன் காலத்தில் தவிர நாகதீப பிரதேசங்கள் யாவற்றையும் நாக அரசர்கள் சுதந்திர மன்னர்களாக ஆட்சி புரிந்தார்கள்.
அனுராதபுரத்தில் ஆட்சி செய்த காலத்தில் இசிகிரியான் என்ற அமைச்சன் கந்தரோடை வல்லிபுரம் ஆகியவற்றை பௌத்த மன்னர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். இக்காலத்திலும் சைவத்தமிழ் மக்கள் பௌத்தர்களாக மதம் மாற்றப்பட்டனர் அவ்வாறு கிராமங்களின் பெயர்களும் மாற்றமடைந்தன. காலத்துக்கு காலம் சிங்கள மன்னர்கள் நாட்டின் மீது படை எடுப்பதும் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து அவர்களை விரட்டுவதும் மாறிமாறி இடம்பெற்றிருந்தன. இதற்கு நாகதீபத்தில் அதாவது யாழ்குடாவிலும், அத்துடன் பூநகரி, முல்லைத்தீவு, அனுராதபுரம் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் சான்றாதாரம் ஆகிறன.
இவை பூநகரி, மண்ணித்தலை, கல்முனை , ஆனைக்கோட்டை, கந்தரோடை , நெடுங்கேணி, வெடுக்குநாறிமலை, பெருமியான் குளக் கல்வெட்டுக்கள் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளாகும்.
இவை கி.மு.3ஆம் நூற்றாண்டுக்கு உரியனவாகக் காணப்பட தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களே என்று உறுதிப்படுத்தப்பட்டடுள்ளன.
இதிலிருந்து ஈழத் தமிழரின் நாகரிகமும், அவர்களுடைய எழுத்து வடிவங்களும் இந்திய தீபகர்ப்ப நாகரிகத்திலிருந்தும், பண்பாட்டிலிருந்தும் எந்தவகையிலும் குறைந்துவிடாத நிலையில் இருந்திருக்கிறது என்பதனை அறிய முடிகின்றது.
ஈழத் தமிழருடைய தொன்மையை நிரூபிப்பதற்கான நவீன சான்றாதாரங்களாக மரபணுவியல் ஆய்வுகளையும், அதன் முடிவுகளையும் குறிப்பிடுவது பொருத்தமானது. விசமிகள் வரலாற்றனை தனிமனிதர்களதும், மதத்தினதும் பெயரால் திரிவுபடுத்தி பொய்மையான வரலாறு ஒன்றினை மெய்ப்பிக்க முனைந்தாலும் , மரபணுவியல் ஆய்வு முறைகளும், காபன் பகுப்பாய்வுக் காலக் கணிப்புக்களும், வெப்பேற்றுவியல் காலக்கணிப்புக்களும். உண்மையை உள்ளபடியே உணர்த்திவிடும்.
அவ்வகையில் வடஇலங்கையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியற் சான்றுகளும், உலோக நாணயங்களும் விஞ்ஞான முறையான ஆய்வுமுறைக்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட முடிவுகளும் தொல்லியலாளர்கள் குறிப்பிட்ட. காலக் கணிப்பும் ஒத்துப் போவதனால் ஈழத் தமிழரின் தொன்மை மொழிசார்ந்து தமிழிர் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஐயந்திரிவற நிரூபிக்கிறது.
ஈழத் தமிழரின் தொன்மையை நிரூபிப்பதற்கு மரபணுவியல் ஆய்வுகள் மிகமிக முக்கியமானவையாகும். தென்னிந்தியத் தீபகர்ப்பத்திற்கு புதிய மனிதன் முதன் முதலில் ஆபிரிக்காக் கண்டத்திலிந்தே வந்து சேர்ந்தான் என்கிறது ஆய்வியல் தகவல்கள். இவன் ஆபிரிக்காவை விட்டுப் புறப்பட்ட காலம் இற்றைக்கு 85,000 ஆண்டுகள் முன்பு எனக் கணிக்கப்படுகிறது.
இவர்கள் பேசிய மொழி ஒஸ்திரலோயிட் அல்லது முண்டா என அழைக்கப்பட்டது. அத்துடன் இற்றைக்கு 30,000 ஆண்டுகளுக்கு முன்பும், 10.000 ஆண்டுகளுக்கு முன்புமாக இரு இடப் பெயர்ச்சிகள் மத்தியதரைக் கடல்ப் பகுதியில் இருந்து தென்னிந்தியா நோக்கி புலம் பெயர்ந்ததாக பென்சவேல் எனனும் மரபணுவியல் ஆய்வாளர் குறிப்பிடுவார். இவர்களே இன்றைய தென்னிந்தியர்கள். நவீன வரலாற்று ஆசிரியர்கள் இவர்களைத் திராவிட இனத்தவர்கள் என குறியீட்டுப் பெயரால் அழைக்கின்றனர். இவர்களைக் குறிக்கப் பயன்படுத்தும் மரபுணுவியல் குறியீடு M20 ஆகும்.
அதேவேளை இந்தோஅரியர்கள் மத்திய ஆசியப் புல்வெளிப் பகுதியிலிருந்து 3800 ஆண்டுகளுக்கு முன்புதான் புலம்பெயர்ந்து வடஇந்வியாவின் குஜராத், பஞ்சாப் பகுதிகளில் குடியேறி நிலைபெற்றனர். இவர்களின் மரபணுவியல் குறியீடு M17 என அழைக்கப்படுகிறது.
1995ல் மானிடவியல் ஆய்வாளர் கலாநிதி சாகா தலைமையிலான குழுவினர் இலங்கையில் தலா 100 சிங்களவர் , தமிழர் ,முஸ்லிம் , பறங்கியர்களின் இரத்தமாதிரிகளை சேகரித்து நியுகாசில் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வில் சிங்களவர்களும் தமிழர்களும் M20 மரபணுவியல் குறியீட்டையே கொண்டிருந்தனர். சிங்களவர் ஒருவரிற்கூட ஆரியருக்குரிய M17 மரபணுவியல் குறியீடு கானப்படவில்லை என்பது ஆச்சரியமான விடையம்.
இவர்கள் யாவரிலும் மலையாளிகள், தென்னிந்தியத் தமிழர்களின் மரபணுவியல் உறவே காணப்படுவதாகவும் அதேநேரம் சில உயர் சாதிச் சிங்களவர்களின் மரபணு மேற்கு வங்காள உயர்சாதி வங்காளிகளுடன் பொருந்தி இருக்கக் காணப்பட்டது.
ஆகவே இலங்கையின் வரலாற்றில் சிங்களவர்களின் மூதாதையர்கள் வட இந்தியாவில் இருந்து வரவில்லை என்பதும், விஜயன் என்கின்ற ஒரு மனிதன் இலங்கைக்கு வரவில்லை என்பதுவும் , விஜயனின் கதை வரலாற்றைத் திரிவு படுத்துவதற்காக மகாவம்சம் என்ற நூலில் புனையப்பட்ட புனைகதை என்பதுமே ஆய்வறிவியல் உண்மையாகும்.
https://www.jvpnews.com/community/04/290433?itm_source=parsely-api?ref=recommended1
Leave a Reply
You must be logged in to post a comment.