பேரரசர் அசோகர்

அசோகப் பேரரசர்

அசோகர் மௌரிய வம்சத்தை சேர்ந்த இந்திய அரச யாதவர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.

கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார்.புத்த மதத்தைஆசியாவெங்கும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான் புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராக கருதப்படுகிறார்.

சந்திரகுப்த மெளரியர்

மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மெளரியர் ஆவார் ,மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு அதன் தலை நகரம் பாடலி புத்திரம், இது தற்போதைய பீகார், தலை நகரம் பாட்னா என அழைக்கப்படுகிறது.
.இவர் இடையர் குலம்  மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர் அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர்.காட்டில் இருந்த சந்திரகுப்தரை நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார்.தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசி காலத்தில் சமண மத துறவியாகி பெங்களூர் அருகே உள்ள சரவன பெலகுலாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்கை வாழ்ந்து உயிர் துறந்தார் ,இதனாலேயே அங்குள்ள மலைக்கு சந்திர கிரி என்ற பெயர் வந்தது.

பிந்துசாரர்

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார், பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால் , சுஷ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள் (பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப்பொருள் படும்).பிந்து சாரர் திருனெல்வேலி வரைக்கும் படை எடுத்து வந்து வென்றதாக கூறுகிறார்கள்.இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.பிந்து சாரருக்கு பிறகு அரியனை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு. திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.

சக்கரவர்த்தி அசோகர்(கி.மு 273 – 232)

அசோகர் பிந்துசாரருக்கும் அவரது பிராமண மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர் , சிலர் அவர் செல்லுகஸ்நிக்கேடர் என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள்.அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார் இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் (மகிந்த தேரர்,சங்கமித்தையும் பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினார்.

EdictsOfAshoka.jpg

கலிங்கப் போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்துள்ளார், தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்துள்ளார். அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும் இருந்துள்ளார் இதனை கிண்டல் செய்த அந்தப்புற பெண்கள் 1000 பேரை கழுவில் ஏற்றி கொன்று உள்ளார்.சந்திர குப்தர் , பிந்து சாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்கு பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள் , எனவே ஒரே அடியாக கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார்.கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிஸா, மகத நாடு தற்போதைய பீகார். கலிங்க நாட்டை ஆட்சி செய்தது கரவேளர்கள் என்ற அரச வம்சம். கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை எந்த வரலாற்று நூலிலும்.கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார் அசோகர். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர்.இக்கொடிய போர்க்களக்காட்சியை கண்டு தான் அசோகர் மனம் மாறினார். புத்த சமயத்தை தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார். ஆனால் உண்மையில் இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்பார்கள். அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர் , அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார் ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு அந்த வகையில் குணாளன் , ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு.இதில் குணாளன் அழகு மிகுந்தவர் எனவே அவர் மீது அசோகரின் மற்றொரு மனைவியான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார், ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பதிற்கு இணங்கவிலை. எனவே, வஞ்சகமாக அவரை வெளிநாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு வைத்து தனது ஆட்களை வைத்து கண்களை குருடாக்கி விட்டார்.கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரத்தின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்தார் அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார்(இப்படி ஒரு கதையம்சம் கொண்ட சிவாஜிகணேசன் நடித்த படம் கூட உண்டு பெயர் சாரங்கதாராதனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு கட்டிய உடையுடன் வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் மிகவும் துன்பமானதாகவும் தனிமையாவும் அமைந்தது. இருந்த செல்வம் அனைத்தையும் தானம் செய்துவிட்டதால் ஆட்சிக்கு வந்த மற்றொரு மகன் ராதாகுப்தர் என்பவர் அசோகரை புறக்கணித்து கவனிக்காமல் விட்டு விட்டார்.

தேவனாம்பியாச பிரியதர்ஷன்

தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரில்யே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது , பின்னர் ஒரு வெள்ளைக்கார ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார்; இல்லை எனில், இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.அசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள் மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார் அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

  • அசோகர் பின்னாளில், இலங்கை அரசன் ஒருவனுக்கு முடியுடன், தேவநம்பிய என்ற பட்டமும் அளித்ததாக மகாவம்சம் கூறுகிறது. அவ்வரசன் பெயர்தேவநம்பிய தீசன் என்று பின்னாளில் அறியப்படுவதாயிற்று.
அசோகர் கல்வெட்டுக்கள்

பேரரசர் அசோகர் கல்வெட்டுக்கள் இந்திய துணை கண்டத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன. குறிப்பிடத்தக்க கல்வெட்டுக்கள்:

  • பதினான்கு பாறை வெட்டுக்கள்
  • கலிங்க பாறை வெட்டுக்கள்
  • சிறு பாறை வெட்டுக்கள்
  • ஏழு தூண் வெட்டுக்கள்
  • சிறு தூண் வெட்டுக்கள்
பதினான்கு பாறை வெட்டுக்கள்

புகழ் பெற்ற பதினான்கு பாறை வெட்டுன் ஆறாம் கருத்து மன்னர் மக்களின் பிரச்னைகளை உடனடியாக கவனிப்பதை உணர்த்துகிறது.கடவுளுக்குப் பிரியமான மன்னர் பிரியதர்சி இவ்வாறு சொல்கிறார்: ‘இதற்கு முன் அரசாங்க வேலைகளைச் சரியாகக் கவனிக்க முடியாமலும், சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பெற முடியாத நிலையும் இருந்து வந்தது. அதனால், இந்தப் புதிய ஆணை பிறப்பிக்கப்படுகிறது. மாமன்னராகிய நான் எந்த நேரத்திலும், உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கையறையில் சயனம்கொண்டு இருந்தாலும், தேரில் பயணம் செய்துகொண்டு இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், கேளிக்கை நிகழ்வுக்காக பூங்காவில் இருந்தாலும், வேறு எந்த இடத்தில் எப்படி இருந்தாலும், அரசாங்க அலுவலர்கள் மூலம் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் எனக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே மக்களின் பிரச்னைகளை உடனடியாக என்னால் கவனிக்க முடியும். கொடை மற்றும் நலத் திட்டப் பொது அறிவிப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தைகளாகப் பிறப்பித்து இருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர உத்தரவுகள் தொடர்பாக யாருக்காவது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்கள் உடனடியாக மன்னராகிய என்னிடம் வந்து சேரவேண்டும். இது என்னுடைய ஆணை. வேலையைக் கவனமாகச் செய்வதிலும் அதற்காக கடுமையாக உழைப்​பதிலும் போதும் என ஒரு நாளும் நான் திருப்தி அடை​வது இல்லை. மக்கள் அனைவரது நலத்தையும் பேணுவதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது, ஆகவே, வேலை​களைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை. இந்தத் தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், கல்வெட்டில் எழுதப்படுகிறது’

http://tamilyadavs.blogspot.com/2013/08/blog-post_8653.html

மகிந்தன்

மகிந்தன்
அருகதர் மகிந்தனின் சிலை
சமயம்பௌத்தம்
உட்குழுதேரவாத பௌத்தம்
சுய தரவுகள்
தேசியம்இந்தியன்
பிறப்புமகேந்திரன்
கி மு 3-ஆம் நூற்றாண்டு
உஜ்ஜைன்இந்தியா
இறப்புஅனுராதபுரம்இலங்கை
நினைவிடம்இலங்கை

மகிந்தன் அல்லது மகிந்தர் (Mahindaசமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்த புத்த மதகுரு ஆவார். இவர் மவுரியப் பேரரசர் அசோகருக்கும் அவரது முதல் மனைவி தேவிக்கும் பிறந்த இரட்டையர்களில் மூத்தவர். மற்றையவர் சங்கமித்தை. மகிந்த தேரரே இலங்கைக்கு பௌத்த மதத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.

பேரரசர் அசோகர் இவருக்கு மகேந்திரா (உலகத்தை வென்றவன் என்ற பொருளில்) பெயர் வைத்தார். ஆனால் மகேந்திரன் தனது அன்னையின் வழிநடத்தலில் பௌத்த மதகுருவானார்.Bed of Mahinda in Mihintale

பொருளடக்கம்
வரலாற்று ஆவணங்கள்

இலங்கையின் பண்டைய வரலாற்றைக் கூறும்  தீபவம்சம்மகாவம்சம் ஆகிய இரண்டிலும் மகிந்த தேரர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டதையும், தேவநம்பிய தீசன் என்ற மன்னனை பௌத்தத்துக்கு மதம் மாற்றியமை குறித்தும் எழுதப்பட்டுள்ளன.[1] இவை இரண்டுமே மகிந்தரின் வாழ்வு மற்றும் ஆவணங்களின் முதன்மை ஆதாரங்களாகும். கல்வெட்டுகள் மற்றும் இலக்கிய ஆதாரங்கள் இலங்கையில் கிமு 3 ஆம் நூற்றாண்டில் மகிந்தரின் காலத்தில் இலங்கையில் பௌத்த சமயம் பரவியதைக் காட்டுகின்றன.[1]

அசோகரின் புதல்வரான மகிந்தர் இலங்கைக்கு வந்ததாகவும், அசோகரின் புதல்வி சங்கமித்தை பௌத்த துறவியாகி இலங்கைக்கு போதி மரத்தைக் கொண்டு வந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. ஆனாலும், அசோகர் இதனைக் குறிப்பிடவில்லை, அத்துடன் சிங்களக் கலையில் ஆரம்பகால ஓவியங்கள் அல்லது சிற்பங்களில் இவர்களைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

மகிந்தர் இலங்கை அரசரை மதம் மாற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. புத்தரைப் பற்றி பல ஆய்வுகளை எழுதியவரும், பாளி மொழியில் இருந்து பல நூல்களை மொழிபெயர்த்தவருமான செருமனியைச் சேர்ந்த இந்தியவியலாளர் பேராசிரியர் எர்மன் ஓல்டென்பர்க் மகிந்தரின் கதையை ஒரு “தூய கண்டுபிடிப்பு” எனக் கூறியுள்ளார். அசோகரும் இந்தியாவின் ஆரம்ப வரலாறும் என்ற நூலை எழுதிய வி. ஏ. சிமித் என்பவர் இதனை அபத்தம் எனக் கூறியுள்ளார். தனது மகன் மகிந்தவை பௌத்த மதப்பரப்புனராக கோவிலுக்கு அர்ப்பணிப்பது பற்றியும், இலங்கை அரசரை மதம் மாற்றுவதில் மகிந்தரின் பங்கு பற்றியும் அசோகரின் கல்வெட்டுகளில் கூறப்படவில்லை என இவர்கள் வாதிடுகின்றனர்.[2]

வரலாறு

மகிந்தர் தனது தாயாருடன் விதிசா என்ற இடத்தில் வசித்து வந்தார். தந்தையின் ஆன்மிகக் குரு மொகாலிபுத்த தீசர் என்பவருடன் சேர்ந்து தனது 20வது அகவையில் மதகுருவானார். மொகாலிபுத்த தீசர் இவரை வழிநடத்தி புத்தரின் போதனைகளைக் கொண்ட திரிபிடகம் என்ற நூலைக் கற்பித்தார். இவரின் பரிந்துரையின் படி, மூன்றாம் பௌத்தப் பேரவை அமர்வை அடுத்து மகிந்தரும் அவருடன் உடன் பயின்ற இத்தியன், உத்தியன், சம்பாலா, பத்தசாலன், சாமநேர சுமணன் (சங்கமித்தையின் மகன்), பங்குகன் ஆகியோரும் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இக்குழுவினர் வேதசாகிரி விகாரையில் இருந்து (இன்றைய சாஞ்சி) இலங்கை நோக்கிப் பயணமாயினர்.

மகாவம்சம், தீபவம்சம் ஆகியவற்றின் படி, மகிந்தரும் அவரது குழுவினரும் பூரணை நாளன்று இலங்கை வந்து சேர்ந்தனர். அந்நாளன்று இலங்கை மன்னன் தேவநம்பிய தீசன் மிகிந்தலை குன்றுகளில் வேட்டையாடுதலில் ஈடுபட்டிருந்தான். தேவநம்பிய தீசன் ஏற்கனவே அசோகப் பேரரசரை அறிந்திருந்தான் எனவும் இருவரும் பரிசுப் பொருட்களைப் பரிமாறியவர்கள் என்றும் நம்பப்படுகிறது. பௌத்த குருமார்களை மிகிந்தலையில் கண்ட மன்னன் அவர்களை வணக்கத்துடன் வரவேற்று அவர்களைப் பற்றி அறிந்து கொண்டான். மகிந்த தேவநம்பிய தீசனுக்கு பௌத்தத்தைப் போதித்து அவனை மதம் மாற்றினார். இவர்கள் பின்னர் தலைநகர் அனுராதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மகிந்தர் மன்னரின் அரண்மனையில் பொது மக்களுக்கு இரண்டு ஆன்மிக உரைகளை நிகழ்த்தினார். மகிந்தரும் குழுவினரும் தங்கியிருந்த அரசுப் பூங்கா பிற்காலத்தில் மகாவிகாரை என அழைக்கப்பட்டது. இதுவே இலங்கையின் ஆரம்பகால பௌத்தக் கலாசாரக் கல்விக் கழகமாகவிருந்தது.

இலங்கைப் [பெண்களும் தமது மடப்பள்ளியில் இணைய விரும்பியதை அடுத்து மகிந்தர் தனது தங்கை  சங்கமித்தையை இலங்கைக்கு வரவழைத்தார். அத்துடன் புத்த காயாவில் உள்ள மூல மரத்தின் கிளை ஒன்றையும் இலங்கைக்குத் தருவித்து மகாவிகாரையில் நட்டார். இம்மரம் தற்போதும் அங்கு உள்ளதாக நம்பப்படுகிறது.

ஒரு மாதம் வரையில் தலைநகரில் தங்கியிருந்த மகிந்தர் பின்னர் மிகிந்தலைக்குச் சென்று அங்கு வசிக்கலானார். இதன் பயனாக அங்கு இரண்டாவது பௌத்த பீடம் ஒன்று உருவானது. மௌரியப் பேரரசில்  இருந்து கௌதம புத்தரின் எச்சம் ஒன்றும் கொண்டுவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டது.

தேவநம்பிய தீசனின் இறப்புக்குப் பின்னரும் மகிந்தர் வாழ்ந்து தனது 80வது அகவையில் இலங்கையில் காலமானார். அப்போது மன்னனாகவிருந்த  உத்தியன் (தேவநம்பிய தீசனின் உடன் பிறந்தவன்) அரச மரியாதைகளுடன் மகிந்தரின் இறுதி நிகழ்வுகளை நிகழ்த்தி, அவரது எச்சங்களைப் பாதுகாப்பதற்காக மிகிந்தலையில் தூபி ஒன்றையும் நிறுவினான்.

https://ta.wikipedia.org/s/3huoகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply