Sumanthiran – Jaffna
When an agent brings his polling division’s result to the main counting centre the preference order changes depending on who polled well in that particular division. This is very normal and nothing is final until all results are in. My agents consistently told me that I am either first or second in every division. If you look at the result this fact can be verified. But I was open to any result.
There were suggestions that I might lose as well and I was open to this possibility. We were following the news on social media. At one point allegation that I was stealing the victory of the fellow candidate, Tharmalingam Siddharthan got floated. He was at the Jaffna Central College, the primary counting centre, with a crowd. The crowd was alleging that I had stolen his seat. Later, the video showed him speaking to the Returning Officer for Jaffna, the Government Agent. I was at home during all of this. I never went to the counting area. Not this time. Not previously when I contested.
I was at home the whole day. After 12 AM, on 07 August, when I received news that the results were about to be announced, I visited the announcement area. I went because last time, too, all the contestants went to the same place and the Returning Officer read the result out to us. The Returning Officer was seated at his desk. I sat away from him and did not speak to him.
While I was inside fellow contestant Mrs. Sashikala Raviraj came in and spoke to the Returning Officer. She had spoken to him earlier as well. Contestants speaking to the Returning Officer is not unusual. I was waiting for the results to be announced. But the announcement was being delayed – for reasons unknown to me. At this point, a mob tried to enter the building forcefully and was blocked and chased away by the police on duty. This was necessary. All the ballot boxes were inside that building and any vandalization would have called the election in to question. Once the mob was cleared, I came back home. Usually, defeated contestant accuses the contestant directly ahead of him/her.
On this occasion, however, the person who finished fourth (Mrs. Raviraj) is placing allegations against me – who polled the second-highest number of votes and 4000 votes ahead of the third-placed Mr Siddharthan. Between Siddharthan and Raviraj the gap is in the few hundreds. The entire story is bizarre. In any case, the way our ballot counting is done there is absolutely no room for foul play. I do not want to comment on the conduct of Mrs Raviraj during this election campaign. She was our party’s female candidate. She was also a first-time contestant. It is regrettable that she has lost.”
சுமந்திரன் யாருடைய வாக்கைத் தட்டிப்பறித்தார்…..?
– தெல்லியூர் சி.ஹரிகரன் –
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது தடவை மக்கள் ஆதரவைப் பெற்ற எம்.ஏ.சுமந்திரன், நேற்றுமுன்தினம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சக வேட்பாளர் நடராஜா சசிகலாவின் வாக்கைத் தட்டிப்பறித்தார் என்ற வதந்திகள் வெகுவாகப் பரவிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பில் உண்மை நிலைப்பாடு என்ன? என்று பல கற்றறிந்த கல்வியியலாளர்கள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்கள்கூட தெளிவில்லாமல் உள்ளனர். அதேநேரம் அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் வால்பிடித்துத் திரிகின்ற ரவுடிக் கும்பல் அரச அதிகாரிகள் மீதுகூட பொய்யான – தவறான – செய்திகளைப் பரப்பி அவர்களின் நேர்மையை – கடமை உணர்வை – கேள்விக்குட்படுத்தி வருகின்றமை வேதனைக்குரியது.
தேர்தல் காலத்தில் வழமையாக இடம்பெறுகின்ற ஒரு பிரச்சினைக்குரிய விடயம் இந்த இறுதி முடிவுகள் அறிவிப்பு. 2015 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் க.அருந்தவபாலனின் வாக்குகளை சக வேட்பாளர் சரவணபவன் பணத்தைக் கொடுத்து மாற்றியமைத்தார் என்ற வதந்தி பரப்பப்பட்டு, அதை அருந்தவபாலனும் உண்மையெனக் கருதி ஊடகங்களில் அறிக்கைவிட்டார். இந்த விடயத்துடன் அவருக்கு ஏற்பட்ட கட்சியுடனான விரிசல் 2018 உள்ளூராட்சித் தேர்தலில் விரிசலாகி அவர் முதலமைச்சர் கட்சி ஆரம்பித்ததும் இணைந்தார். இந்தத் தேர்தலிலும் அவர் இணைந்த புதிய கூட்டணியிலும் இவ்வாறான பிரச்சினை எழுந்தது.
அநேகமாக இறுதி வெற்றி வேட்பாளருக்கும் வெளியே சென்றவர்களுள் முதன்மை நிலையில் உள்ள வேட்பாளர்களுக்கும்தான் இந்தப் பிரச்சினை எழுகின்றமை வழமை. வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தாம் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற எண்ணத்துடன் சூதாட்டம் போன்ற தேர்தல்களில் கோடிக்கணக்கில் பணம் செலவழிப்பார்கள். மக்களும் எவருக்கும் எதிராகப் பெரிதும் பேசமாட்டார்கள்.” உங்களுக்குத்தான் எங்கள் வாக்கு” என்று சொல்லி வந்தவர்களை அனுப்புவார்கன். சம்பளத்துக்கு அவர்கள் வேலைக்கமர்த்துபவர்கள் வேண்டிய பணத்துக்கு மேலாக வேலை செய்தோம் என்று திருப்திப்படுத்தி அவர்களை மகிழ்விப்பார்கள். அவர்களும் இவற்றை நம்பி தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாகக் காணப்படுவர். இது நியதி.
ஆனால், இம்முறைத் தேர்தலில் சற்று வித்தியாசமான விசித்திரம். அநேகமாக இறுதித் தெரிவாக மயிரிழையில் தப்புபவருக்கும் துரதிஷ்ட வசமாக தட்டுப்பட்டவரில் முதன்மையானவராக உள்ளவருக்கும் எழுகின்ற பிரச்சினை, இம்முறை சற்று வித்தியாசமாக இடையில் உள்ள வேட்பாளருடன் ஏற்பட்டுள்ளது.அந்த இடைநிலை வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன். அவர்மீது பலருக்கு – சக வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு – எரிச்சல், பொறாமை. அதைக் கொட்டித்தீர்க்க அவர்கள் திருமதி சசிகலா ரவிராஜை சாதகமாகப் பயன்படுத்தினர். தேர்தலை முதன்முறையாக சந்தித்து அரசியலில் புதுமுகமாகப் புகுந்தா அம்மாவும் இவர்களின் கதையை நம்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வியைச் சந்தித்த ஒரு சக வேட்பாளர்களின் ஆதரவாளர்களே – அவரிடம் சம்பளத்துக்கு தேர்தல் காலத்தில் பணியாற்றிய கைக்கூலிகளே – சுமந்திரன் மீதுள்ள காழ்ப்புணர்வில் இந்தப் பிரச்சினையை ஆரம்பித்துவைத்தவர்கள். பின்னர் கட்சி பேதமின்றி சகல கட்சிகளும் இணைந்து சுமந்திரன்மீது காழ்ப்புணர்வைக் காட்’டத் தொடங்கினர். இதில் வேடிக்கை என்னவென்றால் கோட்டா ஆதரவு பெரும்பான்மைக் கட்சியின் கைக்கூலிகள் சுமந்திரனைப் பார்த்து ”துரோகி” என்றமைதான்.
ஊடகப் போராளி என்று அரசியலுக்குள் வந்தவர் ஒருவர், விருப்பு வாக்கு எண்ணிக்கொண்டிருக்கும்போது, தேர்தல் முடிவு அறிவிப்புக்கு கூட்டமைப்பு சார்பில் கட்சி நியமித்த பிரதிநிதியிடம் ”என்ன ஐசே! சுமந்திரனின் தென்மராட்சி பிரசாரப் பொறுப்பாளர், திருமதி ரவிராஜிடம் பதவிவிலகல் கடிதத்தைப் பெற்றுவிட்டாராம். நீர் வேண்டுமென்றால் அவரிடம் கேட்டுப்பாரும் ஐசே!” என்றாராம். அவர் உடனேயே தனது தொலைபேசியை திருமதி சசிகலாவிடம் கொடுக்க அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தாராம் அம்மணி.
இதற்கிடையில், இந்த ஊடகப் போராளி வேட்பாளரின் கைக்கூலி ஒருவர் தனது முகநூலில், ”சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய மானிப்பாய் தொகுதி வாக்குகள் மீள எண்ணப்படுகின்றன” என்று பதிவிட்டிருந்தார். அங்கு எந்தத் தொகுதிக்கும் மீள் வாக்கு எண்ணல் நடைபெறவில்லை. மானிப்பாய் தொகுதியில் சுமந்திரனுக்கு 7 ஆயிரத்து 500 இற்கு மேற்பட்ட வாக்குகள் அவரின் வலிகாம செயற்பாட்டாளர் பிரகாஷால் பெற்றுக்கொடுக்கப்பட்டவிடத்து, அதை எண்ணவேண்டிய எந்தத் தேவையும் சுமந்திரனுக்குக் கிடையாது. சித்தார்த்தன் வேண்டுமென்றால் கேட்டிருக்கலாம். அது அவருடைய தொகுதி என்பதால். ஆனால், அவரும் கோரவில்லை. எந்தத் தொகுதிக்கும் மீள் வாக்கு எண்ணல் நடைபெறவில்லை.
தேர்தல் வாக்கு எண்ணும்போது ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையங்களுக்கும் 2 பேர் வீதம் சகல வேட்பாளர்களிடமிருந்தும் அவர்களின் பிரதநிதிகளை சகல கட்சிகளும் கோரி கிட்டத்தட்ட 150 இற்கு மேற்பட்டவர்கள் வாக்கு எண்ணும் நிலையங்களில் பணிக்கமர்த்தப்படுவார்கள். அரச உத்தியோகத்தர்கள் வாக்குகளை ஒவ்வொன்றாக எண்ணுமிடத்து சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் அவர்களுக்குப் பின்னால் நின்று பணிகளை அவதானிப்பார்கள். ஏதாவது சந்தேகம் அல்லது ஏற்கப்பட்டதை நிராகரிக்கவும் நிராகரிக்கப்பட்டதை ஏற்கவும் கோரி ஆராய்வதற்கு இவர்களுக்கு உருத்து உண்டு. கட்சிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு அவை 50 ஆக கட்டப்படவேண்டும். கட்சிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பெட்டிக்குள் தரம்பிரிக்கப்பட்ட வாக்குகள் 50 என்ற அடிப்படையில் கட்டப்பட்டு பின்னர் மொத்தவாக்குகள் எண்ணப்பட்டு, அவை மீள சரிபார்க்கப்பட்டு முகவர்களின் கையொப்பங்கள் பெறப்பட்டு தேர்தல் மத்திய நிலையத்தில் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு ஒவ்வொரு வாக்கு எண்ணல் நிலையங்களிலும் பெறப்பட்ட முடிவுகளைக்’ கொண்டு கட்சிகளுக்கான ஆசன பங்கீடு இடம்பெற்றபின்னர், தெரிவாகிய கட்சிகளின் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். அந்த விருப்பு வாக்குகள் தொடர்பான விவரமும் மத்திய நிலையத்துக்கு வழங்கப்பட்டு மத்திய நிலையத்தில் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு கட்சிகளின் சார்பில் முடிவுகளை வெளியிடுவதற்குப் பொறுப்பான பிரதிநிதிகளின் ஒப்பங்கள் இடப்பட்டதன் பின்னரே முடிவுகள் வெளியிடப்படும். இதில் எந்தக் கட்சியும் எந்தத் தவறும் செய்ய முடியாது. இதுதான் நடைமுறை.
தமிழரசுக் கட்சி சார்பில் முடிவுகள் வெளியிடுவதற்குப் பொறுப்பாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் வலி.வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தனும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஒப்பமிட்டதன் பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு சகல கட்சி பிரதிநிதிகளும் நியமிக்கப்படுவர். அவர்களும் சகலனவும் சரி என்பதை உறுதிப்படுத்தி ஒப்பமிடல் வேண்டும். இதுதான் வாக்கு எண்ணல் நடைமுறை.
இவ்வாறு இறுக்கமான கட்டமைப்பு உள்ள இடத்தில் மாற்றிவிட்டார், மோசடி செய்துவிட்டார் என்று கதை கூறுவதற்கு இடமே கிடையாது. சகல கட்சி பிரதிநிதிகளும் உள்ளே இருக்கும்போது இவ்வாறான மோசடிகளுக்கு எவ்வித சந்தர்ப்பமும் கிடையாது.
இது வழமையாக நடைபெறுவதென்றாலும், நேற்று சுமந்திரன் மாட்டுப்பட்டதால் அவர்மீது எரிச்சல், பொறாமை, காழ்ப்புணர்வு கொண்டவர்களால் காட்டுமிராண்டித்தனமான – மிருகத்தனமான – சம்பவங்கள் கட்சிபேதங்கடந்து அரங்கேறின. காட்டுமிராண்டித்தனத்தை காட்டுமிராண்டிச் செயற்பாட்டால்தானே அடக்கமுடியும். அதிரடிப்படை களத்தில் இறங்கி அதை அடக்கியது. இதில் என்ன தவறு. ஆனால், இவர்கள் சுமந்திரன்மீதுள்ள எரிச்சல், பொறாமையை கொட்டித்தீர்த்தமையும் ஒருவகையில் நன்மைதான். அவ்வாறு இவர்கள் கொட்டித் தீர்க்காவிடில் அவர்கள் நெஞ்சு வெடித்து மரணிக்கின்ற சம்பவங்களும் எதிர்காலத்தில் இடம்பெற்றிருக்கலாம்.
இதற்கு முதல்காரணன் ஊடக முதலாளியாக இருந்து தேர்தலில் நின்றவரின் கைக்கூலிகள்தாம். அவர் தோற்றுவிட்டார். பெற்ற காசுக்கு வேலைசெய்தோம் என்று நடித்தவர்கள் தமது பெறுபேற்றை அவருக்குப் பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டனர். எவ்வாறு அவரின் முகத்துக்கு முன்னே செல்வது. சுமந்திரனை வஞ்சித்து, திட்டித் தீர்து, தகாத வார்த்தைகளால் பேசி அடிக்கப்போனதை அந்த தோல்வியடைந்த முதலாளி நேரலையூடாகப் பார்த்து மகிழ்ந்திருப்பார்.
வாக்கெண்ணல் தொடர்பாக தெளிவற்றவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக சுருக்கமான விளக்கத்தைத் தருகின்றேன். சகல வாக்கெண்ணும் நிலையங்களிலும் எண்ணக்கட்ட வாக்குகள் கட்சிகளின் முகவர்களிடம் கையொப்பம் பெற்றபின்னர் மத்திய நிலையத்தில் ஒப்படைக்கப்படும். மத்திய நிலையம் அவற்றைப் பரீட்சித்து சகல நிலையங்களிலிருந்து வருகின்றவை எனைத்தையும் பதிந்தபின்னரே இறுதி முடிவு வெளியாகும்.
இந்தமுறை சித்தார்த்தன் வெளியே என்று தெரிவிக்கப்பட்ட நேரத்தில் கோப்பாயின் இரண்டு வாக்கு எண்ணல் நிலையங்களும் மானிப்பாய் தொகுதியும் வாக்கு எண்ணும் பணி நிறைவடையவில்லை. ஒவ்வொருவரும் தத்தமது ஊகங்களையும் வதந்திகளையும் முகநூலில் பரப்பியதாலே வந்த வினை இது. சித்தார்த்தன் கோப்பாய், மானிப்பாய் இரண்டு தொகுதிகளிலும் முதல்நிலை பெற்றார். அந்த இரு நிலையங்களின் வாக்குகளும் வந்தவுடன் அவர் திருமதி சசிகலாவை முந்தினார். அவர் வெளியே சென்றார். இதுதான் நடந்தது. இதில் உண்மையில் சந்தேகப்படவேண்டியவர் என்றால் சித்தார்த்தன்தான். ஏனெனில் திருமதி சசிகலாவுக்கு முன்னே உள்ளவர் அவர். ஆனால், இரண்டாவுது நிலையிலுள்ள சுமந்திரனுடன் போலியான வதந்திகளைப் பிரப்பி பிரச்சினைப்பட்டது காழ்ப்புணர்ச்சியே! மாற்றங்கள் ஏதும் செய்ய துடியாது. ஆகையால் சித்தருடன் பிரச்சினைப்பட்டும் பயனில்லை.
வாக்களிப்பு நிலையத்தில் ஒருவர் கேட்டார் ”சுமந்திரனுக்கு மானிப்பாய் தொகுதியில் எவ்வாறு இவ்வளவு வாக்கு வந்தது. கஜதீபனிலும்விடக் கூடிய வாக்கு என்று. அதற்கு யார்தான் என்ன செய்யமுடியும்? சுமந்திரனின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தார் வலி.தெற்கு பிரதேசசபையின் செயற்றிறன் மிக்க முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ்;. பெறுபேறு கிடைத்தது. அதற்கு யார்தான் என்ன செய்யமுடியும். 2013 மாகாணசபைத் தேர்தலுக்கு நானும் பிரகாஷூம் கஜதீபனையும் சித்தார்த்தனையும் அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்தோம். மேடைகளில் பேசினோம். இருவரும் முன்னிலையில் வெற்றி பெற்றார்கள். அதற்காக ஒருவருக்கு எவ்வாறு வாக்குக் கிடைத்தது என்று முட்டாள் கேள்விகள் எல்லாம் கேட்கமுடியுமா?
ஒருவர் முகநூலில் பதிவிட்டார் சித்தார்த்தனின் கோட்டையில் சுமந்திரனுக்கு எவ்வாறு வாக்குக் கிடைத்தது என்று. நான் பழைய விடயம் ஒன்றை நினைவுபடுத்துகின்றேன். சித்தார்த்தனின் கோட்டையில் தனது கட்சியையும் பகைத்து உள்ளூராட்சித் தேர்தலில் வென்ற பிரகாஷ், தவிசாளர் தெரிவில் கட்சி தெரிவித்த தவிசாளரை எதிர்த்து போட்டியிட்டு 12 வாக்குகள் – கட்சியின் தவிசாளர் வேட்பாளருக்கு சமமான வாக்குகளைப் பெற்றார். சித்தரின் கோட்டையில் பிரகாஷால் எவ்வாறு சாதிக்க முடிந்தது?
ஏன் வலி.வடக்கில் நான் மாவை ஐயாவுக்கும் சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் வேலை செய்தேன். எமது தலைவருக்கு அடுத்தபடியாக கூடுதலான விருப்பு வாக்கு சுமந்திரனுக்கு வலி.வடக்கில் கிடைத்தது.
சுமந்திரன் கூடுதலான தொகுதிகளில் 2 ஆவது கூடுதலான விருப்புவாக்குகளைப் பெற்றார். நல்லூர் தொகுதியில் முதலாவது விருப்பு வாக்கு பெற்றார். ஆனால், சசிகலாவோ சித்தார்த்தனோ தங்கள் தங்கள் தொகுதியைத் தவிர இவ்வாறு அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை. பின்னர் எவ்வாறு முன்னுக்கு வரமுடியும்?
ஊடக முதலாலியின் ஆள்கள் கத்திக்குதறி பிரச்சினையை உருவாக்க, சைக்கிளின் கூடாரத்துக்குள் இருந்து ஒரு பெண்மணி கொத்துரொட் டிப் பார்சலாலும் தண்ணீர் போத்தலாலும் மத்திய நிலையத்துக்குள் இருந்து விவரங்களைக் கேட்டறிந்த சுமந்திரன் மீது எறிய, பின்னர் கையின் கூடாரத்துக்குள் இருந்து தண்ணீர் போத்தல் எறிய அதிரடிப்படை கலகம் அடக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தக் காட்டுமிராண்டிகளுக்கு வேறு என்ன செய்ய முடியும்?
இறுதியாக மிகவும் வேதனையான விடயம். மிகப்பெரிய அநாகரிக கலாசாரம் ஒன்று உருவாகுவதற்கு எமது மக்கள் வித்திட்டுள்ளார்கள்.
பல கட்சிகள் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் காட்டு மிராண்டிகளும், கல்வி அறிவு அற்றவர்களும் உள்ளார்கள். அவர்கள் அதில் பாவித்த வசனங்களைக் கேட்டு – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்மீது கொட்டித்தீர்த்த வன்சொற்களைக்கேட்டு சிறிதரன் எம்.பி. நாகரிகமாக புலனடக்கத்துடனும் எமது சந்ததியை நினைந்து வேதனையுடனும் இருந்தார். பொது இடங்களில் எவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகிக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்குப் பின்னாலுள்ள இந்த காட்டுமிராண்டிகளுக்குத் தெரியாது. கைத்தொலைபேசியில் வீடியோவை இயக்கிக்கொண்டு, சுமந்திரன், சிறிதரன் ஆகியோருக்கு தாங்களே தூஷணத்தால் ஏசுவதை தங்கள் முதலாளி வேட்பாளர் பார்ப்பதற்காக முகநூல் நேரலையில் தானே தூஷணம் பேசி தானே அதை வீடியோ எடுத்த காட்சியும் இடம்பெற்றது. தொடர்ந்தும் மக்கள் சிந்தித்து இவ்வாறான காட்டுமிராண்டிகளைக் கொண்டுதிரிகின்ற வேட்பாளர்களை நிராகரிக்கவேண்டும். இல்லாவிடில், தந்தை கூறியமைபோன்று கடவுள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்றவேண்டும். குறைவாகக் காட்டு
வி. சபேசன்
11 நிமிடங்கள் · தற்போதைய நிலை சுமந்திரனுக்கு சாதகமாக மாறி விட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தவை சுமந்திரனுக்கு எதிரான ஒரு சதி நாடகம் என்பது ஓரளவு தெளிவாகி விட்டது.தேர்தலுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த சதித் திட்டம் தீட்டப் பட்டிருக்க வேண்டும். சசிகலா ரவிராஜ் இந்த நாடகத்தில் தன்னை அறியாமலே மாட்டிக் கொண்ட ஒரு அப்பாவி என்றே நான் நம்புகிறேன். சசிகலா ரவிராஜ் ஒரு கச்சிதமான தெரிவு. அவருடைய இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும், இவ்வளவு உணர்வுபூர்வமாக இது மாறி இருக்காது.முதலில் சசிகலா ரவிராஜ் பெயரில் ஒரு போலியான பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் சுமந்திரன் பற்றியும் அவரது ஆதரவாளரான சயந்தன் பற்றியும் அவதூறுகள் பரப்பப்பட்டன. சசிகலா ரவிராஜ் இவற்றிற்கு ஓரிரு தடவைகள் மறுப்பு வெளியிட்டிருந்தார். இந்த போலியான பக்கம் பற்றி காவல்துறையில் புகார் அளித்ததாகவும் சொல்லியிருந்தார். தேர்தல் பிரச்சார நெருக்கடிகளால் இந்த போலியான பக்கத்தை தொழில்நுட்ப உதவியுடன் முடக்குவது பற்றி அவர் பெரியளவில் அக்கறை காட்டவில்லை.ஒரு கட்டத்தில் சுமந்திரனிடம் இருந்து தள்ளி இருக்கும்படி ஒரு தரப்பு அவருக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. சசிகலா ரவிராஜின் பிரச்சாரக் கூட்டங்களில் சுமந்திரன் கலந்து கொண்ட நேரங்களில் எல்லாம், அது பற்றி விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு சசிகலா ரவிராஜ் தள்ளப்பட்டார். அவரும் ‘ நான் மாமனிதர் வழியில்தான் நடக்கிறேன்’ என்று மீண்டும் மீண்டும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.உண்மையில் சசிகலா ரவிராஜ் வென்றிருந்தால், அவரை வைத்து கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதற்கான அடுத்த கட்டத் திட்டமும் அவர்களுக்கு இருந்திருக்கும்.
இப்படி போலியான பக்கம், மற்றும் சசிகால ரவிராஜ் மீதான மறைமுக அழுத்தம் என்பதாக அவர்களின் சதிநாடகம் ஆரம்பித்திருந்தது. பின்னர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றிய உத்தியோகப்பற்றற்ற தகவல்களை பரப்பத் தொடங்கினார்கள். முதலில் சசிகலா ரவிராஜ் வெற்றி பெற்று விட்டதாக கதையை பரப்பினார்கள். அதை அவரையே நம்ப வைத்தார்கள். பின்னர் சசிகலா ரவிராஜை ராஜினமா செய்யச் சொல்லி சுமந்திரன் அழுத்தம் கொடுப்பதாக கதையை பரப்பினார்கள். பொதுமக்களை சசிகலாவிற்கு ஆதரவாக திரளும்படி அறைகூவல் விடுத்தார்கள்.கடைசியில் எல்லா வாக்குகளும் எண்ணப்பட்டு சுமந்திரன் வெற்றி பெற்றது தெரிய வந்த பொழுது, அங்கயன் ஆதரவாளர்களை பெருவாரியாக கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தை வைத்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். வெற்றி பெற்று விட்டதாக உறுதியாக நம்பியிருந்த சசிகலா ரவிராஜினுடைய ஏமாற்ற உணர்வையும், அவருடைய மகளின் கண்ணீரையும் தமது நாடகத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.சிந்தித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இப்படி ஒரு திட்டத்தை தீட்டுவதற்கு மிகப் பெரிய மூளை வேண்டும். ஒரு தனிமனிதர் இதை செய்திருக்க முடியாது. இதற்குப் பின்னால் பலமான கரங்கள் இருக்க வேண்டும்.இன்றைக்கு சுமந்திரன் பக்கம் தவறு இல்லை என்பதை பலர் புரிந்து கொண்டு விட்டார்கள். சசிகலா ரவிராஜ் கூட அதை ஒத்துக் கொண்டு விட்டார். அதிரடிப்படையினரின் நடவடிக்கை பற்றி மட்டுமே தான் விமர்சனம் வைத்ததாக சொல்லி விட்டார்.ஆனாலும் இந்த சதிநாடகம் ஏற்படுத்திய வடுக்களின் விளைவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்கப் போகிறது.
சில நாட்கள் முடியும்வரை இதை எழுதக் கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்பிரச்சினை இன்னமும் நீள்வதால் எழுதுகிறேன்.1. சசிகலா ரவிராஜைப் போட்டியிட வைத்தமை முழு முட்டாள்தனம்.2. தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகச் சசிகலாவைத் தெரிவுசெய்வதும் வேட்டிக்குள் பாம்பை எடுத்துவைப்பதுவும் ஒன்று.முதன்முதலாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர், ஒரு கட்டத்தில் வெல்லும் வாய்ப்பைக் கொண்டிருந்தவர் என்று கருதப்பட்டவர், அதன் பின்னர் தோற்கும்போது ஏமாற்றம் ஏற்படுவது வழக்கமானது. அதில் எந்த மாறுதலும் இல்லை. அந்த ஏமாற்றத்தை எவ்வாறு கையாள்வது என்பதில்தான் சிக்கல் இருக்கிறது.சசிகலா ரவிராஜைப் பதவி விலகுமாறு மிரட்டுகிறார்கள் என்ற தகவல் ஆரம்பத்தில் பரப்பப்பட்டது. அப்போதே சுதாகரித்து, அது பொய்யென்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும். சரி, தேர்தல் பதற்றம் என்று வைத்துக்கொள்வோம்.அதன் பின்னர், அவரது மகளால் வெளியிடப்பட்ட பேஸ்புக் நிலைத்தகவல்களில் நேரடியாகச் சுமந்திரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதில் உள்ள பிரச்சினைகள் சிலவற்றைப் பார்த்தால்:// My mother, Mrs.Sashikala Raviraj was unofficially congratulated for coming 2nd from TNA in Jaffna and Kilinochchi district. However, since 90% of the results were completed by 6.30 PM..
1. அவரே சொல்கிறார், உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் என்று. “unofficially congratulated” என்று செயப்பாட்டு வினையில் (passive voice) சொல்கிறார். இது முக்கியமானது. யார் என்று சொல்லவில்லை.
2. 90 சதவீதமான முடிவுகள் என்று சொல்கிறார். அந்த எண்ணிக்கை சரியானது என்று வைத்துக்கொண்டாலும், மிகுதி 10 சதவீத வாக்குகளை எண்ணாமல் ஒருவர் வென்றதாக எப்படிக் கருத்திலெடுக்க முடியும்? சுமந்திரனை விடுவோம். சசிகலாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர், சரவணபவன். அவர், சசிகலாவை விட 2,706 வாக்குகள் குறைவாகப் பெற்றார். கூட்டமைப்பின் 10 சதவீத வாக்குகள், 11,200 வாக்குகளைவிட அதிகம். அதற்குள் மாற்றங்கள் வராதென்று யார் முடிவெடுத்தார்கள்? சரவணபவனால் அந்த 11,200 வாக்குகளுக்குள் மேலதிகமாக 2,706 வாக்குகளைப் பெற முடியாதென்று எவ்வாறு முடிவெடுத்தார்கள்?// When candidates are not permitted inside the final counting booth it was witnessed MA Sumanthiran and his right hand Sajanthan were seated along with the elections officers at the final counting area. //சுமந்திரன் உள்ளே இருந்தபோது (கடந்த முறையும் உள்ளே இருந்தேன் என்று அவர் சொல்கிறார்), சசிகலாவும் உள்ளே சென்று, தெரிவத்தாட்சி அதிகாரியுடன் உரையாடினார் என்றும், அதற்கு முன்னரும் சசிகலா உள்ளே சென்றார் என்றும் சுமந்திரன் சொல்கிறார்.
இதை மறுக்கிறார்களா?அடுத்த பதிவில்,// And turmoil was created to hide the rigged voting that had happened in two counting booths. //முதலில், வாக்கெண்ணுதலில் மோசடி என்றுதான் இவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. மேலே குறிப்பிட்ட பதிவிலும், வாக்கெண்ணும் இடத்தில் சுமந்திரன் இருந்ததைத்தான் குறிப்பிட்டுச் சொல்லி, வாக்கெண்ணுதலில் மோசடி நடந்தது என்று சொன்னார். இங்கே, இரண்டு வாக்களிப்பு மையங்களில் மோசடியான வாக்களிப்பு நடந்தது என்கிறார். // Sumanthiran STF attacked peaceful protesters with stones and etc. // இது முழுப்பொய். அங்கு அமைதியான எதிர்ப்பின்போது பொலிஸார் எதையும் செய்திருக்கவில்லை.// I want to “thank” Sampanthan for not answering calls during Mullivaikkal and also last night at a critical juncture. //முள்ளிவாய்க்கால் நேரத்தில் உங்கள் அழைப்பை எடுத்திருக்காத ஒருவரின் தலைமையின் கீழ் எதற்காகப் போட்டியிடச் சம்மதித்தீர்கள்?
தோற்கும்வரை இது ஞாபகத்தில் இருக்கவில்லை?// I want to finally thank the dutiful election employees for a job well done on producing a clean state over blood. //அவர் சொல்வது தமிழ் அதிகாரிகளை… நல்லது.// Finally I want to thank you appa for dying so young Cz if not you would have killed yourself last night at the plight of the people of north. //மத்திய கல்லூரியிலிருந்து வெளியேறும்போதும், அப்பாவின் மரணத்தை ஞாபகப்படுத்தியிருந்தார். ரவிராஜ் என்பவர், தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை முக்கியமானவர். அவரது மரணத்தை வைத்து அரசியல் செய்வதென்பது கேவலமானது. (இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் தவறு இருக்கிறது. அவர்களும் இதைத்தான் முயன்றார்கள். ஆனால், ரவிராஜை இந்தளவுக்கு விற்றிருக்கவில்லை.)முக்கியமாக,இதன் மேல்பகுதியில், “unofficially congratulated” என்று செயப்பாட்டு வினையில் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அது ஏன் முக்கியமானது என்றால், தினக்குரல் பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்துள்ள சசிகலா ரவிராஜ், “ஆதரவாளர்களின் எண்ணங்களில்தான் எனது வெற்றிவாய்ப்புக் குறித்துப் பேசப்பட்டது. இறுதிவரை அவர்கள் நம்பிக்கை பலமாக இருந்த நிலையில், என்னுடைய வாய்ப்புப் பின்தள்ளப்பட்ட பெறுபேறு, அதிர்ச்சியைத் தந்தது” என்கிறார். இங்கே அவர், அதிகாரிகளால் அல்லது விடயமறிந்தோரோல் தான் வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாகச் சொன்னதாகக் கூறவில்லை. ஆதரவாளர்கள் அவ்வாறு எண்ணினார்கள் என்கிறார்.
அருந்தவபாலனின் ஆதரவாளர்களும் மணிவண்ணனின் ஆதரவாளர்களும்தான் அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்று எண்ணினார்கள். அதனால் அவர்களின் தோல்வியும் மோசடியென்றாகிவிடுமா?அதேபோல், “ஆனால், மத்திய கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில், பாதுகாப்புப் படை உள்ளே இறக்கப்பட்டமை குறித்துத்தான் நான் சுமந்திரன் மீது அதிருப்தி கொண்டேனே தவிர, பெறுபேறு குறித்து அவரை நான் குறிப்பிடவில்லை” என்று கூறுகிறார்.
நீங்கள் கூறவில்லை, சரி. உங்கள் மகள் நேரடியாகவே சுமந்திரன்மீது குற்றஞ்சாட்டியிருக்கிறாரே? உங்கள் மகள் உங்களோடுதான் இருந்தார். அவர் சொல்வதை வைத்துத்தான் பேஸ்புக்கிலும் இணைய ஊடகங்களிலும் கம்பு சுத்துவதை நீங்கள் பார்க்கவில்லையா? அதற்கான பொறுப்பை யார் ஏற்பது?இவையெல்லாம் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு, இப்போது அதன் தலைமையோடு பேசியிருக்கிறீர்கள். இதற்கு நடுவில், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் அனந்தியும் ஏனைய லொட்டு லொசுக்குகளும் எதற்காக உங்களைச் சந்திக்கிறார்கள் என்பது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை? அவர்களுக்கு இருக்கும் நிகழ்ச்சிநிரலுக்குள் நீங்கள் சிக்கியிருப்பதை உணரவில்லையா?இப்போது எழுந்திருக்கின்ற இந்த முரண்பாடு, சுமந்திரன் – சசிகலா – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தாண்டி, தேர்தலின் நியாயப்பாடு தொடர்பானது. அடுத்த தேர்தலில் தோற்கும் தரப்பு, மிக இலகுவாக அம்முடிவுகளின் நேர்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!(பிற்குறிப்பு 1: வாக்கெண்ணலில் தவறு இருப்பதாகச் சிலர் கருதுவதால், மீள வாக்குகள் எண்ணப்பட வேண்டுமென நான் நம்புகிறேன். அதைச் செய்வார்களென நம்புகிறேன்.(முகநூல் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது)
கோழி ஒரு முட்டை போட்டுவிட்டு ஊரெல்லாம் கேட்க கொக்கரிக்குமாம். யாழ்ப்பாணக் குடாநாட்டை மையப்படுத்தி குதிரை ஓடும் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு இம்முறை முறையே இரண்டு மற்றும் ஒரு இருக்கை விடைத்துள்ளது. இதை வைத்துக் கொண்டு தேசியத்துக்கு பெரு வெற்றி எனக் கொக்கரிக்கிறார்கள். அப்படியென்றால் தேசிய நீக்க, புலி நீக்க (நி்லாந்தனின் கோட்பாடு) கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, இபிடிபி எப்படி தேர்தலில் வென்றன? கிழக்கில் பிள்ளையான், வியாழேந்திரன் எப்படி வென்றார்கள்? கிழக்கில் பிள்ளையானுக்கு 54,198 விருப்பு வாக்குகள் விழுந்தன. மொட்டுக் கட்சியில் கேட்ட வியாழேந்திரனது கட்சிக்கு 22, 218 விழுந்தன. அம்பாறையில் போட்டியிட்டுத் தோற்ற கருணாவுக்கு 29, 000 வாக்குகள் கிடைத்தன. பிள்ளையானும் கருணாவும் தேசிய விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்துவிட்டு எதிரியோடு சேர்ந்தவர்கள். புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி சண்டை பிடித்தவர்கள். கருணா தேசியத்தலைவர் ஒரு கோழை என நையாண்டி செய்தவன். தாங்கள்தான் 22 கரட் தங்கம் மற்றவர்கள் பித்தளை என இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
—————————————————————————————————————
தெல்லியூர் சி.ஹரிகரன், Visitharan Tharshan மற்றும் 17 பேருடன் இருக்கிறார்.
கூட்டமைப்புக்குள் மற்றுமோர் அனந்திகளையெடுத்தனர் யாழ்., கிளி மக்கள்!#சசிகலாவும்_பிரவீணாவும்#இரு_மாய்மாலக்காரிகள்_கதைகாட்சி 01.
தனது சக சட்டத்தரணியும் நண்பனும் அரசாங்கத்தால் கொல்லப்பட்டவனுமான ரவிராஜுக்கு சாவகச்சேரியில் சிலை அமைத்து திறந்து வைக்கிறார் சுமந்திரன்.
காட்சி 02
.2020 பாராளுமன்ற தேர்தலில் கொல்லப்பட்ட தனது நண்பனின் மனைவியான சசிகலாவை தென்மராட்சி தொகுதியில் தமிழரசுக்கட்சி பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முன்மொழிந்து வேட்பாளராக்குகிறார் சுமந்திரன்.
காட்சி 03
வேட்பாளர் சசிகலா ரவிராஜும் மகள் பிரவீணாவும் தேர்தலிலின் மறுநாள் யாழ் மத்திய கல்லூரி வாக்கு எண்ணும் நிலையத்தில் சுமந்திரன் விருப்புவாக்கில் மோசடிசெய்தே வென்றார் என்று தொனிப்பட மிக அருவருக்கத்தக்க வகையில் அநியாயமாக அபாண்டமாக குற்றஞ்சாட்டுகிறார். UK பல்கலைக் கழகமொன்றில் சட்டம் படித்தசட்டப்பட்டதாரியான பிரவீணா ரவிராஜ் ஒரு சாவகச்சேரி சந்தை மீன்காரியின் மொழியில் உத்தியோகப்பற்ற முடிவுகளினதும் வதந்திகளினதும் அடிப்படையில் ” தனது தாய் ” unofficially congratulated” என்றும் சுமந்திரன் வாக்கெண்ணும் நிலையம் உள்ளே வந்து 4ம் இடத்திலிருந்த தனது வாக்கு எண்ணிக்கையை 2ம் இடத்திற்கு கொணர்ந்தார் என்றும்” தனது முகநூலில் அபாண்டமாக எழுதுகிறார்.
காட்சி 04ராசபக்ச/கோத்தபாய ஆட்சிக்காலத்தில்அரச முகவர்களால் கொல்லப்பட்டவர் ரவிராஜ். அதே அரசாங்கத்தில் அமைச்சராகப்போகும் அங்கஜன் சசிகலாவைச்சந்திந்து சசிகலாவுக்கு அநீதி நடந்ததான போலித்தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் கேவலப் பரிகாச(FARCE) நாடகத்தில் சசிகலாவும் சேர்ந்து நடிக்கிறார்.கடந்த சில நாட்களில் சசிகலாவும் பிரவீணாவும் நடந்துகொண்ட முறைகளை பார்க்கும்போது பின்வரும் விடயங்கள் தெரியவருகிறது.சசிகலாவின் பெயரில் இயங்கிய இயங்கும் போலி முகநூல் கணக்கு சசிகலாவின் திருட்டு அங்கீகாரத்துடன்தான் இயக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இந்த முகநூலை முடக்குவதற்கு சசிகலா சட்ட நடவடிக்கை எடுக்காததன் காரணமே அதுதான்.இந்த தேர்தலில் கூட்டமைப்புக்கெதிரான எதிர்ப்பலை வீசும் என்பது ஏற்கெனவே அறியப்பட்டது. தனது கணவன் அரசாங்க முகவர்களால் கொல்லப்பட்டவர் என்பதை முதலீடாகக்கொண்டு புலி ஆதரவுத்தளத்தைக்கொண்டு எப்படியும் வெல்வதற்கு கங்கணம் கட்டிய சசிகலா அதற்கமையவே தனது தேர்தல் திறமுறை/பிரச்சார உத்தியையும் வகுத்தார்.
சுமந்திரனுக்கெதிரான IBC போன்ற மாபியா ஊடகங்களின் செயற்பாடுகளையும் தனக்கு மூலதனமாக்கி சுமந்திரனிலிருந்து அந்நியப்பட்டவராக காட்ட முயன்றார். கட்சிக்குள்ளிருந்தே சொந்த முகநூலில் அதனை செய்யமுடியாது என்பதால் போலி முகநூலை பயன்படுத்தினார். இலங்கையின் சைபர் குற்றவியல் விசாரணைகளை முறையாக முடுக்கினால் இந்த முகநூல் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர் ஒருவராலேயே இயக்கப்படுவது தெரியவரலாம். சசிகலாவின் மகனோ, மகளோ கூட இந்த போலிக்கணக்கை இயக்கியிருக்க வாய்ப்புண்டு.
1978 அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. இலங்கையில் தேர்தல் ஆணைக்குழு ஒன்றிருக்கிறது. அதில் முழுநேர உத்தியோகத்தர்கள் ஆண்டு முழுவதும் வேலை செய்கிறார்கள். தேர்தல் விதிமுறைகள், நடைமுறைகள், வாக்களிப்பு நிலையத்தின் ஒழுங்குமுறைகள், வாக்குபெட்டிகள் அடைக்கப்படும்/காவப்படும் நடைமுறைகள் என்பவற்றுக்கான விதிகளை உருவாக்குகிறார்கள். வாக்களிப்பு, ஒருவருக்கு ஒருவாக்கு, இரகசியமான வாக்களிப்பு என்பன சனநாயகத்தின் அச்சாணிகள்.
இப்படி சனநாயகத்தின் அதிகாரமே வாக்களிப்பிலிருந்து வருவதால் வாக்கு எண்ணும்போது கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைவிதிகள் திறந்த நீதிமன்ற Transparency- வெளிப்படைத்தன்மை தத்துவத்திற்கமையவே திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வாக்கெண்ணுமிடத்தில் ஊழல் செய்யக்கூடிய வாய்ப்பை கொடுத்தால் அது சனநாயக மக்களின் ஆணையையே மாற்றியமைக்கக்கூடியது என்பது வெளிப்படை உண்மை. ஒரு வாக்கு எண்ணுமிடத்தில் முதலில் வாக்குகள் பிரித்து குறித்த கட்டுத் தொகுதிகளாக 1.கட்சிகள் பெறும் வாக்குகள்2. வாக்காளர் பெறும் விருப்பு வாக்குகள்3. செல்லுபடியாத வாக்குகள்முதலியன பிரிக்கப்படுவதோடு பல பிரதிகளுடைய ஏடுகளில்/ கணனியில் துல்லியமாக பதியப்படும். இதனை பல தடவைகள் பல வேறுபட்ட தனி உத்தியோகத்தர்களும் உத்தியோகத்தர் குழுக்களும் மீள மீள எண்ணுவதோடு மீள மீள மெய்ப்பு பார்ப்பர்.
தப்பாக எண்ணப்பட்ட வாக்கு/விருப்பு வாக்கு எண்ணிக்கைகளும் எண்ணிய உத்தியோகத்தரின்/குழுவின் பெயருடன் பதியப்படும். இலங்கையில் வாக்கு எண்ணுவதை CCTV கமெராக்களில் பதியும் நடைமுறை இருக்கிறதோ தெரியாது. பல நாடுகளில் தமிழக கோயில் உண்டியல் பணம் எண்ணும்போது CCTV கமெரா பயன்படுத்துவதைப்போன்ற/ நீதிமன்றில் வழக்கு நடைபெறும்போது CCTV பயன்படுத்துவதுபோன்ற நடைமுறை உண்டு. ஒவ்வொரு வாக்குச்சீட்டு பத்திரமும் பதிவு ஏடுகளும் வலுவான சட்ட ஆதார ஆவணங்கள். இவையெல்லாவற்றையும் விட போட்டியிடும் ஒவ்வொரு கட்சியின் முகவர்களும் வாக்கு எண்ணுமிடத்தில் பிரசன்னமாயிருந்து வாக்கு எண்ணுவதை அவதானிப்பார்கள். கட்சிகள் மீள எண்ணுமாறு கேட்க அனுமதியுண்டு. இந்த எல்லா வெளிப்படைத்தன்மை முறைகளின் பின்னரே இறுதிமுடிவை தேர்தல் திணைக்கள அதிகாரி அறிவிப்பார். இதற்குப் பின்னும் நீதிமன்றில் முறைகேடுகள் நடந்திருந்ததாக கருதுபவர்கள் வழக்கு தொடரலாம்.வாக்கு எண்ணுபவர்கள் தொழில்ரீதியில் விற்பன்னர்கள்(Professional).
அவர்களுக்கு அரசியல் சார்பு இருக்கலாம். இருக்கும். அவர்களின் சார்புகள் தேர்தல் முடிவை மாற்றமுடியாதவாறு அமைக்கப்பட்ட பொறிமுறையின் விளைவாகவே பலர் எண்ணுகிற/மெய்ப்புபார்க்கிற மற்றும் வெளிப்படைத்தன்மை நடைமுறைகளிருக்கிறது. ஒருவரோடு ஊழல் செய்வது இலகு. பலரோடு செய்வது மிகக்கடினம். யாழ் மத்திய கல்லூரி வாக்கு எண்ணும் நிலையத்தின் உள்ளே சிங்களவர் உட்பட்ட பல தேர்தல் அதிகாரிகள் இருக்கிறார்கள். பொலிசார் பலர் இருக்கிறார்கள். யாழ்ப்பாண அரச அதிபர் இருக்கிறார். பல தினுசான சயேட்சை கட்சி முகவர்கள் உடபட்ட பல கட்சி பிரதிநிதிகள் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தோல்வி நிச்சயம் என்பதறிந்த தமிழரசுக்கட்சியின் தலைவரான மாவையும் பெரிய பணமுதலை சரவணபவனும் தம் ஞானக்கண்களால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொண்டிருக்கிறார்கள்.
மாவையும் சரவணபவனும் சுமந்திரனின் பரமவைரிகள் என்பது ஊரே அறிந்தது. நீங்கள் சற்று தாய் சசிகலாவினதும்(23,098) மகள் பிரவீணாவினதும் சீனை போட்டு பாருங்கள்.”பாட்சா” சுமந்திரன் அதிரடிப்படை வீரர் புடைசூழ உள்ளே வருகிறார். நாட்டாமை “தீர்ப்பை மாற்று” என்கிறார். இதென்ன படமா? கதையா? இங்கு 2 முக்கியமான பிகர்கள் மிஸ்ஸிங். கவனித்தீர்களா? மாவை(20,358) அன்ட் சரவணபவன்(20 392). ஆனானப்பட்ட மாவையும் சரவணபவனும் கப்சிப். சசிகலா மோளோடை சேர்ந்து சீன் போடுறா. தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பா.உவுமான மாவையும் முன்னாள் பா.உ சரவணபவனும் விருப்பு வாக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று முறைப்பாடே செய்யவில்லை. அவர்களுக்குத்தானே முக்கியமாக இங்கு சுமந்திரன் மீது கறைபூச மகத்தான வாய்ப்பு. அவர்களாலேயே முயலவில்லை. ஏனெனில் சேறு தங்கள்மீதுதான் திருப்பிவரும் என்பது அவர்களுக்கு நன்குதெரியும்.
(முகநூல் பதிவிலிருந்து)
23நீங்கள், Prathap Ji மற்றும் 21 பேர்27 கருத்துக்கள்6 பகிர்வுகள்
10Kanimozhi MV, Duraisamy Keddeswaren Ketheeswaran மற்றும் 8 பேர்
Leave a Reply
You must be logged in to post a comment.