தமிழரசுக் கட்சியே அதிகூடிய ஆசனங்களைப் பெறும்!

தமிழரசுக் கட்சியே அதிகூடிய ஆசனங்களைப் பெறும்!

தேர்தல் நிலவரம் பற்றி சிரேஸ்ட ஊடகவியலாளரின் ஆழமான பார்வை!

இலங்கையில் 1977ஆம் ஆண்டுக்கு முன்னைய காலத்தில் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தையே மக்கள் விரும்பினார்கள் என்பதுதான் தேர்தல் வரலாறு.

ஆனால் 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த நிலைமை மாறி ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ச்சியாக 17ஆண்டுகள் ஆட்சி செய்ததையும் அதன் பின்னர் 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் அடுத்து வந்த இரு தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை கைப்பற்றியதையும் நாம் அறிவோம்.

தென்னிலங்கையை பொறுத்தவரை எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் தேர்தல்களை சந்தித்த காலம் போய் இந்த கட்சிதான் பாராளுமன்ற ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கையோடு இலங்கை மக்கள் இம்முறை தேர்தலை சந்திக்கின்றனர்.

மாவட்ட விகிதாசார தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எந்த கட்சியும் எக்காலத்திலும் பெற முடியாது. தான் கொண்டு வந்த அரசியல்யாப்பை யாரும் மாற்றி விடக் கூடாது என்ற ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் தந்திரத்தின் விளைவுதான் அது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை எந்த கட்சியும் பெறக் கூடாது என்பதற்காகவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தொகுதி ரீதியான தேர்தல் முறையை இல்லாமல் செய்து மாவட்ட ரீதியான தேர்தல் முறையை 1978ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பில் அறிமுகப்படுத்தினார்.

 ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மாவட்ட விகிதாசார தேர்தல் முறையை கொண்டு வந்ததற்கு இன்னொரு காரணமும் கூறப்பட்டது. 1977ஆம் ஆண்டு தொகுதி ரீதியான தேர்தல் நடத்தப்பட்ட போது சிறிலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வியடைந்து ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடுத்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆசனங்களை எடுத்ததால் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்தது. அந்த நிலை மீண்டும் வரக் கூடாது என்பதற்காகவே ஜே.ஆர். மாவட்ட விகிதாசார தேர்தலை கொண்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்படியானால் கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்ததே என உங்களின் பலர் கேட்கலாம்.

 கடந்த முறை ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடுத்த நிலையில் கூடிய ஆசனங்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சிதான் பெற்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஆளும் தரப்பாக மாறியதால் அதற்கு அடுத்த நிலையில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. மாவட்ட விகிதாசார தேர்தலில் முதலாம் இரண்டாம் இடங்களுக்கு தென்னிலங்கை சிங்கள கட்சிகளால் தான் வர முடியும்.

 பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் அதுவும் தமிழ் முஸ்லீம் மக்களின் ஆதரவின்றி தனியே தென்னிலங்கை சிங்கள மக்களின் வாக்குகளால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில்இ ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவு பட்டு பலவீனப்பட்டிருக்கும் நிலையில் பொதுஜன பெரமுன கட்சியே ஆட்சி அமைக்க கூடிய அறுதிபெரும்பான்மை (113ஆசனங்கள்) ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்த பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தும் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து கட்சி தாவப்போகும் உறுப்பினர்களை கொண்டும் பெற்றுக்கொள்வார்கள்.

 இம்முறை றிசாத் பதியுதீன் போன்றவர்களை அமைச்சரவையில் கோத்தபாயா சேர்த்துக்கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. உதிரியாக இருக்கும் முஸ்லீம் கட்சிகளில் வெற்றி பெறுபவர்களை இணைத்து கொள்வதே அவர்களின் திட்டமாகும். கொழும்பு உட்பட தென்னிலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுஜன பெரமுன கட்சியே கூடிய ஆசனங்களை பெற்றுக்கொள்ளும். காலாகாலமாக ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையாக இருந்த கொழும்பு மாவட்டத்தை கூட அக்கட்சி இம்முறை இழக்க உள்ளது. அதேபோல வடக்கு கிழக்கில் அம்பாறைஇ திருகோணமலை தவிர்ந்த யாழ்ப்பாணம்இ வன்னிஇ மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கூடிய வாக்குகளை பெறப்போவது தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான்.

யாழ். மாவட்டம். 1977ஆம் ஆண்டு 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த யாழ். மாவட்டத்தில் இடப்பெயர்வு மற்றும் சனத்தொகை வீழ்ச்சி காரணமாக காலத்துக்கு காலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தற்போது 7 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுகின்றனர்.

——————————————————————————————————————–

தேர்தல் கணிப்பீடு! மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போனஸ் ஆசனத்துடன் சேர்த்து மொத்தமாக 5 ஆசனங்கள் கிடைக்குமென என தேர்தல் கணிப்பீட்டைச் செய்து ஒரு எதிர்வுகூறலை சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

அவரின் கணிப்பீட்டின்படி,

மொத்த ஆசனங்கள் : 4 +1

போனஸ் ஆசனம் = 5

மட்டக்களப்பு.பட்டிருப்பு ,கல்குடா ஆகிய 3 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியது மட்டக்களப்பு மாவட்டம்.

1.இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு –TNA)

2.சஜித் பிரேமதாசவின் தொலைபேசி சின்னம் கொண்ட “ ஐக்கிய மக்கள் சக்தி” (இந்த அணியில்தான் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சஜித் அணி ஆகிய இரண்டு அணிகள் இணைந்து போட்டியிடுகின்றனர்! )

3. பிள்ளையான் அணி.

4. ஹக்கீம் தலைமை கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனியாகஆகிய இந்த 4 பிரதான கட்சிகளே இங்கு ஆய்வு செய்ய வேண்டிய விடயமாகும்.

ஆக தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் பிரதான கட்சி! இங்கு போட்டி என்பதே இல்லை ஆனால் தமிழ் கூட்டமைப்பின் வாக்குகளை பிரிக்க பல கட்சிகள் களமிறக்கம்.

இந்த 4 பிரதான கட்சிகளே களம் அமைத்துள்ளது!மொட்டுக் கட்சியுடன் இங்கு மல்லுக்கட்டும் போட்டியாக யாருமே இல்லை! மட்டக்களப்பு என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாவட்டம்!

வெற்றி வாய்ப்புக்கள் எந்தக் கட்சிகள்!.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – (3 ஆசனங்கள்)

2). ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி) -1 ஆசனம்

3). முஸ்லிம் காங்கிரஸ் கட்சி – பதியப்பட்டுள்ள மொத்த வாக்குகள் : 398,301அளிக்கப்படக் கூடிய /எதிர்பார்க்கப்படும் மொத்த வாக்குகள் 250,000-260,000 1/ 4 = ஒரு ஆசனத்திக்கு ஆகக்குறைந்தது சுமார் 65 ஆயிரம் வாக்குகள் வேண்டும்!

1). இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 140.000- 141,000 (3 ஆசனம்)

2). ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி) – 28,000- 29,000 (1 ஆசனம்)

3). முஸ்லிம் காங்கிரஸ் – 32.000 -33000 ( 1 ஆசனம்)

4) பிள்ளையான் அணி – 26,000 – 27,000 (ஆசனம் இல்லை)4). ஹிஸ்புல்லாஹ் – 20,000-21,000 (ஆசனம் இல்லை)

(5).ஏனைய கட்சிகளான மீன் கட்சி, பைசிக்கிள் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக -14,000- 15,000

A. இலங்கை தமிழரசுக் கட்சி – ( TNA யில் மீண்டும் ஞானமுத்து ஸ்ரீநேசன் அதி கூடிய வாக்குகளுடன் பாராளுமன்ற உறுப்பினராவதுடன் உதயகுமார் மற்றும் சாணக்கியன் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது!

மூன்றாவது ஆசனம் TNA க்கு முன்னாள் அரச அதிபர் உதயகுமார் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது) .

B. சஜித் அணியில் ஓட்டமாவடி – அமீர் அலி வெற்றி பெறும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் – ஏறாவூர் நசீர் (முன்னாள் முதல்வர்)வெற்றி பெறும் வாய்ப்புஆனால் அலி சாகிர் மௌலானா வெற்றி பெற வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விரும்புகின்றார். காரணம் ஏறாவூர் நசீர் வெற்றி பெற்றால் பாதி அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டு ஆளும் தரப்புக்குள் நுழைந்து விடுவார் என்ற அச்சம்

C. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு உள்ளது. ஏறாவூர் நசீரின் வெற்றி என்பது ஹக்கீமின் தலைமைக்கு ஆபத்தாகவும் வந்து விடும் என்ற அச்சம் எப்போதும் ஹக்கீமுக்கு உள்ளது.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்த மட்டில் மீண்டும் ஐயா யோகேஸ்வரன் வெற்றி பெறுகின்றார். இரண்டாமிடம் சாணக்கியன் அடைகின்றார். மூன்றாமிடம் உதயகுமார் பெறுகின்றார். ஆனால் பிள்ளையான் அணி 1 ஆசனம் பெறுமானால் உதயகுமார் வெற்றி பெற முடியாது .நான்காம் இடம் சிறிநேசன் அடைகின்றார். சாணக்கியன் தமிழரசுக் கட்சிக்குள் வந்ததே தமிழரசுக் கட்சிக்கு ஒரு வாக்கு வங்கியை கொண்டு வந்துள்ளது.

உதயகுமார் வாக்கு வங்கியல்ல. ஆனால் படித்த மக்கள் மத்தியில் உதயகுமார் செலவாக்கு பெறுகின்றார் .ஆனால் சாணக்கியன் அப்படியல்ல பட்டிருப்பு தொகுதியில் மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டவர் .இம்முறை வாக்களிப்பு வீதம் குறைவாகவே இருக்கும் .பொதுவாக வடகிழக்கில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் என்பது 50-60 வீதமே.

ஆனால் ஓட்டமாவடி,ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய ஊர்களில் முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் என்பது 70-80 வீதமாக இருக்கும் .ஆனாலும் இம்முறை கொரொனோ உள்ளதால், முஸ்லிம் பகுதிகளில் 70 வீதமாக இருக்கும்.அதனால் சராசரியாக 65 வீதமாக நாம் எடுத்துக் கொள்வோம்.

வாக்கு வீதம் அதிகரிக்குமானால் இங்கு நாம் காட்டியுள்ள வாக்குகள் அதிகரிக்கும் .ஆனாலும் நாம் இங்கு தந்துள்ள வெற்றி தோல்வி கணக்கில் மாற்றம் இருக்காது.

பிள்ளையான் கட்சிக்கு நாம் இங்கு நாம் காட்டியுள்ள வாக்குகள் குறையுமானால் பிள்ளையானின் படகு கட்சி வெற்றி பெறமாட்டாது .பிள்ளையான் அணி வெற்றியை எம்மால் ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.அதனால் இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்கள் பெறவே அதிக வாய்ப்புள்ளது .இது மட்டக்களப்பின் இறுதி அறிக்கை!

ஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது!

June 10, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்களத்தில் ஐந்து ஆனசங்களுக்காக 304 பேர் போட்டிக்காக களமிறங்கவுள்ளனர்

2019ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்புகளுக்கமைய நடைபெறவுள்ள இத்தேர்தலில் 4 இலட்சத்து 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் அலுவலக அறிக்கை தெரிவிக்கின்றது. இதன்படி மட்டக்கள்பு தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 92 ஆயிரத்தி 809 வாக்காளர்களும், கல்குடாத் தொகுதியில் 1 இலட்சத்து 19 ஆயிரத்தி 928 வாக்காளர்களும், பட்டிருப்புத் தொகுதியில் 97 ஆயிரத்து 71 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 65,321 வாக்காளர்களும், காத்தான்குடி பிரிவில் 31,268 வாக்காளர்களும், மன்முனைப்பற்று ஆரையம்பதிப் பிரிவில் 24,428 வாக்காளர்களும், வவுனதீவுப் பிரிவில் 22,237 வாக்காளர்களும், ஏறாவூர் நகர் பிரிவில் 26,463 வாக்காளர்களும், ஏறாவூர்பற்று செங்கலடிப் பிரிவில் 23,092 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர் பற்று செங்கலடிப் பிரிவில் 28,893 வாக்காளர்களும், கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரிவில் 19,442 வாக்காளர்களும், கோரளைப்பற்று வாளைச்சேனை பிரிவில் 18,518 வாக்காளர்களும், கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் முஸ்லிம் பிரிவில் 19,984 வாக்காளர்களும், கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரிவில் 16,754 வாக்காளர்களும், கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரிவில் 16,337 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதியடைந்துள்ளனர்.

பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடிப் பிரிவில் 46,275 வாக்காளர்களும், போரதீவுப் பற்று வெல்லாவெளிப் பிரிவில் 31,459 வாக்காளர்களும், மன்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரிவில் 19,337 வாக்காளர்களும் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியடைந்திருப்பதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர். சசீலன் தெரிவித்தார்

இத் தேர்தலில் இம்மாவட்டத்திலிருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் கடந்த 2015 பொதுத் தேர்தலில் தமழ் தேசியக் கூட்டமைப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஞானமுத்து ஸ்ரீநேசன், எஸ்.வியாழேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரனுமாக மூவரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலிஸாஹிர் மௌலானாவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான பிரசாரங்களுடன் திகாமடுல்ல தேர்தல் களம்

Thinakaran5 நாட்களுக்கு முன்

திகாமடுல்ல மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரக் களம் நாளுக்கு நாள் பரபரப்படைந்து வருகின்றது. சிறுசிறு பிரசாரக் கூட்டங்கள் மாவட்டத்தில் பரவலாக நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் நாட்களில் அதிகமான கூட்டங்கள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலிருந்தும் மொத்தம் 07 பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்று போனஸ் ஆசனத்துடன் அதிக பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்பில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. அவற்றின் வேட்பாளர்களும் ஓயாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எங்கும் இதே பேச்சாகவே உள்ளது.தேர்தல் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளில் படித்தறிதல், இலத்திரனியல் ஊடகங்களில் கேட்டும், பார்த்தும் தெரிந்து கொள்ளல், சம்பாஷணைகளில் ஈடுபடல் போன்றவற்றில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் கடந்த கால செயற்பாடுகளை விமர்சிப்பதிலும் தேர்தல் இறுதி முடிவு தொடர்பில் ஆருடம் தெரிவிப்பதிலும், வாக்காளர்களின் அதீத ஆர்வம் திரும்பியுள்ளது. பிரசாரக் கூட்டங்களில் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.

இதுதவிர, ஊடகவியலாளர் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் சகிதம் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை தனித்தனியாகச் சந்தித்து ஆதரவு தேடி வருகின்றனர்.

அரசியற் கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைக் காரியாலயங்கள் பிராந்திய ரீதியாக திறக்கப்பட்டு, தேர்தல் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விருப்பு வாக்குகளை அதிகரிக்கும் முயற்சியில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை மொத்தம் 540 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியற் கட்சிகளின் அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் என்றெல்லாம் துறை சார்ந்தவர்கள் போட்டியிடும் தேர்தல் களமாக திகாமடுல்ல மாவட்டம் திகழ்கின்றது. பல புதிய முகங்களும் இம்முறை உள்ளன.

பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை தமிழர் மகா சபை, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எங்கள் மக்கள் சக்தி கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஜனசெத பெரமுன, தேசிய மக்கள் சக்தி, தேசிய ஜனநாயக முன்னணி, நவ சிகல உறுமய, முன்னிலை சோஷலிஸ கட்சி, மௌபிம ஜனதா பக்ஷய, லிபரல் கட்சி, இலங்கை சோஷலிச கட்சி, சிங்களதீப ஜாதிக பெரமுன ஆகிய 20 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 34 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 54 வேட்புமனுக்களில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

இம்மாவட்டத்தில் அதிகளவு 34 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள போதிலும், அவர்களில் அதிகமானவர்கள் இதுவரை பிரசார நடவடிக்கைகளை இன்னும் ஆரம்பிக்கவில்லை.

2019ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் மொத்தம் 5,13,979 வாக்காளர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 28,668 பேர் அஞ்சல் மூல வாக்காளர்களாவர்.

அம்பாறை தேர்தல் தொகுதியிலிருந்து 177,144 பேரும், பொத்துவில் தொகுதியிலிருந்து 168,793 பேரும், சம்மாந்துறைத் தொகுதியிலிருந்து 90,405 பேரும், கல்முனை தொகுதியிலிருந்து 77,637 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த 2019 நவம்பர் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை விடவும் இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 10,189 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 151,013 வாக்குகளைப் பெற்று நான்கு ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 89,334 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களையும், இலங்கை தமிழ் அரசு கட்சி 45,421 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டன.

——————————————————————————————————————–

மலைநாடு

4 மார்ச்  2020

பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் கவனத்துக்கு ; தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்புகள்!! பொதுத் தேர்தல் தொடர்பில் முக்கிய தகவல்கள் அடங்கிய நான்கு விசேட வர்த்தமான அறிவித்தல்கள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னபிரியவின் கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது.தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக காலி, பதுளை, மொணராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு சய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே மாற்றம் எற்பட்டுள்ளது.

கடந்த பொது தேர்தலில் காலி மாவட்டத்தில் இருந்து 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9 ஆக குறைவடைந்துள்ளது. மாத்தறை மாவட்டத்தில் இருந்து கடந்த பொது தேர்தலில் 8 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 7 ஆக குறைவடைந்துள்ளது. இதேபோன்று பதுளை மாவட்டத்தில் கடந்த முறை 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மொணராகலை மாவட்டத்திலிருந்து கடந்த முறை 5 உறுப்பினர்னகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்முறை இந்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைவாக இம்முறை ஆக கூடுதலான உறுப்பினர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த எண்ணிக்கை 19 ஆகும்.ஏனைய வர்த்தமானி அறிவித்தல்கள் சுயாதீனக் குழுக்கள் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் மற்றும் அரசியல் கட்சி அல்லது சுயாதீனக் குழுக்களின் ஊடாக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான எண்ணிக்கை, வாக்களிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு;;ள்ளன. சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புக்கு அமைவாக அந்தந்த தேர்தல் மாவட்டத்தின் பெயர்கள், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை, சுயேட்சை குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பண விபரம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு ஒன்று 44,000 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு 20,000 ரூபாவையும், வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு 18,000 ரூபாவையும், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் குழு 22,000 ரூபாவையும் ,திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் குழு 14,000 ரூபாவையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் குழு 16,000 ரூபாவையும், மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் குழு 16,000 ரூபாவையும், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் குழு 20,000 ரூபாவையும், கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் 30,000 ரூபாவையும் கட்டுப்பணமான செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 10,402 இனால் அதிகரித்துள்ளது.?

2015ம் ஆண்டில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை, கடந்த 2014ம் ஆண்டை விட 10,402 இனால் அதிகரித்துள்ளது.அத்துடன் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 1,705 இனால் அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணத் தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.2015ம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் மற்றும் வன்னித் தேர்தல் மாவட்டம் என்பவற்றில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின், யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு 4 இலட்சத்து 50 ஆயிரத்து 153 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ம் ஆண்டு 7 ஆயிரத்து 786 இனால் அதிகரித்து 4 இலட்சத்து 57 ஆயிரத்து 939 வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 79 ஆயிரத்து 86 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 616 இனால் அதிகரித்து 81 ஆயிரத்து 702 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் இணைந்த யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 402 இனால் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.வன்னித் தேர்தல் மாவட்டத்தின், வவுனியா நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 695 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 107 இனால் அதிகரித்து, ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 802 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.மன்னார் நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 83 ஆயிரத்து 224 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 731 இனால் குறைவடைந்து 78 ஆயிரத்து 493 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு 63 ஆயிரத்து 840 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 329 இனால் அதிகரித்து, 67 ஆயிரத்து 169 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், மேற்படி மூன்று மாவட்டங்களும் இணைந்த வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஆயிரத்து 705 வாக்காளர்களினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் செயலகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

———————————————————————————-

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply