நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்! அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்!

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்! அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்!

நக்கீரன்

(சட்டத்தரணி மனோன்மணி சதாசிவம் சுமந்திரன் பற்றி அவதூறு கற்பித்து பத்துப் பக்கங்களில் சாக்கடை நடையில் எழுதிய கட்டுரைக்கு எமது எதிர்வினை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகிய சுமந்திரனுக்கு எதிராக கடுமையான ஆனால் அடி நுனி இல்லாத  குற்றச்சாட்டுக்களை சட்டத்தரனி திருமதி மணோன்மணி சதாசிவம்  சுமந்திரன் மிது வீசியுள்ளார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சுமந்திரனுக்கு எதிராக பிரபல பெண் சட்டத்தரணி பகிரங்க குற்றச்சாட்டு” என்ற தலைப்பில்  சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தமிழ்வின் இணையதளம் அதனைப் பிரசுரித்துள்ளது. இந்த இணைய தளத்தை ஐபிசி விலைக்கு வாங்கியுள்ளது தெரிந்ததே. ஐபிசி உரிமையாளர் பாஸ்கரன் சுமந்திரனைத் தோற்கடிக்க பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பாதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமதி மனோன்மணி சதாசிவம் வவுனியா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி, பிரபல நொத்தாரிசு, பதில் நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் ஏன் பதவி விலகவேண்டும் என்ற தனது நியாயப்பாட்டை திருமதி. மனோன்மணி சதாசிவம் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்:

இப்போது அதே கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்து மனோன்மணி வெளியிட்டுள்ளார். ஆனால்  ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட சில வாசகங்களை தமிழில் வசதியாக மறைத்துவிட்டார். எடுத்துக் காட்டாக ஆங்கிலத்தில், 

We, the Tamils of Tamil Eelam, have been constantly betrayed by the traitors in our own community. We have no tolerance and cannot suffer from these disloyal actions any longer. We call the former MP, Mr M. A. Sumanthiran, the spokesperson of the Tamil National Alliance (TNA), to respect the people’s mandate and resign from his post and leave the TNA forthwith. We call him to do so immediately if he has any dignity at all. Should he fail to do of his own accord, we hereby demand the TNA leadership to honour the wishes of the people and remove him. 

தமிழீழத்தின் தமிழர்கள் ஆகிய நாங்கள், எங்கள் சொந்த சமூகத்தில் உள்ள துரோகிகளால் தொடர்ந்து துரோகம் செய்யப்படுகிறோம். எங்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, இந்த விசுவாசமற்ற செயல்களால் இனியும்  பாதிக்கப்பட முடியாது. முன்னாள் எம்.பி., தமிழ் தேசிய கூட்டணியின் (ததேகூ) ஊடகப் பேச்சாளர்  திரு. எம்.ஏ. சுமந்திரனுக்கு ஏதேனும் கண்ணியம் இருந்தால் உடனடியாக ததேகூ இல் இருந்து விலகுமாறு அழைக்கிறோம். அவர் தனது விருப்பப்படி செய்யத் தவறினால், மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து அவரை உடனடியா நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை நாங்கள் இதன்மூலம் கோருகிறோம்.

இந்த  வரிகள் பன்மையில் அமைந்திருக்கிறது. இவர் குறிப்பிடும் ஈழத்தமிழர்கள் யார்? அவர்களை இவர் பிரதிநித்துவப் படுத்துகின்றாரா? நாங்கள் அறிந்த அளவில் இவர் ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூடக் கிடையாது. பின் எதற்காக இந்தப்  பம்மாத்துப் பேச்சு? யாரை ஏமாற்ற நினைக்கிறார்.

அம்மணி மனோன்மணி ஆங்கிலத்தில் எழுதிய இந்த வரிகளை தமிழில் மொழிபெயர்க்கும் போது வசதியாக விட்டுவிட்டார்.  அவர்  தான் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி, பிரபல நொத்தாரிசு, பதில் நீதவான் என்று சொல்கிறார். அப்படியென்றால் அவர் 6 ஆவது சட்ட திருத்தத்தின்படி  இலங்கையின் ஒற்றையாட்சிக்கு விசுவாசகமாக இருப்பேன் என்றும் தனிநாடு கேட்க மாட்டேன் என்றும் சத்தியப் பிரமாணம் எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்துவிட்டு எப்படி “தமிழீழத்தின் தமிழர்கள் ஆகிய நாங்கள்” என   பிரிவினைவாதம் பேசலாம்? அதிலும் நீதிமன்றங்களில் தோன்றி வாதாடும் ஒரு சட்டத்தரணி, பதில் நீதவான் எப்படிச் சொல்ல முடியும்? எழுத முடியும்?

அம்மணி மனேன்மணிக்கு அப்படி எழுதுவதால் வரும் விளைவு தெரிந்திருக்க வேண்டும். அதன்காரணமாகவே ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வரிகள் தமிழில் விடுபட்டுப் போயிருக்கிறது! துணிச்சல் இருந்தால் தமிழிலும் அப்படி எழுதியிருக்கலாமே? ஏன் எழுதவில்லை?

அம்மணி மனோன்மணி  தனது கட்டுரையில் “மக்களாகிய நாங்கள்”  எனச் சொல்கிறார். அந்த மக்கள் யார்? ஒரு சனநாயக நாட்டில் மக்கள் சார்பாகப் பேசக் கூடியவர்கள் பெரும்பான்மைத் தமிழ் வாக்காளர்களது ஆதரவைப் பெற்ற கட்சித் தலைவர்கள்தான். மற்றவர்கள் கருத்துச் சொல்லலாம். ஆனால் ஒட்டுமொத்த மக்கள் சார்பாக கருத்துச் சொல்ல முடியாது.

கடந்த  2015 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ  வட கிழக்கில் போட்டியிட்டு மொத்தம் 515,963 வாக்குகள் பெற்று 14 இடங்களைக் கைப்பற்றியது. முதல் முதல் தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் 58,044 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தமிழ் வாக்காளர்கள் கடந்த தேர்தல்களில் யாருக்கு வாக்களித்தார்கள்?  ததேகூ தனது தேர்தல் அறிக்கையில் கூறியவற்ளை வைத்துத்தான் வாக்களித்திருந்தார்கள். அந்த தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டது?

தமிழ் மக்கள் ஒரு தனித் தேசிய இனம், வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் – முஸ்லிம் தாயகப் பிரதேசம், தேசிய இனம் என்ற வகையில் உரித்தான சுயநிர்ணய உரிமை, சமஷ்டி கட்டமைப்பின் கீழ் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் வாழும் எந்தவொரு மக்கள் மீதும் முரண்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தாத அதிகாரப் பகிர்வு என்பவற்றை உள்ளடக்கியதோர் அரசியல் தீர்வை தாம் கோருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கூறியது.

அதிகாரப் பகிர்வு என்பது காணி, சட்டம் – ஒழுங்கு, சட்ட அமலாக்கம், தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற முறையில் சுமந்திரன் ததேகூ எவற்றை தேர்தல் அறிக்கைகளில் சொல்லியதோ அதற்கு இணங்கவே, அதற்கு அமையவே பேசிவருகிறார். நேர்படப் பேசுகிறார். வடக்கில் ஒருவிதமாகவும் தெற்கில் இன்னொரு விதமாகவும்  சுமந்திரன் பேசுவதில்லை.  அண்மையில் சர்ச்சைக்கு உள்ளான சுமந்திரனின் நேர்காணலை ததேகூ இன் தலைவர் சம்பந்தன் சுமந்திரனின் பதில்கள் “பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் இந்த நாட்டு மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார்.”

திரு சுமந்திரன் உண்மையில் ஒரு மனித உரிமை வழக்கறிஞரோ அல்லது மக்கள் பிரதிநிதியோ அல்ல என்பதை அவர் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் அவர் மனித உரிமைகள் சட்டம் அல்லது சர்வதேச சட்டத்தை படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர் எந்த அரசியல் கைதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அல்லது எந்தவொரு பொது நலன் வழக்குகளிலும் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இல்லை. உண்மையில், அவர் எப்போதுமே கொழும்பை தளமாகக் கொண்டு பணத்துக்காக வழக்காடும் ஒருசராசரி அப்புக்காத்தாகவே வாழ்ந்துளள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் அவர் கவலைப்படவில்லை என எழுதுகிறார் அம்மணி மனோன்மணி.

அம்மணி மனோன்மணி “அவர் எந்த அரசியல் கைதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அல்லது எந்தவொரு பொது நலன் வழக்குகளிலும் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இல்லை. உண்மையில், அவர் எப்போதுமே கொழும்பை தளமாகக் கொண்டு பணத்துக்காக வழக்காடும்ஒருசராசரிஅப்புக்காத்தாகவே வாழ்ந்துள்ளார்.வடக்குமற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் அவர் கவலைப்படவில்லை” என  மிகக் கேவலமாக, அருவருப்பான முறையில், எந்தக் கூச்சமும் இன்றி சுமந்திரன் பற்றி எழுதுகிறார். சிலருக்கு தங்களைப் போல் மற்றவர்களை நினைக்கும்  ‘பெருந்தன்மை’ உண்டு.   உண்மையில் சுமந்திரன் ஒரு சராசரி அப்புக்காத்தா அல்லது அம்மணி  மனோன்மணி ஒரு சராசரி அப்புக்காத்தா?

அம்மணி  மனோன்மணி ஆங்கிலத்தில்  எழுதிய கட்டுரையில் சுமந்திரன்  வியாபார வழக்குகள் பேசுகிற அப்புக்காத்து என்று  மிகவும் கீழ்த்தரமாக எழுதியுள்ளார். 

Mr Sumanthiran has repeatedly proven on many occasions that he is neither a real human rights lawyer nor a genuine people’s representative. There is no evidence that he ever studied human right law or international law in any university. There is no record of him representing any political prisoners or being involved in any public interest cases. In fact, he always remained a money-minded commercial lawyer based in Colombo and never cared about the lives of the Tamils in the North and East.

சுமந்திரன் நினைத்தால் அம்மணி மனோன்மணி மீது மான இழப்பு வழக்குப்  போடலாம். ஆனால் சுமந்திரன் அப்படிப்பட்டவர் அல்ல. அரசியலுக்கு வந்தால் பலர் மாலை போடுவார்கள், சிலர்  கல் எறிவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.  குக்கல்கள் குரைக்கின்றன என்பதற்காக யாரும் பயணத்தை நிறுத்துவதில்லை.

அம்மணி மனோன்மணி சுமந்திரனைத் தாழ்த்துவதாக நினைத்துக் கொண்டு “திரு சுமந்திரன் ஒரு உண்மையான மனித உரிமை வழக்கறிஞரோ அல்லது உண்மையான மக்கள் பிரதிநிதியோ அல்ல என்பதை பல சந்தர்ப்பங்களில் பலமுறை நிரூபித்துள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் அவர் மனித உரிமை சட்டம் அல்லது சர்வதேச சட்டத்தை படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர் எந்த அரசியல் கைதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அல்லது எந்தவொரு பொது நல வழக்குகளிலும் ஈடுபட்டதாக எந்தப் பதிவும் இல்லை. உண்மையில், அவர் எப்போதுமே கொழும்பை தளமாகக் கொண்ட பணத்தாசை பிடித்த வணிக வழக்கறிஞராக இருந்தார், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை” என எழுதுகிறார்.

சுமந்திரன் “ஒரு உண்மையான மனித உரிமை வழக்கறிஞரோ அல்லது உண்மையான மக்கள் பிரதிநிதியோ அல்ல என்பதை பல சந்தர்ப்பங்களில் பலமுறை நிரூபித்துள்ளார்” என்ற கூற்றில் சுமந்திரன் ஒரு உண்மையான மனித உரிமை வழக்கறிஞராக இல்லாது இருக்கலாம்.  ஆனால் அவர் உண்மையான மக்கள் பிரதிநிதியே அல்ல என்பது வடிகட்டிய முட்டாள்த்தனம். மக்கள் பிரதி நிதிகளில் உண்மையான மக்கள் பிரதிநிதிகள்  பொய்யான மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்களா? அம்மணி மனோன்மணி  எதன் அடிப்படையில் எந்த அளவுகோல் கொண்டு இப்படிப் பிரித்துப் பார்க்கிறார்?  நாங்கள் கூட அம்மணி மனோன்மணி ஒரு உண்மையான சட்டத்தரணியோ பதில் நீதவானோ இல்லை  அவர் பணத்தாசை பிடித்த பிசாசு  என்று எழுதினால் அதற்கான அவரது பதில் என்ன?

இது அழுக்காறு, சின்னத்தனம் காரணமாக எழுதப்பட்டதாகும்.  தலை சுகம் இல்லாதவர்களே சுமந்திரன் “பணத்தாசை பிடித்த வணிக வழக்கறிஞர்” இப்படி எழுதுவார்கள். சுமந்திரனது அரசியல் பற்றி விமர்சனம் வைக்கலாம். அதில் தப்பில்லை. ஆனால் அவர் ஒரு சராசரி அப்புக்காத்து என்று எழுதுவது கண்டனத்துக்கு உரியது. இது அம்மணி மனோன்மணியின் குடிப்பிறப்பு, பண்பாடு பற்றிய ஐயத்தை தோற்றுவிக்கிறது.

கன்னியா பிள்ளையார் கோயில் சம்பந்தமான வழக்கை சுமந்திரன்தான் தாக்கல் செய்துள்ளார். திருக்கேதீச்சுவரம் வரவேற்பு வளைவு அப்புறப்படுத்தப்பட்ட வழக்கில் திருக்கேதீசுவரம் கோயில் அறக்கட்டளை சார்பாக சுமந்திரனே வழக்காடுகிறார்.

2007 ஆம் ஆண்டு யூன்  7 ஆம் நாள் அதிகாலையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில்  விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைக் காவற்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் சுமந்திரனே தோன்றி வாதாடினார்.  தமிழர்கள் கொழும்பினுள் வருவதைத் தடுக்க முடியாது என்று  உயர் நீதி மன்று உத்தரவிட்டது.

1990 இல் இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கையை அடுத்து  6,381.5 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்திருந்தது. இதனால் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 29,000 பேர் உள்ளக இடப்பெயர்வுக்கு ஆளானார்கள். இந்தக் காணி அபகரிப்புக்கு எதிராக  2,000 க்கும் அதிகமான வழக்குகள் உயர் நீதிமன்றத்தல் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாவை சேனாதிராசா அவர்களும் ஒருவர். உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கிய போதிலும் அதனை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசு மறுத்துவிட்டது. 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக 60 விழுக்காடான காணி விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் சுமந்திரனே வாதாடியிருந்தார்.

அண்மையில் முன்னாள் நா.உறுப்பினரும் நடிகருமான இரஞ்சன் இராமநாயக்க  பொலீசாரால் கைது செய்யப்பட்டார். ஊரடங்குச் சட்டத்தை மீறினார். பொலீசார் தமது கடமைகளை செய்யவிடாது தடுத்தார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.  இந்த வழக்கில் ஊதியம் வாங்காது நீதிமன்றத்தில் வாதாடி இரஞ்சன் இராமநாயக்காவுக்கு பிணை வாங்கிக் கொடுத்தார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு  நாடாளுமன்றம் அன்றைய சனாதிபதி சிறிசேனாவால் கலைக்கப்பட்டதை அடுத்து அதற்கு எதிராக சம்பந்தன் ஐயா உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவருக்காக வாதாடியவர் சுமந்திரன். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியல் யாப்புக்கு முரணானது என்ற சுமந்திரனின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்தது.

இவையெல்லாம் போகட்டும் சுமந்திரனைப் பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது?

Sumanthiran was called to the bar in 1991.  He then started practising law in Colombo, appearing in civil litigation cases in the supreme court, court of appeal, commercial high court and district courts.  His successful cases include the privatisation of Sri Lanka Insurance Corporation, privatisation of Lanka Marine Services and the closure of Pramuka Bank.  He has appeared in a number of fundamental rights cases and judicial reviews of parliamentary legislation and executive action including the charging of levy for water and establishing a revenue authority. He prevented the forced expulsion of Tamils from Colombo and successfully challenged an anti-conversion bill which the courts struck down as being unconstitutional. He has also appeared for petitioners against the proposed 18th and 19th amendments to the constitution which were found to be unconstitutional and required two-thirds majority in Parliament and a referendum. He has worked on a number of public interest cases including the ongoing attempt by residents of the Valikamam North High-Security Zone to get their land back from the Sri Lankan military. His human rights work has led to him being threatened, harassed and branded “traitors in black coats” by the Sri Lankan military under the then President’s brother Gotabhaya Rajapaksa.

Sumanthiran has become one of Sri Lanka’s top human rights and constitutional lawyers. He received an LLM degree in internet and electronic law from Monash University in 2001. He was made a President’s Counsel in 2017.

1991 ஆம் ஆண்டில் சுமந்திரன் சட்டத்தரணியாகத் தொழில் செய்ய அழைக்கப்பட்டார். பின்னர் அவர் கொழும்பில் சட்டத் தொழில் செய்யத் தொடங்கினார். உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், வணிக உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சிவில்  வழக்குகளில் தோன்றினார். இலங்கை காப்பீட்டுக் கழகத்தின் தனியார்மயமாக்கல், லங்கா கடல் சேவைகளை தனியார் மயமாக்குதல் மற்றும் பிரமுகா வங்கியை மூடுவது ஆகியவை அவரது வெற்றிகரமான வழக்குகளில் அடங்கும். பல அடிப்படை உரிமை வழக்குகள் மற்றும் நாடாளுமன்ற சட்டங்கள் மற்றும் நிறைவேற்று நடவடிக்கை ஆகியவற்றின் நீதித்துறை மதிப்புரைகளில் அவர் தண்ணீருக்கு வரி வசூலித்தல் மற்றும் வருவாய் அதிகாரத்தை நிறுவுதல் உள்ளிட்டவற்றில் தோன்றினார். கொழும்பிலிருந்து தமிழர்களை கட்டாயமாக வெளியேற்றுவதை அவர் தடுத்தார். மதமாற்றத்திற்கு எதிரான மசோதாவை வெற்றிகரமாக  வினையாற்றினார், இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. அரசியலமைப்பிற்கு முன்மொழியப்பட்ட 18 மற்றும் 19 வது திருத்தங்களுக்கு எதிராக மனுதாரர்களுக்காக அவர் தோன்றினார், அவை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவை என்றும் அவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு தேவை என்றும் கண்டறியப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு மண்டலத்தில் வசிப்பவர்கள் இலங்கை இராணுவத்திடமிருந்து தங்கள் நிலங்களை திரும்பப் பெற தொடர்ந்து மேற்கொண்டுள்ள முயற்சிகள் உட்பட பல பொது நல வழக்குகளில் அவர் பணியாற்றியுள்ளார். அவரது மனித உரிமைப் பணிகள், அப்போதைய ஜனாதிபதியின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இலங்கை இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, “கறுப்பு கோட்டுகளில் துரோகிகள்” என்று முத்திரை குத்தப்பட்டன.

சுமந்திரன் இலங்கையின் உயர்மட்ட மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு வழக்கறிஞர்களில் ஒருவராக மாறிவிட்டார்.  அவர் 2001 இல் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் இணையம் மற்றும் மின்னணு சட்டத்தில் எல்.எல்.எம் பட்டம் பெற்றார். அவர் 2017 இல் ஜனாதிபதி சட்டத்தரணியா நியமிக்கப்பட்டார்.

அம்மணி மனோன்மணி “அதே நேர்காணலில், திரு சுமந்திரன், தான் தமிழர்களை ஆதரிக்கும் பல சட்ட நிபுணர்களுடன் பேசியதாகவும், ~~அவர்கள் அனைவரும்” இனப்படுகொலையை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அறிவுறுத்தினர் என்றும் கூறினார். ஆனால் எந்தவொரு நிபுணரையும் அவரால் பெயர் குறிப்பிட முடியவில்லை என்பது அவரது கூற்றில் எந்த  உண்மையும் இல்லை என்பதையே காட்டுகிறது. அவரது நேர்மையற்ற தன்மையையும், தமிழ் சமூகத்தை முட்டாளாக்கும் திறனையும் நிரூபிக்க இந்த உண்மைகள் போதுமானவை” என எழுதுகிறார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநாமஉ பேரவையில் செப்தெம்பர் 30, 2015 இல் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக ஐநாமஉ பேரவையின் பேச்சாளர் ரவீனா ஷம்டசானி (Ravina Shamdasani, OHCHR spokesperson) ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். அப்போது புறன்ட்லைன் – இந்து நிருபர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்.

Q. What is your response to the criticism that the report has not dealt with the issue of “genocide” comprehensively?

கேள்வி: “இனப்படுகொலை” பிரச்சினை பற்றி அறிக்கை விரிவாகக் கையாளவில்லை என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன?

A: We were able to conduct a comprehensive investigation nonetheless, with more than 3,000 written submissions, interviews in 11 countries, photos, videos and satellite imagery with expert analysis.

The legal analysis in the report is based on its extensive findings. On the basis of the findings, we can say that there are strong indications that war crimes and crimes against humanity were most likely committed by both sides to the conflict. The crime of genocide requires specific objective and subjective elements [laid out in paragraphs 202-203 of the report]. On the basis of the information we were able to gather, we did not come to the conclusion that these elements were met. This does not preclude such a finding being made as a result of further criminal investigations, including [an investigation] by the hybrid court that we recommend.

பதில்: ஆயினும்கூட, 3,000 க்கும் மேற்பட்ட எழுத்து பூர்வமான சமர்ப்பிப்புகள், 11 நாடுகளில் நேர்காணல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நிபுணர் பகுப்பாய்வுடன் செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு விரிவான விசாரணையை நடத்த முடிந்தது. அறிக்கையில் உள்ள சட்ட பகுப்பாய்வு அதன் விரிவான கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் இரு தரப்பினரும் மோதலுக்கு உட்பட்டன என்பதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன என்று நாம் கூறலாம். இனப்படுகொலையின் குற்றத்திற்கு குறிப்பிட்ட குறிக்கோள் மற்றும் அகநிலை கூறுகள் தேவை [அறிக்கையின் 202-203 பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது]. எங்களால் சேகரிக்க முடிந்த தகவல்களின் அடிப்படையில், இந்தக் கூறுகள் பூர்த்தி செய்யப்பட்டன என்ற முடிவுக்கு நாங்கள் வரவில்லை. நாங்கள் பரிந்துரைக்கும் கலப்பின நீதிமன்றத்தின் [விசாரணை] உட்பட மேலும் குற்றவியல் விசாரணைகளின் விளைவாக இதுபோன்ற கண்டுபிடிப்பு செய்யப்படுவதை இது தடுக்காது.

சுமந்திரன் மீது சேறு பூச எந்தத் துரும்பும் போதும் என அம்மணி மனோன்மணி நினைக்கிறார். நடந்தது இனப்படுகொலைதான் அதற்கான சாட்சியங்கள் இருக்கிறது என அவர் நினைத்தால் அது தொடர்பாக அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? மேலதிக சாட்சியங்கள் எதையாவது ஐநாமஉ பேரவையிடம் கையளித்தாரா?

இனப்படுகொலை தொடர்பான  வழக்குகளில் வலுவான சாட்சியங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது.  சேர்பியா – குரோசியா யுத்தத்தில் சேர்பியா குரோசியர்கள் மீது இனப்படுகொலை இழைத்தது என்ற வழக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. (https://mashable.com/2015/02/03/genocide-decision-croatia-serbia/)

அம்மணி மனோன்மணி மனம் போன போக்கில் மிகவும் கீழ்த்தரமான முறையில் சுமந்திரன் மீது சேறு பூசுகிறார். கேள்வி என்னவென்றால் சுமந்திரன் ஒன்றுக்கும் உதவாத அரசியல்வாதி என்றால் – வாணிக வழக்குகள் மட்டும் பேசும் அப்புக்காத்து என்றால் அவரைப்பற்றி நீட்டி முழக்கி ஏன் 10 பக்கக் கட்டுரை எழுத வேண்டும்? ஏன் அவரைப் பார்த்துச் சவால் விட வேண்டும்? ஏன் நிலாவைப் பார்த்து குரைக்கும் குக்கல் போலக் குரைக்க வேண்டும்? அவரை ஓரங்கட்டிவிட்டு அவரைக் கடந்து போவதுதானே? அவரைத் தேர்தலில்  தோற்கடித்துக் காட்ட வேண்டியதுதானே?

2010 இல் சுமந்திரன் ததேகூ இன் தேசியப் பட்டியல் நா.உறுப்பினராக நியமிக்கப்பட்ட போது, அவர் பின்கதவால் அரசியலுக்கு வந்தவர்,  மக்களால் தெரிவு செய்யப்படாதவர் என அம்மணி மனோன்மணி போன்றோர் நெஞ்சில் அடித்து குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டு அழுதார்கள். அவர்களது வாயை அடைக்கவே சுமந்திரன் 2015 இல் நடந்த தேர்தலில் போட்டி போட்டு 58,044 வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

இன்னும் 42 நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அம்மணி மனோன்மணிக்கு  தைரியம் இருந்தால் சுமந்திரனைத் தோற்கடித்துக் காட்ட வேண்டும். அதைவிடுத்து  அவரைப் பார்த்து குரைப்பது நிலாவைப் பார்த்துக் குரைக்கும் குக்கலுக்கு சமமாகும்!

அம்மணி மனோன்மணி வீசியிருக்கும் அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் எழுத வேண்டும் என்றால் நாமும் ஒரு பாரதம் எழுத வேண்டும். ஆனாபடியால் அவருக்கு உலகநாதர் அருளிய  உலக நீதி  என்ற நூலில் இருந்து ஒரு பாடலை மட்டும் நினைவு படுத்தி இதனை நிறைவு செய்கிறோம்.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! (உலகநீதி)

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply