யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்- Jaffna International Airport

ON 17TH OCT 2019 

BY TAMIL GEOGRAPHY NEWSIN UNCATEGORIZED

இலங்கையிலே உள்ள முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் விளங்குகின்றது. இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 16 கிலோமீட்டர் வடக்காக பலாலி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இலங்கையில் முக்கிய சர்வதேச விமான நிலையங்களாக கட்டுநாயக்க, இரத்மலானை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மத்தள ஆகியன உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் யாழ்ப்பாண விமான நிலையம் பலாலி விமான நிலையம் மற்றும் பலாலி படைத்தளம் எனவும் அழைக்கப்பட்டது. 2ம் உலக போரில் இது பிரித்தானிய வானுர்தி தளமாகவும் பின்னர் இலங்கையின் 2வது வானுர்தி தளமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன்பின்பு 1990ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டது. 1998ம் ஆண்டு பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியவுக்கு சென்ற விமானம் இரணைதீவுக்கும் மன்னருக்கும் இடையில் காணாமல் போனது. இந்த விமானத்தில் 55 பயணிகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன்பின்பு 2002ம் ஆண்டு மீண்டும் விமான சேவைகள் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த தருணத்தில் எக்ஸ்போர் அய்ர் விமானம்சேவையை மேற்கொண்டது. இதன்பின்பு உள்நாட்டு யுத்தம் மீண்டும் நடைபெற்றது. இதனால் விமான சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தன. எனினும் வெளிநாடுகளுக்கான விமானசேவைகள் 1983ம் ஆண்டுக்கு பின்னர் நடைபெறவில்லை.

36 ஆண்டுகளுக்கு பின்னர் 2019ம் ஆண்டு மீண்டும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் விமான நிலையத்துக்கான மீள்கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்றது. இதற்கு அமைவாக 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி இந்தியாவில் இருந்து இந்திய விமானநிலைய நிர்வாகி வருகை தனது பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டு அதனை மீள்கட்டுமானம் செய்வதற்கு உரிய நிதி நிலைமைகளை எடுத்துரைத்தார்.

இதற்கு அமைவாக இவ் திட்டத்துக்கு 2250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் இலங்கை 1950 மில்லியன் ரூபாய் நிதியையும் இந்தியா 300 மில்லியன் ரூபாய் இனையும் ஒதுக்கியது. இதனை அடிப்படையாக கொண்டு குடிநீர் வசதி, ஓடு பாதை, மின்சார வசதி, சுங்க திணைக்களம், விமான நிலைய முனைய வீதி, குடிவரவுப்பகுதி போன்றன புனரமைக்கப்பட்டன. போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜிண ரணதுங்க இதனை சர்வதேச நிலையமாக மாற்றியமைத்தார்.

இவ் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் 1800 சதுர கிலோமீட்டர் அளவுக்கு விமானிகள் பறப்பதற்கான வசதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் நிர்மாண பணிகள் 3 கட்டங்களாக நடைபெற்றன. 1வது கட்டத்தில் 950மீட்டர் ஓடுதள விரிவாக்கமும், 2வது கட்டத்தில் 1500மீட்டர் ஓடுதள விரிவாக்கமும் , 3வது கட்டத்தில் 2300மீட்டர் ஓடுதள விரிவாக்கமும் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் திகதி கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இது இலங்கையிலே 3வது சர்வதேச விமான நிலையமாக காணப்படுகின்றது. இவ் விமான நிலையத்தின் முதலாவது விமான சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. சென்னையில் இருந்து பலாலிக்கு Alains Air விமானம் தனது சேவையை மேற்கொண்டது. இந்த விமானம் Alains Air நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இக்கம்பெனியின் 55வது நகரமாக யாழ்ப்பாண நகரம் விளங்குவதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்துக்கு அமைச்சு கூறியுள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நிலைய குறியீடு JAF ஆகவும் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCJ எனவும் கூறப்பட்டுள்ளது. தற்பொழுது இதன் சேவைகள் சென்னை, திருச்சி, கொச்சின், பெங்களூர், மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ் விமான சேவைகள் யாவும் எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி உத்தியோகபூர்வாமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவ் விமான நிலையத்தின் 1500மீட்டர் ஓடுதள பகுதியில் 72 இருக்கைகள் கொண்ட C100 விமானம் பயணிக்கும். 2300மீட்டர் ஓடுதள பகுதியில் Airbus320 , Airbus321 ஆகிய விமானங்கள் அதிகளவு பயண இருக்கைகளை கொண்டதகாவும் காணப்படுகின்றது. Airbus320, Boeing737, A318, A319 ஆகிய விமானங்கள் சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு பயணத்தினை மேற்கொள்ளும். இதுதவிர எதிர்காலங்களில் சீனா, அவுஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகள், சில ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கும் பயண சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilgeographynews838664512.wordpress.com/2019/10/17/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/

——————————————————————————————————————–

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply