தென்னாட்டின் போர்க்களங்கள்

தென்னாட்டுப் போர்க்களங்கள் தொடர்
ஆச்சாரி

Jan 14, 2012

அறம் வழுவா நெறியால் பெருமைப்படத்தக்க வகையில் வாழ்ந்த பழந்தமிழரின் வரலாறு உலகை நன்னெறிப்படுத்தும் வகையில் திகழ்வதாகும். அவ்வாறான தமிழர் வாழ்வின் வீரத்தையும் அவர்தம் சிறப்பையும் எடுத்தியம்பும் – பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் “தென்னாட்டுப் போர்க்களங்கள்” தொடராக வெளியிடுவதில் சிறகு பெருமைகொள்கிறது. அந்நூல் குறித்தும் அப்பாத்துரையாரின் ஆற்றலைப் போற்றியும் 22.9.1967 அன்று அப்பாத்துரையாரின் மணி விழாவில், அறிஞர் அண்ணாவின் பாராட்டு- இந்நூல் எத்தன்மை சிறப்பு வாய்ந்தது என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது. அண்ணாவின் பாராட்டு இதோ:-

அப்பாத்துரையாரின் நூல்களை வீடுதோறும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அப்பாத்துரையார் எழுதிய நூல்களில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ எனும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அந்த நூலின் ஒரே ஒரு பக்கத்தை எழுத அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி எண்ணி வியந்தேன்.  அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம், தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் பகை மூட்ட அல்ல- தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்து இருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால் அவை ஒரு மண்டபமே நிறையும் அளவிற்கு இருக்கும்.

முகப்புரை

வடதிசை நாகரிகமாகிய அரை இருளும், மேலை நாகரிகமாகிய அரை ஒளியுமே இன்றைய தமிழரால் – கற்றறிந்த தமிழரால்கூட- ஒளியாகக்கொண்டு பின்பற்றப்படுகின்றன. வருங்கால உலகம் பெறவேண்டிய முற்றொளிக்கு இவை படிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழக அளவில் இந்த அரை இருள், அரை ஒளிகளைவிட, முற்காலத் தமிழகத்தின் முழு நிலவொளி அவ் வருங்கால முழுக் கதிரொளி காணும் வகையில் இன்னும் உயர்ந்த படியாக உதவுவது ஆகும். வடதிசை நாகரிகத்தையும் மேலை நாகரிகத்தையும் சரியான முறையில் நாம் பயன்படுத்துவதனால் அவை முற்காலத் தமிழர் நிலவொளிக்கும் வருங்கால உலகின் கதிரொளிக்கும் இட்டுச் செல்லும் தகுதி உடையன என்பது உறுதி. ஆனால் வடதிசை, மேல்திசை, பண்டைத் தமிழகம், வருங்கால உலகம் என்ற படிகளை தலைகீழாக்கி இடைக்கால வடதிசையின் பிற்போக்கு வழியில் சறுக்குவதே இன்றைய இந்திய மாநில ஆட்சிக்கும், மாநில நாகரிகத்துக்கும் உரிய ஒரு பெரிய மாய இடராக உள்ளது. மேலை நாகரிகத்தை அயல் நாகரிகமாகவும் வடதிசை அடிமை இருட்கால நாகரிகத்தை அக உரிமை நாகரிகமாகவும் கொள்ளும் வடதிசையின் இன்றைய போக்குத் தமிழரை மட்டுமின்றி உலகையும் இருளை நோக்கியே இட்டுச் சென்று வருகிறது.

தமிழக வரலாறு, தமிழ்ப் பண்பாடு, தமிழக இலக்கியம் ஆகியவற்றின் ஆராய்ச்சி இன்றும் தமிழகத்திலேயே ஆட்சியாளர், பத்திரிகைகள், கல்வி நிலையங்கள், கல்லூரி, பல்கலைக் கழகங்கள் ஆகியவை அக்கறை கொள்ளாத கண்ணெடுத்தும் பாராத துறைகளாய் உள்ளன. உலக வரலாறுகூட, பள்ளி, கல்லூரிகள் பற்றிய மட்டில் இன்னும் ஒன்றிரண்டு மேலை நாடுகளின் ஆதிக்க வேட்டை வரலாறாக உள்ளதேயன்றி “ஓருலக” இன வரலாறாக கருத்துருவாகவில்லை. அக்குறிக்கோளை, “ஓருலக அவை” (ஐக்கிய நாடுகள் சங்கம்) கொடியாகத் தூக்கியுள்ளது என்பது உண்மையே. உலக மக்கள் என்ற குரல் எழுப்பப்பட்டுள்ளதும் உண்மையே. ஆனால் உலக அவையின் உறுப்பினர் இன்றும் நாட்டாதிக்க அரசுகளும் ஆதிக்க நாடுகளும் மட்டுமே. மக்கள் நேரடிப் பேராட்சி இன்னும் அதைத் தீண்டவில்லை. அதுமட்டுமன்று உலகக் குறிக்கோளை முதன்முதலில் உலகில் உயர்த்திய இனம், வள்ளுவர் இனம், தமிழினம் அதில் இடம் பெறவில்லை. அதில் வீற்றிருக்கும் அரும் பெரும் உரிமை பெற்றிருந்த ஒன்றிரண்டு தமிழர், ‘தமிழ்’ என்ற பெயரை மறந்தும், ‘உச்சரிக்காத’ தமிழர்களே. இந்நிலையில் இன்றைய உலகக் குறிக்கோள் ‘தமிழகமில்லாத ஒரு உலக’க் குறிக்கோள் மட்டுமல்ல, ‘தமிழகம்’ போன்ற ஆதிக்கமற்ற, உரிமையற்ற நாடுகளை விளக்கி வைத்த ஓர் உலகக் குறிக்கோளாகவே உள்ளது. பண்டை நாகரிக நாடுகள் பலவும் இல்லாத இடைக்கால நாகரிகங்களின் மேற்பூச்சு உலகமாகவே உள்ளது.

தமிழகத்தின் முழு நிறை வரலாறு வகுத்துக் காண்பது என்பது எளிதன்று. மேல் திசைத் தொடர்புகளிலிருந்தும் மேல் திசை வடதிசையாளர் மேற்கொண்டுள்ள பழம் பொருளாராய்ச்சி, மொழியாராய்ச்சி, கல்வெட்டாராய்ச்சிகளின் உதவி கொண்டும் உலகின் பெரும் பகுதியின் வரலாறும் எழுதப்பட்டு வருகின்றது. இவ்வரலாறுகள் இயற்றியவர் தமிழ், தமிழினம், தமிழகம் ஆகியவை பற்றி எதுவும் அறியாதவர், அறிய முடியாதவர்; அவ்வழி நம்பிக்கையின் நிழலோ, கனவோ அற்றவர். அதுமட்டுமன்று, நடுநிலையுணர்வுகூட அவ்வழி அவர்களில் பெரும்பாலாரை நாடச் செய்யவில்லை. மேலைப் பற்றாட்சி முதன்மையாகவும், வடதிசைப் பற்றாட்சி செறிவாகவும் அந்நடுநிலையைத் தலையிட்டு நிறுத்துகிறது. கிட்டிய சான்றுகளைக்கூட, உலகப் பொதுமக்களோ, தமிழரோ, அறியாத வகையில் திரையிட்டுள்ளனர் பலர். ஒரு சாரார் அறிவதை வேறொரு சாரார் அறியாமல் மறைக்கும் தட்டிகள் இட்டுள்ளனர் வேறு சிலர்.

இக்குறைபாடுகள் இன்று பெரிதாகத் தோற்றுவது இயல்பே. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இவை இன்னும் பெரிதாகத்தான் இருந்தன. குறைபாடுகளை அகற்றும் முயற்சியே குறைபாட்டையும் காட்டும். நிறைவை நோக்கியும் நம்மை ஊக்கும். பல இடர்கள், தடங்களுக்கிடையே சென்ற அரை நூற்றாண்டில் பண்டை இலக்கிய ஒளியும், பண்டை வரலாற்று ஒளியும் சிறிது சிறிதாக ஆய்ந்து பல அறிவுத் தொண்டர்கள் சேகரித்த சேகரத்தின் பயனே நம் இன்றைய அறிவு, இன்றைய குறைபாட்டறிவு. அவ்வனுபவங்களின் விளைவே இச்சிற்றேடு.

போர்களும் அரசர் ஆட்சிகளும், வெளிநாட்டுத் தொடர்புகளும் வரலாற்றின் உயிரல்ல என்பதை மேலை வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிச் சுட்டிச் சென்றுள்ளனர். அதன் பயனாகவே இலக்கிய வரலாறு, சமய வரலாறு, அரசியலமைப்பு வரலாறு, பொருளியல் வரலாறு முதலிய வாழ்க்கை நாகரிக வரலாற்றுப் பகுதிகள் உலகில் விளக்கமடைந்து வருகின்றன. ஆனால் நம் தமிழகத்தின் நிலை இவ்வகையில் தலைகீழானது. நமக்குக் கிட்டும் வரலாற்றாதாரம் உலகில் வேறெந்த இனத்துக்கும் கிட்டாத ஒன்று. அது உலக வரலாற்றுக்கே ஒரு புதுத் திசை திருப்பியுதவ வல்லது. சங்க இலக்கியம் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் அரசியல், சமய, சமுதாய, பொருளியல் வாழ்வை நாம் அறிவதுபோல், உலகில் வேறெந்த நாட்டவரும் எந்த மொழி, இலக்கியம் மூலமாகவும், எந்தக் காலத்துக்கும் முழு வரலாற்றோவியம் காண முடியாது. இதை எல்லா வரலாற்றாசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இதிலேயே தமிழர் நெடுநாள் சொக்கியிருந்துவிட்டனர் எனலாம். புலமை சான்ற வரலாற்றாசிரியர் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகம் பற்றி அணி அணியாக எழுதினர். நுணுக்க விரிவாக எழுதினர். ஆனால் அதன் பிற்பட்ட 1800 ஆண்டு வரலாற்றுக்கு அதுபோன்ற இலக்கியம் இல்லை. அதுபோன்ற வரலாறு நீண்ட நாள் எழுத முடியாது. இது உலக வரலாற்றிலே ஒரு புதிர்- உலக வரலாற்றுக்கே ஒரு புதிர் ஆகும்.

கல்வெட்டு, பட்டயங்கள், நாணயங்கள் உதவியால் தமிழகத்துக்கு நாம் காணும் வரலாறு சென்ற ஆயிரம் ஆண்டு வரலாறே. அது சங்ககால வரலாறு போல நிறையுடைய தேசிய வரலாறு அல்லவே அல்ல. ஆனால் அது உலக வரலாறு தொடங்கிய இடத்தில் தொடங்கிற்று- ஆண்டு, நாட்டுப் பெயர், இடம், மன்னர் பெயர் முதலியன அதில் உண்டு. போர் உண்டு, மன்னர் பெயர் வரிசை, செயல் வரிசை உண்டு. இதுவே உண்மை வரலாறு என்று கொண்டவர்- சிறப்பாக மாணவர் பலர்.

‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்ற இச்சிற்றேடு மூன்று வகைக் குறிக்கோள்களுடன் எழுதப்பட்டுள்ளது. அது தமிழகத்தை மையமாகக் கொண்டு அதன் அரசியல் விரிவாகிய தென்னாட்டிலும் அதனினும் விரிந்த பண்பு விரிவாகிய தமிழுலகம், அதாவது தென் கிழக்காசியாவிலும் கண்ணோட்டம் செலுத்தி தமிழகத் தேசிய வாழ்வின் உடலும் உயிர் மையமும் காண முயன்றுள்ளது, அந்நாடுகளின் தேசிய, இன உரிமை வரலாறுகளில் வருங்கால வரலாற்றாசிரியர் மிகுதி கவனம் செலுத்தும்படி அது அவர்களைத் தூண்ட முனைந்துள்ளது. இரண்டாவதாக போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகியவை தென்னகத்தைப் பற்றிய அளவில் வெறும் நிகழ்ச்சிகளல்ல. வரலாற்றின் எலும்புருவம் மட்டுமல்ல. அவையே தமிழர் தேசிய வாழ்வின் பல திரும்பு கட்டங்கள், பண்பு மாறுபாட்டுக் கணுக்கள் ஆகும். அத் தேசிய வாழ்வுக்கு உருத் தருபவையும், அதன் வளர்ச்சித் தளர்ச்சிகள், உறுதித் தளர்வுக் கூறுகளை வகுத்தமைக்கும் ஊழ்கூறுகளும் அவையே.

ஆகவே கூடிய மட்டும் போர்க்கள வரலாற்று தேசிய வரலாற்றின் எலும்பு மையமாக, கணு மையங்களாக, திரும்பு கட்டங்களாகவே விளக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக, போரும் தேசிய வாழ்வும்கூட நாட்டின் எலும்புக்கூடும் உடலும் மட்டுமே. அவற்றின் உயிர் அதன் தேசியப் பண்பும், அப்பண்பு அகல் உலகுடன் கொண்டுள்ள தொடர்புமேயாகும். நாட்டுக்கு மட்டுமின்றி உலகுக்கே வருங்கால வளர்ச்சிக்குரிய வழியும் திசையும் காட்டுவது இவ்வுயிர்ப் பண்பேயாகும். ஆகவே நிகழ்ச்சி கடந்து அவற்றின் காரண காரியங்களை ஆராய்வதும், அவற்றை நாடு கடந்து உலகில் கண்டு மதிப்பிட முயலுவதும் தேசிய வரலாற்றாசிரியன் இன்றியமையாக் கடமையாகும். தமிழக வரலாற்றின் உயிர் காண்போர் அவ்வரலாறு உண்மையில் உலக வரலாற்றின் ஓர் உட்கூறே என்பதை நெடுநாள் காணாதிருக்க முடியாது. இன்றைய உலகம் ஓருலகம் ஆக முடியாமல், தடுமாறுகிறது என்றால், இன்றைய இந்திய மாநிலமும் கீழ்த் திசையும் ஒற்றுமை காண முடியாமல், தற்பண்பு உணர முடியாமல் தத்தளிகின்றனவென்றால், அது தமிழக வரலாறு காணாத குறையாலும், தமிழக வரலாற்றுயொளியற்ற உலக வரலாறும், கீழ்த் திசை வரலாறும் காண முயல்வதாலுமே எனலாம். மேலும் உலகின் எல்லா நாடுகளின் பழமை வரலாறுகளும் தமிழக வரலாற்றுடன் தொடர்பு கொண்டவை. தமிழக வரலாற்றில் கருத்துச் செலுத்தாத உலக வரலாற்றாசிரியர் அத்தகைய பல உலகப் பழமைகளை உலக வரலாற்றுடன் இணைக்க முடியாமல் விட்டுவிடநேர்ந்துள்ளது. உலக வரலாறும் உலக நாகரிகமும் உயிர் பெறாச் சித்திரங்களாய் இயங்குவதன் காரணம் இதுவே.

இம் முத்திறத்திலும் தமிழக வரலாற்றுக் கூறுகளைச் சுட்டியேனும் இச்சிற்றேடு முயன்றுள்ளது. தமிழுலகும் அறிவுலகும்- தமிழ்ப் பற்றுடைய உலகு மட்டுமன்று, உலக அறிவில் முனைந்தாலும் தமிழினத்தைப் புறக்கணிக்க விரும்பாத அறிவுலகும் – இம்முயற்சியைத் தமிழ்த் தொண்டிலும், உலகத் தொண்டிலும், ஒரு சிறு கணுவாகக் கொண்டு வரவேற்று, இன்னும் இதுபோன்ற முயற்சிகளை மேன்மேலும் ஊக்கிப் பெருக்கும் என்று நம்புகிறோம்.Where once the nature, volume and scope of individual professional development for teaching was a private https://essayclick.net/ matter it is now clearly in the public domain and subject to various forms of review and regulationShare 
ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

  1. Babu says:January 29, 2012 at 2:06 PMஆவலுடன் அடுத்த தொடரை படிக்க விருப்பம்.Reply
  2. kasi visvanathan says:January 16, 2012 at 3:42 AMவாரா வரவாகி வந்த மாமனிதர் ஐயா அப்பாதுரையார் அவர்கள்.
    ஒரு ஆய்வாளருக்கே வேண்டிய விருப்பு வெறுப்பு இன்றி, உள்ளது உள்ளபடி கூறி, ஆய்வும் பகுப்பும் குறையின்றி நிறைவாக எடுத்தியம்பிய தனிப்பெரும் வரலாற்று ஆசிரியர். நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்று, வல்லார்க்கும் மாட்டார்க்கும் தெளியும்படி பொருளுரைத்த பெருந்தகை. ஐயாவின் மெய் விளக்கம் பெற்றால் உண்டு வாழ்வு. இன்று மதம் கொண்டு அலையும் ஆய்வாளர்களின் கண் திறக்க ஐயாவின் உரை படியுங்கள். கலக்கம் தவிர்த்து துலக்கம் பெறலாம் வாரீர்.Reply

http://siragu.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0

——————————————————————————————————————–

தென்னாட்டுப் போர்க்களங்கள் 8 ஆச்சாரி

வட இமயத்தில் தமிழ்த்தடம் பொறித்த தமிழ் மூவேந்தருள் முதல்வன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே என்று கூறலாம். ஏனெனில் சேரருள்ளேயே செங்குட்டுவன் இமயம்வரை வென்றாலும், பிற தமிழ் வேந்தரும் இமயத்தில் தடம் பொறித்தாலும் அவனே ‘இமயவரம்பன்’ என்ற சிறப்புப் பெயருக்குப் போட்டியில்லாத உரிமை உடையவனாக இருக்கிறான். அவனை பத்துப் பாட்டில் பாடிய குமட்டூர்க் கண்ணனார்,
‘ஏ மாகிய சீர்கெழுவிழவின்
நெடியோன் அன்ன நல்லிசை
ஓடியா மைந்த’

என்று நெடியோன் புகழை நினைவூட்டி, அதற்கு அவன் உரியவனாகட்டும் என்று வாழ்த்துகிறார். நெடியோன் இமயம் வரை வென்ற பழம் புகழுடன், இமயத்தில் விற்பொறித்த நெடுஞ்சேரலாதனின் புதுப் புகழை இது ஒப்பிடுவதாக காண்கிறது. இது நெடுஞ்சேரலாதன் செயலன்று. அவன் முன்னோர்களின் புகழே என்று சிலர் கருத்துக் கொள்கின்றனர். ஆனால் முன்னர் செயல் பின்னோருக்குக் கூறப்படுவது மரபானாலும், நெடுஞ்சேரலாதனே முன்னோனாக எங்கும் சிறப்பிக்கப்படுகிறான். அவனும் இமயம் முதல் குமரி வரை ஆண்டதாகப் பத்துப் பாட்டுக் கூறுகிறது.
‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியோடாயிடை
மன்மிக் கூறுநர் மறம்பதக் கடந்தே’

இது நேரடி ஆட்சியாகவோ, எல்லா அரசராலும் ஏற்றுக்

கொள்ளப்பட்ட மேலுரிமையாகவோ அல்லது மாநிலமெங்கும் ஆற்றிய வெற்றி உலாவாகவோ நிகழ்ந்திருக்கலாம். ஆனால் நெடுஞ்சேரலாதன் காலத்தை வரையறுக்கும் வரையிலும் இதைப் பற்றி மேலும் சான்றுகள் அறியப்படும் வரையிலும் இதைத் திட்டப்படுத்திக் கூற முடியாது. இச் செயல் சோழரும், பாண்டியரும் புலி, கயல் பொறிப்பதற்கு முற்பட்டது என்பதில் மட்டும் ஐயமில்லை.

சொழருள் இமயத்தில் தமிழ்ச் சின்னம் பொறித்தவன் கரிகாலனே என்றும், பாண்டியருள் மீன் கொடி பொறித்தவன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியனே என்றும் கருத இடமுண்டு.

முதல் வல்லத்துப் போர்

சோழருள் ஓரரசன் ஆரியரைத் தஞ்சை அடுத்த வல்லம் என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் முறையடித்ததாகப் பாவைக் கொட்டிலார் என்னும் புலவர் தெரிவிக்கிறார்.

‘மாரியம் பின் மழைத்தோல் சோழர் வென்வேல்
வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை

ஆரியர் படையின் உடைக என்
நேரிறை முன்கை வீங்கிய வளையே’ (அகம்- 336)

காதலி காதலனிடம் உள்ள கோபத்தைக் கழலும் வளையல் மீது செலுத்தி, வல்லத்துப் போரில் உடைந்த ஆரியர் படைபோல் என் வளை உடையட்டும் என்கிறாள்.

தமிழக வரலாற்றில் வல்லத்தில் நடைபெற்ற போர்கள் பல. அவற்றுள் முதல் போர் ஆரியர் படை உடையத் தமிழர் ஆற்றிய இப் போரேயாகும். இப்போரில் ஈடுபட்ட சோழ மன்னன் யார், அது செருப்பாழி போரையொட்டி நிகழ்ந்ததா, பின் நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை.

கரிகாலன், நெடுஞ்செழியன் இமயப் படையெடுப்பு

வட திசையில் படையெடுத்த சோழன் கரிகாலன் இரண்டாம் கரிகாலனே. இவன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. வட திசை வென்ற பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனைப் பற்றி நாம் மிகுதி அறிவதற்கில்லை.

‘வட ஆரியர் படை கடந்து
தென் தமிழ்நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்

நெடுஞ்செழியன் (சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் இறுதிக் கட்டுரை)

என்ற இளங்கோவின் முத்தமிழ்க் காப்பியக் கூற்றிலும் விளக்கமான சான்று நமக்குக் கிட்டவில்லை.

சங்கப் பாடல்களில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனைப் பற்றிய பாட்டுக்கள் எதுவும் நமக்கு வந்து எட்டவில்லை. ஆனால் அவன் பெருவீரன் மட்டுமல்ல, சிறந்த சிந்தையும் செழுங்கலைத் திறமும் படைத்தவன் என்பதை அவனே பாடிய பாடல் ஒன்று காட்டுகிறது. அதுவே

‘உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே….
…ஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன்வருக என்னாது, அவருள்
அறிவுடையோனாறு அரசுஞ் செல்லும்…”  (புறம் 183)

எனக் கல்வி பற்றிப்பாடிய இக் காவலன் உயர் நலங் காட்டுவது ஆகும்.

மூவேந்தர் வடநாட்டுப் படையெடுப்புடன் நாம் புராண மரபின் வான விளிம்பையும் இலக்கியங் குறித்த மரபுகளின் வான விளிம்பையும் கடந்து சங்க கால வரலாற்று ஒளிக்குள் வருகிறோம்.

சங்ககாலப் போர்கள் 1

தமிழர் தமக்கென வரலாறு வகுத்துக் கொள்ளவில்லை என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர் சசிலர். தமிழருக்கு வரலாற்று உணர்வே கிடையாது என்று முடிவு செய்து விடுபவருமுண்டு. இந்த இரண்டும் இருவேறு வைகையில் பிழைபட்ட கருத்துகளாகும். ஏனெனில் அறிவியல்போல வரலாறும் எல்லா நாடுகளிலும் புதுப்படைப்பே. உலகெங்கும் வரலாற்றுக்கான ஆதாரங்கள் தேடி ஆராயப்பெற்று, நாட்டு வரலாறு தொகுக்கப்பட்டு வருவது சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளிலேயே எனலாம்.

வரலாற்று ஆதாரங்களைப் பேணுவதிலும் தேடுவதிலும் நாடுகளைத் தூண்டியது தேசீய உணர்வே. தமிழகமும் சீனமும் நீங்கலான உலக நாடுகளில் இத் தேசீய உணர்வு காரணமாக நாட்டு எல்லை வகுகக்கப்பட்டதும், தேசீய அரசியல்கள் அமைந்ததும் அண்மைக் காலத்தில்தான். இத்தேசிய உணர்வுடன், பண்டை நாகரிகங்களின் தூண்டுதலால் ஏற்பட்ட கலை மறுமலர்ச்சியும், வரலாற்றை உருவாக்கும் முயற்சிக்கு எங்கும் மிகுந்த ஆக்கம் அளித்துள்ளது. தமிழகத்திலோ தேசீய உணர்வும், தேசீய நாட்டு எல்லையும், தேசீய அரசியலும் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏற்பட்டுவிட்டன. கலை மலர்ச்சியிலோ, உலகுக்குத் தூண்டுதல் தந்த பண்டை நாகரிகங்களுக்கு முற்பட்டே அதற்கு நீடித்த வளர்ச்சி ஏற்பட்டிருந்தது வரலாற்று உணர்வும் வரலாற்று ஒளியும் அதன் இலக்கிய வாழ்வு முழுதும் உள்ளூர நின்று ஒளி வீசுகிறது.

ஆனால் துரதிருஷ்டவசமாக, மற்றெல்லா நாடுகளிலும் புதிய தேசீயத்தால் வரலாறு காணப்பட்ட நாளிலேயே, தமிழகம் தன் தேசீய எல்லை, தேசீய அரசியல், தேசிய உரிமை வாழ்வு, தேசிய உணர்வு ஆகியவற்றை இழந்துள்ளது. எனவே, தமிழகம் தனக்கென வரலாறு வகுத்துக் கொள்ளவில்லை என்பதைவிட, அத்தகைய வரலாறு வகுப்பதற்குரிய சூழ்நிலையை இழந்து அது தடுமாறுகிறது என்பதே உண்மையாகும். தமிழினம் வரலாற்று உணர்வு அற்றது என்பதைவிட, அவ்வரலாற்று உணர்வு அயலின, அயல் மொழி ஆதிக்கங்களால் அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டு வருகிறது என்று கூறுவதே பொருத்தமானது.

பிரிட்டிஷ் ஆட்சி பொதுவாக தமிழகம் நீங்கிய கீழ்த் திசைக்கு முற்றிலும் அயலாட்சியாய் நிலவிற்று என்று கூற முடியாது. உண்மையில் சிந்து கங்கை வெளி போன்ற மாநிலங்களுக்கு வரலாற்று வெளிச்சம் அளித்தது அவ் வாட்சியே. அவ்வாட்சியிலேயே அம்மாநிலம் புத்தரையும், அசோகனையும் கணிஷ்கனையும் கண்டது. அதற்கு முன் அது வரலாறு என்ற பெயரால் அறிந்ததெல்லாம் பஞ்சதந்திரக் கதைகளும் விக்கிரமாதித்தன் வேதாள பதுமைக் கதைகளும், புராண பஞ்சாங்கங்களுமே, அத்துடன் அயலாட்சி என்று கூறப்படும் அவ்வாட்சியிலேயே மாநிலத்தின் பழம் பெருமைக்குரிய சிந்துவெளி, நாலந்தா, பாடலிபுர நகரம், கபிலவாஸ்து, வடமதுரை ஆகிய இடங்கள் பழமை ஆராய்ச்சி ஒளி கண்டன. தவிர, அம்மரபுக்குரிய சமசுகிருத மொழி, இலக்கியம் ஆகியவை சார்ந்த ஆராய்ச்சிகளிலும் வெள்ளையர் தத்தம் தாய் மொழிகளில் காட்டிய ஆர்வத்திலும் மேம்பட்ட ஆர்வம் காட்டி அவற்றைப் பேணி வளர்த்தனர்.

இவற்றுக்கு நேர்மாறாக, அதே ஆட்சியாளரும், அவர்களுக்குப் பின்வந்த மாநில ஆட்சியினரும்கூடத் தமிழ், தமிழகம், தமிழின மொழிகள் ஆகியவற்றின் வரலாற்றிலும், ஆராய்ச்சியிலும், பாராமுகம் உடையவர்களாகவே இருந்து வந்துள்ளனர். தமிழகத்தில் பண்டைப் பெருமைக்குரிய கொற்கை, பழமதுரை, வஞ்சிமூதூர், மண் மூடிய உறந்தை, கடலால் ஓரளவு அழிவுற்ற புகார், பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், புதுவை, மல்லை, காஞ்சி ஆகிய இடங்களின் அகழ்வாராய்ச்சி தமிழக வரலாற்றுக்கும், மாநில வரலாற்றுக்கும் கூட பெரும் பயன் அளித்திருக்கும். ஆனால் அறிஞர் துப்ரேய்ல் போன்ற தனி வெள்ளையர் ஒருவர் இருவர் முயற்சியின்றி, ஆராய்ச்சித் துறையோ, ஆட்சியாளரோ அவற்றைக் கருத்தால் கூடத் தீண்டவில்லை.

தமிழகம் மாநிலத்தின் ஒரு நேரிய உறுப்பாகக் கூட கருதப்படவில்லை. மாநிலத்தின் ஒருபுற உறுப்பாக அதன் பண்பாட்டுக்கு ஊறு செய்யும் ஒரு நோயுறுப்பாகவே அது ஓரக் கண்ணால் பார்வையிடப்படுகிறது. இந்நிலையில் அதன் வரலாறு வகுக்கப்படாதிருப்பது மட்டுமல்ல குறை, வகுக்கப்படுவதற்குத் தடங்கலான பண்புகளே வளர்க்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஆங்கில ஆட்சித் தொடக்கம் வரை இருந்ததாகத் தெரியவரும் தமிழிலக்கியக் கடலின் பெரும்பகுதி, அயல் பண்பாட்சியினரின் ஆதிக்கத்தால் அணிமைக் காலத்திலேயே அழிந்துள்ளதாக, இன்னும் அழிந்து வருவதாக அறிகிறோம்.

தமிழர் வரலாற்று உணர்வு

தமிழினத்தார் உண்மையில் வேறெந்த இனத்துக்கும் அணிமை வரை ஏற்படாத வரலாற்று உணர்வு மட்டுமின்றி, நில இயலுணர்வும், அறிவியலுணர்வும் உடையவராயிருந்தனர். இதனைத் திரட்டுருவிலும், துண்டுத் துணுக்கு வடிவிலும் நமக்கு இன்று கிடைத்துள்ள இலக்கியமும் கல்வெட்டுக்களுமே காட்டப் போதியன. உண்மையில் கல்வெட்டுக்கள் ஏராளமாயுள்ள பிற்காலத்தின் வகையில் நமக்குக் கிடைக்கும் வரலாற்று ஒளியை விட, சங்க காலத்துக்கு அதன் துண்டுத் துணுக்கு இலக்கியத்தால் கிடைத்துள்ள ஒளியே பெரிது. ஏனெனில் கல்வெட்டுகள் தற்செயலாகவே நமக்கு வரலாற்றுக்கு உதவுகின்றன. அவை கிட்டத்தட்ட அத்தனையும் கோயில்களுக்கும், கோயில் குருக்கல்மாருக்கும் மன்னர் கொடுத்த மானியங்கள் பற்றியவைகளே. ஆனால் சங்க இலக்கியம் மன்னர்கள், ஆட்சிமுறை, போர்கள், மக்கள் கருத்துகள், வாழ்க்கைச் சூழல் ஆகிய எல்லாத் துறைகளிலுமே பரவியுள்ளன. அதுபோன்ற வாழ்க்கை இலக்கியத்தை, வரலாற்று நோக்குடைய, அறிவியல் நோக்கு வாய்ந்த இலக்கியத்தை நாம் உலகில் வேறு எங்கணுமே காண முடியாது.

சங்க இலக்கியத்தில் அந்நாளைய பாண்டியரைப் பாடும் புலவர்கள், அவர்கள் தொலை முன்னோனாகிய நெடியோன் புகழைச் சுட்டிக் காட்டியுள்ளனர். சேரநாட்டில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை இவை வெள்ளையர் வரும் வரை எவரும் அறியாத செய்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.ப் பாடும் புலவர் ஒருவர் அவன் முன்னோரை மட்டுமின்றி மூவேந்தருக்குமே சிறப்புத் தரும் புகழ் வாய்ந்த நெடியோனையும் சுட்டி அவன்போல வாழ்வாயாக என்று வாழ்த்துகிறார். மாமூலனார், பரணர் போன்ற பழம் புலவர்கள் தம் காலத் தமிழக வரலாற்றுச் செய்திகளை மட்டுமின்றி தொலையிலுள்ள கங்கை நாட்டுச் செய்திகளையும் நமக்குப் பதிவு செய்து சென்றுள்ளனர்.http://writemypaper4me.org

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply