நேர்மறையாக இருங்கள்!

நேர்மறையாக இருங்கள்! எழுதியவர் திஸ்ஸா ஜெயவீர

நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும்  மிகப் பெரிய சத்தம் எழுப்பும் வெற்றுப் பாத்திரங்களும் அவற்றின் இடத்தில் வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வீட்டில் தங்குவது, வீட்டிலிருந்து வேலை செய்வது, ஒருவரின் குடும்பத்தினருடன் இருப்பது மாறுவடிவில்  ஒரு கொடுப்பினையாகக்  கருதப்பட வேண்டும், ஏனெனில் அவை குடும்பங்களை ஒன்றாக இணைக்க உதவுகின்றன.

மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலைக்கு அடிமையானவர்கள் சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டால், தானாகவே, குறிப்பாக குறைந்த வருமானத்தில் உள்ளவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும். நல்ல காலமாக, ஆயுதப் படைகள் போராட்டத்தில் இணைந்துள்ளன. அரசியல்வாதிகளால் நிதியளிக்கப்பட்ட சட்டவிரோத மதுபானங்களையும் முறையான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் அகற்றலாம். தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கூடுதல் கல்வித் திட்டங்கள் நடத்தப்பட்டால், குழந்தைகள் தனியார் கல்வியில் தங்கியிருப்பதைக் குறைக்கலாம். பல்கலைக்கழகங்கள் கணினி மூலம் நேரடியாகக் கற்பித்தலை நாடுகின்றன, பெரும்பாலான மாணவர்கள் இதைப் பாராட்டுகிறார்கள், இது மீண்டும் செலவுக் குறைப்பு வழியாகும். மேலும் மேலதிக பல்கலைக்கழகங்களின் தேவையை நீக்குகிறது.

இன்றைய நிலைமை பல தசாப்தங்களாக எவ்வளவு தேவையற்ற பயணம் செய்யப்பட்டுள்ளது என்பதை எண்பிக்கிறது. பேரங்காடி சங்கிலிகள், மற்றும் சாலையோர மளிகைக் கடைகள் மற்றும் சில்லறைக் கடைகள் கூட அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளன. பொருட்களை வாங்கிக் கொள்ளப் பொது மக்களில் பெரும்பாலோர் திறன்பேசிகளை (smart phone) வைத்திருப்பதால், வீட்டு விநியோகம் ஒரு சிறந்த சேவையாகும். ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு, பொருட்களை ஆய்வு செய்வதற்காக வேலை செய்யும் தம்பதிகள் விநியோக நேரத்தில் வீட்டிலேயே இருக்க இந்த சேவை நீட்டிக்கப்பட வேண்டும், ஏனெனில் தரம் மற்றும் புத்துணர்வை உறுதிப்படுத்த பெரும்பாலான விநியோக சேவைகளை நம்ப முடியாது. இது புதிய சிறு வணிக வாய்ப்புகளை ஏராளமாக உருவாக்கும், குறிப்பாக வார இறுதி நாட்களில், இது சந்தைக்குச் சென்று வரும் பயண நேரத்தைக் குறைக்கும்.

அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுட்டுள்ளது. உடல்நலம் இலவசம் என்பதால் பலர் பிழையான காரணங்களுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள். அஞ்சல் சேவையைப் பயன்படுத்தி மருந்துகளை வழங்குவது ஒரு புதுமையான யோசனையாகும், இது பயணச் செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். உள்ளூர் ஒசு சாலா (Osu Sala ) விற்பனை நிலையங்கள் வழியாக கிராம மட்டத்தில் கூட இதைச் செய்யலாம்.
 

எங்களிடம் ஒன்பது மாகாணங்கள், 25 மாவட்டங்கள், 335 நகராட்சிகள், 14,022 கிராம நிலதாரி பிரிவுகள், 225 எம்.பி.க்கள், 2019 புள்ளிவிவரங்களின்படி 5.1 மில்லியன் வீடுகளை நிர்வகிக்க வேண்டும். மேலும் சுமார் 1.4 மில்லியன் அரசு ஊழியர்களின் நிர்வாக சேவையில் இருக்கிறார்கள். இது ஐந்து குடும்பங்களுக்கு ஒர் அரச ஊழியர் என்ற விழுக்காடாகும்.  ஒவ்வொரு கிராம நிலதாரியும் சுமார் 364 குடும்பங்களை நிர்வகிக்க வேண்டும். எளிதான வேலை  ஆனால் இது நடக்குமா? எத்தனை குடிமக்கள் தங்கள் கிராம நிலதாரியை அறிந்திருக்கிறார்கள் அல்லது சந்தித்திருக்கிறார்கள்? இந்த நாட்டில் உள்கட்டமைப்பு உள்ளது, ஆனால் நிர்வாக சேவை மற்றும் அரசியல் அமைப்பின் பொறுப்பற்ற தன்மை காரணமாக செயல்படுத்த மற்றும் நிர்வாகத்தை விரும்புகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் மூடப்பட்டால், பொதுமக்களுக்கு செலவை மிச்சப்படுத்தினால் இந்த நாட்டை இன்னும் திறமையாக நிர்வகிக்க முடியும். உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பொதுச் செலவுகளுக்கு இந்த சேமிப்பைப் பயன்படுத்தலாம்.எந்த வயதில் எப்படி வேலையை தேட ...
 சுற்றுச்சூழல் அதிகாரிகளின் திறமையின்மை மற்றும் ஊழல் காற்றின் தரம், குறிப்பாக களனி  ஆற்றின் (Kelani River) நீரின் தரம் மேம்பட்டுள்ளதால் தெளிவாகத் தெரிகிறது. COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக நிறுவப்பட்ட நிதிக்கு பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பொது அதிகாரிகள் ஒரு நாள் ஊதியத்தை அரசாங்கத்துக்கு வழங்கினர். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாராவது ஒரு நாள் ஊதியம் அல்லது அவர்களின் எரிபொருள் கொடுப்பனவை – அவர்கள் பயணம் செய்வது  தேவை  இல்லை என்பதால் –  தியாகம் செய்திருக்கிறார்களா? (நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதால் நா.உறுப்பினர்களுக்கு ஊதியக் கொடுப்பனவுகள் இப்போது  இல்லை)

நாம்  இந்தப்  பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால், நடப்பு வட்டி தள்ளுபடிக்குக்   கூடுதலாக, குறைந்தபட்சம் அடுத்த 24 மாதங்களுக்கு, SME களுக்கு மூன்று விழுக்காடாகவும், பெரிய வணிகங்கள் ஆண்டுக்கு 5 விழுக்காட்டிலும் கடன் வழங்குமாறு  அரசாங்க வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.  உலகின் மிக உயர்ந்த வட்டி விழுக்காடுகள் நம்மிடம் இருக்கலாம் ஆனால்  இலாபத்தைக் காட்ட வங்கிகள் ஒன்றுக்கொன்று  போட்டியிடுகின்றன. இந்த நாட்டின் மிகவும் இலாபகரமான நிறுவனங்கள் வங்கிகள், நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியன பொதுமக்களைச் சுரண்டுகின்றன.
 

நல்லகாலமாக எரிபொருள் விலையை குறைக்கக் கோரிய  படிக்காத அரசியல்வாதிகளின் அழுத்தத்தை அரசாங்கம் தாங்கிக்கொண்டது.  தற்போதைய விலையில் விற்கப்படும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளுக்கும் நாடு ஒரு நாளைக்கு ரூபா 10 அல்லது ரூபா150 மில்லியனை இழந்தது என்ற உண்மையை மறந்துவிட்டது. அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு இல்லையென்றால், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிக இலாபம் ஈட்டியிருக்கும்.
 

சீனாவிலிருந்து தேவையற்ற மலிவான பொருட்களால் சந்தை ‘வெள்ளத்தில்’ மூழ்கியுள்ளதால், அத்தியாவசிய இறக்குமதியை முடக்குவதற்கு நிறைய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நாம் இப்போது நமது முக்கிய உணவு, அரிசி மற்றும் பிற உணவு மற்றும் காய்கறிகளில் தன்னிறைவு பெற வேண்டும்.  இதனால் SME க்கள் மற்றும் உள்ளூர் தொழில் செழிக்கத் தொடங்கும். நல்லகாலமாக  அரசாங்கம் ஒரு சிவப்பு அரிசிப் பற்றாக்குறையைச்  சமாளித்தது, ஆனால் மக்களைத் திருப்திப்படுத்த சந்தையில் ஏராளமான பிற வகை அரிசிகள் இருந்தன, ஏனெனில் அரசியல்வாதிகள் அரிசி இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. அரிசி உண்ணும் பழக்கத்துக்கு மீண்டும் மக்கள் சென்றால்  கோதுமை மா இறக்குமதியையும் கட்டுப்படுத்தலாம். நாட்டில் 40 வகையான பழங்கள் இருப்பதால் பழங்களின் இறக்குமதியையும் அதைரியப்படுத்த வேண்டும், அவை பருவகாலத்தில் வீணாகின்றன. மேற்கு நாடுகளில் பலாப்பழம் ஒரு புரத நிரப்பியாகக் கருதப்படுகிறது.  அடைக்கப்பட்ட மீன்களிடம் இருந்து  மீன் எண்ணெய் எடுக்கப்பட்டு விடுவதால் தகரத்தில் அடைக்கப்பட்ட  மீன்களின் இறக்குமதியையும் தடை செய்ய வேண்டும். இப்போது எமது மக்கள் ஊட்டச் சத்தில்லாத சக்கையைத்தான் உண்கிறார்கள்.
 

தூரத்திற்கு மேல், கொழும்புக்கு 40 கி.மீ க்கு கீழ், உச்ச நேரங்களில் காலை 6.30 மணி முதல் காலை 8.30 மணி வரையிலும் கொழும்பிலிருந்து மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் . அனைத்து தொடர்வண்டி நிலையங்களிலிருந்தும் ஒருங்கிணைந்த தொடர்வண்டி அல்லது பேருந்துச் சேவையை நடத்தலாம்.  தற்போது எமது  திட்டமிடுபவர்களால் இப்படிச் செய்ய இயலாது இருக்கிறது. பயணிகளின் தேவையை கணக்கில் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக ஏராளமான நீண்ட தூர தொடர்வண்டிகளின் பாவனை அதிகரிக்கப்படுகின்றன.

அமெரிக்க டாலர் இப்போது ரூபா 200 ஆக இருப்பதால் நாம் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும். மூலப்பொருட்களைத் தவிர மற்ற இறக்குமதிகள் நிறுத்தப்பட வேண்டும். சுற்றுலாவைப் புதுப்பிக்க எதிர்பாராத நேரத் தீர்வுத் திட்டங்களை வைத்திருக்க வேண்டும்.  அதாவது நீண்ட காலம் தங்குவதற்கு சிறப்பு ஹோட்டல் கட்டணங்களை வழங்குதல், கட்டணம் இல்லாது வானூர்திகள் தரையிறங்க வசதிகள் செய்தல்  மற்றும் charter operators க்கு போட்டி விலையில்  எரிபொருள் நிரப்புதல் போன்ற சலுகைகளை வழங்க வேண்டும்.

அயராது உழைத்த சுகாதார சேவைகள், காவல்துறை மற்றும் இராணுவம்  ஆகியவை பாராட்டப்பட வேண்டும். COVID-19 காரணமாக எல்லாவற்றையுமே நாம் இழந்துவிடவில்லை. நேர்மறையாக இருங்கள்.  (தமிழாக்கம் நக்கீரன்) 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply