அறிவியல், கிரகணம், சூரிய கிரகணம்  

18 DEC

அறிவியல், கிரகணம், சூரிய கிரகணம்

 சோ.மோகனா

eclipse 2019

சூரிய குடும்பம் 

நமது பூமி, சூரிய குடும்பம் என்னும் வான்வெளி குடும்பத்தின் உறுப்பினர். நாம் வான்வெளியில் அந்தரத்தில் மிதந்து  கொண்டு இருக்கிறோம் என்ற உண்மையே நிறைய பேருக்குத் தெரியாது. ஆம். சூரியன் அந்தரத்தில்தான் மிதந்து கொண்டு, தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, அது பிறந்த பால்வழி மண்டலத்தையும் சுற்றி வருகிறது. அது போலவே அதன் ஈர்ப்பு விசையால் அதனைச் சுற்றி 8 கோள்களும், அவற்றின் துணைக்கோள்களும், அவற்றுக்கு இடையே அஸ்டிராய்டு  வளையமும், குயிப்பியர் வளையமும், ஏராளமான அஸ்டிராய்டுகளும் , அதற்கு அப்பால், ஊர்ட் மேகங்களும், அங்கிருந்து வரும் வால் நட்சத்திரங்களும் என ஒ!  இவ்வளவு சங்கதிகளும் அடங்கியதுதான் நமது சூரிய மண்டலம்.

நாம் வான்வெளியில் அந்தரத்தில் கரணம் 

வான் வெளியில் சூரிய மண்டலம் மட்டும் தனியாக இல்லை. இரவு வானில் தென்படும் ஒவ்வொரு விண்மீன்களும், ஒவ்வொரு சூரிய குடும்பம்தான். அதிலும் நம் பூமி போல கோள்களும், அதனைச் சுற்றி துணைக்கோள்களும் காணப்படுகின்றன.ஒவ்வொரு கோளும் யாரும் பிடித்துக் கொள்ளாமல் தனியாகவே ஈர்ப்பு விசையால் அந்தரத்தில் சுற்றுகிறது. அது போலவே துணைக்கோள்களும் வான் வெளியில் அந்தரத்திலேயே தனது கோளைச் சுற்றி வருகின்றன. எல்லோரும் பள்ளிப்பாடத்தில் சூரியனை பூமி சுற்றுகிறது என்றும், பூமியை சந்திரன் சுற்றிவருகிறது என்றும் படித்திருப்போம். ஆனால் எந்த கோளும் எந்த துணைக்கோளும், சூரியனும், அந்தரத்தில் யாருடைய பிடிமானமும் இன்றி சுற்றுகின்றன என எந்த புத்தகத்திலும் எழுதப்பட வில்லை.

வானவியலும்  சோதிடமும்

வரலாற்று ரீதியாக பார்த்தால், அமெச்சூர் வானவியலாளர்கள்தான், வானை நோக்கிக் கொண்டு,ஏராளமான கண்டுபிடிப்புகளை நமக்கு தந்துள்ளனர்.

நவீன வானவியல் என்பது சோதிடத்துடன் சமரசம் செய்து கொள்ளவும் இல்லை. அதனுடன் சேர்ந்து குழப்பவும் இல்லை.

இவர்கள், வானில் உலவும் வான் பொருட்களைப் பார்த்து குறித்து வைத்துள்ளனர்.

சோதிடம், வானவியல் இரண்டுக்கும் ஒரே தாய்தான் என நினைக்கின்றனர்.இரண்டும் இரு வேறு தடங்களில் செல்பவை.குரு பெயர்ச்சியும் அறிவியலும்

படம் 2, வானில் சூரியப் பாதையில் காணப்படும் 12 ராசிக்கூட்டம் எனப்படும் விண்மீன் தொகுதிகள்

எது கிரகணம்….?

கிரகணம் என்றால் என்ன? இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது, சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது அந்த வான் பொருள், நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப் படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.

கிரகணம் என்றால் என்ன? இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும் போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும் போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும்

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலா வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது போலவே சூரியனுக்கும், இடையில் பூமி  வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.சூரிய கிரகணம் முழு அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா /பௌர்ணமி நாளிலும் உண்டாகிறது.

கிரகணம் 3 வகைகள்

 • முழு சூரிய கிரகணம் : (Total Solar Eclipse)சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனப்படும்
 • சூரியன் கிரகணத்தின் போது சூரியன் வளையமாகத் தெரிந்தால், அது வளைய/கங்கண கிரகணம்( Annular Eclipse) என்று அழைக்கப்படும். இது சந்திரன் பூமிக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது ஏற்படும்
 • 3வது வகை :பகுதி சூரிய கிரகணம்( Solar Eclipse) எப்போதும் சூரியன் முழுமையாக மறைக்கப்படவே மாட்டாது. சூரிய ஒளி குறையுமே தவிர வெளிச்சம் இருக்கும். இது எல்லா இடங்களிலும் ஏற்படும்
 • முழு சூரிய கிரகணம் : சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனப்படும். முழு சூரிய கிரகணம் 1-2 ஆண்டு இடைவெளியில் , சுமாராக 18 மாதங்களுக்கு ஒரு முறை நிகழும்.
 • முழு சூரிய கிரகண நேரம் அதிக பட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே.
 • ஒரே இடத்தில் 360-410 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும்.
  சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படுவதால், இருட்டியது போன்ற நிகழ்வு ஏற்படும்

சூரிய கிரகணம். வகைகள்

 • துருவங்களில் எப்போதும் முழு சூரிய கிரகணம் ஏற்படவே ஏற்படாது
 • சூரியன் கிரகணத்தின் போது ஒரு வளையமாகத் தெரிந்தால், அது வளைய/கங்கண கிரகணம் என்று அழைக்கப்படும். இதில் வளைய /கங்கணம் காணப்படும் .அதிக பட்சம் நேரம் என்பது 5-12 நிமிடங்கள் மூன்றாவது வகை பகுதி சூரிய கிரகணம். இதில் எப்போதும் சூரியன் முழுமையாக மறைக்கப்படவே மாட்டாது. சூரிய ஒளி குறையுமே தவிர வெளிச்சம் இருக்கும்.
 • 3,மூன்றாவது வகை பகுதி சூரிய கிரகணம். இதில் எப்போதும் சூரியன் முழுமையாக மறைக்கப்படவே மாட்டாது. சூரிய ஒளி குறையுமே தவிர வெளிச்சம் இருக்கும். இது எல்லா இடங்களிலும் ஏற்படும்
 1. ஹைபிரிட்கிரகணம் (Hybrid Eclipse), இதில் இரண்டு வகை கிரகணக் கலப்பு ஏற்படுவதால் இதனை ஹைபிரிட்கிரகணம் என்கிறோம். இதில் முழு சூரிய கிரகணம் , வளைய சூரிய கிரகணமாக மாறும். , அது போல முழு சூரிய கிரகணம் பகுதியாகவும் மாற வாய்ப்பு உண்டு. இது சந்திரனின் நகர்வைப் பொறுத்தே ஏற்படுகிறது

கிரகணத்தின் வரலாற்று பதிவுகள்

சூரிய கிரகணத்தின் வரலாறு என்ன?

அயர்லாந்திலுள்ள  வானவியலாளர்கள்  சூரியகிரகணத்தை பதிவிட்டுள்ளனர்.  பதிவிடப்பட்ட மிகவும் பழையது இதுதான். சுமார் 5355 ஆண்டுகளுக்கு முந்தையது. கற்கால மக்கள் பதிவிட்டது.

தாலெஸின் சூரிய கிரகண கணிப்பும்..போர் நிறுத்தமும்  

தாலெஸ் யார்?

ஹெரோடோடஸ் என்பவர் கிரேக்கத்தின், மிகப்பெரிய தத்துவவியலாளர் மற்றும் வரலாறியலாளர். அவர் பெர்ஷிய சாம்ராஜ்ஜியத்தில் பிறந்தவர். (கி. மு.484-425). அவர் பல வரலாற்றுப் பதிவுகளை செய்துள்ளார். அதில் ஒன்று சூரிய கிரகணம் பற்றியது.   தாலெஸ்தான் முதன் முதல் சூரிய கிரகணம் வருவது பற்றி  மிகச்  கணித்தவர். அதன்படியே சூரிய கிரகணம்   May 28, 585 BCE ல் நிகழ்ந்தது.  தாலெஸ் . பருவகாலங்கள்,மற்றும் Solstice  பற்றி சொன்னவரும் இவரே. ursa ,minor விண்மீன் தொகுதியைக் கண்டறிந்தவரும் இவரே.மின்சாரம் பற்றி பேசியுள்ளார்.

கணிப்பு

 இன்றைய துருக்கியின் அயோனியன் மேற்கு கடற்கரையில்  மெலிடஸ் என்ற ஊர் உள்ளது.   இங்கே தாலெஸ் எனற தத்துவவாதி மற்றும் இயற்கை விஞ்ஞானி   வாழ்ந்தார்.  இவர் வாழ்ந்த காலம், கி.மு 624 -546 வரை. இவர் “தத்துவவாதி சாக்ரடீசுக்கு“ முன் கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவவாதி, கணித மேதை மற்றும் வானவியலாளர். முதன் முதல் எழுத்தின் மூலம் வானவியல் தகவல்களைப் பதிவு செய்தவர் தாலெஸ்தான். இவரே கிரேக்க நாட்டின் மிகப் பெரிய 7 அறிவுஜீவிகளில் ஒருவரும் கூட. மேற்கு உலகின் முதல் தத்துவவாதியும் இவரே.

தாலெசின் திறமைகள்

 தாலெஸ் மிகக் கவனமாக தன்னைச் சுற்றியுள்ளவற்றைப் பதிவு செய்து வரலாற்றின் போக்கை மாற்றியவர். எனவே இவரை இயற்கை விஞ்ஞானத்தின் பிதாமகன் என்றும் அழைக்கின்றனர்;வணிகரும் கூட; இவரே  பித்தாகரஸ் மற்றும் அனாக்சிமாண்டரின் குருவும் கூட

தாலெஸ் நிறைய வானியல் பொருட்களை, நிகழ்வுகளைக் கண்டறிந்தாலும், எதிர்காலத்தில் நிகழவுள்ள சூரிய கிரகணத்தை  முன்கூட்டியே கண்டறிந்து கணித்ததிற்காகவே போற்றப்படுகிறார்.

கிரேக்க வரலாற்றியலாளர் ஹெரடோடஸ் மற்றும் ரோமானிய தத்துவவாதிகள் சிசரோ மற்றும் பிளினி போன்றோர் , வரலாற்றில் முதன் முதல் சூரிய கிரகணம் பற்றி தாலெஸ்  கணித்து , அதன் படியே சூரிய கிரகணம் நிகழ்ந்ததுவும், முதல் உண்மை என்கின்றனர்.

கணிக்கப்பட்ட கிரகணம்

 கிரேக்க  வரலாற்றியலாளர் ஹெரடோதாஸின் (Herodotus) தாலெஸ் கண்டறிந்த சூரிய கிரகணம் பற்றிய பதிவுவாவது: அப்போது கடந்த 6 ஆண்டுகளாக லைடியன் நாட்டு அரசர்அல்யாட்டேசுக்கும் (Alyattes) மெடஸ் நாட்டு அரசர் சையாசாரேசுக்கும் (Cyaxares) இடையே போர் நடந்து கொண்டே இருந்தது. முடிவில்லா போர் என்று வர்ணிக்கிறார் ஹெரடோடஸ். யாரும் விடுவதாக இல்லை. அந்த கால கட்டத்தில், ஒரு நாள் பகலில் திடீரென இருட்டாகிவிட்டது. இரு நாட்டினரும் பயந்துபோய் மிரண்டனர். உடனே இது ஏதோ கெட்ட சகுனம் என்று எண்ணி இரு தரப்பினரும் போர் ஆயுதங்களை    கீழே  போட்டுவிட்டு ஓடினர்; இருதரப்பினரும்  போரை நிறுத்திவிட்டனர். உடனே இருவரும் சமாதான உடன்படிக்கையையும் செய்துவிட்டனர். கொண்டனர். இது ஹாலிஸ் நதிக்கரையில் நடந்ததால், ஹாலிஸ் நதி கிரகணம் எனப்பட்டது .

  லைடியன்கள் மற்றும் மெடசியர்களிடையே போர் நிகழந்தபோது அன்று மே மாதம் 28ம நாள், கி.மு. 585 .அன்று  பகல் இரவாகும் என “மிலிடசின் தாலெஸ்” என்பவர் முன்பே கணித்து சொல்லியுள்ளதாக ஹெரடோடஸ் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே கி.மு. 585, மே 28 அன்று முழு சூரிய கிரகணம் நிகழ்ந்து அப்போது இருட்டானது. ஆனால் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தது என்று சொல்லவில்லை.

கணித வழி சூரிய கிரகண கணிப்பு

  ஆனால் எல்லோரும் ஆச்சரியப்படும் விஷயம், என்னவென்றால் அப்போது தாலெசிடம்  முழு சூரிய கிரகணம் பற்றிக் கணிப்பதற்கு எவ்வித அறிவியல் சாதனங்களும் இல்லை. அப்போது எவ்வித அறிவியல் தகவல்கள் மற்றும் அறிவு என்பதும் கிடையாது. ஆனால் எப்படியோ சூரிய கிரகணம் வருவதை கணிதத்தின் மூலமே கணித்தார். எப்படி என்று தெரியாது. அவர் ஏற்கனவே நிகழ்ந்த சூரிய கிரகணங்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருந்ததாலும், பாபிலோனியர்களின் களிமண் பலகையிலுள்ள வானவியல் தகவல்களைப் பார்த்தும் முழு சூரிய கிரகணத்தை கணித்திருக்கலாம் என்பதே தெரியவந்துள்ளது. மேலும் இதனைப்பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்பே யோசித்திருப்பார் என்றே நம்புகின்றனர். இவரது   காலத்தில் வாழ்ந்த ஸினோபீன்ஸ் (Xenophanes கி.மு  570 – . 475  ) என்பவரும் கூட, தாலெஸின் சூரிய  கிரகண கணிப்பு பற்றி வியந்தே சொல்கிறார்.

 சாரோஸ் சுழற்சியை அறிந்தும் கூட, வரக்கூடிய  சூரிய

கிரகணத்தை தாலெஸ் கணித்திருக்க கூடும் என்றும் கருதுகின்றனர்.

சாரோஸ் சுழற்சி

 சாரோஸ் சுழற்சி என்பது, இரு அமாவாசைகளுக்கு இடையில் சந்திரன் பூமியைச் சுற்றும் நாட்களின் சுழற்சியை synotic month (சந்திர மாதம்) என்கின்றனர். சாரோஸ் என்ற சொல் பாபிலோனியர்களிடமிருந்து வந்ததாகும்.    ஒரு சாரோஸ் என்பது, 223 சந்திர  மாதங்கள் (சுமாராக 6585.3211 நாட்கள் / 18  ஆண்டுகள், 11 நாட்கள் 8 மற்றும் மணி நேரம்தான் ) . இவை சந்திர மற்றும் சூரிய கிரகணம் கணிப்பதற்கு பயன்படுகின்றது. ஒரு சாரோஸுக்கு ,,மீண்டும் சந்திரன் ,சூரியன் மற்றும் பூமி அதே நிலவியல் பாதைக்கு /இடத்துக்கு வர 18  ஆண்டுகள், 11 நாட்கள் 8 மற்றும் மணி ஆகிறது. முன்பு ஏற்பட்ட அதே வகை கிரகணம் உருவாகும்.

சாரோஸ் சுழற்சியைப்பற்றி, பழங்கால அறிஞர்கள் அறிந்திருந்தனர். எனவே ஒவ்வொரு சாரோஸ் காலத்துக்குப் பின் (18 ஆண்டுகள், 11 நாட்கள் & 8 மணி நேரத்துக்குப் பின்னர் )அதே கிரகணம்  அதே இடத்தில் நடைபெறும். 3 சாரோஸ்களுக்குப்ஒரு முறை  (54 ஆண்டுகள், 34 நாட்களுக்குப் பின்னர் )அதே நிலவியல் பரப்பில் அதே நாள் அதே நேரத்தில்  இந்த கிரகணம் வரும். கீழே உள்ள படம் அதனைத்தான் காண்பிக்கிறது. இந்த முறையில்தான் தாலெஸ் மிலேட்டஸ் நகரின் சூரிய கிரகணத்தை கணித்திருப்பார் என்று கருதப்படுகிறது.

  முதல் பதிவான கிரகணப் பாதை

மே 28, கி.மு 585 ன் சூரிய கிரகணப் பாதை, மத்திய அமெரிக்காவின் நிகரகுவா,பின்னர் அட்லாண்ட்டிக் பெருங்கடல் தாண்டி,, பிரான்ஸ் வழியே இத்தாலி மற்றும் துருக்கி வந்து முடிந்தது. அப்போது அங்கே மாலை நேரம்.இங்கேதான் நம் நாயகர் தாலெஸ் வருகிறார். அவர் இருப்பிடமான மிலிடஸில்  முழு சூரிய கிரகணம் நிகழவில்லை. அவர் முழு சூரியகிரகணத்துக்கு கொஞசம் தள்ளி இருந்து அந்த மறக்க இயலா வானியல் நிகழ்வை கணித்து, கண்டு பதிவு செய்துள்ளார். இந்த ஹாலிஸ் நதியின் போர் என்பது மிகப்பழமையான வரலாற்று நிகழ்வு, வானியல் நிகழ்வுடன் துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது. எதுவாயினும், தாலெஸ் குறிப்பிட்ட படியே அன்று முழு சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது என்பதுதான் நிஜமான நிஜம். ஹாலிஸ்  நதியில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. போரை நிறுத்தியது. அதனால் அலைட்டெஸ் மகளுக்கும்,சையஸாரேஸ் மகனுக்கும் ராஜாதிருமணம் நடந்ததும் உண்மையே.

 ஆதிகால கிழக்கு உலகி்ன்,அசிரியர்கள் புத்தகம் கி.மு.763 ஜூன் 15 ஒரு முழு சூரியகிரகணம் பதிவு.

Book of Joshua ,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கி.மு 1207, அக்டோபர் 30ம் நாள் வளைய கிரணம்  பதிவு செய்யப்பட்டுள்ளது..

சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன்னர் சீனப்பேர்ரசர் ஜோங்க் காங்க் (Zhong Kang),இரண்டு வானவிியல்
சோசியர்களை எப்ப  சூரியகிரகணம் வரும் என கணிக்க ஏற்பாடு. அவர்கள் இருவரும் மதுவுடன்  தூங்கிவிட.எதனையும் சொல்லவில்லை

சொல்ல மறந்துவிட்டதால், இருவரையும் சிரச்சேதம் செய்துவிட்டார் பேரரசர்.

சூரிய கிரகணம் வருவது அரசர்களுக்கு கெட்ட சகுனம்/ கெடுதல்/உயிரிழப்பு நிகழும் எனநம்புதல்,. அதனால் தற்காலிகமாக ஒருவரை நியமிப்பார்கள்..
இன்றைக்கு அவ்வளவு மோசமாக இல்லை எனினும்..இன்னும்கூட கிரகணம் பற்றிய தவறான நம்பிக்கைகள் நிலவிக்கொண்டே இருக்கின்றன

கிரகணம் என்பதற்கு மறைப்பு என்று பொருள். eclipse என்பது ஒரு கிரேக்க சொல். இதன் ஆங்கில பொருள் : blocking or hiding . அதேபோல graha என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கும் மறைப்பு என்பதே பொருள்.

சூரிய கிரகணம் & சந்திர கிரகணம்lunar_eclipse_2

வானவெளியில் ஒரு பொருள் இன்னொரு பொருளை மறைப்பதை நாம் கிரகணம் என்கிறோம். எந்த வான்பொருள் மறைக்கப்படுகிறதோ, அதன் கிரகணம் என்கிறோம். சூரியன் மறைக்கப்பட்டால் சூரிய கிரகணம். சந்திரன் மறைக்கப்பட்டால், அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும்,சந்திர கிரகணம் பௌர்ணமி /முழு நிலா நாளிலும் நிகழும்.ஆனால் எல்லா அம்மாவாசை நாளிலும் சூரிய கிரகணம் வராது. அது போலவே எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் தோன்றாது. காரணம் அந்த காலங்களில் முழுமையாக மறைப்பு ஏற்படும் படி அந்த வான்பொருட்களின் நகர்வுகள் இருப்பதில்லை.

எப்போது கிரகணம் ?

சூரிய மற்றும் சந்திர கிரகணம் ஏற்பட வேண்டும் என்றால்,சூரியன், சந்திரன் மற்றும் பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் 90டிகிரியில் இருக்க வேண்டும். இந்நிலை எல்லா காலத்திலும் ஏற்படாது. காரணம் இவை மூன்றும் தன்னிலையில் சரிவாக உள்ளன.அதாவது லேசாக சாய்ந்து காணப்படுகிறது. சூரியன் 7 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. சந்திரன் 5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. பூமி 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில், ஒன்றை ஒன்றை நேரிடையாக மறைக்கும் போதுதான், அவை அனைத்தும் 90 டிகிரியில் நின்று ஒன்றை ஒன்று நேரிடையாக மறைக்கும் போதுதான் கிரகணம் ஏற்படுகிறது.

ஜொஹானஸ் கெப்ளர் &கோள்களின் நீள்வட்ட பாதை

சூரிய மண்டலத்தின் அனைத்து கோள்களும் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உணமையைக் கண்டறிந்த சொன்னவர் ஜொஹான்ஸ் கெப்ளர் என்ற வானவியல் அறிஞர்.இவரை பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் என்றே அழைக்கின்றனர்.

சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 3,84,000 கி.மீ. ஆனால் சந்திரன் நீள்வட்டமாக பூமியைச் சுற்றி வரும்போது , சில சமயம் மிக அருகில்*(perigee-அண்மை நிலை ) வரும் அப்போது இதன் தூரம். 3,63, 104 கி.மீ. நீள்வட்ட சுற்றில் பூமிக்கு வெகு தூரத்தில் (Apogee-சேய்மை நிலை ) இருக்கும் . அப்போது தூரம் 4,05,696 கி. மீ.

சூரிய கிரகணம் என்பது அமாவாசை நாளில், சந்திரனின் நிழல் சூரியனின் மீது விழுவது/படிவது ஆகும். அப்போது சூரியன் , சந்திரன் மற்றும் பூமி வரிசையாய் இருக்கும். சந்திரன் பூமிக்கு அருகில்/அண்மை நிலையில் இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால், சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைக்கும். முழு சூரிய கிரகணம் ஏற்படும்.

வளைய/கங்கண கிரகணம் எப்போது ஏற்படும்?

 சந்திரன் பூமியிலிருந்து தூரத்தில் /சேய்மை நிலையில் இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால், சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைக்காது. சூரிய பரப்பின் உட்பக்கத்திலேயே சந்திரனின் நிழல் விழும். அப்போது, சூரியனின் விளிம்பு மட்டும் வெளியே தக தகவென்று தெரியும். இதனைத்தான் வளைய/கங்கண கிரகணம் என்று சொல்லுகின்றனர். சூரியனின் இந்த வளையமாக காணப்படும் பகுதியை சூரிய பிழம்பு வளையம்./தீ வளையம் என்றும் ஆங்கிலத்தில் Ring of Fire என்றும் அழைக்கின்றனர்.

சந்திரனின் நிழல் சூரியன் மீது படியும், நகரும் /விழும் தன்மையைக்கொண்டு சூரிய கிரகணத்தை 4 வகைகளாகப் பிரிக்கின்றனர்.

1.முழு சூரிய கிரகணம் : சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனப்படும். முழு சூரிய கிரகணம் 1-2 ஆண்டு இடைவெளியில் , சுமாராக 18 மாதங்களுக்கு ஒரு முறை நிகழும்.

முழு சூரிய கிரகண நேரம் அதிக பட்சமாக 7.5 நிமிடங்கள் மட்டுமே.காரணம் சந்திரன் 17௦௦ கி.மீ வேகத்தில் பயணித்து சூரியனை கடக்கிறது.

ஒரே இடத்தில் 360-410 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும்.
சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படுவதால், இருட்டியது போன்ற நிகழ்வு ஏற்படும்.

வெப்பம் குறையும், விலங்குகளுக்கு குழப்பமான உணர்வு ஏற்படும். முழு சூரிய கிரகண காலத்தில் காக்கா கத்தும், குருவிகள் கத்தும். சந்திரனின் நிழல் முழுவதும் சூரியனின் மேல் படிந்துவிடும், சூரிய ஒளி வராது. எனவே ஒளியும் வெப்பமும் குறைந்து, இருட்டி விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

துருவங்களில் எப்போதும் முழு சூரிய கிரகணம் ஏற்படவே ஏற்படாது.

  சூரிய கிரகணம்… சில வியத்தகு உண்மைகள்

  முழு சூரிய கிரகணம் நிகழும் அதிகப்படியான நேரம்  என்பது7.5 நிமிடங்கள் மட்டுமே.

  சந்திரனின் நிழல்/மறைப்பு என்பது சூரியனின் மேல் 90%

  விழுந்தால் மட்டுமே அது முழு சூரிய கிரகணம்

  எனப்படும்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம்..சூரிய கிரகணத்தின் போது,

  கிரகண நிழல்.. நிலநடுக்கோட்டு பகுதியில் மணிக்கு ஆச்சரியமான

  1770 கி.மீ வேகத்திலும், துருவப்பகுதியில் 1872.79 கி்மீ வேகத்தில;நகரும்

  2019 ல் மொத்தம்  5 கிரகணங்கள் வந்துள்ளன, வரப்போகும் வளைய சூரிய கிரகணத்தையும் சேர்த்து. 2 சந்திர  கிரகணங்கள் மற்றும் நவம்பர் ு11ல் நிகழ்ந்த புதன் இடைமறிப்புகிரகணம் எப்பதும் தனியாக வராது. சூரிய கிரகணத்துக்கு 15 நாளைக்கு முன் சந்திர  கிரகணம். சூரிய கிரகணம் தனியாக வராது.

  சூரிய கிரகணத்துக்கு15 நாட்களுக்கு  முன் சந்திர கிரகணம் வரும்.

  சந்திர கிரகணத்தின் அதிக பட்ச நேரம் 3 மணி 40 நிமிடங்கள் நடைபெறும்

  சந்திர கிரகணம் வருடத்தில் 3 முறை வரலாம்.  ஆனால் சூரிய கிரகணம் குறைந்தது 2 -5 முறை வரலாம்.

 • சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது. ஆனாலும் கூட சந்திரனின் நிழல் சூரியனை சமயத்தில் முழுமையாகக் கூட மறைக்கிறதே .அது எப்படி ?மறைக்கும் பொருள் நமக்கு அருகாமையிலும்,மறைக்கப்படும் பொருள் தூரத்தில் இருந்தாலும்,அவற்றின் அளவை கொண்டு , அவை மறைக்கப்படும். சூரியன் சந்திரனைவிட 400 மடங்கு பெரியது. அது போலவே சந்திரன் பூமிக்கு சூரியனைவிட 400   மடங்கு  அருகில் உள்ளது./அல்லது பூமி *சந்திரனுக்கு இடையிலுள்ள தூரத்தைப் போல 400 மடங்கு அதிகம்.  எனவே  பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன், சூரியன் இரண்டும் ஒரே அளவில் தெரிகிறது. எனவே சந்திரனின் நிழல் சூரியனை மறைத்து கிரகணம் உண்டாகிறது.
 • கிரகணம் கிரகணம் வளைய கிரகணம் !
 • இன்னும்8 நாட்களில் வானின் அற்புதமான, அரிய வான்நிகழ்வை சந்திக்க இருக்கிறோம்.. அந்த நாள் அடுத்த டிசம்பர் ,26 ல் வளைய சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது…
 • வேலை இருக்கிறது,ஆபீஸ் போகணும் சமைக்கணும் சொல்லிட்டு பார்க்காம இருந்திடாதீங்க..சூரியன் மிக அழகாக வளையமாக தெரியும்.நடுவில் நிலவின் நிழல் தெரியும்.
 • வளைய கிரகணம் இந்தியாவில் முதலில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம், செருவத்தூரின் கடக்கோட்டு என்ற ஊரில் தான் அடி எடுத்து வைக்கிறது.
 • இங்கு சூரியகிரகணம் காலை 04. மணிக்குத்துவங்குகிறது.
 • பின்னர் நிலவின் சூரியனின் மையத்துக்குப் போய்..நிலவின் நிழல் சூரிய மையத்துக்கு போய்..சூரியனை ஒரு வளையமாக தெரிய வைக்கிறது.
 • காலை24 க்கு வளயகிரகணம்.
 • காலை: 24 மணி
 • வளைய கிரகணம் உச்சம்: 26
 • வளைய கிரகணம் :காலை27
 • சூரிய கிரகணம் முடிதல்: காலை 27 am
 • இந்த கிரகணத்தை ப்பார்க்க அந்த மாவட்ட ஆட்சியர் திருமிகு சுஜித் பெரிய ஏற்பாடு செய்துள்ளார்.

 2019 டிசம்பர் 26ல் நிகழ உள்ள வளைய சூரிய கிரகணம்

 • இது அரிதாக நடக்க உள்ள கிரகணம் . இது இந்தியாவில், தென் தமிழகத்தில் தேனி , திண்டுக்கல்,கரூர் திருச்சி,திருப்பூர்,  கோவை,ஊட்டி ஆகிய மாவட்டங்களில்  முழுமையாக வளைய சூரிய கிரகணத்தின் Ring of fire தெரியும், அதாவது சந்திரன் நிழல் சூரியனை மறைக்க முடியாமல், அதன் நிழல் சூரிய பரப்புக்குள் விழும்.சூரியன் ஒரு வளையமாக /வட்டமாக தெரியும், இது தெரியும் நேரம் இடத்துக்கு இடம், ஓரிரு நிமிடங்கள் வேறுபடும்.
 • கிரகணம் துவங்கிய இடம் :சவூதி; கிரகணம் முடியும் அமெரிக்க Gaum  வரை வளைய நேரம் கொஞசம்  வேறுபடுகிறது. வளைய சூரிய கிரகணத்தின் முழுமையான நேரம் 6 மணிக்கு மேலாகும். ஆனால் அதுவரை சூரியன் ஒரே இடத்தில் நிற்காது.  தொடர்ந்து சூரியன் நகர்ந்து கொண்டே  இருப்பதால்,வளையமாகத் தெரியும் சூரியனின் நேரமும் வேறுப டும். வானில் சூரியன் தீ வளையமாகத் தெரிந்ததிலிருந்து 2 நிமிடத்திற்கும் குறைவாக இருக்கும், போகப்போக இந்த நேரம் அதிர்க்கரித்து வளைய கிரகணம் இருக்கும் நேரம் 12 நிமிடம் வரை கூட உண்டு.
 • இதில் சூரியன் முழுமையாக மறைக்கப்படும்.
 • கிரகணம் தெரியும் இடங்களில் சுமார் 3 மணிநேரம் சூரிய கிரகணம் தெரியும். வளைய கிரகணம், சூரியன்
 • வளையமாகத் தெரிவது 2-3 நிமிடம் மட்டுமே.
 • முழு சூரிய கிரகணம் என்பதை எப்போதும் பூமியிலிருந்து பார்க்க முடியாது. ஆதி காலத்தில், சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருந்தது. அப்போதெல்லாம், சூரிய கிரகணம் என்றால், முழு சூரிய கிரகணம்தான். சந்திரனின் நிழல், சூரியனை முழுமையாக மறைத்துவிடும். காலப்போக்கில், சந்திரன் சுற்றும் வேகமும், சுற்று வளையமும், பூமியன் சுற்றும் வேகம், மற்றும் ஈர்ப்பு சக்தியும் மாறுபடுகிறது. சந்திரன் வருடத்திற்கு 2 செ.மீ. பூமியிலிருந்து விலகி செல்கிறது.  இப்போதுள்ள கால கட்டத்தில் சரியாக சந்திரனின் நிழல்/பிம்பம் சூரியனை மறைக்கிறது. போகப்போக சந்திரனின் சுற்று வளையம் விரிவடையும்.‘ விரிவடைந்து கொண்டே போகும். அப்படி போகும்போது இன்னும்600 மில்லியன் ஆண்டுகளுக்குப்பின்னர் முழு சூரிய கிரகணம் வரவே வராது. எதிர்காலத்தில் பகுதி சூரிய கிரகணத்தை மட்டுமே பார்ப்பார்கள் : வளைய சூரிய கிரகணம் பார்ப்பார்கள்

எதிர்காலத்தில் முழு சூரிய கிரகணம்?

முழு சூரிய கிரகணம் என்பதை  எப்போதும் பூமியிலிருந்து பார்க்க முடியாது.

ஆதி காலத்தில், சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருந்தது. அப்போதெல்லாம், சூரிய கிரகணம் என்றால், முழு சூரிய கிரகணம்தான்.

சந்திரனின் நிழல், சூரியனை முழுமையாக மறைத்துவிடும். காலப்போக்கில், சந்திரன் சுற்றும் வேகமும், சுற்று வளையமும், பூமியன் சுற்றும் வேகம், மற்றும் ஈர்ப்பு சக்தியும் மாறுபடுகிறது.

சந்திரன் வருடத்திற்கு 2 செ.மீ. பூமியிலிருந்து விலகி செல்கிறது.

இப்போதுள்ள கால கட்டத்தில் சரியாக சந்திரனின் நிழல்/பிம்பம் சூரியனை மறைக்கிறது.

போகப்போக சந்திரனின் சுற்று வளையம் விரிவடையும்.’ விரிவடைந்து கொண்டே போகும்.

அப்படி போகும்போது இன்னும்600 மில்லியன் ஆண்டுகளுக்குப்பின்னர் முழு சூரிய கிரகணம் வரவே வராது.

சூரிய கிரகணம் பூமிக்கு மட்டும் சொந்தமா?

சூரிய கிரகணம் பூமியில் உண்டாவது போல, மற்ற கோள்களில் சூரிய கிரகணம் உண்டாகிறதா என என்றைக்கேனும் குழந்தைகள் உங்களிடம் கேள்வி கேட்டது உண்ஓ நீங்கள் பதில் தெரியாமல் முழித்தது உண்டா? சூரிய கிரகணம் என்பது நம் பூமிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. துணைக்கோள் உள்ள அனைத்து கோள்களிலும் சூரிய கிரகணம் உருவாகிறது. ஆனால் துணைக்கோள் இல்லாத, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள உட்கோள்களில்( புதன் மற்றும் வெள்ளி ) சூரிய கிரகணம் உண்டாவது இல்லை. ஆனால் துணைக்கோள்கள் உள்ள , வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 4 அசுரவாயுக்கோள்களிலும் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. மேலும் அந்த கோள்களிலிருந்து பார்ப்பதற்கு சூரியன் மிகவும் சிறியதாகவும் தெரிவதால்  இந்த கோள்களில் சூரிய கிரகணம் உண்டாக வாய்ப்பு உள்ளது. அதிலும் வியாழனில் அடிக்கடி சூரியகிரகணம் உண்டாகிறது.

இப்படி வியாழனில் சூரிய கிரகணம் உண்டாகிறது என்பதை இத்தாலிய வானவியலாளர்,ஜியோவான்னி டொமினிக் காசினி (Giovanni Domenico Cassini)யும், மற்றும் ஓலி கிறிஸ்டென்சன் ரோமர் (Ole Christensen Rømer ) என்பாரும் கி.பி 17 ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்திலேயே வியாழனிலும் அத முதல் துணைக்கோளான ஐயோ(IO)மூலம் உருவாகிறது என்பதை கண்டறிந்தனர். இது தன் கோளான வியாழனை 42.5 மணி நேரத்தில் சுற்றுகிறது என்றும்  கண்டறிந்தனர்.  இதனுடைய சுற்றும் கோணமும், வியாழன் சூரியனை சுற்றும் கோணமும் நெருக்கமாகவும், ஒரு பாகையில் சரியாக சந்திப்பதால் கிரகணம் ஏற்படுகிறது.

வியாழனின் சூரிய கிரகணம்!

வியாழனுக்கு மொத்தம் 79 துணைக்கோள்கள் உண்டு. . இவற்றில் வியாழனின் 5 துணைக்கோள்களான அமால்தியா ஐயோ, கனி மேடு , யுரேபா மற்றும் காலிஸ்ட்டோ   (Amalthea, Io, Europa, Ganymede and Callisto.) துணைக்கோள்களால் மட்டுமே சூரிய கிரகணம் வியாழனின் மேற்பகுதியில் உண்டாகிறது. வியாழனில் அதன் மூன்று துணைக்கோள்களும், ஒரு சமயத்தில் ஒன்றாக சூரியனைக் கடந்து செல்வது தெரிகிறது. மூன்றும் தனித்தனியாக ஒரே நேரத்தில் சூரிய கிரகணத்தை உண்டுபண்ணுகின்ற்ன.(படம்) வியாழனின் துணைக்கோள்கள் 4ம் அதன் மீது ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும், ஒரு முறை அல்லது  இரு முறை சூரிய கிரகண நிகழ்வை ஏற்படுத்தும்.

ஹப்பிள் சும்மா விடுமா வியாழனை

இப்படி மூன்று துணைக்கோள்கள் இணைந்து ஒரே சமயத்தில் சூரிய கிரகணத்தை ஏற்படுத்தியது ஹப்பிள் தொலைநோக்கி படம் எடுத்துள்ளது.

நாசா ஒரு வாரத்துக்கு முன்னர் வெளியிட்ட வியாழனின்துணைக்கோளான ஐயாவின்  படம் உலகை வியப்பில் ஆழ்த்தியது . ஆமாம் வியாழனின் துணைக்கோள் ஐயோ(IO )வின் நிழல் வியாழன் மேல் பதிந்து  கிடந்தது.இதுவியாழனில் ஐயோ துணைக்கோள் மூலம் உருவான முழு சூரிய கிரகண படம்/பிம்பம் ஆகும். இந்த படம் பூமியின் மீது விழும் சூரிய கிரகண படத்தை விடாத துல்லியமாகத்தெரிந்தது. காரணம், வியாழனிலிருந்து சூரியன் மிகவும் சிறியதாக தெரிவதால்தான்  படம் துல்லியமாகத் தெரிகிறது என்ற கருதுகோள் உள்ளது.

சனிக்கோளின் சூரிய கிரகணம்

சனிக்கோளுக்கு இப்போதைய நிலவரப்படி  82 சந்திரன்கள் /துணைக்கோள்கள் உண்டு. இவற்றில்  7துணைக்கோள்கள்பெரியவை. இவை மட்டுமே  , முழு சூரிய கிரகண நிகழ்வினை சனிக்கோளின் மேல் ஏற்படுத்தும்.  சனிக்கோளில் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது

யுரேனஸில் சூரிய கிரகணம் உண்டா?

சனிக்கோளைத் தாண்டி  இருக்கும் யுரேனஸ் கோளுக்கு 27 துணைக்கோள்கள் உள்ளன. ஆனால் இவற்றில் பாதிக்கு மேல் மிகவும் சிறியவை. மேலும் இவை சூரியனிலிருந்து தொலை  தூரத்தில் உள்ளதால் இவற்றால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. மேலும் யுரேனஸ் கோள் பக்கவாட்டில் 98 டிகிரி என  மிகவும் சரிவாக உள்ளது.(பூமியின் சரிவு 23.5 * தான் ) ஆனால் யுரேனஸின்  சந்திரன்கள் எல்லாம், யுரேனஸ் கோளின் நடுக்கோட்டுக்கு மேலேயே சுற்றுகின்றன. எனவே இந்த கோளில் சூரிய கிரகணம் ஏற்படுவது அரிதாகவே  இருக்கிறது. ஆனாலும் கூட ஒவ்வொரு 42 ஆண்டுகளுக்கு ஒரு முறை யுரேனஸிலும் முழு  சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

நான் இளைத்தவனா? நெப்டியூன்?  

சூரிய குடும்பத்தின் 8 வது  கோளான நெப்டியூனுக்கு 14 துணைக்கோள்கள் உள்ளன. இதன் ட்ரைடோன் என்ற துணைக்கோள்  முழு சூரிய கிரகணத்தை உண்டாக்குகிறது என வானவியலார் கூறுகின்றனர். ஆனால் நாம் நினைவில் கொள்ள வேண்டியது நெப்டியூன் கறுப்பாகவே இருக்கும். மேலும் பூமிக்கு கிடைப்பது 1/900 மடங்கு சூரிய ஒளியினையே நெப்டியூன் பெறுகிறது. நெப்டியூனிலிருந்து சூரியனைப் பார்த்தால், சூரியன் ஒரு விண்மீன் மாதிரியே சிறியதாகவே தெரியும்.எனவே நெப்டியூனில் உண்டாகும் சூரிய கிரகணம், சில நொடிகளுக்குள்ளாகவே சூரிய கிரகணம் நடந்து முடிந்துவிடும்.

எனவே சூரிய குடும்பத்தில், பூமியில் துவங்கி, நெப்டியூன் வரை, துணைக்கோள்கள் உள்ள அனைத்து கோள்களிலும் சூரிய கிரகணம் உண்டாகிறது.இவைகள் அனைத்தும் இயற்கை வானியல் நிகழ்வுகளே..

வர இருக்கும் வளைய கிரகணம்  நிகழ்வுகள்

26 Dec, 2019 AD — Annular Solar Eclipse (this eclipse)

10 Jan, 2020 AD — Penumbral Lunar Eclipse

This is the 46th eclipse in solar Saros series 132.The surrounding eclipses in this Saros series are:

23 Nov, 1965 AD — Annular Solar Eclipse (previous in the Triple Saros)

4 Dec, 1983 AD — Annular Solar Eclipse

14 Dec, 2001 AD — Annular Solar Eclipse

26 Dec, 2019 AD — Annular Solar Eclipse (this eclipse)

5 Jan, 2038 AD — Annular Solar Eclipse

16 Jan, 2056 AD — Annular Solar Eclipse

27 Jan, 2074 AD — Annular Solar Eclipse (next in the Triple Saros)

This Saros series, solar Saros series 132, is linked to lunar Saros series 125. The nearest partner eclipses in that series are:

21 Dec, 2010 AD — Total Lunar Eclipse

31 Dec, 2028 AD — Total Lunar Eclipse

 


 

அச்சப்பட வேண்டியதா, சூரிய கிரகணம்? – அறிவியல் உண்மை என்ன?

25th December 2019   |  

solareclipse

சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு விதமான தகவல்கள் வலம் வருகின்றன. அச்சப்படத் தக்கதா, சூரிய கிரகணம்? அறிவியல் கூறும் உண்மைதான் என்ன?

வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 26) காலை 9 மணி முதல் மதியம் 12.29 மணி வரை நிகழ இருக்கிறது. தமிழகத்தில் காலை 8 மணி முதல் 11.15 மணிவரை நாம் இதைப் பார்க்கலாம்.

மக்களிடையே சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. சாப்பிடலாமா, வெளியே வரலாமா, குளிக்க வேண்டுமா, கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவார்களா… என நிறைய கேள்விகள், அச்சங்கள்.

இவை ஒருபுறம் என்றால் சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பாகக் கண்டுகளிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மிகவும் பாதுகாப்பாக சூரிய கிரகணத்தை காண்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சூரிய கிரகணம் குறித்த பல்வேறு அறிவியல் பூர்வமான தகவல்களைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய கிரகணம் என்பது என்ன? 

சூரிய கிரகணம் என்பது வானத்து சந்திரனின் நிழல் விளையாட்டுதான். சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் வரும்.

சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக (Ring of fire) தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும். சூரியன் சந்திரனின் நிழலால் பகுதி சூரியன் மட்டும் மறைக்கப்பட்டால் அது பகுதி சூரிய கிரகணம். இப்போது டிசம்பர் 26 அன்று நடைபெற உள்ளது  வளைய சூரிய கிரகணம்.

சூரிய கிரகணத்தை எங்கு காணலாம்?

வளைய சூரியகிரகணம் தமிழகத்தில், உதகை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மற்றும் ஈரோடு என 9 மாவட்டங்களில், சூரியன் பொன் வளையமாகத் தெரியும். மற்ற மாவட்டங்களில் மற்றும் இந்தியா முழுமைக்கும் சூரியன் பகுதி கிரகணமாகத் தெரியும்.

வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் செகாவத்து என்ற ஊரில் துவங்கி, உதகையில் நுழைகிறது. சூரிய கிரகணம் டிசம்பர் 26ம் நாள், காலை 8.07 மணிக்குத் துவங்கி, காலை 11.14 க்கு முடிகிறது. (சுமார் 3 மணி7 நிமிடம்) ஆனால், சூரியன் நெருப்பு வளையமாக ( Ring of fire) தெரியும் நேரம் காலை 9.31க்கு துவங்கி 9.34 வரை சூரியனின் வளையம் நீடிக்கிறது.

2019, டிசம்பர்26 வளைய கிரகணப் பாதையின் அகலம்: 118 கி.மீ, நீளம்: 12,900 கி.மீ, வளைய சூரிய கிரகண பாதை சவூதியில் துவங்கி, வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள காம் (Gaum) வரை பயணிக்கிறது.

சந்திரன் எப்படி பெரிய சூரியனை மறைக்கிறது?

சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது. அதுபோலவே, சந்திரனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தைப் போல சூரியனுக்கு உள்ள தூரம் 400 மடங்கு அதிகம். எனவே, பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன், சூரியன் இரண்டும் ஒரே அளவில் தெரிகிறது. எனவே, சந்திரனின் நிழல் சூரியனை மறைத்து சூரிய கிரகணத்தை  உருவாக்குகிறது.

கிரகணத்தின்போது சூரியன் வளையமாகத் தெரிகிறது? ஏன்?

சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. அப்போது சில சமயம் அருகிலும், சில சமயம் தொலைவிலும் இருக்கும். முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் அருகில்/அண்மையில் இருக்கும்போது  ஏற்படும். வளைய கிரகணம் என்பது சந்திரன் தூரத்தில்/சேய்மையில்  இருக்கும்போது, சந்திரனின் நிழல் சூரியனுக்குள்ளேயே விழும். சூரியனை முழுமையாக மறைக்காது. சூரியன் எட்டிப்பார்த்துக்கொண்டு வெளியே இருக்கும். இதனையே வளைய சூரிய கிரகணம் என்று சொல்கிறோம்.

சூரிய கிரகணத்தின்போது சூரியனைப் பார்க்கலாமா?

சூரிய கிரகணத்தின் போது மட்டுமல்ல, எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியனைப் பார்ப்பதற்கு சிறப்பான ஒரு சூரிய கண்ணாடி தயாரித்துள்ளனர். அதனைபோட்டுக்கொண்டு சூரியனைப் பார்த்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சூரியனைப் பார்க்கும்போது கண்ணுக்கு எப்போதும் பாதுகாப்பு அவசியம். பாதுகாப்பான சூரிய வடிகட்டி கண்ணாடி(solar filer) குறைந்த விலையில் லட்சக்கணக்கில் வினியோகித்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பெசன்ட்நகர் கடற்கரையில் தேநீர் விருந்துடன் காலை 8 மணி முதல் 11.30 வரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் போது சூரிய கிரகணத்தை பார்க்கும் வாய்ப்புகள் குறையும்.

சூரிய கிரகணத்தின் தாக்கத்தினால் தோஷம் ஏற்படக்கூடிய ராசிக்காரர்கள்:

கேட்டை, மூலம், பூராடம், மகம், அஸ்வினி இந்த ஐந்து ராசிக்காரர்களும் கிரகணத்தன்று பரிகாரம் செய்யவேண்டிய ராசிகளாகும்.

இந்த சூரிய கிரகணம் நிகழ்வதற்கு முன்னாள் ஒரு முறை குளித்து விடுங்கள். சூரிய கிரகணம் முடியும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது. சமைத்த பொருட்களை மூடி வைக்க வேண்டும். வெளியில் செல்லாமல் இருப்பது நலம் தரும். சூரிய கிரகண சமயத்தில் எந்த வேலையும் செய்யாமல் இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவது எந்த அளவிற்கு சிறப்பான பலனை பெற்றுத்தரும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கிரகண நேரத்தில் உச்சரிக்கப்படும் மந்திரம் சாதாரண நேரங்களில் நீங்கள் உச்சரிப்பதை விட லட்சம் மடங்கு பலன் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால்தான் அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் அவசியமான ஒன்றாக கூறப்படுகிறது.

கிரக சேர்க்கையினால் ஏற்படும் தீமைகள்

இந்த கிரக சேர்க்கையினால் டிசம்பர் 25, 26, 27 அன்று பிறக்கும் குழந்தைகளின் உடல்நலனில் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் அந்தப் பெற்றோர்கள் அதற்குரிய சரியான பரிகாரங்களை செய்வது அவர்களது குடும்பத்திற்கு நல்லது. குரு – சனி இருவரின் சேர்க்கை இருப்பதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். அதனால் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாது இருப்பவர்களுக்கு பாதிப்புகள் உருவாகலாம். அதனால் அவர்கள் முறைப்படி தர்ப்பணம் செய்வது நற்பலன்களை நல்கும்.

அறிவியல் உண்மை என்ன?

சூரிய கிரகணத்தால் உலகில் எந்த ஒரு ஜீவராசிக்கும் தீங்கு ஏற்படுவது இல்லை. இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இவர்கள் குறிப்பிடும் 6  கிரகங்களில் சூரியன், சந்திரன் இரண்டும் கிரகங்கள் இல்லை. சூரியன் அறிவியல் ரீதியாக ஒரு விண்மீன். சந்திரன் பூமியின் துணைக்கோள். கேது என்ற கோளே, நம் சூரிய மண்டலத்தில் இல்லை. புராணத்தின் வழியே கூறப்படும் கற்பனை.

சூரிய கிரகணத்தின் முழுமையான நேரம் காலை 8.06 லிருந்து காலை 11.14 வரை மட்டுமே. இவர்கள் சொல்லுவது காலை 8 மணி முதல் மதியம் 1.15 வரை என்று. இதுவும் தவறு. மேலும் இவர்கள் குறிப்பிடும் மூல நட்சத்திரம் என்பது, விருச்சிக ராசி மண்டலத்தில் பூமியிலிருந்து 550 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. தனுசு ராசி 5000 ஒளியாண்டுகள் தொலைவில்  உள்ளது. சூரியனோ பூமியிலிருந்து 14.79 கோடி கி.மீ தூரத்தில்தான் உள்ளது. இதில் எப்படி சூரிய கிரகணத்தால் மூல நட்சத்திரம் மற்றும் தனுசு ராசி பிரச்னைக்குள்ளாகும்?

சூரிய கிரகணத்தின்போது எந்தவொரு தீமை விளைவிக்கும் கதிர்களும் சூரியனிடமிருந்து வரவில்லை. அவை உணவை, உயிரினங்களைப் பாதிப்பதும் இல்லை. எனவே குளிக்க வேண்டியதும் இல்லை. உணவை மூடிவைக்க வேண்டியதும் இல்லை. வீட்டை/கோவிலை கழுவ வேண்டியதும் இல்லை. கிரகணத்துக்கு முன்னும் பின்னும் குளிக்க வேண்டியது இல்லை. கடலில் குளிக்க வேண்டியதோ, சாங்கியமாக நல்ல தண்ணீரில் உப்பைப் போட்டு குளிக்க வேண்டியதில்லை. அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும். போலி அறிவியலுக்குள்  மூழ்கிவிடக்கூடாது. தாரளமாய் நீங்கள் கிரகணத்தின் போது சாப்பிடலாம். எந்த  பிரச்சினையும் ஏற்படாது.

கிரகணத்தின்போது கோவில் நடைதிறப்பு சரியா?

அறிவியல் ரீதியாக கோயில் நடைதிறப்பு மற்றும் பூஜை நேரத்தில் சூரிய கிரகணத்தின் தாக்கம் இருக்காது காலம் காலமாக பின்பற்றுவதால் அந்த நடைமுறைகள் இன்றும் தொடர்கிறது.

கிரகணத்தின் போது கருவுற்ற பெண்கள் வெளியே வரக்கூடாது! ஏன்?

கிரகணத்தின் போது கருவுற்ற பெண்கள் வெளியே வரக்கூடாது என்று ஏதும் இல்லை. தாராளமாக சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின்போது அம்மாவாகப் போகிற கர்ப்பிணிப் பெண்கள் வரலாம். எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது வெளியே வந்தால்,குழந்தை பிறந்த பின்னர், அது ஊனமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். அது உண்மையில்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. தவறான கருத்து. கர்ப்பிணி பெண்கள் தாராளமாக சூரியகிரகணத்தின் போது வெளியே வரலாம். எதுவும் நிகழாது. சூரிய கிரகணத்தை பார்த்த பெண்கள் நல்ல முறையில் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.

சூரிய கிரகணத்தின்போது வீட்டிலுள்ள உணவு மற்றும் நீரில். தர்ப்பையை போடவேண்டும்! அது ஏன்? தர்ப்பை என்றால் என்ன?

தர்ப்பை என்பது ஒரு வகை கோரைப்புல். அது சூரியனிலிருந்து வரும் எந்தவித கதிரையும் / கிருமியையும் தடுக்க முடியாது. கிணறு, குளம், ஏரி மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளில் எத்தனை தர்ப்பை போட்டு அந்த நீரை காப்பாற்ற முடியும். மேலும், இது முழுக்க முழுக்க தவறான கருத்து. தர்ப்பை போடுவதால் எந்த பலனும் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சூரியனிலிருந்து புதிதாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதிரும் சூரிய கிரகணத்தின்போது வருவது கிடையாது என்பது நிதர்சனமான அறிவியல் பூர்வமான உண்மை.

சூரிய கிரகணத்தின்போது உணவு உண்ணக்கூடாது, ஏன்? சூரியனிலிருந்து ஏதாவது சிறப்பு கதிர்கள் வருகின்றனவா?

எந்த ஓரு புதிய சூரிய கதிரும் வந்து பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. அப்படி ஏதோ கதிர்கள்/அகச்சிவப்பு கதிர்கள் வந்து பூமியிலுள்ள உணவை பாதிப்படையச் செய்வதாக ஊடகங்கள் மற்றும் சோதிடர்கள் புரளியைக் கிளப்பி வடுகின்றனர். சூரிய கிரகணத்தின்போது பாதிப்பை  உருவாக்கும் கதிர்கள் சூரியனிலிருந்து வருவதில்லை. எப்போதும் வரும் கதிர்களே சூரிய கிரகணத்தின்போதும் வருகின்றன. அந்த அகச்சிவப்பு கதிர்கள் எப்போதும் வருபவை தான். சூரியனிடமிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்கள் தான் பூமியை, வளிமண்டலத்தை மற்றும் அதன் மேலுள்ள பொருட்களை சூடாக்குகிறது. அவை உணவை பாழாக்காது. எனவே நீங்கள் சூரிய கிரகணத்தின்போது தாரளமாக சாப்பிடலாம். உங்கள் நண்பர்களையும் சாப்பிடச்சொல்லலாம்.

கிரகணத்தின்போது நிகழ்ந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள்

கிரகணத்தின்போது நிறைய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அதில் முக்கியமாக 3 கண்டுபிடிப்புகள் உலகத்திற்கு நன்மை பயப்பவை.

1. தனிம அட்டவணையின்  இரண்டாவது தனிமம், லேசான தனிமம் ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது 1868, ஆகஸ்ட் 18 அன்று நிகழந்த முழு சூரிய கிரகணத்தின் போதுதான் பண்டறிந்த வானவியலாளர் பியரீ ஜான்சென் (Pierre Janssen.). அதன் பின்னரே 1895ல் பூமியில் ஹீலியம் இருப்பது கண்டறியப்பட்டது.

2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சார்பியல் தத்துவம்( Relativity Theory of Light) நிரூபணம் செய்ய சான்று கிடைத்தது, 1919_ மே 19 இந்தியாவின் குண்டூரில் நிகழ்ந்த முழு சூரியகிரகணத்தின் போதுதான். கண்டறிந்தவர் ஆர்தர் எட்டிங்டன்(  Arthur Eddington)

3. சூரியனின் வெளிப்பகுதியான ஒளி மகுடத்தை(Corona) பார்க்கவே முடியாது. 1930ல் நிகழ்ந்த முழு சூரியகிரகணத்தின்போது,ஜெர்மன் வானவியலாளர்  வால்டர் க்ரோட்ரைன் (Walter Grotrian ), சூரிய கிரகணத்தின் போது சூரியனின் ஒளிவட்டம் மிகுந்த ஒளியுடன் தெரிந்ததையும், அதன் ஒளி மட்டுமல்ல, வெப்பமும் சூரிய பரப்பை விட அதிகமாக உள்ளதையும் கண்டறிந்தார். போட்டோஸ்பியர்(Photosphere) 5800 கெல்வின்.

இத்தனை அறிவியல் உண்மைகளையும் மனதில்கொண்டு, மிகத் துணிச்சலாக சூரிய கிரகணத்தை எதிர்கொள்ளலாம், தங்கள் பணிகளை வழக்கம்போல மேற்கொள்ளலாம் என்றும் அறிவியல் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

https://www.dinamani.com/india/2019/dec/25/solar-eclipse-3315400.htmlயாஸ்கர் தனது நிருக்தத்திலும் (2-6) கௌதம மஹரிஷி தனது பாடலிலும் (ரிக் 1-84-15) கிரகணம் பற்றிப் பேசுகின்றனர். அத்ரி மஹரிஷியின் பாடலில் அவருக்கு மட்டுமே கிர்ஹணத்திலிருந்து சூரியனை விடுவிக்கத் தெரியும் என்பதைப் படிக்கும் போது அந்தக் காலத்தில் அவர்களுக்கு மட்டும் கிரஹணத்தைக் கணக்கிடும் முறை தெரிந்திருந்ததாக நினைக்கத் தோன்றுகிறது. பஞ்சவிம்ச பிராமணத்தில் இதை மேலும் விளக்குகின்றனர். நான்கு கட்டங்களில் அவர் இதை விடுவிப்பதாகக் கூறி அவைகளை சிவப்பு ஆடு, வெள்ளி நிற ஆடு,பின்னர் சிவப்பு ஆடு, கடைசியில் வெள்ளை நிற ஆடு என்று வருணிக்கின்றனர். அதாவது சிவப்பாக மாறி வெளிப்புற நிழலில் நுழைந்து பின்னர் முழுதும் மறைந்து மீண்டும் சூரியன் விடுதலை பெறும் அறிவியல் கருத்தை அழகாகக் கூறுகின்றனர்.

மகா பாரதம் ராமாயணம் ஆகிய இதிஹாசங்களில் நிறைய குறிப்புகள் உண்டு. வால்மீகி ராமாயண ஆரண்ய காண்டத்தில் மிக அழகான வருணனை 15 ஸ்லோகங்களில் (சர்கம் 23) உள்ளது.

வேதகாலத்தில் முழுநிலவை ராகா என்றும் அமாவாசையை சீனிவாலி என்றும் அழைத்ததாக வடமொழி அறிஞர்கள் கூறுவர்.அப்போது ராஹு, கேது கிரஹங்கள் கிடையாது.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நிறைய இடங்களில் சந்திரனை ராகு என்னும் பாம்பு விழுங்கும் (அகம் 114,313: புறம் 260, சிறுபாண்185,, பரி 10-76, குறு 395, நற் 128,377: பெரு.383, கலி. 4 இடங்கள்) கருத்து வருகிறது.

சூரிய கிரகணம் பற்றி புறநானூறு பாடல் எண் 174 ல் மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார்:

அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இரும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,
அரசிழந்து இருந்த அல்லற் காலை

இதற்கு உரை எழுதியோர் பாற்கடலைக் கடைந்தபோது நிகழ்ந்த தேவாசுரப் போரையும் அப்போது ராகு கேது அமிர்த துளிகளைத் திருட்டுத்தனமாக சாப்பிட்டதையும் உடனே மோஹினி அவதாரத்தில் இருந்த விஷ்ணு ராகுவின் தலயை வெட்டியதையும் குறிப்பிடுகின்றனர். ஆனால் இதில் பாடப்பட்டவன் பெயரும் மலையமான் சோழிய ஏனாதி திருக் கண்ணன், சூரியனை விடுவித்து இருளைப் போகியவனும் கண்ணன் (அதாவது அஞ்சன வண்ணன்) என்பதைப் பார்க்கையில் இது மஹாபாரத 13ஆவது நாள் போரைக் குறிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. எல்லா கிரஹணங்களையுமே பாமர மக்கள் புரிந்து கொள்வதற்காக அரக்கன் வந்து விழுங்கினான், பாம்பு வந்து விழுங்கியது என்று கூறுவது வழக்கம். ஆனால் அஞ்சன வண்ணனான கண்ணன் சூரியனை ஒரு சில நிமிடங்களுக்கு மறைத்து பின்னர் வெளியே காட்டிய நிகழ்ச்சி மகாபாரதத்தில் 13 ஆம் நாள் நடந்தது. இன்று மாலை சூரியன் மறைவதற்குள் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனைக் கொன்று பழிவாங்குவேன் என்று அர்ஜுனனன் சூளுரைக்கிறான். சூரியனும் மறைந்துவிடுகிறது. ஜயத்ரதன் உயிருடன் வெளியே வந்து கொண்டாடுகிறான். அந்த நேரத்தில் திடீரென சூரியன் வெளியே வர அர்ஜுனன் தனது எதிரியைக் கொன்று பழி தீர்க்கிறான். அது சூரிய கிரஹண நாள் என்ற ரகசியம் அர்ஜுனன், கண்ணன் ஆகியோருக்கு மட்டுமே தெரியும் போலும். பாண்டவர்களில் கடைக் குட்டிகள் இருவரும் ஜோதிட சாத்திரத்தில் வல்லவர்கள்.

13ஆம் நடந்த போரில் பங்கு கொண்ட ஜயத்ரதன் சிந்து சமவெளி மன்னன் என்பது குறிப்பிடத் தக்கது. முன்பெல்லாம் மாபாரதப் போர் அமாவசை அன்று துவங்கியதாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது இது முழு நிலவு நாளில் தவங்கப்படதைப் பல ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர். பழங்காலத்திலும் இன்றும் முக்கிய விழாக்கள் எல்லாம் பவுர்ணமியில்தான் நடக்கும். இரவு நேரத்தில் மக்கள் இடம்பெயர்ந்து செல்ல இது பெரிதும் உதவும். தர்மப் போர் நடத்திய மாபாரத காலத்தில் இரவு நேரத்தில் இரு தரப்பினரும் சந்திப்பதும் காயமடைந்தவர்களைக் கவனிப்பதும் எல்லோரும் அறிந்ததே. போர் , முழு நிலவில் துவங்கியிருந்தால் சூரிய கிரஹணம் 13வது நாள் மலையில் நடந்திருக்க முடியும். 13 நாட்களில் இப்படி முழு நிலவும் அமாவாசையும் வந்ததை வியாசர் மீண்டும் மீண்டும் ஒரு அதிசய நிகழ்ச்சியாகக் குறித்து வைத்துள்ளார். எப்படியாகிலும் சூரிய கிரஹணக் குறிப்பும் அதற்குக் கிடைக்கும் புராண அல்லது இதிஹாச விளக்கமும் தமிழ் நாட்டில் எந்த அளவுக்கு இந்த நம்பிக்கைகள் வேரூன்றியிருந்தன எனபதைக் காட்டுகின்றன.

கிரஹண ஆய்வு மேற்கோள்: Dr. B. N. Narahari Achar, Department of Physics, Memphis University, USA; (3) Dr. R. N. Iyengar, Department of Civil Engineering, IISc,Bangalore

http://www.sisnambalava.org.uk/articles/religion/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-20120313063802.aspx


About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply