சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளிப்பது ஏன்?- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கம்

சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளிப்பது ஏன்?- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை ( Asian Tribune )

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இருமுனை போட்டி நிலவி வருகிற சூழலில் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் வருகிற ஜனவரி 16-ம் தேதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். இந்தச் சூழலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும் மகிந்த ராஜபக்‌சேவின் இலங்கை பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோதபய ராஜபக்‌சேவுக்கும் இடையே பிரதானமான போட்டி நிலவுகிறது. மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி கோதபயவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இன்னும் பத்து நாள்களுக்குள் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிற சூழலில் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது தெரிவிக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சஜித் - ரணில் & மகிந்த ராஜபக்சே - கோதபய ராஜபக்ஷே
சஜித் – ரணில் & மகிந்த ராஜபக்சே – கோதபய ராஜபக்ஷே

தேர்தல் பிரசாரத்தில் சிங்களப் பெரும்பான்மைவாதத்தை கோதபய ராஜபக்‌சே தரப்பு மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. போர்க்குற்ற விசாரணையில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையிலே தெரிவித்துள்ளனர். மற்றொருபுறம் மிதவாத தரப்பாகப் பார்க்கப்படும் சஜித் பிரேமதாசாவும் தமிழர் பிரச்னையில் மௌனம் காத்தே வருகிறார். சிங்கள வாக்குகளை இழப்பதற்கு இரண்டு தரப்பும் தயாராக இல்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. சிங்கள வாக்குகள் பிரியக்கூடிய சூழ்நிலை உருவாகுமானால் வெற்றியைத் தீர்மானிப்பதில் தமிழர்களின் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இலங்கை அதிபர் தேர்தல்... அந்தரத்தில் தமிழர்கள்!

Also Read

இலங்கை அதிபர் தேர்தல்… அந்தரத்தில் தமிழர்கள்!

இந்நிலையில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “புதிதாக பதவியில் அமரக்கூடியவர் ஜனநாயகத்தை காப்பவராகவும் சர்வாதிகாரத்தை மறுப்பவராகவும் இருக்க வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு வாக்காளர்கள் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. தவறான ஒரு முடிவு பேரழிவான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். பிரதான போட்டியாளர்களான சஜித் மற்றும் கோதபய ஆகியோரின் கடந்த கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்துள்ளது” என்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிக்கை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிக்கை

மேலும், “கடந்த ஏப்ரல் மாதம் சட்டவிரோதமாக ஆட்சியில் அமர்ந்தது. மகிந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதிக்கு அளவு கடந்த அதிகாரம் வழங்கியது, மனித உரிமை செயற்பாட்டாளர்களை குறிவைத்தது, ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்த முயன்றது எனப் பல ஜனநாயக விரோத நடவடிக்கையில் மகிந்த ராஜபக்‌சே தரப்பு ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சஜித் தரப்பின் மீது இல்லை என்பதனால் அவருக்கு ஆதரவு அளிக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/government-and-politics/international/tamil-national-alliance-extends-support-to-sajith-premadasa


 

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply