ஐ.நா.வின் 30/1ஆம் தீர்மானம் இலங்­கைக்கு பாதிப்பா?

STATEMENT BY FOREIGN MINISTER DINESH GUNAWARDENA IN PARLIAMENT ON UNHRC RESOLUTION 30/1 ON 20 FEBRUARY 2020

வெள்ளி, 21 பிப்ரவரி 2020

In May 2009, following the end of the 30 year-long internal armed conflict with the defeat of the LTTE, a terrorist organization proscribed by 32 countries, the government led by the then President Mahinda Rajapaksa, of which the current President GotabayaRajapaksa was the Secretary to the Ministry of Defence, initiated a sustainable reconciliation process in Sri Lanka to bring about ‘healing and peacebuilding’, taking due cognizance of the ground realities at that time. This incremental process made considerable progress in all aspects of the post-conflict restoration of civilian life and in the country’s return to normalcy. The citizens in the Northern Province were able to use their franchise after a lapse of 25 years, in 2013 strengthening democracy. In parallel, several local mechanisms/commissions were established to address the post-conflict issues of concern, including those related to accountability, rule of law and human rights. More importantly, the end of the brutal conflict restored one of the fundamental human rights – the ‘right to life’ to all Sri Lankans.

Notwithstanding the inclusive and locally designed measures/actions, a group of UNHRC members, failing to recognize the GoSL’s endeavours in defeating terrorism and bringing about stability, humanitarian relief and lasting peace through a carefully balanced reconciliation process, enforced consecutive country-specific resolutions at the UN HRC on Sri Lanka in 2012, 2013 and 2014.

30/1 UNHRC Resolution

The government elected in January 2015 jettisoned the home-grown reconciliation process progressing at the time, and in an unprecedented move in the Human Rights Council, and in contrary to Sri Lanka’s foreign policy stance on country-specific resolutions, co-sponsored the UNHRC resolution 30/1 on the situation of the  country. This was done without the approval of the Cabinet of Ministers, the Parliament and the people of Sri Lanka, overruling the reservations expressed by professional diplomats, academia, media and the general public. The then President Maithripala Sirisena also stated that he was not consulted on the matter at that time.

Resolution 30/1 conceded a false narrative of both the circumstances of the 30-year separatist conflict and also the number of causalities. This was done despite an abundance of evidence to the contrary contained in domestic reports such as of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and the Presidential Commission of Inquiry into complains of abductions and disappearances (Paranagama Commission) and those produced in the UK Parliament by Lord Naseby, reports of other States, the UN and other international agencies, including the ICRC, as well as exposed diplomatic cables.

It undermined national interest, compromised national security including weakening national intelligence operations and related safeguards, which may be deemed to have contributed to the lapses that resulted in the Easter Sunday attacks. It also placed Sri Lanka under a host of international obligations which could not be delivered on due to constitutional and institutional limitations. Sri Lanka’s co-sponsorship of Resolution 30/1 remains to date a blot on the sovereignty and dignity of the country.

Implementation of Resolution 30/1

The ensuing period (2015-2019) saw little progress being made on the pledges to the HRC by the previous government. The operationalization of resolution 30/1 was extended (roll-over) twice, through Resolution 34/1 in March 2017 and through Resolution 40/1 in March 2019, in order not to expose the misjudgment and low delivery of the previous Government that co-sponsored it.

Through Resolution 30/1, severe impositions were cast and the Sri Lankan State and particularly its security forces were vilified to appease the extremist sections of the Sri Lankan Tamil diaspora and certain media, INGOs/CSOs with vested interests. It also negatively affected ethnic and religious harmony, already challenged by the ravages of the divisive conflict.

However, during the UNHRC session in March 2019, belatedlythe former Government itself sought to qualify the parameters of co-sponsorship. It questioned the Resolution 30/1’s characterization of the nature of the conflict and the estimated number of deaths, pushed back on the alleged culpability of the security forces, curtailed the effect of security sector reform demanded and asserted that the Sri Lanka Constitution precludes the involvement of foreign judges and prosecutors in the judicial mechanism proposed. Notwithstanding this admission, the former Government continued its co-sponsorship, which fully supported the operationalization of Resolution 30/1. 

New Mandate given by the people of Sri Lanka

During the November 2019 election, President Gotabaya Rajapaksa received an overwhelming mandate to charter a sustainable path for the country, to follow a non-aligned, neutral foreign policy and to find home-grown solutions to overcome contemporary challenges. Accordingly, the government will forge ahead with its agenda as envisaged in the National Policy Framework ‘Vistas of Prosperity and Splendour’, ushering for the country an era of security and development in the interest of all Sri Lankans.

Recommendations for the approval of the Cabinet of Ministers

In view of the foregoing, the approval of the Cabinet of Ministers is sought for the following, in relation to the GOSL’s approach to the upcoming 43rd Session of the Human Rights Council and to undertake diplomatic initiatives necessary to realise this strategy:

To announce Sri Lanka’s decision to withdraw from co-sponsorship of Resolution 40/1 of March 2019 on ‘Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka’, which also incorporates and builds on preceding Resolutions 30/1 of October 2015 and 34/1 of March 2017.

To continue to work with the UN and its agencies, including the regular human rights mandates/bodies and mechanisms and seek as required, capacity building and technical assistance, in keeping with domestic priorities and policies.

To declare the Government’s commitment to achieving sustainable peace through an inclusive, domestically designed and executed reconciliation and accountability process, including through the appropriate adaptation of existing mechanisms, in line with the Government’s policy framework. This would comprise the appointment of a Commission of Inquiry (COI) headed by a Justice of the Supreme Court, to review the reports of previous Sri Lankan COIs which investigated alleged violations of Human Rights and International Humanitarian Law (IHL), to assess the status of implementation of their recommendations and to propose deliverable measures to implement them keeping in line with the new Government’s policy.

Through due democratic and legal processes, address other outstanding concerns and to introduce institutional reforms where necessary, in a manner consistent with Sri Lanka’s obligations including the 2030 Sustainable Development Agenda (SDGs). Demonstrate in good faith the policies rooted in the Government’s commitment to the people by advancing individual and collective rights and protections under the law, ensuring justice and reconciliation and addressing the concerns of vulnerable sections of society.

To announce the intention of the GoSL to work towards the closure of the Resolution, in cooperation with the members of the UN.

 https://www.mfa.gov.lk/tam/statement-by-foreign-minister-dinesh-gunawardena-in-parliament-on-unhrc-resolution-301-on-20-february-2020/


 ஐ.நா.வின் 30/1ஆம் தீர்மானம் இலங்­கைக்கு பாதிப்பா?

04-0d93fe12f917d5494acae688a6c04fc69a19ba6c.jpg

இலங்கை ஐ.நா.வின் ஓர் அங்­கத்­துவ நாடாகும். எனவே, அதன் எல்லா விதி­முறை­க­ளுக்கும் கட்­டுப்­படக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றது. பொது­வாக எந்த நாடும் சர்­வ­தேச நீதி­நி­யா­யங்­க­ளுக்கு முரண்­ப­டு­மாயின், அந்த நாடு தனி­மைப்­ப­டவே செய்யும். 1939 ஆம் ஆண்டு முதல்1944 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த இரண்டாம் உலக மகா­யுத்­தத்தை தொடர்ந்­துதான் யுத்­தத்­தையும் அதன் அழி­வு­க­ளையும் தவிர்க்கும் பொருட்டு சர்­வ­தேச நாடுகள் ஐ.நா.சபையை உரு­வாக்­கின.

எனவே, அதில் அங்­கத்­துவம் வகிக்கும் இலங்கை தனது உள்­நாட்டு யுத்­தத்தில் ஐ.நா. தலை­யி­டு­வ­தாகக் கூற­மு­டி­யாது. அது விதித்­தி­ருக்கும் யுத்த விதி­மு­றை­களை மீற­வும்­ மு­டி­யாது. இலங்கை தனி­யாக இருந்து ­கொண்டு சர்­வ­தேச நாடு­கள் அங்கம் வகிக்கும் ஐ.நா.வை சவா­லுக்­குட்­ப­டுத்­தவும் முடி­யாது.

பாது­காப்பு வலயம் தாக்­கப்­ப­டக்­கூ­டாது. நிரா­யுதபாணி­க­ளான குடி­மக்கள் தாக்­கப்­ப­டக்­கூ­டாது. உணவு, தண்ணீர், மருந்து ஆகி­ய­வற்றை தடை­செய்­யக்­கூ­டாது. வெள்­ளைக்­கொடி தூக்­கி­யோரைக் கொல்­லக்­கூடாது. கொத்­த­ணி­குண்­டு­களைப் பயன்­படுத்­தக்­கூ­டாது என்­பன போன்ற இன்னும் சில சட்­ட­வி­தி­களும் இருக்­கின்­றன. இவை இலங்­கைக்­கென்றே ஐ.நா. உரு­வாக்­கி­யவை அல்ல. அதன் பொது­வான சட்­டங்­க­ளாகும். 2009 ஆண்டு யுத்தம் முடி­வுற்­றதும் ஐ.நா.வின் செய­லாளர் பான் கீ மூன் இலங்­கைக்கு வந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் விசா­ரித்­த­போது போர்க்­குற்றம் நிக­ழ­வில்லை. விசா­ரிக்­கலாம் என உத்­த­ர­வாதம் அளித்தார். எனினும் அவர் இதை நிச்­ச­யப்­ப­டுத்திக் கொள்ள விசா­ர­ணைக்கு ஒரு குழுவை நிய­மித்­த­போது இவர் பல்­வேறு முட்­டுக்­கட்­டை­க­ளையும் போட்டார்.

ஆக, மஹிந்த ராஜபக் ஷ மூன்று வகை­களில் ஐ.நா.வின் தலை­யீட்­டுக்கு வழி ­வகுத்து­ விட்டார்.

1. யுத்­த­வி­தி­களை மீறி­யமை.

2. போர்க்­குற்றம் நிக­ழ­வில்லை என்­பதை பான் கீ மூனிடம் உத்­த­ர­வா­தப்­ப­டுத்தி விசா­ரிக்­கலாம் எனக்­ கூ­றி­யமை.

3. ஐ.நா.வின் விசா­ர­ணைக்குத் தடை­களை ஏற்­ப­டுத்­தி­யமை எனலாம்.

உண்­மையில் தான் உரு­வாக்­கப்­பட்ட நோக்­கத்­தைத்தான் ஐ.நா. செய்­கி­றது. அது­தா­னாக வந்து இலங்­கைக்குள் தலை­யி­டவும் இல்லை. மஹிந்த தொடர்ந்தும் ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் இலங்­கைக்குள் அதன்­பிடி கடு­மை­யாக இறு­கி­யி­ருக்கும். 2015 இல் இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்டு மைத்­திரி அரசு போர்க்­குற்­றத்தை ஏற்­றுக்­கொண்டு பொறுப்புக் கூற­லையும் ஒப்­புக்­கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்­றுக்­கொண்ட பின்பே ஐ.நா.வின் பிடி இலங்கை விட­யத்தில் சற்­று­ த­ளர்ந்­தது.

முன்பு பான் கீ மூன் ஒரு விசா­ர­ணைக்­கு­ழுவை நிய­மித்­த­போது, மஹிந்த ராஜபக் ஷவும் அதற்குப் போட்­டி­யா­கவும் தனக்குச் சார்­பா­கவும் ஒரு விசா­ர­ணைக்­கு­ழுவை நிய­மித்­தி­ருந்தார். ஐ.நா.வின் விசா­ரணைக் குழுவில் மர்­சூகி தருஸ்­மனின் தலை­மையில் யஸ்மின் சூக்­காவும் ரட்­னரும் இடம்­பெற்­றி­ருந்­தார்கள். அதை முற்­றிலும் மஹிந்த நிரா­க­ரித்­தி­ருந்தார்.

அது மனி­தா­பி­மான யுத்தம். தமிழ் மக்­களை பயங்­க­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து காப்­பாற்­றிய யுத்தம் என்­றெல்லாம் கூறினார். எனினும், காணொளிக் காட்­சிகள் அதன் கொடூரத் தன்­மையை வெளிப்­ப­டுத்­தின. தருஸ்மன் அறிக்­கை­யும்­கூட அக்­காட்­சி­களை நிஜப்­ப­டுத்­தி­யது. இவற்­றின்­மூலம் யுத்­த­வி­தி­மு­றைகள் மீறப்­பட்­டமை அம்­ப­லத்­துக்கு வந்­து­விட்­டது.

தடை செய்­யப்­பட்ட ஆயு­தங்கள் இருந்­த­னவா? பாது­காப்பு வலயம் தாக்­கப்­பட்­டதா? வெள்­ளைக்­கொடி தூக்­கினோர் கொல்­லப்­பட்­ட­னரா? பொது மக்­களின் குடி­யி­ருப்­புகள் அழிக்­கப்­பட்­ட­னவா? நிரா­யு­த­பா­ணி­க­ளான மக்கள் கொல்­லப்­பட்­ட­னரா? உணவு, உடை, தண்ணீர், மருத்­துவ வச­திகள் தடுக்­கப்­பட்­ட­னவா? கண்­கண்ட சாட்சி இல்­லா­ம­லாக்­கப்­பட்­டதா என்­பன பற்­றி­யெல்லாம் ஐ.நா. சபை ஆராய்ந்தே போர்க்­குற்றம் எனும் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ பயங்­க­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து அப்­பாவித் தமிழ்­மக்­களை விடு­விக்கும் மனி­தா­பி­மான யுத்­தத்­தையே புரிந்தேன் என்றார் அல்­லவா? பாது­காப்பு வலயம் ஏன் தாக்­கப்­பட்­டது. சாதா­ரண மக்­களின் குடி­யி­ருப்­புகள் ஏன் அழிக்­கப்­பட்­டன, நிரா­யு­த­பா­ணிகள் ஏன் கொல்­லப்­பட்­டார்கள், உணவு, தண்ணீர், மருத்­துவம் ஏன் தடுக்­கப்­பட்­டன. இதுவா மனி­தா­பி­மான யுத்தம் என ஐ.நா. கேட்­கி­றது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்­ததும் வீடு­க­ளி­லி­ருந்த அப்­பாவித் தமிழ் மக்கள் அழைத்துச் செல்­லப்­பட்­டார்கள். விசா­ரித்து விட்டு விடு­கிறோம் எனக்­கூ­றப்­பட்டே அழைத்துச் செல்­லப்­பட்­டார்கள். சிலரைக் குடும்­பத்­தி­னரே ஒப்­ப­டைத்­தி­ருந்­தார்கள். சிலர் வீதி­களில் மறிக்­கப்­பட்டு, வாக­னங்­களில் ஏற்­றிச்­செல்­லப்­பட்­டி­ருந்­தார்கள். இத்­த­கை­யோர்தான் காணா­மற்­போனோர் என இப்­போது கூறப்­ப­டு­கி­றார்கள்.

தமிழ் அர­சி­யல்­கை­திகள் எவரும் இல்லை எனவும் கூறப்­ப­டு­கி­றது. இது பாது­காப்பு இடம் எனக்­கூறி, பாது­காப்பு வல­யத்தை வைத்­து­விட்டு அதையே தாக்­கு­வது, நிரா­யு­த­பா­ணி­க­ளான அப்­பா­வி­களை திருப்­பி­ய­னுப்­புவோம் எனக்­கூறி அழைத்­துச்­சென்று விட்டு காண­வில்லை எனவும், தமிழ் அர­சியல் கைதி இல்லை எனவும் கூறு­வது, வெள்­ளைக்­கொ­டி­யோடு வரு­மாறு கூறி­விட்­டுத்­தாக்­கு­வது என்­றெல்லாம் இருக்­கு­மாயின் ஐ.நா. விசா­ரிக்­காது இருக்­குமா?

தற்­போது வரவு–செலவில் 1200 கோடி ரூபாவை ஒதுக்கிக் காணாமற் போனோரைத் தேடும் அலு­வ­ல­கத்தை அரசு நிறு­வி­யி­ருக்­கி­றது. அர­ச­சார்­பற்ற எழு­வரை இதற்­கென நிய­மித்­த­தற்­கா­கவும் நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­து­போன்ற தொகையை ஒதுக்­கி­ய­தற்­கா­கவும் மைத்­திரி குற்றம் சுமத்­தப்­ப­டு­கிறார். இந்த அலு­வ­லகம் நீதி­மன்­ற­மல்ல. ஆறுதல் வழங்கும் ஏற்­பாடு என அமைச்சர் மங்­கள சம­ர­வீர குறிப்­பி­டு­கிறார். பணத்தால் ஆறுதல் வழங்கும் முயற்­சியா? ஆறு­தல்­படுத்தி நஷ்­ட­ஈடு வழங்­கினால் போர்க்­குற்­றத்தை ஒப்­புக்­கொள்ளும் செயற்­பா­டே­யாகும். அர­ச­சார்­பா­னோரை நிய­மித்தால், பாதிக்­கப்­பட்­டோரை இணங்­க­வைக்­க­ முடி­யாது என்­ப­தற்­கா­கத்தான் அரச சார்­பற்­றோரை நிய­மிக்க அரசு ஐ.நா.வுக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருக்­கி­றது.

சர்­வ­தே­சத்­திலோ, உள்­நாட்­டிலோ போர் வீரர்­களை விசா­ரிக்­கவோ, தண்­டிக்­கவோ விட­மாட்டேன் என மைத்­திரி இது­வரை கூறி­வந்­தி­ருந்­த­போதும் இதுவும் சர்­வ­தேச விசா­ரணை போன்­ற­தே­யாகும். காரணம் இந்த ஏழு அதி­கா­ரி­களும் போர்க்­குற்­றத்­துக்கு எதி­ரான நிலைப்­பாட்டில் இருந்­த­வர்கள் என்­ப­தே­யாகும். இவர்­களின் நிய­ம­னத்தை ஐ.நா. இலங்­கைக்குள் வலிந்து திணித்­தி­ருப்­ப­தன்­ மூலம் தனது நிகழ்ச்­சி­ நி­ரலை ஆரம்­பிக்­கி­றதா?

இது­பற்றிப் பேரி­ன­வா­திகள் என்ன சொல்­கி­றார்கள்? எவ­ரையும் பலாத்­கா­ர­மாகக் காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரான சர்­வ­தேச ஒப்­பந்த சட்­ட­மூலக் குறிப்­புகள் ஆகி­யவை போர் வீரர்­மீது போர்க்­குற்­றத்தைச் சுமத்­து­வ­தற்­கான பின்­பு­லத்தை ஏற்­ப­டுத்­தி­விடும் என்­கி­றார்கள். பாது­காப்பு சட்­ட­மூலத்தால் நினைத்­த­வாறு கோள், அவ­தூறு, வீண்­பழி ஆகி­ய­வற்றின் மூலமும் சாட்­சி­ய­ளித்து காணா­மல்­போனோரின் அலு­வ­லக சட்­ட­மூ­லத்தால் அறிக்கை வெளி­யி­ட­மு­டியும் எனவும் கூறு­கி­றார்கள்.

அமைச்சர் மங்­கள சம­ர­வீர கூறு­வ­து­போன்று இந்த அலு­வ­ல­கத்தால் தண்­டனை வழங்­க­மு­டி­யாத போதும் வேறொரு நாட்டில் இதை முன்­வைத்து அந்த நாட்­டிலோ, வேறு சர்­வ­தேச நீதி­மன்­றத்­திலோ வழக்கு போட முடியும் எனவும் கூறு­கி­றார்கள். குறிப்­பிட்ட நாடு ரோம தீர்­மா­னத்­துக்கு அமைய உரு­வாக்­கப்­பட்ட சர்­வ­தேச போர்க்­குற்ற நீதி­மன்­றத்தை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கு­மாயின், அந்த நாடு இலங்கைப் போர் வீரர்­க­ளையும் தனது விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தும் அதி­காரம் இருப்­ப­தாக கூறு­கி­றார்கள்.

எவ­ரையும் பலாத்­கா­ர­மாக அரசு காணா­ம­லாக்­கு­மாயின் அதற்­கெ­தி­ரான சர்­வ­தேச தீர்­மானம் சட்­ட­பூர்­வ­மாக ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே, அந்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளாகும் போர் வீரர்­களை சர்­வ­தேச விசா­ர­ணைக்­காக அனுப்­பி­வைக்கும் ஐ.நா.வின் இந்த நிகழ்ச்­சி­நிரல் அதன் 30/1 ஆம் இலக்க தீர்­மா­னத்­தின்­ப­டியே அமைந்­தி­ருக்­கி­றது. போர்க்­குற்­றத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் இணை அனு­ச­ர­ணை­யையும் இலங்கை ஏற்­றுக்­கொண்­ட­தா­லேயே அந்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட இரு­முறை தவ­ணை­களும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன என்­கி­றார்கள்.

எனினும், தொடர்ந்து மூன்று வரு­டங்­க­ளாக வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்றும் சூழல் அர­சுக்கு அமை­ய­வில்லை. காரணம் இது இரா­ணு­வத்தின் போர்க்­குற்ற விடயம் என்­பதால் அத­னிடம் தங்­கி­நிற்கும் அரசு செய­லி­ழந்து நிற்­கி­றது. சிங்­கள நாட்டை சிங்­கள இரா­ணு­வமே காப்­பாற்­றி­யது எனப் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் நம்­பு­வதால், அவர்­களின் ஏக ஆத­ரவு அதற்கே இருக்­கி­றது. இந்­நி­லையில், அரச சார்­பற்ற அதி­கா­ரிகள் காணாமல் போனோரின் அலு­வ­ல­கத்தில் கடமை ஏற்­ப­தை­யும்­கூட அவர்கள் எதிர்க்­கி­றார்கள். இது போர் வீரர்­களை போர்க்­குற்­றத்தில் சிக்­க­வைப்­ப­தற்­கான முதற்­படி என்றே அவர்கள் கூறு­கி­றார்கள். மொத்­தத்தில் 30/1 ஆம் இலக்­கச் ­சட்­டத்­தின்­மூலம் போர் வீரர்­களை போர்க்­குற்­றத்­துக்கு உட்­ப­டுத்தும் திட்­டமே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாகக் கூறு­கி­றார்கள்.

பாதிக்­கப்­பட்­டோ­ரையும் சாட்­சி­யா­ளர்­க­ளையும் பாது­காக்கும் சட்­ட­மூ­லமும்,

காணாமற் போனோரின் விவரம் அறியும் அலு­வ­லக சட்­ட­மூ­லமும் அதில் இருக்­கின்­ற­னவாம்.

ஆக, மைத்­திரி அரசு உட­ன­டி­யாக 30/1 லிருந்து விலக வேண்டும் என்­பதே பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் கோரிக்­கை­யாக இருக்­கி­றது. இவ்­வாறு செய்­வ­தாயின் போர்க்­குற்­றத்தை மறுத்து பொறுப்­புக்­கூறலை நிரா­க­ரித்து இணை அனு­ச­ரணை வழங்­க­மு­டி­யாது எனவும் கூற­வேண்டும்.

இது­வரை மைத்­திரி ஐ.நா. வுக்கு முற்­றிலும் இணங்­கி­ய­தால்தான் அவரும் தற்­காத்து மஹிந்­த­வையும் காப்­பாற்றி நாட்­டுக்கு பாதிப்பும் ஏற்­ப­டாமல் வைத்­தி­ருக்­கிறார். எனவே கட்­சி­ரீ­தியில் இவ்­விட­யத்தில் பிள­வு­ப­டாது சர்­வ­கட்­சி­யாக இணைந்து செயற்­பட்­டாக வேண்டும்.

காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகச் சட்டம் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் ஓர் ஆணைக்­கு­ழுவின் நிய­ம­னம்­ மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. நிய­மிக்­கப்­பட்ட 7 ஆணை­யா­ளர்­க­ளதும் பத­விக்­காலம் 3 வரு­டங்­க­ளாகும். காணா­மல் ­போ­னோ­ரைத்­தேடி முடிவு செய்­வதே இந்த அலு­வ­ல­கத்தின் பொறுப்­பாகும்.

1. ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ்

2. ஜெய­தீபா புண்­ணிய மூர்த்தி

3. மொஹந்தி என்­டொனன்ட் பீரிஸ்

4. கலா­நிதி நிமல்கா பெர்னாண்டோ

5. மிராக்­ரஹீம்

6. சோம­சிறி லிய­னகே

7. கண­ப­தி­பிள்ளை வேந்தன்

ஆகி­யோரே தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இதற்­கென 2018 ஆம் ஆண்டின் வர­வு–­செ­லவுத் திட்­டத்தின் மூலம் 1200 கோடி ரூபாவை அரசு ஒதுக்­கி­யி­ருந்­தது. இது பாரா­ளு­மன்­றத்­துக்கு பொறுப்­பான சுயா­தீன நிறு­வ­ன­மாகும். இது பற்றி பேரின முனைவர் குண­தாச அம­ர­சே­கர என்ன சொல்­கிறார் தெரி­யுமா? மைத்­திரி இதற்கு சுயா­தீன உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­யத்­த­வறி விட்­டாராம். புலம்­பெயர் தமிழ் அமைப்­பு­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து அவர்­களின் கட்­ட­ளை­களை நிறை­வேற்­று­வோ­ருக்கே நிய­மனம் வழங்­கி­யுள்­ளாராம். இவர்கள் மஹிந்­த­வுக்குப் பாத­க­மா­கவும் மைத்­தி­ரிக்கும் புலம்­பெயர் தமிழ் அமைப்­பு­க­ளுக்கும் சாத­க­மா­கவும் நடந்­து­கொள்­ளு­வார்­களாம். தமி­ழ­ரோடு சிங்­க­ ள­வரும் யுத்த பாதிப்­புக்கு உள்­ளா­கி­யி­ருக்­கையில், மேற்­குலக நாடுகள் யுத்த விவ­கா­ரத்தில் தமிழ் மக்­க­ளுக்கு சாத­க­மா­கவே இலங்­கைக்கு அழுத்தம் கொடுக்­கின்­ற­னவாம். அந்­த­ வ­கையில் மைத்­திரி காணா­மல் ­போனோரின் விட­யத்தில் மேற்­கு­லக நாடு­களின் விருப்­பத்­தையே நிறை­வேற்­றி­யுள்­ளாராம்.

இதி­லொரு ஆச்­ச­ரியம் என்­ன­வென்றால், இறு­தி­க்கட்ட யுத்­தத்தில் தமிழ் மக்கள் பெரு­ ம­ளவில் பாதிக்­கப்­பட்­ட­தோடு பலர் காணா­மலும் போயுள்­ளனர் எனும் விடயம் ஏற்­றுக் கொள்­ளக்­கூ­டி­ய­தா­கவே இருக்­கி­றது.  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்­க­வேண்டும் என்றும் இவர் கூறு­வ­தே­யாகும். கடந்­த­கா­லங்­களில் குறித்த அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டுகள் மந்­த­க­ர­மா­கவே காணப்­பட்­டன. அதனால், மனித உரிமை ஆணை­யா­ளரின் இலங்­கைக்­கெ­தி­ரான அதி­ருப்­தியின் பின்பே இந்த அலு­வ­ல­கத்­துக்­கான உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர் எனவும் கூறு­கிறார்.

இவர் முன்­வைக்கும் குற்­றச்­சாட்டு என்ன தெரி­யுமா? தற்­போது நிய­மிக்­கப்­பட்­ட வர்கள் சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­ட­மாட்­டார் கள். அந்­த­வ­கையில் நாட்டைக் காட்­டிக்­கொடுக்­கவும் விட்­டுக்­கொ­டுக்­கவும் முடி­யாது என்­ப­தே­யாகும். அத்­தோடு, இவர்கள் புலம்­பெயர் தமி­ழரின் விருப்­புக்கு ஏற்­பவே விசா­ரிக்க கால­வ­ரை­யறை பெற்­றுள்­ளதால் பொய்­வி­சா­ரணை மூலம் சாட்­சி­களை உரு­வாக்­கலாம் எனவும் இவர் கூறு­கிறார். இறுதி விசா­ரணை அறிக்­கையை மேல்­நா­டு­களின் விருப்­புக்­­க­மைய உரு­வாக்கி சர்­வ­தேச ரீதியில் இலங்­கையைக் காட்டிக் கொடுத்து நாட்டை சர்­வ­தேச நீதி­மன்றம் கொண்டு சொல்­வார்கள் எனவும் கூறு­கிறார். இவர் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலை­வ­ராக தன்னைக் குறிப்­பிட்டுக் கொண்­டி­ருக்­கிறார்.

உண்­மை­யான தேசப்­பற்று எது? இலங்கை எல்லா இன, மத, மொழி மக்­க­ளுக்கும் தாய்­நா­டாகும். எனவே எல்லா மக்­க­ளையும் சம­மாக மதித்து சம உரி­மை­க­ளையும் வழங்­கு­வதே இலங்­கைக்கு வழங்­கப்­படும் உண்­மை­யான கௌர­வ­மாகும். பற்று என்­பது வேறு, வெறி என்­பது வேறு. பற்­றுள்­ளவன் இலங்­கையின் பல்­லினத் தன்­மைக்கு மாறு­செய்­ய­மாட்டான். இனப்­பெ­ருக்­கத்தால் மேலா­திக்க உயர்வுச் சிக்கல் ஏற்­பட்ட பேரி­ன­வா­தி­யிடம் பற்று இருக்­காது. வெறியே இருக்கும். பல்­லினம் வாழும் இலங் கையில், சிறு­பான்­மை­களின் தேச­உ­ரி­மையை மறுப்­பதா, பெரும்­பான்மைச் சமூ­கத் தின் தேசப்­பற்று. ஒன்­றாக வாழ­மு­டி­யாது எனும் நிலைக்கு தமி­ழரைத் தள்­ளி­யது இந்தப் பேரின தேசப்­பற்­றா­ளர்­களே! இவர்­க­ளு க்கு மட்­டுமா தேசம் சொந்தம்? தமி­ழரும் முஸ்­ லிம்­களும் காக்காய் போட்ட முள்­ளு­களா?

2014 ஆம் ஆண்டு முதல் இற்­றை­வரை இரு ஆட்சிக் காலங்­க­ளிலும் நிரா­யு­த­பா­ணி­க­ளாக முஸ்­லிம்­களை பிக்­குகள் உட்­படப் பேரி ன­வா­திகள் கொடு­மைப்­ப­டுத்­து­கி­றார்கள் வியா­பாரக் கடைகள், வீடுகள் மட்­டு­மல்ல, பள்­ளி­வா­சல்­களும் மத்­ர­ஸாக்­களும் உடைக்­ கப்­ப­டு­கின்­றன. குர்ஆன் எரிக்­கப்­ப­டு­கி­றது. போர்க்­குற்­றத்தை ஏற்­றுக்­கொண்டு பொறுப் புக்கூறலையும் ஒப்புக்கொண்டு இணை அனுசரணையையும் பெற்றுக்கொண்டு 30/1 தீர்மானத்தையும் சம்மதமாக்கிக் கொண்ட பின்பும் கூட முஸ்லிம்களுக்கெதிரான அட்டூ ழியங்கள் தொடரவே செய்கின்றன. முஸ்லிம் களுக்கு பாதுகாப்பும் இல்லை. விசாரணை யும் இல்லை. இந்நிலையில், உள்நாட்டு விசாரணையையும் தண்டனையையும் ஐ.நா. ஏற்குமா? ஆக, 30/1 எனும் ரீதியில் காணாமற் போனோர் விவரத்தை அனுப்பி வைக்கும் பொறுப்பு சர்வதேச சட்டம்மூலம் அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி உள் நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டோ, இல்லாமலோ ஹைபிரிட் நீதி மன்றத்தை அமைக்காது குறித்தபோர் வீரனை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத் தில் ஒப்படைக்கவேண்டும். 30/1 தீர்மானம் இதுவேயாகும். (திவய்ன 05.03.2018) ஆகவே, 30/1 எனும் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங் கியிருப்பதன்மூலம் சர்வதேச ரீதியில் பாரிய நெருக்கடிக்குள் சிக்கிவிட்டதாகவே கூறுகிறா ர்கள். இதனால், இலங்கைக்கு ஆதரவ ளித்த நாடுகளும் தலைகுனிய வேண்டியேற் பட்டுவிட்டது எனவும் குறிப்பிடுகிறார்கள். ரோம உடன்படிக்கைப்படி அதில் அங்கத் துவம் பெறாத நாட்டுக்கும் கூட, எதிராக யுத்தக்குற்றத்தை விசாரிக்க சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதிகா ரம் பாதுகாப்பு சபைக்கு இருக்கிறது என்கி றார்கள் சியாரா லியோன் அரசுக்கும் இதுவே தான் நிகழ்ந்ததாம்.

எனவே, ஐ.நா.வின் 30/1 தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற நீதி மன்றை நிறுவ பாதுகாப்புச் சபையால் முடி யும் என்கிறார்கள். (திவய்ன 05.03.2018) போர்க் குற்றத்தையும் பொறுப்புக்கூறலையும் இணை அனுசரணையையும் இலங் கையே ஏற்றுக்கொண்டு 30/1க்கும் இணங்கியிருப்பதால் சீனாவினதும் ரஷ்யாவினதும் வீட்டோ அதிகாரங்களையும்பெற முடியா தாம் என்கிறார்கள் சிங்களப் பேரினவாதிகள்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-10#page-4


ஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை – இந்திய அரசுகளின் துரோகம்!

விடுதலை இராசேந்திரன்

முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நடந்து 10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அய்.நா.வின் தலையீட்டுக்குப் பிறகும் இலங்கை அரசு தமிழர் உரிமைக்கான எந்த முன்னெடுப்பையும் செய்ய வில்லை. இப்போது என்ன நடக்கிறது என்பதை விளக்கி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை:

இந்திய வான்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டு அவரது புகைப்படமும் காணொளியும் வெளிவந்தபோது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர் கைதிகளின் புகைப்படத்தை வெளியிடக் கூடாதென்று இந்தியா தெரிவித்தது.

மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இதுபற்றி முறையிடப் போவதாகவும் சொன்னது. அதே சர்வதேச சட்டவிதிகள் மீறப் பட்டே ஈழத்து இசைப்பிரியாக்களும் பாலசந்திரன் களும் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

தன்னாட்டு வீரர்கள் பொருட்டு ஜெனீவா மன்றத்தில் முறையிடப் போவதாக சொல்லும் இந்திய அரசு, ஈழத் தமிழர் களின் பொருட்டோ குற்றமிழைத்த இலங்கையை ஆதரித்து நிற்கிறது. அபிநந்தன் வர்த்தமான்களுக்கு ஒரு நீதி? பாலசந்திரன்களுக்கு ஒரு நீதியா?

ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கூட்டத் தொடர் பிப்ரவரி 25 இல் தொடங்கியது, மார்ச் 25 வரை நடக்க இருந்தது. மார்ச் 20 அன்று இலங்கை மீதான விவாதம் நடக்க இருந்தது.

2015 அக்டோபரில் அமெரிக்கா வுடனும் பிற நாடுகளுடனும் சேர்ந்து சிறிலங்கா கூட்டாக முன்மொழிந்த தீர்மானம் (30/1) மனித உரிமை அமைப்பில் ஒருமனதாக நிறை வேறியது.

அத்தீர்மானம் காமன்வெல்த் உள்ளிட்ட பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடன் கூடிய சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது.

பின்னர், 2017 மார்ச் மாதம் 34/1 தீர்மானத்தில் சிறிலங்காவிற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டு அதுவும் நிறைவடைந்துவிட்டது.

2019 பிப்ரவரி 18ஆம் நாள் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கே பின்வருமாறு பேசினார்: “மனிதவுரிமை தொடர்பான குற்றம் புரிந்தவர் களுக்குப் பொது மன்னிப்பு வழங்க வழிவகை செய்யும்படியான உண்மை மற்றும் மீளிணக்க ஆணையம் அமைக்க சிறிலங்கா பணியாற்றி வருவதாகவும், தமிழர்கள் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும்” என்றும் கூறினார்.

மார்ச் 6 அன்று அதிபர் சிறிசேனா, “பழைய புண்களைத் நோண்ட தாம் விரும்பவில்லை” என்று சொல்லி இத்தீர்மானத்தை ஒரே அடியாக ஊற்றி மூடும் நோக்கில் காலநீட்டிப்பைக்கூட எதிர்த்துப் பேசியுள்ளார்.

வெளியுறவு அமைச்சகம் கால நீட்புக்கான தீர்மானத்தை தாம் முன்மொழியப் போவதாகவும் கடந்த காலத்தில் அப்படி முன்மொழிந்ததன் பயனாகத்தான் வெளிநாடுகளில் அமைதி காப்புப் பணிகளில் சிறிலங்கா படையினர் ஈடுபட முடிந்தது என்று படை வீரர்களின் பாதுகாப்பைத் தாமே உறுதி படுத்தியுள்ளோம் என்று சொல்கிறது.

மொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரானப் போர்க்குற்றங்கள், மானுட விரோதக் குற்றங்களுக்கானப் பொறுப்புகூறலில் இருந்து படைவீரர்களைப் பாதுகாப்பதில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் சிங்களப் பேரினவாத ஆற்றல்களான இராசபக்சே முகாமுக்கும் இரணில் முகாமுக்கும் இடையே நடந்துவரும் போட்டியாக இருக்கிறது

போர்க் குற்றங்களுக்காகவோ அன்றி மானுட விரோதக் குற்றங்களுக்காகவோ படைவீரர்களில் ஒருவர்கூட புலனாய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

மாறாக பொறுப்பேற்க வேண்டியவர்கள் எல்லாம் பதவி, பட்டங்கள் (சரத் பொன்சேகா, மேஜர் ஜெனரல் சவேந்திர செல்வா) பரிசளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர்.

தமிழ்ப் பகுதிகளில் இருந்து சிங்களப் படை விலக்கிக் கொள்ளப்பட வில்லை. ஆறு தமிழர்களுக்கு ஒரு சிங்களப் படை வீரர் என்ற தகவைப் பேணி வருகின்றது சிறிலங்கா அரசு. கண் துடைப்புக்காக காணாமற்போனோர் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளது சிறிலங்கா அரசு.

செம்மணிப் புதைக்குழி போல் மன்னாரிலும் ஒரு கூட்டப் புதைக்குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்படி கண்டுபிடிக்கப்படும் புதைக்குழிகளுக்கு எவரும் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. எலும்புக்கூடுகள்கூட உரிய வகையில் பாதுகாக்கப்படவும் இல்லை.

உண்மை மற்றும் நீதித் திட்டக் குழுவினர் (ITJP) அளித்த அறிக்கை தமிழ்ப் பெண்களைக் கொண்டு சிறிலங்காப் படை நடத்திய “வல்லுறவு முகாம்கள்” பற்றிய தரவுகளை 2017 பிப்ரவரி வெளியிட்டது. நாட்கணக்கில், மாதக்கணக்கில் தமிழ் மக்கள் நடத்தியப் போராட்டங்களின் அழுத்தத்தால் சிலவிடங்களில் பறிக்கப்பட்ட நிலங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் உருண்டோடிவிட்டது. பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதில் ஓரங்குலம்கூட முன்னேறாத நிலையில் மீண்டுமொரு ஈராண்டு கால அவகாசம் என்பது எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை.

இங்கு சிக்கல் காலம் போதவில்லை என்பதல்ல, நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசிடம் அரசியல் மனத்திட்பம் இல்லை என்பதே. எனவே, இலங்கைக்கு கால நீட்டிப்பு தருவதென்பது 2009 க்குப் பின்பு இலங்கை செய்துவரும் கட்டமைப்பு ரீதியான தமிழின அழிப்புக்குத் துணை செய்வதே,

இந்திய அரசின் தொடர் துரோகம்

1) 2009 க்கு முன்பு இன அழிப்புப் போருக்கு துணைநின்றது இந்திய அரசு. விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கு அடுத்தபடியாக விரும்பிய முதல் அரசு இந்திய அரசே

2) 2009 இல் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிய சுவிட்சர்லாந்து முன்மொழிவை முடக்கியதில் முதன்மைப் பங்கு வகித்தது இந்தியா. இலங்கையைப் பாராட்டி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து அகமகிழ்ந்தது.

3) 2012 இல் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பில் வேண்டுகோள்விடப்பட்ட போது இலங்கை அரசின் அனுமதியுடன் மட்டுமே ஐ.நா. அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டுமென அதில் இலங்கைக்கு ஆதரவாக மாற்றம் கொண்டு வந்தது இந்தியா.

4) 2013 இல் பன்னாட்டு மனித உரிமை சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசே தற்சார்புள்ள நம்பகமான புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது ஐ.நா. அதிகாரிகள் இலங்கைக்கு செல்ல கட்டுப்பாடற்ற அனுமதி, இலங்கை அரசின் மீதான அதிருப்தி வாசகங்கள் உள்ளிட்டவைகளை தீர்மானத்தில் இருந்து நீக்க வைத்தது இந்தியா. மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பு செப்டம்பர் 2013 இல் இலங்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை மார்ச் 2014 என மாற்றியது இந்தியா.

5) 2014 இல் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீது ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணைய அலுவலகத் தலைமையில் ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதை மாற்றி உள்நாட்டு விசாரணை என திருத்தம் கொண்டுவர முனைந்தது இந்தியா. இறுதியில் பன்னாட்டுப் புலனாய்வு கோரிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

6) 2015 அக்டோபரில் 30/1 தீர்மானத்தையும் 2017 மார்ச் 34/1 தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்து வாக்களித்தது.

2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மாணவர் போராட்டத்தின் எழுச்சியின் பயனாய் பன்னாட்டுப் புலனாய்வுக் கோரியும் அரசியல் தீர்வுக்கு ஈழத் தமிழர் களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய அரசு எள்முனையளவும் மதிக்கவில்லை.

இதில் தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதித்து வருகிறது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தமிழ்நாட்டு மக்களின் எழுச்சியின்றி அது சாத்தியமில்லை. அத்தகைய எழுச்சிதான் பதவி அரசியல் கட்சிகளை நீதிக்கான நிலையெடுப்பில் நேர்க்கோட்டில் கொண்டு வரும்.

போராட்ட நெருப்பு மட்டுமே இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியும் என்பதைக் கடந்தகால பட்டறிவும் சமகால கையறு நிலையும் நமக்கு காட்டி நிற்கிறது.

இப்போது கனடா, ஜெர்மனி, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ, பிரித்தானியா ஆகிய நாடுகளடங்கிய சிறிலங்கா தொடர்பான முதன்மைக் குழு சிறிலங்காவுக்கு மீண்டுமொருமுறை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பிப்ரவரி 13ஆம் நாள் நிலையெடுத்து அறிவித்துள்ளது.

மார்ச் 1 அன்று மேலும் ஈராண்டு காலம் நீட்டிப்புக் கொடுக்கும் பிரித்தானியாவின் தீர்மான வரைவு வெளிவந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையும் கால அவகாசம் தருவதற்கு பரிந்துரைத்துள்ளது. இத்தகைய கால நீட்டிப்பை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஏற்கவில்லை.

Posted in இந்தியாஇலங்கைவிபரணக் கட்டுரை

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply