ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு – மீண்டும் கொலைவெறித் தாக்குதல்!(44-60)

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு – மீண்டும் கொலைவெறித் தாக்குதல்! (44-60)

ஆக்கம்: தினமணி

44. மீண்டும் கொலைவெறித் தாக்குதல்!

அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், “”இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே! உங்களுக்கு ஒன்றும் நடக்காது” என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது.

25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29 பேரும் பலியெடுக்கப்பட்டனர். அதாவது அன்று இரண்டு பிரிவுகளிலும் இருந்த ஒருவரும் தப்பாது மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டனர். அன்று இரவு இப்படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மதுவும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டன. இப்படுகொலைகள் நடைபெற்ற மறுநாள் 26.7.1983 அன்று மாலை விசாரணை என்ற நாடகத்தை நடத்துவதற்குப் போலீஸôரும், நீதிபதியும், அரசாங்க உயர் அதிகாரிகளும் வந்து கொலைக்களத்தைச் சென்று பார்வையிட்டார்கள்.

சி-3 பிரிவில் இருந்த தமிழ் இளைஞர்களிடம் நடந்த சம்பவங்களை விசாரித்தார்கள். “”இனிமேல் நேற்று நடந்த மாதிரி ஒன்றும் நடக்கமாட்டாது” என்று நீதிபதி, சிறை உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாரும் கூடிப் பேசினார்கள். தேநீர் விருந்துடன் அன்றைய விசாரணை முடிவடைந்தது. வந்த அரசாங்க அதிகாரிகள் திருப்தியுடன் சென்றுவிட்டார்கள்.

நீதிபதி வருவதற்கு முன்பு சிறை அதிகாரிகள் அங்கே மிஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளை நீதிபதியிடம் ஒன்றும் கூறவேண்டாம் என்று மிரட்டினார்கள். எஞ்சியிருந்த தமிழ் இளைஞர்கள் சிறை அதிகாரிகளின் பயமுறுத்தலுக்கு அஞ்சாது படுகொலையில் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதிகளில் சிலரை அடையாளம் காட்ட முடியும் என்று விசாரணையின்போது தெரிவித்தனர்.

ஆனால் நீதிபதியோ, அதிகாரிகளோ இது விஷயமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெலிக்கடைச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய தமிழ்க் கைதிகள் கொலைகாரர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வெலிக்கடையிலிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றும்படி விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

26.7.83 அன்று இரவு வானொலியில் முதலில் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டபோது சிங்களக் கைதிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி கொண்டாடினர்.

வெலிக்கடையிலிருந்து தம்மை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்தனர். 26-ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு சப்பல் கட்டடத்தின் சி-3 பிரிவில் இருந்த எஞ்சிய தமிழ்க் கைதிகள் 28 பேரையும் ஒய்.ஓ. (வர்ன்ற்ட்ச்ன்ப் ஞச்ச்ங்ய்க்ங்ழ்ள்) கட்டடத்திற்கு மாற்றினார்கள்.

இக் கட்டடம் சப்பல் கட்டடத்திற்கு அருகாமையில் புத்த விகாரைக்குப் பின்னால் சிறைச்சாலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. ஒய்.ஓ. கட்டடம் மேல்மாடி ஒன்றைக் கொண்டுள்ளது. மேல்தளம் மண்டப வடிவில் அமைந்துள்ளது. கீழ்த்தளம் பாதுகாப்பான இரும்புக் கதவுகளுடன் கூடிய 9 அறைகளைக் கொண்டுள்ளது.

ஒய்.ஓ. கட்டடத்தில் ஏற்கெனவே 9 தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒன்பது பேரும் மேல் தட்டிற்கு மாற்றப்பட்டார்கள். மதகுருமார்கள் சிங்கராயர், சின்னராசா, ஜெயகுலராஜா, டாக்டர் ஜெயதிலகராஜா, விரிவுரையாளர் நித்தியானந்தன், காந்தீய தலைவர் எஸ்.ஏ. டேவிட், காந்தீய அமைப்புச் செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், தமிழீழ விடுதலை அணித் தலைவர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் மேல்தளத்தில் இருந்தார்கள். கீழ்த்தளத்தில் 8 அறைகளில் மும்மூன்று பேரும் ஓர் அறையில் நான்கு பேருமாக 28 தமிழ்க் கைதிகள் மாற்றப்பட்டனர்.

27.7.1983 அன்று பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தையே சிறை அதிகாரிகள் இரண்டாவது கொலைத் தாக்குதலுக்கும் தெரிந்தெடுத்தனர். ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் இப்படுகொலைச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு கைதியும் சிறையை விட்டுத் தப்பிச் செல்லும் எவரும் சுட்டுக் கொல்லப்படலாம், அல்லது கைது செய்யப்படலாம். ஊரடங்கு நேரத்தில் மரணத்திற்குப் பயந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சிக்கமாட்டார்கள் என்பது சதிகாரச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.

இரண்டாவது நாள் படுகொலைத் திட்டத்தைக் கச்சிதமாக முழுமையாக நிறைவேற்றினார்கள். சிறைக் காவலர்கள் பயங்கரமான பொய் வதந்தி ஒன்றைக் கைதிகள் மத்தியில் பரப்பினர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்த சிங்களச் சிறை அதிகாரிகளும் கைதிகளும் தமிழ்க் கைதிகளினால் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற வதந்தி மூலம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டது.

27.7.1983 அன்று மாலை 4.00 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரம். சப்பல் பகுதியில் ஏ-3 விசேஷ பிரிவில் இருந்த விசாரணைக் கைதிகளும் (சிங்களவர்) தண்டிக்கப்பட்ட கைதிகளும் (இத்தாலிய விமானமொன்றை பிணைப் பணம் கேட்டு கடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்ட சேபால ஏக்க நாயக்கா உட்பட) கத்தி, கோடாரி, பொல்லு, விறகு கட்டை, கம்பி, குத்தூசி போன்ற ஆயுதங்களுடன் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டு கொலை வெறியுடன் ஒய்.ஓ. கட்டடத்தை நோக்கி ஓடிவந்தார்கள்.

ஏ-3 பிரிவில் இருந்த இக்கைதிகள் ஒய்.ஓ. கட்டடத்திற்கு வரவேண்டுமானால் பூட்டிய பெரும் இரும்புக் கதவுகள் மூன்றையும் பூட்டிய சிறிய இரும்புக் கதவொன்றையும் உடைத்தும் சுவரொன்றை ஏறியுமே உள்வர முடியும். ஆனால் கைதிகள் இக்கதவுகளை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அக்கதவுகள் யாவும் அவர்களுக்காகத் திறந்து விடப்பட்டிருந்தன.

சுதந்திரமாக விடப்பட்ட முதல் நாள் சிங்களக் கொலைகாரர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். தாக்க வந்தவர்கள் தமது கைகளில் சாவிக்கொத்தை வைத்திருந்தார்கள். சில கதவுகள் உடைக்கப்பட்டன; சில கதவுகள் சாவிகளினால் திறக்கப்பட்டன. மீண்டும் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடியது.

முதல்நாள் படுகொலையின் பின்னர் எஞ்சிய தமிழ் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். சாவதற்கு முன் எதிர்த்துப் போராடுவதற்குத் தீர்மானித்துவிட்டனர். ஆயுதத் தாங்கிய கும்பலை எதிர்ப்பதற்கு அவர்கள் கையில் எந்தவிதக் கருவிகளும் இல்லை. போர்வையைக் கதவுக் கம்பிகளுக்குள் விட்டு, கதவைத் திறக்காதபடி போர்வையை உள்ளுக்குள் இருந்து இழுத்துப் பிடித்தனர். சிறை அறையில் பாத்திரங்களுக்குள் இருந்து சிறுநீரையும் சாப்பிடக் கொடுக்கப்பட்ட காரமான குழம்பையும் இடையிடையே கொலைகாரர்கள் மீது ஊற்றினார்கள். கொலை வெறியர்கள் கதவுக்கு அருகில் நெருங்கும்போது சாப்பாட்டுக் கோப்பைகளினால் குத்தப்பட்டார்கள்.

சிங்களக் கைதிகள் வெளியிலிருந்து நீண்ட தடிகளினாலும் கம்பிகளினாலும் குத்தினார்கள். தமிழ்ப் போராளிகள் பலருக்குக் காயம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகள் போர்வையால் கதவை இழுத்துப் பிடித்தபோது சிங்களக் காடையர் போர்வைகளைக் கோடாரிகளினால் கொத்தினார்கள். இப்படியே சிறிது நேரம் போராட்டம் நீடித்தது. இதேசமயம் மேல்மாடியிலிருந்த தமிழ்க் கைதிகள் தம்மைப் பாதுகாக்கத் தயாரானார்கள்.

மத குருமார்களுக்குப் பூசை செய்ய மேஜை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. மேல் மாடிக்குச் சுமார் 50 சிங்களக் கைதிகள் வருவதைக் கண்டதும் அவர்கள் மேசைக் கால்களை உடைத்துக் கையிலெடுத்துக் கொண்டனர். 75 வயது நிரம்பிய டாக்டர் தர்மலிங்கத்தின் கையில் கூட ஒரு மேசைக் கால் இருந்தது. “”நாங்கள் நாய் போலச் சாகக்கூடாது” என்று டாக்டர் தர்மலிங்கம் வீரமூட்டினார். சிங்களக் கைதிகள் அறைக்கதவை ஒரே அடியில் உடைத்து விட்டனர்.

டாக்டர் ராஜசுந்தரம் கதவருகே சென்று சிங்களத்தில் “”நாங்கள் சகோதரர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்னை? எங்களை ஏன் கொல்ல வருகிறீர்கள்?” என்று கூறியபொழுது அவர் வெளியே இழுக்கப்பட்டார். தலையில் பலமான ஒரு அடி. டாக்டர் ராஜசுந்தரத்தின் தலை பிளந்து ரத்தம் ஆறாக ஓடியது. அத்துடன் பல உயிர்களைக் காப்பாற்றிய உயிர் பிரிந்தது.

இடையிடையே மேலேயிருந்த தமிழ்ப் போராளிகள் கதவுக் கம்பியில் ஓங்கி அடித்துச் சத்தமெழுப்பியபோது, சிங்களக் கைதிகள் பின்வாங்கினார்கள். உண்மையில் அவர்கள் கோழைகள். வெளியிலிருந்த சிங்களக் கைதிகள் கம்பிகளினாலும், தடிகளினாலும் குத்தினார்கள். வெளியிலிருந்து கைதிகள் எறிந்த கம்பி ஒன்று தமிழ்ப் போராளிகள் வசம் கிடைத்தது. நீண்ட நேரமாக ஜீவமரணப் போராட்டம்.

இக்கொலை வெறிச் சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குப் பின்னால் அமைந்த கொழும்பு விசாரணைக் கைதிகளுக்கான சிறைச்சாலையிலிருந்து கைதிகள் சிறைப் பூட்டுகளை உடைத்துத் தப்பி ஓட முயற்சித்தபோதுதான் சிறைச்சாலை நிர்வாகம் உஷாரானது. சிங்களக் கைதிகள் ஆயுதங்களைத் தங்கள் மீதே திருப்பித் தப்பி ஓட முயற்சிக்கலாம் எனப் பயந்த நிர்வாகம் கைதிகளை அமைதிப்படுத்தத் தொடங்கியது.

தாக்குதல் தொடங்கி சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்தான் ராணுவ அதிரடிப் படையினர் உள்ளே வந்து கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். கட்டடத்திற்கு வெளியேயிருந்த சிங்களக் கைதிகள் “”கொட்டியாவ மறண்ட ஓன” “”கொட்டியாவ மறண்ட ஓன” (புலிகளைக் கொல்ல வேண்டும், புலிகளைக் கொல்ல வேண்டும்) என வெறிக்கூச்சல் எழுப்பினர். அன்று ஓர் இஸ்லாமியரால் வழிநடத்தப்பட்ட அதிரடிப் படை ஓரளவு நியாயத்துடன் நடந்து கொண்டது.

மாறாக முதல்நாள் தாக்குதலின்போது ஆயுதப் படையினர் படுகொலைக்கு உற்சாகமூட்டினர். இதில் ஒரு சிங்களக் கமாண்டரே வழி நடத்தினார்.

45. திட்டமிட்டு நிறைவேற்றிய சதி!

ராணுவத்தினரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தைத் தொடர்ந்து சிங்களக் கைதிகள் கலைந்தனர். மேல் மாடியில் ஐந்து சிங்களக் கைதிகள் கண்ணீர்ப் புகையைச் சகிக்க மாட்டாது தமிழ்ப் போராளிகள் வசம் அகப்பட்டபோது தமிழ்ப் போராளிகள் சிங்களக் கைதிகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்தனர். சிங்களக் கைதிகள் கலைந்தவுடன் தமிழ்க் கைதிகள் விழுந்துகிடந்த தமது தோழர்களை அணுகியபோது படுகாயமுற்ற பலரின் உயிர்கள் பிரிந்துவிட்டன.

படுகாயமுற்ற சிலரின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தோரை சிறை அலுவலர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர்.

படுகாயங்களுடன் யோகராசா என்ற தமிழப் போராளி கொழும்புப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்த சிங்கள வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அங்கிருந்த சிங்களத் தாதிகள் கேலி செய்தனர். இறுதியாகச் சிங்களப் பெண் டாக்டர் ஒருவர் யோகராசாவுக்குச் சிகிச்சையளித்து யோகராசாவுக்கு மறுபிறப்பு அளித்தார்.

27.7.1983 அன்று 18 தமிழ்ப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். 19 பேர் தமது பயங்கர அனுபவங்களுடன் தப்பிப் பிழைத்தனர்.

வெலிக்கடையில் கொல்லப்பட்ட ஈழப் போராளிகளின் உடல்களை அவர்களது பெற்றோர், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஈழப் போராளிகளின் உடல்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாகச் சிங்கள மண்ணில் சங்கமமானது. சிங்களப் பாசிசச் சட்டத்தின் கீழ்க் கொல்லப்படும் எந்த நபரினது உடலையும் மரண விசாரணையின்றித் தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ முடியும். இதன்மூலம் ஆயுதப்படையினர் கேட்பாரின்றித் தமிழர்களைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமது பாதுகாப்பிலிருந்த சிறைக்கைதிகளின் கொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஒரு கம்பித்துண்டைச் சிறைக் கைதிகள் வைத்திருப்பதையே மிகவும் பாரதூரமான குற்றம் எனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம் பயங்கரமானதும் கொல்லக்கூடியதுமான ஆயுதங்களைச் சிங்களக் கைதிகள் வைத்திருக்க அனுமதித்தது ஏன்?

தாக்குதல் தொடங்கியவுடன் சிறை அதிகாரிகளோ அருகிலிருந்த ராணுவத்தினரோ சிங்களக் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது உற்சாகமூட்டியது ஏன்? 23-ஆம் தேதி படுகொலைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் நீதி விசாரணை நடைபெறும் என அறிவித்தது. ஆனால் எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கப்படாததால், முதல் நாள் கொலையிலிருந்து தப்பிய தமிழ்க் கைதிகள் 27-ஆம் தேதி கொலை செய்யப்பட அனுமதிக்கப்பட்டார்கள். “”இலங்கையிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையாகும். கண்டி போகம்பர சிறைச்சாலையைவிடப் பன்மடங்கு பிரம்மாண்டமானதும், சிறந்த பாதுகாப்பும் கொண்டது. இதன் வாசலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலக வீடு உள்ளது. சிறைச்சாலையின் வெளிவாசலுக்கு வலது பக்கம் பெண்கள் சிறையுண்டு. அதற்கு முன்பக்கத்தில் சிறைச்சாலை கமிஷன் அலுவலகம் உண்டு. அதன் பின்பக்கத்தில் கொழும்பு விசாரணைக் கைதிகளின் சிறைச்சாலை.

வெலிக்கடை சிறைச்சாலையின் இடது பக்கமாகச் செல்லும் சிறிய தெருவில் ஓரங்களில் சிறை உத்தியோகஸ்தர்கள், காவலர்களின் வீடுகள் உள்ளன. இவைகளுடன் சிறைச்சாலை வாசலில் ராணுவப் பாதுகாப்பும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஒரு சிறைக்குள் இவ்வளவு பெரிய கொலைகள் நடந்தது என்றால், இது அரசின் ஆசீர்வாதத்துடன், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நடந்த கொலைகள்தான் என்பது பெரியதொரு புதிரில்லை” என்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளியான புஷ்பராஜா, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற அவரது நூலில் (பக்.371-372).

வெலிக்கடைக் கொலைச் சம்பவங்களுக்கு முந்தைய சில நாட்களில் “”தீவ்யன” போன்ற சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளில் விசேஷமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டதன் மூலமும் தமிழ்க் கைதிகளுக்கு எதிராகத் துவேஷம் சிங்களக் கைதிகள் மத்தியில் வளர்க்கப்பட்டது.

வெலிக்கடைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிங்களக் கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம், வெலிக்கடைப் படுகொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல், குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன், தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம், அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன், ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா, தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார், மயில்வாகனம் சின்னையா, சித்திரவேல் சிவானந்தராஜா, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், தம்பு கந்தையா, சின்னப்பு உதயசீலன், கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன், கிருஷ்ணபிள்ளை நாகராஜா, கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம், அம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன், பசுபதி மகேந்திரன், கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன், குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம், மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார், ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார், ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம், கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன், அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம், அந்தோணிப் பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன், வேலுப்பிள்ளை சந்திரகுமார், சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் முதலிய 35 பேர். இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு:

1. தெய்வநாயகம் பாஸ்கரன் 2. பொன்னம்பலம் தேவகுமார் 3. பொன்னையா துரைராசா 4. குத்துக்குமார் ஸ்ரீகுமார் 5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம் 6. செல்லச்சாமி குமார் 7. கந்தசாமி சர்வேஸ்வரன் 8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை 9. சிவபாலம் நீதிராஜா 10. ஞானமுத்து நவரத்தின சிங்கம் 11. கந்தையா ராஜேந்திரம் 12. டாக்டர் ராஜசுந்தரம் 13. சோமசுந்தரம் மனோரஞ்சன் 14. ஆறுமுகம் சேயோன் 15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன் 16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம் 17. செல்லப்பா இராஜரட்னம் 18. குமாரசாமி கணேசலிங்கன்.

46. ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்கள்!

1983 ஜனவரியில் இருந்தே தொடர்ந்து ராணுவ பயங்கரவாத நிலைமைகள் யாழ் பகுதியில் நிலவியது. ராணுவ ஆட்சி போன்ற மூர்க்கத்தனமான கொடுமையை இலங்கைத் தமிழர்கள் மீது ஜனநாயகத்தின் பேரால் அரசு நடத்தியது.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இதன் உச்ச கட்டம் படிப்படியாக வளர்கிறது. வவுனியாவில் இருந்த, 1977-லிருந்து 1981 வரை நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள் அனைவரையும் காந்தீயம் நிறுவனம் புனரமைப்புச் செய்திருந்தது. அதே இடத்தில் மீண்டும் ராணுவம் ஒரு தாக்குதலைத் தொடுக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான அகதிகள் பாதிக்கப்பட்டனர்.

மே மாதம் 18-ஆம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் வெளி உலகோடு துண்டிக்கப்பட்டுப் பத்திரிகைத் தணிக்கை அமல் படுத்தப்பட்டது.

ராணுவத்தினரின் அட்டகாசம் வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கவே இப்பத்திரிகைத் தணிக்கை முறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் ராணுவ மிருகங்கள் மூன்று தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்று கற்பழித்து எறிந்து விடுகிறார்கள். தமிழ் மக்கள் ஆவேசமடைகிறார்கள். ஆத்திரம் அடைந்த விடுதலைப் புலிகள் ராணுவத்தினருடன் மோதி ராணுவ டிரக்கை குண்டு வீசி அழிக்கிறார்கள். 13 ராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். ராணுவம் மூர்க்கத்தனமான ஆத்திரத்துடன் வெறி பிடித்து அலைந்தனர்.

இறந்த ராணுவச் சடலங்கள் ஜூலை 24-ஆம் தேதி கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டன. ராணுவத்தினரின் கோபம் முதலில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு எதிராகத் திரும்பியது. அவருடைய கார் தாக்கப்பட்டது. மயானத்திற்குச் செல்லமுடியாமல் அவர் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டார். வெறி அடங்காத ராணுவத்தினர் சிங்களவர்களுடன் சேர்ந்துகொண்டு கலவரத்தில் இறங்கினர்.

முதலில் தமிழர் அதிகம் வசிக்கின்ற பதுளைப் பகுதியில் அட்டூழியங்கள் துவங்கின. பின் திம்பிரிகசாயாப் பகுதிக்குப் பரவியது. கண்ணில் படும் தமிழர்கள் அனைவரையும் சிங்களவர் தாக்கினர். பொருள்களைக் கொள்ளையடித்தனர். உடமைகளுக்குத் தீ வைத்தனர்.

இக்கலவர நெருப்பு, பின்னர் வெள்ளவத்தை, தெகிவளை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி போன்ற தமிழர் பகுதிகளுக்கும் பரவியது.

அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அது வளர்ந்தது. இந்த நேரத்தில்தான் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலைகள் – நாகரிக மனிதச் சமூகம் இதுவரை கேள்விப்படாத வகையில் நடந்தன. இதைத் தொடர்ந்து இரு வார காலக் கலவரங்களின் போது கொழும்பில் மட்டுமே ஏறத்தாழ 2000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

ஒரு லட்சம் மக்களுக்கு மேலானவர்கள் வீடிழந்தனர். அகதிகள் நிலைக்கு ஆளாகி “முகாம்’களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களின் உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. வியாபாரத் தொழில் நிறுவனங்கள் தகர்க்கப்பட்டன.

ராணுவத்தின் ஆதரவுடன் சிங்களக் குண்டர்கள் மேற்கொண்ட அட்டூழியம் கண்டி, நுவரேலியா, சந்தைப் பகுதி, மாத்தளை ஆகிய இடங்களுக்கும் பரவியது. அங்கும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன.

அனைத்துப் பிரதான சாலைப் போக்குவரத்துகளும், தமிழர்களை சோதனை இடுவதற்காகத் தடுத்து நிறுத்தப்பட்டன.

எல்லா இடங்களிலும் தமிழர்கள் ஊரடங்கு சட்டத்தின்போது வீடுகளுக்குள்ளேயே தங்கி இருந்தார்கள். ஊரடங்குச் சட்டம் நீடித்த நேரம் சிங்கள வெறிக் கூட்டத்திற்குச் சரியான வாய்ப்பாக இருந்தது.

அப்போதுதான் உச்சகட்டமாக அட்டூழியம் நிகழ்த்தப்பட்டது. திருகோணமலைப் பகுதி இருதடவை கடற்படை ராணுவத்தின் கொள்ளைக்கு ஆட்பட்டது.

அவர்கள் தங்கள் முகாம்களை விட்டு வெளியேறி அட்டூழியத்தில் இறங்கினர். கலவரம் நீடித்த இருவார காலத்தின் இறுதி நாட்களில் தமிழர்களில் அரசு ஊழியர்களாக இருந்த பலர் அலுவலகத்திற்கு வரவில்லை. நிர்வாகம் ஸ்தம்பித்தது. எல்லாத் தமிழர்களுமே பாதிக்கப்பட்டனர்.

துணி, திரைப்பட விநியோகம், போக்குவரத்து போன்றவற்றில் முதன்மையாக இருந்து வந்த குணரத்தினம் என்பவரும், செயின்ட் அந்தோணி இரும்பு எஃகு வியாபாரம், சின்டெக்ஸ் மற்றும் ஆசியன் காட்டன் மில்ஸ் ஆகியவற்றின் உரிமையாளரான ஞானம் (இதில் 10,000 பேர் வேலை செய்த சின்டெக்ஸ் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டு திரும்பவும் எடுத்து நடத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டது) என்பவரும், அலங்காரப் பொருள் உற்பத்தியிலும், இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்திலும் தமிழர்களில் முதன்மையான வருமான இராஜமகேந்திர மகாராஜா ஆகியோருடன் 50 ஆண்டுகளாகக் காலூன்றி வளர்ந்த ஐதராமனிஸ், ஜெபர்ஜீஸ், சிந்தி, போக்ரா வியாபாரிகளும் கூட சுமார் 800 கோடி ரூபாய்க்கு (அன்றைய மதிப்பில்) மேல் நஷ்டம் அடையும் வகையில் கலவரம் உச்ச நிலையில் இருந்தது.

மேற்கூறிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டதால் 1.5 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு இழந்தனர். அரசு மேற்பார்வையிலேயே கலவரம் தூண்டிவிடப்பட்ட போதிலும், ராணுவத்தினர் மீது தன் கட்டுப்பாட்டை ஜனாதிபதி இழந்தார். தன் சொந்தப் பாதுகாப்பிற்கே விசுவாச ராணுவ உயர் அதிகாரிகளிடம் தஞ்சம் அடைந்தார்.

அந்த அளவிற்கு அரசும், கட்சிகளும் தூண்டிவிட்ட இனவெறி வாதம் ராணுவத்தினரிடம் ஊறிப் போய் இருந்தது.

வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தமிழர்களுக்குச் சொந்தமான கடை, வீடுகள், தொழிற்சாலைகளின் முகவரியைத் தேடித்தேடி இனவெறிக் கும்பல் அலைந்தது.

ராணுவம் தங்களுக்குள் திட்டமிட்டு பல குழுக்களாகப் பிரிந்து தமிழர் பகுதிகளைத் தேர்ந்து எடுத்துக் கொடூரமான தாக்குதல் நடத்தியது.

அதேநேரத்தில் சிங்களக் கூட்டமும், கலக ராணுவமும் பிக்குப் பெரமுனவைச் சேர்ந்த தீவிர புத்தமத வெறியர்களால் வழிகாட்டப்பட்டுச் செயல்பட்டனர்.

47. மட்டுநகர் சிறையுடைப்பு!

தீக்கிரையாக்கப்பட்ட தமிழர் கடைகளில் ஒன்று… தமிழர்களின் கடைகளையும் தொழிற்சாலைகளையும் அழிப்பதற்கு அடையாளம் காட்டியவரும், புத்தமத வெறியரும் தொழிற்சங்கத் தலைவருமான சிறில் மத்தியூதான் ராணுவ-சிங்கள வெறிக் கும்பலின் தமிழர் அழித்தொழிப்பு திட்டங்களின் “மூளை’ எனப்படுபவர்.

இந்த மத்தியூ பாராளுமன்றத்தில் புத்தமதப் பலாத்காரத்தை நியாயப்படுத்திப் பேசினவர் ஆவார்.

“”சிங்களவர்கள் பல வருடங்களாகவே தளர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பான்மையான இனமாக இருக்கும்போது அவர்கள் ஏன் ஆசியாவிலும் பெரும்பான்மையராக இருக்கக் கூடாது” என்று கூச்சலிட்டார்.

சிங்கள இனவாத வெறியுடன் கூடவே பாசிச ஜெயவர்த்தனா அரசாங்கம் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தொடுத்த அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கடுமையான பலாத்காரத்துடன் ஒடுக்கியது. அதேசமயம் சிங்களவர்களின் அட்டூழியத்தைக் கண்மூடி மெüனியாகவே எதிர்கொண்டது.

தமிழர் வாழும் பகுதியில் பீரங்கி வண்டிகளைத் தெருக்களில் நடமாடவிட்டும், ஹெலிகாப்டர்களைத் தாழ்வாகப் பறக்கவிட்டும் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கொழும்புக்கு வெளியே பதின்மூன்று மாவட்டங்களில் ராணுவ சிவிலிய நடவடிக்கைகளை ஒன்றிணைக்க 10 மூத்த ராணுவ அதிகாரிகளையும், மூன்று உயர்மட்ட அதிகாரிகளையும் அரசு நியமித்தது.

இலங்கையின் 13,000 பேர் கொண்ட இலங்கை ராணுவத்தில் பாதிக்கு மேல் யாழ்ப்பாணப் பகுதியில் மட்டுமே குவிக்கப்பட்டு தொடர்ந்து அங்கு நிற்க வைக்கக்கூடிய பகுதியாக அது மாற்றப்பட்டது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ராணுவ ஆட்சியாலும், நெருக்கடி நிலை சட்டங்களாலும் பலப்படுத்தப்பட்டதன் விளைவாக எவ்வித பின்விளைவு பற்றியும் பயமின்றி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்துவதில் சர்வ சுதந்திரமாகச் செயல்பட ராணுவம் அனுமதிக்கப்பட்டது.

மேலும் பிரிவினை கோரும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்து ஓர் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இக்கலவரத்தின் உச்சகட்டத்தில் அரசாங்கம் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் மக்களின் சடலங்களை, அவர்கள் யார் என்ற விவரம் தெரிவிக்காமல் புதைக்கவும், எரிக்கவும் அனுமதித்தது. லண்டனில் உள்ள சர்வதேச மனித உரிமைக் கழகமானது, இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பற்றி கருத்துக் கூறுகையில், இலங்கையில் செய்யப்பட்டிருக்கும் அரசியல் சட்டத் திருத்தம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சட்டங்களைக் காட்டிலும் மிக மோசமான சட்டமாகும் என்று கூறுகிறது.

இச்சட்டத்தின்படி விசாரணை இன்றி 18 மாதம் சிறை வைக்கவும், விருப்பப்படி கைது செய்யவும், சந்தேகப்படும் யாரையும் மிக மோசமான சித்திரவதை வழிமுறைகளில் விசாரணை செய்யவும், நடைமுறையில் வரம்பில்லாத அதிகாரத்தை ராணுவத்திற்கு அளிக்கிறது.

இவ்வளவு வன்முறைகளும், கொலைகளும், கொள்ளைகளும் நடத்தப்பட்ட ஜூலைக் கலவரம் சிங்களச் சிப்பாய்கள் 20 பேர் கொல்லப்பட்டதன் தொடர்நிகழ்வு என்று ஜெயவர்த்தன அரசும் வேறு சிலரும் பிரசாரம் செய்தார்கள்.

ஆனால், தன்னை மறந்த நிலையில் ஜெயவர்த்தன ஜூலைக் கலவரத்தின் இரு வாரங்கள் கழித்து, பி.பி.சி நிருபருக்கு அளித்த பேட்டியில், “”இவ்வன்முறை தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜூலை முதல் வாரத்தையடுத்து, கலவரத்தைத் தூண்டும் நோக்கில் தமிழருக்கு எதிரான உணர்வுடன் ராணுவம் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டது. இந்தச் செய்தியை வேண்டுமென்றே மறைத்துவிட்டார்கள்” என்று கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

ஏககாலத்தில், லண்டனில் இருந்து வெளியாகும் “கார்டியன்’ இதழ், சிப்பாய்களின் கட்டுக்கடங்காத செயல் என்னவென்று ஏராளமான படங்களுடன் வெளியிட்ட செய்தி என்ன தெரியுமா?

பேருந்து நிலையம் சென்று 18-20 வயதுள்ள மாணவர்களை வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக்கொன்றனர். பின்னர் ஒரு கிராமத்தில் நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தினர். அதன்பின்னர், அவர்கள் அனைவரும் முகாம் செல்லுமாறு உத்திரவு இடப்பட்டது.

பின்னர், அதே சிப்பாய்கள் சாதாரண உடையில் திரும்பவந்து ஒவ்வொரு வீடுகளிலும் நுழைந்து சுட்டுத்தள்ளிக் கொண்டே, கையில் கிடைத்தப் பொருள்களையெல்லாம் வாகனத்தில் எடுத்துப்போட்டுக்கொண்டே சென்றனர்.

இப்படிப்பட்ட வன்கொடுமை நடைபெற்ற பின்னர்தான் போராளிகள் இந்த இரக்கமற்ற சிப்பாய்களுக்குத் தண்டனை அளித்தனர் என்றும் “கார்டியன்’ செய்தி வெளியிட்டிருந்தது(தகவல்: கு.வெ.கி.ஆசான், “ஈழ விடுதலைப் போர்’ 1948-1996).

இப்படுகொலைகள் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் மற்றும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் இருவரும் “இலங்கையின் இனப்படுகொலைகள்’ என்னும் தலைப்பில் கடிதம் எழுதியதுடன், அதை தகவல் தொடர்புச் சாதனங்களுக்கும் அளித்தனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் உயிர் தப்பிய 19 தமிழ் இளைஞர்களும் நிர்மலா நித்தியானந்தனும் ஜூலை 27-ஆம் தேதி இரவு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். வெலிக்கடைத் தாக்குதலின்போது படுகாயமுற்றிருந்த இக்கைதிகள் ராணுவ வீரர்களினால் பஸ்ஸிற்குள் குப்புறப்படுத்திருக்கும்படிக் கட்டளையிடப்பட்டனர். அங்கு காவலுக்கு நின்ற ராணுவ வீரர்கள் இழிவான வார்த்தைகளினால் ஈழப் போராளிகளை ஏசியதுடன் அவர்களைத் தாக்கியும் துன்புறுத்தினர்.

வெறும் தண்ணீர்கூடக் கொடுக்கப்படாது அன்றிரவு முழுவதும் அங்கு வைத்திருக்கப்பட்ட இக் கைதிகள் மறுநாள் 28-ஆம் தேதி காலை மட்டுநகர்ச் சிறைச்சாலைக்கு விமானப்படை விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டனர். விமானத்தில்கூட காயமுற்றிருந்த இக்கைதிகள் கீழே குனிந்தபடி இருக்குமாறு பணிக்கப்பட்டனர்.

ஜூலை 28-ஆம் தேதியும் அதற்குப் பின்னரும் சிங்களப் பிரதேசங்களிலிருந்த ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 25 பேரும் மட்டுநகர்ச் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்போராளிகள் மட்டுநகர்ச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சமயம் அங்குள்ள புத்தவிகாரையில் கைக்குண்டுகள், பெட்ரோல், டயர் போன்றவை அங்கு முகாமிட்டிருந்த ராணுவத்தினரால் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இவை மட்டுநகர்ச் சிறைச்சாலை உட்பட மட்டுநகரை எரிப்பதற்காகச் சேமிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுநகர்ச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை மீண்டும் கொழும்பிற்கு மாற்ற சில நாள்களுக்குப்பின் அரசு முயற்சியெடுத்தது. சிங்கள அரசின் இம்முயற்சியை ஈழப் போராளிகள் செப்டம்பர் 23-ஆம் தேதி முறியடித்தனர்.

இவர்கள் விடுதலைப் போராட்டத்தை வெளியே தொடர்வதற்காகவும் இனவெறி அரசு தம்மைக் கொல்வதற்கான முயற்சியைத் தவிடுபொடியாக்கும் எண்ணத்துடனும் செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு சுமார் 7.45 மணியளவில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மக்கள் விடுதலைப் படையினரின் முன்முயற்சியால் மட்டுநகர்ச் சிறையைத் தகர்த்துப் புதிய வரலாறு படைத்தனர்.

மொத்தம் சுமார் 60 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுநகர்ச் சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்து விடுதலைப் போராட்டத்தை மேலும் ஊக்கத்துடன் தொடர்ந்தனர். (சிறையில் இருந்த பிற விடுதலைக் குழுக்களும் இதில் இணைந்து பங்கெடுத்தனர் என்றும் கூறப்படுகிறது.) மட்டுநகர்ச் சிறையுடைப்புச் சம்பவமானது உலகின் சமீபகால வரலாற்றில் மிகப்பெரியது என்பதுடன், எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் கைது செய்யப்படாது தப்பிவிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.*

* -ஸ்ரீலங்கா, வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்-ஈழ மக்கள் செய்தி தொடர்பு வெளியீட்டிலிருந்து.

48. நிர்மலா சிறைமீட்பு!

தமிழீழப் புரட்சிகரப் போராளியான நிர்மலா 1982-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தனது கணவர் நித்யானந்தனுடன் கைது செய்யப்பட்டார். அவர்மீது சாட்டப்பட்ட குற்றம்:

சாவகச்சேரி போலீஸ் நிலையத்தைத் தாக்கிக் காயமுற்ற ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் புகலிடம் கொடுத்தார். விடுதலைப் போராளிகளைப் பற்றிய தகவல் அறிந்தும் போலீஸôருக்குத் தெரிவிக்கவில்லை என்பதாகும்.

இவர் குருநகரின் ராணுவ முகாமில் சில காலமும் வெலிக்கடைச் சிறையிலுமாக வைக்கப்பட்டார். வெலிக்கடைச் சிறையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் படுகொலை செய்யப்பட்டபோது இவரின் உயிருக்கும் உலை வைக்கப்பட்டது. அந்தச் சதியிலிருந்து நிர்மலா தப்பினார். பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

1983 செப்டம்பர் 23-ஆம் தேதி ஈழப் போராட்ட வீரர்கள் மட்டுநகர் சிறைச்சாலையிலிருந்து தப்பி வெளியேறியபோது இவர் தப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்தத் தப்பித்தல் நடந்த பிறகு ராணுவத்தின் அதிரடிப் படைப்பிரிவினர் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பாதுகாப்புக்கென நிரந்தரமாக்கப்பட்டனர்.

நிர்மலாவைத் தப்பிப்பது என்பது சாத்தியமில்லை என்று அனைவராலும் நம்பப்பட்டது. ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் துணிகரமான சிறை மீட்பு திட்டம் ஒன்றினைத் தீட்டினர்.

1984 ஜூன் 15-இல் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கெனக் கொழும்பிற்கு நிர்மலாவைக் கொண்டு செல்ல அரசு முடிவு செய்திருந்தது. அதற்கு முன்னதாக நிர்மலாவை மீட்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் ஜூன் 10-ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் அதி நவீன ரக ஆயுதங்களுடன் மட்டக்களப்புச் சிறைச்சாலையை முற்றுகையிட்டனர். வீரர்கள் அனைவரும் சிறைக்காவலாளி உடையில் இருந்தனர்.

சிறைச்சாலைக் கதவைத் தட்டி, கொழும்பிலிருந்து சில கைதிகளை அடைப்பதற்காகக் கொண்டு வந்திருப்பதாகக் கூறி கதவைத் திறக்கச் சொன்னார்கள். முதலாவது கதவு ஒருக்களித்தவாறு திறக்கப்பட, விடுதலைப் புலிகள் உள்ளே நுழைவதற்குள் அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று சிறை அதிகாரிகள் உணர்ந்து உஷாராயினர். விரைவாகக் கதவை மூடவும் முற்பட்டனர்.

சிறைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வது நல்லதல்ல, பாதுகாப்பானதும் அல்ல என்ற முடிவுக்கிணங்க விடுதலைப் புலிகள் துப்பாக்கியின் துணையை நாடவில்லை. மாறாக, சற்றும் தாமதிக்காது அதிரடி முறையில் கைகளால் மட்டுமே தாக்குதலைத் தொடுத்தனர். சிறை அதிகாரிகளை மடக்கினர். இந்த மோதலில் இரண்டு சிறை அதிகாரிகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

சிறைச்சாலைக்குள்ளேயும் பலத்த பாதுகாப்பு இருந்தது. இரண்டாவது-இரும்புக் கதவுக்குரிய சாவியைச் சிறை அதிகாரிகளிடமிருந்து பெறமுடியவில்லை. இரும்புக்கதவை உடைத்தே திறந்தனர். விடுதலைப்புலிகளின் தாக்குதலை அறிந்த காவலாளிகள் பலர் எதிர்த்துப் போராடாது தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்தனர். இரும்புக் கதவை உடைத்துத் திறந்ததும் பெண்களுக்கான சிறைக் கதவையும் உடைத்தனர்.

நிர்மலா இருந்த சிறைக்கதவுச் சாவியை வைத்திருந்தவர் ஓடி ஒளிந்து விட்டதால் அந்தக் கதவையும் உடைத்தே திறந்தனர். வெளியே ஏதோ நடக்கிறது என்பதைச் சூசகமாக உணர்ந்து கொண்ட நிர்மலா தனது அறையின் கதவு உடைபடுவதை அறிந்து தயார் நிலையில் இருந்தார். கொரில்லா வீரர்கள் சிறைக்கதவை உடைத்ததும், தாமதம் ஏதும் செய்யாது சில மணித்துளிகளில் அங்கிருந்து வீரர்கள் யாவரும் வெளியேறினர். நிர்மலா நித்யானந்தன் சிறை மீட்கப்பட்டதும் அவரையும் கணவர் நித்யானந்தனையும் அதி வேகப் படகு மூலம் தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், பேபி சுப்ரமணியம், ரகு உள்ளிட்டோர் நிர்மலாவை புலவர் புலமைப்பித்தன் இல்லத்தில் தங்க வைத்தனர்.

இந்தச் சிறை மீட்புப்பணி தமிழீழ விடுதலைப்புலிகளின் புரட்சிகரமான ஆயுதப் போராட்ட வரலாற்றில் சிறப்பான அத்தியாயமாயிற்று!

49. இலங்கை – இங்கிலாந்து – இஸ்ரேல்

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேய ஆட்சியின்போதே, “தமது ஆட்சிக்குரிய பகுதிகளின் பாதுகாப்பு’ என்று கூறி அந்நாட்டுக்கு ஏராளமான ராணுவ உதவிகளை இங்கிலாந்து அளித்தது. இவ்வகை ராணுவ உதவி என்பது வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் ஆகும். இவற்றைக் கையாள இலங்கையின் அன்றைய ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க இலங்கை – இங்கிலாந்து இடையே ஏற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் வகை செய்தது. இந்த ஒப்பந்தம் காரணமாகவே 1955 வரை, இலங்கை ஐ.நா.வில் ஓர் உறுப்பு நாடாக சேர முடியாமல் சோவியத் நாடு தனது “வீடோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தது.

இலங்கை – இங்கிலாந்து பாதுகாப்பு ஒப்பந்தப்படி திருகோணமலையில் கப்பற்படை, கட்டுநாயக்காவில் விமானப்படை என இங்கிலாந்து ராணுவத் தளங்கள் அமைய வழியேற்பட்டது. (பெüத்த சிங்களவரும் சிறுபான்மையினரும் – சந்தியாபிள்ளை கீத பொன்கலன் பக். 185) இந்த ஒப்பந்தத்தின் பலன், இலங்கை ராணுவத்தினருக்கு தொடர்பயிற்சி அளிக்கப்பட்டதுதான். 1983 வன்முறையின்போது இலங்கை அரசு இங்கிலாந்து, அமெரிக்கா, பங்களாதேசம் உள்ளிட்ட நாடுகளிடம் ராணுவ உதவிகளைக் கேட்டபோது பெரும் சர்ச்சை எழுந்தது. இங்கிலாந்து அரசு அந்தக் கோரிக்கையை மறுத்த அதே நேரத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதை அந்த நாட்டின் வெளி விவகாரத்துறை ஒப்புக் கொண்டது.

எவ்வித ஆயுத உதவியும் செய்யவில்லை என்று இங்கிலாந்து கூறி வந்த போதிலும் இலங்கைக்குத் தேவையான ராணுவத் தளவாடங்கள் இங்கிலாந்திலிருந்துதான் வந்தன. 1977-இல், செவர்டன் கம்பெனி என்ற ராணுவத் தளவாட நிறுவனம் கடற்காவலுக்கென 5 விசைப்படகுகளை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இரு அரசுகளிடையேயும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஒன்று 1980-இல் மேற்கொள்ளப்பட்டு, ராணுவத் தளவாடங்கள் விற்பனைக்கு உறுதி செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் அந்நிய நாடுகளுக்கு ஆயுத விற்பனையைச் செய்ய முடியாது. ஆயுதங்கள் விற்பதானால், அந்நிய நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய, வர்த்தக இலாகாவின் அனுமதியைப் பெற வேண்டும். இந்த அனுமதியின் காலம் ஓராண்டாகும்.

அரசு கனரக, ராணுவத் தளவாடங்கள் ஆலை இதே போன்று ஏற்றுமதியைச் செய்ய வேண்டுமானால், வெளி விவகார இலாகா அனுமதிவேண்டும். அதுமட்டுமன்றி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியல் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்படும். இது நடைமுறை. ஆனால் இங்கிலாந்திலிருந்து பல தடவை ராணுவத் தளவாடங்கள் இலங்கை வந்து சேர்ந்திருக்கின்றன.

இஸ்ரேலிய நாட்டுடன் இலங்கைக்கு சுமுகமான உறவில்லாத நிலை. பாலஸ்தீனிய அரசு உரிமை சார்ந்த ஐ.நா.வின் 242-வது தீர்மானத்தின்படி, ஒத்துப் போகாத இஸ்ரேலுடன் உலக நாடுகள் பலவும் தூதரக உறவைத் துண்டித்தன. அந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று.

1983-ஆம் ஆண்டில், இலங்கை அரசு கேட்ட இடங்களில் இருந்து ராணுவ உதவி கிடைக்கவில்லை. இதனையொட்டி, இஸ்ரேலிய உதவியும் நாடப்பட்டது என்று இலங்கைப் பத்திரிகைகளில் செய்தி வெளியாயின. உதவி கோரி அமைச்சரவைச் செயலர் இஸ்ரேலுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக இலங்கை – இஸ்ரேல் உடன்பாடு ஏற்பட அமெரிக்காவின் ராணுவ ஜெனரல் வெர்னன் வால்டர்ஸ் பெரிதும் உதவினார்.

1984-இல், அமெரிக்கத் தூதுவர் அலுவலகத்தில் “இஸ்ரேலிய நலன் பிரிவு’ ஒன்று தொடங்கப்பட்டது. ஆசியப் பகுதியில் இஸ்ரேலிய நலப் பணியாளர் பொறுப்பு வகித்த டேவிட் மத்நாய் இலங்கைப் பிரிவின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

இஸ்ரேலிய ராணுவப் பிரிவினர் இலங்கை வந்து ராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளிக்க ஆரம்பித்தனர். இந்தச் செயல் முஸ்லிம்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. மட்டக்களப்பு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்தவர்கள், அமைதியான முறையில் இஸ்ரேலியர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமுற்றனர். தொடர்ந்து அவசர கால ஒழுங்குவிதி 14(ஐஐ) பயன்படுத்தப்பட்டது. பத்திரிகைத் தணிக்கையும் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் இஸ்ரேலியரின் வருகை – ராணுவத்தினருக்கான பயிற்சி தொடர்பான செய்திகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டக் குழு கூடியபோது அதில் அங்கம் வகித்த முஸ்லிம் தலைவர்கள், இஸ்ரேலிய ராணுவப் பயிற்சிக்கும், மட்டக்களப்பில் ஏற்பட்ட மோதலுக்கும் கடும் கண்டனம் எழுப்பினர். “முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் முடிவை ஆதரிக்க வேண்டும் – ஆதரிக்க விருப்பமில்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம்’ என்று குடியரசுத் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன எச்சரித்தார்.

அடுத்த சில நாட்களிலேயே இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லலித் அதுலத் முதலி, “ராணுவத்தினருக்கு இஸ்ரேலியரின் ஷின்பெய்த் என்னும் நிறுவனம் பயிற்சியளிப்பது உண்மைதான்’ என ஒத்துக்கொண்டார். இஸ்ரேலிய நலன்பிரிவின் கொழும்பு பொறுப்பை கூடுதலாக கவனித்த டேவிட் மத்நாய் விடுவிக்கப்பட்டு, நிரந்தர அதிகாரியாக அக்ரயில் கார்பி’ என்பார் பொறுப்பேற்றார்.

இஸ்ரேலியரின் இலங்கை வருகை “விசா’ எதுவுமின்றி அனுமதிக்கப்பட்டது. இவர்களின் வருகையும், பயிற்சியும் இலங்கை ராணுவத்தினரின் செயல்பாடுகளில் நன்கு வெளிப்பட்டது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் இஸ்ரேலியரின் வெஸ்ட்பாங்க் தாக்குதலை அவை ஒத்திருந்தன.

தொடர்ச்சியான ஒரு மணி நேர ஊரங்குச் சட்டம் அமல் செய்யப்பட்டது. இளைஞர்கள் கைது, தொடர்ந்து விசாரணைக்காக பெற்றோர்கள் பிள்ளைகளை ஒப்படைக்கும் உத்தரவு அறிமுகம் செய்யப்பட்டது. பொய்வாக்குறுதிகள், சிறையில் தள்ளுதல், மோசமான வழிமுறைகளைப் பயன்படுத்தி விசாரணை, கடற்கரை கிராமங்களில் குண்டுவீச்சு, கிராமங்கள் தீக்கிரை-என எல்லாமே இஸ்ரேலிய உத்திபடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

50: இலங்கையின் சீன, பாகிஸ்தான் தொடர்புகள்!

இரண்டாம் உலக யுத்தத்தின்போது இங்கிலாந்தின் யுத்தக் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டன. இது உலகம் அறிந்த செய்தி. காரணம் இதன் துறைமுகத்தின் பரப்பளவு ஆழம். இதன் பிறகு வல்லரசுகளின் கவனம் திருகோணமலை துறைமுகத்தின்மீது விழுந்தது. இதில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. இதன் வெளிப்பாடு 1980-இல் அமெரிக்கத் தளபதிகள் கூட்டமைப்பு நடத்தும் ஙண்ப்ண்ற்ஹழ்ஹ் டர்ள்ற்ன்ழ்ங் எனும் சஞ்சிகையில் எழுதப்பட்ட கட்டுரை மூலம் தெரிய வந்தது.

திருகோணமலை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்று’ என்று ஜெனரல் டேவிட் சி.ஜோன்ஸ் (மநஅஊ) குறிப்பிட்டதை உலகம் கூர்ந்து கவனித்தது. ஆனால் “”இந்த வரி தவறுதலாக இடம் பெற்றுவிட்டது-இது ஒரு பிழை” என்று அந்த சஞ்சிகை பதில் கூறியது. மழுப்பலாக பதில் கூறினாலும் அது அமெரிக்காவின் விருப்பம் என்பது வெளிப்பட்டது. 1981-இல் அந்நியப் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தங்குவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் போர்க்கப்பல்களின் பல்வேறு காரணங்களைக் கூறி திருகோணமலை துறைமுகம் வருவதும் அதிகரித்தது.

1983-இல் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் காஸ்பர் வெய்ன்பேர்கர் கொழும்பு வருகை தந்தார். “தேநீர் விருந்து மட்டுமே. அதுவும் இந்த வழியாகப் போகும் வழியில் சிறு தங்கல்’ என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மை அவ்வாறிருக்க வேண்டுமென்பதில்லை.

ஏனென்றால் காஸ்பர் வருகையைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ ஜெனரல் வெர்னர் வால்டர்ஸ் வருகையும் அமைந்தது. அப்போதும் ராணுவ ஒப்பந்தம் ஏதுமில்லை என்றுதான் மறுக்கப்பட்டது. இந்த மறுப்புகளுக்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுக் குழுத் தலைவர் ஜோசப் ஆட்போ தலைமையில் ஆறு பேர் கொழும்பு வந்தனர். அவர்கள் “”லங்கையின் ராணுவ பாதுகாப்புக்கு 3.5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க சிபாரிசு செய்வோம். இலங்கை கடற்படை வசதி பெறுவதையும், தேவையான பயிற்சி பெறுவதையும் உறுதி செய்வோம்” என்றும் அறிவித்தனர்.

திருகோணமலை துறைமுகத்தையொட்டி, ராணுவப் பயன்பாட்டுக்காக 10 ஆயிரம் டன் பெட்ரோல் சேமித்து வைக்கும் 100 கிடங்குகள் உள்ளன. 1920-இல் இங்கிலாந்து இந்த கிடங்குகளைக் கட்டியது. தேசிய மயமாக்கப்பட்ட இந்த டாங்குகள் குத்தகைக்கு விடப்பட்டன. இதில் இந்தியாவுக்கு சில டாங்குகள் உண்டு. அமெரிக்காவும் இந்த டாங்குகளைப் பயன்படுத்த விரும்புகிறது. திருகோணமலை எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைக்கென அமெரிக்கா நிறுவனத்திடம் 2500 ஏக்கர் வழங்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிடம் போட்ட 1951 மற்றும் 1985 ஒப்பந்தங்கள் உள்ளன. இதற்காக இலங்கையில் மேற்குக் கரையோரமுள்ள கிராமங்கள் நூற்றுக்கணக்கில் காலி செய்து தரப்பட்டுள்ளன. இந்த ஒலிபரப்பு மூலம் செயற்கைக்கோள் சாதனங்களுடனும் தொடர்பு கொள்ளலாம். நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள சாதனங்களுக்கும் தகவல் அனுப்பலாம்; மறிக்கலாம்.

பாகிஸ்தான் இலங்கைத் தொடர்பு என்பது, பங்களாதேஷ் பிரச்னையை ஒட்டி உருவானது. இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில், இந்திய வான் எல்லை வழியாக பாக் விமானங்கள் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது வருவாயைக் காரணம் காட்டி பாகிஸ்தானின் விமானங்கள், இலங்கையின் விமான நிலைய வசதிகளை பயன்படுத்திக் கொண்டன.

இந்தியாவுடன் நட்பு நாடு என்று சொல்லிக் கொண்ட திருமதி பண்டாரநாயக்காவின் செயல் சந்தேகங்களை எழுப்பியது. அது மட்டுமன்றி கிழக்கு பாகிஸ்தானில் என்ன நடைபெற்றாலும் அந்தச் செய்திகளை அரசு சார்ந்த செய்தி நிறுவனங்கள் மூலம் தடைசெய்து, பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்று தொடங்கிய பாகிஸ்தான் நட்பு, 1983-க்குப் பிறகு அதிமாகியுள்ளது. 1984-இல் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீது மற்றும் ராணுவத்தினர் பாகிஸ்தான் சென்று வந்தனர். அதே ஆண்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மாலத்தீவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு பாகிஸ்தான் திரும்பியபோது கொழும்பு வழியாக சென்றார்.

இதனைத் தொடர்ந்து 1985-இல் இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பாகிஸ்தான் சென்றார். பதிலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஜியா வுல் ஹக் இலங்கை வந்தார். அப்போது ஜியா வுல் ஹக் 20 கோடி டாலருக்கு பாகிஸ்தான் – இலங்கை இடையே வர்த்தகம் நடந்துள்ளது என குறிப்பிட்டார்.

இவையெல்லாம் வெளிப்படையான செய்திகள். ஆனால் பாகிஸ்தானில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு 1986-இல் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது ரகசியம். இந்தப் பயிற்சி அனைத்தும் கிளர்ச்சியை முறியடிக்கும் விதமான பயிற்சிகள் ஆகும். ராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கியமானவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்தது. இவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு கருப்பு உடை சீருடையாக அளிக்கப்பட்டது. அவர்களின் அணுகுமுறை கொடுமையானது; வித்தியாசமானது.

“”இலங்கையின் இறையாண்மையில் அதன் ஆதிபத்திய உரிமையில் அந்நியர் தலையீடு கூடாது. இவ்வகையான தலையீட்டை ஏற்கவோ, அந்நாட்டைப் பிரிக்கவோ கூடாது” என்று சீனா ஒருமுறை அதாவது 1983 வாக்கில் கருத்து தெரிவித்தது. இதன் பொருள் வெளிப்படையானது. இந்தியாவை முன்னிறுத்திச் சொன்ன கருத்துதான் அது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த சீனா விரும்புகிறது.

1983-இல் ஆயுத உதவி கோரி இலங்கை கோரிக்கை வைத்த நாடுகளில் சீனாவும் ஒன்று. அதனையொட்டி, சீனம் அதிக அளவில் ஆயுதத் தளவாடங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஜெயவர்த்தனாவின் தம்பி ஹெக்டர் ஜெயவர்த்தன சீனா சென்று பரிவர்த்தனைக்கு அடித்தளமிட்டார். தொடர்ந்து ஜெயவர்த்தனாவும் சீனா சென்றார்.

சீனா விமானப்படைக்குழு கொழும்பு சென்றது (1984). அதே ஆண்டில் தகவல் தொடர்புக்குப் பொறுப்பு ஏற்கும் தளபதி ஜெனரல் வீரசிங்காவுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் லலித் அதுலத் முதலியும் சீனா சென்றார்.

சீன அதிபர் லீசின் கொழும்பு வந்தார். இலங்கையின் இறையாண்மை மக்களின் ஒற்றுமை குறித்து மட்டுமே அவர் பேசினார். ஆயுத உதவி குறித்து பேசவில்லை. ஆனால் அவை செயலில் நடைபெற்றன.

இது தவிர இதாலி, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தனிப்பட்ட ஆயுத வியாபாரிகளிடமிருந்து ஹெலிகாப்டர், விமானங்கள், கவச விமானங்கள், அதிவிரைவுப் படகுகள் முதலியவை வாங்கப்பட்டுள்ளன.

51. பின்னிப் பிணைந்த உறவும் வரலாறும்!

புத்தளத்திற்கு வடக்கே பொன்பரப்பியில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளும் ஒரே வகை என்பதையும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதையும் முன்பே கண்டோம்.

மதுரையில் சங்கம் நடத்தியபோது பூதன் தேவனார் ஈழத்திலிருந்து வந்ததையும், பாடல்கள் பாடியதையும் சங்கப் பாடல்கள் அகநானூறு (88,231,307), குறுந்தொகை (189,343,360), நற்றிணை (365) தெளிவுபடுத்துகின்றன.

வேதாரணியம் கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள் யாழ்ப்பாணத்தை அடுத்த தென்கணரவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், “பசுக்கறி’ கேட்ட போர்த்துக்கீசியருக்கு போக்குக் காட்டி, சிதம்பரம் வந்து சேர்ந்ததுடன் அங்கு திருக்குளம் வெட்டி திருப்பணி செய்தவர் ஞானப்பிரகாசர் என்றும்,

முப்பதுக்குமேற்பட்ட அரிய தமிழ்நூல்களைப் பதிப்பித்து சென்னை மற்றும் சிதம்பரத்தில் அச்சகம், பாடசாலை நடத்தி அச்சொத்துக்களை இங்கேயே விட்டுச் சென்றவர் ஆறுமுகநாவலர் என்றும்,

சென்னைப் பல்கலையின் முதல் பட்டதாரிகளானவர்கள் கரோல் விசுவநாதப் பிள்ளையும் சி.வை.தாமோதரம் பிள்ளையும் என்றும்,

சென்னை மாகாணத்தில் பல இடங்களிலும் தேடிக் கண்டுபிடித்த அரிய நூல்களைப் பதிப்பித்ததுடன், உ.வே. சாமிநாதய்யருடன் சேர்ந்து செயல்பட்டவர் ஈழத்தின் சிறுப்பிட்டியைச் சேர்ந்த சி.வை.தாமோதரம் பிள்ளை என்றும்,

தாகூரின், மகாத்மா காந்தியின், தனிச் செயலாளராக இருந்து, அடிப்படைக் கல்வி முறையை செயல்படுத்திய டாக்டர் அரியநாயகம், ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தின் பொறுப்பாளராக இருந்த சிவகுருநாதன், தஞ்சையில் பிறந்து, வாழ்ந்து யாழ்ப்பாணம் பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனான நடேசபிள்ளை காங்கேயன் துறை நாடாளுமன்ற உறுப்பினர் என்றும்,

மூனப்புதூரில் பிறந்து மலையக் தமிழர்களின் தலைவராகவும், இலங்கை அமைச்சரவையில் அமைச்சராகவும் ஆனவர் தொண்டமான் என்றும்,

இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்தவர் சுவாமி விபுலானந்தர் என்ற காரணத்தால், அவரையே முதல் தமிழ்த்துறைப் பேராசிரியராக நியமனம் செய்து அண்ணாமலை அரசர் கவுரவித்தார் என்றும்,

1927-இல் சென்னை மகாண சட்டசபைத் தேர்தலில்-எழும்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர் யாழ்ப்பாணத்துக் கலைப்புலவர் நவரத்தினத்தின் மாமியார் மங்களம்மாள் (மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் பெரிய அம்மா) என்றும்,

தமிழறிஞர் தண்டபாணி தேசிகரின் குரு யாழ்ப்பாணம் மட்டுவில் க.வேற்பிள்ளை என்றும்,

யாழ்ப்பாணப் புறநகர் பாஷையூரில் பிறந்து, வளர்ந்து தமிழகத்தில் சிறந்த தொழிற்சங்கவாதியானவர் ஏ.சி.சி. அந்தோணிப்பிள்ளை என்றும்,

தமிழகத்தின் புகழ்பெற்ற தவில் கலைஞர் வலங்கைமான் சண்முகசுந்தரத்தின் தந்தை மற்றும் உடன் பிறப்புகள் வசித்தது யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலடி என்றும், யாழ்ப்பாணத்திற்குத் தாய்த் தமிழகத்திடம் இருந்த தொடர்புக்கு எண்ணிலடங்கா உதாரணங்கள் கூறமுடியும்.

வரலாற்று ரீதியாக, வழிபாட்டு ரீதியாக உரிமைகளும், பண்பாட்டுப் பாரம்பரிய முறைகளும், பழமைகளும், உறவுகளும் பின்னிப் பிணைந்த வரலாறு, ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான வரலாறு.

அதேபோன்று, தமிழர் இசைமரபில் இலங்கைத் தமிழருடைய இசை மரபு மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக இலங்கை நாதஸ்வர தவில் இசை மரபு வரலாற்று சிறப்புமிக்கது. தமிழகத்தில் தவில் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம், நாதஸ்வர சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றோர் இலங்கையில் வாசித்து புகழ்பெற்ற தமிழகக் கலைஞர்கள் ஆவார்கள்.

அதுபோன்று, இலங்கையிலும் நாதஸ்வரத்தில் அளவெட்டி பத்மநாபன், தவில் வாசிப்பதில் யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி, யாழ்ப்பாணம் சின்னராஜா, தட்டாரத்தெரு கருப்பையா போன்றோர்கள் முக்கியமானவர்கள். அளவெட்டி பத்மநாபன் தமிழகத்தில் பந்தநல்லூர் நாதஸ்வரக் கலைஞர் தெட்சிணாமூர்த்தியை குருவாக ஏற்று அவர் வழியில் வாசித்து இலங்கையில் பெருமை பெற்றார். யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி இலங்கையில் மட்டுமின்றி இந்தியாவில் தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் தங்கி, வாசித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். இவருடன் இணைந்து தவில் வாசித்தவர்களுள் வளையப்பட்டி சுப்பிரமணியன், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலு, நாதஸ்வரத்தில் பந்தநல்லூர் தெட்சிணாமூர்த்தி, பருத்தியப்பர் கோயில் செüந்தரராஜன் போன்ற மேதைகளைச் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் வருவாய் குன்றியதால் ஈழம் சென்று தங்கியிருந்த எஸ்.ஜி.கிட்டப்பா, வருவாய் ஈட்டிப் பெரும் செல்வரானபின் அதே காரணத்தால் அங்கு வந்த கே.பி.சுந்தராம்பாளை அங்கு வைத்தே திருமணம் செய்து பின் இருவரும் தமிழகம் திரும்பினர்,

கும்பகோணம் தங்கவேல் பிள்ளையை, யாழ்ப்பாணத்தில் கோயில் விழாவிற்கு காரில் அழைத்து வரும்போது அவரைப் பார்ப்பதற்கென்றே ரசிகர் கூட்டம் மொய்த்துவிடும் என்று நினைவு கூர்கின்றனர், தற்போது வாழ்ந்து வரும் இசை மேதைகள்.

திருமெய்ஞானம் நடராஜசுந்தரம், திருவெண்காடு சுப்பிரமணியம், திருவிடைமருதூர் பி.கே.மகாலிங்கம், ராமலிங்கம், வேதாரண்யம் வேதமூர்த்தி, வல்லம் கிருஷ்ணன் போன்ற தமிழக இசை மேதைகள் இலங்கையில் வாசித்து பெருமை பெற்ற மாமேதைகள் ஆவார்கள்.

தவில் மேதைகளான திருமுல்லை வாசல் முத்துவீர சாமி, திருநகரி நடேசன், வடபாதிமங்கலம் தெட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம், திருச்சேறை முத்துகுமாரசாமி, சுவாமிமலை கோவிந்தராஜ் ஆகியோருக்கு ரசிகர் கூட்டம் அங்கு நிறைய உண்டு.

இலங்கை வானொலி இம்மேதைகள் வாசிப்பதை பயன்படுத்தி கொண்டு தனது அலைவரிசைகள் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு ஒளிப்பரப்புவார்கள். தமிழக சினிமா பாடல்களில் உள்ள ராகங்கள், கீர்த்தனைகள், அதன் வடிவ அழகு, பாடலாசிரியர்கள் முதலியவற்றோடு ஒழுங்குபடுத்தி ரசிகர்களுக்கு வழங்கும் முறை இலங்கை தமிழ் வானொலியிடமிருந்து நம்மிடம் வந்த ஒன்றாகும். (கலைவிமர்சகர் தேனுகாவிடம் நேர்காணல்)

இவ்வாறு உடலாலும், உள்ளத்தாலும் ஒன்றுபட்ட தொப்புள்கொடி உறவுகளின் துன்பத்துக்கு தாய்த் தமிழகம் அளித்த பங்கு என்ன?

52. தி.மு.க.வின் முகவை மாநாடு!

இலங்கையில் ஏற்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது புதிதல்ல. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த தொப்புள்கொடி உறவு என்பதால், இலங்கையில் ஏற்படும் அவலங்கள் இங்கே பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.

1983 இனக்கலவரத்தைப் பற்றி கேள்விப்பட்டதுமே மதுரை மாவட்டம் நத்தம் என்ற பேரூரைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியைச் சேர்ந்த ஷாஜகான், சென்னை இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன் இலங்கை அரசை எதிர்த்துத் தீக்குளித்தார்.

இவரது திடீர்ச் செயலால் பரபரப்படைந்த மக்கள், உடலில் தீ பரவாமல் தடுத்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஜூலை 18, 1983-இல் நடந்த கலவரத்திற்கு ஆரம்பமாக விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவரான சார்லஸ் அந்தோனி என்பவர் ராணுவத்தாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கையில் விடுதலை உணர்வு உள்ள தமிழர்களைப் பற்றியும், அவர்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகளைப் பற்றியும் தகவல் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.

கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் யாவரும் தங்கள் உயிருக்குப் பயந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்திற்குள் வந்து தஞ்சம் புகுந்தனர். தமிழர்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்கு இந்தியா கவலை தெரிவித்தது. இதற்கு இந்தியாவின் தற்காலிகத் தூதர் ஆர்.எம். அய்யங்காரை அழைத்து, வெளி விவகார அமைச்சர் தன் அதிருப்தியைத் தெரிவித்தார். இலங்கை பத்திரிகைகளான தி ஐலண்ட், சன் போன்றவைகள், இந்தியா இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுவதாகக் கண்டித்து எழுதின.

ஜூலை 23-இல் 168 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கட்சியின் 16 உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

ஜூலை 26-இல் தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.கருணாநிதி, தனக்கு, இதுவரை நாற்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக லண்டன், பாரிஸ் மூலம் தகவல் வந்திருப்பதாகத் தெரிவித்தார். மறுநாள் (ஜூலை 27-இல்) இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இலங்கைக்கும், சென்னைக்கும் முற்றாகச் செய்தித் தகவல் தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டது. மறுநாள் இலங்கைச் சிறையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்பட மொத்தம் முப்பத்தி ஏழு பேர் சிங்களக் கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற செய்தியுடன் விடிந்தது.

உலகமே கண்டிராத காட்டுமிராண்டிச் செயலாக அந்தச் சிறைச்சாலைப் படுகொலை அமைந்திருந்தது என்பதை பின்பு வந்த செய்திகள் உறுதிப்படுத்தின.

இலங்கை அரசு இஸ்ரேல் ராணுவத்தின் அதிரடிப் பிரிவு ஒன்றை வரவழைத்து ஒரு மாதம் ராணுவப் பயிற்சி கொடுத்ததாகச் செய்திகள் வெளியாயின.

கொழும்பிலும் இதர நகரங்களிலும் வீடு வாசல் இழந்த பத்து லட்சம் பேர் யாழ்ப்பாணத்துக்கு ஓட விரும்பினர் என்று டெய்லி டெலிகிராஃப் (லண்டன்) செய்தி வெளியிட்டது.

டாக்ஸி டிரைவரை தாஜா செய்து சிங்கப்பூர் வந்த பாகிஸ்தானிய நிருபர் ஜாவேத் அப்பாஸ், “”இம்முறை சிங்களவர்களின் கொடுமையால் தமிழர்கள் முற்றிலுமாக அழிந்து போவார்கள்! கொழும்பு சுடுகாடாகக் காட்சியளிக்கிறது” என்றார்.

தில்லி செல்லும் வழியில் நிருபர்களைச் சந்தித்த இலங்கை வெளிநாட்டுச் செயலரை, “ராணுவம் ஏன் கலவரக்காரர்களை அடக்கவில்லை?’ என்றனர் பத்திரிகையாளர்கள். “”அடக்கினால் அவர்கள் அரசுக்கெதிராகத் திரும்பிவிடுவார்கள்” என்றார் அவர்.

பல அகதிகள் முகாம்கள் கூண்டோடு கொளுத்தப்பட்டன. தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

ஏழு மணி நேர அவகாசத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி அறிவித்த தமிழர் பாதுகாப்புப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடவில்லை.

“”தமிழன் வாழ்வதா? வீழ்வதா? என்கிற கேள்விக் குறியில் நிற்கிறான். அம்மையார் (இந்திரா காந்தி) அவர்களே, உங்களிடமிருந்து பதில் தேவை. வெறும் வார்த்தைகளால் அல்ல. செயலால் பதில் தேவை…

“”இந்திய ராணுவம் இலங்கைக்கு வரும் என்று குரல் கொடுத்தால் தமிழனுடைய பிணம் விழாமல் தடுக்கலாம்” என்று பேரணியின் முடிவில் திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.

தில்லியிலுள்ள இலங்கைத் தூதரக வாசலில் திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் ஊர்வலம் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜூலை 28-இல் குட்டிமணி பிறந்த ஊரே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. நான்கு நாட்கள் வன்முறையில் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர். தமிழர் கட்சியும் ஏனைய பிரிவினைக் கோரும் அமைப்புகளும் தடை செய்யப்படும். அவர்களது சிவில் உரிமைகள் பறிக்கப்படும் என்றார் ஜெயவர்த்தன.

இன்னொரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர் தலைவர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்திரா, ஜெயவர்த்தனாவுடன் பேசிய பிறகு நிலைமை அறிய இந்திய வெளிநாட்டு மந்திரி நரசிம்மராவ் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். நரசிம்மராவிற்கு அகதிகள் முகாம்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

சென்னையில் வசிக்கும் குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.கருணாநிதி.

ஜூன் 29, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அக்கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை உடனே தலையிட வழிவகை காணவேண்டும் என வற்புறுத்தி பிரதமர் இந்திரா காந்திக்கு தந்தி ஒன்றை எம்.ஜி.ஆர். அனுப்பினார்.

ஜூலை 30-இல் இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி ரயிலில் அழைத்துச் சென்று தீ வைத்தனர். 200-க்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். பலநூறு பேருக்கு தீக்காயம்.

கொழும்பு நகருக்குள் ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். ராணுவ உடையில் வந்து தாக்கினர். அவர்கள் கப்பற்படை உடை போன்று ஆடை அணிந்திருந்தனர் என்று தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர்.

ஜூலை 31-இல், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றுக்கு தலைமை தாங்கி, புது தில்லி சென்றார் முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது பிரதமரிடம் அளிக்கப்பட்ட மனுவில், “”இலங்கையின் கொடிய, காட்டுமிராண்டித்தனமான கொலைகளை அந்நாட்டின் உள்நாட்டு விவகாரமெனத் தள்ளிவிட முடியாது. இந்திய அரசு, இலங்கையிலுள்ள தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய முயற்சிகளைத் தீவிரமாகவும் அவசரமாகவும் தலையிட்டு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென நாங்கள் திட்டவட்டமாக உணர்கிறோம்” என்று கூறப்பட்டிருந்தது.

1983 ஜூலை 31-இல் ராமநாதபுரத்தில் நடந்த முகவை மாவட்ட தி.மு.க. மாநாடு ஈழத்தமிழர்களுக்கான மாநாடாகவே நடந்தது. ஆகஸ்ட் 2-இல் முழு அடைப்பு நடத்துவது என்ற தீர்மானத்தை, திமுக செயற்குழு அங்கீகரித்தது.

“”இலங்கையில் தனித் தமிழ்நாடு கேட்பவர்களின் சுயஉரிமையை-குடிஉரிமையை ரத்து செய்வதற்காக வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படுவதைக் கண்டித்து அதே ஆகஸ்ட் நான்காம் தேதி வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தமிழர்களும் வீடுகளிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும்” என்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் 5-ஆம் தேதி ரயில் நிறுத்தப் போராட்டம் செய்வதென்றும் திமுக செயற்குழு தீர்மானித்தது.

“”சர்வதேச அமைதிப் படையை அனுப்புவதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் இது சைப்ரஸ் தீவில் கிரேக்க மொழி பேசுவோர்க்கும், துருக்கி மொழி பேசுவோர்க்கும் இடையே நடைபெற்ற போரில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சர்வதேச அமைதிப் படை அனுப்பியது போலாகும்” என்றும் கருணாநிதி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

அன்று இரவு மாநாட்டில் கருணாநிதி பேசும்போது, “”ஆகஸ்ட் 4 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், 5-ஆம் தேதியன்று ரயில் நிறுத்தப் போராட்டம், தில்லியில் மாநிலங்களவை உறுப்பினர்களான எல்.கணேசன், வை.கோபால்சாமி ஆகியோர் துவக்கும் உண்ணாவிரதம் ஆகிய அறப்போராட்டங்கள் நடைபெறும்” என்று அறிவித்தார்.

52: தி.மு.க.வின் முகவை மாநாடு!

இலங்கையில் ஏற்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது புதிதல்ல. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த தொப்புள்கொடி உறவு என்பதால், இலங்கையில் ஏற்படும் அவலங்கள் இங்கே பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.

1983 இனக்கலவரத்தைப் பற்றி கேள்விப்பட்டதுமே மதுரை மாவட்டம் நத்தம் என்ற பேரூரைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியைச் சேர்ந்த ஷாஜகான், சென்னை இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன் இலங்கை அரசை எதிர்த்துத் தீக்குளித்தார்.

இவரது திடீர்ச் செயலால் பரபரப்படைந்த மக்கள், உடலில் தீ பரவாமல் தடுத்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஜூலை 18, 1983-இல் நடந்த கலவரத்திற்கு ஆரம்பமாக விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவரான சார்லஸ் அந்தோனி என்பவர் ராணுவத்தாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கையில் விடுதலை உணர்வு உள்ள தமிழர்களைப் பற்றியும், அவர்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகளைப் பற்றியும் தகவல் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.

கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் யாவரும் தங்கள் உயிருக்குப் பயந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்திற்குள் வந்து தஞ்சம் புகுந்தனர். தமிழர்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்கு இந்தியா கவலை தெரிவித்தது. இதற்கு இந்தியாவின் தற்காலிகத் தூதர் ஆர்.எம். அய்யங்காரை அழைத்து, வெளி விவகார அமைச்சர் தன் அதிருப்தியைத் தெரிவித்தார். இலங்கை பத்திரிகைகளான தி ஐலண்ட், சன் போன்றவைகள், இந்தியா இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுவதாகக் கண்டித்து எழுதின.

ஜூலை 23-இல் 168 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கட்சியின் 16 உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

ஜூலை 26-இல் தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.கருணாநிதி, தனக்கு, இதுவரை நாற்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக லண்டன், பாரிஸ் மூலம் தகவல் வந்திருப்பதாகத் தெரிவித்தார். மறுநாள் (ஜூலை 27-இல்) இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இலங்கைக்கும், சென்னைக்கும் முற்றாகச் செய்தித் தகவல் தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டது. மறுநாள் இலங்கைச் சிறையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்பட மொத்தம் முப்பத்தி ஏழு பேர் சிங்களக் கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற செய்தியுடன் விடிந்தது.

உலகமே கண்டிராத காட்டுமிராண்டிச் செயலாக அந்தச் சிறைச்சாலைப் படுகொலை அமைந்திருந்தது என்பதை பின்பு வந்த செய்திகள் உறுதிப்படுத்தின.

இலங்கை அரசு இஸ்ரேல் ராணுவத்தின் அதிரடிப் பிரிவு ஒன்றை வரவழைத்து ஒரு மாதம் ராணுவப் பயிற்சி கொடுத்ததாகச் செய்திகள் வெளியாயின.

கொழும்பிலும் இதர நகரங்களிலும் வீடு வாசல் இழந்த பத்து லட்சம் பேர் யாழ்ப்பாணத்துக்கு ஓட விரும்பினர் என்று டெய்லி டெலிகிராஃப் (லண்டன்) செய்தி வெளியிட்டது.

டாக்ஸி டிரைவரை தாஜா செய்து சிங்கப்பூர் வந்த பாகிஸ்தானிய நிருபர் ஜாவேத் அப்பாஸ், “”இம்முறை சிங்களவர்களின் கொடுமையால் தமிழர்கள் முற்றிலுமாக அழிந்து போவார்கள்! கொழும்பு சுடுகாடாகக் காட்சியளிக்கிறது” என்றார்.

தில்லி செல்லும் வழியில் நிருபர்களைச் சந்தித்த இலங்கை வெளிநாட்டுச் செயலரை, “ராணுவம் ஏன் கலவரக்காரர்களை அடக்கவில்லை?’ என்றனர் பத்திரிகையாளர்கள். “”அடக்கினால் அவர்கள் அரசுக்கெதிராகத் திரும்பிவிடுவார்கள்” என்றார் அவர்.

பல அகதிகள் முகாம்கள் கூண்டோடு கொளுத்தப்பட்டன. தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

ஏழு மணி நேர அவகாசத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி அறிவித்த தமிழர் பாதுகாப்புப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடவில்லை.

“”தமிழன் வாழ்வதா? வீழ்வதா? என்கிற கேள்விக் குறியில் நிற்கிறான். அம்மையார் (இந்திரா காந்தி) அவர்களே, உங்களிடமிருந்து பதில் தேவை. வெறும் வார்த்தைகளால் அல்ல. செயலால் பதில் தேவை…

“”இந்திய ராணுவம் இலங்கைக்கு வரும் என்று குரல் கொடுத்தால் தமிழனுடைய பிணம் விழாமல் தடுக்கலாம்” என்று பேரணியின் முடிவில் திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.

தில்லியிலுள்ள இலங்கைத் தூதரக வாசலில் திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் ஊர்வலம் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜூலை 28-இல் குட்டிமணி பிறந்த ஊரே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. நான்கு நாட்கள் வன்முறையில் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர். தமிழர் கட்சியும் ஏனைய பிரிவினைக் கோரும் அமைப்புகளும் தடை செய்யப்படும். அவர்களது சிவில் உரிமைகள் பறிக்கப்படும் என்றார் ஜெயவர்த்தன.

இன்னொரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர் தலைவர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்திரா, ஜெயவர்த்தனாவுடன் பேசிய பிறகு நிலைமை அறிய இந்திய வெளிநாட்டு மந்திரி நரசிம்மராவ் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். நரசிம்மராவிற்கு அகதிகள் முகாம்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

சென்னையில் வசிக்கும் குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.கருணாநிதி.

ஜூன் 29, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அக்கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை உடனே தலையிட வழிவகை காணவேண்டும் என வற்புறுத்தி பிரதமர் இந்திரா காந்திக்கு தந்தி ஒன்றை எம்.ஜி.ஆர். அனுப்பினார்.

ஜூலை 30-இல் இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி ரயிலில் அழைத்துச் சென்று தீ வைத்தனர். 200-க்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். பலநூறு பேருக்கு தீக்காயம்.

கொழும்பு நகருக்குள் ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். ராணுவ உடையில் வந்து தாக்கினர். அவர்கள் கப்பற்படை உடை போன்று ஆடை அணிந்திருந்தனர் என்று தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர்.

ஜூலை 31-இல், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றுக்கு தலைமை தாங்கி, புது தில்லி சென்றார் முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது பிரதமரிடம் அளிக்கப்பட்ட மனுவில், “”இலங்கையின் கொடிய, காட்டுமிராண்டித்தனமான கொலைகளை அந்நாட்டின் உள்நாட்டு விவகாரமெனத் தள்ளிவிட முடியாது. இந்திய அரசு, இலங்கையிலுள்ள தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய முயற்சிகளைத் தீவிரமாகவும் அவசரமாகவும் தலையிட்டு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென நாங்கள் திட்டவட்டமாக உணர்கிறோம்” என்று கூறப்பட்டிருந்தது.

1983 ஜூலை 31-இல் ராமநாதபுரத்தில் நடந்த முகவை மாவட்ட தி.மு.க. மாநாடு ஈழத்தமிழர்களுக்கான மாநாடாகவே நடந்தது. ஆகஸ்ட் 2-இல் முழு அடைப்பு நடத்துவது என்ற தீர்மானத்தை, திமுக செயற்குழு அங்கீகரித்தது.

“”இலங்கையில் தனித் தமிழ்நாடு கேட்பவர்களின் சுயஉரிமையை-குடிஉரிமையை ரத்து செய்வதற்காக வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படுவதைக் கண்டித்து அதே ஆகஸ்ட் நான்காம் தேதி வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தமிழர்களும் வீடுகளிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும்” என்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் 5-ஆம் தேதி ரயில் நிறுத்தப் போராட்டம் செய்வதென்றும் திமுக செயற்குழு தீர்மானித்தது.

“”சர்வதேச அமைதிப் படையை அனுப்புவதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் இது சைப்ரஸ் தீவில் கிரேக்க மொழி பேசுவோர்க்கும், துருக்கி மொழி பேசுவோர்க்கும் இடையே நடைபெற்ற போரில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சர்வதேச அமைதிப் படை அனுப்பியது போலாகும்” என்றும் கருணாநிதி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

அன்று இரவு மாநாட்டில் கருணாநிதி பேசும்போது, “”ஆகஸ்ட் 4 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், 5-ஆம் தேதியன்று ரயில் நிறுத்தப் போராட்டம், தில்லியில் மாநிலங்களவை உறுப்பினர்களான எல்.கணேசன், வை.கோபால்சாமி ஆகியோர் துவக்கும் உண்ணாவிரதம் ஆகிய அறப்போராட்டங்கள் நடைபெறும்” என்று அறிவித்தார்.

53: நியூயார்க் உலகத் தமிழர் மாநாடு!

தி.மு.க.வின் முகவை மாநாட்டின் கட்சித் தலைவர் மு.கருணாநிதி ஆற்றிய எழுச்சி உரை இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான பதிவு என்று சொல்ல வேண்டும்.

“”1950-ஆம் ஆண்டில் நம்மை எல்லாம் ஆளாக்கிய அண்ணன் பேரறிஞர் அண்ணா அவர்கள் இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதைக் கண்டிப்பதற்காகத் தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரத்தில் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை சற்றேறக் குறைய இருபத்து ஐந்து ஆண்டு காலமாக இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மொழி உரிமைக்காக, தங்களுடைய இன உரிமைக்காக, தங்களுடைய பாதுகாப்பிற்காகப் போராடி, போராடி வேறு வழியில்லாமல் 1975 அல்லது 76-ஆம் ஆண்டுகளில் தங்களைக் காத்துக்கொள்ள தமிழர்களைக் காத்துக்கொள்ள, இனத்தைக் காத்துக்கொள்ள, இனி வேறு வழி கிடையாது – நாமும் ஆயுதத்தைதத் தாங்கித்தான் தீரவேண்டும் என்று படைக்கலம் ஏந்துகின்ற பட்டாளத்துப் பெருமகனாக மாறினான்.

1975 வரையில் பொறுத்துப் பார்த்தான். சகித்துக் கொண்டான். தாய்மார்கள் கற்பழிக்கப்பட்டதை, அவனுடைய சகோதரிகள் நடுவீதியில் வைத்து மானபங்கப் படுத்தப்பட்டதை அவன் சகித்துக் கொண்டே வந்தான். பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு என்ற காரணத்தால் அந்தப் பொறுமை எல்லை தாண்டுகிற அளவுக்குப் பொல்லாத செயல்கள் இலங்கையில் சிங்கள வெறியர்களால் நடத்தப்பட்ட காரணத்தால் ஆயுதம் தாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது” என்று இன்றைய விடுதலைப் போராளிகளின் ஆயுதம் ஏந்தும் நிலைமைக்கான காரணத்தைப் படம் பிடித்துக் காட்டினார் கருணாநிதி.

அனைத்துக் கட்சிகளும் மாநில அரசும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு ஆகஸ்ட் 2-இல் நடைபெற்றது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. தண்ணீர் கொண்டு வரும் லாரிகள், ஆம்புலன்ஸ் வண்டிகள், காவல் துறை, பத்திரிகைத் துறை வாகனங்கள் தவிர வேறு வாகனங்களைச் சாலையில் பார்க்க முடியவில்லை. சென்னை விமான நிலையமும் மூடப்பட்டது. துறைமுகத்திலும் வேலையில்லை.

மாணவர்கள் ஆங்காங்கே ஜெயவர்த்தனவின் அடக்குமுறையை எதிர்த்துக் கொடும்பாவி கொளுத்திக் கண்டன ஊர்வலங்களையும் நடத்தினர்.

ரயில் நிறுத்தப் போராட்டத்தைத் தி.மு.கழகம் அறிவித்ததும் ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று தமிழகத்தில் எந்த ரயிலும் ஓடாது என்று மத்திய அரசு அறிவித்தது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இலங்கைக் கொடுமையைக் கண்டித்து கூட்டம் ஒன்று நடத்தினர். அக்கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கலந்துகொண்டார். அவர் தனது பேச்சில் “ஜெனோசைட்’ என்று அழைக்கப்படும் இனப்படுகொலை இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக வழக்கறிஞர் சமுதாயம் பாடுபட வேண்டும். அறைகூவல் விடுத்தார்.

இந்தக் காட்டுமிராண்டிச் சம்பவங்களுக்கு எதிராக உலக அரங்கின் கருத்தைத் திரட்ட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ்ச்சகோதர, சகோதரிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் உலகம் தழுவிய சட்டபூர்வமான கிளர்ச்சியைத் துவக்கி மக்களின் உணர்வை தட்டி எழுப்ப வேண்டும்.

இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண முடியாது என்றாலும் “இப்பிரச்னையை’ மனித உரிமைகள் என்ற கோணத்தில் நோக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற வன்முறை வெடிப்பு, ஒருபிரிவு மக்கள் இன்னொரு பிரிவு மக்களைத் தாக்கிய நிகழ்ச்சி அல்ல. அங்கே அரசே ராணுவத்தைப் பயன்படுத்தி இருக்கிறது. அல்லது அந்த ராணுவம் தமிழர் என்று சொல்லப்படுவோரைக் கொன்று குவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இது எஉசஞஇஐஈஉ என்று சொல்லப்படுகிற ஓர் இனப்படுகொலையே ஆகும்.

ஆகையால், இலங்கையில் உள்ள இந்தியக் குடிமக்களையும், தமிழ் வம்சாவளியினரையும் காப்பாற்ற வேண்டிய கடமை இந்தியாவிற்கு இருக்கிறது. அரசு எல்லாப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் பறிக்கப்பட்டு அவைகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் போது, “”தலையிடக் கூடாது” என்ற வாதத்தில் அர்த்தமில்லை” என்றார் கிருஷ்ணய்யர்.

தி.மு.கழக செயற்குழு மீண்டும் ஆகஸ்ட் 7-இல் கூடியது. ஆங்கிலப் படிவத்தில் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை இரண்டு கோடிக் கையொப்பங்கள் முகவரியுடன் பெற்று ஐ.நா. சபைக்கு அனுப்புவது என்று தீர்மானம் போட்டது.

அது போலவே ஆகஸ்ட் 4-இல் இயற்றிய சிங்கள அரசின் காட்டுமிராண்டிச் சட்டத்தை நகல் எடுத்து பட்டிதொட்டியெங்கும் எரிப்பது என்றும் தீர்மானித்தார்கள்.

காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் ஆறாயிரம் பேருடன், படுகொலை செய்யப்படும் ஈழத்தமிழருக்கு உதவிட மதுரையிலிருந்து ராமேசுவரம் வரை நடை பயணமாகச் சென்று கடலில் கட்டுமரத்தில் ஏறி இலங்கை செல்லும் தியாகப் பயணம் மேற்கொண்டார். அவர் தமிழக அரசால் ராமேசுவரத்தில் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். மத்திய – மாநில அரசுகள் ஈழத்தமிழர் பிரச்னையில் போதிய கவனம் எடுத்துக் கொள்ளாததைக் கண்டித்து மு.கருணாநிதியும், க.அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை 10.8.83 அன்று துறந்தனர்.

ஜி.பார்த்தசாரதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் தூதராக இலங்கை செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. அவரும் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழகத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு 26.8.83 அன்று இலங்கைக்குச் சென்றார்.

1984 ஏப்ரல் 9-இல் சர்வகட்சித் தலைவர்களுடன் இணைந்து கண்டனப் பேரணி நடத்திய பிறகு, அமெரிக்க நாட்டின் கைப்பாவையாக உள்ள இஸ்ரேல் நாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, தமிழர்களை மேலும் வதைக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவைக் கண்டித்து 3.7.84 அன்று சென்னையில் உள்ள இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பேரணிக்குக் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமை ஏற்றார். அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ப.மாணிக்கம், வி.பி.சிந்தன், காஜாமொய்தீன், இராம.அரங்கண்ணல், தி.சு. கிள்ளிவளவன், இரா.குலசேகரன், கோ.கலிவரதன், வேணுகோபால், அன்பு வேதாசலம், தெள்ளூர் தர்மராசன், ஜெய்லானி, எஸ்.எல்.கிருஷ்ணமூர்த்தி, அய்யணன் அம்பலம் ஆகியோர் பங்குபெற்ற இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர் மாநாடு ஒன்று நியூயார்க், நான்வெட் நகரில் கூட்டப்பட்டது. மாநாட்டில் தலைமை ஏற்று காமராஜ் காங்கிரஸ் தலைவர் ப.நெடுமாறன் உரையாற்றினார். அந்த உரையில், “”ஈழ மக்கள் படுகொலைக்கு ஆளாக்கப்படுவதற்கு எதிரான கண்டனக் குரலை உலகம் முழுமையுள்ள பல்வேறு நாடுகளின் அரசுகளை, இலங்கை அரசின் இனவெறி ஆட்சியைக் கண்டிக்கும்படியான கவனத்தைத் திருப்பவேண்டும்.

புது தில்லியில் நடக்கும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் சுதந்திர நாடுகள் மட்டுமன்றி, விடுதலைக்காகப் போராடும் பாலஸ்தீன விடுதலை இயக்கம், தென் மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இயக்கம், ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ், அகில ஆப்பிரிக்கக் காங்கிரஸ், மியோடிரிக்கா நாட்டின் சோஷலிஸ்ட் கட்சி, இஸ்லாமிய மாநாடு போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். அதே போன்று தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். திருகோணமலையில் எந்த அந்நிய நாட்டின் ராணுவ தளமும் அமைய விடக்கூடாது. அது இந்தியாவிற்குப் பேராபத்தை உருவாக்கும்” என்றார்.

“”தமிழர்களை அருகில் இருந்து காக்க ஐ.நா. மன்றத்தின் சார்பில் அமைதிகாக்கும் படை அனுப்ப வேண்டும். தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் பிளவுபட்டுக் கிடப்பது தமிழர்களின் சாபக்கேடாகும்.

பொது எதிரியான ஜப்பானியர்களையும், ஜெர்மானியர்களையும் எதிர்க்கப் பரமவைரியான மா-சே-துங்கும் ஷியாங்கே சேக்கும் ஒன்றுபட்டுப் போராடினார்கள். நாஜிகளை ஒழிக்க ஸ்டாலினும், ரூஸ்வெல்ட்டும் ஒன்று சேர்ந்தார்கள். அப்படி இருக்கும்போது ஏன் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான தமிழ் இளைஞர்கள் ஒன்று படக் கூடாது” என்று அதே மாநாட்டில் கேள்வி எழுப்பினார் வை.கோபால்சாமி எம்.பி.

இந்த மாநாட்டில் கி. வீரமணி, செஞ்சி இராமச்சந்திரன், மலேஷியா திராவிடர் கழகச் செயலாளர் கே.ஆர்.இராமசாமி, இரா.செழியன், டாக்டர் ஜெய்னுதீன், செ.யோகேஸ்வரன், கரிகாலன், ஈழவேந்தன், வைகுந்தவாசன் (லண்டன்), மணவைத்தம்பி முதலியோரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை டாக்டர் வின்சென்ட் பஞ்சாட்சரம், வழக்கறிஞர் முதலானோர் செய்தனர்.

54. கண்டியின் கடைசித் தமிழ் மன்னன்!

ஜூலை 25, 1984-இல் சென்னை பெரியார் திடல் ராதா மன்றத்தில் இலங்கை தமிழினப் படுகொலை நினைவாக “”கண்ணீர் நாள்” எனத் தி.மு.கழகத்தால் அனுசரிக்கப்பட்டது.

அன்று நடந்த கூட்டத்தில் மு.கருணாநிதி குறிப்பிட்டதாவது:

“”அரும்பாடுபட்டு நான் பலமுறை சந்தித்து, சந்தித்து, இந்த விடுதலை இயக்கங்களின் இளம் தோழர்களிடம் பேசிப்பேசி, ஒருவேளை என்னுடைய முயற்சியினாலோ அல்லது என்னைப் போல வேறு யாருடைய முயற்சியினாலோ-எனக்குத் தெரியாது-அந்த இளைஞர்களே மனப் பக்குவப்பட்டு அந்த முடிவுக்கு வந்தார்களோ தெரியாது; ஸ்ரீ சபாரத்தினம் தலைமையில் இயங்குகிற டொலோ என்கிற (பஉகஞ) இயக்கமும், பாலகுமார் தலைமையில் இயங்குகிற ஈரோஸ் (உதஞந) என்கிற இயக்கமும், பத்மநாபா தலைமையில் இயங்குகிற உடதகஊ என்கிற இயக்கமும் இந்த மூன்று இயக்கங்களும் ஓரணியில் திரண்டு-அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு கூட்டணியாக உருப்பெற்று-தமிழ் ஈழத்தை முழுமையான சுதந்திர நாடாக ஆக்குவது-உழைக்கும்-மக்களைக் கொண்ட அரசை உருவாக்குவது, முதலாளிகளுக்குச் சொந்தமான வங்கிகளை, நிறுவனங்களை, தொழிலாளர், விவசாய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவது என்கிற ஒரு சமதர்ம சமத்துவ நோக்கோடு-சுதந்திர தமிழ் ஈழத்தைப் பெற்றெடுக்க வேண்டும்; ஈன்றெடுக்க வேண்டும் என்ற நிலையிலே இன்றைக்கு ஒன்று கூடி இருக்கிறார்கள்.

இன்னும் இரண்டு இயக்கங்கள் இருக்கின்றன. ஒன்று முகுந்தன் தலைமையிலே இயங்குகிற தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (டகஞப), இன்னொன்று தம்பி பிரபாகரன் தலைமையிலே இயங்குகிற விடுதலைப் புலிகள் இயக்கம் (கபபஉ). அந்த இரண்டு இயக்கங்களும், இந்த மூன்று இயக்கங்களோடு இணைந்து-அல்லது அவர்கள் விரும்பினால் அந்த இரண்டோடு இந்த மூன்று இயக்கங்களும் இணைந்து-யார் யாரோடு இணைவது என்று பார்க்காமல் இந்த ஐந்து பெரும் இயக்கங்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயம். அனைவரின் எதிர்பார்ப்பு” என்றார்.

கூட்டத்தில் பேச வந்தவர்களும், கேட்க வந்தவர்களும் இக் கருத்தையே கருணாநிதி பேச்சுக்குப் பிறகு வலியுறுத்தினார்கள் என்பது உண்மை.

அதே கூட்டத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்,

“”இந்தக் கண்ணீர் நாளில் நாம் குட்டிமணியை, தங்கதுரையை, ஜெகனை நினைத்துக் கொள்கிறோம். வெலிக்கடை சிறையில் நான் குட்டிமணியுடன் ஒன்றாக இருந்தேன்; ஒரே அறையில் இருந்தேன். அப்போது குட்டிமணிக்குக் குழந்தை பிறந்தது என்று செய்தி வந்தது. என் குழந்தை கருப்பாய் இருக்குமா? சிகப்பாய் இருக்குமா என்று என்னைக் கேட்டான். அந்தக் குழந்தையைப் பார்க்கவே இல்லை. இந்த நாளில் நாம் கண்ணீரைத்தான் சிந்துகிறோம். குட்டிமணி கண்ணையே சிந்தியவன்” என்றார்.

கூட்டத்தில் இரா. செழியன், அப்துல் லத்தீப், ஆற்காடு வீராசாமி, செ. கந்தப்பன், தி.சு. கிள்ளிவளவன், செல்வேந்திரன், கோவை மகேசன், சிகாமணி, தெள்ளூர் தருமராசன், டி.ஆர். பாலு முதலியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

“இலங்கையிலே கண்டிப்பகுதியை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் பெயர் விக்கிரமராஜசிங்கன். அவனைப் பிரிட்டிஷார் போரில் தோற்கடித்துக் கண்டிப்பகுதியைக் கைப்பற்றினர். தோற்கடிக்கப்பட்ட விக்கிரமராஜசிங்கனுக்குக் கண்ணுசாமி என்ற பெயரும் உண்டு. வேலூர் சிறையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்த அம்மன்னன் தனது 56-வது வயதில் மரணமடைந்தான். அவனது கல்லறை வேலூர் பாலாற்றங்கரையில் இன்றும் இருக்கிறது’ என்று சென்னைக் கடற்கரையில் (8.8.83) நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதி கூறினார். அது தொடர்பாக பெங்களூரில் வசித்த விக்கிரமராஜசிங்கனின் கொள்ளுப்பேரன் கே.ஜி.எஸ். ராஜசிங்கனைச் சந்தித்தபோது கிடைத்த தகவல்கள்:

இலங்கையை ஆண்ட (கண்டிப் பகுதியை) மன்னன் நரேந்திரசிங்கன் மணமுடிக்க அரச குடும்பத்துக்கு இணையான பெண்கள் கிடைக்கவில்லை. பட்டத்து அரசியாக சூரிய வம்சத்தைச் சேர்ந்த பிற தேசத்து அரச குடும்பங்களிலிருந்து பெண் எடுப்பதெனத் தூதுவர்களை மதுரைக்கு அனுப்பி வைத்தார்கள்.

மதுரையை (1709-இல்) நாயக்கர்கள் ஆண்டு வந்த நேரம். அவர்கள் சூரிய வம்சமானதால் நாயக்கர் குடும்பத்திலிருந்து பெண்ணெடுத்து அரசியாக்கிக் கொண்டான் நரேந்திரசிங்கன். அவனுக்கு பிள்ளைப்பேறு இல்லை. தனக்குப் பிறகு நாடாளவென்று மனைவியின் சகோதரனை மதுரையிலிருந்து வரவழைத்து பட்டத்திற்குரியவனாக்கினான். அவன்தான் கண்டியின் முதலாவது தமிழ் மன்னன். பட்டப் பெயர் ஸ்ரீ விஜயராஜசிங்கன்.

அவரும் எங்களுடைய வம்சத்திலேயே பெண் எடுத்தார். அவருக்கும் ஆண் வாரிசில்லை. அவர் இறந்த பின் அவரது தம்பி கீர்த்தி ஸ்ரீராஜசிங்கா மன்னரானார்.

அவர் அரசாண்ட சமயத்தில் இலங்கையில் புத்தமதம் வலுவிழந்திருந்தது. மீண்டும் அங்கே புத்தமதத்தைப் புத்துயிர் பெற வைக்கும் முயற்சியில் கீர்த்திஸ்ரீ தீவிரம் காட்டினார். தூதுவர்களைச் சயாம் நாட்டுக்கு அனுப்பி, அங்கிருந்து புத்த பிட்சுக்களை வரவழைத்து இலங்கையில் உள்ளோரைப் புத்த பிட்சுக்களாக மாற்றும் வேலையில் ஈடுபடுத்தினார்.

அப்படி முதன் முதலாக வந்த புத்தபிட்சு வெளிவத்தை சரணங்கரா என்பவராவார். இவரைக் கொண்டு, தமிழ்நாட்டில் தெய்வ விக்கிரகங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்வது போல் புத்தரின் பல்லை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபடச் செய்தார். இன்றுவரையும் நடைபெறும் “பெரஹரா’ எனப்படும் அவ்விழாவுக்கு அவரே மூலகர்த்தா!

கீர்த்தி ஸ்ரீராஜசிங்காவுக்கும் ஆண் வாரிசில்லை. அவருக்குப்பின் அவரது தம்பி ராஜ அதிராஜசிங்கா ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பிரிட்டீஷாரும் பிரெஞ்சுக்காரர்களும் போர்ச்சுகீசியரும் கவனம் செலுத்தியதைப் போலவே இலங்கையின் மீதும் நாட்டம் கொண்டனர்.

ராஜ அதிராஜசிங்கா திடீரென இறந்துவிடவே, ஆண் வாரிசில்லாத நிலையில் அவரது ஆட்சியில் மந்திரியாக இருந்த பிலிமத்தலாவைக்கு மன்னராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே, மன்னரின் மைத்துனரைப் பேருக்கு மன்னராக்கினார். அவரது பட்டப்பெயர் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. மந்திரி பிலிமத்தலாவையின் ஆசை நிறைவேறாதபடி ஸ்ரீவிக்கிரமராஜ சிங்கன் சிறப்பாக ஆட்சி புரியவே, வெறுப்புற்ற மந்திரி கபடமாய்ச் செயல்பட ஆரம்பித்தார்.

பிரிட்டீஷார் கண்டியைக் கைப்பற்ற பல முயற்சி செய்து தோற்றுப் போயிருந்த நேரம். மன்னர் தமிழரானாலும் அதிகாரிகளாகச் செயல்பட்டவர்களில் சில சிங்களர்களும் இருந்தார்கள். இவர்கள் அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த கொடுமைகளில் மந்திரிக்கும் உடன்பாடு உண்டு.

கண்டியைப் பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த பிரிட்டீஷாருக்கு நண்பரானார் மந்திரி பிலிமத்தலாவை. கண்டி மன்னர் மீது பல அவதூறான கதைகளையும், அவரைக் கொடுங்கோலனாகச் சித்திரிக்கும் நிகழ்ச்சிகளையும் ஆங்கிலேயர்கள் பரப்பினார்கள். இவைகளுக்கு அந்த மந்திரி பேருதவியாக இருந்தார்.

ஒரு நாள் மன்னர் தெல்தெனியாவுக்கு அருகில் மெதமசநுவரா என்னுமிடத்தில் தன் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அங்கு பிரிட்டீஷார் திடீரென்று தோன்றி மன்னரையும் குடும்பத்தினரையும் சிறைப்படுத்தினார்கள். இது நடந்தது 18 பிப்ரவரி 1815-இல். அலவரடிக் குடும்பத்தினரையும் பிரிட்டீஷார் கொழும்புக்குக் கொண்டு வந்தனர். அங்கு ஓராண்டு காலம் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இந்த ஓராண்டு காலம் முழுவதும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டிப் பலவகையில் பிரிட்டீஷாருக்கு இடைஞ்சல் செய்தனர். பிரிட்டீஷாருக்கு உடந்தையாக இருந்த மந்திரிக்கும் பதவி தராமல் மொரீஷியஸýக்கு அடித்து விரட்டினார்கள்.

மன்னர் கொழும்புவில் இருக்கும் வரை இது போன்ற தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும் எனக் கருதி எச்.எம்.எஸ். கான்வாலிஸ், எச்.எம்.எஸ். ஆன் என்னும் கப்பல்கள் மூலம் மன்னன் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனையும் குடும்பத்தினரையும் பிரித்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். சென்னையை ஆண்ட பிரிட்டீஷ் அரசோ, அவர்கள் அனைவரையும் வேலூர் கோட்டைச் சிறையில் அடைத்து வைத்தது.

வேலூர் கோட்டையில் சப்-ரிஜிஸ்தரார் அலுவலகம் இருக்கும் இடத்தில் மன்னரின் குடும்பத்தினர் வழிபட்ட துளசிமாடம் இன்றும் இருக்கின்றது. மன்னர் சிறையிருந்த இடம் இன்றைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ட்ரெயினிங் ஸ்கூல் இருக்கிறதே அந்த இடம் தான்! அவர் வேலூர் கோட்டைச் சிறையிலேயே வசித்து 1836-ஆம் ஆண்டு ஜனவரி 30-இல் காலமானார்.

பாலாற்றங்கரையில் அவரை அடக்கம் செய்தனர்.

55. எம்.ஜி.ஆர். விடுத்த அறிக்கை!

ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கொள்ளுப் பேரன் தன்னைப் பற்றியும் தனது மூதாதையர் பற்றியும் மேலும் பல தகவல்களைத் தந்துதவினார்.

பிரிட்டீஷார் எங்களது வம்சத்தவரை அரசியல் கைதிகளாக மதித்து, எங்களது குடும்பங்களுக்கு மன்னர் மான்யம் அளித்து வந்தனர். அது 1832 முதல் 1948 வரை தொடர்ந்தது.

பின்னர் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னரும் இது தொடர்ந்தது. சேனநாயகா பிரதமராக இருந்த சமயம் தில்லியில் அவருக்கு கொடுக்கப்பட்ட விருந்து ஒன்றில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இலங்கைக்குள் எங்களது சந்ததியினர் நுழையக் கூடாது என்று பிரிட்டீஷார் போட்டிருந்த தடையை ரத்து செய்யக்கூடாதா என்று கேட்டேன். அந்தத் தடை இப்போது இல்லை; இலங்கை வந்து வாழ விரும்பினால் உதவி செய்வதாகவும் சொன்னார்.

நான் இலங்கைக்குச் சென்று அசோசியேடட் பிரஸ்ஸில் நிருபராகச் சேர்ந்தேன். அசோசியேடட்பிரஸ் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்று மொழிகளில் தினசரிகளையும், வார இதழ்களையும் நடத்திக் கொண்டிருந்தது. பின்னர் பண்டாரநாயகா, அசோசியேடட்பிரஸ் நிறுவனத்தை தேசியமயமாக்கினார். அதற்குப் பிறகு அங்கே பத்திரிகைச் சுதந்திரம் இருக்காது என்று ராஜினாமா செய்தேன். லண்டனில் சிறிது காலம் பணியாற்றினேன்.

இப்போது நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். என் தந்தையார் கோவிந்தசாமி ராஜா தமிழக அரசில் நிதித்துறையில் பணியாற்றியவர். அவர் பிறந்ததே வேலூர் கோட்டைச் சிறையில்தான். அவருடைய தந்தை வெங்கடசாமி ராஜா இலங்கையில் பிறந்தார்.

நான் படித்தது சென்னையில்தான். பட்டுக்கோட்டை அழகிரிசாமி எங்களது வம்சாவளி. நானும் அவரும் அக்கா-தங்கையரை மணந்து கொண்டோம்.

கண்டியில் தமிழ் மன்னர்களின் ஆட்சியிலிருந்த சிங்கள மந்திரிகள், அரசு ஆணைகள் யாவற்றிலும் தமிழிலேயே கையொப்பமிட்டனர் என்பதுதான் முக்கிய அம்சம். பல நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடித ஓலைகள் தமிழிலேயே இருந்தன என்பதும் வரலாற்றுச் சான்றுகள். இதற்கான ஆதாரங்கள் யாவும் கண்டி மியூசியத்தில் இன்றும் இருக்கின்றன. மந்திரியாய் இருந்த சிங்களவர்களுக்கும் பிரிட்டீஷாருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்திலும் தமிழில் தான் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு உரிமையில்லை என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. மன்னர்கள் இலங்கையில் தமிழர் பகுதியை மட்டும் ஆளவில்லை. அவர்கள் சிங்களவர் பெரும்பான்மையாக வசித்த பகுதிகளையும் ஆண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு எங்களது வம்சாவளியினரே சரித்திரச் சான்றாகத் திகழ்கிறார்கள். எனவே சிங்களவருக்கு எவ்வளவு உரிமைகள் இலங்கையில் உண்டோ அதற்கு அதிகமாக தமிழர்களுக்கும் உரிமை உண்டு” என்றார் கே.ஜி.எஸ்.ராஜசிங்கன் (குங்குமம் வார இதழ் 1983).

அஇஅதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு ஆகஸ்ட் 13-14, 1983-இல் சென்னையில் நடைபெற்றபோது ஜூலையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும், குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள், சிங்களக் கைதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் நலன் காக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி “ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை கருப்புச் சட்டை அணிய வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆகஸ்ட் 10-இல் நடைபெற்ற கண்டனக் கூட்டங்களில் அமைச்சர்கள் சோமசுந்தரம், கா.காளிமுத்துவின் உணர்ச்சிகரமான பேச்சுக்கள் குறித்து அக்டோபர் 17 அன்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., “”சோமசுந்தரமோ, காளிமுத்துவோ என்னை மீறிப் பேசமாட்டார்கள்.

அவர்கள் பேசுவதற்கு முன்பு என்ன கருத்துக்களைச் சொல்லப்போகிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் பேசுவார்கள். எங்களுக்குள் கருத்து ஒற்றுமை உண்டு. அப்படி கருத்து ஒற்றுமை இல்லை என்றால், இந்த அமைச்சரவையைக் கலைத்துவிட்டு வெளியேறுவோம் (28.10.1983-தினமணி) என்று கூறினார்.

“தமிழர்கள் தலைவர்களிடம் நிபந்தனையுடன்தான் பேசுவேன்’ என்று ஜெயவர்த்தன கூறியதாக ஆகஸ்ட் 30, 1983 செய்தியைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ஜெயவர்த்தனாவுக்கு ஒரு முதலமைச்சர் பதில் கூறி நேரடி அறிக்கை விடுவது மரபு இல்லை என்று தெரிந்தும், ஓர் அறிக்கை வெளியிட்டார்.

“”தமிழர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்கள்; கட்டுண்டிருக்கிறார்கள். ஜெயவர்த்தன தயவு செய்து தமிழகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிட வேண்டாம் என்று மட்டும் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, இருப்பது ஓர் உயிர்தான், போவதும் ஒரு முறைதான்’ என்று அறிஞர் அண்ணா கூறியதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈழத்தில் நடைபெறுகின்ற இனப்படுகொலை காரணமாகத் தமிழகத்தில் உள்ள ஐந்து கோடி தமிழர்களும் சீறிப் பாயக்கூடிய நிலையை ஜெயவர்த்தன நிச்சயமாக ஏற்படுத்தக்கூடாது என்று தமிழக முதல்வர் என்ற முறையிலும், அஇஅதிமுகவை நிறுவியவன் என்ற முறையிலும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சிங்களப் பேரினவாத அரசுக்கு, அமெரிக்க அரசு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்து அக்டோபர் 12, 1983 அன்று அமெரிக்காவின் போக்கைக் கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. அன்றைய தினம் அமெரிக்கத் தூதரக துணை கான்சல் ராய் விக்டேக்கரிடம் ஒரு மனு ஒன்றினையும் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்தார். அந்த மனுவில், “”மனித உரிமைகள் குறித்து நாள்தோறும் பேசி வருகின்ற அமெரிக்க அரசு, இலங்கைத் தமிழர் படுகொலைகள் குறித்து கண்டனம் எதுவும் தெரிவிக்காமல், தனது பாதுகாப்பு அமைச்சரை ரகசியமாக இலங்கைக்கு அனுப்பி வைத்தது தமழக மக்களின் உள்ளத்தைப் புண்படுத்தியுள்ளது. இதன்மூலம் இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

அமெரிக்கா ஆயுத உதவி அளிக்கும் அதேவேளையில், தனது நலனுக்காக இலங்கைத் தமிழர் பிரச்னையை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்த முயல்வதைக் கைவிட்டு, திருகோணமலையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்கும் முயற்சியையும் கைவிட வேண்டும்” (13 அக்டோபர் 1983 – தினமணி) என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

நெடுமாறன் படகு மூலம் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் அறிவித்த நிலையில் உரிய நாள் வந்ததும், ராமேஸ்வரத்தில் இருந்து அனைத்து படகுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து எழுந்த விமர்சனத்துக்குச் சட்டப்பேரவையில் 15 நவம்பர் 1983 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த பதிலில், “”நெடுமாறன் படகில் அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா- தடுப்புக் கருவிதான் இருக்கிறதா; ஒன்றும் இல்லை; மனத்துணிவுதான் இருக்கிறது.

அங்கே போய் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? அதனால்தான் படகுகள் இல்லாமல் செய்தோம்… நான் போய் பிரசாரம் செய்யமுடியாது; நெடுமாறன் செய்கிறார்; ஆட்கள் வருகிறார்கள்; பத்திரிகைகளில் செய்தி வருகிறது; வரட்டும். அது, அந்த நாட்டுக்கு நல்லதாக அமையட்டும்.

உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காகவே அவரைக் கைது செய்யாமல் விட்டோம் (சட்டமன்ற உரை).

அக்டோபர் 1984-இல் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றிய நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி மட்டும் எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் உடல்நிலை தேற, தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் தெரிவித்தார்.

இந்தச் சமயம் பார்த்துப் பிரதமர் இந்திரா காந்தி ஒருநாள் அதிகாலை தனது மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு மரணமுற்றார். இந்தச் சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியுற வைத்தது.

இந்திரா காந்தி சுடப்பட்டு மரணமடைந்தார் என்று கேள்விப்பட்டதும் தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்திரா காந்தி, ஈழத் தமிழர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுவார் என்று அவர்கள் நம்பியிருந்தனர்.

இந்திரா காந்தி சுடப்பட்டு வீழ்ந்த செய்தி மக்களுக்கு போய்ச் சேரும் முன்பாக அடுத்த பிரதமர் ராஜீவ் காந்தி என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரும் ராஜீவுக்கு பதவிப் பிரமாணமும் செய்வித்தார்.

இரவு பகலாக இந்திரா காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த காட்சிகளை இந்தியத் தொலைக்காட்சி அஞ்சல் செய்தது.

அடுத்த பதினோராவது நாளில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தது. எம்.ஜி.ஆருக்கு அடுத்த நிலையில் இருந்த நிதியமைச்சர் நெடுஞ்செழியன் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டுத் தேர்தலையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார்.

மத்தியில் ராஜீவ் ஆட்சி. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைந்தது. எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், உடல்நலம் குன்றிய நிலையிலும் முதல்வராகத் தொடர்ந்ததும் இப்போது சரித்திரமாகிவிட்ட நிகழ்வுகள். அதனால் நாட்டு மக்களிடையே ஏகப்பட்ட பரபரப்பு.

அங்கே இலங்கையிலோ இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும் சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் சாதகமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்கள் தமிழர்களைக் கொன்று குவிப்பதுதான் நின்றதா? இல்லை; அது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

தமிழ் விடுதலைப் போராளிகளும் தங்களால் முடிந்த வரை எதிர்த்தாக்குதல் தொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

56: பண்டாரியின் பாராமுகம்!

சென்னைக் கடற்கரையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பெற தி.மு.கழகப் போராட்ட அறிவிப்பு மாநாடு ஒன்று 24.3.85-இல் நடந்தது.

அந்த மாநாட்டில் மு.கருணாநிதி பேசுகையில், “”பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்னையைத் தீர்ப்பதாக இந்திய அரசு எடுத்துக் கூறி அதற்கென முயற்சிகளை மேற்கொண்டாலும் கூட; நாம் அப்போதே சுட்டிக்காட்டி எச்சரித்தது போல, பேச்சு வார்த்தை என்கிற சாக்கில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு வெளிநாடுகளின் உதவியைப் பெற்று இலங்கைத் தமிழினத்தை அடியோடு அழிக்கத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டுவிட்டார்…

இடையில் சில மாதங்கள் நின்றிருந்த கொடுமைகள் மீண்டும் தலை தூக்கத் தொடங்கிவிட்டன. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அப்பாவித் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டு, குழந்தைக் குட்டிகள் கொல்லப்பட்டு, இளையோர் முதியோர் அனைவரும் சுட்டு வீழ்த்தப்பட்டு அந்தக் கோரத் தாக்குதல்களில் எஞ்சி இருப்போர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தமிழகம் நோக்கி அன்றாடம் அகதிகளாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் தி.மு.கழகம் தனது கடமையை ஆற்றிடப் பொதுக்குழுவில் சில முடிவுகளை எடுத்துள்ளது” என்றார்.

வைத்த கோரிக்கை, இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மெத்தனமாக இல்லாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ராணுவத்தை அனுப்பி இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதும் ஆகும்.

தமிழ் ஈழத்தைத் தாம் அங்கீகரிப்பதாகத் தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி தெரிவித்தார். அத்துடன் மு.கருணாநிதி, காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்டபோது கைதாகிச் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாள் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

“”நமது கழகம்” சார்பில் எஸ்.டி.சோமசுந்தரம் மதுரையில் ரயில் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கைக்கு வெடிமருந்துகள் நவீனரக துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகளையும் ஏற்றிக் கொண்டு வந்த விமானம் ஒன்று பெட்ரோல் நிரப்புவதற்காகத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்கியது.

இந்தச் செய்தி அறிந்த தமிழ்நாட்டுத் தலைவர்களும் மக்களும் பதறித் துடித்துப் போயினர்.

அந்த விமானத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அந்த விமானம் பெட்ரோல் நிரப்பப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற மேலவையில் கேள்வி எழுப்பினர்.

அப்போது தி.மு.கழக உறுப்பினராக இருந்த வை.கோபால்சாமி (வைகோ), இலங்கையில் தமிழர்கள் கோழிக் குஞ்சுகளைப் போலக் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்று தமிழர்களின் வேதனையை எடுத்துக் கூறி மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தினார். அப்போது மத்திய வெளியுறவு அமைச்சர் குர்ஷித் ஆலம்கான், “கோழிக்குஞ்சு சைவமா? அசைவமா?’ என்று பிரச்னையின் ஆழத்தையும் அதன் கடுமையையும் புரிந்து கொள்ளாமல் நகைச்சுவை எனக் கருதி கிண்டல் செய்தார்.

இப்படி அமைச்சர் குர்ஷித் ஆலம் கான் கேட்டதும், “”இதயமற்றவரே, தமிழினம் அழிக்கப்படுகிறது என்ற செய்தி கிண்டலாகவும், கேலியாகவும் போய்விட்டதா? ஏற்கனவே நொந்து போயிருக்கும் தமிழர்களை மேலும் புண்படுத்திவிடாதீர்கள்” என்றார் வை.கோபால்சாமி எம்.பி.

இந்திய அரசின் வெளிவிவகாரச் செயலர் ரோமேவு பண்டாரி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து மாநிலங்கள் அவையில் வெளிவிவகாரத் துறை இணையமைச்சர் குர்ஷித் ஆலம்கான் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையைப் பற்றி விளக்கங்கள் கேட்டு, 30.3.85 அன்று நாடாளுமன்ற தி.மு.கழகக் குழுத் தலைவர் முரசொலி மாறன் எம்.பி., மேலவையில் கேள்வி எழுப்பிப் பேசினார்.

“”இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் பண்டாரியின் விஜயத்தைப் புகழ்ந்து எழுதியிருக்கின்றன. அதே சமயம், ஜி.பார்த்தசாரதியின் பழைய முயற்சிகளைக் கண்டித்திருக்கின்றன.

இலங்கையிலே இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தபோது அங்கு சென்ற நமது வெளி விவகாரத் துறைச் செயலர் பண்டாரி, குசலம் விசாரித்துவிட்டு வந்திருக்கிறாரே தவிர, இனப்படுகொலையைக் கண்டித்ததாகத் தெரியவில்லை.

எத்தனையோ முக்கியமான பிரச்னைகள் இருக்கின்றன. உதாரணமாக, யாழ்ப்பாணம் ராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டிருக்கிறது. அது ஒரு பெரிய சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருக்கிறது. பாதுகாப்பான இடம் என்ற போர்வையில் ராணுவத்தினர் அங்கிருந்து கொண்டு எதையும் பொருட்படுத்தாமல் தமிழர்களை தினமும் சுட்டுக் கொல்கிறார்கள்.

நமது செயலர் பண்டாரி இது குறித்துப் பேசினாரா? இந்தப் படுகொலைகளை எப்போது நிறுத்துவீர்கள் என்று கேட்டாரா?

இலங்கை அரசு மிகத் தந்திரமாக ஒரு குடியேற்றக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. சிங்களவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதோடல்லாமல் ஆயுதங்களையும் அளித்து அவர்களைத் தமிழர்கள் அதிகமாக வாழுமிடங்களில் குடியேற்றுகிறது. இதன் மூலம் தமிழர்களின் மக்கள்தொகை அளவையே குறைத்துவிட முயற்சிக்கிறார்கள். அதற்காக, கூட்டம் கூட்டமாய் தமிழர்களை அங்கிருந்து விரட்டியடிக்கிறார்கள்.

நமது வெளி விவகாரத் துறைச் செயலர் இந்த பாதகமான குடியேற்றக் கொள்கை பற்றி விவாதித்தாரா? தமிழர்கள் தாங்கள் வாழுமிடங்களிலிருந்து துரத்தியடிக்கப்படுவதைக் கண்டித்தாரா?

அண்மையில்தான், ஐ.நா. சபையின் மனித உரிமைக் கழகம், தீவிரவாதிகளைத் தாக்குவது என்ற பெயரால் ஏதுமறியாத தமிழர்களை வித்தியாசம் பாராமல் இலங்கை அரசு கொன்று குவிப்பதாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. 1983-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 5000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதே அவையில் இந்திரா காந்தி அம்மையார் பேசும்போதுகூட இலங்கையில் நடப்பது ஓர் இனப்படுகொலை என்று குறிப்பிட்டார்.

இப்போது இலங்கை சென்று திரும்பியிருக்கிற நமது வெளியுறவுச் செயலர் பண்டாரி அந்த இனப்படுகொலையைக் கண்டித்தாரா? “எப்போது நீங்கள் இனப்படுகொலைகளை நிறுத்தப் போகிறீர்கள்?’ என்று கேட்டாரா? இன்னமும் இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்தினால், இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கத் தலைப்பட்டாரா?

அப்படியெல்லாம் செய்ததாகத் தெரியவில்லை. அவர் இலங்கையிலே வாழும் தமிழர்களது உரிமைகளைச் சரணடையச் செய்திருக்கிறார் – இலங்கைத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் – என்று நான் குற்றம் சாட்டுகிறேன்” என்று தன் உரையில் குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து 1985-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் நாள் செங்கல்பட்டில் நடைபெற்ற கடையடைப்பு-உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜெ.ஜெயலலிதா எம்.பி., மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆனால், இலங்கையில் அசம்பாவிதங்கள் தீவிரமானால் அனைத்து மக்களும் பதறிப் போகிற நிகழ்ச்சி அவ்வப்போது நடந்து கொண்டிருப்பது போல், தமிழ் ஈழத்தை எதிர்க்கும் தமிழகக் கட்சிகளிடமும் இந்தப் பதற்றம் தென்பட்டது. திமுக, அதிமுக மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் இலங்கையில் நடத்தப்படும் இனப்படுகொலையை வன்மையாகக் கண்டித்து அறிக்கைகள் விட்டன.

57. அறிஞர் அண்ணாவின் தலையங்கம்!

அறிஞர் அண்ணா அவர்கள் 1958 ஜூன் 29, திராவிட நாடு இதழில், காலா காலமாகத் தமிழன் இலங்கையில் முறை வைத்துக் கொண்டு எவ்வாறு நசுக்கப்படுகிறான் என்பதற்கு எடுத்துக்காட்டாக எழுதிய தலையங்கக் கட்டுரை இதோ…

“”தெருக்களில் தமிழர்கள்மீது பெட்ரோலைக் கொட்டி அவர்கள் உயிருடன் எரிக்கப்படுகையில், ஜனங்கள் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினர். கடந்த மூன்று வார பயங்கர ஆட்சியில் முதல் சில தினங்களில் மாண்டவர்கள் மட்டும் குறைந்தபட்சம் 800 பேர் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் கலகங்களில் கொலையுண்டவர்கள். 400 முதல் 500 பேர் வரையிலாவது கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது அநேகரின் மதிப்பீடு.” தமிழர்கள் தீவின் வடபகுதிக்கு ஓடுகிறார்கள். குறைந்தபட்சம் 20,000 பேர் தம் வீடு வாசல்களை விட்டு ஓடியிருப்பார்கள். இந்தத் தகவலை வெளியிட்டிருப்பது, தி.மு.க. அல்ல! லண்டன் மாநகரிலிருந்து வெளிவரும் “”டெய்லி டெலிகிராப்” எனும் ஏட்டின் நிருபர். இலங்கையிலிருந்தால் இச்செய்திகளை அனுப்ப இயலாதென்று சென்னைக்குப் பறந்துவந்து, இங்கிருந்து ஜூன் 29-ஆம் தேதி இந்த விவரங்களை அனுப்பியிருக்கிறார். லண்டனுக்கு!! “”தினமணி” ஏடு, இதனை எடுத்து, ஓரளவு போட்டிருக்கிறது. லண்டனிலிருந்து வெளிவரும் நியூ ஏட்டின் நிருபர் அவர். அவருக்கு, இவ்வளவு அக்கறை! பறந்துவந்து, சென்னையிலிருந்து எழுதி அனுப்புகிறார்!! இலங்கையிலிருந்து நடந்ததென்ன என்பதைப் பற்றிச் சரியான விவரம் யாருக்கும் கிடைக்கவில்லை. நிருபர் பறந்து வருகிறார், செய்தி எடுக்க! இந்தியாவின் ஹை கமிஷனராக இலங்கையில் வீற்றிருக்கும் கண்டேவிய என்பார் பறந்தும் வரவில்லை-அதிகாரியையாவது அனுப்பி விவரம் தெரிவித்ததாகவும் தகவலில்லை!! நெஞ்சு கொதிக்குமளவிலும், உள்ளம் எரிமலையாகும் விதத்திலும் ஓராயிரம் செய்திகள் வருகின்றன. இலங்கைத் தமிழர்படும் அவதிகள் பற்றி… ஆவலுடன் அச்சமும் இங்குள்ள ஒவ்வொருவரையும் பிடித்தாட்டுகிறது. அங்கே, தமிழர்களின் நலன் பேணும் பொறுப்பிலிருப்பவரோ, பேசாதிருக்கிறார். அவரை அந்த வேலைக்கு அனுப்பிய தில்லி பீடமோ ஏதும் செய்யவில்லை. தில்லியின் அடிவருடி போல் விளங்கும் சென்னை அரசோ ஆகட்டும் பார்க்கலாம் போக்கிலேயே உள்ளது. தி.மு.க. உதித்த நாள் முதல், “”தமிழர்கள் சென்று வாழும் வெளிநாடுகளிலே எல்லாம் கூடிய வரையில் ஒரு தமிழரையாவது ஹை கமிஷனராக நியமிக்க வேண்டும்; அப்போதுதான், தானாடா விட்டாலும் தன் சதையாடும்; கொஞ்சமாவது தமிழர் தம் பிரச்னை புரியும்” என்று கூறிவருகிறோம். நடைபெற்றுள்ள பல மாநாடுகளில் தீர்மானம் மூலமும் அரசுக்கு மக்கள் குரலை எடுத்துக்காட்டி வந்துள்ளோம். தில்லி எவ்வளவு தான் செவிடாக இருந்தாலும் ஒரு தமிழர் ஹை கமிஷனராக இருந்தால் அடிக்கடி சங்காவது ஊதிக் கொண்டிருப்பாரல்லவா, என்கிற சபலம் நமக்கு. அங்கே இந்தியத் தூதராக ஒரு வடவர் இருக்கிறார்! வடவர்களுக்குத்தான் தென்னாட்டின் பிரச்னைகள் என்றாலே புரிவதில்லையே!! சென்ற கிழமை பிரஜா சோஷியலிஸ்டு கட்சியின் பொதுக்காரியதரிசி எனப்படும் என்.ஜி. கோரே என்பார் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுப் பல ஊர்களிலே பேசியிருக்கிறார். அகில இந்திய ரீதியிலிருக்கும் ஓர் இயக்கத்தின் காவலர் அவர்! அவரிடம் “”இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றித் தங்கள் கருத்து யாது?” என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். “”அந்தப் பிரச்னையின் முழு விபரமும் எனக்குத் தெரியாது. எனவே நான் அதைப் பற்றி அதிகம் சொல்லுவதற்கில்லை” என்று பதிலிறுத்திருக்கிறார். கோரே அவர்களின் கூற்றில் அடங்கியிருக்கும் அடக்கத்தை நாம் பாராட்டுகிறோம். “”விபரம் அறியேன்” என்று வெளிப்படையாக அவர் வெளியிட்ட தன்மையை மெச்சுகிறோம். அதே சமயத்தில் ஒரு அகில இந்தியக் கட்சிக்குத் தமிழர்களின் பிரச்னை குறித்து எந்தளவுக்குப் புரிந்திருக்கிறது என்கிற உண்மையையும் நாம் உணரத் தவறக் கூடாது. கோரேக்கு மட்டுமல்ல, அ.இ. கம்யூனிஸ்டு கட்சியின் டாங்கேயானாலும் அஜாய்குமாரானாலும், அகில இந்தியக் காங்கிரசின் நேருவானாலும், தேபரானாலும் அவர்களுக்கெல்லாம் தமிழர்களின் பிரச்னை பற்றி அறிந்திடும் ஆவலும் அக்கறையும் அதிகம் இருப்பதில்லை. ஏனெனில் இந்தியா ஒரு உபகண்டம், அதிலும் தென்னகம் ஒரு மூலையில் கிடக்கிற பகுதி. இதன் துயரங்களையும் சோகங்களையும் நாம்தான் ஒருவருக்கொருவர் கட்டி அழுதுகொள்ள வேண்டுமே ஒழிய வடவர்களை நம்புவதிலும் அவர்கள் மூலம் பரிகாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. இலங்கையில் தமிழர்களுக்கேற்பட்ட அளவுக்கு இன்னலும் துன்பமும் ஒரு பத்து மார்வாடிகளுக்கும், குஜராத்திகளுக்கும் ஏற்பட்டிருக்குமானால் அவர்களது உள்ளமெலாம் பதறும். நேரு அவர்கள் “குளு’வுக்குப் போய் குளிர்ச்சி தேட மாட்டார்! கொதிக்கிறதே உள்ளம் என்று குமுறுவார்; அலறுவார்; அறிக்கைகள் விடுப்பார்; இலங்கைக்கு அதிகாரிகளையும் அனுப்புவார்!

பெட்ரோலைக் கொட்டி எரிக்கப்பட்டனர்.
மாண்டோர் தொகை. 300-க்கு மேலிருக்கும்.
வீடுவாசல்களை விட்டு ஓடினார்கள்.
கொள்ளையடிக்கப்பட்டனர்.
சூறையாடப்பட்டன. இப்படிச் செய்திகள் வருகின்றன. திடுக்கிடுகிறோம்; திகைக்கிறோம். ஏனைய அகில இந்திய கட்சிகளைப் போலன்றி இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னை நமக்கு நன்றாகப் புரிகிறது. அங்குவாழ் தமிழர் தம் உழைப்பும் வியர்வையும் இலங்கையின் வளத்துக்கு எவ்வளவு பயன்பட்டிருக்கிறதென்பதை நம்மால் அறிய முடிகிறது. இலங்கையும் தமிழகமும், இன்று நேற்றல்ல. சரித்திர காலந்தொட்டுச் சகோதர நாடுகளாகும்!

அங்கு இப்போது நடைபெறும் அமளிகளை இலங்கை முழுவதிலும் உள்ள சிங்களர் அனைவரும் விரும்புவர் என எண்ணுவதில்லை. படிப்பாளிகளும் நாகரிக மேன்மையும் நிரம்பிய அங்கு, வெறி கொண்டவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதல்ல; நல்லோரும் இருப்பார்கள். அதனை உணர்ந்த காரணத்தால்தான் கடந்த 22-ஆம் தேதி, நாடெங்கும் “இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள்’ நடத்திய தி.மு.க. பின்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. சம்பந்தப்பட்டோர் அனைவரது பார்வையிலும் படட்டும் என்று மீண்டும் அதனை இங்கு வெளியிடுகிறோம். இலங்கையிலுள்ள ஒரு சில பொறுப்பற்ற சிங்கள அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் வெறிச் செயல்களுக்கு ஆளாகி உயிரையும், உரிமையையும், உடமையையும் இழந்து அவதியுறும் இலங்கைவாழ் தமிழர்களின் நிலை கண்டு இக்கூட்டம் மிகவும் இரங்குகிறது.

நீண்ட காலமாக இலங்கையைத் தாயகமாகக் கொண்டுள்ள தமிழர்களுக்கு நியாயமாக அளிக்கப்பட வேண்டிய ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு இலங்கை அரசியலாரை இக்கூட்டம் விரும்பிக் கேட்டுக்கொள்கிறது.

அந்தப்படிக்கு இலங்கை அரசியலாரை இணங்க வைக்கும் முறையில், தங்களுடைய நல்லுறவையும், செல்வாக்கையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்த வேண்டும் என்று இந்தியப் பேரரசினரை இப்பொதுக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

அந்த வகைக்கு இந்தியப் பேரரசினரைச் செயல்படத் தூண்டுவதற்கு ஆவனவெல்லாம் செய்யுமாறு சென்னை அரசியலாரை இந்தப் பொதுக்கூட்டம் வற்புறுத்துகிறது.

இலங்கைத் தமிழர்தம் பிரச்னையில், சுமுகம் ஏற்படவேண்டுமென்பதில், தி.மு.க. எவ்வளவு அக்கறையும் விருப்பமும் கொண்டிருக்கிறது என்பதை, தீர்மானத்தின் வாசகங்கள் விளக்கும்.

தில்லியும் சென்னையும் எவ்வளவுதான் இலங்கைவாழ் தமிழருக்கு இதுநாள் வரையில் “துரோகம்’ செய்திருந்தாலும், இனியேனும் கொஞ்சம் சிரத்தை கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்”.

1958-இல் அறிஞர் அண்ணா அவர்கள் பிரச்னை எப்படி இருந்ததோ அதேபோன்ற பிரச்னைகள் இன்றும் கடுமையாக உருமாறி இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தியா-தமிழ்நாடு-இலங்கை ஆகிய மூன்றிலுள்ள ஆட்சியாளர்களின் போக்கு மட்டும் மாறவே இல்லை. இருந்தாலும் தாய்த்தமிழகத்தின் தமிழ் இனமான உணர்வுள்ள தமிழர்கள் அனைவருமே தமது துக்கத்தைச் சுமந்து கொண்டு இலங்கைத் தமிழனுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

58: அச்சத் தீவாக மாறிய கச்சத்தீவு

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் ராஜீய உறவு இருக்கிறது என்பதையும், அமெரிக்கா, வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் இந்த இரண்டு நாடுகளையும் பாதுகாக்கக் கூடிய கடமையில் இருக்கிறது என்பதையும் 1984 மே 25-ஆம் தேதியன்று அமெரிக்கத் தூதுவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி தெளிவாக்கியது. “”இஸ்ரேலின் நலனைக் காக்கும் பிரிவு ஒன்று இலங்கை அமெரிக்கத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ளது. அது இஸ்ரேலிய அதிகாரிகளின் மேற்பார்வையில் இயங்கும்” என்று அவர் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

இலங்கைக்கு இஸ்ரேலினது மொஸôத்தின் வருகை பற்றி யாருக்கேனும் கொஞ்ச நஞ்ச சந்தேகம் இருக்குமானாலும் அதனையும் இலங்கைப் பாதுகாப்பு மந்திரி அதுலத் முதலி அடியோடு போக்கிவிட்டார்.

“”தமிழர்கள் மற்றும் அவர்களது பயங்கரவாதத்தை எதிர்க்கச் சிங்கள மக்கள் அனைவருக்கும் ஆயுதம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இல்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு ஏஜென்சியான “ஷின்பெத்’தின் உதவியின் மூலம் விரிவான உளவு வலைப் பின்னலைக் கட்டமைக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். மேலும் இஸ்ரேலிய உளவு ஏஜெண்டுகள் மூலம் சிங்கள வீரர்கள் பெற்ற பயிற்சியானது மிகச் சிறப்பான ஒன்றாகும். இதுவரை இப்படி ஒரு பயிற்சியை அவர்கள் பெற்றதில்லை…” இப்படி அதுலத் முதலி பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.

இவரால் புகழப்படும் “மொஸôத்’தின் கடந்த கால வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், நெஞ்சம் நடுங்கும்; உதிரமும் உறைந்துவிடும்.

1970-ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவால் வெளியேற்றப்பட்டவர் டேவிட் மாட்னி என்ற இஸ்ரேல் நாட்டு ராஜதந்திரி.

இவர் இலங்கையில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்குக்காக உளவு வேலை பார்த்த குற்றத்திற்காகத்தான் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா இவரை இலங்கையை விட்டுத் துரத்தி அடித்தார். அதே டேவிட் மாட்னி, இலங்கை வந்தவுடன் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் “”எங்கள் நட்பை நாங்கள் புதுப்பித்துக் கொண்டது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியுள்ளார்.

ஆனால் தமிழ் மக்களோ அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தார்கள். மொஸôத் இலங்கைக்குள் இறங்கிய சில நாள்களிலேயே, தமிழர்களின் ரத்தம் ஆறாக ஓடியது. சித்திரவதைக் கொடுமைகள் உச்சநிலைக்கு வந்துவிட்டன. ராணுவமே இத்தகைய கொடுமைகளில் இறங்கலாமா… சொந்த மக்களைக் கொன்று குவிக்கலாமா என்று கேட்டதற்கு இலங்கை அரசின் பதில் என்ன தெரியுமா…?

“இலங்கை ராணுவத்தை நாங்கள் நவீனமயப்படுத்துகிறோம்’ என்பதுதான்!

இதுபற்றி ஜூன் மாதம் 2-ஆம் தேதி வெளிவந்த டைம்ஸ் ஆப் இந்தியா இதழ்:

“”இஸ்ரேல்-இலங்கை உறவு புதுப்பிக்கப்பட்டவுடன் சிங்கள ராணுவத்திற்கு மிகக் குறுகிய காலத்தில் அதிநவீன தொழில்நுட்ப ரீதியாகவும், தந்திரோபாய ரீதியாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது” என்று கூறுகிறது.

மேலும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொலை வெறிப் பயிற்சி அளிக்க இலங்கை அரசு தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுமா…?

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள, ஒரு காலத்தில் இந்தியாவிற்குச் சொந்தமாய் இருந்த “”கச்சத்தீவு”.

இந்தக் கச்சத் தீவைத்தான் இந்திரா காந்தி அரசு 1974-ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தாரைவார்த்துக் கொடுத்தது.

கச்சத் தீவை இப்படி அநியாயமாக தானம் கொடுக்கலாமா என்று கேட்டபோது, இந்திரா காந்தி அரசு சொன்ன காரணம்:

“”லால்பகதூர் சாஸ்திரியும், ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தம் காலாவதி ஆகாமல் காப்பாற்றவும்-இலங்கையுடன் நல்லெண்ண நட்புறவு கொள்வதற்கு ஓர் அடையாளமாகவும்தான் கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்படுகிறது” என்பதே!

இந்த விளக்கத்தைச் சொல்லி அப்போது தமிழக மக்கள் கிளப்பிய எதிர்ப்புக்குரலை வெற்றிகரமாக அடக்கிவிட்டார் இந்திரா காந்தி. எந்தக் கச்சத் தீவை இலங்கைக்குப் பட்டா செய்து கொடுத்து, இந்திய-இலங்கை நட்புறவை வளர்க்கப் போவதாக மார்தட்டினாரோ அதே கச்சத் தீவு இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடமாக, இந்திய மக்களுக்கு அச்சம் தரும் அச்சத் தீவாக மாறிவிட்டது.

கச்சத் தீவில் சிங்கள ராணுவம் பயிற்சி மேற்கொண்ட பிறகு இலங்கையின் ஒடுக்கு முறையின் கொடூரம் கடுமையாக அதிகரித்தது.

வல்வெட்டித்துறை, மன்னார் போன்ற கடற்கரைப் பகுதிகளில், விடுதலைக்குப் போராடும் தமிழ் இளைஞர்களை ஒடுக்குவது என்ற பெயரால் கடற்கரைப் பகுதியில் “”துடைத்து ஒழிக்கும்” திட்டம் ஒன்று நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

“”துடைத்து ஒழிப்பது” (Search and destroy) என்பது பாலஸ்தீனர்களையும் அரபுக்குடிகளையும் விரட்டி அடிக்க யூதர்கள் கடைப்பிடித்த ராணுவ நடவடிக்கை.

அதன்மூலம் எண்ணற்ற பாலஸ்தீனிய பகுதிகளும் அகதிகள் முகாம்களும் பீரங்கியின் துணையோடு கொளுத்தப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் வெகுதொலைவிற்கு ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்ட அதே கதை இலங்கையில் கோலாகலமாக மொஸôத்தின் பாணியைப் பின்பற்றி நடந்தேறியது.

குறிப்பாகச் சொல்வதானால் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு “”நாடற்ற (யூத) மக்களுக்காக, மக்களற்ற நாடு” என்ற முழக்கத்தை முன்வைத்து யூதர்கள் பாலஸ்தீனியர்களின் சொந்த நாடு அவர்களிடமிருந்து எப்படி அபகரிக்கப்பட்டதோ அதேபோல பாரம்பரிய தமிழ்க் குடிகளிடமிருந்து அவர்களது ஈழ மண் சிங்களவர்களால் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

59. சுதந்திர நாள் விருந்தினராக அமிர்தலிங்கம்!

இலங்கையில் 1983-இல் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது, உயிருக்குப் பயந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்தனர். இவர்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் அகதி முகாம்கள் திறக்கப்பட்டன.

அகதிகள் என்றால், அவர்களிடம் என்ன உடைமைகள் இருக்கும் என்பது வெளிப்படை. இதனால் தமிழக அரசுக்குத் திடீர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஓர் இரவுக்குள் தங்குமிட வசதி அமைத்துக் கொடுப்பதுடன் உணவு, குழந்தைகளுக்கு ரொட்டி, பால், குடிநீர், மருந்துகள், மின்சார வசதி, கழிப்பிட வசதி மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களான துணி வகைகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அகதிகளல்லாத இலங்கைத் தமிழ்க்குடிகளும் பிற நாடுகளில் குடியேறியதைப் போன்றே தமிழகத்திலும் குடியேறினர். இவர்களால் அரசுக்கு நேரடிச் செலவினம் எதுவுமில்லை. ஆனாலும் இலங்கையில் தமிழர்கள் பயமின்றி வாழக்கூடும் என்கிற நிலைமை ஏற்பட்டாலொழிய அவர்களால் இங்கிருந்து வெளியேற முடியாது என்கிற நிலைமை. இவ்வாறு அகதிகளும், இலங்கைக் குடியுரிமை உள்ளவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் – கிழக்குப் பாகிஸ்தானிய மக்களுக்காக வங்கதேசம் அமைக்க இந்தியா எடுத்த போர் நடவடிக்கை போன்று, இலங்கைத் தமிழர்களுக்கும் ஒரு தாயகத்தை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று இந்தியத் தலைமைக்கு நெருக்குதலை அளித்தனர். யாரும் திட்டமிட்டு ஏற்படுத்தாமலே இந்த எண்ணம் மக்களிடையே தன்னிச்சையாக எழுந்தது என்பதுதான் உண்மை.

கலவரங்கள் எல்லைமீறிப் போன நிலையில் பிரதமர் இந்திரா காந்தி, “அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம்தான் என்றாலும் இதைப் பார்த்துக் கொண்டு இந்தியாவால் சும்மா இருக்க இயலாது’ என்றார்.

அவரின் பதில் இருவேறு நிலைகளைக் கொண்டிருந்தது. வேறொரு நாட்டில் ஏற்படும் குழப்பங்களைப் பார்த்து கருத்து தெரிவிக்கும் பாணியிலும், அதேசமயம் தனது கண்டனத்தை மறைமுகமாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையிலான குழு, பிரதமர் இந்திராவைச் சந்தித்து அளித்த மனுவில், “இலங்கையின் கொடிய காட்டுமிராண்டித்தனமான கொலைகளை அந்நாட்டின் உள்நாட்டு விவகாரமாகத் தள்ளிவிட முடியாது’ என்று உறுதியாகக் கூறப்பட்டிருந்தது.

அடுத்தடுத்த நாட்களில் சிங்களவர்கள் கொழும்பில் அமைந்திருந்த இந்திய நிறுவனங்களை, வங்கிகளை அடித்து நொறுக்கித் தீயிட்டுப் பொசுக்கினர். காலிப் பகுதியில் சாலையில் வந்து கொண்டிருந்த இந்தியத் தூதரக காரை மறித்தனர். காரில் இருந்தவரை இறங்கச் செய்தனர். அவரை ஒரு தமிழர் என்று நினைத்துத் தாக்க முற்பட்டனர்.

அவர் தான் தமிழரல்ல – ஆனால் இந்தியன் – ஒரு அதிகாரி என்று சொல்லிப் பார்த்தார். பயன் இல்லை. கொடுமையாகத் தாக்கப்பட்டார். அவரின் கார் உருட்டிவிடப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

அந்த அதிகாரியின் பெயர் மாத்யூ ஆப்ரகாம். “ரா’ அமைப்பில் ஓர் அதிகாரி. கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனக்கு நேர்ந்த துன்பத்தை இந்தியத் தலைமை அதிகாரி கிரிஷ் சந்திர சக்சேனாவுக்கு அனுப்பி வைத்தார். இந்தியத் தலைமைக்கு கோபம் வரவழைக்க இது ஒரு சரியான சான்றாதாரமாக அமைந்தது. பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களால் தூதுவர் அலுவலகம் நிறைந்து வழிந்தது.

இச்சம்பவங்களை அடுத்து, பிரதமர் இந்திரா காந்தி, “இலங்கையில் ஏற்பட்டுள்ள இனமோதல் இந்தியாவையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பிரச்னையில் இந்தியா பிற நாடுகளைப் போன்று நடந்து கொள்ள முடியாது என்று இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு (13 ஆக, 1983) கண்டனம் தெரிவித்தார்.

அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தது, 1968-இல் தான் உருவாக்கிய “ரா’ (தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஹய்க் அய்ஹப்ஹ்ள்ண்ள் ரண்ய்ஞ்) என்கிற அமைப்பு திரட்டித்தந்த தகவல்களின் அடிப்படையில்தான். இந்த அமைப்பு பிரதமரின் நேரடித் தலைமையில் இயங்குவதாகும். பிரதமரின் பார்வைக்கு வைக்கப்படுகிற தகவல்களின் பேரில் எடுக்க வேண்டிய முடிவை அவரே அறிவிப்பார்.

பிரதமர் இந்திரா காந்தி தனது ஆட்சிக் காலத்தில், அண்டை நாடுகளிடையே இருந்த நெருக்கத்தின் காரணமாக எழுதப்படாத சில விதிகளை நடைமுறைப்படுத்தி வந்தார். அதில் ஒன்று – தெற்காசிய நாடுகளில் சிக்கல்கள் எழும்போது, அதனைத் தீர்க்கும் விதத்தில், உதவி கோரப் பட்டால், அந்தக் கோரிக்கை முதலில் இந்தியாவிடம்தான் வைக்கப்பட வேண்டும் என்பதாகும். அதன்பின்னரே அதன் அண்டை நாடுகளுடன், தொடர்பு கொள்ளலாம். அப்படி உதவி கோரும் நாடு இந்தியாவுக்குப் பகை நாடாக இருக்கக் கூடாது – என்பது மிக முக்கியம்.

இலங்கையில் 1971-இல் ஜனதா விமுக்தி பெரமுனா நடத்திய கலவரத்தை இவ்வகையில்தான் இந்தியா தனது படைகளை அனுப்பி அடக்கியது. ஆனால் 1983 இனக் கலவரத்தில் இந்தியாவைத் தவிர்த்து, பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமன்றி இப்பிராந்தியத்திற்கு அப்பாலுள்ள இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் ஆயுதம் மற்றும் ராணுவ உதவியை இலங்கை கோரியுள்ளது என்றும் – எந்தெந்த விதமான உதவிகள் கோரப்பட்டுள்ளனவென்றும் ‘தஅர’ அமைப்பு தகவல்களைத் திரட்டித் தந்திருந்தது.

இவை மட்டுமன்றி, கலவரத்தால் தமிழர்கள் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும், பெரும் எண்ணிக்கையில் அங்கிருந்து மக்கள் வெளியேறுவது குறித்தும் கிடைக்கப்பெற்ற பிற தகவல்களின் அடிப்படையிலும்தான், இந்திரா காந்தி ஜெயவர்த்தனாவை எச்சரித்தார்.

எச்சரிக்கையின் கடுமை காரணமாக, ஜெயவர்த்தனா தனது ஆட்சியை அப்புறப்படுத்த இலங்கைத் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களத் தீவிரவாதிகளும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு குழுவும் முயல்கின்றன என்ற தகவலை ஆதாரமாக வைத்துத்தான் பிற நாடுகளின் உதவிகள் கோரப்பட்டதாக பதில் அளித்தார்.

இந்தப் பிரச்னையில் “தமிழர்கள்’ என்ற வகையில் தமிழ்நாடு முழு அளவில் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்தியாவிடம் உதவி கோரப்படவில்லை என்றும் விளக்கினார். தற்சமயம் தனது ஆட்சிக்கு எந்த வகையிலும் ஆபத்தில்லை என்று அறிந்து கொண்டதும் உதவி கோரும் குழுக்களின் பிற நாட்டுப் பயணம் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்தத் தகவல் சரியானதுதானா என்று தில்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் விசாரித்தபோது, ஜெயவர்த்தனாவின் கூற்றுச் சரியில்லை என்பது தெரியவந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் புதுதில்லியில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதரகங்களிடமும் தொடர்பு கொண்டு, “இலங்கை இனப் பிரச்னையில் ஒதுங்கியிருக்கும்படி, கேட்டுக் கொண்டதுடன், “இதைமீறி ராணுவ உதவி செய்தால், அது இந்தியாவுக்கு எதிரான செயலாகக் கருதப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்டு 15, இந்திய சுதந்திர நாளன்று 1983-ஆம் ஆண்டின் சுதந்திர நாள் விருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அ.அமிர்தலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். இது இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்றைய தினம் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் உரையாற்றும்போது, “இலங்கையில் இனப்படுகொலை திட்டமிட்டு நடைபெறுகிறது. அதைப் பார்த்துக் கொண்டு இந்தியா சும்மா இராது’ – என்று குறிப்பிட்டார். இதற்கு முந்தின நாள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் குழுவினரை இந்திரா காந்தி சந்தித்தபோது, ஆதியோடந்தமாக செல்வா காலம் தொடங்கி, தற்போதைய நிலவரம் வரை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை ஆகஸ்ட் 17-இல் மீண்டும் தொடர்பு கொண்டு, “இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது – ஆனால் இலங்கை வன்முறைகள் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாடுகிற செயலாக அமைந்துவிட்டது – இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதும் கவலை அளிக்கிறது’ என்றும் இந்திரா காந்தி தெரிவித்தார்.

பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளையும், அங்கே தமிழர்கள் திட்டமிட்டுக் கொல்லப்படுவதையும் ஆதாரப்பூர்வமாகக் கேட்டறிந்தபோது, உண்மையிலேயே பதறிப்போனார். இந்தியப் பிரதமர், அமிர்தலிங்கம் மற்றும் ஏனைய ஈழத் தமிழர்களிடம் அவர்களது போராட்டத்திற்குத் தனது முழு ஆதரவும் உண்டு என்று தெரிவித்ததுடன், தமிழர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் உடனடியாக இறங்கத் தலைப்பட்டார்.

பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை The old fox என்று விமர்சித்ததன் மூலம் தெரியவருவது என்னவென்றால், அவர் நம்புதற்கு உரியவர் அல்ல என்பதுதான்.

60: போராளிகளுக்குப் பயிற்சி முகாம்!

1983-இல் ஏற்பட்ட இனக் கலவரத்தையொட்டிய தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு ஜெயவர்த்தனா உடன்படமாட்டார். அப்படி உடன்பட வைக்க வேண்டுமானால் ரகசியமான மாற்றுத் திட்டம் ஒன்றையும் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று, பிரதமர் இந்திரா காந்தியின் கொள்கை வகுப்பாளர்களான பாதுகாப்பு ஆலோசகர் ராமேஷ்வர் நாத் காவ் மற்றும் பிரதமரின் அலுவலக நிர்வாகிகள் நினைத்தனர்.

பலவகையிலும் ஆலோசித்து பிரதமர் இந்திரா காந்தியின் பார்வைக்குப் பாதுகாப்பு ஆலோசகர் காவ் “மிகவும் ரகசியம்’ என்று எழுதப்பட்ட ஒரு கோப்பை வைத்தார். அந்தக் கோப்பில் இருந்த செய்தி இதுதான்: “ஜெயவர்த்தனா, இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க ராணுவ நடவடிக்கையே தீர்வு என்று செயல்பட்டால் பிரதமர் இந்திராவுக்கு இருவகையில் பாதிப்பு ஏற்படும். ஒன்று அரசியல் நெருக்கடி, மற்றது தெற்கில் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து.

அரசியல் நெருக்கடி என்பது தமிழகத்தில் இருந்து உருவாகும். கூட்டணியின் புதிய நண்பரான எம்.ஜி.ஆர். நெருக்குதல் கொடுப்பார். தமிழகத்தில் மக்கள் இலங்கைப் பிரச்னையால் கொதிப்படைந்து இருக்கிறார்கள். இலங்கை மீது இந்தியா படையெடுத்துத் தாக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இரண்டாவது, அமெரிக்கா பக்கம் சாய்ந்துள்ள ஜே.ஆர். ஜெயவர்த்தனா ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு கண்டுவிட்டால் அது இந்தியாவின் தெற்கே, பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும். இது கவனத்துடன் அணுக வேண்டிய பிரச்னை – என்று குறிப்பிட்டதுடன், ஜெயவர்த்தனாவை வழிக்குக் கொண்டுவர வேண்டுமானால் பேச்சுவார்த்தை என்ற உத்திக்கிடையே போராளிக் குழுக்களுக்குத் தேவையான பயிற்சியைக் கொடுத்து அவர்களை பலசாலிகளாகவும் உருவாக்க வேண்டும்’ – என்றும் தெரிவித்திருந்தார், காவ்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு, அவர்கள் இலங்கையில் முகாமிட்டிருக்கும் நேரத்தில், இரு வழிகளில்தான் ஜெயவர்த்தனாவைப் பணியவைக்க முடியும் என்று இந்திராவும் நம்பினார். காரணம் கிழக்கு பாகிஸ்தானில் கிடைத்த வெற்றி. முக்தி வாகினி என்கிற போராளிக் குழுவினர் அதற்குப் பயன்பட்டனர்.

அதேபோன்ற “ரகசியத்திட்டப்படி’ செயல்படுமாறு தனது “மூன்றாவது ஏஜென்சிக்கு’ உத்தரவிட்டார். பேச்சுவார்த்தை நடக்கும் அதே வேளையில் போராளிக் குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களை பலமுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்பதே அந்த ரகசியத் திட்டமாகும். இந்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஜெயவர்த்தனாவை பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்குமாறு நெருக்குதல் அளிக்க வேண்டும். அப்படி அவர் ஒத்துக் கொள்ளவில்லையென்றால், அவரது நாடு சிதறுண்டு போகும் என்று உணர்த்தவே பயிற்சித் திட்டம் என கொள்கைத் திட்டம் உருவாயிற்று. (வேலுப்பிள்ளை பிரபாகரன் – டி. சபாரத்தினம் நஹய்ஞ்ஹம் ர்ழ்ஞ்)

இதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, நாம் அரசியல் ரீதியாக ஜெயவர்த்தனாவை பேச்சுவார்த்தை நடத்த நிர்பந்திக்கும் அதேவேளையில், போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளித்து, அவர்களைத் தகுதியானவர்களாக மாற்ற வேண்டும் – என்று கூறியதாகத் தெரிகிறது.

எம்.ஜி.ஆருக்கு இந்த அணுகுமுறை திருப்தி தரவில்லை. அவர், “”இது போதாது; இலங்கை மீது படையெடுக்க வேண்டும் என்பதே தமிழர்களின் உள்ளக்கிடக்கை” என்றார்.

“”அப்படியென்றால் தமிழர்களின் நிலை என்ன ஆகும்? அவர்கள் ஏற்கெனவே சிங்களவர் பிடியில் உள்ளனர். காமினி திசநாயக்கா என்கிற அமைச்சர் பேசியதை நாம் கவனிக்க வேண்டும்: எங்கள் மீது படையெடுக்க இந்தியாவுக்கு 24 மணி நேரம் தேவைப்படும் என்றால், அனைத்து தமிழச்சிகளையும் – தமிழ் சிசுக்களையும் – குழந்தைகளையும் கொன்று முடிக்க எங்களுக்கும் அதே 24 மணி நேரம் போதும் என்று பேசியிருக்கிறார்” எனக் கூறி முதல்வர் எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தினார் பிரதமர் இந்திரா காந்தி.

எம்.ஜி.ஆர். இந்திராவின் நிலைப்பாட்டிற்குச் சம்மதம் தெரிவித்து, பயிற்சி அளிப்பதற்கான வேலையில் உடனே ஈடுபடுவதாக கூறினார். (பண்ருட்டி ராமசந்திரன் நியூஸ்டுடே மே 2000-இல் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து)

மூன்றாவது ஏஜென்சிக்கு பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் காவ் தலைமை ஏற்கவும், பிரதமரின் அலுவலக இயக்குநர் சங்கரன் நாயர், “ரா’ அமைப்பின் தலைவர் கிரிஷ் சந்திர சக்சேனா உள்ளிட்ட குழுவினர் அவரின் கீழ் இயங்கவும் ஆரம்பித்தனர். போராளிக் குழுக்களுக்கு பயிற்றுவிக்கும் பொறுப்பு “ரா’வின் சென்னை அதிகாரியாக இருந்த டி.ஐ.ஜி. உன்னிகிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்டது. (இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்னையும் – எல்.டி.டி.ஈ. வெளியீடு பக்-10) அவருக்கு உதவி செய்யும் இலங்கைத் தமிழராக சந்திரகாசன் (தந்தை செல்வாவின் இரண்டாவது மகன்) இருந்தார். குட்டிமணி, தங்கதுரை ஆகிய இருவருக்கும் இவர் வழக்கறிஞராக இருந்ததால், குழுக்களின் நிலையை அறிந்தவர் என்பதால், இந்தப் பணி வழங்கப்பட்டது. (ஆதாரம்: அதே வெளியீடு)

பயிற்சி பெறப்போகும் முதல் குழுவாக “டெலோ’ அமைந்தது. டி.ஐ.ஜி. உன்னிகிருஷ்ணன் இதனைத் தேர்வு செய்வதற்கு காரணம் இந்தியா சொல்வதை நிறைவேற்றும் ஓர் இயக்கமாக அது இருந்தது என்பதுதான் (ஊழ்ர்ய்ற்ப்ண்ய்ங் 1985) ஈ.பி.எல்.ஆர்.எஃப். இயக்கம் இடதுசாரி என்பதாலும் ஈராஸ் இயக்கம் சிறு குழு என்றும் ஒதுக்கப்பட்டது.

இதன் பின்னர் இவ்விரு இயக்கங்களின் யாழ்ப்பாண அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் “”இந்தப் பயிற்சியை இயக்கத்தவர் பெறாவிட்டால் அழிந்து போவோம்” என்று கூறினார்கள். “அப்படியென்றால் ஈழம் கோரிக்கையைக் கைவிடச் சொல்லி இந்தியா சொன்னால் என்ன செய்வீர்கள்’ என்று எதிர்க்கேள்வி கேட்கப்பட்டது. “இதுதான் நிலைப்பாடு என்றால் நமது இயக்கத்தவர்கள் டெலோவில் இணைந்து விடுவார்கள். இங்குள்ள இளைஞர்களுக்கு வாழ்வே இல்லை. அவர்கள் எதையாவது செய்துவிட்டு சாகத் துடிக்கிறார்கள்’ என்று கூறினர்.

இவ்வகையில் வாக்குவாதங்கள் இயக்கங்களிடையே நடைபெற்ற நிலையில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க நிர்வாகிகள் உன்னிகிருஷ்ணனைச் சந்தித்து பயிற்சிக்கு இசைந்தார்கள். (வேலுப்பிள்ளை பிரபாகரன் – டி.சபாரத்தினம் நஹய்ஞ்ஹம் ர்ழ்ஞ்)

பிளாட் இயக்கத் தலைவர் உமா மகேஸ்வரனை சந்திரகாசன் தொடர்பு கொண்டபோது, “ரா’ என்னிடம் நேரில் தொடர்பு கொண்டால் பேசுகிறேன்” என்று கூறிவிட்டார். உமா மகேஸ்வரன் இதற்கு சொன்ன காரணம் “சந்திரகாசன் நம்பிக்கைக்குரியவர் அல்ல; அவர் ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட்’ – என்பதாகும். பின்னர் உமா மகேஸ்வரனும் இப்பயிற்சித் திட்டத்தில் இணைந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்போது சென்னையில் இல்லை. பேபி சுப்பிரமணியம், சீலன் இருவர் மட்டுமே சென்னையில் இருந்தனர். மதுரையிலும் மேட்டூர் கொளத்தூரிலும் சென்னையிலுமாக நடைபெற்று வந்த இவர்களின் பயிற்சி முகாம்களுக்குப் பொறுப்பு ஏற்று அவர்கள் சென்னையில் இருந்தனர்.

பேபி சுப்பிரமணியத்தை சந்திரகாசன் தொடர்பு கொண்டார். அவர் மூலம் பிரபாகரனுக்குச் செய்தி அனுப்பிய போது “”இந்தியா உதவாக்கரைப் பேர்வழிகளுக்குப் பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுகிறது. டெலோ 1981-இல் இருந்து களத்திலேயே இல்லை. ஈரோசும் அப்படித்தான். ஈரோஸ் குழுவினர் தானாக எதையும் செய்யவும் மாட்டார்கள்; மற்றவர்கள் செய்தால் அதைச் செய்ய விடவும் மாட்டார்கள்” என்று கருத்து தெரிவித்த பிரபாகரன் “ரா’ பிரிவினர் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டால் யோசிக்கலாம் என்று கூறிவிட்டார்.

ஆனால் சென்னையில் நடைபெறும் நிகழ்வுகளை சரியான கோணத்தில் அணுகி, தனக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் பிரபாகரன், லண்டனில் இருந்த பாலசிங்கத்தை சென்னை செல்லச் சொன்னார். பாலசிங்கத்தின் வரவுக்குப் பிறகு சில தொடர் மாற்றங்கள் நிகழ்ந்தன.

61 : பிரபாகரனின் சென்னை வருகை!

பாலசிங்கமும் அவரது மனைவி அடேலும் சென்னை வந்து இறங்கினர். அவர்களை வரவேற்ற பேபி சுப்பிரமணியம் இருவரையும் சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார். தற்போதைய நிலையை பேபி, பாலசிங்கத்துக்கு விளக்கினார்.

பாலசிங்கம் The Liberation Tigers and the Freedom Struggle என்ற பிரசுரத்துக்கானவற்றை எழுதினார். அதில் இயக்கத்தின் கொள்கை, பயிற்சி அளிப்பது, தாக்குதல், நிதி சேகரிப்பு முதலானவை இடம் பெற்றிருந்தன. பாலசிங்கம் தங்குவதற்கென சாந்தோமில் இரண்டு அறை கொண்ட வீடும் எடுக்கப்பட்டது. தமிழக உளவுத் துறை அதிகாரிகள் பாலசிங்கத்திடம் தொடர்பு கொண்டு அவரை “ரா’ அதிகாரிகள் முன் நிறுத்தினர்.

இந்த உரையாடலுக்குப் பின்னர், பிரபாகரன் சென்னை வருவதன் அவசியம் குறித்து தகவல் அனுப்பினார். ஏற்கெனவே பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜாமீனில் இருந்து தப்பிய காரணத்துக்காக கைது செய்யும் முயற்சி ஏதும் இதில் இருக்குமோ என ரகுவும், மாத்தையாவும் சந்தேகம் கிளப்பினர்.

எனவே முதலில் அவ்விருவரும் தமிழகம் வந்து பாலசிங்கத்திடம் விவாதித்தனர். தற்போதைய அரசியல் சூழலில் தமிழகப் போலீஸôர் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று பாலசிங்கம் உறுதி கூறினார்.

தொடர்ந்து பிரபாகரன், “”ஜெயவர்த்தனாவின் அமெரிக்க ஆதரவுப் போக்கு காரணமாகவே, இந்தியா இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் அளிக்க முன் வருகிறது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வந்தால், அவரின் ரஷிய ஆதரவுப் போக்கு வெளிப்பட்டால் இந்தியாவின் நிலைமை மாறிவிடும் என்பதுதான் எங்கள் சந்தேகம். நமக்கோ ஈழம் வேண்டும். இந்தியாவின் ஆயுதப் பயிற்சியை நாம் பெறாது போனால் ஏனைய அமைப்புகளின் ராணுவ பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாது நாம் அழிந்து போக நேரிடும். எமது அழிவு தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக முடியும். எனவே இந்திய அரசு காலந்தாழ்த்தி எம்மை அணுகி, எமக்கு வரையறுக்கப்பட்ட அளவில் உதவியும் – பயிற்சியும் தர முன்வந்ததை ஏற்றுக் கொள்வோம்” (இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்னையும் – எல்.டி.டி.ஈ. வெளியீடு – 1987) என்று கூறியதுடன் சென்னைக்கு வரவும் சம்மதித்தார்.

இதையொட்டி பிரபாகரன் தமிழகம் வந்தார் “ஒரு நள்ளிரவில் பாண்டிச்சேரியில் “ரா’ அதிகாரிகளை பிரபாகரன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரபாகரன் பாலசிங்கம் மற்றும் “ரா’ அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். சந்திப்பு முடிந்ததும் தம்பியும் (பிரபாகரன்), பாலுவும் சிரித்த முகத்துடன் வெளியே வந்தனர்’ என்று அடேல் பாலசிங்கம் எழுதிய ‘பட்ங் ஜ்ண்ப்ப் ற்ர் ஊழ்ங்ங்க்ர்ம்’ நூலில் குறிப்பு உள்ளது.

இந்தச் செய்தியை உறுதிப்படுத்துவது போன்று பிரபாகரன் வரலாற்றை எழுதியுள்ள நாராயணசாமியும் தனது நூலில், “”டெலோ இயக்கத்தினருக்கு பயிற்சி அளிப்பது குறித்து தனது கோபத்தை பிரபாகரன் வெளிப்படுத்தி அதற்கான காரணகாரியங்களையும் விளக்கினார். பிரபாகரனை வசப்படுத்தும் நோக்கில் “ரா’ அதிகாரிகள் அவருக்கு சந்திப்பின் நினைவாக ஒரு பரிசு என்று கூறி 7.6 ம்ம் ஜெர்மன் லுகர் துப்பாக்கியை பரிசாக அளித்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.

எல்.டி.டி.ஈ.-யைச் சேர்ந்த 200 பேருக்கு பயிற்சி அளிக்க முடிவானது. இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், “500 பேர் கொண்ட மந்தையை வைத்திருப்பதற்குப் பதிலாக, கட்டுப்பாடும் மன உறுதியும், துணிச்சலும் கொண்ட 50 பேர் போதுமானது’ என்றார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு டேராடூன், தில்லி உள்ளிட்ட வடஇந்தியாவின் பல பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பல பகுதிகளில் பல இடங்களில் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்தார்கள். அவர்களுக்கான தங்குமிடம் உணவு போன்ற வசதிகளை தமிழக அரசு செய்தது. உணவுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் பொருள்கள் வழங்க ஏற்பாடாகியிருந்தது, வெளியூர் செல்ல போக்குவரத்து வசதியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.

பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை போதாது என்று மூன்றாவது ஏஜென்சி மூலம் இந்திரா உணர்ந்ததும், ஒவ்வொரு குழுவினரும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி “ஆட்கள்’ சேர்த்தார்கள். இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாகவே நடந்ததால், அதிபர் ஜெயவர்த்தனாவை அச்சப்பட வைத்தது.

62. ஐ.நா. சபையில் பண்ருட்டி ராமச்சந்திரன்!

பிரதமர் இந்திராவும் இந்திய அரசும் இலங்கைப் பிரச்னையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி இருப்பதும், தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராவதையும் பார்த்த ஜெயவர்த்தன அரசு நிஜமாகவே பயப்படத் தொடங்கியது.

போதாக்குறைக்கு, இலங்கை இனப் பிரச்னை ஐ.நா.வில் பெருமளவில் விவாதிக்கப்பட்ட சம்பவமும் ஜெயவர்த்தனாவை நெருக்கிற்று.

1961-இல் இதேபோன்று தமிழர்கள் தாக்கப்பட்டபோது, “இலங்கையில் தமிழினமும், தமிழ் மொழியும் பூண்டோடு அழிக்கப்படுவதில் இருந்து காப்பாற்ற – உண்மை நிலை அறிய ஒரு குழுவை அனுப்பவும் – காலதாமதமின்றி ஐ.நா. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழர்கள் வேண்டிக் கொள்கின்றனர்’ என்று அண்ணா ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுத்துக் கடிதம் அனுப்பினார்.

அதேநிலையைப் பின்பற்றி, இலங்கை இனப்படுகொலையை ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தியை முதல்வர் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி வந்தார். எம்.ஜி.ஆரின் இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்திரா காந்தி தனது தலைமையில் ஒரு குழு சென்று ஐ.நா.வில் முறையிடுவது என்று முடிவெடுத்தார். அக்குழுவில் தமிழகத்தின் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரனையும் இடம்பெற வைத்தார், முதல்வர் எம்.ஜி.ஆர்.

பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான குழுவில் ஜி.பார்த்தசாரதி, பி.சி.அலெக்சாண்டர், பண்ருட்டி ராமச்சந்திரன், வைகுந்தவாசன் மற்றும் வெளிவிவகாரத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் இடம்பெற்றனர். இந்திரா காந்தி அமெரிக்காவில் ஐந்து நாட்கள் தங்கி, ஐ.நா. கூட்டத்திற்கு வந்திருந்த நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் தூதர்கள் அனைவரையும் சந்தித்து இலங்கை பிரச்னைத் தொடர்பாக விளக்கினார். அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பிரமுகர்களைச் சந்தித்து உரையாடவும் நேரம் ஒதுக்கி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பெரஸ் டி.கொய்லர் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு இலங்கை இனப் பிரச்னையில் என்ன இருக்கிறது என்பதே அப்போதுதான் புரியவந்தது. இந்தியா-இலங்கை என இரு நாடுகளின் பிரச்னையாக மட்டுமே இருந்த இலங்கைத் தமிழர் பிரச்னை – உலகம் முழுவதும் சர்ச்சை செய்யப்படும் மனித உரிமை மீறல் மற்றும் இனப்படுகொலை சம்பந்தப்பட்டதாக மாறியது அப்போதுதான்.

1983 அக்டோபரில் தொடங்கி 84 நாட்கள் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் 70 நாட்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டு இலங்கை இனப் பிரச்னைகளை விளக்கினார். “மக்களாட்சி நெறியினைக் கொள்கையாக ஏற்றுள்ள இலங்கையில், தமிழர்களின் பாதுகாப்புக்கும் சட்டபூர்வமான உரிமைகளுக்கும் உறுதி அளிக்கப்பட்டு, மற்ற குடிமக்களுக்குச் சமமாக, முழுமையாகக் குடியுரிமை வழங்குவதன் மூலம் மட்டுமே, இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, அமைதியாக, ஆனந்தமாக வாழ்ந்திட சுமுகமான தீர்வுகாண இலங்கை அரசு முன்வர வேண்டும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். (அக். 21, 1983)

பண்ருட்டி ராமச்சந்திரன் மேலும் கூறுகையில், “மலையகத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியானது நமீபியாவில், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் கருப்பின மக்களுக்கு இழைத்த கொடுமைகளைப் போன்றது’ என்று விளக்கினார்.

இப்படிக் கூறியதும் இலங்கை பிரதிநிதி ஐ.பி. ஃபொன்úஸகா, “இந்தியாவில் நெல்லி’ பகுதியில் இஸ்லாமியருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின்போது உங்களின் உள்நாட்டுப் பிரச்னையில் இலங்கை தலையிட்டதா? நீங்கள் மட்டும் எங்கள் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடுகிறீர்களே? என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “இந்தியாவில் ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளில் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்வதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் அரசு செயல்படுகிறது அவர்களைப் பாதுகாக்க ஆவன செய்கிறது. உங்கள் நாட்டின் நிலைமை தலைகீழாக அல்லவா இருக்கிறது? இலங்கையில் நடப்பது இனப் படுகொலை. அதனால் அகதிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். அவர்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள். லட்சக்கணக்கில் தோட்டத் தொழிலாளர்களாக குடியுரிமை இல்லாமல் அவர்கள் பல நூற்றாண்டு காலமாக அவதிப்படுகிறவர்கள்’ என்று எடுத்துரைத்தார்.

“இலங்கையில் இருந்து இனப்படுகொலை காரணமாக லட்சக்கணக்கில் அகதிகள் ஓடிவருகிறார்கள் என்றும் இதனால் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் திடீர் செலவுகளையும், விவரமாக எடுத்துரைத்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

இவரது உரை ஐ.நா. மன்றத்தில் பிரெஞ்சு, ரஷிய, சீன, அரபி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கபட்டபோது, பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். இலங்கைப் பிரதிநிதி ஃபொன்úஸகா வெட்கித் தலைகுனிந்தார்.

ஐ.நா. சபை பொதுச் செயலாளர் ஃபெரஸ் டி. கொய்லர், இலங்கையில் தமிழர் பிரச்னை என்பது மனித உரிமைகள் மீறலாக இருக்கிறது’ என்பதை ஒப்புக்கொண்டார்.

ஐ.நா. சபையில் தமிழர் பிரச்னையை எடுத்துக்கூறி, அது வெற்றியடைந்ததையொட்டி தமிழகம் திரும்பிய பண்ருட்டி ராமச்சந்திரனை, முதல்வர் எம்.ஜி.ஆர். விமான நிலையம் சென்று, ஊர்வலமாக அழைத்து வந்தார்.

இலங்கை இனப் பிரச்னை ஐ.நா. வரை சென்றதும், போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்த செய்கையும் ஜெயவர்த்தனாவைத் தமிழர்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வர வைத்தன.

63: ஜெயவர்த்தனா தில்லி வந்தார்!

இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவ் நடத்திய பேச்சுவார்த்தையையொட்டி கொழும்பிலிருந்த அகதிகள் முகாம்களில் இருந்தவர்களை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல இந்தியாவில் இருந்து பயணிகள் கப்பல் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயவர்த்தனாவின் தம்பி எச்.டபிள்யூ. ஜெயவர்த்தனா புது தில்லி வந்தார்.

தமிழர் – சிங்களவர் இடையே சமாதானம் பேச, இந்தியா நடுவராக இருப்பது குறித்தும், நிவாரணப் பணிகளில் ஈடுபட ஏற்படும் செலவுத் தொகைக்கான நிதியுதவி பெறுவது குறித்தும் அவர் பேச்சு நடத்தினார். அவரிடம் பத்து லட்சம் டாலர் இந்தியா வழங்குவதாகப் பிரதமர் இந்திரா காந்தி சம்மதம் தெரிவித்தார்.

இதன் பின்னர், ஜே.ஆர். ஜெயவர்த்தன இலங்கை நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி, தமிழர்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அப்பேச்சுவார்த்தை ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்ததுடன், அதன் விவரத்தையும் வெளியிட்டார்.

அதன்படி, ஓரளவு சுயாட்சியுடன் கூடிய, திட்டமிடப்பட்ட அபிவிருத்தி சபைகளை அமைப்பது; வன்முறைகளில் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்தல், மன்னிப்பு வழங்குவது குறித்து பேசுதல்; யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படை நடமாட்டத்தை நிறுத்தி வைப்பதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது; தமிழ்மொழியையும் தேசிய மொழியாக அறிவிப்பது; தமிழர் விடுதலைக் கூட்டணி பிரிவினைக் கோரிக்கையை கைவிடுவதும், தடுப்புக் காவலில் உள்ளோரை விடுவிப்பதும் என அவர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியானதுமே இந்திரா காந்தி “இந்த அம்சங்கள் தமிழர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக அமையாது’ என்று கருத்துத் தெரிவித்து, “அதே சமயம் இலங்கையின் ஒருமைப்பாட்டை ஆதரிப்பதாகவும்’ கூறியதுடன் இலங்கை உள் விவகாரங்களில் “இந்தியா, தலையிடாது – மத்தியஸ்தர் பொறுப்பை மட்டுமே வகிக்கும்’ – என்றும் உறுதிபட ஜெயவர்த்தனாவிடம் தெரிவித்தார்.

தொடர் நிகழ்வுகளாக இலங்கைத் தமிழர்த் தலைவர்களை இந்திரா காந்தி மீண்டும் சந்தித்து உரையாடினார். “ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தோட்டப் பகுதிகளை தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி வந்த தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டைமான் உள்பட பலரும் இந்த உரையாடலில் கலந்துகொண்டனர்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் செப்டம்பர் 1, 1983 அன்று, பிரதமர் இந்திரா காந்தி, “தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் – இலங்கை அரசாங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்த வசதியாக, இந்தியா தூதுவர் ஒருவரை அனுப்ப இருப்பதாக’ அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ. அமிர்தலிங்கம், “நிபந்தனைகள் எதையும் அரசு விதிக்கவில்லை என்றால் – அப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயார்’ – எனத் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அ.அமிர்தலிங்கத்தை பத்திரிகையாளர்கள் சந்தித்த போது, “பேச்சுவார்த்தைகளில் எங்களது கட்சி நம்பிக்கை இழந்தபோதிலும் – இந்தியாவின் நடுவர் முயற்சிக்கு மதிப்பளித்து வந்திருப்பதாகவும்’ அவர் கூறினார்.

புது தில்லியில் இந்திரா காந்தியையும் வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவையும் அ. அமிர்தலிங்கம் சந்தித்தார். அவர் தரப்பில் வலியுறுத்தப்பட்டவை என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்திரா காந்தியின் சிறப்புத் தூதராக, இந்திய வெளி விவகார கொள்கை வகுப்புக் கமிஷனின் தலைவராக இருந்த ஜி. பார்த்தசாரதி கொழும்பு சென்றார். அவர் இந்திரா காந்தியின் செய்தியாகக் கொண்டு சென்றது என்னவென்றால், “பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பாகவும், அது முடியும் வரையிலும் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில், மக்கள் அச்சமின்றி வாழ ஏற்ற பாதுகாப்புச் சூழலை உருவாக்குவது அவசியம்’ – என வலியுறுத்தியதாக யூகச் செய்திகள் வெளியாயின.

இது தவிர, ஜி.பார்த்தசாரதி மேலும் இரு தடவைகள் கொழும்புப் பயணம் மேற்கொண்டார். அவரின் இரண்டாவது விஜயத்தின் போது (நவம்பர் 2-ஆம் தேதி) அவருக்கு அங்கே ஒரு சங்கடம் நேர்ந்தது. அதே நாளில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் கொங்டா பெய் மற்றும் அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர் வால்ரஸ் ஆகிய இருவரும் இலங்கைக்கு வந்திருந்தனர். இந்தச் செய்கை வல்லரசு நாடுகள் இலங்கைக்கு அனுசரணையாக இருப்பதை, இந்தியாவுக்கு உணர்த்துவதாக அமைந்தது.

அதைவிடவும் இலங்கை மீது இந்தியா அதிரடியாகப் போர் தொடுத்துவிடுமோ என்ற அச்சமும் ஜெயவர்த்தனாவுக்கு இருந்தது என்று இலங்கைப் பத்திரிகைகளே அப்போது கருத்து தெரிவித்தன.

முன்பு ஜெயவர்த்தனாவால் அறிவிக்கப்பட்ட ஐந்து அம்சங்களுடன், (அ) தமிழர்ப் பகுதிகளை ஒன்றிணைக்கும் பிரதேச சபை (ஆ) காவல் துறை சம்பந்தமான அதிகாரத்தை பிரதேச சபையிடம் ஒப்படைப்பது (இ) மத்திய அரசாங்க சேவையிலும் ராணுவத்திலும் மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் (ஈ) இனக் கலவரத்தின்போது ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்ட ஈடு வழங்குதல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியது.

இவ்வகையான மாற்றங்களுடனும், 26 ஜூலை 1957-இல் ஏற்பட்ட பண்டா – செல்வா உடன்படிக்கை மற்றும் 24 மார்ச் 1965-இல் ஏற்பட்ட டட்லி – செல்வா உடன்படிக்கையின் அடிப்படையிலும் அனைத்துக் கட்சி மாநாட்டில் வைப்பதற்கென 14 அம்சத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த திட்ட வரையறை, புது தில்லியில் 1983 நவம்பர் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற இருந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அதற்கு முன்பாக புது தில்லி வந்திருந்த எஸ்.தொண்டைமான், அ.அமிர்தலிங்கம் ஆகிய மூவருடனும் தனித்தனியே நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலமாக உருவானதாகும். இதனை உருவாக்குவதில் ஜி. பார்த்தசாரதியின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட 14 அம்சத் திட்ட வரைவு இலங்கை அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது:

64: 14-அம்சத் திட்ட வரைவு!

இலங்கையில் ஈழத் தமிழ் அகதிகள் 1983, டிசம்பர் 1-ஆம் தேதிய ஜனாதிபதியின் கூற்றின் ஆறாம் பத்தியின் நியதிகளின்படி கொழும்பு, புதுதில்லி கலந்துரையாடல்களின் முடிவாலெழுந்த பின்வரும் பிரேரணைகள் அனைத்துக் கட்சிகள் மாநாட்டிற்கு கருத்தில் எடுத்துக் கொள்வதற்குப் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. இப்பிரேரணைகள் இலங்கையின் ஐக்கியம், முழுமை தொடர்பானவையாகும்; அத்துடன் அனைத்துக் கட்சிகள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக அமைவனவாகும்.

1. மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் தீர்மானங்களால் அவை உடன்பட்டு, அந்த மாவட்டத்தினுள்ளே நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பினால் (மக்கள் தீர்ப்பினால்) அங்கீகரிக்கப்படின், ஒரு மாகாணத்திலுள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு அதிகமான பிரதேச சபைகளாக இணைவதற்கு அனுமதிக்கப்படுதல்.

2. முறையே வடக்கு மாகாணத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும் மாவட்ட சபைகளைப் பொறுத்தவரை, பெரும்பான்மை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தமை காரணமாக, அவை இயங்காதிருப்பதனால் அந்த ஒவ்வொரு மாகாணத்தினுள்ளும் அவைகளின் இணைப்பை ஏற்றுக் கொள்ளல்.

3. தீர்மானிக்கப்படுமிடத்து, ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு பிரதேச சபையைக் கொண்டிருக்கும். ஒரு பிரதேச சபையில், பெரும்பான்மை வகிக்கும் கட்சியின் தலைவர் அந்தப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக ஜனாதிபதியால் முறைமையாக நியமிக்கப்படும் மரபு நிலை நிறுத்தப்படும். பிரதேசத்திற்கான ஓர் அமைச்சர் குழுவை முதல் அமைச்சர் அமைப்பார்.

4. ஜனாதிபதியும் பாராளுமன்றமும் பிரதேசங்களுக்குக் கை மாற்றம் செய்யப்படாத எல்லா விஷயங்களுக்கும், அத்துடன், பொதுவாக முழுக் குடியரசினதும் இறைமை, முழுமை, ஐக்கியம், பாதுகாப்பு, வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவற்றைப் பாதுகாத்தல் தொடர்பான மற்றெல்லா விஷயங்களுக்கும் முழு மொத்தமான பொறுப்பைத் தொடர்ந்து வகிப்பர்.

5. பிரதேசத்தின் சட்ட அதிகாரம் பிரதேச சபைகளுக்கு உரிமையாக்கப்படும். அவை பிரதேசத்தின் உள்ளகச் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல், நீதி நிர்வாகம், சமூக, பொருளாதார அபிவிருத்தி கலாசார விஷயங்கள், காணிக் கொள்கை ஆகியன உள்பட, சில விதித் துரைத்த நிரற்படுத்தப்பட்ட விஷயங்கள் தொடர்பாகச் சட்டங்களை ஆக்கவும் நிறைவேற்றி அதிகாரங்களைச் செயற்படுத்தவும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். பிரதேசங்களுக்குக் குறித்தொதுக்கப்பட வேண்டிய விஷயங்களின் நிரல் விவரமாகத் தயாரிக்கப்படும்.

6. வரிகள், தீர்வைகள் அல்லது கட்டணங்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கும் பிரதேச சபைகள் அதிகாரம் பெற்றிருக்கும். அத்துடன், கடன்கள் வாயிலாக வளங்களைத் திரட்டுவதற்கும், அந்த வரும்படிகள் குடியரசால் கொடுக்கப்படும் மானியங்கள், ஒதுக்கீடுகள், உதவித் தொகைகள் ஆகியன கொண்ட அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்திற்கெனத் தாபிக்கப்படும் திரட்டிய நிதியமொன்றில் வரவு வைக்கப்படும். காலத்துக்குக் காலம் நியமிக்கப்படும் பிரதிநிதித்துவ நிதி ஆணைக்குழுவின் விதப் புரைகளின் பேரில் நிதி வளங்கள் பிரதேசங்களுக்குப் பங்கீடு செய்யப்படும்.

7. ஒவ்வொரு பிரதேசத்திலும் மேல் நீதி மன்றங்களின் அமைப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இலங்கையின் உயர் நீதிமன்றம், முன் முறையீடுகளை ஏற்று ஆராய்தலையும், அரசியல் யாப்புச் சார்ந்த சட்ட அதிகாரத்தையும் செயற்படுத்தும்.

8. (அ) பிரதேசத்தின் அலுவலர்களையும் ஏனைய பகிரங்க ஊழியர்களையும் (ஆ) பிரதேசத்துக்குத் துறைமாற்றுக்காளாத்தக்க அத்தகைய ஏனைய அலுவலர்களையும் பகிரங்க ஊழியர்களையும் உள்ளடக்கியதாக ஒவ்வொரு பிரதேசமும் பிரதேச சேவை ஒன்றினைக் கொண்டிருக்கும், ஆட்சேர்ப்புக்கும், பிரதேச சேவையின் உறுப்பினர் தொடர்பான ஒழுக்காற்று அதிகாரிகளைச் செயற்படுத்துவதற்கும் பிரதேச பகிரங்க சேவை ஆணைக்குழு ஒன்றை ஒவ்வொரு பிரதேசமும் கொண்டிருக்கும்.

9. இலங்கையின் ஆயுதப்படைகள் தேசிய இனத்தின் நிலையைப் போதுமானளவு பிரதிபலிப்பனவாக இருக்கும். வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ளகப் பாதுகாப்புக்கான போலீஸ் சேவைகள் அந்தப் பிரதேசங்களின் இனத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பனவாகவும் இருக்கும்.

10. திருகோணமலைத் துறையையும், துறைமுகத்தையும் நிர்வகிப்பதற்கு மத்திய அரசின் கீழ் துறைமுக அதிகாரி சபை ஒன்று நிறுவப்படும். துறைமுக அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் வருவதற்கான விஷயங்களும் சபைக்குக் குறித்தொதுக்கப்படும் அதிகாரங்களும் மேலும் ஆராயப்படும்.

11. காணி நிர்ணயம் பற்றிய ஒரு தேசியக் கொள்கை, காணிக் குடியேற்றத்தை எந்த அடிப்படையில் அரசு மேற்கொள்ளல் ஆகியன ஆய்ந்து நிறைவேற்றப்பட வேண்டியனவாகும். பெரிய செயற்றிட்டங்கள் மேல் உடன்பாடு ஏற்படுதற்கு உட்பட்டுக் குடிநிலைச் சம நிலையை மாற்றாதவாறு இனவிகித சமத்தை அடிப்படையாகக் கொண்டு குடியேற்றத் திட்டங்கள் யாவும் அமைதல் வேண்டும்.

12. அரச கரும மொழியான சிங்களம், தேசிய மொழியான தமிழ் ஆகியவை தொடர்பான அரசியல் யாப்பையும் ஏனைய சட்டங்களையும் அத்துடன், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவை தொடர்பான அதே போன்ற சட்டங்களையும் ஏற்றுக் கொள்ளப்படுதலும் நடைமுறைப்படுத்தலும் அவசியம்.

13. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவைப்படக்கூடிய அரசியலமைப்பு மாற்றங்களையும் சட்ட மாற்றங்களையும் தயாரிப்பதற்கு மாநாடு ஒரு குழுவை நியமித்தல் வேண்டும். அரசாங்கம் தனது செயலகத்தையும் அவசியமான சட்ட அலுவலகங்களையும் வழங்கும்.

14. சட்டவாக்க நடவடிக்கைக்காகப் பாராளுமன்றத்துக்குச் சமர்பிக்கப்படுதற்கு முன்னர், அனைத்துக் கட்சிகள் மாநாட்டுக் கருத்து இணைக்கங்களே ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினாலும் அநேகமாக ஏனைய கட்சிகளது நிறைவேற்றுச் சபைகளினாலும் கருத்துக் கெடுத்துக் கொள்ளப்படும்.

இந்தப் 14-அம்சத் திட்ட வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இலங்கையில் இத்தனை ரத்தம் சிந்தப்பட்டிருக்காது. ஒரு தேசம் என்கிற கட்டுக்குள் சிங்களரும் தமிழரும் ஒற்றுமையாக சம உரிமைகளுடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அதுவல்லவே சிங்கள இனவாத அரசின் நோக்கம். தில்லியில் இந்திரா காந்தி அம்மையாரிடம் நல்ல பிள்ளைகளாகத் தலையை ஆட்டிவிட்டு வந்தவர்கள், கொழும்பு திரும்பியபோது தங்கள் சுய உருவத்தைக் காட்டத் தொடங்கி விட்டனர்!

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply