1 ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள்
குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக ,நாகர்கள் ,இயக்கர்அதாவதுயக்க்ஷர்கள்,
தென்னிந்தியாவில் ஆரம்ப மக்கள் வாழ்ந்த தாக அறியபடுகின்ர அதே காலத்திலேயே ,ஈழத்திலும் மக்கள் வாழ்த்து இருக்கலாம் ஈழத்தின் தெனிந்தியாவுக்கு அண்மித்த அமைவிடத்தை பொறுத்தவரையில் அது சாத்தியமான ஒன்றாகும் ,நாகர்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்தவர் என்பதை துவாரக யுகத்தில் நடந்ததாக கூறும் புனை கதையான மகாபாரதம் கூட நிரூபிக்கவில்லை .மகா பாரதத்தில் கூட நாகலோகத்து நாகர்கள் குந்தி தேவியின் உறவினர்கள் நாகதீபத்தில் வாழ்ந்த தாக தான் அறிய முடிகின்றது .
ஈழத்தில் ஆரம்பத்தில் வாழ்ந்த நாகர்கள் பிற்காலத்தில்அரசர்கள் இராஜ ரட்டை என்று அழைக்க பட்ட ஈழத்தின் வடபகுதிலேயே அதிகமாக வாழ்ந்ததாக கருதப்படுகின்றது .இவர்கள் நாகதீபம் அதாவது யாழ்குடாநாடு கடலால் பிரியும் பூநகரிக்கு மேற்பட்ட பிரதேசம் யாழ் தீபகற்பம் இந்த பிரதேசத்தை 26 குறுநில அரசர்களை கொண்ட நாக அரசர்கள் நீதி தவறாமல் ஆண்டு வந்தார்கள் .இவர்கள் தன்னிறைவு கொண்டவர்காகவும் பண்டமாற்று மூலம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தவர்களாகவும் தங்களுடைய தனித்துவமான நாகரிக ஒழுங்கில் வாழ்ந்தவர்களாகவும் ,உறவுமுறைகளில் திருமண பந்தங்களை முறைப்பெண் திருமணம் ,செய்து வந்து வந்தார்கள் ,இயற்கை வழிபாட்டோடு சேர்ந்த தாந்திரிய சைவத்தின் சிவ சத்தி வழிபாட்டையும் நாக பாம்பினை வழிபடும் மரபினையும் கொண்டு இருந்தார்கள்
நாகர்கள் பேசும் மொழியாக தமிழ் மொழியை பேசினார்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நிய மொழிகளையும் சகோதர மொழிகளையும் பேசுபவர்களாகவும் இருந்து இருக்கலாம்
ஆரம்பத்தில் வாழ்ந்த யச்ஷர்கள் இனம் .இவர்கள் மாதோட்டம் எனப்படுகின்ற மன்னார் மேற் பகுதியிலும் அனுராத புரம் போன்ற காடுகளை அழித்து உருவாக்கிய பிரதேசங்களிலும் அந்த பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்ந்தார்கள் .இவர்களும் தனித்துவமான இன அடையாளங்கள் கொண்டவர்கள். இவர்கள் குவேனியின் மூதாதையரின் வம்சத்தினை அரச வம்சமாக கொண்டு இருந்தாலும் ஒரு அரசை ஏற்றுகொள்ளும் மனபாங்கு இல்லாத காரணத்தால் ஈழத்தின் ஏனைய பிரதேசங்களையும் காடுகளையும் அழித்து அப்பிரதேசங்களிலும் தமது வாழ்விடங்கள் ஆக்கினார்கள் இதனால் ஈழத்தின் தென் பகுதியிலும் வாழ்விடங்களை அமைத்து கொண்டார்கள்,இவர்கள் உறவு முறை பந்தங்களில் தனித்துவமான பாரம்பரிய கட்டுபாடுகளை கொண்டு இருக்கவில்லை ,திருமண பந்தங்களில் யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளும் வழக்கத்தில் வாழ்ந்தார்கள் ,இவர்கள் இயற்கை வழிபாட்டோடு சத்தி வழிபாட்டையும் கொண்டு இருந்தார்கள் இவர்கள் ஏலு மொழியையும் தமிழ் மொழியையும் பேசினார்கள் பொருளாதாரத்தை இவர்களும் பண்டமாற்று மூலமும் தன்னிறைவு தொழில்களின் மூலமும் மேம்படுத்தி வாழ்தார்கள்.
இவர்களே அரை மொட்டை அடித்த நிலையில் நாடு கடத்தப்பட்டு வந்த விஜையனுக்கும் 700 தோழர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து ஈழத்தின் அழிவுக்கு உதவினார்கள் ,இது பற்றி பின்னர் விரிவாக பாப்போம்
அடுத்து ஆரம்பத்தில் வாழ்த்த குடிகள் ,,வேடர்கள், இடையர்கள் ,இவர்கள் காடுகளிலேயே வேட்டையாடி மர உரி தரித்தவர்களாக வாழ்ந்தார்கள் .இவர்கள் கொடிய விலங்குகளிடம் இருந்து மற்ற இனங்களை காத்தவர்கலாகவும் இருந்தார்கள் ,இவர்கள் பலகாலமாக தங்கள் தனித்துவத்தை இழக்காமலேயே இருந்தார்கள் இவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் ஈழத்தில் காடுகளில் வாழ்கின்றார்கள் இவர்கள் கதிர்காமத்தை அண்டிய காட்டு பகுதிகளில் வாழ்ந்ததாகவும் ,முருகப்பெருமானையும் ,இயற்கை தெய்வங்களையும் வழிபடும் முறையை கொண்டு இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ,
ஈழவம்சத்தினர் தாங்கள் தங்களுக்கு உரிய தனித்துவத்தோடு ,தமது தேவைகளில் மற்றவர்களில் தங்கி வாளாமால் தம் நிறைவு செய்து ,தமக்கான நாகரீக ஒழுங்கில் இஷ்ட தெய்வங்களை வணங்கி வாழ்ந்து கொண்டு இருந்த வேளையில் தான் குற்ற தண்டனையாக அரை மொட்டை விஜயன் ,700 தோழர்களுடன் கி .மு 6 ம் நூற்றாண்டு அளவில் கலிங்க நாட்டில் இருந்து மாதோட்டத்தில் வந்து இறங்கினான.
இந்த முத்திரை விஜயன் வருகை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டு பின் மீளப்பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார் “சிவ மேனகை” இது தொடர்பாக ஏம் தகவல் இருப்பின் கருத்திடுங்கள். |
கலிங்கம் ,அதாவது மழையும் புயலும் அடித்தால் வெள்ள நிவாரணம் கேட்கும் இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலம் இது தான் மகாவம்சம் கூறும் சிங்களத்தின் தந்தை நிலம் ,,தாய் நிலத்துக்கு பாண்டி நாட்டு பெண்களும் இயக்க அரசி குவேனியும் பங்கு கேட்பதால் தாய் நிலம் எதுவென்பது குழப்பமாகவே இருக்கின்றது ,
விஜயனின் தாத்தா ஒரு காடுகளில் வாழும் ஒரு உண்மையான சிங்கம் விதிவசத்தால் வங்கதேசத்து குறுநில மன்னனுக்கும் கலிங்க இளவரசிக்கும் பிறந்த மகளை சிங்கம் திருமணம் செய்கின்றது ,அவர்கள் இருவரும் செய்த தவப்பயனால் இரு பிள்ளைகள் பிறக்கின்றனர் மகன் பெயர் சிங்க பாகு ,மகள் பெயர் சிங்க சிவலி ,,இவர்களின் தரம் கேட்ட பண்பாடு அன்றே ஆரம்பமாகின்றது அரசகுமாரனுக்கு நாட்டில் வேறு பெண்கிடைக்காமலோ என்னவோ எனக்கு புரியவில்லை தன் சகோதரியையே தான் திருமணம் செய்கின்றான் இவர்களுக்கு 16 இரட்டை பிள்ளைகள் மொத்தமாக 32….பிள்ளைகள் பிறக்கின்றார்கள் இவர்களில் மூத்தவனே விஜயன் இவனே கலிங்க நாட்டு பட்டத்து இளவரசன்
விஜயன் தன் தோழர்களுடன் சேர்ந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளில் கெடுதல் செய்து துன்பங்களை கொடுத்தான். நாட்டில் மது மாது இவன் உடைமையாய் இருந்தது ,,மக்களை இவன் அடிமையாய் எண்ணினான் ..இதனால் துன்பம் அடைந்த மக்கள் சிங்கபாகு அரசனிடம் மகன் செய்யும் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் படி கேட்டதால் ,மன்னன் தன் பாச மகன் தவறு செய்தவன், ஆயிலும் கொல்ல மனம் இன்றி தண்டனையாக விஜயனுக்கும் அவரது 700,,தோழர்கள் உதவியாளர்களுக்கும் அரை தலையை மொட்டை அடித்து கட்டாயபடுத்தி கப்பலில் ஏற்றி நாடு கடத்தினான் .
மகாபாரத்தில் வரும் நாசகாரி வஞ்சக சகுனியினதும் காந்தாரியுடையதும் பூர்வீகமே காந்தாரதேசம் ,.சிம்மபுர என்கின்ற இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட பகுதி, இங்கிருந்து புறப்பட்டு விஜயனும் அவன் தோழர்களும் திசை தெரியாத கடலில் மண் திடல் தேடி கி மு 543 இல் மாதோட்டத்தில் கரை ஒதுங்கினார்கள் ,,
பூர்வீக தமிழர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் இவர்கள் வந்திறங்கியதை ஏற்றுகொள்ள மனம் இல்லாத மாகாவம்ச புனை கதை திரிபு வாதிகள் தம்ப பன்னி என்கின்ற தென்பகுதியில் வந்து இறங்கியதாக கட்டு கதை விட்டார்கள் .இவ்வாறு நாடுகடத்தப்பட்டு வந்தவன் மாதோட்டத்தில் அரசாண்ட குலம் அதாவது ஆரியனிடம் கையூட்டு பெற்று இராமாயணம் எழுதிய கம்பன் ,இயக்கர் கோனை ,அரக்கர் கோன்,என்றான் அதுபோலவே அதே குல இளவரசி குவேனியை சாதாரண பெண்ணாக தேரர் மகாவம்சம் எழுதினார்
விஜயன் தன்னை சிறந்த அரசகுமாரனாக அங்கு அறிமுகம் செய்து நாடகமாடி குவேனியை மயக்கி திருமணம் செய்தான். ,சிற்றின்பத்தில் சீரழிந்து நாடுகடத்தப்பட்டு வந்த இவன் தமிழர் பண்பாட்டை மதிப்பானா ஒருவனுக்கு ஒருத்தி என்ற இலக்கண வாழ்வில் வாழ்வானா இல்லவே இல்லை .இயக்கர் குல அரசர்களை வஞ்சகத்தால் கொலை செய்து அவர்களுடைய அரசை கைப்பற்றி ,பாண்டி நாட்டு பெண்களை வரவழைத்து மறுமணங்கள் செய்தார்கள் .அன்றில் இருந்தே வந்தேறுகுடிகளான விஜயன் பரம்பரையோடு பாண்டியரும் வந்து சேர்ந்தார்கள் .பாண்டியர்கள் வந்திறங்கிய மாதோட்ட கடல்பரப்பு இந்தியாவின் பொருணை நதியை ஒத்ததாக இருந்ததாலேயே இவ்விடத்தை அவர்கள் தாமிர வர்னி அல்லது தாமிர பரணி என்று அழைத்தார்கள். இதை காரணமாக வைத்தே பிற்காலத்தில் கிரேக்கர்கள் இலங்கையை தப்ர பேன் என்று அழைத்தார்களோ தெரியவில்லை .இதை திரிவு படுத்தி தென்பகுதியோடு ஒப்பிடுகின்றார்கள் .
எலு மொழி பேசிய இயக்கர் குல மக்களோடு கலந்து உறவுகளை உருவாக்கினாலும் சிங்கத்தில் இருந்துவந்த இனம் என்ற தங்கள் அடையாளத்தை எடுத்துக்காட்ட எ லு மொழியோடு சேர்ந்து எவ்வாறு சிங்களம் உருவாகியது?
ஒரு பாரம் பாரிய பூர்வீக இனத்துக்கு தங்கள் வாழ்வியலில் உள்ள கலை ,கலாச்சாரம் ,பண்பாடு, வழிபாட்டு முறை
மொழி ,உணவு முறை, என்பவற்றை மாற்றி கொள்ளவேண்டிய தேவை இருக்காது ,.அந்தவகையில் ஈழத்தின் பூர்வீக குடிகளாக இருந்த தமிழர்கள் தங்கள் கலாச்சார விளுமியங்களுடனேயே தனித்துவமாக வாழ்ந்தார்கள் ,
வந்தேறு குடிகளும் ஆக்கிரமிப்பாளர்களும் ,இனக்கலப்பை ஏற்படுத்தும் இனங்களுமே தங்களுக்கு உரிய தேசிய அடையாளங்களை புகுத்தி முன்னம் அந்த தேசத்தில் இருந்த அடையாளங்களை அழித்து விடும் முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் .,அதையே விஜயன் குழுவினரும் செய்தார்கள் சிகல அல்லது சிகள என்ற அவர்களது தாயக பெயரையும் எலு என்கின்ற இயக்கர்களுடைய மொழியையும் சேர்த்து ,சிகள எலு ,என்று ஒரு கலப்பு ,மொழியை பேசினார்கள்.,சிகள எலு ,மொழி வங்காள மொழியையும் பாளி மொழியையும் ஒத்ததாக இருந்திருக்கலாம் ,,,,எலு மொழியின் சாயல் சேர்ந்து இருப்பதால் எலு மொழியில் ஏற்கனவே பெருவாரியாக தமிழ் மொழி கலந்திருப்பதால் தமிழ் சொற்களும் இதில் அடங்கியது பிற்காலத்தில் இதை அடிப்படையாக வைத்தே தேரர் மகாவம்சத்தில் பிற்காலத்தில் சிங்களம் என்று மொழியையும் அந்த மொழி பேசியவர்களை அடிப்படையாக கொண்ட இனத்தை சிங்களவர் என்றும் அழைத்தனர் ,,சிங்களவரின் பேச்சு வழக்கிலும் உறவு முறை ,எண்கள் ,கிழமை நாள் போன்றவற்றில் பல்வேறு மொழிகலப்பு இருப்பது சாதாரணமாகவே தெரிகின்றது ,,
விஜயன் வஞ்சக சூழ்சிகள் செய்து இயக்கர் குல அரசர்களை கொலை செய்து அரசை கைப்பற்றியதோடு ,இந்த குல மக்களுக்கும் துன்பம் கொடுத்தான் .இந்த துன்பத்தில் இருந்து விடுபடவே பூர்வீக மக்கள் நாகர்கள் வாழும் யாழ் தீபகற்ப பகுதியிலும் தென்பகுதியில் வாழ்ந்த வேடுவர் இடையர் இன மக்களுடனும் கலந்து வாழவும் அவர்கள் பேசிய தமிழ் மொழியை தொடர்சியாக பேசவும் தொடங்கினார்கள் ,விஜயனின் ஆளுகைக்கு உட்பட்ட இயக்க இளவரசிகளும் அவர்களது குடும்பங்களும் விஜயனால் உருவான கலப்பு சிகள எலு ,மொழியை பேசுபவர்களாகவும் வாழ பழகி கொண்டனர் ,விஜயன் வருகைக்கு முன்னம் நின்மதியாக வாழ்ந்த இனம் பிரிவினையில் அகப்பட்டனர் விஜயனை எதிர்த்தோர் ,,நாளடைவில் விஜயனிடம் இழந்த அரசை மீட்க இயக்க குல அரசர்களுக்கும் விஜயன் குழுவினருக்கும் பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றது இந்த போராட்டங்களுக்கு உதவி பெறுவதற்காக ,விஜயன் பாண்டிய மன்னர்களுடன் உறவு பூண்டான் .அவர்களை உதவிக்கு அழைத்தான் ,.அதற்கான நன்றிகடனாகவும் பாண்டிய நாட்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்கள்,. அதனால் பாண்டிய வம்சத்தினரும் விஜயன் குழுவினருடன் பரஸ்பர உறவுகளை பேணி புதிய வம்சமாக உருவாகினார்கள் , வந்தேறு குடியாக வந்த விஜயன் குழுவினரதும் ,அவர்களுடன் உறவுபூண்ட பாண்டியர் களினதும் தவிர்க்க முடியாமல் சேர்ந்து வாழ்ந்த குவேனி பரம்பரை இன் வழித்தோன்றல்களுமே ,சிங்களவர்கள் .
இழந்த அரசை மீள கைப்பற்ற முடியாமல் போகவே பிரிந்து சென்ற இயக்கர்கள் ,தமது பூர்வீக எலு மொழியையும் .படிப்படியாக பேசுவதை விட்டு விட்டார்கள் தமிழையே பேசும் மொழியாக கொண்டார்கள் இதனாலேயே இவர்கள் தமிழ் உச்சரிப்பு சில இடங்களில் வேற்று மொழி தாக்கத்துடன் வருவது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தி வந்தாலும் ,பின்னர் எலு மொழி முற்றாகவே அழிந்துவிட்டது என்றே கருதப்படுகின்றது
காடுகளை அழித்து புதிய இராச்சியங்களை உருவாக்கிய இயக்கர்கள் ஈழத்தின் தென்பகுதிகளிலும் சென்று வாழத்தொடங்கினார்கள் .இவ்வாறு உருவாக்க பட்ட இராச்சியங்களே ,,பின்னர் மகாவம்சம் சொல்லும் சிங்கள மன்னர்கள் ஆண்டார்கள் அவர்களும் முழுமையான சிங்களவர் அல்லர் என்பதை பௌத்த மதம் ஈழத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய காலத்தில் குறிப்புக்களோடு தொடர்புபடுத்தி பார்ப்போம் .
தொடரும்.
Leave a Reply
You must be logged in to post a comment.