தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும்

A.P.Mathan  

 2012 ஒக்டோபர் 19

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று கேட்கப்படும் மிகப் பிரதானமான கேள்வி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சேர்ந்தியங்குவதற்கு நீங்கள் மறுப்பது ஏன்? என்பதுதான்.அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட முடியாமைக்கு ஒரே காரணம் – அதனை எட்டும் நோக்குடன் ஜனநாயக வழிமுறையில் அரசு முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமான நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய மறுத்து வருவதுதான் – என்ற பிரசாரத்தை அரசு தரப்பு முழு அளவில் முன்னெடுத்து ஒவ்வொருவரையும் அப்படி நம்பவைப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியும் கண்டுள்ளது. அதனால் இத்தகைய ஒரு கேள்வி தமிழ்க் கூட்டமைப்பினரை நோக்கி எழுப்பப்படுவது தவிர்க்க முடியாததே.

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் தற்போதைய ஸ்தம்பித நிலையை அடைந்தமைக்கான உண்மையான காரணங்களை இந்த நாட்டின் மக்களுக்கு விளக்கவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளது. இதற்கு 2010ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியமாகின்றது.

ஜனவரி 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு – கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் ஜனாதிபதி ராஜபக்ஷ தெளிவான மக்கள் ஆணையைப் பெற்றபோதிலும் வடக்கு – கிழக்கில் அவர் வெல்லவேயில்லை என்பது நினைவு கொள்ளத்தக்க அம்சமாகும்.

அதேசமயம், நுவரெலியா மாவட்டத்திலும் கொழும்பு மாநகரசபைப் பிரதேசத்திலும் கூட அவரால் வெற்றிகொள்ள முடியவில்லை என்பதும் உண்மை. அடிப்படையில் அவருக்குக் கிட்டிய ஆணை சிங்களப் பெரும்பான்மையிடமிருந்து கிடைத்ததுதான். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்களைத் தாம் மீட்டார் என்று அவர் உரிமை கோரிய பின்னணியில் கிடைத்த பெறுபேறுதான் இது.

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகள் குறித்தும் அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவது சம்பந்தமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசு முன் வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ஏப்ரலில் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்தது.

அதன் பின்னர் இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்கு இரண்டு குழுக்களை ஸ்தாபிக்க 2010 நவம்பரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் ஜனாதிபதி இணங்கியிருந்த போதிலும், ஷநீண்டகால நல்லிணக்கம்| குறித்து ஆராய்வதற்கு மட்டும் அரசு பிரதிநிதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு குழு 2011 ஜனவரியில் நியமிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இது தொடர்பில் அனுப்பட்டிருந்த அழைப்புக் கடிதத்தில் மற்றைய தரப்பும் உறுப்பினர்கள் ஷஇலங்கை அரசின் பிரதிநிதிகள்| என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்காக 2011 ஜனவரி 10ஆம் திகதியிலிருந்து  அந்த வருடம் முழுவதும் 18 சுற்றுப் பேச்சுக்கள் நடந்தன.

தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பில் தனியான குழு ஒன்று உருவாக்கப்படாத நிலையில், அரசு தரப்பு பிரதிநிதிகளின் அழைப்பின் பேரில், உடனடிக் கவனத்துக்குரிய பின்வரும் விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுப்பியது.

1) நாட்டுக்குள் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியமர்வும் புனர்வாழ்வும்.
2) உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதலும், வடக்கு கிழக்கில் செயற்படும் துணை இராணுவப் படைகளின் ஆயுதங்களைக் களைதலும்.
3) அரசியல் கைதிகள் மற்றும் தடுப்புப் காவலில் உள்ளோர் பற்றிய விடயங்கள்.

பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் முகாம்களிலேயே உள்ள நிலையிலும், மேலும் பல பத்தாயிரக்கணக்கானோர் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருக்கும் சூழலிலும் மீள்குடியமர்வு நடவடிக்கை என்பது நத்தை வேகத்திலேயே முன்நகருகின்றது.

தங்களுடைய சொந்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டவர்கள் கூட பொருத்தமான தங்குமிட வசதிகளின்றி தங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முடியாத நிலையிலேயே விடப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க மேம்பாடு ஏதும் ஏற்படவேயில்லை. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ள போதிலும், வடக்கிலும் சம்பூர் உட்பட கிழக்கிலும் ஏனைய பல பிரதேசங்கள் இன்னமும் பொது மக்களுக்குத் தடைசெய்யப்பட்டனவாகவே உள்ளன. பலாலியிலும் கூட குடாநாட்டுக்குக் குறுக்கான நீண்ட முட்கம்பி வேலி தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பிரதேசத்தில் இருந்து 26 வருடங்களாக இடம்பெயர்ந்திருக்கும் சுமார் 28 ஆயிரம் பொதுமக்கள் மீளக்குடியமர முடியாது நேரடியாகத் தடுக்கப்பட்டுள்ளனர்.

துணை இராணுவக் குழுக்கள் தண்டனை விலக்களிப்பு சிறப்புரிமையோடு தொடர்ந்து செயற்படுவதுடன் கடத்தல், கப்பம் கோரல் மற்றும் படுகொலைகளைக் கூட முன்னெடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இது கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக அண்மையில் அரசினால் முன்வைக்கப்பட்ட செயற்றிட்டத்தின் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதில் உள்ள சிறப்புப் பெறுபேறு குறியீட்டுச் சுட்டியின் படி இது ஆறு மாத காலத்தில் நிறைவு செய்யப்படவேண்டுமாம்!

எவரேனும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உறவினர்கள் அது பற்றிய விடயத்தை வவுனியாவில் விசேடமாகக் குறிப்பிடப்பட்ட ஓரிடத்தில் அது பற்றி உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என 2011 பெப்ரவரி 3ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது  சுற்றுப் பேச்சின் போது அரசு தரப்புப் பிரதிநிதிகள் எழுத்தில் உறுதி தந்தனர்.

அரசினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தலா ஒரு பிரதிநிதி நேரடியாக வவுனியாவுக்குச் சென்று இதனை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதற்கான குறைந்த பட்சம் மூன்று வௌ;வேறு திகதிகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் அந்த விஜயங்கள் எப்போதும் கடைசி நேரத்தில் அரசு தரப்பினால் இரத்துச் செய்யப்பட்டமையோடு அது நடக்கவேயில்லை. இன்றுவரை அது இடம்பெறவேயில்லை. தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் பற்றிய உண்மையான தகவல்கள் தொடர்ந்தும் மறைக்கப்பட்டுள்ளதோடு அவை, அவர்களின் இரத்த உறவுகளுக்கும் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டுள்ளன.

2009 மேயில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் –
– தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள கலாசார, மத இடங்களை துஷ்பிரயோகம் செய்து, சேதப்படுத்தி, அழித்தல்.
– மக்களின் வாழ்வில் இராணுவத் தலையீட்டையும் இராணுவ மயப்படுத்தலையும் அதிகரித்தல்
– வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலையே மாற்றியமைக்கும் விதத்தில் அங்குள்ள காணிகள் அபிவிருத்தித் தேவைக்கு என்ற மேம்போக்கான காரணத்தைக் காட்டி வெளியாட்களுக்குத் தாரைவார்த்தல்.
– வடக்கு, கிழக்கில் உள்ள பாரம்பரிய அடையாளப் பிரதேசங்களை மாற்றியமைத்தல்.

போன்றவை தொடர்பான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவை எல்லாம் தமிழ் மக்களின் எதிர்கால நலனில் மீளத்திருத்தியமைக்கவே முடியாத மோசமான – தீங்கான – பின் விளைவுகளை ஏற்படுத்தவல்லன.

இத்தகைய விடயங்கள் தொடர்பில் அரசிடம் செய்யப்பட்ட முறையீடுகளுக்கு தகுந்த நிவாரணமோ பரிகாரமோ கிட்டவேயில்லை. அது, இவ்விவகாரங்களில் அரசு உரிய கவனிப்புக் காட்டவேயில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.

யாழ். மாவட்டத்தில் உள்ள தங்களது வீடுகளுக்கு தமிழ் மக்கள் திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கத் தவறியுள்ள அதேநேரத்தில், அந்த மக்களின் பிரசன்னம் இல்லாமையைப் பயன்படுத்தி நடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முயற்சியே முன்னெடுக்கப்படுகின்றது. இதன்மூலம் அந்த மக்களின் வாக்குரிமையையும் ஜனநாயக வலுவையும் பறிக்கும் போக்கே முன்னெடுக்கப்படுகின்றது.

அரசியல் தீர்வைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது சந்திப்பின்போதே எழுத்து மூலமான ஒரு விடயத்தை அரசுப் பிரதிநிதிகள் முன் வைத்தது. அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகள் குழு மற்றும் நிபுணர்கள் குழு ஆகியவற்றின் அங்குரார்ப்பணக் கூட்டத்தின் போது – 2006 ஜூலையில் – ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய உரையே அது. இது பற்றி எனது முன்னைய கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளேன். அதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் ஆகும்.

அரசு தரப்பின் அழைப்பின் பேரில் இரண்டாவது சுற்றுப் பேச்சில் அது குறித்து மேலும் விளக்கமளிக்கப்பட்டது.

மீண்டும் அரசு தரப்பின் அழைப்பின் பேரில் 2011 மார்ச் 18ஆம் திகதி இடம்பெற்ற மூன்றாம் சுற்றுப் பேச்சின் போது விரிவான யோசனைத் திட்டம் ஒன்றை தமிழ்க் கூட்டமைப்பு முன்வைத்தது. அது, ஆட்சியலகின் கட்டமைப்பு, மத்திக்கும், அதிகாரப் பரவலாக்கல் அலகுக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ள துறைகள், செயற்பாடுகள், நிதி மற்றும் வரி அதிகாரங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க, நின்று நிலைக்கக் கூடிய தீர்வு ஒன்றை எட்டுவதற்கான ஏனைய விடயங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது.

இந்த யோசனைத் திட்டம் தொடர்பாக அரசின் பதிலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டி நின்றது. அவ்வாறு பதில் தருவதாக அரசு தரப்பில் உறுதி கூறப்பட்டபோதிலும் பல மாதங்களாகப் பதில் வரவேயில்லை. அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கலந்தாய்வுத் திட்டம் தொடர்பில் அர்த்தமுள்ள அல்லது பயன்தரத்தக்க கலந்தாலோசனை ஏதும் கூட இடம்பெறவேயில்லை. இது, ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதில் அரசுக்கு நேர்மையான பற்றுறுதி ஏதும் கிடையாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

நல்லிணக்கத்துக்கு மூல அடிப்படையான அரசியல் செயற்பாட்டில் தான் ஈடுபட்டிருப்பதாக உலகுக்குக் காட்டிக்கொள்ள முயலும் அரசு, அதேசமயத்தில் உண்மையில் அதற்கு மாறாக, புரட்டுத்தனமான ஏமாற்று நடவடிக்கையிலேயே ஈடுபட்டிருக்கின்றது.

ஆகவே, எதிர்காலத்தில் ஏதேனும் பேச்சுக்களில் ஈடுபடுவதாயின் அதற்கு வழிசெய்யும் விதமாக பின்வரும் மூன்று விடயங்களில் தனது அர்த்தமுள்ள நிலைப்பாட்டை வரையறை செய்து, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரசு வெளிப்படுத்தவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது.
1) ஆட்சியலகின் கட்டமைப்பு.
2) மத்திக்கும் அதிகாரப் பரவலாக்கல் அலகுக்கும் இடையில் வேறுபடுத்தப்பட்டிருக்கும் விடயங்களும் செயற்பாடுகளும்.
3) வரி மற்றும் நிதி அதிகாரங்களும்.

ஆனால், அரசோ இதைச் செய்வதை விடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிபந்தனைகளை முன்வைத்து, காலக்கெடுக்களை விதித்து செயற்படுகின்றது என வெளியே சென்று வழமைபோல குற்றம் சுமத்திப் பிரசாரம் செய்கின்றது.

பேச்சுக்கள் முறிந்தமையை அடுத்து ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவரைச் சந்தித்தார். இரண்டு உடன்பாடுகள் அந்தச் சந்திப்பின் போது எட்டப்பட்டன.

முதலாவது – எமது யோசனைத் திட்டத்துக்கு அரசு பதில் திட்டம் தரத் தவறிய சூழலில், அதற்கான மாற்றீடாக ஏற்கனவே அரசு தரப்புக்களால் முன்வைக்கப்பட்டிருந்த முன்னைய ஐந்து யோசனைத் திட்டங்களைப் பேச்சு மேசைக்குக் கொண்டுவருவது.

இந்த உடன்பாடு செப்டெம்பர் 16ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் பதிவேட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் அறிக்கையாகப் பின்வருமாறு பதியப்பட்டிருக்கின்றது:-

”ஜனாதிபதியுடன் நான் மேற்கொண்டிருந்த சந்திப்பின் தொடராக இந்தக் கூட்டம் இடம்பெறுகின்றது. அரசின் யோசனைத் திட்டத்தை முன்வைப்பதில் தமக்குள்ள இக்கட்டுக்களை அவர் விளங்கப்படுத்தினார். அது வெளியே கசியுமானால் அதில் ஏற்ற நேர்சீராக்கலைச் செய்வதில் கஷ்டம் என்பதை நான் கவனத்தில் கொள்கிறேன். என்றாலும் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட வேறு பல ஆவணங்கள் இருக்கின்றமையால் அவற்றின் அடிப்படையில் பேசலாம் என்றேன். அவை:- மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் யோசனை, அரசமைப்புக் சீர்திருத்தங்களுக்கான அரசின் 1995, 1997, ஓகஸ்ட் 2000 யோசனைத் திட்டங்கள், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர் குழுக்களின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை, நிபுணர் குழுவின் அறிக்கை ஷஏ| என்பன. இந்த அடிப்படைகளில் பேச்சுக்களைத் தொடர்வதானால் எங்களுடைய (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய) யோசனைத் திட்டத்துக்கு அரசு தரப்பின் பதில் யோசனை முன்வைக்கப்படாமலேயே பேச்சுக்களைத் தொடரலாம் என ஜனாதிபதி என்னிடம் இணக்கம் தெரிவித்தார்”

இரண்டாவது உடன்படிக்கை குறித்தும் அதே கூட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்புப் பேச்சுக்களில் இணக்கம் எட்டப்பட்டதும் (i) அந்த இணக்கப்பாடு அரச யோசனைத் திட்டமாக அல்லது அரசு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கும் யோசனைத் திட்டமாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு எடுத்துச் செல்லப்படலாம் என்றும் (ii) நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கூட்டமைப்பு பங்குபற்றும் என்றும் அந்தக் கூட்ட அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இணக்கப்பாடுகளின் அடிப்படையில்தான் –

நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதற்கான நகல் வரைவுக் குறிப்புத் தொடர்பான தனது கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்ததுடன் அவற்றை அரசு உள்வாங்கி 2011 ஒக்டோபர் 10ஆம் திகதி நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலும் சேர்த்துக்கொண்டது.

இரு தரப்புப் பேச்சுகளின்போது தனது பதிலை வழங்குவதாகக் கூறிவிட்டு அரசு அதிலிருந்து பின்வாங்கிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்த முதல் விட்டுக்கொடுப்பு – சகாயம் – இதுவாகும்.

இந்த நேர்சீராக்கலுக்குப் பின்னர் இரு தரப்புப் பேச்சுக்கள் மீள ஆரம்பித்தன. 2011 டிசெம்பர் மாதத்தில் மூன்று கூட்டங்கள் நடந்தன. காணி அதிகாரங்களைப் பரவலாக்குவது குறித்து அவற்றின்போது கலந்தாலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் 2012 ஜனவரி 17, 18, 19ஆம் திகதிகளில் மூன்று கூட்டங்களுக்குத் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த மூன்று கூட்டங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமுகமளித்தபோதிலும் அரச பிரதிநிதிகள் குழு வருகைதரத் தவறிவிட்டது.

ஆனால், அதற்குப் பதிலாக இரு தரப்புப் பேச்சுக்கள் தொடர்வதாயின் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றவேண்டும் என்று – முன்னர் உடன்பாடு காணப்பட்டு கூட்ட அறிக்கையில் பதிவுசெய்யப்பட்ட விடயங்களுக்கு முரண்பாடாக – அரசு வலியுறுத்தத் தொடங்கியது.

இந்த முட்டுக்கட்டை நிலையை நீக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் 2012 ஜனவரி 27ஆம் திகதி அரசு பிரதிநிதிகள் குழுவின் மூன்று அங்கத்தவர்களைச் சந்தித்துப் பேசி மேலும் விட்டுக்கொடுப்புகளைச் செய்தார்.

இதன்படி – இரு தரப்பும் பேச்சுக்களை ஆரம்பிக்கும் சமயம், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயர்களை நியமிக்கும் என்றும், இரு தரப்பு பேச்சுக்களின் போது கணிசமான அளவுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தெரிவுக் குழு கூட்டப்படும் என்றும் உடன்பாடு காணப்பட்டது.

இது எழுத்தில் சுருக்கமாக வரையப்பட்டு ஜனாதிபதியின் இணக்கம் பெறப்படுவதற்காக 2012 ஜனவரி 31ஆம் திகதி அரசு குழுவிடம் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் பதில் ஏதும் மீளவேயில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியதாகும்.

மூன்றாவது முயற்சி 2012 மேயில் எதிர்க்கட்சித் தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரும் பிற ஐ.தே.க. தலைவர்களும் ஜனாதிபதியையும் ஏனைய பல அமைச்சர்களையும் சந்தித்தனர். அப்போது, முன்னர் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெறவேயில்லை என்றும், அதுவரை நடைபெற்றவை எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுக்கள் மட்டுமே என்றும் கூறப்பட்டதாம்!

பேச்சுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதன் முதலில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதத்தில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு சுற்றுப் பேச்சுக்குப் பின்னரும் இரு தரப்பினராலும் வெளியிடப்பட்ட ஒவ்வொரு கூட்டு அறிக்கையிலும் கூட மற்றைய தரப்பு பிரதிநிதிகள் குழு ஷஅரச பிரதிநிதிகள் குழு| என்றே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர் ஒரு குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு புதிதாக இணக்கம் காணப்பட்டது. அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யுடன் மேலும் நடத்தும் பேச்சுக்களைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு உரிய பெயர்களை எதிர்க்கட்சித் தலைவர் நியமித்து அறிவிப்பார் என முடிவாகியது. பல்வேறு நகல் வடிவங்கள் பரிமாறப்பட்டதன் பின்னர் நிகழ்ச்சி நிரலின் வரிவடிவத்துக்கு இணக்கம் காணப்பட்டது. அந்த உடன்பாடு எட்டப்பட்டதும் எதிர்க்கட்சித் தலைவர் உரை ஒன்றை எழுத்தில் தயாரித்து, அதன் பிரதிகளை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வழங்கியதோடு அதனை 2012 மே 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தமது அறிவிப்பாகவும் சமர்ப்பித்தார். எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்படும் அந்த நிகழ்ச்சி நிரல் யோசனை நாடாளுமன்றத்தில் அரசினால் வழிமொழிந்து உறுதிப்படுத்தப்படும் என முன்னர் இணங்கப்பட்டிருந்த போதிலும் அத்தகைய உறுதிப்படுதல் ஏதும் நாடாளுமன்ற அவையில் வெளிப்படுத்தப்படவேயில்லை!

இதுவே, அரசு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கள் மற்றும் நடாளுமன்றத் தெரிவுக் குழு விவகாரங்களில் உண்மையான நிலைவரமாகும். மேற்படி எல்லாவற்றுக்கும் ஆவண ரீதியான சான்றுகள் உள்ளன. அப்படியிருந்தும் அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு முடியாத தனது இயலாத் தன்மைக்குத் தவறான தகவல்களை வெளிப்படுத்தும் தனது பிரசாரம் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குற்றம்சாட்டுகின்றது அரசு.

இவற்றை எல்லாம் மறந்துவிட்டு வெறுங்கையுடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் நுழையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கும் அசட்டுத்தனமான நிலையில் அரசு இருக்கின்றது. இந்த அழைப்பு, அடிப்படையில் நேர்மையான ஒன்று அல்ல. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் மீண்டும் ஒரு தடவை ஏமாற்றுவதற்கான தந்திரமாகும்.

13ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தி, அதற்கு அப்பாலும் செல்வதன் வாயிலாக அதிகாரப் பரவலாக்கத்தை அர்த்தமுள்ளதாக்கி, அதன் மூலம் அரசியல் தீர்வு ஒன்றைத் தான் எட்டவுள்ளதாக பெரிய அளவில், பொதுவாக சர்வதேச சமூகத்திடமும், விசேடமாக இந்தியாவிடமும் அரசாங்கம் மீண்டும் மீண்டும் உறுதி கூறிவருகின்றபோதிலும் அரசின் உள்நோக்கம் 13ஆவது திருத்தத்தை முற்றாக இல்லாததாக்கி விலக்கிக் கொள்வதே என்பதுதான் எமது சந்தேகமாகும். இது, இப்போது பாதுகாப்பு அமைச்சுச் செயலாளரின் வெளிப்படுத்துகை மூலம் உறுதியாகியுமிருக்கின்றது. இந்த இலக்கை அடைவதற்கு அரசின் வாகனம் நாடாளுமன்றத் தெரிவுக் குழுதான் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அதனால்தான் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் நுழைவதற்கு முன்னர் புரிந்துணர்வு இணக்கம் எட்டப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடாப்பிடியாக வற்புறுத்தி நிற்கின்றது.

சிலர் சாதுரியமாக ஒரு கேள்வியை எழுப்புகின்றார்கள்:- நாடாளுமன்றத் தெரிவுக் குழு என்பது கனகச்சிதமாக ஜனநாயக நடவடிக்கை அல்லவா? இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க தீர்வு ஒன்றை தரக்கூடிய நடவடிக்கை ஒன்றில் பங்குபற்றுவதற்கு நீங்கள் எவ்வாறு மறுக்கமுடியும்?

சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்தத் தேசத்தைப் பின்னடைவுக்குள் தள்ளியது பெரும்பான்மை வாதம் என்ற தெளிவான நிலைப்பாடுதான் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். தனித்துப் பெரும்பான்மை ஆட்சி என்பதுதான் இந்த நாட்டின் பல சிறுபான்மைத் தரப்புக்களை வலிமையற்றவர்களாக்கியது.

1947 தேர்தலில் வாக்களித்த மக்களின் ஒரு பிரிவினரிடமிருந்தே அவர்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் அதே தேர்தலின் மூலம் முதலாவது நாடாளுமன்றத்துக்கு ஜனநாயகப் பெரும்பான்iயுடன் வந்த தரப்பினால் பறிக்கப்பட்டது என்பதைக் கவனியுங்கள்.

அதன் பின்னர் சிங்களம் மட்டும் மற்றும் ஏனைய பல அத்தகைய சட்டங்கள் இதே – ஜனநாயக நடைமுறைகள் மூலமாக – பெரும்பான்மையினரின் விருப்பமாகத் திணிக்கப்பட்டன.

எண்ணிக்கை அளவில் சிறுபான்மையினராகத் தமிழர்கள் இருந்தபடியால்தான் 1972 மற்றும் 1978 அரசமைப்பு உருவாக்கல்களின் போது அவர்களைப் புறக்கணித்துவிட்டு அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இத்தகைய புறமொதுக்கலும் வெளியேற்றமும்தான் தனித்துச் செல்லும் நோக்கத்துக்கும் வன்முறைப் பிணக்குக்கும் மூலகாரணமாயின.

ஆனால் புரிந்துணர்வும் புதிய ஆரம்பமும் அவசியமானால் கடந்த கால இத்தகைய தவறுகள் மீள இடம்பெறக்கூடாது. ஷபெரும்பான்மையினரின் முடிவு| என்ற ஒரே உள்நோக்கு இலக்கை எட்டும் பொறிக்குள் சிக்கிக்கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்ணை மூடிக்கொண்டு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் செல்லமுடியாது.

பெரும்பான்மைவாதப் போக்கு என்ற பிரச்சினையை பெரும்பான்மை அணுகுமுறை என்ற வழிமுறை மூலம் தீர்க்க முடியாது. அத்தகைய பெரும்பான்மைவாதப் பிரச்சினை முன்னர் பல உடன்பாடுகள் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறியப்பட்டமை மூலமாக (பண்டா – செல்வா, டட்லி – செல்வா) மேலும் கூர்மையடைந்திருக்கின்றது. அது இப்போது மீண்டும் திரும்பவும் நடக்கின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவு செய்ய அரசு தயாரில்லை என்றால், இப்போது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் மட்டும் அது நேர்மையாகச் செயற்படும் என எப்படி நம்பமுடியும்.?


Constitutional history of Sri Lanka

The Democratic Socialist Republic of Sri Lanka sits on an island covering approximately 65,630 kilometres in the Indian Ocean. Located off the south-eastern coast of India, it is home to 21 million people from different ethnic and religious backgrounds. The island has been struggling with its multicultural reality, which culminated in a bitter civil war between the ruling Sinhalese and Tamil separatists that ended in 2009. Rocked by political and military struggles, the island’s economy has been sluggish and lacking in foreign investment. 14% of the population is urban, and the largest city is the capital of Colombo with 680,000 people. The majority of the population is Buddhist, but with significant minority populations of Hindus, Christians, and Muslims.

’13th Amendment is irredeemable’ – Constitutional expert

Dr. Jayampathy Wickramaratne is a President’s Counsel who served as a Consultant to the Ministry of Justice and Constitutional Affairs from 1996 to 2001. In 2004, he was made a Senior Advisor to the Ministry of Constitutional Affairs and also functioned as a member of the Presidential Advisory Committee on Constitutional Affairs. He played a prominent role in drafting the People’s Alliance Government’s 1997 proposals for constitutional reform and devolution as well as the Draft Constitution Bill presented in 2000.

In conversation with the JDS, Dr.Wickramaratne shared his views, hopes and fears about the current and future politics of Sri Lanka. “At the moment we are witnessing a revival of Sinhala nationalism as a result of the war victory. The way these sentiments are being expressed can have an extremely negative impact on the Tamil society” he said.

Excerpts from his interview follow:

JDS: The renewed discussions on the long forgotten 13th Amendment seems to have taken the stage again. But as far as the Sinhala polity in concerned the whole devolution discourse has mostly revolved around the same topic, without making any substantial progress for almost two decades. What are your reflections on this?

Dr.Jayampathy Wickramaratne: First of all we should not forget the fact that the 13th amendment to the Sri Lankan constitution is something that has not been implemented for over two decades, despite it has being a part of the constitution. No government has demonstrated sufficient willingness to practically implement it. The bitter truth is that the provincial councils which were established under the 13 amendment to exercise the devolved political power have been ultimately turned into an extended arm of the central government. It has no authority whatsoever to exercise any powers that have been conferred to them by the relevant constitutional amendment. Frankly speaking, each and every dot and comma in the amendment has been used against the very spirit of the amendment i.e. to reduce and weaken the political powers of the provincial units. The provincial governors – who are in fact appointed by the Executive President himself – and the central government have become the biggest obstacles to the free functioning of these provincial units. Even some of the chief ministers of the provinces who are willing to practice a certain degree of freedom have come under great pressure to accept the status quo and to back down.

On the other hand, the provincial councils themselves have shown some hesitation to execute the powers bestowed on them by the 13th amendment due to central government’s reluctance to send a clear signal on these matters. For example, so far, the government hasn’t shown any genuine interest in holding elections to the Northern Provincial Council. I don’t understand why the government is hesitating to hold elections in the North since they have already conducted the regional council elections in the province.

JDS: As far as the 13th Amendment is concerned, what is your impression of the stand taken by the Tamil National Alliance (TNA)?

JW: The issue that is of paramount importance is to have a broader discussion to decide how the national question should be resolved. As we know, initially certain attempts were made to build up a mutual understanding between the government and the TNA. But the TNA insisted that it was meaningless to proceed any further unless the government is prepared to agree to the basic points put forward by them. But I think later they changed their position and showed more flexibility, perhaps due to the pressure from India or some other reason. However, as we know, during the post 13th amendment period many other useful proposals have also come out, such as Mangala Munasinghe  Committee report [1], 1997 devolution package [2], 2000 August Draft Constitution Bill [3],  APRC Expert Panel ‘majority’ report [4], 2007 final report of All Party Representative Committee (APRC) [5] etc. Now they have proposed to consider the possibility of at least using some of these documents as the basis for negotiations. When you compare this with the earlier position held by the TNA, I think they have shown a considerable amount of flexibility. But still, the government has not responded positively.

JDS: You say that in a certain sense, the TNA has bent over backwards to find a solution. But on the contrary, in a collective memorandum submitted to the TNA by a highly influential group of Tamil civil society members in last December, it has been clearly stated that “any solution to the ethnic problem should proceed from a recognition of Tamils as a nation entitled to the right to self-determination.” In such a context, do you believe that TNA’s flexibility is a true reflection of the collective Tamil sentiments as a whole?

JW: Now, the danger I see here is quite serious. If the southern Sinhala polity fails to facilitate the TNA’s position and reach an agreement, we don’t know how the Tamil society would respond. I honestly fear when I think whether we are on the verge of repeating the same mistakes of the ’80s. Just imagine what will happen if Sambanthan and others get outflanked by a more radical and militant tendency that would emerge within or without the TNA as a result of this current political stand-off? The responsibility lies in the hands of the of the Southern polity to prevent any such development. And the only way to ensure that would not happen is to pave the way to find a just solution.

By and large, the decades-old grievances of the Tamil people have neither been recognized nor addressed to date. 13th Amendment cannot be considered as the only viable solution to the present crisis. There are a number of inherent weaknesses and inadequacies in it that cannot be rectified. We need a solution which can go beyond the limits set by the 13th Amendment. That’s why the 2000 August Draft Constitution Bill contained a proposal in it to devolve power further. It in fact proposed a semi federal form of government. I don’t think the 13th Amendment can be redeemed. My belief is that we need to change it completely. Today even the Tamil people expect a solution that goes well beyond the 13th Amendment.

I am a person who signed the APRC Expert Panel ‘majority’ report. I strongly believe that without a genuine devolution of power, this problem can never be solved. Moreover, I don’t think a Senate – as suggested by some sections in the government – can be a viable alternative or a substitute to a solution based on a broader power-sharing model.

JDS: The fate of the All Party Representative Committee is not different from the fate of many other similar initiatives taken in the past. As it has been pointed out by many, the President himself changed some of the content in the report by abusing his executive powers and immunity. But given the fact that neither the civil society nor the political parties raised a considerable opposition or challenge to such arbitrary moves, how do you see the future?

JW: The political parties in the south should be held responsible for the prevailing uncertainty. They weren’t interested at all about the APRC Expert Panel ‘majority’ report. Even the 2010 APRC report compiled under the chairmanship of Professor Tissa Vitharana was not so bad. It too provided an opening for a serious discussion. Sadly though, the very government which established the All Party Representative Committee did not bother even to consider their recommendations. The Presidential Secretariat itself is behaving as if they haven’t received any such reports. After all the bitter experience we have been through, the vocal opponents of these reports, who are also prominent coalition partners of the current government – parties such as National Heritage Party (JHU) – still ask: ‘ethnic problem? what ethnic problem?’.

The biggest problem is the ambiguous position held by the main party in the ruling coalition – the Sri Lanka Freedom Party (SLFP). In 1987, when the 13th Amendment was introduced, they campaigned against it. After 1993, under the leadership of Chandrika Bandaranayake, they changed their position to some extent. But still, it isn’t clear where they exactly stand on this issue. I cannot actually see that the current leadership of the SLFP is genuinely committed to finding a solution based on the fundamentals of power-sharing.

Notes:

1. A cross-party parliamentary select committee formed in August 1991 to come up with a solution to the ethnic conflict, under the chairmanship of SLFP parliamentarian Mangala Moonasinghe. The forty-five member select committee released its’ report in November 1993.

2. The drfat constitution published by Sri Lanka’s Ministry of Justice, Constitutional Affairs and National Integration in October 1997. The document was titled “The Government’s Proposal for Constitutional Reform.’

3. The draft Constitution Bill presented to the Parliament in August 2000 but withdrew due to lack of support.

4. In 2006 the president of Sri Lanka appointed a 17 member Panel of Experts to advise the All Party Representative Committee (APRC) established to find a political solution to the ethnic conflict. In December 2006, a report endorsed by a majority of 11 members of the Experts Panel was released, which became widely known as the APRC Majority Report (also known as Report of Sub Committee ‘A’).

5. The APRC was established in 2006. After a long, dragged-out process a final report was submitted to the President in August 2007. The report which was prepared after 63 sittings over a period of one and a half years was kept away from the general public until it was presented to the Parliament in July 2010.

Photo courtesy: CJPD

 http://www.jdslanka.org/index.php/interviews/politics-a-social-issues/2-13th-amendment-is-irredeemable

Constitutional history

Sri Lanka’s political system has been shaped by its history as a British colonial possession, dating from 1801. The British attempted to develop a representative government on the island through an 1833 constitution that created a legislative council. This council was largely powerless, however, and resigned in 1864 when their censure of the British government was ignored. The British attempted several other Constitutions to appease the populace in 1910, 1920, and 1924, but these constitutions did not provide for local governance by the native population. The 1931 Constitution finally gave more authority to the native elected representatives over internal concerns. Over the next 40 years, the British attempted to give more authority and independence to the island in the hopes of transferring it to dominion status within the British Empire. On 4 February 1948, the country declared its independence from Britain but remained a commonwealth of the Empire. It was not until 16 May 1972 that the nation officially proclaimed itself an independent republic.

Under British rule, the northern Tamils had gained influence through their disproportionate access to education. Thus, in the early years of post-independent Sri Lanka, the Tamils managed to influence the creation of a new constitution on 31 August 1978. This Constitution, still in force today, was created to grant more local autonomy and equalize the Tamil and Sinhala, ethnic groups. Over the past 40 years, the Constitution has been amended several times. The 17th amendment, passed in 2001, was meant to ensure more transparency with the creation of a constitutional council with representation from the executive and legislative branches, the government, the political parties, and the public. This came in the wake of a failed attempt to write a new constitution that died in 2000. This constitution was designed to create a federal system which would grant Tamil demands for a separate state. It was hoped that this constitution would see the end of the intense and bloody civil war between the Sinhalese majority and the Tamil minority, represented by the guerrilla group called the Liberation Tigers of Tamil Eelam (LTTE), but it died before a vote due to political infighting. On 19 May 2009, President Mahinda Rajapaksa declared that the Sinhalese government had defeated the LTTE. In the wake of his rise in popularity, the President introduced an 18th amendment designed to expand the already extensive executive powers by overruling the 17th amendment. This proposal was adopted by the Parliament in September 2010 over great popular opposition, giving the President the power over appointments and eliminating his term limits.

The 1978 Constitution

The Constitution of Sri Lanka revolves around a President invested with broad executive powers. It has 172 articles, recognizes Buddhism as the state religion, and guarantees a broad range of fundamental rights. The Constitution also establishes the duties of the state and the citizen. It is the task of the state to establish a democratic socialist state, ensure the distribution of wealth, oversee economic development, and raise educational and cultural standards. It must also commit itself to the decentralization of the government and the promotion of national identity through the elimination of discrimination. In return, it is the duty of the citizen to foster national unity by relinquishing their personal rights to ensure racial or religious harmony and protect public health and morality.

Executive branch

Political power is divided between the legislative, executive, and judicial branches. The most powerful of these is the executive branch. The President is the Head of the State, Government, and the Armed Forces. He is elected by a direct vote of the people for 6-year terms, and under the 18th amendment, the number of terms is unlimited. His powers of appointment are very broad under the newest amendment, as well. Not only can he appoint the Prime Minister, Cabinet, and Justices of the Supreme Court, but he may appoint other key officers as well. If he fails to appoint the official, he can simply assume their powers until an appropriate candidate is found. For example, President Rajapaksa has held the posts of finance and defence ministers in past, in addition to his constitutional powers. His ability to appoint government posts allowed him to gain the support he needed from Parliament to pass the amendment in the first place. While the President can be impeached by a combined effort of Parliament and the Judicial Branch, no other may challenge his decisions in either a public or private capacity. The Prime Minister and the Cabinet advise the President in his capacity as the Head of Government and are charged with the direction and control of the Government. While they are ultimately responsible to Parliament, they are appointed by the President.

Legislative branch

The Legislature of Sri Lanka is unicameral, with a Parliament of 226 members elected to 6-year terms by a direct vote. The members of Parliament then elect a Speaker, Deputy Speaker, and a Chair of Committees. The President can dissolve Parliament at any time, which significantly weakens their authority vis-a-vis the Executive branch. The main purpose of the Parliament is to pass bills and resolutions. This legislation becomes law upon a majority vote and the endorsement of the Speaker. If the Cabinet requires it, however, the bill may require a referendum, which the President must endorse. No court can question a law adopted in this way.

Judicial branch

The judicial branch of Sri Lanka is comprised of a Supreme Court, a Court of Appeals, a High Court, and other courts created by law. It is the task of these courts to protect and enforce the individual rights of the people. The President appoints not only the Chief Justice and members of the Supreme Court but also the President and Justices of the High Court. They may hold office only for 65 years, and while their appointment was subject to the approval of the Constitutional Council under the 17th amendment, this requirement has been abolished by the 18th amendment. The Supreme Court holds the sole power of constitutional review, and its jurisdiction also extends to matters concerning fundamental rights, final appeals, and election issues. It also has the power to review the actions of Parliamentary members and may advise Parliament in the legislative process.

System of government

Constitutional Challenges

Issues Challenges

Federalism and decentralization – how to give regional autonomy and main national unity?

Minority rights – how to include the Tamil minority in the political process and economic development?

Women’s rights – how to ensure female political representation and engagement? • Increased executive powers – 18th amendment expansion of constitutional powers of the President

Centralization of political power – concentration of power in the hands of a few, related individuals

Judicial dependence and politicization – executive and legislative interference with the independence of the judiciary

Increased executive powers – 18th amendment expansion of constitutional powers of the President

Centralization of political power – concentration of power in the hands of a few, related individuals

Judicial dependence and politicization – executive and legislative interference with the independence of the judiciary

Timeline

1833 British take complete control of the island of Ceylon
1931 Donoughmore Constitution gives more authority to native government
4 February 1948 The island of Ceylon gains independence
16 May 1972 Ceylon becomes Independent Republic of Sri Lanka
31 August 1978 A new constitution adopted, creating the Democratic Socialist Republic of Sri Lanka
1983 Anti-Tamil riots kill several hundred, sparking a civil war between the Tamil separatist group, the LTTE, and the national government
1987 14th amendment passed, promising the creation of provincial councils in Tamil areas and more regional autonomy
2000 The draft version of a new constitution dies in committee due to political infighting
14 November 2001 17th amendment ordering creation of federal oversight body, the Constitutional Council, passed
19 May 2009 President Mahinda Rajapaksa declares civil war over
September 2010 18th Amendment approved removing presidential term limits

Bibliography

It is said that you cannot teach new tricks to an old monkey. Mahinda Rajapaksa is back again about Sajith Premadasa supporting federal-state via his election manifesto.
(1) As pointed by a commentator none of Rajapaksa’s family possesses educational qualification beyond SSC. No one entered the University including Namal or Yoshita. So one cannot expect any scholarship or knowledge on constitutional affairs from a person like Mahinda.
(2) The word unitary has lost its traditional meaning. And no two constitutions of countries are alike. Most constitutions are a mixture of both federal and unitary.
(3) The UK has a unitary constitution, but Scotland and Northern Ireland have their own elected parliament/ legislative body. In September 1997, there was a referendum in Scotland in which people voted for devolution. The UK Parliament then passed the Scotland Act 1998 which established the Scottish Parliament, which opened in 1999, and transferred some of the powers previously held at Westminster. The Scottish Government runs the country in relation to matters that are devolved from Westminster. This includes the economy, education, health, justice, rural affairs, housing, environment, equal opportunities, consumer advocacy and advice, transport and taxation. Scotland has its own Central Bank, flag etc.
(4) India is a quasi-federal is a federal union comprising 28 states and 9 union territories, for a total of 37 entities. The states and union territories are further subdivided into districts. Article 1 in the Constitution states that India, that is Bharat, shall be a Union of States. The 28 states have no right to cessation.
(5) States in which the federal government shares power with semi-independent regional governments. In many cases the Central government is (in theory) a creation of the regional governments; a prime example is the United States.

Mahinda must stop scaring Sinhalese people by raising the bogey that a federal form of government will break up Sri Lanka into 9 separate states. As a matter of fact, Sri Lanka was never a single country. Throughout history, it was divided into Rajarata, Mayarata, and Ruhunarata. It was the British in 1833 amalgamated the Northern and Eastern provinces with the rest of the provinces. As for size, Switzerland is smaller than Sri Lanka.

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply