வடக்கு கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்ட முயற்சி வெற்றி!
தனிமைப் படுத்தப்பட்ட கஜேந்திரகுமார்!
வடக்கு கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் இடையில் நடந்த பல சுற்று பேச்சு வார்த்தைகள் வெற்றியளித்துள்ளன. மாணவர்களது முயற்சி வீண் போகவில்லை. தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட ஆறு கட்சிகளில் ஐந்து கட்சிகள் ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த ஐந்து கட்சிகளும் சேர்ந்தே பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நா.உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் “நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலிலே போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் அவர்களின் அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்மக்கள் சார்பாகப் பொதுவான
நிலைப்பாடொன்றை முன்வைக்க வேண்டுமென்ற முயற்சியைப் பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்திருந்தார்கள். அதற்காக 6 தமிழ்க் கட்சிகளை அழைத்திருந்தார்கள்.
இந்தக் கட்சிகளுக்கிடையில் நான்கு அல்லது ஐந்த தடவைகள் இந்தச் சந்திப்புக்கள் இடம் பெற்றிருந்தன. இன்று அது கணிசமான அளவு வெற்றியிலே முடிந்திருக்கிறது. அதாவது இந்த ஆறு கட்சிகளிலே ஐந்து கட்சிகள்
இணைந்து நிலைப்பாடொன்றை ஒற்றுமையாக எடுத்திருக்கிறோம். நீண்ட உரையாடல்களுக்குப் பின்னர் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கிறது.
இதனை நாங்கள் பிரதான வேட்பாளர்கள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முன்பாக வைத்து, இது தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாடு என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆகையால் இதனைப் பாரிய வெற்றியாக நாங்கள் கணிக்கிறோம்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படாதவிடத்து என்ன செய்வீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது “நாங்கள் பேச்சுக்குப் பிறகு தான் அதைப்பற்றித் தீர்மானிக்கலாம். இப்போதே இப்படி நடந்தால், அப்படி நடந்தால் என்ன
வென்று தீர்மானங்களை எடுக்க முடியாது. ஆனால் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறோம். இந்தப் பேச்சு பிரதிபலிப்புக்கள் அல்லது அதற்குப் பிறகு வரும் விடயங்கள் தொடர்பில் இந்த ஐந்து கட்சிகளும் இணைந்து அப்போது தீர்மா
னங்களை எடுப்பதெனத் தீர்மானித்துள்ளோம்” எனப் பதில் அளித்தார் சுமந்திரன்.
அந்த உடன்படிக்கையில் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டுள்ளார்கள். எதிர்பார்த்தது போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முரண்டு பிடித்துக் கொண்டு பேச்சு வார்த்தை மேசையில் இருந்து வெளியேறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பின் இடைவிடாத முயற்சி காரணமாக இதுவரை நகர்த்தப்பட்ட அரசமைப்பு உருவாக்கிய எத்தனங்களையும், அவ் விடயத்தை ஒட்டிய இடைக்கால அறிக்கையையும் நிராகரி நிராகரிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த கஜேந்திரகுமாரின் கோரிக்கை ஏனைய கட்சிகளால் நிராகரிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் பல்கலைக் கழக மாணவப் பிரதிநிதிகள்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். (குறள் 140 –
விளக்கம்:
அறிவு ஒழுக்கங்களால் சிறந்தவர்களோடு ஒத்து நடத்தல் வேண்டும்; அவ்வாறு நடக்காதவர் பல நூல்களைக் கற்றாராயினும் அறிவில்லாதவர்களேயாவர்.
Translation in English:
Who know not with the world in harmony to dwell,
May many things have learned, but nothing well. (140)
கஜேந்திரகுமாருக்கும் அரசியலுக்கும் எட்டாப் பொருத்தம். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம் என அடம் பிடிப்பவர். ததேகூ இல் இருந்து புலத்தில் இருந்த வன்னியின் எச்சங்களின் புத்திமதியைக் கேட்டு வெளியேறினார். கொள்கையளவில் அவர் ததேகூ ஓடு முரண்படவில்லை. வெளியேறி ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுக்காசை இழந்து வருகிறார்! வெளியேறி இருக்காவிட்டால் அவர் இன்றும் ஒரு எம்பி!
மக்களாட்சி முறைமை (அது முழுமையாக இல்லாவிட்டாலும்) உள்ள நாட்டில் வாக்குரிமை என்பது ஒரு கூரிய ஆயுதம். ஆள்வோரை அவ்வப்போது அகற்ற இந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது. ஆன காரணத்தால் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பது ஒரு எதிர்மறைப் போக்காகும். ஒரு வாதத்துக்கு தேர்தலைப் புறக்கணிப்பதாக வைத்துக் கொள்வோம். அது நூறு விழுக்காடு வெற்றி பெறுமா?
1931 இல் அன்றைய சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்தது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஊர்காவத்துறை, காங்கேசன்துறை தொகுதிகளுக்கு ஒருத்தர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அந்தத் தேர்தல் புறக்கணிப்பு தமிழர்களுக்கு பாதகமாக அமைந்து சட்ட சபையில் ஏக சிங்கள் அமைச்சர் வாரியம் உருவானது. 2005 இல் நடந்த சனாதிபதி தேர்தலைப் புறக்கணித்தது தற்கொலையில் முடிந்தது.
ஒருவன் பலவீனமாக இருக்கும் போது அவனுக்கு இரண்டு பகைவர்கள் இருந்தால் அதில் ஒரு பகைவனோடு சேர்ந்து மற்றவனை வீழ்த்த வேண்டும். இந்த உத்தியை திருவள்ளுவர் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருக்கிறார்.
தன்துணை யின்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்துணையாக் கொள்கவற்றுள் ஒன்று. (குறள் 875 – பகைத்திறன் அறிதல்)
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன் இன் துணையாக் கொள்க அவற்றுள் ஒன்று.
தனக்குத் துணை யாரும் இல்லை. ஆனால் பகையோ இரண்டு. எனவே அவற்றுள் ஒன்றைத் தனக்கு இனிய துணைவனாக ஆக்கிக்கொள்வானாக.
பகையை வெல்ல திருவள்ளுவர் சொல்லும் ஒரு உத்தி இது.
திருவள்ளுவர் சொன்னதையே லெனின் சென்ற நூற்றாண்டில் சொல்லியிருக்கிறார். நான்கு எதிரிகள் இருந்தால் மூன்று எதிரிகளோடு கைகோர்த்து நான்காவது எதிரியை வென்றுவிடு. பின்னர் இரண்டு எதிரிகளோடு சேர்ந்து மூன்றாவது எதிரியை வெல்ல வேண்டும். இப்போது இரண்டு எதிரிகள் எஞ்சியிருக்கிறார்கள். அதில் ஒருவனோடு சேர்ந்து அவனை வீழ்த்திவிடு! வகுப்பில் இருந்த ஒருவன் கேட்டான். கடைசி ஆளை எப்படி வெல்வது? அவனை நீதான் தனித்து நின்று வெல்ல வேண்டும். அப்படி உன்னால் அவனை வெல்ல முடியாவிட்டால் நீ ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்ல உனக்கு அருகதை இல்லை!
இதெல்லாம் கஜேந்திரகுமாருக்குத் தெரியாதது இல்லை. தெரியும். பின் ஏன் சித்தம் போக்கு சிவம் போக்கு என நடந்து கொள்கிறார்? இது அவரது மரபணுவில் இருக்கிறது. பாட்டன் ஜிஜி பொன்னம்பலம் பண்டா – செல்வநாயகம் உடன்படிக்கையை மூர்க்கமாக எதிர்த்தார். சிங்களவர்களைவிட கடுமையாக எதிர்த்தார். “இந்த உடன்படிக்கை தமிழர்களை வட – கிழக்கு மாகாணங்களுக்குள் முடக்கி விடும், தமிழர்கள் வடக்கே பருத்தித்துறை தெற்கே தேவேந்திரமுனை வாழ உரித்துண்டு. இந்தச் செவிட்டுச் செல்வநாயகம் தமிழ்மக்களை இரண்டாம்தரத்துக்குத் தள்ளிவிடப் பார்க்கிறார்” என ஜிஜி பொன்னம்பலம் முற்றவெளியில் முழங்கியது இப்போதும் காதில் கேட்கிறது!
Leave a Reply
You must be logged in to post a comment.