India’s first lunar lander falls silent just before touchdown

 India’s first lunar lander falls silent just before touchdown

BY 

SEPTEMBER 6, 2019

India’s space agency was attempting a moon landing unlike any other—but now, the world waits to hear the spacecraft’s fate.

An Indian spacecraft’s unprecedented attempt to make a soft, controlled landing on the moon’s south polar region has ended in excruciating silence: Shortly before touchdown, the robotic lander Vikram—part of the Chandrayaan-2 mission—fell out of contact with mission control. The Indian Space Research Organization, India’s space agency, says that the spacecraft stopped communicating with Earth when it was within 1.3 miles of the lunar surface.

“The Vikram descent was as planned, and normal performance was observed, up to an altitude of 2.1 kilometres,” said Kailasavadivoo Sivan, ISRO’s chairman, in a statement roughly half an hour after the signal loss. “The data is being analyzed.”

In addition to setting a global first, a successful landing would have made India just the fourth country to touch down anywhere on the lunar surface, and only the third nation to operate a robotic rover there. Nevertheless, the Chandrayaan-2 mission’s orbiter remains safely in lunar orbit, with a year-long scientific mission ahead of it.

MOON What is the moon made of, and how did it form? Learn about the moon’s violent origins, how its phases shaped the earliest calendars, and how humans first explored Earth’s only natural satellite half a century ago.

“India is proud of our scientists! They’ve given their best and have always made India proud,” Indian prime minister Narendra Modi said in a statement on Twitter after Sivan’s update. “These are moments to be courageous, and courageous we will be!”

Like any voyage to a world beyond Earth, Vikram’s flight was a risky endeavour, requiring the lander to slow itself down to a near standstill, autonomously scan for surface obstacles, and then take steps to avoid them during touchdown. The majority of attempts to land robots on the moon have ended in failure, either during launch or on the way to the surface.

“Even though we got a successful lunar orbital insertion, landing is the terrifying moment,” Sivan said in an August press conference.

In an interview before the attempt, Dana Hurley, a planetary scientist at Johns Hopkins University’s Applied Physics Laboratory, expressed the nervousness that planetary scientists around the world feel with every spacecraft landing—because they know all too well what can go wrong.

“We’re always excited and nervous because we know it’s very hard to do,” Hurley said. “It’s a tough business.”

Polar placement

Following its launch on July 22, Chandrayaan-2 spent the last several weeks inching its way to the moon, ultimately entering lunar orbit on August 20. On September 2, Vikram separated from the mission’s orbiter, and the newly freed lander began a series of braking maneuvers to lower its orbit and ready itself for landing.

Had things proceeded without a hitch, Vikram and Pragyaan—the small solar-powered rover it carried—would have set down on the moon at a latitude of about 70 degrees South, on a highland between the craters Manzinus C and Simpelius N.

Moon

Earth System

DRAG MOON TO ROTATE
BRIAN T. JACOBS, KATIE ARMSTRONG, MATTHEW W. CHWASTYK, NG STAFF. SOURCES: GAZETTEER OF PLANETARY NOMENCLATURE, PLANETARY GEOMATICS GROUP, USGS; LUNAR RECONNAISSANCE ORBITER, NASA/ARIZONA STATE UNIVERSITY

While not technically at the lunar south pole, Chandrayaan-2’s target site was by far the southernmost ever selected for a soft lunar landing. The next southernmost lander, China’s Chang’e-4, sits at a southern latitude of about 45.5 degrees on the moon’s far side, about 1,200 miles from Vikram’s targeted site.

This landing site was “somewhere new that we haven’t seen before, so that makes it another area for ground-truthing remote sensing data,” Clive Neal, a lunar geologist at the University of Notre Dame, said in an interview before the landing attempt. “It [was] going to certainly enhance our knowledge of what the moon is like in those areas, so it [was] going to be another very good place for science and exploration.”

Chandrayaan-2’s scientific goal is to study the south polar region’s distribution of water ice and other so-called volatile compounds. The orbiter component will still be able to make high-resolution maps of the lunar surface, as well as the occurrence of certain elements such as magnesium. Its radar system will also be able to “listen” for the telltale ping of water ice mixed into lunar soil.

“The orbiter instrument suite itself would widen the horizon of information, with extended coverage in the infrared range to more accurately capture [the] hydration character of the lunar surface,” Deepak Dhingra, a planetary scientist at the Indian Institute of Technology, Kanpur, said in an email after the landing attempt. “There is an enormous amount of science waiting to happen! Stay tuned.”

But scientists around the world were awaiting results from Vikram and Pragyaan most of all. Previous lunar missions, including India’s Chandrayaan-1 orbiter, found evidence that soils at the lunar poles contain water ice, which could be an invaluable resource to future lunar astronauts. Lunar ice also archives the history of the early solar system, since water arrived at the moon in one of several ways, including ancient comet impacts. (Find out more about the goals of the Chandrayaan-2 mission.)

“The entire globe is waiting for our data,” Sivan said in August. “This will be giving input for a future program [that] is concerning humanity in a major way.”

All eyes upward

However, landing at such a high altitude is no small feat. During the crewed Apollo missions, NASA designers didn’t attempt any landings near the lunar poles out of safety concerns. If the Apollo spacecraft’s rocket engine had failed during an attempt to get into lunar orbit, NASA wanted to make sure that astronauts could loop around the moon and get back to Earth using gravity alone. This “free return” constraint limited Apollo landing sites to a narrow band north and south of the moon’s equator.

Robots don’t have the same worries about returning to Earth, and from orbit, the moon’s south pole is among the best-studied patches of lunar terrain. Three previous missions, including India’s Chandrayaan-1 orbiter, fired small impactors into the region’s surface to kick up debris clouds that orbiters overhead could analyze.

Even so, soft landings south of Chang’e-4 hadn’t been attempted before Chandrayaan-2, crewed or uncrewed—and as recent missions underscore, a lot can go wrong on the way to the surface. In April, the Israeli nonprofit SpaceIL’s Beresheet spacecraft crashed during the final moments of its lunar landing attempt. Had Beresheet pulled it off, it would have become the first privately funded spacecraft to land on the moon in a controlled manner.

In August, Sivan said that ISRO had learned lessons from Beresheet and other lunar landing attempts, noting that many other spacecraft have tried, and failed, to make it onto the moon in one piece. “One good thing is, we are learning from their failures,” he said.

Dhingra, who began his career with Chandrayaan-1, expressed hope that even the partial data from Vikram’s descent could be salvaged.

“A decade of effort has gone into Chandrayaan-2, and I wish that we are able to extract everything that it has to offer, even if it’s a failure of any sort,” he said in an email.

Though Vikram may not have landed softly, it is part of a bigger global wave of robotic lunar explorers. NASA has partnered with private companies to send scientific instruments to the moon, and countries including China, Russia, Japan, South Korea have plans to send spacecraft to the moon in the next decade.

In an interview before the landing attempt, Neal expressed optimism about the future of lunar exploration: “It’s exciting to see nations that weren’t involved in the space race of the ‘60s going to the moon,” he said. “It shows that we’re trying to get off this planet and explore—and it’s not just the United States or Russia. It’s other countries that are doing it, too.”

Editor’s Note: This article has been updated to reflect the outcome of the Vikram landing attempt.

https://www.nationalgeographic.com/science/2019/09/india-chandrayaan-2-landing-attempt-moon-lunar-south-pole/#close


சந்திரயான்-2: நிலவில் தரை இறங்கும்போது சிக்னல் துண்டிப்பு: விக்ரம் லேண்டரை மீட்க விஞ்ஞானிகள் தீவிரம்…வரலாற்று சாதனை 4 நிமிடங்களில் நழுவியது

9/7/2019 2:12:17 PM
மனதை தளர விடாதீர்கள்…நிலவை தொடும் முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்…விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

சென்னை: நிலவின் தென்துருவத்தில் இன்று அதிகாலை தரை இறங்க தயாராக இருந்த நிலையில் விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு கடைசி 4 நிமிடத்துக்கு முன் திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிக்னலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய ரூ.386 கோடி செலவில் கடந்த 2008ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி சி11 ராக்கெட் மூலம் சந்திரயான்-1 விண்கலத்தை இஸ்ரோ, நிலவிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. முதல்முறையாக ஒரு திட்டத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3ம் சேர்த்து அனுப்பப்படுவது இதுவே முதல்முறையாக பார்க்கப்பட்டது. சந்திரயான் 2க்கான அனைத்து விதமான ஆய்வுகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

விண்கலத்தை நிலவில் அனுப்புவதற்கான அனைத்து பணிகளும் முழுமையாக முடிவடைந்ததையடுத்து, கடந்த ஜூலை 22ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. புவிவட்டப்பாதையில் சுற்றிவந்த விண்கலன் பூமியின் மேற்பரப்பு படங்களை எடுத்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைத்தது. பின்னர், விண்கலத்தின் சுற்றுப்பாதை மற்றும் வேகத்தை மாற்றி அமைக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞனிகள் திறம்பட மேற்கொண்டனர்.
புவியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிய நிலையில் 7 நாட்கள் பயணத்திற்கு பிறகு சந்திரயான்-2 விண்கலம் ஆகஸ்ட் 20ம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. தொடர்ந்து நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவந்த விண்கலத்தின் உயரம் படிப்படியாக மாற்றப்பட்டது.

இதற்கான பணிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து செய்யப்பட்டு வந்தது. 5 முறை நிலவின் வட்டப்பாதையில் பயணித்து வந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை ஆர்பிட்டரில் இருந்து தனியாக பிரிக்கும் பணி கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. பின்னர், நிலவின் தென் துருவத்தில் தரை இறக்குவதற்கு ஏதுவாக லேண்டரின் வேகம் படிப்படியாக குறைத்தும், மாற்றியும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், 5 நாட்களாக நிலவில் தரை இறக்குவதற்கு ஏதுவாக விக்ரம் லேண்டரின் வேகத்தை படிப்படியாக குறைக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, இன்று அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவின் தென் துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பீலியஸ்-என் ஆகிய இரு பகுதிகளில் ஒன்றில் தரை இறக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

உலகத்திலேயே முதல் முறையாக தென் துருவத்தில் தரை இறக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வை காண பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேற்று வந்தார். அவருடன், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இஸ்ரோவின் சரித்த சாதனையை இஸ்ரோ மையத்தில் இருந்தபடி பார்த்து கொண்டிருந்தனர். நிலவில் தரை இறங்கும் முன்பாக லேண்டரில் இருந்த அதிநவீன கதிர்வீச்சு கருவிகள் நிலவின் தரை இறங்கும் பகுதியை தெளிவாக ஆய்வு செய்தது.

தொடர்ந்து அதிகாலை 1.38 மணி முதல் விக்ரம் லேண்டரை தரையில் இறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். விக்ரம் லேண்டரின் வேகத்தை குறைத்து பூஜ்ய நிலைக்கு கொண்டுவரும் பணிகளை மேற்கொண்டனர். தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரை இறக்க முயன்ற கடைசி 15 நிமிடங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலாக இருந்தது. இந்த 15 நிமிடங்கள் கருவிகள் தானாகவே இயங்கக் கூடியவை. அதில் முதல் 11 நிமிடங்கள் மிகச் சரியாக தரை இறக்கும் பணிகள் நடந்தன.
மீதம் உள்ள 4 நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், சரியாக அதிகாலை 1.58 மணி அளவில் விக்ரம் லேண்டர் நிலவில் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது சிக்னல் திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரின் முகத்திலும் கவலைகள் தென் பட்டன.

உடனடியாக இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் மோடியிடம் நிலைமை குறித்து எடுத்துக்கூறினார். இதையடுத்து பிரதமர் மோடி அங்கிருந்து வெளியேறியதால் அனைவரின் முகத்திலும் சோகம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது என்று தெரியாத நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “நிலவின் தரைப்பகுதியில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டர் இருந்தபோது சிக்னல் துண்டிக்கப்பட்டது. சிக்னலை மீட்க அனைத்து முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

இதன்பிறகு விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்து பிரதமர் மோடி பேசுகையில், “நாம் அடைய நினைத்த இலக்கு எளிதானது அல்ல. நாம் அனைவரும் நாட்டிற்காக பணியாற்றி கொண்டிருக்கிறோம். வாழ்க்கை என்றால் மேடு, பள்ளம் இருக்கதான் செய்யும். இனி வரும் திட்டங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெறுவார்கள். விரைவில் அந்த இலக்கை நாம் எட்டுவோம் என்று நம்புவோம். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

1.14 முதல் 2.42 வரை நடந்தது என்ன?

லேண்டரை தரை இறங்குவதற்குத் தயார் செய்யப்பட்ட நேரத்திலிருந்து அதன் தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரம் வரை என்ன நடந்தது என்ற தகவல் மணி வாரியாக:
அதிகாலை 1:14: தரையிறங்கும் தளத்தை அடைய லேண்டர் தவறினால், மாற்று தளத்தில் லேண்டர் தரையிறக்க இஸ்ரோவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
1:18: லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இறங்குவதற்கு 20 நிமிடங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. இறங்கு செயல்முறை தொடங்கியதும், சந்திரனின் மேற்பரப்பை லேண்டர் தொட சுமார் 15 நிமிடங்கள் எடுக்கும் என்று கூறப்பட்டது.
1:21: லேண்டரின் இறுதிக்கட்ட தரையிறக்கும் நிகழ்ைவ விஞ்ஞானிகள் இஸ்ரோ மையத்திலிருந்து வீடியோ மூலம் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

1:25: பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் மிஷன் கட்டுப்பாட்டு மையத்திற்கு, லேண்டரின் தரையிறக்கம் காணப் பிரதமர் மோடி வந்து சேர்ந்தார்.
1:34: லேண்டர் தரை இறங்கும் நிகழ்வு 4 கட்டங்களாக நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
1:38: லேண்டர் அதன் இறுதி இயங்கும் இறக்கத்தை தொடங்கியது. சரியாக இந்த நிமிடத்தில் தான் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு முதல் கட்ட தரையிறக்கம் தொடங்கப்பட்டது.
1:49: கரடுமுரடான பிரேக்கிங் பேஸ் முடிக்கப்பட்டு, லேண்டர் சிறந்த பிரேக்கிங் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
1:56: கட்டுப்பாட்டு மையத்திலிருந்து லேண்டர் விக்ரமின் இறக்கத்தை பற்றிய கூடுதல் புதுப்பிப்புகளை விஞ்ஞானிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

2:05: தரை இறக்கத்தின் இறுதிக் கட்டத்தில், லேண்டர் சந்திரனின் மேற்பரப்பைத் தொடுதலில் தாமதம் ஏற்பட்டது. இஸ்ரோ மையம் முழுவதும் தற்போது சந்திரனில் தரையிறங்கிய லேண்டரிடமிருந்து சிக்னலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
2:09: லேண்டரில் இருந்து சிக்னல் மற்றும் தொடர்பு எதுவும் இல்லாததால், சந்திரயான் 2ன் மிஷன் பற்றி அனைவருக்கும் கவலை எழத்துவங்கியது.
2:11: லேண்டரின் டேட்டா தகவல்கள் செயலாக்கப்பட்டு, என்ன நடந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

2:17: லேண்டர் திட்டமிட்டபடி தரையிறக்கப்பட்டது. லேண்டரின் செயல்திறன் நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமார் 2.1 கி.மீ உயரம் வரை நிலையாக இருந்தது. பின்னர், லேண்டருடன், தரை நிலையங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரின் தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டுவருகிறது” என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
2:30: நவாழ்க்கை ஏற்ற தாழ்வுகளால் நிறைந்தது. நல்லதையே நம்புவோம்” என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளிடம் கூறினார்.
2:41: இந்தியா அதன் விஞ்ஞானிகளை நினைத்து பெருமிதம் கொள்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2:42: சந்திரனின் சுற்றுப்பாதையில் இருக்கும் ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரோவுக்கு தலைவர்கள் வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:சந்திரயான் 2 திட்டம் இஸ்ேரா விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பையும், தைரியத்தையும் காட்டியுள்ளது. இஸ்ரோவினால் நினைத்து நாடே பெருமை கொள்கிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா:சந்திராயன் 2 மூலம் இஸ்ரோ செய்துள்ள சாதனை இந்தியர்கள் அனைவரையும் பெருமை கொள்ள வைக்கிறது. உறுதியான மற்றும் கடின உழைப்பாளிகளான இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்தியா துணை நிற்கும். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் .
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: இஸ்ரோவுடன் நாங்கள் இருக்கிறோம். இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் விண்வெளியில் நீங்கள் செய்த சாதனை  உணர்ந்துள்ளனர். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: நமது விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். அவர்கள் வரலாறு படைத்துள்ளனர். அவர்கள் மன தைரியத்தை இழக்க தேவையில்லை. நமது விஞ்ஞானி சிறப்பு பணியை செய்துள்ளனர். பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்: விக்ரம் லேண்டர் சிக்ன்ஸ் திரும்ப கிடைப்பதை எதிர்பாத்து நாடே காத்துக் கொண்டு இருக்கிறது. தொடக்க முதல் இறுதி வரை கடுமையாக உழைத்து  இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொருவரையும் நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.

ஆர்பிட்டர் ஆய்வு செய்யும்:
லேண்டர்  சிக்னல் துண்டிக்கப்பட்டாலும் ஆர்பிட்டர் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளும்  என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளர். மேலும் அவர்கள் கூறுகையில்,  “விக்ரம் லேண்டரின் சிக்னல் மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால்  சந்திரயான் – 2 திட்டமே தோல்வி என்று கருத முடியாது. நிலவின் மேற்பரப்பை  சுற்றி வரும் ஆர்பிட்டர் நல்ல நிலையில் உள்ளது. ஆர்பிட்டர் ஓர் ஆண்டு  வரை நிலவை சுற்றி வந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். இதன்படி ஆர்பிட்டர் 95  சதவீத பணிகளை மேற்கொள்ளும்” என்றனர்.

விடிய விடிய காத்திருந்த மக்கள்:  சந்திரயான்-2 சாதனைகளை டிவிக்கள் முன்பு அமர்ந்து நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மற்றும் மாணவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். தேர்தல் முடிவுகளை பார்ப்பதை விட அதிகமான மக்கள் விடிய விடிய தூங்காமல் இருந்தனர். ஆனால் திடீரென்று விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டதும், மக்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125477


 

About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply