ஒட்டக் கூத்தன்  பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்!

ஒட்டக் கூத்தன்  பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்!

(1)

நக்கீரன்

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது பழமொழி. சனாதிபதி சிறிசேனா விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரில்   மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் இழைத்ததாக இனம் காணப்பட்ட  லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை (55)  சனாதிபதி சிறிசேனா இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக ஓகஸ்ட் 19, 2019 இல் நியமித்திருந்தார். கையோடு அவர் லெப்.ஜெனரல் ஆகவும் பதவி உயர்த்தப்பட்டார்.  ஓகஸ்ட்  21 இல் அவர் சனாதிபதி சிறிசேனா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.Sri Lanka's newly appointed army commander Lt. Gen. Shavendra Silva.

வேலிக்கு ஓணான் சாட்சி சொல்வது போலபோர்க் களத்தில் வல்லமை பொருந்திய தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகப் பதவி வகிப்பதற்கு சகல தகுதியும் உடையவர்.அவரை அந்தப் பதவிக்கு நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின் றேன் என கோத்தபாய இராசபக்ச பாராட்டியிருக்கிறார்.

இந்த நியமனம் தமிழ் மக்கள் மத்தியிலும்  சிறீலங்காயில் மனித உரிமைகள்  அமைப்புக்கள், ஐநாமஉ பேரவை, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் மற்றும் பொறுப்புக்கூறலில் ஆர்வமுள்ள அனைவருக்கும்  அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த  நியமனம்  மூலம் சர்வதேச சமூகத்திற்கு சிறிலங்கா அரசு ஒரு தெளிவான செய்தியை விடுத்துள்ளது. ஐநாமஉ பேரவை நிறைவேற்றிய  30-1, 34 -1  மற்றும் 40-1  தீர்மானங்களை  நடைமுறைப்படுத்துவதில்  ஏற்படும் தோல்விகளின் விளைவுகள் பற்றிச்  சிறீலங்கா கவலைப்படவில்லை என்பதாகும்.

சனாதிபதி சிறிசேனா, சவேந்திர சில்வாவை மட்டுமல்ல மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் ஊழல் குற்றம் சாட்டப்படும் உயர் மட்ட படைத் தளபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி  அழகு பார்த்துள்ளார்.

இந்தப் பதவி உயர்வு  தொடர்பாக ஆகஸ்ட் 5, 2019 அன்று  எல்லோருக்கும் அதிர்ச்சி தரும்  வகையில் சனாதிபதி சிறிசேன ஒரு வர்த்தமானியை வெளியிட்டார்.

எடுத்துக் காட்டாக 2008-2009 ஆண்டில்  கடற்படை உளவுத்துறை அதிகாரிகளால் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இளைஞர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் கடற்படைத் தளபதி  வசந்தா கரணகொட என்பவரை சனாதிபதி மைத்ரிபால சிறிசேனா இப்போது கடற்படையின் அட்மிரல்  (Admiral of the Fleet)  பதவிக்கு உயர்த்தியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி கரணகொட  நீதியிலிருந்து தப்பியோடிய ஒருவர்,  அவர் நாட்டைவிட்டு ஒளிந்து ஓடக் கூடும்  என நினைத்து  அவரது கடவுச் சீட்டில்  அவர்   வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்கு  கோட்டை  நீதிபதி  தடை விதித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு கரணகொட உச்சநீதிமன்றத்தில் வெற்றிகரமாக ஒரு மனுவைத்  தாக்கல் செய்து  கொலை மற்றும் சதித்திட்டம் தொடர்பான  குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புலனாய்வுப் பொலீசாரால்  கைது செய்யப்படுவதற்கு எதிராகத்  தடை  உத்தரவைப் பெற்றார்.

போர்க்காலத்தில் கரணகொட பாதுகாப்புச்  செயலாளர் கோத்தபாய இராசபக்சவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். எதிர்காலத்தில் கோத்தபாய பதவிக்கு வந்தால் கரணகொட முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படுவார் என நம்பலாம்.

சனாதிபதி  சிறிசேனா வெளியிட்ட அதே வர்த்தமானி அறிவிப்பில் ஏயர் வைஸ் மார்ஷல் றோஷன் குணத்திலகே விமானப்படையின் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்படுவதாக அறிவித்தார். குணத்திலகா என்பவரே போர்க்காலத்தில் சிறீலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்தார்.

இலங்கை விமானப்படை 2006 மிக் -27  விமானங்களைக் கொள்முதல்செய்தது தொடர்பாக குணத்திலக பல தடவைகள்  விசாரிக்கப்பட்டுள்ளார். கோத்தபாய  இராசபக்ச மற்றும் அவரது முதல் மாமன் மகன்  மற்றும் உருசியாவின் முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கே ஆகியோர் உக்ரேனிலிருந்து மிக் 27 விமானங்களை வாங்கியதன் மூலம் 14 மில்லியன் அ.டொலர்களை பணச் சலவை செய்தது மற்றும்  சட்டத்துக்கு முரணாக கையாடியது தொடர்பாக  குற்ற விசாரணையில் உள்ளனர்.

நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (FCID) நடத்திய விசாரணையில் சிறீலங்கா அரசின் நிதி பிரித்தானிய வேர்ஜின் தீவில் (British Virgin Island) அமைந்துள்ள பெல்லிமிசா ஹோல்டிங்ஸ் (Bellimissa Holdings) என்ற கொட்டாங்குச்சி நிறுவனத்துக்கு  (shell company) அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.

போர்க் குற்றங்களில் சிக்கியுள்ள அனைத்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகளிலும் சவீந்திர  சில்வா ஒருவரே மிகவும் பிரபலமானவர். பல வழிகளில் அவர்  போரின் கடைசிக்  கட்டங்களில் சிறீலங்கா ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்கள் மற்றும்  மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்  ஆகியவற்றுக்கு அவர் அடையாளமாக இருந்தார். அவர் பதவி ஏற்றபின் விடுத்த  அறிக்கை நேர்மையான ஆய்வு மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து தனது இராணுவத்தைப் பாதுகாக்க   சிறீலங்கா அரசு, குறிப்பாக சனாதிபதி சிறிசேனா, எந்த அளவிற்கு தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

1995 ஆம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்கொண்ட “Operation Riviresa” போர் நடவடிக்கைக்கு சவேந்திர சில்வா தான் தலைமை தாங்கினார். 

ஈழப்போர் 1V  இன் இறுதிக் கட்டத்தில் “வன்னி மனிதநேய நடவடிக்கை” இல் ஈடுபட்ட 58 ஆவது படைப் பிரிவுக்கும் அவரே தலைமை தாங்கினார். இந்தப் படைப்பிரிவு  மீது போர் விதிகளை மீறிப் பல  தாக்குதல்களை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகின. அவை முறையான இராணுவ இலக்குகள் என கோத்தபாய இராசபக்ச ஆர்ப்பரித்தார். இந்தக் கண்மூடித் தாக்குதல்களில் பொது மக்கள்  பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.

இந்தப் படுகொலைகளுக்கு  சூத்திரதாரியாக இருந்த  மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றி  இருந்தார்.

பின்னர்  09 சனவரி, 2019  இல்  சவேந்திர சில்வா  இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக  சனாதிபதி சிறிசேனாவால்  நியமிக்கப்பட்டார். போர்க் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது  அமைப்புக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டன.

“நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக வலிந்து காணமல் ஆக்கப்படவர்களுக்கு நீதி கிடைக்கும், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நோக்கில் நாட்டின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், இன்று வரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. இன்று வரை நாம் எமது உறவுகளை தேடிக்கொண்டு இருக்கின்றோம்.

மேலே குறிப்பிட்டது போல தற்பொழுது இறுதி யுத்தத்தில்  பாரிய மனித உரிமை மீறல்கள்,  மனித குலத்துக்கு எதிரான போர்க் குற்றசாட்டுகளுக்கு  இலக்கான  இராணுவ அதிகாரி  சவேந்திர சில்வாவிற்கு  சனாதிபதி  மைத்திரிபால சிறிசேனாவினால் பதவி உயர்வு வழங்கியிருக்கிறார்.

“யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடைந்த  போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58 ஆவது படையணி ஊடாகவே அவர்களை கையளித்திருந்தோம். அப்படிக்  கையளிக்கப்பட்டவர்களே பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இது வேதனைக்குரிய விடயம்.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விக்குப்  பதிலளிக்ககூடிய பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக மேஜர் ஜென்ரல் சவேந்திரா சில்வா இருக்கின்றார். இந்நிலையில், அவர் ஊடாக எங்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழும்புகின்றது?” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது  அமைப்புக்கள் கேள்விகள் எழுப்பியுள்ளன.  

சவேந்திர  சில்வாவின்  நியமனம் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  சனவரி 10, 2019 ஆம் நாள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் யுத்த குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஒருவரை இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக  நியமிப்பது என்ற சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் சிறீலங்கா வை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது எனத் தெரிவித்திருந்தது.

மேலும் அவ்வறிக்கையில்   குறிப்பிடப்பட்டிருந்ததாவது.

“2009ம் ஆண்டு மருத்துவமனைகள், உணவு பெறுவதற்காக வரிசையில் நின்ற பொதுமக்கள்  மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே  தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி (General Officer Commanding 58th Division) என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ளவேண்டியவர்” என ஐக்கியநாடுகள் விசாரணைக் குழு தெரிவித்திருந்தது.

சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள், குழந்தைகள் உட்படப் பலர் சுட்டுக்கொல்லப் படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போவதற்கும் பாலியல் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் காரணம் எனவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.

இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்ட சர்வேந்திர சில்வாவின் நியமனம்  அமெரிக்காவால் விமர்சிக்கப்பட்டது.

“இந்த நியமனம் சிறீலங்காயின் சர்வதேச நற்பெயர் மற்றும் நீதி மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானது. சிறுபான்மை இன தமிழர்களுக்காக ஒரு சுதந்திர அரசுக்கான தமிழ் ப் புலிகளின் நீண்டகால பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு, 2009 மே மாதம் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் வெற்றியை அறிவித்தது. சிறீலங்கா இராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இருவரும் போர்க்கால முறைகேடுகள் செய்தார்கள் என  குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவித்தது.

ஆனால்  சனாதிபதி சிறிசேனா இராணுவம் எந்தப் போர் மீறல்களையும் செய்யவில்லை என்கிறார். நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவ வீரர்களில் ஒருவரைத் தன்னும் மின்சாரக் கதிரையில் அமரச்  செய்ய மாட்டேன் என சனாதிபதி சிறிசேனா சூளுரைக்கிறார். (வளரும்)

 

ஒட்டக் கூத்தன்  பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

https://www.tamilguardian.com/content/9-years-today-%E2%80%93-massacre-mullivaikkal

http://white-flags.org/


 

ஒட்டக் கூத்தன்  பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்! (2)

58 ஆவது  படைப்பிரிவுஅனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டது – ஐநா விசாரணை அறிக்கை!

நக்கீரன்

டந்த வாரம் புதிதாக ஒரு  அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மகிந்த இராசபக்சவின் சிறீலங்கா பொதுசன முன்னணியும்   சிறீலங்கா சுதந்திரக் கட்சியும்  இணைந்து சிறீலங்கா பொதுசன கூட்டு முன்னணி (Sri Lanka Podujana Ekabadda Peramuna (SLPEP) என்ற ஒரு புதிய கூட்டணியை உருவாகியுள்ளனர்.  இந்தக் கூட்டணிக்கு ப் பக்கம் கொண்ட யாப்பு வரையப்பட்டுள்ளது.  அது புதிய கூட்டணியின் அரசியல்  கோட்பாடுகளை இயம்புகிறது.Image result for à®?வà¯?ந்திர à®?ில்வா

(1) சுமார் முப்பது ஆண்டு காலம்  நடந்த  பிரிவினைவாதப் போரின்போது நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத்  தியாகங்களைச்  செய்த  போர் வீரர்கள்  போர்த் தீர்ப்பாயங்களுக்கு முன் நிறுத்தப்பட  அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்கள் இழிவுபடுத்தப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப் படுத்தல்.

(2) பவுத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்கும் பின்பற்றுபவர்களுக்கும் எந்தத் தடையும் இருக்காது.

(3) நாட்டின் ஒற்றையாட்சி  அரசியல் முறைமை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க  வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த அம்சங்கள் பழையவை. நிலப்பிரபுத்துவ காலக் கோட்பாடுகள்.    சிங்கள – பவுத்த மேலாண்மைச் சிந்தனையில் இருந்து  இந்தக் கட்சிகளும் கட்சித் தலைவர்களும் ஒரு இம்மியளவும் முன் நகரமாட்டார்கள் என்பதற்கு இந்த யாப்பு நல்ல எடுத்துக்காட்டு. இது எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் இந்த இன- மத கோட்பாடுகளைப் பகிரங்கமாக முன்வைக்கும்  கட்சிக்கும் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் கோத்தபாய இராசபக்சவுக்கும் தமிழர்கள் மத்தியில்  வலம் வரும்   காக்கைவன்னியர்கள் விழுந்தடித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Image result for �வ�ந்திர �ில்வா

இபிடிபி கட்சியின் ஆயுட்காலச் செயலாளர் நாயகம் டக்லஸ் தேவானந்தா சனாதிபதி தேர்தலில்  தனது கட்சி கோத்தபாய இராசபக்சவை ஆதரிக்கும் என அறிவித்துள்ளார்.

இல்லாத ஊருக்கும் இலக்கற்ற  பயணத்திற்கும் நாம் ஒரு போதும் வழி காட்டப்போவதில்லை. எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு இதுவரை எமது மக்களுக்கு எம்மால் முடிந்ததை பெற்றுத்தந்த நாம், எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தோடு மக்களின்  தலைவிதியையே மாற்றியமைப்போம்.

எதையும் சாதிக்க முடிந்த வல்லமை படைத்த உறுதியானதொரு நாட்டின் தலைவர் மூலமே தமிழ் மக்களின் வரலாற்றிலும் நாம் மாற்றங்களை உருவாக்க முடியும்.

இந்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்ச  அவர்களை ஆதரிப்பதென நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்.” (http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%)

சிறீலங்கா பொதுசன கூட்டு முன்னணி சார்பாகப் போட்டியிடும் கோத்தபாய இராசபக்ச தனது கட்சியின்  கொள்கைகோட்பாடு பற்றிய தேர்தல் அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை. அவர் இராணுவக் கண்ணோடத்தோடு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மட்டுமே தேர்தல் மேடைகளில் கூறிவருகிறார். புதிய அரசியல் யாப்புகாணி விடுவிப்புவலிந்து காணாமல் போனோர் தொடர்பான தீர்வுஅரசியல் கைதிகளின் விடுதலை இவை தொடர்பாக கோத்தபாய இராசபக்ச இன்னும் மூச்சு விடவில்லை. இந்தப் பின்னணியில் டக்லஸ் தேவானந்தா விழுந்தடித்து கோத்தபாயவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் வலிந்து காணாமல் போனோர்,  அரசியல் கைதிகள்காணி அபகரிப்புஅரசியல் கொலைகள் போன்றவற்றுக்கு கோத்தபாய காரணம் என்று தமிழ்மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். Image result for mullivaikkal massacre

வட்டுவாகலில் மே 18, 2009 காலை வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பா.நடேசன்திருமதி நடேசன்சீவரத்தினம் புலித்தேவன்கேணல் இரமேஷ்போராளிகள்  மற்றும்  பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோல் அன்று மாலை வட்டுவாகலில் சரணடைந்த எழிலன்யோகிபாலகுமார்புதுவை இரத்தினதுரைதிலகர் போன்றோர் விசாரணைக்கு என அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் கோத்தபாயவும் சவேந்திர சில்வாவும் இருந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது.    முன்னவரின் கட்டளைப்படி  பின்னவர் கொலைகளை நிறைவேற்றினார். இந்தக் கொலைகளுக்கு கண்கண்ட சாட்சிகள் உள்ளனர்.

ஆனால் தேவானந்தா எந்த வெட்கமோ துக்கமோ இன்றித் தமிழர்களின் குருதிதோய்ந்த கைகளுக்குச் சொந்தக்காரரான கோத்தபாயவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்னஇரண்டும் ஒன்றுதான்! Image result for LTTE surendees

ஒக்தோபர் 01, 2015 இல்  47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்  சிறீலங்கா அரசின் போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்  குறித்து விசாரணை செய்ய வேண்டும் என  அமெரிக்கா  ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அந்தத் தீர்மானம் (30-1) ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி அக்டோபர் 2015  நிறைவேறியது.  மேலும்   பொதுநலவாய நாட்டு நீதிபதிகள்வழங்கறிஞர்கள்வழக்குத் தொடுனர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய ஒரு கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானம் கோரியது. கலப்பு விசாரணை மன்றம் போரில் ஈடுபட்ட சிறிலங்கா அரச படைகள் மற்றும் வி.புலிகள் என இரு சாராரையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது.

இலங்கையில் நிலவும் மனித உரிமைகளின் நிலவரம் பற்றித் தொடர்ந்து கண்காணித்துமதிப்பிட்டுஅறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஐநாமஉ பேரவையின் ள் உயர் ஆணையரின் அலுவலகத்தை இந்தத் தீர்மானம் கோரியிருந்தது.

கலப்பு விசாரணை வேண்டாம் உள்நாட்டு விசாரணையைக் கூட நடத்த சிறிலங்கா அரசு மறுத்து வருகிறது. சனாதிபதி சிறிசேனா தான் உயிரோடு இருக்கும் வரை எந்தவொரு போர் வீரனையும் நீதிமன்ற  விசாரணைக்கு உட்படுத்தவோ தண்டிக்கவோ விட மாட்டேன். அது நடக்க வேண்டும் என்றால் தனது  சடலத்தைக் கடந்துதான் நடக்க முடியும் எனவும் சூளுரைத்து வருகிறார்.

சிறிலங்கா படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்றும் அவர்கள் நாட்டில் நிலவிய   பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை மீட்ட மாவீரர்கள் என மகிந்த இராசபக்ச போலவே  சிறிசேனாவும்  புகழாரம் சூட்டுகிறார். இவர்கள் இருவரும் சிங்கள – பவுத்த மேலாண்மைத் தத்துவத்தில் ஊறிப்போனவர்கள். இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

சிறிசேனா சனாதிபதியாக வருமுன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில்  25 ஆண்டுகள் உறுப்பினராகவும் 15 ஆண்டுகள் அதன் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பது நினைவு கூரத்தக்கது.

நான் சனாதிபதி தேர்தலில் தோற்றிருந்தால் இராசபக்ச  தன்னையும் தனது குடும்பத்தையும் ஆறடி மண்குழிக்குள் புதைத்திருப்பார்” என 2015 இல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற போது சொன்னார். தேர்தலுக்கு முந்திய நாட்களில் அவரும் அவரது குடும்பமும் அவருக்கு நெருக்கமான ஒருவரது இரப்பர் தோட்டத்தில் பதுங்கி” யிருந்ததாவும் சொன்னார்.

பிற்காலத்தில் மகிந்த இராசபக்சவை பிரதமராக நியமித்த பின்னர்  தேர்தல் பரப்புரைக்காகவே ஆறடி மண்குழிக் கதையைச் சொன்னதாக சிறிசேனா  சொன்னார். மனிதர் எப்போது பொய் சொல்கிறார்எப்போது மெய் பேசுகிறார் என்பதை பூவா தலையா போட்டுத்தான் பார்க்க வேண்டும். எனவேதான்   இரணில் விக்கிரமசிங்கவுக்குத் துணிவில்லை சிறிசேனாவுக்கு  முதுகெலும்பு இல்லை எனச் சுமந்திரன் குற்றம்சாட்டினார்.

ஐநாமஉ பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் 30-1 போர்க்குற்ற விசாரணை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில்ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் எனக்  கோருகின்றது.Image result for Mullivaikkal massacre

இலங்கை அரசின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை செய்யஐக்கிய இராச்சியம் ஆதரவுடன் ஐக்கிய அமெரிக்காஜெனிவாவில் உள்ள 47 உறுப்பு நாடுகள் கொண்டமனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி 1 அக்டோபர் 2015 வியாழக்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்படி மகிந்த  இராசபக்ச  அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்மானிடத்துக்கு எதிரான குற்றங்கள்  தொடர்பாக நம்பத் தகுந்த நீதி விசாரணையை இலங்கையில் வைத்துவெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்ளைக் கொண்டு நடத்த வேண்டும். ஆனால் அரசு அதனை நிராகரித்து வருகிறது. சனாதிபதி சிறிசேனா அப்படியான கலப்பு விசாரணையைக் கடுமையாக எதிர்க்கிறார். தான் சனாதிபதியாக இருக்கு மட்டும் அது நடக்காது எனச் சூளுரைத்துள்ளார்.

ஒரு நாட்டின் இராணுவம் தேசிய இராணுவம் என அழைக்கப்படுகிறதுஇது ஒரு பொதுவிதிஅப்படி அது அழைக்கப்படுவதற்குக் காரணம் ஒரு நாட்டின் இராணுவம் எந்த இனத்தோடும் மதத்தோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதில்லைபொதுவாக வளர்ச்சி அடைந்த மேற்குலக நாடுகளில் அரசும் மதமும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டுள்ளனஇரண்டையும் கலப்பதில்லைஒரு சனநாயக முறைமையில் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும்  ஓர் நிறைல்லோரும் ஒர் விலை” என்ற சமத்துவக்கோட்பாடுக்கு ஊறு விழைவிக்கப்படக் கூடாது என்ற கரிசனை காரணமாகவே அரசும் மதமும் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.Image result for LTTE surendees

சிறிலங்கா இராணுவம் அது தன்னை ஒரு சிங்கள – பவுத்த இராணுவமாக  வெளிபடையாக எந்த ஒளிவுமறைப்பும் இன்றி அடையாளம் காட்டிக் கொள்கிறதுஅண்மையில் இராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற மகேஷ் சேனநாயக்க சிறிலங்கா இராணுவம் 99 விழுக்காடு சிங்கள – பவுத்தர்களைக் கொண்ட இராணுவம் எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார்இதையிட்டு அரசோஅரசியல்வாதிகளோஏனைய மதவாதிகளோ அலட்டிக் கொள்ளவில்லைமகேஷ் சேனநாயக்கா யதார்த்தத்தைச்தானே  சொன்னார் என்பது காரணமாக இருக்கலாம்.

இராணுவ தளபதி சவேந்திரா சில்வா ஒரு சிங்கள – பவுத்த அடிப்படைத் தேசியவாதியாக கருதப்படுகிறார்அவர் பவுத்த மத பீடங்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்.  

பவுத்த பீடங்களான  சியாம் நிக்காய (அஸ்கிரியமல்வத்து)   அமரபுர நிக்காய மற்றும்  இராமன்னா நிக்காய மூள்றும் சேர்ந்து தாய்நாட்டின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் கட்டிக் காக்க நல்கிய சேவையைப் பாராட்டி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு   “ஸ்ரீ லங்கேஸ்வர அபாரத மெஹயும் விஷரதா ஜோதிகாதாஜா வீரபர்த்தபா தேசமான்ய ஜாதிகா கவுரவநம  சம்மனா உபாதி சன்னாஸ்பத்ரயா”, மற்றும் வீர கஜேந்திர சங்கிரமசூரி ஜாதிக கவுரவநம சன்னாஸ்பத்ரய” மற்றும் “வீரவிக்கிரம தேசாபிமானி விஷ்வ கீர்த்தி ஸ்ரீ இரணசூர  (ஒரு  சாதாரண குடிமகன் பெறக்கூடிய மிகவும் மதிப்பு மிக்க விருது) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும்,  அண்மையில்  சிறீலங்காவின் மத்திய மலை நாட்டுப் பிரபலங்கள் மெடறட்ட அபிமானயா” (மலையகத்தின் பெருமை) என சவேந்திர சில்வா  ​​மேஜர் ஜெனரல் ஆக இருந்த காலத்தில்  கவுரவிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துப்  பட்டம் பெற்ற சவேந்திர சில்வாதேசிய மற்றும் பன்னாட்டு பாதுகாப்புத் திட்டத்தில் மூத்த நிர்வாகிகளுக்கான செயல்முறைப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.(He was a graduate of Harvard University, USA and successfully completed the Senior Executives in National and International Security program.)

மேலும் புத்தர் ஞானம்பெற்ற 2600 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்ட “2600 ஆண்டுகளாக சிறீலங்காவின் அடையாளம்” என்ற நூலை எழுதியுள்ளார். (இராணுவ வலைத்தளம்).

சவேந்திர சில்வாவின் சொந்த வலைத்தளம் தமிழீழத்தின் பிரிவினைவாத விடுதலைப் புலிகளைத் (தமிழ்ப் புலிகள்தோற்கடித்ததில் அவருக்கு இருக்கும்  பங்கிற்கு  அவரை ஒரு மாவீரன்” (Hero)” என வர்ணிக்கிறதுஆனால் 2012 ஆம் ஆண்டில்அவர் சிறீலங்காவின் ஐநா துணைத் தூதராக இருந்தபோது, ​​அவர் மீது சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுகள் காரணமாக அமைதி காக்கும் நடவடிக்கைகள் குறித்த  ஐநா சிறப்பு ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

சிறீலங்காவின் இராணுவ தளபதி என்ற முறையில் சவேந்திர சில்வா வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்திருப்பது நல்லது. நல்லது மட்டுமல்ல அவசியமும் கூட. போர்க் களத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் யார் எதிரியார் நண்பன் என்பதை தமிழர் தரப்பு நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். மற்ற யாரைவிடவும் எதிரியைத் தெரிந்திருக்க வேண்டும் (Know your enemy – Know yourself – Sun Yzu).

சிறீலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டுகாலப்  போர் காரணமாக இராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. அதற்கு இராணுவம் கைப்பற்றிய காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதம்இழுத்தடிப்பு  நல்ல எடுத்துக்காட்டு. வடக்கில் இராணுவம் கைப்பற்றி வைத்துள்ள தனியார் காணிகள் அனைத்தும்  31 டிசெம்பர் 2018 க்கு முன்னதாக விடுவிக்கப்பட வேண்டும் என சனாதிபதி சிறிசேனா பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் அது நடைபெறவில்லை. அங்கொன்று இங்கொன்றாக காணிகள் விடுவிக்கப்பட்டாலும் வலிகாமம் வடக்கில்  இராணுவத்தின் பிடியிலுள்ள    6381.5 ஏக்கர் காணியில் பாதிதான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதி விடுவிக்கப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவில் தனியாருக்குச் சொந்தமான 73 ஏக்கர் உறுதிக்காணியைக் கைவிட இராணுவம் மறுத்து வருகிறது. அங்கு இராணுவம் பாரிய நிரந்தர முகாம் அமைத்திருப்பதே அதற்குக் காரணமாகும்.Image result for unhrc commissioner

சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு  எதிராக இம்முறை ஐநாமஉ  சபையின் ஆணையாளர் மிச்செல் பசெலெட்அமெரிக்காஐக்கிய இராச்சியம்கனடாஐரோப்பிய ஒன்றியம்மனித உரிமை அமைப்புக்கள் மற்றும்  மனித உரிமை ஆர்வலர்கள்அரசியல்வாதிகள்  எனப் பல திசைகளிலும் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆணையாளர் மிச்செல் பசெலெட் தனது  அறிக்கையில் போரின் போதுஅவரும்அவரது படைகளும் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதற்கான  தீவிரமான குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் லெப். ஜெனரல் சவேந்திர சில்வா  சிறீலங்காவின்  இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து நான் மிகவும் குழப்பமடைந்துள்ளேன்.

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில்இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். இவர் முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதுகவலை தரும் நிலைமை என்றுஐநா மனித உரிமை ஆணையாளர் 2019 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தார். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில்இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.

அவரது படைப்பிரிவுஅனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் போதுஇலங்கை அளித்த வாக்குறுதிகள் விடயத்தில்லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான சமரசத்தை ஏற்படுத்தும். இது நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதுடன்குறிப்பாகபாதிக்கப்பட்டவர்களையும் போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும் மிக மோசமாக பாதிக்கும். இது பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். அத்துடன்ஐநா அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்” எனத்  தெரிவித்துள்ளார். (தொடரும்)


 

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply