தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு

தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு
– பிஞ்ஞகன் (பகுதி 1)

மனிதன் – மனித இனம் உயிர் வாழ்வதற்கு உணவு‚ உடை‚ உறையுள்(வீடு) மூன்றும் இன்றியமையாதன. அடிப்படைத் தேவையான உணவுக்கும் உடைக்கும் அப்பால் தான் வாழும் நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவென்பது அவனது அகப்புற வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது. ஒரு இனக்குழுமத்திற்கு தாம் பூர்வீகமாய் வாழ்ந்து வரும் நிலத்துடன் உள்ள தொடர்பானது வாழ்வடன் பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டுள்ளது. 1990 இல் வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களும் 2006 இல் சம்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களும் ஒரே விடயத்தைத்தான் கூறுகிறார்கள்.sampur

“நீங்கள் எங்களுக்கு நிவாரணம் தரவேண்டாம். எங்களை வேறு இடத்தில் குடியேற்றி வீடு கட்டித் தரவேண்டாம். எங்களை எங்களுடைய சொந்த இடத்திற்கு போக விடுங்கள். ஒரு கொட்டிலைப் போட்டு கஞ்சியைக் குடித்தாவது சீவிப்பம்.”

மனிதனுக்கும் அவனது பூர்வீக நிலத்துக்கு மிடையிலான ஆத்மார்த்தப் பிணைப்பானது மேற் கூறப்பட்ட மக்களின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஒரு இனம் தாம் பாரம்பரியமாய் வாழ்ந்த மண்ணில் உயிர் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரங்களைத் தன்னகத்தே காலங்காலமாகத் தேக்கி வைத்திருக்கும். புறத்தே நேரடியாகக் காணமுடியாத ஒரு வளம் நிலத்தில் – பூர்வீகக் காணியில் இருப்பதை சம்பூரில்‚ வலிகாமத்தில்‚ கேப்பாப்புலவில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் உணர்கிறார்கள். ஒரு மக்கள் கூட்டத்தின் நிலத்தின் மீதான உரிமையைப் பறிப்பதென்பது அவர்களது வாழும் உரிமையைப் பறிப்பதற்குச் சமமாகும்.

இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் 2500 வருடங்களுக்கும் மேலான சரித்திரத்தைக் கொண்டுள்ளனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் மரபுவழித் தாயகமாகும். சிங்களவர்களுக்கு சார்பாக எழுதப்பட்ட மகாவம்சமோ அல்லது இலங்கைத் தமிழரின் சரித்திரத்தை விபரிக்கும் எந்த ஒரு வரலாற்று நூலுமோ கிழக்கிலங்கையையோ‚ வன்னிப் பகுதியையோ அல்லது யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியத்தையோ எந்த ஒரு சிங்கள அரசனும் ஆண்டதாக சரித்திரத்தில் குறிப்பிடவில்லை.

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களது பாரம்பரிய நிலம் தமிழினப் படுகொலைகளின் ஊடாகத் தமிழ் மக்களை அச்சுறுத்தி பூர்வீகக் காணியில் இருந்து வெளியேற்றியதன் மூலமும் தமிழரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

குறிப்பட்ட ஒரு சமூகக் குழுமம் தன்னை ஒரு தேசிய இனமாகப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு அக் குழுமத்திற்குத் தனித்துவமான மொழி‚ வரலாறு‚ இலக்கியம்‚ கலைகலாசார பின்னணி என்பவற்றுடன் தொடர்ச்சியான நிலப்பரப்பும் அந் நிலப்பரப்புடன் வரலாற்றுத் தொடர்பும் இருத்தல் வேண்டும் என்று மேற்குலக இனவியல் வரலாற்றாசிரியர்கள் வரையறுத்துள்ளனர். தாயக்கோட்பாடு என்ற கருத்தியல் இதிலிருந்தே எழுந்தது. தமிழனத்தின் தனித்துவத்தை இல்லாதொழித்து‚ தங்களைத் தாங்களே ஆளும் சுயநிருணயத்தை கோரமுடியாத சிறுபான்மை சமூகமாக்கி‚ தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் நோக்குடன் வடக்குக் கிழக்கை இணைக்கும் எல்லைக் கிராமமான மணலாற்றை விட்டு தமிழர்களை விரட்டி வெலிஓயா என்ற சிங்களக் குடியேற்றத் திட்டம் 1980 இல் உருவாக்கப்பட்டது.

தமிழர்களின் மரபுவழித் தாயகக் கோட்பாட்டை சிதைத்து இலங்கைத் தீவானது‚ கௌதம புத்தரால் சிங்களவர்களுக்கு அர்ப்பணிக்கபட்ட பூமி என்ற மகாவம்ச மாயாவாத சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக இலங்கைத் தீவு முழுவதையும் சிங்களமயமாக்குதலை நோக்காகக் கொண்டு தமிழர் பாரம்பரிய நிலத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் 1949 முதல் உருவாகத் தொடங்கின.

1949 இல் தொடங்கி 2014 பெப்பிரவரி வரை நின்று பார்க்கையில் இலங்கைத் தீவில் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்யுமளவுக்கு (Ethnic Cleansing) தமிழ் நிலத்தில் – வடகிழக்கில் நிலமானது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு குடிப்பரம்பலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒரு புறம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழினம் 1949 இலிருந்து தனது நிலத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தாலும் இராணுவ ஆக்கிரமிப்பாலும் படிப்படியாக இழந்து வர மறுபுறம் ஏறத்தாழ 250 வருடங்களாக அரை அடிமைகளாக வாழும் மலையகத் தமிழினம் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களாலும் திட்டமிட்ட இனக் கலவரங்களாலும் தமது பூர்வீக நிலத்தின் மீதான இருப்பையும் உரிமையும் இழந்து வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் இன்று தமிழினம் தனது இருப்பை‚ நிலத்தின் மீதான உரிமையை முழுமையாக இழந்துள்ளதுடன் கிழக்கில் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இன்று‚ 2009 மே மாதமளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதபலம் அழிக்கப்பட்ட பின்னர் வடபகுதியில் குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள இராணுவத்தாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது.

காலங்காலமாக காணி அபிவிருத்தித் திட்டம் (Land Development Schemes) என்ற போர்வையில் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் சிங்களக் குடியேற்றத் திட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள். கிராம விரிவாக்கம்‚ இளைஞர் அபிவிருத்தி‚ விவசாய மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி‚ மீன்பிடி அபிவிருத்தி என்ற வெவ்வேறு பெயர்களில் தமிழர் மரபுவழித் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றினார்கள்.

  1. கல்லோயாக் குடியேற்றத் திட்டம்தமிழர் தாயகத்தில் – கிழக்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட முதலாவது பாரிய சிங்களக் குடியேற்றம் கல்லோயாக் குடியேற்றமாகும். இதனை ஆரம்பித்து வைத்தவர் இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ்.சேனனாயக்க. இவர் 1931 முதல் 1947 வரை பிரித்தானிய ஆட்சிக்காலப்பகுதியில் விவசாய மற்றும் காணி அமைச்சராக இருந்தவர். தமிழர்கள் பூர்வீகமாய் வாழ்ந்து வந்த பட்டிப்பளை‚ களுவாஞ்சிக்குடி‚ மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களின் எல்லையில் உள்ள கிராமங்களை இணைத்து கல்லோயா என்று பெயரிட்டு கல்லோயா பள்ளத்தாக்கு சிங்களக் “கொலனி” 1949 இல் உருவாக்கப்பட்டது.

பட்டிப்பளை என்ற புராதன தமிழ்க் கிராமத்தின் பெயரே கல்லோயா என்ற சிங்களப் பெயராக மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டது. இக் குடியேற்றங்களுக்காக சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் வெளிநாடுகளின் நிதியுதவி பெறப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசத்தில் 1949 – 1952 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் 80‚000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். 1960 வரை இத்திட்டம் விஸ்திரிக்கப்பட்டது.

கல்லோயா குடியேற்றத் திட்டம் இங்கினியாகல என்ற இடத்திலிருந்து ஆரம்பமாகிறது. இங்கு ஆரம்பத்தில் சிங்களவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுதொகையினரே இருந்தனர். 1952 ஜுலை 13 ஆம் திகதி இங்கிருந்த 100 இற்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்களை குடியேற்றத் திட்டத்திற்கு இடம்பெயருமாறு இராணுவத்தினர் வற்புறுத்தி அவர்களது வீடுகளை எரித்து அழித்தனர். ஆனால் அவர்கள் குடியமர மாற்று நிலம் எதுவுமே வழங்கப்பட வில்லை. அதே நேரம் சிங்களக் குடும்பங்களுக்கு தமிழர்கள் இருந்த இடம் குடியமர வழங்கப்பட்டதுடன் ஒவ்வோரு குடும்பத்திற்கும் ரூபா 10000 உதவித் தொகை வழங்கப்பட்டது.

60 வருடங்களுக்கு முன்னர் இது மிகப் பெரிய தொகையாகும். கல்லோயா குடியேற்றத்தைத் தொடர்ந்து திருகோணமலை கந்தளாயில் சிங்களக் கொலனி உருவாக்கப்பட்டது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு வர இனவிகித அடிப்படையில் இங்கு தமிழர்களுக்கும் காணி வழங்கப்பட்டிருந்தது. 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பாகத் தமிழ்த் தலைவர்கள் சத்தியாக்கிரகம் செய்தனர். சத்தியாக்கிரகிகள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கொழும்பிலும் தமிழர்கள் வாழும் தென்னிலங்கையின் பகுதிகளிலும் மலையகப் பகுதியிலும் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் பரவின. 1956 இல் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் முதல் இலக்காக கல்லோயா மற்றும் கந்தளாய்ப் பகுதியில் பூர்விகமாய் இருந்த மற்றும் குடியேறிய தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்.

தமிழினத்தின் மீது முதலாவது பாரிய இனப்படுகொலை இங்கினியாகலவில் ஜுன் 5‚ 1956 இல் சிங்கள ஆயுதப் படைகளால் நிகழ்த்தப்பட்டது. கல்லோயத் திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையினராலும் ஆயுதப் படையினராலும் இங்கினியாகலவில் உள்ள கரும்புத் தோட்டத்திலும் தொழிற்சாலையிலும் வேலை செய்ய குடியேற்றப்பட்ட 150 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் எரிக்கப்ட்டு தடயமின்றிச் செய்யப்பட்டார்கள்.

தாசி விதாச்சி தனது ‘அவசரகாலம் 58’ (Emergency 58) இல் இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளார். தடயங்களை அழித்தல் 2009 முள்ளிவாய்க்காலில் மட்டும் நிகழவில்லை. 1956 இலேயே ஆரம்பமாகிவிட்டது. 1996 செம்மணியில் அப்போதைய சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்கா 600 இற்கும் அதகமான தமிழ் இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழிகளை நள்ளிரவில் வாகன வெளிச்சங்கள் மூலம் தோண்டி எலும்புக் கூடுகளை அகற்றி தடயமே இல்லாமற் செய்தார்.

  1. இனக் கலவரங்ளும் அனுராதபுரத்திலிருந்து தமிழர் வெளியேற்றமும்1956 ஐத் தொடர்ந்து 1958‚ 1977‚ 1978‚ 1981‚ 1983 என தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலும் மலையகப் பகுதியிலும் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட கலவரங்கள் தமிழர்களுக்கு உரிமையான நிலங்களையும் சொத்துக்களையும் அபகரிப்பதற்காக இனஅழிப்பை நோக்காகக் கொண்டு ஆயுதப்படைகளின் உதவியுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. எல்லைக் கிராமங்களிலும் சிங்களவர் மத்தியிலும் வாழ்ந்த தமிழர்கள் இக்கலவரங்களின் போது நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்டார்கள்; பாதுகாப்பின்மை காரணமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

1983 ஆடிக்கலவரம் இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதை உணர்த்தியது. தமிழர்கள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேறி மேற்கு நாடுகளுக்கு புகலிடம் தேடிச் சென்றனர். 1983 இல் இலங்கையின் தலைநகரில் தொடங்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான வன்முறையில் 3000 இற்கும் அதிகமான தமிழர்கள் உயிரோடு எரித்தும் வெட்டியும் கொல்லப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இக்கலவரம் மலையகத்திற்கும் அனுராதபுரம் பொலநறுவை முதலான தமிழர் பிரதேசங்ளுக்கும் பரவியது.

இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றியபோது அனுராதபுரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தனர். ஆங்கில கப்பற் தலைவனான றொபேட் நொக்ஸ் (Robert Knox (8 February 1641 – 19 June 1720)) இலங்கையில் கிழக்கிந்தியக் கம்பனியின் வியாபாரத்தை முன்னெடுக்க வருகைதந்த போது கண்டி அரசனான இரண்டாம் இராஜசிங்கனின் காவலர்களால் கைது செய்யப்பட்டு கண்டி அரசின் கைதியாக 19 வருடங்கள் வாழ்கிறான்.

றொபேட் நொக்ஸ் கைதியாகவிருந்த போது சிங்கள மொழியைக் கற்றுக் கொள்கிறான். 19 வருடங்களின் பின் ஒருநாள் கண்டி இராச்சியத்திலிந்து தப்பி அனுராதபுரம் வழியாக வருகின்ற போது தான் கைதியாகவிருந்த போது கற்ற மொழியை விடுத்து வேறு ஒரு மொழியில் அப்பிரதேச மக்கள் உரையாடுவதையும் சிங்கள மொழியில் தான் பேசியதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையும் தனது வரலாற்றுக் குறிப்பில் எழுதியுள்ளான்.

அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்களை மலபார் என்று பெயரிடுகிறான். மலபார் என்பது தமிழர்களைக் குறிக்கும் சொல். 17 நூற்றாண்டு இலங்கையின் வரலாற்றைக் கூறும் முக்கிய ஆவணமாக “கிழக்கிந்தியக் கம்பனியின் இலங்கையுடனான வரலாற்றுத் தொடர்புகள்” (Knox, Robert (1681). An historical relation of the island Ceylon, in the East Indies. Printed by R. Chiswell.LCCN 15012033) என்ற நூல் விளங்குகின்றது.

பிரித்தானியர் வருகைக்கு முன் அனுராதபுரதத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். 1983 கலவரத்துடன் தமிழர்கள் முற்றாகவே அனுராதபுரத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அனுராதபுரம் இலங்கையின் மிகப் பெரிய மாவட்டம். 2200 வருடங்களுக்கு முன்னர் மகாவம்சம் போற்றும் தமிழரசனான எல்லாளன் ஆட்சிசெய்த தமிழ்நிலம். தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த இடம். காலங்காலமாக மேற்கொள்ளப்பட்ட அரச ஆதரவுக் கலவரங்கள் மூலம் சிங்களவர்களின் கைக்குமாறியது.

  1. மட்டக்களப்பு – அம்பாறை இனப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்இலங்கை சுதந்திரமடைந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களின் சதவீதம் 3 மடங்கால் அதிகரிக்க தமிழர் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மாற்றமின்றியிருந்தமையை புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன. 1963 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு முன்பாக 1961 இல் 7002 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 4500 சதுர கிலோமீற்றர் நிலமானது பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. 15000 சிங்களக் குடும்பங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் தமிழரது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்த இரு நீர்ப்பாசனத் திட்டங்களும் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களது பயன்பாட்டுக்கே வந்தன.bati-amparai2

Demographic changes between 1881 – 1981

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்கள்

2007 இல் உள்ள தரவுகளின்படி அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகையில் 60 சதவீதமாக இருந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் 30 சதவீதமான நிலத்தையே உரிமையாகக் கொண்டிக்க சனத்தொகையில் 30 சதவீதமான சிங்களவர்கள் மாவட்டத்தின் 70 சதவீதமான நிலத்தை உரிமையாகக் கொண்டிருக்கின்றமையக் காணலாம்.

இன்று 2009 மே இற்குப் பின்னர் அம்பாறையில் சிங்களவர்கள் முஸ்லீம்களின் காணிகளை அத்துமீறிக் கைப்பற்றி வர அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் சிங்களவர்களை எதிர்க்காமல் தமிழர்களின் காணிகளைக் கைப்பற்றி வருகிறார்கள்.
தொடரும்….

  1. மகாவலி அபிவிருத்தித் திட்டமும் தமிழர் தாயகக் கோட்பாட்டின் சிதைப்பும்கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டம் இதுவாகும். சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தவும் மின்னுற்பத்திக்காகவும் என மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் பாரிய நீர்ப்பாசன திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
    ஏறத்தாழ 300 கிலோமீற்றர் நீளமானதும் இலங்கையின் மிக நீண்டதுமான மகாவலி கங்கை நீர்ப்படுகை (Catchment Area) மூலம் தீவின் மொத்த நிலப்பரப்பில் பதினாறில் ஒரு பங்கு செழிப்புறுகிறது. கண்டிநகரில் உற்பத்தியாகி வடபகுதி நோக்கி வந்து திருகோணமலைக் கடலில் சங்கமிக்கும் மகாவலி நீரானது புராதன காலத்திலிருந்து நீர்ப்பாசனத்திற்காக அரசர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

1970 இல் ஆரம்பிக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டம் தமிழர்களின் மரபுவழித் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதென அரச அதிகாரிகளாலும் அன்றைய சனாதிபதியாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறப்பட்டது. அம்பாறை முதல் திருகோணமலை வரையான தமிழர் மரபுவழித் தாயகத்தில் தமிழர்களைச் சிறுபான்மையினர் ஆக்குவதும் இத்திட்டத்தின் இன்னொரு இலக்காகும்.
மகாவலித் திட்டத்தின் பிரதான 3 உப நீர்பாசனத் திட்டங்களில் ஒன்றாகிய மாதுறு ஓயா நீர்ப்பாசனத் திட்டமானது தமிழர்களின் மரபுவழித் தாயக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை‚ கதிரவெளி மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களில் 1000 கெக்ரெயர் நிலம் ஒதுக்கப்பட்டது. 25000 சிங்களவர்களைக் குடியேற்றுவதை நோக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட தெனினும் 1983 இல் நாடளாவிய ரீதியில் நிகழ்ந்த தமிழர்களுக்கெதிரான வன்முறையைத் தொடர்ந்து 30000 சிங்களவர்கள் தென் பகுதியில் இருந்து பேரூந்துகள் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றி குடியேற்றப்பட்டனர். இதன்போது 900 தமிழ்க் குடும்பங்கள் சிங்கள ஆயுதப்படைகளாலும் குடியேற்றவாசிகளாலும் பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மட்டக்களப்பில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை மட்டுபொலநறுவை எல்லையில் அமைந்துள்ள வெலிக்கந்தையில் பாரியளவான நிலப்பரப்பில் ஒரு சிங்களக் குடியேற்றம் நிறுவப்பட்டது. 3000 இற்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் இங்கு குடியேற்றப்பட்டு இக்குடும்பங்களின் வாழ்வாதார விவசாயத்திற்காக கல்லோயா திட்டத்தில் இருந்து நீர் வழங்கப்பட்டது.

இதனை விட தம்பாலை‚ மாணிக்கப்பிட்டி‚ பள்ளித்திடல் முதலான முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலமும் புதுவெளி‚ மன்னம்பிட்டி‚ முத்துக்கள் முதலான தமிழர் பூர்வீக நிலமும் அபகரிக்கப்பட்டு அங்கு பாற்பண்ணை அமைக்கப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.

இக்காலப் பகுதியில் மாணலாறு பிரதேசமானது உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசமானது வெலிஓயா என்ற சிங்கள ஊராக மாற்றப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இங்கு குடியேற்றப்பட்ட ஒவ்வோரு சிங்களக் குடும்பத்துக்கும் ரூ.800 மாதாந்தம் வழங்கப்பட்டது. 1984 இல் இத்தொகையானது சாதாரண அரச ஊழியர் ஒருவரது சம்பளத்தை விட உயர்வானதாகும். இக்குடியேற்றத் திட்டமானது பல்வேறு பகுதிகளாக முன்னெடுக்கப்பட்டது. 1980களின் இறுதிவரை 50000 சிங்களவர்கள் மணலாற்றில் குடியேற்றப்பட்டனர். அதேவேளை மணலாறு பிரதேசமானது தமிழர் மரபுவழித் தாயகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு சிங்களவர் பெரும் பான்மையாக வாழ்ந்து வரும் அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

  1. வெலிஓயாவின் குடிப்பரம்பல் வரலாறுவெலிஓயா என்பது மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசப் பெயரின் சிங்கள மொழி பெயர்ப்பாகும். மணலாறு என்பது முல்லைத்தீவு‚ வவுனியா‚ திருகோணமலை ஆகிய 3 தமிழ் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பிரதேசமாகும். படம் 2 இல் சிவப்பு மையினால் எல்லையிடப்பட்ட பிரதேசமே மணலாறு ஆகும்.

வவுனியா மாவட்டத்தில் மணலாறு பிரதேசத்திற்குரிய 1000 ஏக்கர் நிலமானது தமிழ் தனவந்தர்களுக்கு நீண்டகால குத்தகையடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது. இவை டொலர் பாம்‚ கென்ற் பாம்‚ சிலோன் தியேட்டர் முதலான பெயர்களால் அழைக்கப்பட்டன. இதனைவிடவும் 1000 ஏக்கர் தனிப்பட்ட நிலமானது தமிழர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் தென்னமரவடி‚ பாறையனாறு முதலான இடங்கள் மணலாறு பிரதேசத்திற்குரியதாக இருந்தன. முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய மணலாற்றுப் பகுதியானது கொக்கிளாய்‚ கொக்குத்தொடுவாய்‚ ஒதியமலை‚ நாயாறு முதலான பிரதேசங்களைக் கொண்டிருந்தது. 1980 இல் மணலாறு பிரதேசமானது விசேட உதவி அரசாங்க அதிபர் பிரிவாக மாற்றப்பட்டு அனுராதபுரம் மாவட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. சிங்கள உதவி அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு அபிவிருத்தித்திட்டங்கள் என்ற போர்வையில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். பாலங்கள்‚ பெருந்தெருக்கள்‚ வைத்தியசாலைகள்‚ பாடசாலைகள் முதலான உட்கட்டுமானங்கள் அமைக்கக்பட்ட பின்னர் இப்பிரதேசத்தில் இருந்த 13000 தமிழ்க் குடும்பங்கள் படுகொலைகள் மூலம் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். 1984 இல் நிகழ்ந்த திட்டமிட்ட தொடர் தமிழினப் படுகொலைகள் மணலாற்றினை விட்டு தமிழர்களை விரட்டியது.

மலையகப் பகுதியில் தமிழர்களுக்கெதிரான தொடர் கலவரங்களைத் தொடர்ந்து மலையத்தில் இருந்து வெளியேறிய தமிழர்கள் நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த டொலர் பாம்‚ கென்ற் பாம் முதலான குத்தகை நிலங்களில் குடியேறினர். சிங்கள அரசானது நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் குடியேறிய மலையகத் தமிழர்களை வெளியேற்றுவதை தனது முதல் இலக்காகக் கொண்டது. 1980 இன் ஆரம்பகாலப் பகுதியில் சிங்களக் குடியேற்றவாசிகள் குறிப்பாக சிறைக்கைதிகள் டொலர் பாம்‚ கென்ற் பாம் முதலான இடங்களில் குடியேற்றப்பட்டனர்.

பதவியாவில் முகாம் அமைத்திருந்த இலங்கைப்படையினர் இப்பகுதியில் சுற்றுவளைப்பு என்ற பெயரில் கிராமங்களுக்குள் நுழைந்து படுகொலைகளைப் புரிந்தனர். 1984 நொவெம்பர் 29 முதல் 1984 டிசம்பர் 2 வரை மணலாற்றில் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்த சிங்கள இராணுவம் ஒதியமலை நோக்கி நகர்ந்தது. 1984 டிசம்பர் 1 ஆம் திகதி ஒதியமலை சுற்றிவளைக்கப்பட்டு அப்பிரதேசத்தில் இருந்த 32 இளைஞர்கள் பொது மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 1984 டிசம்பர் 2 ஆம் திகதி குமுழமுனைக் கிராமம் சுற்றிவழைக்ப்பட்டு 7 இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். 1984 டிசம்பர் 3 ஆம் திகதி மணலாறு கிராமம் சுற்றிவழைக்கப்பட்டு மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதன் போது குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பலர் வீடுகளில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர்.

அயலில் இருந்த பொது மக்கள் நிலைமையை அறிந்து வீடுகளைவிட்டு தப்பி ஓட அவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் மீளவந்து குடியேறுவதைத் தடுப்பதற்காக மக்கள் வெளியேறிய வீடுகளும் உடைமைகளும் தீயிட்டு எரிக்கப்பட்டது. 1984 டிசம்பர் 15 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய்‚ கொக்குத்தொடுவாய்‚ கருநாட்டுக்கேணி‚ நாயாறு‚ அலம்பில் ஆகிய பகுதிகளை சுற்றிவழைத்த சிங்கள இராணுவம் 131 தமிழர்களைப் படுகொலை செய்தது. இவர்களில் 21 பேர் சிறுவர்கள். இப்படுகொலைகைளைத் தொடர்ந்து வெளியேறிய மக்கள் 2008 வரை வன்னிப்பகுதியிலே இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். 2009 தமிழின அழிப்பு யுத்தத்தின் போது முல்லைத்தீவின் மணலாற்றுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.

2009 யுத்தத்தின் இறுதியில் நடந்தவற்றை விசாரணை செய்யக் கோரும் சருவதேசம் இலங்கை அரசு தனது நாட்டு மக்கள் மீது புரிந்த இனப்படுகொலை குறித்து மௌனம் சாதிக்கிறது. 1984 காலப் பகுதியில் மணலாற்றில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளுக்கோ பின்னர் நடந்த தமிழினப் படுகொலைக்கோ இலங்கையில் விசாரணை நடத்தப்படவும் இல்லை நீதி வழங்கப்படவும் இல்லை. ஆனால் தமிழினத்தை – தமிழ்நிலத்தைப் இனஅழிப்பிலிருந்து பாதுகாக்க ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்களை – விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி இலங்கையரசுடன் இணைந்து அழித்த கொடுஞ்செயலுக்கு சருவதேசமும் துணை நின்றது.

(தொடரும்)

http://www.eelamenews.com/?p=115421

தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பகுதி 2
 பிஞ்ஞகன்

இலங்கையின் வடபகுதியில் தமிழர்களின் இனப்பரம்பல் 14 இலட்சத்தால் வீழ்ச்சி யடைந்துள்ளமையை 2011-2012 புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2009 மே மாதமளவில் தமிழின அழிப்புடன் தமிழர்களின் போரிடும் வலுவும் அழிக்கப்பட்ட பின்னர் வன்னிப்பிரதேசத்தின் அரச பொதுக் காணிகள் யாவுமே இராணுவக் குடியிருப்புக்களுக்காகவும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் தமிழர்களிடம் இருந்து பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து கடந்த 60 வருடங்களில் அபகரிக்கப்பட்ட நிலத்தைவிட தமிழர்களின் போரிடும் வலுவாகிய விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னரான கடந்த 5 வருடங்களில் தமிழர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலம் பன்மடங்கு அதிகமானது என்று பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.

2009 மே வரை தமிழர்களை பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்ற தொடர் படுகொலைகளைப் புரிந்த அரசு இன்று தமிழ் இனஅழிப்புப் போரில் உயிர்தப்பி மீள்குடியேறிய தமிழர்களை காட்டு யானைகளை விட்டு அச்சுறுத்தி வெளியேற்றும் உத்தியைக் கையாண்டு வருகிறது. கடந்த 20 வருடங்களில் வன்னிப் பகுதியில் யானை தாக்கி எவருமே இறந்ததில்லை. ஆனால் 2014 மார்ச் 09 ஆம் திகதி கிளிநொச்சி முரசு மோட்டை முருகானந்த கல்லூரியின் உயர்தர கலை பிரிவு மாணவன் சிவசுப்பிரமணியம் கஜானன்(18) யானை தாக்கிக் உயிரிழந்துள்ளான். (http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/102682-2014-03-10-01-57-19.html) தென்பகுதியில் மதம் பிடித்து அலையும் யானைகளை வனஇலாகவினர் பிடித்து மன்னார்‚ முல்லைத்தீவுப் பகுதியில் விடுவதன் நோக்கமென்ன? யானை தாக்கி பாடசாலை மாணவன் ஒருவன் இறந்துள்ளமை யுத்தத்தின் பின்னர் தமிழர்களை பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றும் நில ஆக்கிரமிப்பு வடிவத்திற்கு ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

ஒரு புறம் யானைகளை விட்டு அச்சுறுத்தும் சிங்கள அரசு மறுபுறம் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் தமிழர்களை அனுப்புகிறது. கடற்படை மூலம் இலங்கையரசு மேற்கொள்ளும் இந்த நிகழ்ச்சிநிரலை இலங்கையின் காவற்றுறையின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. பணம் இல்லாதவர்களிடம் காணி உறுதிகளைப் பெற்றுக்கொண்டு அவுஸ்திரேலியா சென்று பணத்தை அனுப்புமாறு கூறும் சிங்களக் கடற்படை முகவர்கள் அகதிகள் படகு வருவதை அவுஸ்திரேலியக் கடற்படைக்கு அறிவித்து தாய்நிலத்தை விட்டுச் சென்ற தமிழர்களை நட்டாற்றில் தத்தளி்க்க விடுகிறது.

இந்நிலையில் தமிழ்நில அபகரிப்பின் வரலாற்றுப் பின்புலத்தின் 2 வது பகுதியை நோக்குவோம்.
படம் 1 – 1948 முதல் 2008 வரை தமிழர் பிரேதேசத்தில் நிறுவப்பட்ட சிங்களக் குடியேற்றங்ளைக் காண்பிக்கிறது.Singala-sett

  1. மகாவலி அபிவிருத்தித் திட்டமும் தமிழர் தாயகக் கோட்பாட்டின் சிதைப்பும்கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டம் இதுவாகும். சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தவும் மின்னுற்பத்திக்காகவும் என மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் பாரிய நீர்ப்பாசன திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
    ஏறத்தாழ 300 கிலோமீற்றர் நீளமானதும் இலங்கையின் மிக நீண்டதுமான மகாவலி கங்கை நீர்ப்படுகை (Catchment Area) மூலம் தீவின் மொத்த நிலப்பரப்பில் பதினாறில் ஒரு பங்கு செழிப்புறுகிறது. கண்டிநகரில் உற்பத்தியாகி வடபகுதி நோக்கி வந்து திருகோணமலைக் கடலில் சங்கமிக்கும் மகாவலி நீரானது புராதன காலத்திலிருந்து நீர்ப்பாசனத்திற்காக அரசர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது

1970 இல் ஆரம்பிக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டம் தமிழர்களின் மரபுவழித் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதென அரச அதிகாரிகளாலும் அன்றைய சனாதிபதியாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறப்பட்டது. அம்பாறை முதல் திருகோணமலை வரையான தமிழர் மரபுவழித் தாயகத்தில் தமிழர்களைச் சிறுபான்மையினர் ஆக்குவதும் இத்திட்டத்தின் இன்னொரு இலக்காகும்.

மகாவலித் திட்டத்தின் பிரதான 3 உப நீர்பாசனத் திட்டங்களில் ஒன்றாகிய மாதுறு ஓயா நீர்ப்பாசனத் திட்டமானது தமிழர்களின் மரபுவழித் தாயக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை‚ கதிரவெளி மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களில் 1000 கெக்ரெயர் நிலம் ஒதுக்கப்பட்டது. 25000 சிங்களவர்களைக் குடியேற்றுவதை நோக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட தெனினும் 1983 இல் நாடளாவிய ரீதியில் நிகழ்ந்த தமிழர்களுக்கெதிரான வன்முறையைத் தொடர்ந்து 30000 சிங்களவர்கள் தென் பகுதியில் இருந்து பேரூந்துகள் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றி குடியேற்றப்பட்டனர். இதன்போது 900 தமிழ்க் குடும்பங்கள் சிங்கள ஆயுதப்படைகளாலும் குடியேற்றவாசிகளாலும் பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மட்டக்களப்பில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை மட்டு-பொலநறுவை எல்லையில் அமைந்துள்ள வெலிக்கந்தையில் பாரியளவான நிலப்பரப்பில் ஒரு சிங்களக் குடியேற்றம் நிறுவப்பட்டது. 3000 இற்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் இங்கு குடியேற்றப்பட்டு இக்குடும்பங்களின் வாழ்வாதார விவசாயத்திற்காக கல்லோயா திட்டத்தில் இருந்து நீர் வழங்கப்பட்டது.

இதனை விட தம்பாலை‚ மாணிக்கப்பிட்டி‚ பள்ளித்திடல் முதலான முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலமும் புதுவெளி‚ மன்னம்பிட்டி‚ முத்துக்கள் முதலான தமிழர் பூர்வீக நிலமும் அபகரிக்கப்பட்டு அங்கு பாற்பண்ணை அமைக்கப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.

இக்காலப் பகுதியில் மாணலாறு பிரதேசமானது உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசமானது வெலிஓயா என்ற சிங்கள ஊராக மாற்றப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இங்கு குடியேற்றப்பட்ட ஒவ்வோரு சிங்களக் குடும்பத்துக்கும் ரூ.800 மாதாந்தம் வழங்கப்பட்டது. 1984 இல் இத்தொகையானது சாதாரண அரச ஊழியர் ஒருவரது சம்பளத்தை விட உயர்வானதாகும். இக்குடியேற்றத் திட்டமானது பல்வேறு பகுதிகளாக முன்னெடுக்கப்பட்டது. 1980களின் இறுதிவரை 50000 சிங்களவர்கள் மணலாற்றில் குடியேற்றப்பட்டனர். அதேவேளை மணலாறு பிரதேசமானது தமிழர் மரபுவழித் தாயகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு சிங்களவர் பெரும் பான்மையாக வாழ்ந்து வரும் அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.Welioya

  1. வெலிஓயாவின் குடிப்பரம்பல் வரலாறுவெலிஓயா என்பது மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசப் பெயரின் சிங்கள மொழி பெயர்ப்பாகும். மணலாறு என்பது முல்லைத்தீவு‚ வவுனியா‚ திருகோணமலை ஆகிய 3 தமிழ் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பிரதேசமாகும். படம் 2 இல் சிவப்பு மையினால் எல்லையிடப்பட்ட பிரதேசமே மணலாறு ஆகும்.

வவுனியா மாவட்டத்தில் மணலாறு பிரதேசத்திற்குரிய 1000 ஏக்கர் நிலமானது தமிழ் தனவந்தர்களுக்கு நீண்டகால குத்தகையடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது. இவை டொலர் பாம்‚ கென்ற் பாம்‚ சிலோன் தியேட்டர் முதலான பெயர்களால் அழைக்கப்பட்டன. இதனைவிடவும் 1000 ஏக்கர் தனிப்பட்ட நிலமானது தமிழர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் தென்னமரவடி‚ பாறையனாறு முதலான இடங்கள் மணலாறு பிரதேசத்திற்குரியதாக இருந்தன. முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய மணலாற்றுப் பகுதியானது கொக்கிளாய்‚ கொக்குத்தொடுவாய்‚ ஒதியமலை‚ நாயாறு முதலான பிரதேசங்களைக் கொண்டிருந்தது. 1980 இல் மணலாறு பிரதேசமானது விசேட உதவி அரசாங்க அதிபர் பிரிவாக மாற்றப்பட்டு அனுராதபுரம் மாவட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. சிங்கள உதவி அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு அபிவிருத்தித்திட்டங்கள் என்ற போர்வையில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். பாலங்கள்‚ பெருந்தெருக்கள்‚ வைத்தியசாலைகள்‚ பாடசாலைகள் முதலான உட்கட்டுமானங்கள் அமைக்கக்பட்ட பின்னர் இப்பிரதேசத்தில் இருந்த 13000 தமிழ்க் குடும்பங்கள் படுகொலைகள் மூலம் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். 1984 இல் நிகழ்ந்த திட்டமிட்ட தொடர் தமிழினப் படுகொலைகள் மணலாற்றினை விட்டு தமிழர்களை விரட்டியது.

மலையகப் பகுதியில் தமிழர்களுக்கெதிரான தொடர் கலவரங்களைத் தொடர்ந்து மலையத்தில் இருந்து வெளியேறிய தமிழர்கள் நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த டொலர் பாம்‚ கென்ற் பாம் முதலான குத்தகை நிலங்களில் குடியேறினர். சிங்கள அரசானது நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் குடியேறிய மலையகத் தமிழர்களை வெளியேற்றுவதை தனது முதல் இலக்காகக் கொண்டது. 1980 இன் ஆரம்பகாலப் பகுதியில் சிங்களக் குடியேற்றவாசிகள் குறிப்பாக சிறைக்கைதிகள் டொலர் பாம்‚ கென்ற் பாம் முதலான இடங்களில் குடியேற்றப்பட்டனர்.

பதவியாவில் முகாம் அமைத்திருந்த இலங்கைப்படையினர் இப்பகுதியில் சுற்றுவளைப்பு என்ற பெயரில் கிராமங்களுக்குள் நுழைந்து படுகொலைகளைப் புரிந்தனர். 1984 நொவெம்பர் 29 முதல் 1984 டிசம்பர் 2 வரை மணலாற்றில் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்த சிங்கள இராணுவம் ஒதியமலை நோக்கி நகர்ந்தது. 1984 டிசம்பர் 1 ஆம் திகதி ஒதியமலை சுற்றிவளைக்கப்பட்டு அப்பிரதேசத்தில் இருந்த 32 இளைஞர்கள் பொது மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 1984 டிசம்பர் 2 ஆம் திகதி குமுழமுனைக் கிராமம் சுற்றிவழைக்ப்பட்டு 7 இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். 1984 டிசம்பர் 3 ஆம் திகதி மணலாறு கிராமம் சுற்றிவழைக்கப்பட்டு மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதன் போது குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பலர் வீடுகளில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர்.

அயலில் இருந்த பொது மக்கள் நிலைமையை அறிந்து வீடுகளைவிட்டு தப்பி ஓட அவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் மீளவந்து குடியேறுவதைத் தடுப்பதற்காக மக்கள் வெளியேறிய வீடுகளும் உடைமைகளும் தீயிட்டு எரிக்கப்பட்டது. 1984 டிசம்பர் 15 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய்‚ கொக்குத்தொடுவாய்‚ கருநாட்டுக்கேணி‚ நாயாறு‚ அலம்பில் ஆகிய பகுதிகளை சுற்றிவழைத்த சிங்கள இராணுவம் 131 தமிழர்களைப் படுகொலை செய்தது. இவர்களில் 21 பேர் சிறுவர்கள். இப்படுகொலைகைளைத் தொடர்ந்து வெளியேறிய மக்கள் 2008 வரை வன்னிப்பகுதியிலே இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். 2009 தமிழின அழிப்பு யுத்தத்தின் போது முல்லைத்தீவின் மணலாற்றுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.

2009 யுத்தத்தின் இறுதியில் நடந்தவற்றை விசாரணை செய்யக் கோரும் சருவதேசம் இலங்கை அரசு தனது நாட்டு மக்கள் மீது புரிந்த இனப்படுகொலை குறித்து மௌனம் சாதிக்கிறது. 1984 காலப் பகுதியில் மணலாற்றில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளுக்கோ பின்னர் நடந்த தமிழினப் படுகொலைக்கோ இலங்கையில் விசாரணை நடத்தப்படவும் இல்லை நீதி வழங்கப்படவும் இல்லை. ஆனால் தமிழினத்தை – தமிழ்நிலத்தைப் இனஅழிப்பிலிருந்து பாதுகாக்க ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்களை – விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி இலங்கையரசுடன் இணைந்து அழித்த கொடுஞ்செயலுக்கு சருவதேசமும் துணை நின்றது.

தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பகுதி 2- பிஞ்ஞகன்

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply