சங்க காலத் திருமணம்

சங்க காலத் திருமணம்

திருமகள்

திருமணம்  ஒருவரது வாழ்வில் இடம் பெறும் முக்கிய நிகழ்வாகும்.  அதனால்தான் திருமண விழாவை பெரும் பொருள் செலவழித்துச் செய்கிற வழக்கம் இருக்கிறது.

திருமணம் குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக இடம்பெறுகிறது. இது எல்லாப் பண்பாட்டுக் குழுக்களிடையே காணப்படும் பொதுமையாகும். இருந்த போதிலும் வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும் நெறிமுறைகளும் காணப்படுகின்றன.

இருமனம் ஒருமனம் ஆவதுதான் திருமணம் என்பார் புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன்.  மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ளச்  செய்யப்படும்  ஒரு வாழ்க்கை உடன்படிக்கை ஆகும்.

திருமணம் ஒரு புதிய தலைமுறையைத்  தோன்றுவிக்கிறது.  மணம் என்ற சொல்லுக்குக் ‘கூடுதல்’  ‘தோய்தல்’ என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பினும்  பழங்கால வழக்கில் இச்சொல் பல பொருளை உடையதாக இருந்தது. ‘மண்ணுதல்’ என்ற சொல்லின் பொருள் கழுவுதல், நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகுபெறுதல் எனப் பல.  மண் இயற்கையிலேயே மணம் உடையது. அதனை மண் மணம் என்பர். திருமணத்தைக் குறிக்கும்  மணம் என்ற சொல்  தோய்தல் என்ற பொருளில் வந்திருக்கலாம்.  திருமண நாளன்று மணமகன் – மணமகள் இருவருக்கும் தலையில் பால் வைத்துத்  தோயவார்த்தல் ஒரு முக்கிய சடங்காகும்.

சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட ‘திரு என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் “திருமணம்” என அழைக்கப்படுகிறது.

தொல்காப்பியம் தமிழில் கிடைக்கும் மிகப் பழைய இலக்கண நூலாகும். இது இரண்டாம் சங்க காலத்து நூல் என நம்பப்படுகிறது. அதை இயற்றிய தொல்காப்பியர்  எழுத்து, சொல், பொருள் என மூன்றின் இலக்கணத்தை அதில் கூறியிருக்கிறார். மூன்றாவதாகிய பொருள் இலக்கணம்  தமிழ் இலக்கணத்தில் மட்டும் காணப்படும் சிறப்பு அம்சமாகும். பொருள் இலக்கணம் தமிழர்களது வாழ்வியலைக் குறிக்கிறது. 

தொல்காப்பியர் காலத்திலும் அவருக்குப் பின்னரும் தமிழர்கள்  களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர். களவு மணம், கற்பு மணம் இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக விளங்கியது.  பெற்றோர் பேசிச் செய்து வைக்கும் மணவாழ்க்கையே ‘கற்பு நெறி’ எனப்பட்டது.  தலைவனும் – தலைவியும் பிறர் காணா வண்ணம் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொள்வது களவில்  ஆகும்.   திருமணம் களவில் தொடங்கி கற்பில் முடிவதும் உண்டு.

தொல்காப்பியருக்கு முந்திய காலத்தில் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அப்படியான வாழ்க்கை முறையில்  பொய்யும்  வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி பெரியோர்கள் சில விதி முறைகளை வகுத்தனர். அதற்குக் ‘கரணம்’ எனப் பெயர் சூட்டினர்.  இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று.

இரு வீட்டாரது  ஒப்புதல் பெற்ற கற்புத்  திருமணம் இடம்பெற்றது.  அவ்வாறான கற்பு நெறி சிறந்து விளங்க மணப் பொருத்தம் பார்த்தனர். தொல்காப்பியர் திருமணத்திற்குரிய  பத்துப்  பொருத்தங்களைக் கூறியிருக்கிறார். இவை இன்று நாம் பார்க்கும் சாதகப் பொருத்தங்கள்  அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்த காமவாயில்,
நிறையே, அருளே, உணர்வோடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.
                            (தொல். 1219)

1. குலப்பிறப்பு 2. ஒழுக்கம் 3. ஆள்வினையுடைமை 4. அகவை 5. வனப்பு 6. காம ஒழுக்கத்திற்குரிய உள்ளக் கிளர்ச்சி 7. நல்லகுணம் 8. அருளுடைமை 9. உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு 10. தெய்வப்பொலிவு என்ற பத்துப் பொருத்தம்.

பிறப்பென்பது குடிப்பிறத்தல். அதற்குத்தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும். அடுத்து அறிவுடையோர்  வேண்டாதன பத்தும் எவையெவை என்பதனை தொல்காப்பியர் தொகுத்துச் சொல்வார்.

நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி,
வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு குடிமை
இன்புறல், ஏழமை மறப்போடு, ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்.     
                       (தொல். 1220)

நிம்பிரி – அழுக்காறு. கொடுமை – அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி. வியப்பு – தம்மைப் பெரியராக நினைத்தல். புறமொழி – புறங்கூறல். வன்சொல் — கடும்சொல். பொச்சாப்பு – சோர்வு.  மடிமை – முயற்சியின்மை. குடிமை இன்புறல் – தன் குலத்தினாலும் தன் குடிப்பிறப்பினாலும் தம்மை மதித்து இன்புறல்.

பெருங்கதையில் மணப்பொருத்தம் எட்டு என்றும் அவை 1. இளமை 2. வனப்பு 3. வளமை 4. தறுக்கண் 5. வரம்பில் கல்வி 6. நிறைந்த அறிவு 7. தேசத்தமைதி காத்தல் 8. குற்றமில்லாத சூழ்ச்சி முதலியன  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது சங்க காலத்தில் நடந்த திருமணமுறை எவ்வாறு அமைந்தது என்பதைப் பார்ப்போம். அகநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள்  வெவ்வேறு காலத்தில்  வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் (பாடல் 86, 136)  பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன. அவற்றுள் பாடல் 86 நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல்.

பொருள் தேடும் பொருட்டு வெளியூர் சென்ற மணமகன் நீண்ட காலம் கழித்து ஊர் திரும்புகின்றான். வழியில் தோழி அவனை இடை மறித்து தலைவி அவன் மேல் கோபமாக இருக்கிறாள் அவள் உன்னை பார்க்க மாட்டாள் எனக் கூறுகிறாள்.  அதற்குத் தலைவன் தனது திருமண நாளன்று நடந்தேறிய காட்சியை  தோழிக்குக் கூறுவதாக புலவர் பாடலை நாடக பாணியில் அமைத்திருக்கிறார்.  

உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழப்புகழ் நாடலை வந்தென
வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
‘கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
‘பேரில் கிழத்தி யாகென’ தமர் தர
ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென
வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி யுவகைய ளாகி முகனிகுத்
தொய்யென விறைஞ்சி யோளே மாவின்
மடங்கொண் மதைஇய நோக்கின்
ஒடுங்கீ தோதி மாஅ யோளே.                  
(அகநானூறு பாடல் 86)

கனையிருள் அகன்ற – பூர்வபக்கத்தையுடைய காலை. கொடும் புறம்    – நாணத்தால் வளைந்த உடம்பு. சதுர்த்தியறை   – நான்காம் நாள் பள்ளியறை.  மதைஇய நோக்கு     – செருக்கின பார்வை.

‘எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிக அழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும் கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தைச் செய்து வைக்கும் கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறை முறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் ‘உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் ‘கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!’

என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் ‘இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்’ என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். ‘ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு’ என வினாவினேன்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும் செருக்கினையுடைய நோக்கினையுடையவளும் குளிர்ந்த கூந்தலையுடையவளும் மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்” என்று தோழியிடம் கூறினான்.

சங்ககாலத் தமிழரது திருமண நெறியை நாடாக பாணியில் பாடி வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பை, பகுத்தறிவை எண்ணி எண்ணி மனம் பூரிப்படைகிறது.

புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் – தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரீகமாக, மிக நளினமாகத் தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது.

மணமகளை வாழ்த்தும் போது ‘இன்று முதல் நீயும் பெரிய மனக்கிழத்தி ஆகிவிட்டாய்’  என்ற  சொல்லாட்சியை  ‘பெரிய பிள்ளையாகி விட்டாள்’ என்று பூப்பெய்திய பெண்ணைக் குறித்துச்  சொல்லும் வழக்கு  இன்றும்  இருக்கிறது. 

அன்றைய தமிழருடைய திருமணம் எளிமையாக நடந்தது. அதில் அறிவுக்கு மாறான சடங்குகள் எதுவும் இல்லை. வடமொழிக் கூச்சல் இல்லை, எரியோம்புதல் இல்லை, தீவலம் வருதல் இல்லை, அருந்ததி பார்த்தல் இல்ல, புரோகிதர் இல்லை. இவை பின்னாளில் வந்து சேர்ந்தவை ஆகும்.

செந்தமிழர் திருமணங்கள் பைந்தமிழில் செய்தல் வேண்டும்!

சாமி கோபித்துக் கொள்வார் என்ற பயம் வேண்டாம்! 

வியேந்திரன் – செல்லி திருமணவிழாவில் நக்கீரன் வேண்டுகோள்

இன்று திருநிறைச்செல்வன் வியேந்திரன் – திருநிறைச் செல்வி செல்லி இருவரும்; தமிழ்முறைத் திருமணத்தில் இணையும விழாவுக்கு தலைமை தாங்கி நடத்தி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அய்யர் இல்லாமல், தீவலம் இல்லாமல், அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல் எல்லாவற்றுக்கும் மேலாக யாருக்கும் புரியாத வடமொழி கூச்சல் இல்லாமல் திருக்குறள் ஓதி, மாலை மாற்றி, மங்கல நாண் அணிவித்து இல்லறம் என்னும் நல்லறத்தில் மணமக்கள் இணைகிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எமது முன்னோர் பகுத்தறிவுக்கு ஒத்தவாறு அய்யர் இல்லாமல் அருந்ததி பார்க்காமல் எளியமுறையில் திருமணம் செய்து கொண்டார்கள். அவ்வாறான திருமணத்தை திருமணமாகிக் குழந்தைகளைப் பெற்றெடுத்த முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் கலந்து நன் நீராட்டி, தூய ஆடைகளையும் அணிகளையும் அணிவித்து ‘உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் “கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!” என்று வாழ்த்தினார்கள்.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்திருந்த உறவினர் ‘இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்’ என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் சென்றாள். அது போன்ற திருமணம் இதுவாகும்” என திரு. நக்கீரன், தலைவர் படைப்பாளிகள் கழகம், தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில் “இந்தத் தமிழ்முறைத் திருமணம் திரு. நமசிவாயம் இல்லத்தில் நடைபெறும் இரண்டாவது திருமணமாகும். சென்ற ஆண்டு அவரது மருமகன் சுகந்தன் – றோமலீனா திருமணமும் – அவர்கள் இந்த அவையில் இருக்கிறார்கள் – தமிழ்முறைப்படி செய்து கொIண்டார்கள். துணிந்து தமிழ்முறைத் திருமணங்களை நடத்தும் திரு நமசிவாயம் திருமதி நமசிவாயம் இருவரது தமிழ்ப்பற்றுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியான தமிழ்முறைத் திருமணங்களைச் செய்து கொண்டால் சாமி கோபித்துக் கொள்வார் என யாரும் பயப்படத் தேவையில்லை.

45 ஆண்டுகளுக்கு முன்னர் நானே 2 மாலை, 10 திருக்குறள், 4 பேச்சாளர்களோடு திருமணம் செய்து கொணடேன். ஒப்பீட்டளவில் எனது குடும்பம் ஓகோ என்று வாழுதோ இல்லையோ நிச்சயம் ஆகா என்று சொல்லும்படி வாழ்கிறது. எனவே தமிழர்கள் எந்த மனத் தடங்கலோ அச்சமோ இல்லாமல் இப்படியான தமிழ்முறைத் திருமணங்களை செய்திட முன்வர வேண்டுமென்று எல்லோரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.  

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு திருமண விழா தொடங்கியது. பாடலை செல்வி நிவேதா இராமலிங்கம் மற்றும் செல்வி சாந்தி சுப்பிரமணியம் இருவரும் இனிய குரலில் இசைத்தார்கள்.

திரு. கந்தையா நமசிவாயம் வரவேற்புரை நிகழ்த்தினார். “தமிழர்கள் வீட்டுத் திருமணங்களை எமது தாய்மொழியில் நடத்துவதே பொருத்தமானது. எமது மொழிக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாமே நமது தாயை அவமானப்படுத்துவது போலாகிவிடும்” என்றார்.

பெற்றோர்கள் சார்பாக மணப்பெண்ணை மணமகனிடம் திரு திருமதி கே. சிறீதரன் கையளித்தார்கள்.

திருமண உறுதிமொழியை திரு. நக்கீரன் வாசித்துச் சொல்ல மணமகன் – மணமக்கள் அதனைத் திருப்பிச் சொல்லி நிறைவு செய்தார்கள்.

அதனைத் தொடர்ந்து மணமகன் மங்கல நாணை மணமகள் கழுத்தில் அணிவித்தார். அவையோர் மணமக்களை பூத்தூவி வாழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து முனைவர் சிறி பவன் சிறிஸ்கந்தராசா திருக்குறள் பாடல்களை ஓத மணமக்கள் அவற்றைத் திருப்பி ஓதினார்கள். ஓதி முடிந்ததும் மாலை மாற்றிக் கொண்டார்கள்.

மணமகனும் மணமகளும் பெற்றோர்களை வணங்கி அவர்களது வாழ்த்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

இதனை அடுத்து மணமக்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு பொற்கிழி அளித்தனர். அதனைக் கழகம் சார்பாக துணைத் தலைவர் திரு. வரதராசா பெற்றுக் கொண்டார்.

ஈற்றில் மணமக்கள் நன்றியுரை கூறினார்கள்.

திருமணப் பதிவை திரு. ஜிம் மேர்பி (துiஅ ஆரசிhல) நல்லமுறையில் நடத்தி வைத்தார்.

மணமக்களின் குணநலங்களைப் பற்றி மணமகனின் உடன்பிறப்பு செல்வன் யயேந்திரன், மணமகளின் உடன்பிறப்பு செல்வி அல்டா அல்வேசும் (ஆள யுடனய யுடஎநள) நகைச்சுவையோடு எடுத்துரைத்தார்கள்.

நேற துயளஅin விருந்து மண்டபத்தில் மிகச் சிறப்போடும் சீரோடும் நடந்து முடிந்த மணவிழா நிகழ்ச்சியை திரு.ஞானம் அன்ரனி இரு மொழியிலும் நயத்தோடு தொகுத்து வழங்கினார்.

திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா இருவரதும்

தமிழ்முறைத் திருமணம் சென்ற நொவெம்பர் மாதம் 23 ஆம் நாள் மிகச் சிறப்பாக பாபா திருமண அரங்கில் நடந்தேறியது. திருமண விழாவுக்கு தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு நக்கீரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மங்கல விளக்கு ஏற்றல் தமிழ்தாய் வணக்கம் இரண்டையும் தொடர்ந்து திரு.தணி குமார் சேரன் திருமணத்துக்கு வருகை தந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திரு நக்கீரன் தனது தலைமையுரையில்; இத் திருமணம் மூலம் தமிழகமும் தமிழீழமும் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மங்கல நாணை தலைவர் எடுத்துக் கொடுக்க மணமகன் செந்தில் அதனை மணமகள் பரணிகா கழுத்தில் அணிந்தார். தொடர்ந்து திருக்குறள் ஓதி மணமக்கள் வாழ்க்கை உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். . திரு. வை.க.தேவ், திருமதி ரேணுகா குமாரசாமி, திருமதி ராதா முருகேசன், திரு.சு.இராசரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வளங்கினர்.

மணமக்கள் செந்தில் – பரணிகா அனைத்துலக மருத்துவ நலவாழ்வு அமைப்புக்கு அமெரிக்க டொலர் 2,000 க்கு ஆன காசோலையை மருத்துவர் ரகுராஜ் அவர்களிடம் கையளித்தனர். திரு. இடைக்காடர் ஈசுவரன் நன்றியுரையோடு திருமணவிழா இனிது நிறைவேறியது. தமிழ்முறைத் திருமணத்தைக் காண்பதற்கும் மணமக்களை வாழ்த்துவதற்கும் அமெரிக்காவில் இருந்து ஏராளமான தமிழ் உறவுகள் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பதிவுத் திருமணத்தை திரு.எஸ்.ஆர். சண்முகரத்தினம் நடத்தி வைத்தார். அவருக்கு மணவீட்டார் கொடுத்த 201 டொலர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் திரு.இரா.குணநாதன் அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்.

நிகழ்ச்சி நிரல் (தொகுப்பாளர் – திரு ஞானம் அன்ரனி)

திருநிறை செல்வன் ராச்குமார்
திருநிறைச் செல்வி பிறேமினி
தமிழ்முறைத் திருமணம்

நிகழ்ச்சி நிரல்

10.15 மணமகன், தோழன் மற்றும் சுற்றத்தினர் சூழவருதல். நுழைவாசலில் மணமகள் வீட்டார் (சாரா கதிரேசு, சுரேஸ் அண்ணாவின் மனைவி) மணமகனுக்கு ஆராத்தி எடுத்தல் ஐசாக் கதிரேசு அவருக்கு மாலை அணிதல். பின்னர் மணமகன் தோழன் இருவரும் வந்து மண இருக்கையில் அமர்தல்.

10.30 மணமகள், தோழி மற்றும் சுற்றத்தினர் சூழ வருதல். மணமக்கள் தோழி இருவரும் வந்து மண இருக்கையில் அமர்தல்.
(நீலுஜா திசைவீரசிங்கம், அபிராமி அருந்தவரட்ணம், ஜிலானி ராஜித், ஐஸ்வர்யா சண்முகராஜா, மேர்லின்; சேவியர், கிரிசாந்தி சண்முகநாதன்)

10.35 மங்கல விளக்கு ஏற்றல் – திருஃதிருமதி குணரட்ணம்

10.40 தமிழ்த்தாய் வாழ்த்து – ஓவியா சுபாஸ்சந்திரபோஸ், திவ்யா பிராபாகர்

10.45 வரவேற்புரை – செல்வன் தினேஸ்குமார்

10.50 தலைமை உரை திரு. நக்கீரன், தலைவர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

11.00 மணமகன், மணமகள் வீட்டார் ஒருவருக்கொருவர் பூ சந்தனம் பழங்கள் கொண்ட தட்டுகளைப் கொடுத்து வாங்கிக் கொள்ளல் (ராச் அப்பா,அம்மா,ஐசாக்,சாரா)

11:05 மணமகன் அறிமுகம்

11:15 மணமகள் அறிமுகம்

11.20 பூக்கள், பழங்கள் மங்கலப் பொருட்கள் நிறைந்த தட்டில் மங்கல நாணை வைத்து அவையினர் வாழ்த்துக்காகத் திரு திருமதி சத்தியமூர்த்தி. அத்தோடு மணமக்களை வாழ்த்த பூக்கள் அவையினருக்கு வழங்கல்.

11.35 மணமகன் மணமகளுக்கு கூறைச் சேலை மற்றும் மங்கலப் பொருட்கள் அளித்தல். மணமகள் கூறைச்சேலை மாற்றுதல்.

11:40 சிறப்புரை

11.50 மணமகள் வருகை

11.55 தலைவர் எடுத்துக்; கொடுக்கும் மங்கலநாணை மணமகன் மணமகளுக்கு அணிதல்.

12.00 மாலை மாற்றல்

12.05 திருக்குறள் ஓதல்

12.10 தலைவர் மணமக்களை வாழ்க்கை உடன்பாட்டை அவையோர் முன் எடுக்குமாறு கேட்டல்.

மணமகன் இராச்குமார் உறுதியுரை

மணவிழாவை நடத்தி வைக்கும் மாண்புக்குரிய திரு. நக்கீரன் அய்யா அவர்களே! அவை நிறைந்த பெருமக்களே! இந்த மகிழ்ச்சியான நன்னாளில் சான்றோர் திருமுன்னே எனது வாழ்க்கை இணையை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளும் உறுதிமொழியை உவகையோடு உரைக்கிறேன்.

திருவாளர் குணரட்ணம் மற்றும் திருமதி யசோதா ஆகியோரின் மகன் ராச்குமார் ஆகிய நான் நிறை, ஓர்ப்பு, அறிவு, அடக்கம் என்கின்ற ஆடவர் அணிகுணம் நான்கினும் வழுவாது அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றி, பழியஞ்சிப் பாத்தூண் உண்டு, அன்பும் அறனும் பெருக்கி, பண்பும் பயனும் அதுவென அறிந்து, பிறன்மனை நோக்காப் பேராண்மை கொண்டு என் வாழ்க்கைத் துணை நலமாக வாய்க்கப்பெறும் திருவளர்செல்வி பிறேமினி அவர்களை என்றும் பிரியாது, ஒருபோதும் பிழையாது, பெண்ணும் ஆணும் சமநிறை என்னும் உண்மை வழியே உயர்வெனப் போற்றி, செம்புலப்பெயல்நீர் ஒன்றாதல் போல் கலந்து, இணைந்து, வாழ்ந்து இல்லறப் புகழினை உயர்த்துவேன் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சான்றாக உறுதி உரைக்கிறேன்.

மணமகள் பிறேமினி உறுதியுரை

மணவிழாவை நடாத்திவைக்கும் மாண்புக்குரிய திரு. நக்கீரன் அய்யா அவர்களே! அவை நிறைந்த பெருமக்களே! இந்த மகிழ்ச்சியான நன்னாளில் சான்றோர் திருமுன்னே எனது வாழ்க்கை இணையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் உறுதிமொழியை உவகையோடு உரைக்கிறேன்.

திருவாளர் குமாரகுலசிங்கம் மற்றும் திருமதி மேரி ஆகியோரின் மகள் பிறேமினி ஆகிய நான் பெண்மை நலங்கள் அணுவேனும் குறையாது, நிறைநலப் பெண்டிர் குணமுறை பேணி, சொல்லறங் குன்றாச் செம்மை பொருந்தி, வரவு அறிந்து, இல் காக்கும் திறனறிந்து, செயலாற்றி, விருந்தோம்பி வாழும் தமிழ்நெறி ஒழுகி, இன்பம் – துன்பம் இரண்டிலும்; என் இணையராகிய திருவளர்செல்வன் இராச்குமார் அவர்களுடன் இருந்து கலந்து ஒன்றெனப் பொருந்தி இனிய இல்லறப் பெருமை காப்பேன் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சான்றாக உறுதி உரைக்கிறேன்.

12.15 அவையினருக்கு திருமண இனிப்புக் கற்கண்டு வழங்கல்

12.20 மணமக்கள் பெற்றோரையும் தலைவரையும் வணங்கி வாழ்த்துப் பெறல்

12.25 வாழ்த்துரை – திரு. துரைராஜா

12.30 வாழ்த்துரை –திரு. பொன் பாலராஜன் (அவைத்தலைவர் நா.க.த.அரசு)

12.35 மணமக்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு பொற்கிழி அளித்தல்

12.40 தலைவரும் மற்றும் அவையோரும் மஞ்சள் அரிசியும் மலர்களும் தூவி மணமக்களை வாழ்த்துதல்

12.45 நன்றியுரை அல்லது மணமக்கள் வழங்கும் ஏற்புரை

திருநிறை செல்வன் செந்தில்குமார்
திருநிறை செல்வி பரணிகா

தமிழ்முறைத் திருமணம்

நிகழ்ச்சி நிரல் (தொகுப்பாளர் – திரு ஞானம் அன்ரனி)

10.00 மணமகன், தோழன் மற்றும் சுற்றத்தினர் சூழவருதல். நுழைவாசலில் மணமகள் வீட்டார் ஆராத்தி எடுத்தல். பெண்ணின் தந்தையார் இடைக்காடர் ஈசுவரன் மணமகனுக்கு மாலை அணிதல். பின்னர் மணமகன் தோழன் இருவரும் வந்து மண இருக்கையில் அமர்தல்.

10.15 மணமகள், தோழி மற்றும் சுற்றத்தினர் சூழ வருதல். மணமக்கள் தோழி இருவரும் வந்து மண இருக்கையில் அமர்தல்

10.20 மங்கல விளக்கு ஏற்றல்
1. திருமதி பாப்பா தேவ். திரு.வை.க.தேவ்.
2. திருமதி காந்திமதி கண்ணபிரான் திரு. க.கண்ணபிரான்
3. திருமதி மைதிலி துரை திரு. பானு துரை
4. திருமதி சுசீலாதேவி திரு. செல்வவேல்
5. திரு. யோகேசுவரன். திரு முத்துவேல்
6. திருமதி சுதா திரு. சிவநாதன்

10.25 தமிழ்த்தாய் வாழ்த்து

10.30 தலைவரை திருமணத்தை நடத்தி வைக்குமாறு வேண்டுதல்

10.35. வரவேற்புரை: திரு. தணி குமார் சேரன்

10.40 தலைமை உரை: திரு. நக்கீரன், தலைவர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

10.55 சிறப்புரை: சங்க கால திருமணம் – ஆசிரியர் சண்முகம் குகதாசன்

11.10 மணமகன், மணமகள் இருவரதும் பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் பூ சந்தனம் பழங்கள் கொண்ட தட்டுகளைப் கொடுத்துக் கொள்ளல்

11.15 பூக்கள், பழங்கள் மங்கலப் பொருட்கள் நிறைந்த தட்டில் மங்கல நாணை வைத்து அவையினர் வாழ்த்துக்காக மணமகன் வீட்டார் எடுத்துச் செல்லல். அத்தோடு மணமக்களை வாழ்த்தப் பூக்கள் அவையினருக்கு வழங்கல்

11.20 மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைச் சேலை மற்றும் மங்கலப் பொருட்கள் அளித்தல். மணமகள் கூறைச்சேலை மாற்றுதல்.

11.25 மணமகளை மணமகன் கையில் வைத்து மணமகளின் பெற்றோர் கொடுத்தல்

தலைவர் அவர்களே பெரியோர்களே தாய்மார்களே மணமகளின் பெற்றோர் ஆகிய திரு இடைக்காடர் ஈசுவரன் திருமதி. குகமலர்; ஆகிய நாங்கள் எங்களது அருமை மகள் பரணிகா அவர்களை மனமுவந்து உமக்கு இந்நன்நாளில் தருகின்றோம். நீவிர் இருவரும் என்றும் நிலைத்த அன்புடன் ஈருயிரும் ஓருடலும் போல் பல்லாண்டு பல்லாண்டு இனிது வாழ்வீர்களாக என நிறைந்த மனத்தோடு மலர் தூவி வாழ்த்துகிறோம்.

11.30 தலைவர் எடுத்துக்; கொடுக்கும் மங்கலநாணை மணமகன் மணமகளுக்கு அணிதல்.

11.35 மாலை மாற்றுதல் (மூன்றுமுறை)

11.40 திருக்குறள் ஓதல்

11.55 தலைவர் மணமக்களை வாழ்க்கை உடன்பாட்டை அவையோர் முன் எடுக்குமாறு கேட்டல்.

மணமகன் செந்தில்குமார் உறுதியுரை

மணவிழாவை நடத்தி வைக்கும் மாண்புக்குரிய திரு. நக்கீரன் அய்யா அவர்களே! அவை நிறைந்த பெருமக்களே! இந்த மகிழ்ச்சியான நன்னாளில் சான்றோர் திருமுன்னே எனது வாழ்க்கை .இணையை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளும் உறுதிமொழியை உவகையோடு உரைக்கிறேன்.

திருவாளர் தணிகுமார் சேரன் திருவாட்டி த. கலைச்செல்வி ஆகியோரின் மகன் செந்தில்குமார் ஆகிய நான் நிறை, ஓர்ப்பு, அறிவு, அடக்கம் என்கின்ற ஆடவர் அணிகுணம் நான்கினும் வழுவாது அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றி, பழியஞ்சிப் பாத்தூண் உண்டு, அன்பும் அறனும் பெருக்கி, பண்பும் பயனும் அதுவென அறிந்து, பிறன்மனை நோக்காப் பேராண்மை கொண்டு என் வாழ்க்கைத் துணை நலமாக வாய்க்கப்பெறும் திருவளர்செல்வி பரணிகா அவர்களை என்றும் பிரியாது, ஒருபோதும் பிழையாது, பெண்ணும் ஆணும் சமநிறை என்னும் உண்மை வழியே உயர்வெனப் போற்றி, செம்புலப்பெயல்நீர் ஒன்றாதல் போல் கலந்து, இணைந்து, வாழ்ந்து இல்லறப் புகழினை உயர்த்துவேன் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சான்றாக உறுதி உரைக்கிறேன்.

மணமகள் பரணிகா உறுதியுரை

மணவிழாவை நடாத்திவைக்கும் மாண்புக்குரிய திரு. நக்கீரன் அய்யா அவர்களே! அவை நிறைந்த பெருமக்களே! இந்த மகிழ்ச்சியான நன்னாளில் சான்றோர் திருமுன்னே எனது வாழ்க்கை இணையை முழுதுடன் ஏற்றுக் கொள்ளும் உறுதிமொழியை உவகையோடு உரைக்கிறேன்.

திருவாளர் இடைக்காடர் ஈசுவரன் திருவாட்டி குகமலர் ஆகியோரின் மகள் பரணிகா ஆகிய நான் பெண்மை நலங்கள் அணுவேனும் குறையாது, நிறைநலப் பெண்டிர் குணமுறை பேணி, சொல்லறங் குன்றாச் செம்மை பொருந்தி, வரவு அறிந்து, இல் காக்கும் திறனறிந்து, செயலாற்றி, விருந்தோம்பி வாழும் தமிழ்நெறி ஒழுகி, இன்பம் – துன்பம் இரண்டிலும்; என் இணையராகிய திருவளர்செல்வன் செந்தில்குமார் அவர்களுடன் இருந்து கலந்து ஒன்றெனப் பொருந்தி இனிய இல்லறப் பெருமை காப்பேன் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சான்றாக உறுதி உரைக்கிறேன்.

12.00 அவையினருக்கு திருமண இனிப்புக் கற்கண்டு வழங்கல்

12.05 மணமக்கள் பெற்றோரையும் தலைவரையும் வணங்கி வாழ்த்துப் பெறல்

12.10 வாழ்த்துரை:
1. திரு. வை.க.தேவ்
2. திருமதி ரேணுகா குமாரசாமி
3. திருமதி ராதா முருகேசன்

12.15 மணமக்கள் அனைத்துலக மருத்துவ நலவாழ்வு அமைப்புக்கு பொற்கிழி அளித்தல்

12.20 தலைவரும் மற்றும் அவையோரும் மஞ்சள் அரிசியும் மலர்களும் தூவி மணமக்களை வாழ்த்துதல்

12.25 நன்றியுரை: திரு இடைக்காடர் ஈசுவரன்

12.30 மதிய உணவு

PROGRAMME – Sendhil/Baranika
றுநுனுனுஐNபு – 23.11.2008இ 9.30 யுஆ-1.30 யுஆ)
யுவ நேற துயளஅiநெ டீயஙெரநவ ர்யடடஇ 90 ழேடயn ஊழரசவஇ ஆயசமாயஅ (துழாn ளுவ ரூ றுழழனடிiநெ யுஎந)

ழுசுனுநுசு ழுகு Pசுழுபுசுயுஆஆநு ரூ Nயுஆநுளு ழுகு ழுகுகுஐஊஐயுடுளு
9.30 யுஆ றுநடஉழஅந: ஆச. ரூ ஆசள. …………………….ஆச ரூ ஆசள. ஏயமநநளயn
9.45. ஆஊ: ஆச. புயெயெஅ யுவெழலெ
10.00 டீசனைநபசழழஅ நுவெநசள: ஆச. ஐனயமைமயனயச யஉஉழஅpயnநைன டில சநடயவiஎநள
புயசடயனெiபெ: ஆச.ளுநனொடை
ளுpசiமெடந றயவநச ரூ சுநஉநiஎந சுiபெ ‘வுhழணாயn ……………………………
‘யுயடயயவாi’ – ஆசள சுயனாய ஏயசயவாயn ரூ ஆசள ளுழடியயெ ஆரசயடந
10.10 டீசனைந நுவெநசள: ஆள டீயசnமைய யசசiஎநள யஉஉழஅpயnநைன டில சநடயவiஎநள

10.13 டுiபாவiபெ ழக ‘ஆயபெயடய ஏடையமமர’:

10.15 வுhயஅiணா வுhயயi ஏயயணாவார டில ஆள ………………………

10.20 றுநடஉழஅந ளிநநஉh: ஆச. ………………………. கயவாநச ழக வாந புசழழஅ

10.25 Pசநளனைநவெ’ள ளுpநநஉh: ஆச.ஏ. வுhயபெயஎநடர.

(வுhழணாi-தோழி – வழ சநஅழஎந எநடை டிநகழசந பiஎநயறயல)
10.30 புiஎiபெ யுறயல வாந டீசனைந: ஆச …………… யனெ ஆசள.
(ழுn டிநாயடக ழக டீசனைந’ள pயசநவெள: ஆச…………… ரூ ஆசள………
ஊசைஉரடயவiபெ ழக ‘ஆயபெயடய யேயn’ (வுhயயடi) கழச டிடநளளiபெ டில உழபெசநபயவழைn:
ஆச…………….. யனெ ஆசள.
யுவ வாந ளயஅந வiஅந னளைவசiடிரவந கடழறநச pநவயடள கழச டிடநளளiபெ: ஆள ………………….

10.35 ஆயசசயைபந ஏழறள: Pசநளனைநவெ ஆச.ஏ.வுhயபெயஎநடர: ஏழறள வயமநn டில டீசனைநபசழழஅ யனெ
டீசனைநஇ சநிநயவiபெ யகவநச வாந Pசநளனைநவெ. (புசழழஅ கசைளவ யனெ டீசனைந நெஒவ).

10.45 வுலiபெ ழக ‘ஆயபெயடய யேயn’: டீல டிசனைநபசழழஅ (டிழவா ளநயவநன )
னுது: ‘முநனனi அநடயஅ’ . புரநளவள: ளூழறநச கடழறநச pநவயடள ழn வாந உழரிடந.

10.50 புயசடயனெiபெ: ஊழரிடந ளவயனௌ ரிஇ டிசனைந ழn பசழழஅ’ள டநகவஇ யனெ நஒஉhயபெந வாநசை பயசடயனௌ.
பசழழஅ கசைளவஇ டிசனைந நெஒவ யனெ உழவெiரெந வழ ளவயனெ.
(யவ வாளை வiஅநஇ ளறநநவள யசந னளைவசiடிரவநன வழ யடட பரநளவள –ஆள ……..)

10.55 குநடiஉவையவழைn டில சநடயவiஎநள

சுநஉநiஎந டிடநளளiபௌ கசழஅ pயசநவெள ழக டிழவா வாந பசழழஅ யனெ டிசனைந.

11.10 +++ Pசநளநவெயவழைn ழக னுழயெவழைn வழ வு.சு.ழு’ள சநிசநளநவெயவiஎநஇ (ஆச………………………….)
டில ளுநனொடை யனெ டீயசயnமைய.
ஊழரிடந ளை ழெற ளநயவநன.
11.15 Pயசநவெள டீடநளள: வாந உழரிடந டில ளாழறநசiபெ கடழறநசள ஃலநடடழற சiஉந்
குயஅடைல டீடநளள: (அழவாநசஇ ளளைவநசஇ டிசழவாநசளஇ யரவெளஇ ரnஉடநள) டிடநளள வாந ஊழரிடநஇ
புரநளவள டீடநளள வாந உழரிடந

“யுயடயயவாi” வழ உழரிடந: ஆசள ளுயசழ சுயஅயடiபெயஅ ரூ ஆசள.ஆயாiவொini ஆயாயவாநஎயn.
நுனெ ழக றநனனiபெ உநசநஅழலெ.
(ஊழரிடந சநவசைநள கழச னசநளள உhயபெந)

சுநுபுஐளுவுசுயுவுஐழுN ழுகு ஆயுசுசுஐயுபுநு ஃ ஊயுமுநு ஊருவுவுஐNபு

12.00 ஊழரிடந சந-நவெநசள வழபநவாநச

12..05 சுநபளைவசயவழைn ழக ஊiஎடை ஆயசசயைபந: ழுககiஉயைவெ – ஆச. துiஅ ஆரசிhல:
ஏழறள வயமநn டில உழரிடந் நஒஉhயபெந ழக சiபௌ.

றுவைநௌளநள: ஆச.ஏயடடipரசயஅ ஊhநடடiயா யனெ ஆச. ஆ முரஅயசயஉhயனெசயnஇ

12.25 ஊயமந உரவவiபெ வயமநள pடயஉந.

12.30 ளுpநநஉhநள டில சநடயவiஎநள ஃ கசநைனௌ
(1) ஆச.N.ளுயளiனெசயnஇ டீசழவாநச (2) ஆள. யுடனய யுடஎநளஇ ளுளைவநச (3) ஆச.N.துயலநனெசயnஇ டீசழவாநச
(4) Pசழக.ஊhநடடiயா ளுசளைமயனெயசயதயாஇ ஊழரளin.

12.45 வுhயமெ ழககiஉயைடள ஃ பரநளவள: ஊழரிடந றுதைநனெசயn ரூ ளூநடடநல

12.50 ளூழசவ ளடனைந pசநளநவெயவழைn – 10 அiரெவநள.

13.00 டுரnஉh: டுநன டில உழரிடந ஆச. றுதைநனெசயn ரூ ஆசள. ளூநடடநல யேஅயளiஎயலயஅ

13.40 Phழவழ ஃ எனைநழ ளநளளழைn ழக பரநளவள.

14.15 நுNனு

திரு. தணிசேரன்

1) கீழே நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. திருத்தம் இருந்தால் தாரளமாகச் செய்யவும். உங்களது பெயர்கள், பெற்றோர் பெயர்களை உடன் அறியத்தரவும்.

2) கீழே தந்துள்ள திருக்குறளைப் படித்துப் பழகிக் கொள்ளவும்.

4) மேடையில் போடியம் வைக்கவும்.

5) திருக்குறளை ஓதும் போது தலைவர், மணமக்கள் ; கையில் தனித்தனி ஒலிபெருக்கிகள் இருக்க வேண்டும்.

6) நாதசுவர இசை வைக்கவும். திரைப்படப் பாடல்களை திருமணம் முடிந்த பின்னர் ஒலிபரப்பவும். தமிழிசைப் பாடல்களை நான் கொண்டு வருவேன்.

7) திருமணத்தின் போது சின்னப் பிள்ளைகள் அரங்கில் ஓடி ஆடி சத்தம் போடுவுதை தவிர்க்க வேண்டும்.

8) திருமணத்தை தொகுத்து வழங்க ஒருவரை ஒழுங்கு செய்யவும். தமிழ்மொழி வாழ்த்துப்பாட ஒழுங்கு செய்யவும்.

9) பாமினி எழுத்துரு இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

திருநிறைசெல்வன் செந்தில்குமார்
திருநிறைசெல்வி பரணிகா

தமிழ்முறைத் திருமணம்

நிகழ்ச்சி நிரல்

10.00 மணமகன், தோழன் மற்றும் சுற்றத்தினர் சூழவருதல். நுழைவாசலில் மணமகள் வீட்டார் ஆராத்தி எடுத்தல். பெண்ணின் தந்தையார் இடைக்காடர் ஈசுவரன் மணமகனுக்கு மாலை அணிதல். பின்னர் மணமகன் தோழன் இருவரும் வந்து மண இருக்கையில் அமர்தல்

10.15 மணமகள், தோழி மற்றும் சுற்றத்தினர் சூழ வருதல். மணமக்கள் தோழி இருவரும் வந்து மண இருக்கையில் அமர்தல்

10.20 மங்கல விளக்கு ஏற்றல்
7. திருமதி பாப்பா தேவ். திரு.வை.க.தேவ்.
8. திருமதி காந்திமதி கண்ணபிரான் திரு. க.கண்ணபிரான்
9. திருமதி மைதிலி துரை திரு. பானு துரை
10. திருமதி சுசீலாதேவி திரு. செல்வவேல்
11. திரு. யோகேசுவரன். திரு முத்துவேல்
12. திருமதி சுதா திரு. சிவநாதன்

10.25 தமிழ்த்தாய் வாழ்த்து

10.30 தலைவரை திருமணத்தை நடத்தி வைக்குமாறு வேண்டுதல்

10.35. வரவேற்புரை: திரு. தணி குமார் சேரன்

10.40 தலைமை உரை: திரு. நக்கீரன், தலைவர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

10.55 சிறப்புரை: சங்க கால திருமணம் – ஆசிரியர் சண்முகம் குகதாசன்

11.10 மணமகன், மணமகள் இருவரதும் பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் பூ சந்தனம் பழங்கள் கொண்ட தட்டுகளைப் கொடுத்துக் கொள்ளல்

11.15 பூக்கள், பழங்கள் மங்கலப் பொருட்கள் நிறைந்த தட்டில் மங்கல நாணை வைத்து அவையினர் வாழ்த்துக்காக மணமகன் வீட்டார் எடுத்துச் செல்லல். அத்தோடு மணமக்களை வாழ்த்தப் பூக்கள் அவையினருக்கு வழங்கல்

11.20 மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைச் சேலை மற்றும் மங்கலப் பொருட்கள் அளித்தல். மணமகள் கூறைச்சேலை மாற்றுதல்.

11.25 மணமகளை மணமகன் கையில் வைத்து மணமகளின் பெற்றோர் கொடுத்தல்

தலைவர் அவர்களே பெரியோர்களே தாய்மார்களே மணமகளின் பெற்றோர் ஆகிய திரு இடைக்காடர் ஈசுவரன் திருமதி. குகமலர்; ஆகிய நாங்கள் எங்களது அருமை மகள் பரணிகா அவர்களை மனமுவந்து உமக்கு இந்நன்நாளில் தருகின்றோம். நீவிர் இருவரும் என்றும் நிலைத்த அன்புடன் ஈருயிரும் ஓருடலும் போல் பல்லாண்டு பல்லாண்டு இனிது வாழ்வீர்களாக என நிறைந்த மனத்தோடு மலர் தூவி வாழ்த்துகிறோம்.

11.30 தலைவர் எடுத்துக்; கொடுக்கும் மங்கலநாணை மணமகன் மணமகளுக்கு அணிதல்.

11.35 மாலை மாற்றுதல் (மூன்றுமுறை)

11.40 திருக்குறள் ஓதல்

11.55 தலைவர் மணமக்களை வாழ்க்கை உடன்பாட்டை அவையோர் முன் எடுக்குமாறு கேட்டல்.

மணமகன் செந்தில்குமார் உறுதியுரை

மணவிழாவை நடத்தி வைக்கும் மாண்புக்குரிய திரு. நக்கீரன் அய்யா அவர்களே! அவை நிறைந்த பெருமக்களே! இந்த மகிழ்ச்சியான நன்னாளில் சான்றோர் திருமுன்னே எனது வாழ்க்கை .இணையை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளும் உறுதிமொழியை உவகையோடு உரைக்கிறேன்.

திருவாளர் தணிகுமார் சேரன் திருவாட்டி த. கலைச்செல்வி ஆகியோரின் மகன் செந்தில்குமார் ஆகிய நான் நிறை, ஓர்ப்பு, அறிவு, அடக்கம் என்கின்ற ஆடவர் அணிகுணம் நான்கினும் வழுவாது அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றி, பழியஞ்சிப் பாத்தூண் உண்டு, அன்பும் அறனும் பெருக்கி, பண்பும் பயனும் அதுவென அறிந்து, பிறன்மனை நோக்காப் பேராண்மை கொண்டு என் வாழ்க்கைத் துணை நலமாக வாய்க்கப்பெறும் திருவளர்செல்வி பரணிகா அவர்களை என்றும் பிரியாது, ஒருபோதும் பிழையாது, பெண்ணும் ஆணும் சமநிறை என்னும் உண்மை வழியே உயர்வெனப் போற்றி, செம்புலப்பெயல்நீர் ஒன்றாதல் போல் கலந்து, இணைந்து, வாழ்ந்து இல்லறப் புகழினை உயர்த்துவேன் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சான்றாக உறுதி உரைக்கிறேன்.

மணமகள் பரணிகா உறுதியுரை

மணவிழாவை நடாத்திவைக்கும் மாண்புக்குரிய திரு. நக்கீரன் அய்யா அவர்களே! அவை நிறைந்த பெருமக்களே! இந்த மகிழ்ச்சியான நன்னாளில் சான்றோர் திருமுன்னே எனது வாழ்க்கை இணையை முழுதுடன் ஏற்றுக் கொள்ளும் உறுதிமொழியை உவகையோடு உரைக்கிறேன்.

திருவாளர் இடைக்காடர் ஈசுவரன் திருவாட்டி குகமலர் ஆகியோரின் மகள் பரணிகா ஆகிய நான் பெண்மை நலங்கள் அணுவேனும் குறையாது, நிறைநலப் பெண்டிர் குணமுறை பேணி, சொல்லறங் குன்றாச் செம்மை பொருந்தி, வரவு அறிந்து, இல் காக்கும் திறனறிந்து, செயலாற்றி, விருந்தோம்பி வாழும் தமிழ்நெறி ஒழுகி, இன்பம் – துன்பம் இரண்டிலும்; என் இணையராகிய திருவளர்செல்வன் செந்தில்குமார் அவர்களுடன் இருந்து கலந்து ஒன்றெனப் பொருந்தி இனிய இல்லறப் பெருமை காப்பேன் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சான்றாக உறுதி உரைக்கிறேன்.

12.00 அவையினருக்கு திருமண இனிப்புக் கற்கண்டு வழங்கல்

12.05 மணமக்கள் பெற்றோரையும் தலைவரையும் வணங்கி வாழ்த்துப் பெறல்

12.10 வாழ்த்துரை:
1. திரு. வை.க.தேவ்
2. திருமதி ரேணுகா குமாரசாமி
3. திருமதி ராதா முருகேசன்

12.15 மணமக்கள் அனைத்துலக மருத்துவ நலவாழ்வு அமைப்புக்கு பொற்கிழி அளித்தல்

12.20 தலைவரும் மற்றும் அவையோரும் மஞ்சள் அரிசியும் மலர்களும் தூவி மணமக்களை வாழ்த்துதல்

12.25 நன்றியுரை: திரு இடைக்காடர் ஈசுவரன்

12.30 மதிய உணவு

12.50 திருமணப்பதிவு

________________________________________

(Revised – 22.01.2007)
January  27, 2007

தமிழ் முறைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்

அக்கினி சாட்சி இல்லாது
அம்மி மிதிக்காது
அருந்ததி பார்க்காது
தீவலம் வராது
வடமொழிக் கூச்சல் இல்லாது
தெட்சணை இல்லாது
செந்தமிழில் திருக்குறள் ஓதி
தமிழ்முறைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!

திருக்கோயில் வழிபாட்டில் தமிழ்
உறவுமுறையில் தமிழ்
பெயரில் தூயதமிழ்
எங்கும் எதிலும் தமிழ்!

தமிழ் எங்கள் உயிர் என்பதாலே – வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கிப் புவி மேலே!

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

தொடர்பு – 416 281 1165, 416 261 9099, 416 335 9462

செந்தமிழர் திருமணங்கள் பைந்தமிழில் செய்தல் வேண்டும்!

சாமி கோபித்துக் கொள்வார் என்ற பயம் வேண்டாம்!

வியேந்திரன் – செல்லி திருமணவிழாவில் நக்கீரன் வேண்டுகோள்

இன்று திருநிறைச்செல்வன் வியேந்திரன் – திருநிறைச் செல்வி செல்லி இருவரும்; தமிழ்முறைத் திருமணத்தில் இணையும விழாவுக்கு தலைமை தாங்கி நடத்தி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அய்யர் இல்லாமல், தீவலம் இல்லாமல், அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல் எல்லாவற்றுக்கும் மேலாக யாருக்கும் புரியாத வடமொழி கூச்சல் இல்லாமல் திருக்குறள் ஓதி, மாலை மாற்றி, மங்கல நாண் அணிவித்து இல்லறம் என்னும் நல்லறத்தில் மணமக்கள் இணைகிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எமது முன்னோர் பகுத்தறிவுக்கு ஒத்தவாறு அய்யர் இல்லாமல் அருந்ததி பார்க்காமல் எளியமுறையில் திருமணம் செய்து கொண்டார்கள். அவ்வாறான திருமணத்தை திருமணமாகிக் குழந்தைகளைப் பெற்றெடுத்த முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் கலந்து நன் நீராட்டி, தூய ஆடைகளையும் அணிகளையும் அணிவித்து ‘உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் “கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!” என்று வாழ்த்தினார்கள்.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்திருந்த உறவினர் ‘இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்’ என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் சென்றாள். அது போன்ற திருமணம் இதுவாகும்” என திரு. நக்கீரன், தலைவர் படைப்பாளிகள் கழகம், தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில் “இந்தத் தமிழ்முறைத் திருமணம் திரு. நமசிவாயம் இல்லத்தில் நடைபெறும் இரண்டாவது திருமணமாகும். சென்ற ஆண்டு அவரது மருமகன் சுகந்தன் – றோமலீனா திருமணமும் – அவர்கள் இந்த அவையில் இருக்கிறார்கள் – தமிழ்முறைப்படி செய்து கொண்டார்கள். துணிந்து தமிழ்முறைத் திருமணங்களை நடத்தும் திரு நமசிவாயம் திருமதி நமசிவாயம் இருவரது தமிழ்ப்பற்றுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியான தமிழ்முறைத் திருமணங்களைச் செய்து கொண்டால் சாமி கோபித்துக் கொள்வார் என யாரும் பயப்படத் தேவையில்லை. 45 ஆண்டுகளுக்கு முன்னர் நானே 2 மாலை, 10 திருக்குறள், 4 பேச்சாளர்களோடு திருமணம் செய்து கொணடேன். ஒப்பீட்டளவில் எனது குடும்பம் ஓகோ என்று வாழுதோ இல்லையோ நிச்சயம் ஆகா என்று சொல்லும்படி வாழ்கிறது. எனவே தமிழர்கள் எந்த மனத் தடங்கலோ அச்சமோ இல்லாமல் இப்படியான தமிழ்முறைத் திருமணங்களை செய்திட முன்வர வேண்டுமென்று எல்லோரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு திருமண விழா தொடங்கியது. பாடலை செல்வி நிவேதா இராமலிங்கம் மற்றும் செல்வி சாந்தி சுப்பிரமணியம் இருவரும் இனிய குரலில் இசைத்தார்கள்.

திரு. கந்தையா நமசிவாயம் வரவேற்புரை நிகழ்த்தினார். “தமிழர்கள் வீட்டுத் திருமணங்களை எமது தாய்மொழியில் நடத்துவதே பொருத்தமானது. எமது மொழிக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாமே நமது தாயை அவமானப்படுத்துவது போலாகிவிடும்” என்றார்.

பெற்றோர்கள் சார்பாக மணப்பெண்ணை மணமகனிடம் திரு திருமதி கே. சிறீதரன் கையளித்தார்கள்.

திருமண உறுதிமொழியை திரு. நக்கீரன் வாசித்துச் சொல்ல மணமகன் – மணமக்கள் அதனைத் திருப்பிச் சொல்லி நிறைவு செய்தார்கள்.

அதனைத் தொடர்ந்து மணமகன் மங்கல நாணை மணமகள் கழுத்தில் அணிவித்தார். அவையோர் மணமக்களை பூத்தூவி வாழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து முனைவர் சிறி பவன் சிறிஸ்கந்தராசா திருக்குறள் பாடல்களை ஓத மணமக்கள் அவற்றைத் திருப்பி ஓதினார்கள். ஓதி முடிந்ததும் மாலை மாற்றிக் கொண்டார்கள்.

மணமகனும் மணமகளும் பெற்றோர்களை வணங்கி அவர்களது வாழ்த்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

இதனை அடுத்து மணமக்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு பொற்கிழி அளித்தனர். அதனைக் கழகம் சார்பாக துணைத் தலைவர் திரு. வரதராசா பெற்றுக் கொண்டார்.

ஈற்றில் மணமக்கள் நன்றியுரை கூறினார்கள்.

திருமணப் பதிவை திரு. ஜிம் மேர்பி (துiஅ ஆரசிhல) நல்லமுறையில் நடத்தி வைத்தார்.

மணமக்களின் குணநலங்களைப் பற்றி மணமகனின் உடன்பிறப்பு செல்வன் சசீந்திரனும், மணமகளின் உடன்பிறப்பு செல்வி அல்டா அல்வேசும் (ஆள யுடனய யுடஎநள) நகைச்சுவையோடு எடுத்துரைத்தார்கள்.

நேற துயளஅin விருந்து மண்டபத்தில் மிகச் சிறப்போடும் சீரோடும் நடந்து முடிந்த மணவிழா நிகழ்ச்சியை திரு.ஞானம் அன்ரனி இரு மொழியிலும் நயத்தோடு தொகுத்து வழங்கினார்.

சாமி கோபித்துக் கொள்வார் என்ற பயம் வேண்டாம்!

தமிழில் உங்கள் திருமண விழாக்களை நடத்துங்கள்!

செழியன் – சிவலக்சுமி திருமணவிழாவில் நக்கீரன் வேண்டுகோள்

இன்று திருநிறைச்செல்வன் செழியன் திருநிறைச் செல்வி சிவலக்சுமி இருவரும் செய்து கொள்ளும் தமிழ்முறைத் திருமணத்துக்கு தலைமை தாங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அய்யர் இல்லாமல் தீவலம் இல்லாமல், அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல் வடமொழி கூச்சல் இல்லாமல் திருக்குறள் ஓதி மாலை மாற்றி திருமணத்தில் இவர்கள் இணைகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எமது முன்னோர் பகுத்தறிவுக்கு ஒத்தவாறு அய்யர் இல்லாமல் அருந்ததி பார்க்காமல் எளியமுறையில் திருமணம் செய்து கொண்டார்கள். அது போன்ற திருமணம் இதுவாகும்” இவ்வாறு திரு. நக்கீரன், தலைவர் படைப்பாளிகள் கழகம், செழியன் – சிவலக்சுமி திருமணவிழாவில் நிகழ்த்திய தலைமையுரையில் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில் “இப்படியான தமிழ்முறைத் திருமணங்களைச் செய்தால் சாமி கோபித்துக் கொள்வார் என யாரும் பயப்படத் தேவையில்லை. 44 ஆண்டுகளுக்கு முன்னர் நானே 2 மாலை, 10 திருக்குறள், 4 பேச்சாளர்களோடு திருமணம் செய்து கொணடேன். ஒப்பீட்டளவில் எனது குடும்பம் ஓகோ என்று வாழாவிட்டாலும் பேரளவு நன்றாகவே வாழ்கிறது. எனவே தமிழர்கள் எந்த மனத் தடங்கலோ அச்சமோ இல்லாமல் இப்படியான தமிழ்முறைத் திருமணங்களை செய்திட முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

மனோன்மணியம் சுந்தரனாரின “நீர் ஆரும் கடல் உடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்….” என்ற தமிழ்த் தாய் வணக்கத்தோடு திருமண விழா தொடங்கியது. வணக்கப் பாடலை திரு. க. செயராசா ஓசை நயத்தோடு பாடினார். திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் அ. சேனாதிராசா வரவேற்றுப் பேசினார்.

தலைமையுரையை அடுத்து மணமக்கள் அன்பளிப்பை மாற்றிக் கொண்டார்கள். மணமகள் உடைமாற்றி மணமேடைக்கு மீண்டும் வந்த பின்னர் திரு. சண்முகம் குகதாசன் சிறப்புரை ஆற்றினார்.

“தமிழர்களுடைய திருமணமுறையை விளக்கும் பாடல்கள் இரண்டு அகநானூற்றில் காணப்படுகின்றன. பிரிந்து வந்த தலைமகனைத் தோழி வாயிலில் வழி மறித்த போது பண்டு நிகழ்ந்த தனது திருமணநாள் நிகழ்ச்சியை தலைவன் தோழிக்கு எடுத்துச் சொல்கிறான்.

‘ புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் ‘உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் “கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!” என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் ‘இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்’ என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். “ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு’ என வினாவினேன். அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினையுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினையுடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்” என்று தோழியிடம் கூறினான்.

அவர் மேலும் பேசுகையில் “என்னுடைய பாட்டனார் ஒரு அய்யர். அவரிடம் நான் கேட்டேன். தமிழர் திருமணங்களை நீங்கள் ஏன் தமிழில் நடத்தக் கூடாது?” அதற்கு அவர் சொன்ன பதில் “எனது பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு விடாதே!”

தலைவர் திருக்குறள் பாடல்களை ஓத மணமக்கள் அவற்றைத் திருப்பி ஓதினார்கள். ஓதி முடிந்ததும் மாலை மாற்றிக் கொண்டார்கள். அப்போது அவையோர் பூச் சொரிந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதனை அடுத்து திரு. திருமுருகவேந்தன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசியதாவது-

நாவலர் சோமசுந்தர பாரதியாரைப்பற்றி சிலராவது கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் ஒரு வைதீகத் திருமணத்திற்குச் சென்று முன்பகுதியிலே அமர்ந்திருந்தார். அவர் ஒரு பன்மொழிப் புலவர். அவர் தமிழிலே எவ்வளவு புலமைப் பெற்றவரோ அதுபோல சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர்.

அந்த மணவிழாவை நடத்திய இளம் அய்யர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொல்லுகிற மந்திரத்தைக் கேட்டவுடன் கோபம் கொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார் மணமேடைக்குச் சென்று அந்த அய்யரை ஓங்கி கன்னத்தில் ஒரு அறை அறைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் எல்லாம் ஓடி இவரைப் பிடித்து “என்ன இவ்வளவு அநாகரீகமாக நடந்துகொண்டீர்களே” என்று கேட்டார்கள்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் எல்லோரையும் அமைதிப் படுத்திவிட்டுக் கேட்டார் “ உங்களுக்கு யாருக்காவது சமஸ்கிருதம் தெரியுமா?” “தெரியாது” என்று சொன்னார்கள்.

அய்யரைப் பார்த்து “நீ சொன்ன மந்திரத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?” என்று கேட்டார். அந்த அய்யர் “எனக்குத் தெரியாது என்று சொன்னார்.” “நீ கருமாதி மந்திரத்தை கலியாணத்தில் சொல்கிறாய் அதனால்தான் அடித்தேன்” என்றார்.

தமிழர்கள் தங்கள் தாய்மொழியில் திருமணங்களைச் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படியான அவமானங்களை அனுபவிக்க நேரிடும்.

இதனை அடுத்து மணமக்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு பொற்கிளி அளித்தனர். அதனை கழகம் சார்பாக திரு. ஸ்ரனிலோஸ் சோமசுந்தரம் பெற்றுக் கொண்டார்.

ஈற்றில் மணமகனின் தந்தை திரு. சுப்பிரமணியம் கதிரேசு நன்றியுரை கூறினார். அப்போது தான் 36 ஆண்டுகளுக்கு முன்னர் அய்யர் இல்லாமல் சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட போது மங்கல நாணை எடுத்துத்தர ஒப்புக்கொண்டவர் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட அவையில் இருந்த இன்னொரு பெரியார் எடுத்துத் தர மங்கல நாணை மனைவி கழுத்தில் கட்டியதை நினைவு படுத்திக்கொண்டார். அழைப்பை ஏற்று திருமணத்துக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் தனது சார்பாகவும் மணமக்கள் சாபாகவும் நன்றி கூறினார்.

திருமணப் பதிவை பவானி தர்மகுலசிங்கம் நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சிகளை திரு.ஞானம் அன்ரனி நல்ல தமிழில் தொகுத்து வழங்கினார்.

திருநிறைச்செல்வன் செழியன் – திருநிறைச்செல்வி சிவலக்சுமி (மீரா)

தமிழ்முறைத் திருமண விழா

நிகழ்ச்சி நிரல்

* மணமகன் திருமண மேடைக்கு வந்து இருக்கையில் அமர்தல்

* மணமகள் திருமண மேடைக்கு வந்து இருக்கையில் அமர்தல்

* மனோன்மணியம் தமிழ்த் தாய் வணக்கம் – திரு. க. செயராசா

* தலைவர் மேடைக்கு அழைத்து வரப்படுதல்

* வரவேற்புரை – திரு. அ. சேனாதிராசா

* தலைமையுரை – திரு. நக்கீரன் (தலைவர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்)

* மணமக்கள் பரிசு பரிமாறல்

* சிற்றுண்டி

* மணமகள் கூறை மாற்றி உடுத்தி வருதல்

* சிறப்புரை – திரு. சண்முகம் குகதாசன் (ஆசிரியர்)

* திருக்குறள் ஓதல்

* மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளல்

* வாழ்த்துரை – திரு. திருமுருகவேந்தன் (ஆசிரியர் முழக்கம்)

* தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு மணமக்கள் நிதி அன்பளிப்பு

* நன்றியுரை – திரு. சுப்பிரமணியம் கதிரேசு

* விருந்து

* திருமணப் பதிவு

About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply