இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி? இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும் – பகுதி 3

இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி? இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும் – பகுதி 3

 

9 மே 2019

(இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட – கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் 3வது பகுதி இது. )

நாட்டின் தலைநகரான கொழும்புவிலிருந்து சுமார் 330 கி.மீ. தூரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கிறது காத்தான்குடி. சுமார் 2.56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் இந்த நகரம் தெற்காசியப் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்று. காத்தான்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்து மொத்தமாக சுமார் 66 ஆயிரம் இஸ்லாமியர்கள் இங்கு வசிக்கிறார்கள்.

இலங்கைத் தீவின் எல்லா நகரங்களிலும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களின் கடைகளையோ, வர்த்தக நிறுவனங்களையோ பார்க்க முடியும். “காக்காய் இல்லாத இடமும் இல்லை; காத்தான்குடிக்காரர்கள் இல்லாத ஊரும் இல்லை” என்ற பழமொழியே இந்தப் பகுதியில் உண்டு. அந்த அளவுக்கு இந்த நகரம் கடுமையான உழைப்பாளிகளும் வர்த்தகர்களும் நிறைந்த நகரம்.

இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி?ளுடன் 50க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இங்கு இருக்கின்றன. ஷரீயத் சட்டங்களைப் போதிக்கும் சுமார் 10 மதரசாக்களும் இங்கே இயங்கிவருகின்றன. சஹ்ரான் இயங்கிவந்த பிரதேசம் என்பதால் இப்போது சர்வதேச கவனத்திற்கு உள்ளாகியிருக்கும் காத்தான்குடி, உண்மையில் அடிப்படைவாத இஸ்லாத்திற்குப் பெயர்போன நகரமல்ல.

துவக்கத்தில் தப்லீக் ஜமாத்தும் தரிக்காஸ்-உம் இந்தப் பகுதியில் செல்வாக்கு செலுத்திவந்தன. நடை, உடை, தனிப்பட்ட பழக்க வழக்கங்களில் சுன்னி இஸ்லாத்தை வலியுறுத்தும் தப்லீக் ஜமாத், இந்தியப் பின்னணியைக் கொண்டது. சூஃபி பாணியிலான இஸ்லாத்தை வலியுறுத்தும் தாரிகாஸ், மத்திய கிழக்கில் உருவானது.

1970களின் பிற்பகுதியில் மௌலவி அப்துல் ரவூஃப் என்பவர் இஸ்லாம் குறித்த மாறுபட்ட ஒரு பிரசங்கத்தைத் துவங்கினார். அதாவது ‘அல்லாவும் இறைதூதர் முஹம்மது நபியும் ஒருவரே; கடவுளுக்கு உருவம் உண்டு’ என்பது இவரது பிரசாரத்தின் அடிப்படையாக இருந்தது. இதற்குக் காத்தான்குடி இஸ்லாமியர்களிடம் கடும் எதிர்ப்பு இருந்தாலும், அவர் தனது பிரசாரத்தைத் தொடர்ந்துவந்தார்.

இலங்கை வட – கிழக்கு இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்

இலங்கை இனப்போர்: இஸ்லாமியர்கள் யார் பக்கம்?

“அந்த காலகட்டத்தில் இருந்த மௌலவிகள், அப்துல் ரவூஃபின் கருத்தை வாதம் செய்து மறுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர்கள் செய்யவில்லை. அவரது கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, திருக்குரானை மேற்கோள்காட்டி அவருக்கு எதிரான வாதங்களை யாரும் முன்வைக்கவில்லை” என நினைவுகூர்கிறார் மூத்த பத்திரிகையாளர் புவி. ரஹ்மத்துல்லா.

இலங்கையில் ஏற்கனவே அப்துல் ஹமீத் பக்ரி போன்றவர்கள், அன்ஸாருஸ் ஸுன்னா முஹம்மதியா என்ற இயக்கத்தை ஆரம்பித்து ஏகத்துவத்தை வலியுறுத்தும் ‘தவுஹீத்தை’ பிரசாரம் செய்துவந்திருந்தனர். இருந்தபோதும் அப்துல் ரவூஃபின் சூஃபி இஸ்லாமை வலியுறுத்தும் பிரசாரமே, அதற்கு எதிரான தவ்ஹீத் அமைப்புகளுக்கு செல்வாக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதுமட்டுமல்ல, இலங்கையில் நடந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல சம்பவங்கள் தவ்ஹீத் அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவின. 1970களின் பிற்பகுதியில் இலங்கையில் தாராளவாத பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. அதே காலகட்டத்தில் இலங்கையிலிருந்து – குறிப்பாக கிழக்கு மாகாணத்திலிருந்து – மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெருமளவில் ஆட்கள் வேலைக்குச் சென்றனர். அதனால் மத்திய கிழக்கின் பணமும் கூடவே அங்கு செல்வாக்குச் செலுத்திய வஹாபிய தூய்மைவாத இஸ்லாமும் இலங்கையை வந்தடைந்தன. கிழக்கில், குறிப்பாக காத்தான்குடி, மருதமுனை பகுதிகளில் இந்தக் கருத்துகளுக்கான செல்வாக்கும் மெல்ல மெல்ல உருவானது.

“இந்த மாற்றங்கள் ஏதோ ஒரு சில ஆண்டுகளில் நடந்துவிடவில்லை. 30-35 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது. முதலில் மத சீர்திருத்தம் என்றுதான் துவங்கியது. பிறகு, படிப்பு, உடை, பழக்கவழக்கம் எல்லாம் இந்தப் பகுதியில் மாற ஆரம்பித்தது” என நினைவுகூர்கிறார் காத்தான்குடி நகரசபையின் உறுப்பினரான அப்துல் லதீப் முஹம்மது சபீல்.

இலங்கை குண்டுவெடிப்பால் சந்தேகங்களை எதிர்கொள்ளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் – யார் இவர்கள்?

முதலில் பள்ளிக்கூடங்களில் பெண்கள் நடனமாடக்கூடாது என்றுதான் கட்டுப்பாடுகள் துவங்கின என்கிறார் அவர். பிறகு, மெல்லமெல்ல சினிமாவைத் தவிர்க்கும்படி வலியுறுத்தப்பட்டது. 1980களின் மத்தியப் பகுதிவரை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் கோலோச்சிய திரையரங்குகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தன. தற்போது இந்த மாவட்டங்களில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை ஒட்டிய இடங்களில் மட்டும் சில திரையரங்குகள் தென்படுகின்றன.

90களின் இறுதியிலும் 2000த்தின் துவக்கத்திலும் காத்தான்குடி, மருதமுனை பகுதிகளில் தவ்ஹீத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு வளர ஆரம்பித்தது.

இலங்கை இஸ்லாமியர்கள்:சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2001வாக்கில் காத்தான்குடியில் உள்ள ஜமியத்துல் ஃபலா அரபிக் கல்லூரியில் சஹ்ரான் காசிமி என்ற அந்த 15 வயதுச் சிறுவன் அரபு மொழி, இஸ்லாமியச் சட்டங்கள், ஹதீதுகளைப் படிப்பதற்காகச் சேர்ந்தான். ஏழு ஆண்டுகள் இங்கே படித்து பட்டம்பெற வேண்டிய நிலையில், நான்காவது ஆண்டிலேயே அங்கிருந்த மௌலவிகளின் கருத்துகளுடன் வெளிப்படையாகவே முரண்பட்டார் சஹ்ரான்.

“தலையில் தொப்பி அணியக்கூடாது, ரம்ஜானின்போது 20 முறை வணங்கக்கூடாது; எட்டு முறைதான் வணங்க வேண்டும் என்றெல்லாம் சஹ்ரான் கூற ஆரம்பித்தார். இதனால், நான்கு ஆண்டுகளிலேயே அவர் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார். அவருடைய தந்தை சென்று சண்டையிட்டாலும் எந்தப் பயனும் இல்லை. பிறகு, குருநாகலில் உள்ள இபின் மசூத் மதரஸாவில் மீதமுள்ள படிப்பை முடித்தார் சஹ்ரான்” என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

2008வாக்கில் படிப்பை முடித்துவிட்டுவந்த சஹ்ரான், தன் பாணி இஸ்லாத்தை போதிக்க ஆரம்பித்தார். அப்துல் ரவூஃபின் கருத்துக்களைக் கடுமையாகச் சாடினார். தன்னை இஸ்லாத்தை சீர்திருத்த வந்தவராக சொல்லிக்கொண்டார். தாருல் – அதர் என்ற அமைப்பில் இருந்தபடி இந்தச் செயல்பாடுகளில் சஹ்ரான் ஈடுபட்டுவந்தார். மதம் மட்டுமின்றி, சமூகப் பிரச்சனைகள் தொடர்பான கூட்டங்களையும் இந்த அமைப்பு நடத்திவந்தது. ஆனால், விரைவிலேயே சஹ்ரானின் தீவிர தூய்மைவாதக் கருத்துகள் தாருல் – அதர் அமைப்பிற்குள்ளும் சிக்கலை ஏற்படுத்த அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

அதற்குப் பிறகு, இஸ்லாமிக் சென்டர் என்ற பெயரில் தனியாக ஒரு பள்ளிவாசலை உருவாக்கினார். 2012ல் தேசிய தவ்ஹீத் ஜமாத் உருவாக்கப்பட்டது. சஹ்ரானும் தன் போதனைகளைத் தீவிரப்படுத்தியபடியே இருந்தார். காத்தான்குடி இஸ்லாமியர்கள், சஹ்ரானை கவனிக்க ஆரம்பித்திருந்தார்கள். சஹ்ரானின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். அவரைப் பொறுத்தவரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது, மார்ச் 16, 2017வரை.

(தொடரும்)


இலங்கை இஸ்லாமியர்கள்: அமைதியை நோக்கி செல்லும் புதிய பயணம் – பகுதி 4

 

10 மே 2019

(இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட – கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் நான்காவது மற்றும் இறுதிப் பகுதி இது. )

2017 மார்ச் பத்தாம் தேதி. காத்தான்குடியின் அலியார் சந்திப்பில் உள்ள அப்துல் ரவூஃபின் பதுரியா ஜும்மா மசூதி. ‘கடவுளுக்கு உருவமுண்டு’, ‘அல்லாவும் முஹம்மது நபியும் ஒருவரே’ போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து விவாதிக்க வருமாறு கோரிய, ஷஹ்ரான் மிகப் பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

ஆனால், அந்தக் கூட்டம் வன்முறையில் முடிவடைந்தது. அப்துல் ரவூஃபின் ஆட்களும் ஷஹ்ரானின் ஆட்களும் அடித்துக்கொண்டார்கள்; வாள் வீச்சும் நடந்தது. ஷஹ்ரான் தனது கூட்டத்திற்கு கத்தி, பெட்ரோல் குண்டுகளுடன் ஆட்களை வரவழைத்தார் என அப்துல் ரவூஃப் குற்றம் சாட்டினார்.

காவல்துறை மொத்தம் 9 பேரை கைதுசெய்தது. இதில் ஷஹ்ரானின் தந்தை காசிமியும் சகோதரன் ஜைனியும் அடக்கம். இவர்கள் ஏழு மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஷஹ்ரான் நேரடியாக சம்பந்தப்பட்டதாக பதிவான முதல் வன்முறை நிகழ்வு இதுதான்.

இதற்குப் பிறகு ஷஹ்ரானும் அவருடைய சகோதரர் ரில்வானும் தலைமறைவானார்கள். இதற்குப் பிறகு, ஷஹ்ரான் என்ன ஆனார், எங்கே போனார் என்பது குறித்த தகவல்கள் பெரிதாக யாரிடமும் இல்லை. இந்த காலகட்டத்தில்தான் ஷஹ்ரானும் அவரைப் பின்பற்றுபவர்களும் ஐஎஸ்ஐஸ் பாணி இஸ்லாத்தை நோக்கி நகர்ந்ததாக நம்பப்படுகிறது.

ஆனால், 2017ஆம் ஆண்டின் மோதல் சம்பவத்திற்கு முன்பாகவே, 13 இஸ்லாமிய அமைப்பினர் இணைந்து அரசிடமும் ஜனாதிபதியிடமும் ஷஹ்ரானின் சர்ச்சைக்குரிய பேச்சுகள், அவரது அமைப்பின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் குறித்து புகார்களைத் தெரிவித்தனர். அந்த காலகட்டத்தில், யூ டியூபில் ஷஹ்ரான் வெளியிட்ட பல வீடியோக்களில், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமெனக் கூறிவந்தார் அவர்.

மோதல் சம்பவத்திற்குப் பிறகு, தேசிய தௌஹீத் ஜாமத்திலிருந்து ஷஹ்ரான் நீக்கப்பட்டார். ஏழு மாதங்கள் சிறையிலிருந்துவிட்டுவந்த ஜைனிதான் இதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். ஆனால், பிறகு அவருமே தன் கடுமையான முகத்தைக் காட்ட ஆரம்பித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவரும் தேசிய தௌஹீத் ஜமாத்திலிருந்து ராஜினாமா செய்யவைக்கப்பட்டார்.

இலங்கையில் புதிய போக்கை நோக்கி செல்லும் இஸ்லாமியர்களின் வாழ்க்கைஇதற்குப் பிறகுதான் இவர்கள் முழுமையாக தலைமறைவானார்கள். ஆனால், கிழக்கிலங்கை இஸ்லாமியர்கள் மத்தியில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு ஷஹ்ரானும் அவரது கூட்டாளிகளும் மட்டுமே முழுக் காரணமல்ல.

இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, இலங்கை வாழ் இஸ்லாமிய அறிஞர்களின் தலைமை அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு ஃப்த்வாவை வெளியிட்டது.

2009ல் வெளியிட்ட அந்த ஃப்த்வா “சில மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஓரு பெண் தனது முகத்தையும் இரு கைகளின் மணிக்கட்டுகளையும் தவிர உடலின் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் மறைக்கவேண்டும். முகத்தையும் கைகளின் மணிக்கட்டுகளையும் திறப்பதற்கு அனுமதியுண்டு. எனினும், ஒழுக்கச் சீர்கேடுகள் மலிந்து காணப்படும் தற்காலத்தில் பெண்கள் தமது அழகின் அடிப்படையாக இருக்கும் முகத்தை வெளிக்காட்டுவதனால் பிற ஆண்களினால் கவரப்பட்டு பல சமூக சீர்கேடுகள் ஏற்படுவதை நோக்கும் போது பெண்கள் தமது முகம், மணிக்கட்டுகள் உட்பட முழு உடம்பையும் மறைக்கவேண்டியதின் அவசியத்தை உணரமுடிகின்றது” அறிவித்தது.

இலங்கை

இந்த கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகள்:

இலங்கை வட – கிழக்கு இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்

இலங்கை இனப்போர்: இஸ்லாமியர்கள் யார் பக்கம்?

இலங்கை இஸ்லாமியர்கள்: சூஃபியிஸவாதிகள் அடிப்படைவாதிகளாக மாறியது எப்படி?

இலங்கை

ஆனால், இந்த ஃபத்வா ஒரு இறுக்கமான ஒன்றாக இருக்கவில்லையென்றாலும் உலாமாக்களைச் சார்ந்த பெண்கள் இதை அணியத் துவங்கியிருந்தார். இலங்கை போன்ற பல்லின மக்கள் வசிக்கும் நாட்டில் இப்படியான ஆடை அணிவது குறித்த விமர்சனங்களும் அவ்வப்போது எழுந்த வண்ணம் இருந்தன.

ஆனால், 2010களின் மத்தியப் பகுதியில், நிகாப் அணிவது ஏல்லோராலும் ஏற்கப்பட்ட, சாதாரணமாக ஒரு விஷயத்தைப்போல ஆகிப்போனது. அணிய விரும்பாத பெண்கள் குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு, முகத்தை முழுவதுமாக மூடும் நிகாப் அணிய இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. “ஆனால், இத்தனை ஆண்டுகளாக நிகாப் அணிந்திருந்த பெண்கள், தற்போது அதனை அணியாமல் செல்ல கூச்சமடைகிறார்கள்” என்கிறார் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா.

இலங்கையில் புதிய போக்கை நோக்கி செல்லும் இஸ்லாமியர்களின் வாழ்க்கைஇப்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைவரையும் பிடித்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. “இம்மாதிரியான பயங்கரவாதப் போக்குடைய அமைப்புகளை கிழக்கிலங்கை இஸ்லாமியர்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். புலிகள் வடக்கில் கோலோச்சிய காலத்தில், அவர்களுக்கு ஒரு ஆதரவு தளம் வடக்கிலும் கிழக்கிலும் இருந்தது. நியாய உணர்வுடையவர்களாக தங்களைக் கருதும் சிங்களர்கள்கூட புலிகளின் போராட்டங்களை ஆதரித்தனர்.

அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தால்கூட அரச படையினரிடம் யாரும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் இவர்களைக் காட்டிக்கொடுக்க எல்லோருமே தயாராக இருந்தார்கள். யாருமே இந்தத் தாக்குதலையும் அதன் பின்னாலிருந்த சித்தாந்தத்தையும் ஆதரிக்கவில்லை” என்கிறார் றமீஸ் அப்துல்லா.

இலங்கையின் இஸ்லாமிய சமுதாயம், தொடர்ச்சியாக பல மாற்றங்களுக்கு முகம்கொடுத்து வந்திருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வி என்பது ஒரு எட்டாக் கனவு. இப்போது எல்லாப் பெண்களும் கற்கிறார்கள்; கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

கிழக்கிலங்கைக்கென தனியான ஒரு இலக்கியப் போக்கு உருவாகியிருக்கிறது. அனார், ஷர்மிளா சையத், மாஜிதா போன்ற பெண்களே இதை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

இலங்கையில் புதிய போக்கை நோக்கி செல்லும் இஸ்லாமியர்களின் வாழ்க்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

“கிழக்கிலங்கையில் காத்தான்குடி போன்ற இஸ்லாமியர்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் பல நல்ல அம்சங்கள் உண்டு. ஆண்கள் குடிப்பது மிக மிகக் குறைவு. வட்டி என்பதில்லை. போதை மருந்து பாவனை கிடையாது. ஷஹ்ரான் இந்தப் பகுதிக்கு தந்த அடையாளம் மாறி, நல்ல காரணங்களுக்காக இந்தப் பிரதேசம் மீண்டும் அறியப்படும்” என நம்புகிறார்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்த ஞாயிற்றுக் கிழமை. பிற்பகல். திடீரென மேகங்கள் சூழ்ந்து இடியுடன் கடும் மழை பெய்ய ஆரம்பிக்கிறது காத்தான்குடியில்.

ஷஹ்ரான், ரில்வான், ஜைனி ஆகிய பெயர்களிலிருந்தும் அவர்கள் முன்வைத்த பயங்கரவாத சித்தாந்தங்களிருந்தும் தன்னை விலக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பிரதேசம், அமைதியும் இறை நம்பிக்கையும் நிலவிய கடந்த காலத்தை நோக்கி வேகமாக பயணிக்க ஆரம்பிக்கிறது.

பிற செய்திகள்

சர்வதேச தடைகளை மீறியதாக வட கொரிய கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா- மீண்டும் பரபரப்பு

தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுவது எதனால்?

“நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது”

வறுமையில் உழலும் தேசத்திற்கு கிடைத்துள்ள எண்ணெய் வளம்: வரமா, சாபமா?

இலங்கை வன்முறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு: ஒருவர் பலி

இலங்கை வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு; வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளில் புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா – கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று (திங்கள்கிழமை) இரவு ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோது, முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதோடு, சில இடங்களில் தீ வைத்துமுள்ளனர்.

இந்த நிலையிலேயே வன்முறையாளர்களின் தாக்குதல்கள் காரணமாக, மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.

கொட்டாரமுல்லவில் உயிரிழந்த 45 வயதுடைய அமீர் என்பவர் 4 பிள்ளைகளின் தந்தையாவர். தச்சுத் தொழிலாளியான இவரின் வீடு உட்பட, கொட்டாரமுல்ல பகுதியில் சுமார் 25 வீடுகள் நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளன.

இதன்போதே, அமீர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டார் என்றும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு

இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை

இதேவேளை, அங்குள்ள 4 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

நாத்தாண்டியா பிரதேச சபை உறுப்பினர் ரிழ்வான் மற்றும் கொட்டாரமுல்ல பள்ளிவாசல் செயலாளர் ஆகியோரின் வீடுகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த பகுதியைச் சேர்ந்த சயின் அஹமட் பிபிசி க்கு தெரித்தார்.

கொட்டாரமுல்லவில் சுமார் 1700 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன.

நேற்றிரவு கொட்டாரமுல்ல பகுதியில் ராணுவத்தினர் கடமையில் இருக்கத்தக்கதாக, அவர்களின் ஆதரவுடனேயே முஸ்லிம்களின் வீடுகள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக, அங்குள்ள சிலர் பிபிசியிடம் கூறினர்.

இலங்கை வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு; வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு

இதேவேளை, கொட்டாரமுல்லயிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தும்மோதர பகுதியிலும் இரண்டு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, வீடுகளும் தாக்கப்பட்டு, தீவைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 30 கடைகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 20 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள உள்ளுரா் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

‘மீண்டும் கறுப்பு ஜுலையை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம்’ – மஹிந்த ராஜபக்ஸ

இலங்கையின் பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமனம்

இது இவ்வாறிருக்க, மிவாங்கொட பிரதேசத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கல்லொளுவ பகுதிலுள்ள முஸ்லிம்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், குறித்த உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

வீடுகளுக்குள் இருந்த முஸ்லிம்களை வெளியே அழைத்து, அவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தினார்கள் என்கிறார் அந்த ஊடகவியலாளர்.

இலங்கை வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு; வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு

இதேபோன்று, இன்னும் பல இடங்களிலும் முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்களை தாக்கியும் தீ வைத்தும் வன்முறையாளர்கள் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், மினுவாங்கொட பிரதேசத்திலும் வன்முறையாளர்களின் தாக்குதலில் முஸ்லிம் ஒருவர் இறந்துள்ளதாக, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றபோதும், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

பிற செய்திகள்:

மீண்டும் கறுப்பு ஜுலையை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம்’ – மஹிந்த ராஜபக்ஸ

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்கு தடை – அரசாணை வெளியீடு


About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply