சிந்திக்க உண்மைகள்

சிந்திக்க உண்மைகள்

ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா?

எண்களில் எட்டு என்ற எண்ணுக்கு அவ்வளவு சக்தி உண்டு ? -கும்பாபிஷேகம் – குடமுழுக்கு என்பதென்ன ? .

கும்பாபிஷேகம் என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல. அது வடமொழியாகும். சமீப காலங்களில் சில தமிழ்ப் பற்றாளர்கள் அதை குடமுழுக்கு என்று அழைக்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ள நம் மக்கள் கோயில் கட்டவேண்டும் என்றால் அவர்கள் சொந்த இடங்களிலோ அல்லது அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் அல்லது கோயில் கட்டி, அதில் அவர்களுக்கு வேண்டிய சிலையை புதிதாக செய்தோ

அல்லது வேறு கோயிலிலிருந்து (பிள்ளையார் சிலையை) திருடி வந்தோ கோயில் கருவறைக்குள் குழிபறித்தோ அல்லது மேடை செய்து அதன் மேலோ சிலைகளை வைப்பர்.

கோயில் இடம் கையகப்படுத்துவதிலிருந்து கோயில் கட்டடம் கட்டுவது, வெள்ளை அடிப்பது, வர்ணம் பூசுவது, சிலை செய்வது அல்லது சிலையை திருடுவது, சிலையை மேடையில் அமைப்பது, கோயிலுக்கு கதவு செய்வது, பூட்டு செய்வது அனைத்தும் நம்மக்கள் அவரவர்கள் சொந்த உழைப்பாலும், பணத்தாலும் கோயிலை கட்டுவதுடன் சிலைகளையும் செய்கிறார்கள்.

இதுவரையில் பார்ப்பனர்களுக்கு கோயிலில் வேலை இல்லை.

பார்ப்பனர்கள் வேதப்படி இப்படி கோயிலில் உள்ள சிலை கடவுள் அல்ல. இது வெறும் கற்சிலைதான். இதன் பிறகு நம்மவர் லட்சக்கணக்கான ரூபாய்களை பார்ப்பனர்களுக்கு அழுது

அவர்கள் மேற்படி கோயிலில் வந்து கோபுரத்தில் நின்று கொண்டு கோபுர கலசத்தில் வடமொழியில் (யாருக்கும் புரியாத மொழியில்) மந்திரம் சொல்லி கலசத்தில் தண்ணீர் ஊற்றுவதுதான் கும்பாபிஷேகமாகும்.

பார்ப்பனர்கள் வந்து மேற்சொன்னவாறு கும்பாபிஷேகம் செய்தால் தான் மேற்படி கோயிலுள்ள சிலை கடவுளாகிறது. அதாவது சாதாரண கற்சிலையை அல்லது உலோக சிலையை பார்ப்பன புரோகிதன் கடவுளாக்குகிறான்.

அதாவது கல்லையே கடவுளாக்கும் சக்தி பார்ப்பனர்களுக்கு உண்டு என்பதால் அவர்கள் பிறருக்கு “பூதேவர்கள்” ஆவர். அதாவது பார்ப்பனர் அல்லாதாருக்கு கண்கண்ட தெய்வம்.

இது எவ்வளவு முட்டாள்தனம் என்பதற்கு ஒரு சிறு உதாரணம். அப்படி கல்லை கடவுளாக்கும் பார்ப்பனர்களை அந்த கற்சிலையை மந்திரத்தினால் ஒரு உயிருள்ள ஜீவனாகவோ அல்லது சிலை செய்வதற்கு முன்பு இருந்தது போல் மீண்டும் கல்லாகவோ செய்யச் சொன்னால் அவர்களால் செய்ய முடியுமா?

மேலும் அந்த சிலை அல்லது சாமிக்கு பார்ப்பனர்கள் செய்த கும்பாபிஷேகத்தினால் “சக்தி” வந்துள்ளது என்பதை எந்த பார்ப்பனராவது நாளது வரை நிரூபித்துள்ளார்களா? எந்த அளவுகோலை வைத்து அதற்கு “சக்தி” வந்ததாக சொல்லமுடியும்.- >>ஆர்.டி.மூர்த்திhttp://unmaionline.com/20070601/13.htm
————-
கும்பாபிஷேகம்-ஒரு தொற்றுநோய்!-

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ கம் முழுதும் கும்பாபிஷேகம் என்ற தொற்றுநோய் காட்டுத்தீ போல் பரவிக்கொண்டு வருகிறது. வறட்சியால் வாடும் கிராமங்களைக்கூட இந்த தொற்றுநோய் விட்டு வைப்பதில்லை. குடிநீர்த் தட்டுப்பாடு, சாலை வசதிக் குறைவு, மருத்துவ சுகாதார வசதியின்மை போன்ற பல பிரச்சினைகளுக் கிடையேயும் கடன் உடன் பட்டாவது கும்பாபிஷேகம் செய்வதை பெரும்பாக்கியமாக கருதுகின்றனர்

நம் மக்கள். இதனால் ஏற்படும் உண்மையான பலன் என்ன என்பதனை சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்.
இதுபோன்ற திருவிழாக்களினால் பார்ப்பன பூசாரிகள் மட்டும் ஆதாயம் அடைகின்றனர். ஒவ்வொரு கும்பாபிஷேகத்திற்கும் ஆகும் செல வில் 30 சதவீதம் பார்ப்பன பூசாரிகளுக்கு நேரிடையான வருமானமாக போகிறது.

20 சதவீதம் தொகை, மறைமுகமாக பலவேறு வடிவங்களில் அந்த சோம்பேறிகளை சென்றடைகிறது. கும்பாபிஷேகத்திற்கு தேவையான சாமான்கள் வாங்குதல், பந்தல், ஒலிபெருக்கி, மின்சார வாடகை, கூலி யாட்கள் ஆகியனவற்றுக்கு மீதமுள்ள 50 சதவீ தம் தொகை செலவிடப்படுகிறது.

செலவு செய்த ஊர்மக்களுக்கு கிடைப்பது ஒரு சிட்டிகை விபூதித்தூளும், தம்மாத்தூண்டு தேங்காபத்தை யும் தான். முதலீடு இல்லாமல், துளிகூட உழைக்காமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் கோயில் அர்ச்சகராகத்தான் ஆக வேண்டும்.

உழைக்காமல், வியர்வை சிந்தாமல் தமிழன் உணவருந்த மாட்டான். இதையே வாய்ப்பாக பயன்படுத்தி பார்ப்பனர்கள் கோயில் அர்ச்சகர்களாக பிழைப்பு நடத்துகின்றனர்.

04-04-004 அன்று பங்குனி உத்திரம். நிறைய ஊர்களில் முருகனுக்கு தேர் எடுத்து விழா கொண்டாடினர். வேட்டவலம் – அணுக்குமலை என்ற கிராமத்திலிருந்து செஞ்சிக்கு போகிற வழியில் நல்லான்பிள்ளை பெற்றாள் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலும் மேற்சொன்ன தேதியில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொள்ளும் விளக்குபூஜை காலையில் நடைபெற்றது. சுமார் 80 பெண்கள் கலந்துகொண்டனர்.

பூஜை சுமார் 30 நிமிடம் நடைபெற்றது.
இந்த பூஜையை நடத்துகிற அய்யர் தன்னுடைய பூஜையுரையில், “முருகனு டைய அப்பனாகிய சிவனை துதிக்க 1008 நாமங்கள் உண்டு. இந்த 1008 நாமங்களையும் சொன்னால் மகா புண்ணியம் கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டு எட்டு நாமங்களை மட்டும் சொல்கிறார்.

ஓம் வஷ்ய நமஹ
ஓம் புஷ்ய நமஹ
ஓம்

எல்லோரும் கையில 25 ரூபாய தயாரா வைச்சிக்குங்கோ

ஓம் துஷ்ய நமஹ
ஓம் பஹ்ய நமஹ…

இப்படியாக சொல்லி முடிக்கிறார். என் மனசுக்குள்ள ஒரு கேள்வி எழுந்தது.

1008 நாமங்கள் இருக்குதுன்னு சொல்லிட்டு வெறும் 8 நாமங்கள மட்டும் சொல்லி முடிக்கிறாரே என்று.
மக்கள் தப்பா புரிஞ்சிக்குவாங்கன்னு, இந்த சாமியாரே அடுத்து விளக்கம் கொடுக்கிறார்.

1008 நாமங்கள் உண்டுன்னு சொல்லிட்டு, சாமியார் 8 நாமத்த மட்டும் சொன்னாரேன்னு உங்க மனசுல கேள்வி வரலாம்.

எண்களில் எட்டு என்ற எண்ணுக்கு அவ்வளவு சக்தி உண்டு. 
மகிமை உண்டு. திசைகள 8 திசைகளாத் தான் பிரிக்கிறாங்க. 
லட்சுமிய 8 லட்சுமியா பிரிக்கிறாங்க. 
அதத்தான் அஷ்டலட்சுமின்னு சொல்றாங்க.

இப்படி பல சக்திகள் 8 என்ற எண்ணுக்கு இருக்கு.

இதனால 1008 நாமங்கள சொல்றதுக்கு பதிலா கடைசி 8 நாமத்த மட்டும் சொன்னாலே, மொத்த பலனும் நமக்கு கிடைச்சா மாதிரி,” என்றபடி சாமியார் பூஜையை தொடர்கிறார். (அடப்பாவி, வாங்குற காசுக்கு 1008 நாமத்தையும் சொல்றதுல அப்படி யென்ன கஷ்டம் உனக்கு. ஒருவேள முதல் 1000 நாமம் தெரியாதோ, என்னவோ).

திடீரென ஒரு பெண்மணி எழுந்து, சாமி யாரிடம் 25 ரூபாயை நீட்டினாள்.

சாமியார் பதில் அளிக்கிறார். “காச இப்ப கொடுக்காதீங்க. பூஜ முடியும்போது கொடுத்தா போதும். நீங்க எல்லோரும் 25 ரூபா என்ன, 250 ரூபா நான் கேட்டாலும் தரமாட்டேன்னா சொல்லுவீங்க.

விளக்கு பூஜையில கலந்துக்கின உங்க எல்லா ருக்கும் எவ்வளவு பெரிய புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?

இந்த விலை மதிப்பில்லா புண்ணியத்த, வெறும் 25 ரூபாய்க்குத்தான் நான் உங்களுக்கு கொடுக்கறேன். நீங்க கொடுக்கிற காசு கடுகு மாதிரி சின்னது.

ஆனா நான் கொடுக்கிற புண்ணியம் இருக்கே. அது மலையைவிட பெரிசு.” என்று இந்த சாமியார் திரும்ப, திரும்ப காசு பணம் புடுங்கறதையே தான் பேசிக்கிட்டு இருந்தார்.
ஒரு வழியா பூஜைய முடிச்சிக்கிட்டு பணத்தை எண்ணிப்பார்க்கிறார்.

30 நிமிடத்தில் சுமார் 2,000 ரூபாயை சம்பாதித்துவிட்டார். மக்களின் மடத்த னம் எப்படி காசாக்கப்பட்டு, பிடுங்கப்படுகிறது என்பதற்கு இது துக்குணூண்டு உதாரணம்தான். பூஜையில் கலந்துகொண்ட 80 பெண்களில் எவ ருக்கும் மூளை செயலற்றுப்போனது, ஆத்திரத் தையே கொடுத்தது.

09-07-2003 அன்று விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலார் வட்டத்திலுள்ள அறுங்குறுக்கை – மதுரா புதூர் என்ற குக்கிராமத்தில் மாரியம்மன் கோயிலுக்கு, ரூ. 10 இலட்சம் செலவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு தலைப் பிரிவுக்கும் ரூ. 3,000 வசூல் செய்யப்பட்டதாம். கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த அய்யர்கள் 4 பேர்கள். ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக ரூ. 10,000 சம்பளம் கொடுக்கப்பட்டது. வறட்சியும், பஞ்சமும் கோரத்தாண்டவமாடும் தமிழ்நாட்டில்

ஒரேயொரு மணி நேரத்தில் ரூ. 10,000 சம்பளம் பெறுவது பார்ப்பனர்களாகத்தான் இருக்கமுடியும்.

அந்த ஊரிலுள்ள சில குடும்பத்தாரையும், இளைஞர்களையும் விசாரித்தேன். ஏன் கும்பாபிஷேகம் நடத்துறீங்க? இதனால என்ன பயன் கிடைக்கும்? என்று. எல்லோரும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக பதில் அளித்தார்கள் –

கோயிலுக்கு கும்பாபிஷேகம் செஞ்சா கிராமமே சேமமா இருக்கும். எந்த கஷ்ட மும் வராது. ஆத்தா அருள் கிடைக்கும் என்பதே அந்த பதில்.

19-06-2004 அன்று (ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பிறகு) அந்த குக்கிராமத்தை பார்வையிட சென்றேன். கும்பாபிஷேகத்திற்கு முன்பு அந்த ஊர் எப்படி வறட்சியில் வாடியதோ, அப்படியேதான் இப்பவும் இருக்கிறது.

கிராமவாசிகளிடம், என்னங்க ஊரு சேமமா இருக்கான்னு கேட்டேன். அட நீங்கவேற வயித்தெரிச்சல கொட்டிக்காதீங்கன்னு பதில் சொன்னாங்க. 10 இலட்சம் ரூபா செலவு செஞ்சி ஆத்தா ளுக்கு நீங்கதானே கும்பாபிஷேகம் நடத்துனீங்க. இப்படி செஞ்சா சேமமா இருக்கும்னு நீங்கதானே அன்னிக்கு சொன்னீங்கன்னு கேட்டேன்.

தம்பி, உண்மைய சொல்றன்பா. கந்து வட்டிக்கு கடன் வாங்கி, தலப்பிரிவு காசு 3,000 ரூபா கொடுத்தன்பா. அந்த கடன இன்னும் அடைக்க முடியல. விவசாயமும் சரிவர நடக்கல. வட்டி மட்டும் ஏறிக்கினே போகுதுன்னு மனம் வெதும்பினார் ஒரு பெரியவர்.

இதத்தான் அன்னிக்கே நான் கேட்டான். இவ்வளவு செலவு செஞ்சி விழா நடத்துறீங்களே, இதனால என்ன பலன் கிடைக்கப்போகுதுன்னு. அந்த 10 இலட்ச ரூபாயில உங்க கிராமத்திலேயே சுயதொழில் ஏதாவது ஆரம்பித்திருக்கலாம். இல்ல உங்க குடிநீர் பிரச்சனைய தீக்கறதுக்கு வழி செஞ் சிருக்கலாம். இதுமாதிரி நல்ல திட்டங்களுக்கு செலவு செஞ்சிருந்தா, இன்னிக்கு மட்டும் இல்ல. காலா காலத்துக்கும் உங்களுக்கு பயனுள்ளதா இருந்திருக்கும்.

அதவுட்டுட்டு சாமி, கோயில், பூசாரின்னு செலவு செஞ்சீங்கன்னா, கடையில கோவணம் மட்டும்தான் மிஞ்சும்ன்னு சொன்னேன்.

இதைக்கேட்ட கிராமவாசிகள், இதுவும் நல்ல யோசனையாத்தான் இருக்குன்னு சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். >>- அணித்தமிழ், திருவண்ணாமலை
http://unmaionline.com/2004102u1.html
———————-

About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply