பெளத்த மேலாதிக்கத்தில் தீர்வு சாத்தியமாகுமா?

  1. பெளத்த மேலாதிக்கத்தில் தீர்வு சாத்தியமாகுமா?

    இன்றைய சூழலில் தமிழ் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அரசியல் மயப்பட்ட தீர்வொன்று காணப்பட வேண்டுமென்ற உண்மைநிலை அனைத்து தரப்பினராலும் உணரப்பட்டிருக்கின்றபோதும் அவற்றுக்கான சவால் எங்கிருந்து பிறந்து வருகிறதென்றால் மத பீடங்களிலிருந்து பிறந்து வருவதே ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாக காணப்படுகிறது.

    பௌத்த மத­மென்­பது இலங்­கையில் ஒரு மத­மாக மாத்­திரம் பேணப்­ப­டு­வ­தற்கு அப்பால் அர­சி­யலை வழி­ந­டத்தும் சூத்­தி­ர­மா­கவும் சிங்­கள மொழியை காக்கும் காப்­பா­கவும் வர­லாற்­றுக்கு முந்­திய காலத்­தி­லி­ருந்தே இருந்து வந்­துள்­ளது. இதற்கு ஆதா­ரந்தான் இவ்­வாரம் இடம்பெற்ற முக்­கி­ய­மான சம்­ப­வ­மொன்று.

    நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்­ச­ராக இருந்த விஜே­தாஸ ராஜபக் ஷ நீக்­கப்­படக்கூடாது. அவரை பாது­காக்க ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகியோர் முன் வர­வேண்­டு­மென்ற கோரிக்­கையை, இலங்­கையில் இயங்­கி­வரும் சகல பௌத்த பீடங்­களின் பிர­தி­நி­தி­களும் விடுத்­துள்ள சம்­பவம் இவ்­வார அர­சி­யலில் முக்­கி­ய செய்­தி­யா­கவும் அதே­வேளை ஆளும் அர­சாங்­கத்­துக்கு நடுக்­கத்தை உண்­டு­பண்ணும் விட­ய­மா­கவும் ஆகி­யி­ருக்­கி­றது.

    நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜே­தாஸ மீது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின் வரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடும் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி அவர் பதவி நீக்கம் செய்­யப்­பட வேண்டும் அல்­லது அவ­ராக பதவி விலக வேண்டும். ராஜபக் ஷ குடும்பம் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்கு இவரே கார­ண­மென்ற கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்கள் வீசப்­ப­ட்டும், வாதப்­பி­ர­தி­வா­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டு­ம் வந்­த நிலை­மை­களின் மத்­தியில்தான் சகல பெளத்த பீடங்­களின் பிர­தி­நி­தி­களும் இவ்­வா­றான நிபந்­த­னையை விதித்­தனர்.

    அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ தொடர்பில் முக்­கிய தீர்­மா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கருத்­துக்­களும் செய்­தி­களும் வெளி­வந்து கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே நாட்டின் சகல பகு­தி­க­ளி­லி­ருந்தும் வந்த பௌத்த பிக்­குமார் அமைச்­ச­ருக்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­டுத்­தாத வகையில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் செயற்­பட வேண்டும். தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக நாட்டின் தேசிய ஒற்­று­மையில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என்­பதே பிர­தான பௌத்த பீடங்­களின் வேண்­டுகோளாகவும் இருந்­த­ன.

    முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, பதவி விலகி, இரண்­டொ­ரு­வா­ரங்கள் ஆக­வில்லை. புத்­த­சா­சன அமைச்சர் பதவி விலக வேண்­டு­மென்ற விவ­காரம் பல­ம­டைந்து தேசிய அர­சாங்­கத்­துக்குள் நெருக்­கடி நிலை­ உரு­வா­க்கி­ய­து. இறு­தியில் அவரும் பதவி நீக்­கப்­பட்­டார்.

    புத்­த­சா­சன அமைச்சர் ஓர் விமர்­ச­னத்­துக்­கு­ரிய, அமைச்­ச­ராக அண்­மைக்­கா­ல­மாக பேசப்­பட்டு வந்­த­துடன், தமிழ் மக்கள் தொடர்­பிலும் கடும்­போக்கு வாதி­யாக இருந்து வந்­துள்ளார் என்­பது பல சந்­தர்ப்­பங்­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

    விசா­ர­ணை­யற்று, விளக்­க­மற்று, நீதி­மன்றின் முன் நிறுத்­தப்­ப­டாமல் நீண்ட கால­மா­கவே அர­சியல் கைதி­க­ளாக சிறையில் வாடி­வரும் தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். இல்­லையேல், விசா­ர­ணைக்குட்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென, சர்­வ­தேச அள­விலும் உள்­நாட்டைச் சேர்ந்த பல்­வேறு மனித உரிமை சமூக அமைப்­புகள் பல்­வேறு கோரிக்­கை­களை விடுத்­து­வ­ரு­கின்­ற­போதும் அதற்கு முட்­டுக்­கட்­டை­யாக இருந்து வந்­தார் என்ற குற்­றச்­சாட்டை, தமிழ் அர­சியல் வாதிகள் முன்­வைத்து முரண்­பட்டும் உள்­ளார்கள்.

    இது போலவே, புதிய அர­சியல் சாசன, உரு­வாக்­கத்தில் பௌத்த மதம் சார்ந்த கடும்­போக்­கு­வா­தத்தை முன்­னி­லைப்­ப­டுத்­தி­ய­திலும் அமைச்­சரின் வகி­பாகம் அதி­க­மாக இருந்­துள்­ளது. இது­போன்ற தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விவ­கா­ரத்­திலும் அதி­க­ளவு சார்பு நிலை கொண்­ட­வ­ராக அவர் காணப்­ப­ட­வில்­லை­யென்ற கருத்தும் கூறப்­ப­டு­கி­றது.

    தனக்கு ஏற்­பட்ட ஒரு நெருக்­க­டி­யான சூழ்நிலையில் பௌத்த மதமும் சிங்­களப் பெரும்­பான்­மையும் விழித்­தெழ வேண்­டு­மென்ற தீவி­ர­மான கருத்தை முன்­வைத்­துள்ளார்.

    இன்று சிங்­க­ளவர் பற்றி யோசிக்க வேண்டும். அண்­மைக்­கா­லங்­களில் புத்­த­சா­ச­னத்­துக்கும் நெருக்­கடி நிலைகள் ஏற்­பட்­டுள்­ளன. சிங்­க­ளவர் பற்றி நாம் இன்று பேசினால் இன­வா­திகள் என முத்­திரை குத்­தப்­ப­டு­கின்றோம். இன்று எமது நாடு நெருக்­க­டி­யான சூழ­லுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளது. அதனால் எமது நாட்டின் பௌத்த தேரர்­களும் சிங்­கள மக்­களும் முன்­வந்து தீர்க்­க­மான முடி­வினை எடுக்க வேண்­டிய தருணம் தற்­பொ­ழுது தோன்­றி­யுள்­ளது. உரிய தீர்வை மேற்­படி தரப்­பி­னரே முன்­னெ­டுக்க வேண்­டு­மென, ஆக்­­ரோ­ஷ­மான உரை­யொன்றை முன்­னாள் நீதி அமைச்சர் விஜே­தாஸ ஆற்­றி­யி­ருந்தார்.

    பொது­வா­கவே இலங்­கை­யி­லுள்ள மக்­களில் இஸ்­லா­மியர் தங்­களை மதத்தால் அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றார்கள். தமி­ழர்கள் மொழியால் அடை­யா­ளப்­ப­டுத்­து­கி­றார்கள். சிங்­கள மக்கள் மொழி­யாலும் மதத்­தாலும் அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றார்கள். சிங்­கள மக்­களைப் பொறுத்­த­வரை மத­மென்­பது அவர்­க­ளது சகல கைங்­க­ரி­யங்­க­ளையும் தீர்­மா­னிக்கும் பீட­மாக விளங்­கு­கின்­றது.

    குறிப்­பாக, இலங்­கையின் ஆட்சிப் போக்கில் பௌத்த மதத்தின் தாக்­கமும் அழுத்­தமும் முன்­னைய காலத்­தி­லி­ருந்து வந்­துள்­ள­தென்­பதை மஹா­வம்­சமும், சூள­வம்­சமும் நிலை­நாட்டிக் காட்­டு­வ­துடன், சகல பௌத்த பீடங்­களும் இதை உண்­மைப்­ப­டுத்திக் காட்டி வந்­துள்­ளன. இதன் கார­ண­மா­கவே கடந்த காலங்­க­ளிலும் சரி, தற்­கா­லத்­திலும் சரி ஆட்­சி­யா­ளர்கள் அதன்­வ­ழிப்­பட்ட செல்­வாக்­குக்கும் தாக்­கங்­க­ளுக்கும் ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பது பல்­வேறு வர­லாற்று சம்­ப­வங்­க­ளி­னாலும் அர­சியல் நிகழ்­வு­க­ளி­னாலும் நிரூ­பித்­துக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

    உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சியல் அமைப்பில் ஒற்­றை­யாட்சிப் பண்பில் எந்த வித­மான மாற்­றமும் ஏற்­ப­டுத்­தப்­ப­டாது. பௌத்த மதத்தின் முன்­னு­ரி­மைக்கு எது­வித பங்­கமும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது. குறிப்­பாக பௌத்த மதம் தொடர்பில் அத்­தி­யா­யங்­களில் மாற்றம் செய்­ய­மாட்டோம் என அர­சாங்க தரப்பில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உத்­த­ர­வாதம் அளித்­தி­ருந்­த­போதும் நடந்­த­தென்ன?

    புதிய அர­சியல் அமைப்­புக்கு எதி­ராக, நான்கு பௌத்த பீடங்கள் ஒன்றிணைந்து போர்க்­கொடி தூக்­கி­யி­ருந்­தன. நான்கு பௌத்த பீடங்­களின் மா­நா­யக்க தேரர்கள் ஒன்­றி­ணைந்து புதிய அர­சியல் அமைப்பு அல்­லது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமோ தேவை­யற்­றது என்றும் அர­சியல் அமைப்பில் மாற்றம் செய்­யப்­பட வேண்­டு­மானால் தேர்தல் முறையில் மாத்­திரம் மாற்­றத்தை கொண்­டு­வா­ருங்கள், ஏனை­யவை நாட்­டுக்கு தேவை­யற்­ற­வை­யென, கடும் சீற்­றத்­துடன் கோரிக்கை விட்­டி­ருந்­தமை, சக­லரும் அறிந்த விடயம்.

    புதிய அர­சியல் அமைப்­புக்கு மா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்பு தெரி­வித்­த­தை­ய­டுத்து ஜனா­தி­பதி நான்கு மா­நா­யக்க தேரர்கள் உள்­ள­டங்­கிய பௌத்த பீடத்­தி­னரை சந்­தித்து உரை­யா­டி­யி­ருந்தார்.

    தேரர்­களின் எதிர்ப்பை தூக்­கி­யெ­றிந்து நடப்­ப­தென்­பது இலங்கை அர­சி­யலைப் பொறுத்­த­வரை குறிப்­பாக ஆட்­சி­யா­ளர்­களைப் பொறுத்­த­வரை சர்­வ­சா­தா­ர­ண­மாக எடுத்துக் கொள்­ள­மு­டி­யாத நிலை­யி­லேயே ஜனா­தி­பதி, தேரர்­களை சந்­தித்து உரை­யா­டி­யி­ருப்­ப­துடன் புதிய அர­சியல் சாசனம் தொடர்பில் விளக்­கி­யுள்ளார்.

    மாநா­யக்­கர்­களை சந்­தித்து உரை­யா­டு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­த­மைக்கு இதுவே கார­ண­மாகும். புதிய அர­சியல் அமைப்பு தொடர்பில் தேவைப்­பட்டால் பௌத்த பீடா­திமார் உட்­பட மதத்­த­லை­வர்­களைச் சந்­தித்துப் பேசு­வது குறித்து த.தே.கூட்­ட­மைப்பு ஆராய்ந்து வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்ட செய்­தியும் இதன் பின்­ன­ணி­யி­லேயே இருந்­துள்­ளது.

    சிறு­பான்மைச் சமூ­கத்தின் உரிமை, தொடர்பு மாத்­தி­ர­மின்றி இலங்­கையின் அர­சியல் மாற்றம் எது­வாக இருந்­தாலும் மா­நா­யக்க தேரர்­களின் ஆசீர்­வா­த­மின்றி செய்­து­வி­ட­மு­டி­யாது என்­பது இலங்கை அர­சியல் போக்கில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் நிரூ­பிக்­கப்­பட்­ட ­வி­ட­ய­மாகும்.

    இதே­வேளை, புதிய அர­சியல் யாப்பு தேவை­யில்­லை­யென மா­நா­யக்க தேரர்கள் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டமை தொடர்பில் தேரர்­களை தூண்­டி­வி­டு­வ­தற்கும் அவர்­களை அர­சியல் அமைப்­புக்கு எதி­ராக திருப்பி விடு­வ­தற்கும் சதி செய்­யப்­ப­டு­வ­தாக அரச தொழில் முயற்­சிகள் அபி­வி­ருத்தி அமைச்­சரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரு­மான கபீர் ஹாஷிம் குற்றம் சாட்­டி­யி­ருந்­தமை கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

    பௌத்த குரு­மாரின் ஆதிக்கம் இலங்கை அர­சி­யலில் தடுக்க முடி­யாத ஒன்­றாகும். பௌத்த சம­யத்­துக்கு புதிய அர­சியல் அமைப்பில் கொடுக்­கப்­பட்­டுள்ள முக்­கி­யத்­துவம் இதன் வெளிப்­பா­டாகும். ஆட்­சிக்கு வரும் ஒவ்­வொரு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பௌத்த குரு­மாரின் ஆசியைப் பெற்­ற­பின்பே ஆட்சி பீடம் ஏறு­கின்­றனர். இது நேற்று இன்று ஆரம்­பித்த ஒரு மரபு அல்ல. மிகத் தொன்­மை­யான காலத்­தி­லி­ருந்தே உண்­டா­கி­யி­ருக்கும் மரபு, சடங்கு என்று கூற முடியும்.

    சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் மாநா­யக்க தேரர்­களின் ஆதிக்­கமும் அழுத்­தமும் கார­ண­மாக தமிழ் மக்­க­ளுக்­கான பல்­வேறு சந்­தர்ப்­பங்கள் கைந­ழுவிப் போன­மைக்கு பௌத்த பீடங்கள் மற்றும் மாநா­யக்க தேரர்­களின் தலை­யீ­டு­களும் அழுத்­தங்­க­ளுமே கார­ண­மாகிப் போயி­ருக்­கின்­றன.

    பண்டா – செல்வா உடன்­ப­டிக்கை கைவி­டப்­பட்­டமை, பண்­டா­ர­நா­யக்­கவின் படு­கொலை, டட்லி– செல்வா ஒப்­பந்தம் இரத்­தா­கி­யமை 1962, திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­கா­விற்கு எதி­ரான சதிப்­பு­ரட்சி, 1972ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட புதிய குடி­ய­ரசு யாப்பு என எல்லா விட­யங்­க­ளி­லுமே மா­நா­யக்க தேரர்­களின் உட்­க­லப்பும் பௌத்த பீடங்­களின் ஆதிக்­கங்­களும் இருந்து வந்­துள்­ளது என்­பது மறுக்­கப்­பட முடி­யாத உண்மை.

    முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் பள்­ளி­வா­சல்­க­ளுக்­கெ­தி­ரான கெடு­பி­டிகள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்­கெ­தி­ரான முஸ்­தீ­புகள் எவ்­வ­ளவு கடு­மை­யாக இருந்து வந்­துள்­ளன என்­பதை சாதா­ரண பொது­ம­கனும் அறிவான். ஆனால் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் மா­நா­யக்க தேரர்­களின் அழுத்­தங்­களும் ஆதிக்­கங்­களும் மிக­மோ­ச­மான நிலையைப் பெற்­றுள்­ளது என்­பது அண்­மையில் நடை­பெற்ற சம்­ப­வங்­களின் மூலம் உணர்ந்து கொள்­ளக்­கூ­டிய விட­ய­மாகும்.

    அண்­மைக்­கா­ல­மாக ஞான­சாரர் என்ற பௌத்த குரு ஒரு­வரின் தீவி­ர­மான போக்­குப்­பற்றி நாடே அதிர்ந்து போயி­ருந்­ததை நாடே­ய­றியும். ஞான­சார தேரர் பௌத்­த­மத போத­னை­க­ளையும் பௌத்த மத உயர் பீடங்­க­ளையும் சங்­க­டப்­ப­டுத்தும் வகையில் நடந்து கொள்­கிறார் என பௌத்த தலை­வர்­களே எச்­ச­ரித்­தி­ருந்­தாலும் பௌத்த உயர் பீடங்­களின் ஆசீர்­வா­தமும் பல சந்­தர்ப்­பங்­களில் ஆத­ர­வா­கவும் அனு­ச­ர­ணை­யா­கவும் இருந்து வந்­துள்­ள­தாக குற்றம் சாட்­டப்­பட்டு வரு­கி­றது. அதனை நிரூ­பிக்கும் வகையில் ஊடக மா­நாட்டில் (20–6–2017) வெளி­யிட்ட ஊடக அறிக்­கையின் மூலம் அறிந்து கொள்ள முடி­வ­துடன் இந்த ஊடக அறிக்கை பௌத்த பீடங்­க­ளினால் அர­சாங்­கத்­துக்கு விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­யா­கவும் கொள்­ளலாம்.

    நம் நாட்­டுக்கும் சிங்­கள இனத்­துக்கும் பௌத்த சாச­னத்­துக்கும் சிக்கல் நேரிடும் போதெல்லாம் பௌத்த பிக்­குகள் உயிரைக் கொடுத்து எம் நாட்டை பாது­காக்க முன்­வந்­துள்­ளனர். அந்த வகையில் இப்­பொ­ழுது நடந்­து­கொண்­டி­ருப்­ப­வற்றை பார்த்துக் கொண்டு அமை­தி­யாக எங்­களால் இருக்க முடி­யாது. அசட்டை செய்ய முடி­யாது என சியம் நிக்­கா­யாவின் அஸ்­கி­ரியத் தலை­மையின் நிறை­வேற்றுக் குழு எடுத்த தீர்­மா­னமே ஊடக அறிக்­கை­யாக வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

    இன­வாதத் தொனியில் கருத்து வெளி­யிடும் சில அர­சி­யல்­வா­திகள் மீது இந்­த ­அ­ர­சாங்கம் நட­வ­டிக்கை எடுப்­பதை விட்­டு­விட்டு, அவர்­க­ளுக்கு பதில் அளிக்க முயலும் பிக்­குமார் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முனையும் அர­சாங்­கத்­துக்கு எமது அதி­ருப்­தியை தெரி­வித்துக் கொள்­கின்­றோ­மென அவர்கள் கூறி­யி­ருந்­தார்கள்.

    ஞான­சா­ர­தே­ரரின் செயற்­பா­டு­க­ளுக்கு ஆசீர்­வாதம் வழங்­கு­வது போலவும் அர­சாங்­கத்தைக் கண்­டித்தும் பொல­ன­றுவை பிர­தான பௌத்த சங்கத் தலைவர் உடு­கம, தம்­மா­னந்த ஹிமி கடந்த (20.06.2017) திகதி ஊடக மா­நாடு நடத்தி இவ்­வ­றிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார்.

    இவ்­வா­றெல்லாம் பார்க்­கின்­ற­போது இலங்­கையில் பௌத்த மேலா­திக்­க­மா­னது சகல துறை­க­ளையும் கட்­டுப்­ப­டுத்தும் சமய ஆதிக்கம் கொண்டதாகவும் வழி­ந­டத்தும் சட்­டம்பி போலவும் இருந்து கொண்­டி­ருப்­பது இந்­நாட்டில் அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் கொண்டு வரும் ஒரு அகப்­புற சூழலை உரு­வாக்­கு­மென்று நம்புவதற்கில்லையென்ற சந்தேகமே வலுக்கொண்டு நிற்கின்றது.

    பௌத்தம் ஒரு மதம் மார்க்கம் என்ற வகையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு செல்லுமாயின் இந்நாட்டில் எந்தவொரு பிரச்சினையும் தலைதூக்குவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகப் போவதில்லை. பதிலாக சகல துறைகளிலும் ஊடுருவிச் செல்ல நினைக்கின்றபோது தான் நாட்டில் சவால்களும் பிரச்சினைகளும் உருவாகின்றன. இதுதான் இந்த நாட்டின் தலைவிதியாகவும் இருந்து கொண்டிருக்கின்றது.

    இன்றைய சூழலில் தமிழ் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அரசியல் மயப்பட்ட தீர்வொன்று காணப்பட வேண்டுமென்ற உண்மைநிலை அனைத்து தரப்பினராலும் உணரப்பட்டிருக்கின்றபோதும் அவற்றுக்கான சவால் எங்கிருந்து பிறந்து வருகிறதென்றால் மத பீடங்களிலிருந்து பிறந்து வருவதே ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாக காணப்படுகிறது.

    நீதி அமைச்சர் விஜேதாஸவின் விவகா­ரமானது அவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாகப் பார்ப்பதற்கு அப்பால் பௌத்தத்தின் பாதுகாவலன், இனத்தின் நாயகன் என்ற உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லுமளவுக்கு தேரர்களும் பௌத்த பீடங்களும் அவருக்கு அனுசரணை வழங்குவது நாட்டின் இன்றைய இன நிலைமைகளை படம் போட்டுக்காட்டுவதாக அமைகிறது.

    இவ்வாறானதொரு சூழ்நிலையில் பௌத்த மேலாதிக்கத்தையும் சிங்கள ஆதிபத்தியத்தையும் தாண்டிக்கொண்டு அரசியல் தீர்வு, நல்லிணக்கம் என்பவற்றை எவ்வாறு காணப்போகிறோமென்பதுதான் பாரிய சவாலாக இருந்து கொண்டிருக் கிறது.

    திரு­மலை நவம்

    http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-26#page-2


About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply