எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி? (காணொளி)  

எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி? (காணொளி)

அகில இலங்கைக் கம்பன்கழக இளநிலை நிர்வாகிகள் கடந்த டிசம்பர் மாதம் சொல்விற்பனம் சிறப்பு நிகழ்ச்சியினை “எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி..” எனும் பொருளில் அறங்கூறு அவையமாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக பாரளுமன்ற உறுப்பினர்களான கௌரவ த.சித்தார்த்தன், கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கௌரவ மனோ கணேசன், கௌரவ ம. ஆ. சுமந்திரன், ஆகியோரும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான திரு. சி.தவராசா, திரு. க. சிவாஜிலிங்கம் ஆகியோரும், மேல்மாகண சபை உறுப்பினர் திரு. சண். குகவரதன் அவர்களும் கலந்து கொண்டனர்.
“எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி.” எனும் பொருளில் இடம்பெற்ற  இவ் அறங்கூறு அவையத்திற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ், கம்பன்கழக நிறுவுநர் கம்பவாரிதி இ.ஜெயராஜ், கொழும்பு பல்கலைக் கழக சட்டபீட முதுநிலை விரிவுரையாளர் அ.சர்வேஸ்வரன், பேராதனைப் பல்கலைக்கழக அரசியற்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ச. பாஸ்கரன், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன் ஆகியோர் நடுவர் ஆயத்தினராக இருந்தனர். எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே !  என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தனும், தமிழ் மக்கள் கூட்டணியே! என தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைப் பரப்புச் செயலர் க. அருந்தவபாலனும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே! என யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா. செல்வவடிவேலும், ஜனநாயக மக்கள் முன்னணியே! என மேல் மாகாண சபை உறுப்பினர் கே.ரி. குருசாமியும் வாதிட்ட இந்நிகழ்வின் காணொளியினை வெளியிடுகின்றோம்.
பகுதி
1https://youtu.be/cT_yX48dKVY https://youtu.be/cT_yX48dKVY
About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply