பதினெண் கீழ்கணக்கு நூல்கள்
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன.இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும்.
பதினெண் கீழ்கணக்கு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.
இந்த பதினெண் கீழ்கணக்கு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.
1.அற நூல்கள்:
காதலுக்கும்,வீரத்திற்கும் அற நெறிகளை வலியுறுத்திச் சொல்லப்பட்ட இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்பட்டன. மேலும் இவை வாழ்வு நூலாக போற்றப்படுகின்றன.
இப்பிரிவில்,
1.நாலடியார் (Naaladiyar)
2.நான்மணிக்கடிகை (Naanmanikadikai)
3.இனியவை நாற்பது (Iiniyavainarpadhu)
4.இன்னா நாற்பது (Innanarpadhu)
5.திரிகடுகம் (Thirikadugam)
6.ஆச்சாரக் கோவை (Acharakovai)
7.சிறுபஞ்சமூலம் (Sirupanchamoolam)
8.முதுமொழிக்காஞ்சி (Mudhumozhikanchi)
9.பழமொழி நானூறு (Pazhamozhinaanooru)
10.ஏலாதி (Elathi)
11.திருக்குறள் (Thirukural)
ஆகிய பத்து நூல்களும்,
2.அகப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
1.கார் நாற்பது (Kaarnarpadhu)
2.ஐந்திணை ஐம்பது (Iiynthinaiiympadhu)
3.திணைமொழி ஐம்பது (Thinaimozhiiympadhu)
4.ஐந்தினை எழுபது (Iynthinaiezhupadhu)
5.திணைமாலை நூற்றைம்பது (Thinaimaalainootruiympadhu)
6.கைந்நிலை (Kainilai)
ஆகிய ஆறு நூல்களும்,
3.புறப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
1.களவழி நாற்பது (Kalavazhinarpadhu)
ஆகிய ஒன்றும் அடங்கும்.
மேலும் இன்னிலை (Innilai) என்ற நூல் கூட இப்பிரிவினைச் சார்ந்ததாக சிலர் கருதுகின்றனர்.
– கேஆர்.சக்தி வேல்
பதிணென் கீழ்க்கணக்கு அற நூல்களில் பெண்மை
chrome-extension://gphandlahdpffmccakmbngmbjnjiiahp/http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/77865/11/11_chapter4.pdf
Leave a Reply
You must be logged in to post a comment.