கிளிநொச்சி மாவட்டத்தின் உயிர்நாடி இரணைமடுக் குளம்

கிளிநொச்சி மாவட்டத்தின் உயிர்நாடி இரணைமடுக் குளம்

ந.லோகதயாளன்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய வருமானத்திற்கும் பெருதும் உதவுவதோடு அந்த மாவட்டத்தின் வாழ்வுக்கும் உயிர்நாடியாக இருப்பது இந்த இரணைமடுக் குளம்  என்றால் அது மிகையாகாது.

இவ்வாறு காணப்படும் குளமானது 1906ம் ஆண்டு முதன் முதலாக கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1922ம் ஆண்டு நீர்ப்பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு முதன் முதல் மேற்கொண்ட குள அமைப்புப் பணியானது முழுமையாக மனித வலுவால் அமைக்கப்பட்டது. இவ்வாறு 1922ம் ஆண்டு அமைக்கப்பட்ட குளமானது 22 அடி கொள்ளவாக காணப்பட்டது. அதன் பின்னர் 1951ம் ஆண்டு குளத்தில் பாரிய அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு அதன் கொள்ளவு 30 அடியாக உயர்த்தப்பட்டது.Image result for iranamadu kulam

இவ்வாறு 30 அடியாக்க் காணப்பட்ட குளம் மீண்டும் 1954ம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டுவரை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 32 அடியாக கொள்ளவு அதிகரிக்கப்பட்டது. இதன் நிறைவிலேயே அப்போதைய பிரதமர் டி..எஸ்.சேனநாயக்கா வருகை தந்து நினைவுக் கல் ஒன்றையும் திறந்து வைத்தார்.

போர் காலத்திலேயே அழிக்கப்படாத நினைவுக்கல்லை தற்போதைய ஜனாதிபதிக்காக இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.

அவ்வாறு  டட்லி சேனநாயக்கா  அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கல்லானது இத்தனை ஆண்டு காலம் இடம்பெற்ற போரின் போது புலிகளாலும் அதன் வரலாறு கருதிப் பேணப்பட்டது.

இவ்வாறு  காணப்பட்ட குளம் தொடர்பில் விடுதலைப் புலிகளின் வேண்டுதலின் பெயரில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட  நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட இரணைமடுக் குளமானது தற்போது  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் திறந்து வைக்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2 ஆயிரத்து 130 மில்லியன் ரூபா செலவில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பமான அபிவிருத்திப் பணிகள்   2018ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவுற்றது. இவ்வாறு இடம்பெற்ற அபிவிருத்திப் பணியின் மூலமே 34 அடி கொள்ளவாக காணப்பட்ட இரணைமடுக் குளமானது அதன் கொள்ளவு 36 அடியாக உயர்த்தப்பட்ட நிலையில் குளமும் 36 அடி நீரை முழுக் கொள்ளவாக காணப்படுகின்றது.

2000ஆம்  ஆண்டு முதன் முதல் கோரிக்கை விடப்பட்டு  சமாதான காலத்தில் இரணைமடுக் குள அபிவிருத்தி, யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர்த் திட்டம், யாழ்ப்பாண மாநகர சபைப் பிரதேச பாதாள சாக்கடைத் திட்டம் என ஒருங்கிணைந்த 3 திட்டங்களாக செயல்படுத்த ஆரம்ப மதிப்பீடுகள், திட்ட முன்மொழிவுகள், மாதிரிப் படத் தயாரிப்புக்கள் இடம்பெற்ற வேளையில் போர் ஆரம்பித்த காரணத்தினால் திட்டம் தாமதப்பட்டது.

குளப் புனரமைப்பிற்கான ஒப்பந்தம்.

இவ்வாறு தற்போது அபிவிருத்தி செய்யப்பட்ட இரணைமடுக் குளத்தின் புனரமைப்பிற்காக  2007- 07-13 அன்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானபோதும் போரால் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

இதன் பின்னர் போர் முடிவுற்ற நிலையில் ஆரம்பிக்க முற்பட்டநிலையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர்த் திட்டம் தொடர்பில் எழுந்த எதிர்ப்பினால் இரணைமடு அபிவிருத்தி மட்டும் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு  முன்னெடுக்கப்பட்ட இரணைமடுக் குளத்தினையே  திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த 2018-12-07 அன்று  வருகை தந்தார். அவ்வாறு வருகை தந்த ஜனாதிபதி ஓர் வரலாற்றை அழித்துவிட்டுச் சென்றுள்ளார். இனத்தையே அழித்தவர்களுக்கு வரலாற்றை அழிப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல.Image result for iranamadu kulam

இனத்தையே அழித்தவர்கள் இன்று வரலாற்றையும் அழித்தனர்

அதாவது 1954ஆம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை இடம்பெற்ற அபிவிருத்திப்  பணிகள் நிறைவடைந்த நிலையில் இலங்கையின் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்க குளத்தை திறந்து வைக்கப்பட்ட நிலையில் அன்றைய நாளில் ஓர்  நினைவுக் கல்லையும் திறந்து வைத்தார். அவ்வாறு திறந்து வைக்கப்பட்ட கல்லே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைத்தார் என பெயர் சூட்டுவதற்காக இரவோடு இரவாக 2018-12-06 அன்று   இடித்து அழிக்கப்பட்டு புதிய கல்லை நாட்டிய நிலையில்  தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது பெயரை பொறித்து  திறந்து வைத்துள்ளார்.

ஈழத்தில் மரணித்தவர்களின் கல்லறையினையே இடித்து அழித்து வரலாற்றை அழிக்க முனைந்தபோது தென்னிலங்கை வாய் மூடி மௌனமாக இருந்ததன் அறுவடை இன்று தெற்கின் ஓர் தலைவரின் நினைவுக் கல்லையும் இடித்து வரலாறுகளை மறைக்க முனைகின்றனர்.

இதேநேரம் இவ்வாறு வடக்கு மாகாணத்திலேயே மிகப்பெரும் சொத்தாக காணப்படும் இந்த இரணைமடுக் குளத்தை  நம்பியே ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து பலர் கிளிநொச்சியில் சென்று குடியேறிய வரலாறுகளும் உண்டு. இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் உள்ள போதிலும் தற்போது 21 ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்திற்கே நீர்ப்பாச்சும் வாய்க்கால் வழிப்பாதைகளும் குறித்த அளவு நிலங்களிற்கு மட்டுமே சட்ட பூர்வமான பதிவுகள் உண்டு.

இரணைமடுக் குளத்தினால் முழு மாவட்டமே நன்மை அடையும்

அதாவது  இக் குளத்தின் பாச்சல் தறைகளின் ஓரம் மேலும் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளபோதும் இதற்கு நீர்ப்பாச்சும் வசதி இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.  இதேநேரம் இரணைமடுக் குளத்தின் கீழ் 1965 ஆம் ஆண்டு முதன் முதலாக திருவையாறுக் கிராமத்திற்கு ஏற்று நீர்ப்பாசனம்  வழங்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் 1977 ஆம் ஆண்டு மேலும் பெருப்பிக்கப்பட்டு அது ஆயிரத்து 200 ஏக்கர் மேட்டு நிலப் பயிர் செய்கைக்கும் நீர் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்டு வந்த ஏற்று நீர்ப்பாசனம்  2ம் கட்ட ஈழப்போருடன் முழுமையாக அழிவடைந்தது.

அவ்வாறு அழிவடைந்த ஏற்று நீர்ப்பாசனமும் தற்போது புனரமைக்கப்பட்டு சுமார் 600 ஏக்கர் நிலத்திற்கு நீர் பாச்சும் வசதி ஏற்படுத்தப்படுகின்றது. இவ்வாறு காணப்படும் இரணை மடுக் குளத்தில் இரு நன் 

னீர் மீன் பிடிச் சங்கங்கத்தின் ஊடாக சுமார் 180 மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவை அனைத்திற்கும் அப்பால் தற்போது இரு பெரிய நீர்த்தாங்கிகள் கட்டப்பட்டு குடிநீர் வசதிகளும் வழங்கப்படும் அதேநேரம் மேலும் சில பகுதிகளிற்கு விஸ்தரிக்கும் முயற்சியும் இடம்பெறுகின்றது.

இவ்வாறு மாவட்டத்தின் பல தேவைகளை நிறைவேற்றும் கிளிநொச்சியில் அமைந்துள்ள முத்து இன்று வட மாகாணத்திற்கே சொத்தாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


President Sirisena Drowns His Woes In The Waters Of Iranaimadu

FacebookTwitterGoogle+Share126

It is the observation of most persons that all signs are that if judged strictly in terms of the law, the cases against the dissolution of Parliament will go against President Sirisena. The Attorney General seemed at a total loss as his arguments were demolished and many openly sniggered at his loss for words especially when it was pointed out that he had expressed opinions in 2015 at the passage of the Nineteenth Amendment that were the opposite of what he was defending this week. The President’s lawyer had become the laughing stock in a court where he was by custom the most respected lawyer in the land.

President Sirisena now has hopes only on two fronts. First that the political threats interjected by his lawyers of precipitating chaos in the country if the apex court decided against the President will lead to a political decision. And secondly that the freshly restarted effort to buy more MPs (as confided by a Joint opposition MP) while the judgment is delayed will yield results.

A political scientist of some experience and of the UNP persuasion observed: “Hoping against hope is rather vain and Sirisena knows it. His advisers have consistently given him advice that led him deeper into trouble. So what does he do? He is drowning his judicial and political woes of his own creation and unbridled ambition in the waters of the Iranaimadu Tank. His project is to make claims for having constructed the colonial era Iranaimadu Tank near Kilinochchi and destroy any legitimate claims the UNP might have made towards its construction. Politics, as happens all too often, has transcended the need for historical accuracy.”

Plaque on the Monument to D.S. Senanayake on whose Orders the Tank was Augmented

Work on the Iranaimadu tank was begun in 1906 under the British colonial authorities and finished in 1921. The work was entirely by hand without excavation machinery. Although unconfirmed, it is believed that Malayali labour was imported and used. Irrigation of fields began in 1922. The bund was 22 feet high then. 

By 1951 the bund was raised to 30 feet, that augmentation having been initiated on the orders of the first Prime Minister D.S. Senanayake. In the period 1954 to 1956 it was raised again, this time to 32 feet under Dudley Senanayake as Minister of Agriculture and Lands. Dudley Senanayake built a monument to his father at the time. The plaque he erected is pictured here.

In 1977 the bund was raised to 34 feet and, now with Rs. 2130 million from the Asian Development Bank, work was completed in Sept 2018 raising it to 36 feet. 

Said the above quoted Political Scientist, “This is where Sirisena stepped in seeking solace through credit claims for all the work done and erasing the records of what others had done.”

Indeed, seemingly seeking emotional support, Sirisena suddenly decided to obliterate any credit the UNP may make towards the development of Kilinochchi – even if history had to be rewritten. The monument to DS was bull-dozed in the last few days, and a new monument to Sirisena was erected using a tablet hurriedly etched in Colombo and brought to Kilinochchi. 

Sirisena opened the plaque to his glory on 6 Sept. watched by officials who had to come, hangers-on and those seeking favours.


President Sirisena Drowns His Woes In The Waters Of Iranaimadu

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply