The demise of top strategist setback for LTTE

Life and times of Balaraj

The demise of top strategist setback for LTTE

By Ranga Jayasuriya

     May 25, 2008

The most ruthless yet effective military strategist of the Liberation Tigers of Tamil Eelam died of a cardiac arrest on Tuesday. Balasegaram Kandiah better known as Balaraj was the chief military strategist of the LTTE and at the time of his sudden demise, he was overseeing the LTTE’s thrust in the Mannar and Weli Oya front where the security forces are pushing into Tiger territory despite his failing health.

Balaraj along with the former Eastern Tiger commander Vinayagamoorthy Muralitharan alias Karuna shaped the LTTE’s military strategy during the third Eelam war (During the latter years of the third Eelam war which saw the emergence of Theepan and Banu, the former now functions as the northern front commander of the LTTE. Theepan was Balaraj’s deputy when the Tigers fought advancing troops engaged in Operation Yal Devi).

The death of Balaraj is likely to leave a huge vacuum within the LTTE, of which the senior leadership is gradually ageing and the battle proven second-rung leadership is overstretched in multiple battlefronts. Balaraj is also the third top rung Tiger leader who died in recent times. Earlier, the chief theoretician of the LTTE, Anton Balasingham died of natural causes in England and political chief S.P.Thamiselvan was killed in an air strike.

In 1991, Balaraj formed and commanded the Charles Anthony Brigade, the first semi-conventional military unit of the LTTE. He was reported to have been training a group of new military commanders of Tiger cadres at the time of his sudden demise.

‘Brigadier’

Balaraj is ranked second in the LTTE’s military structure next to Prabhakaran. Even when he was alive, he was ranked as ‘Brigadier’ in the LTTE’s hierarchy – Tamilselvan was promoted to the rank of ‘Brigadier’ only posthumously
His death leaves Sea Tiger Chief Thillaiambalam Sivanesan alias Soosai and Intelligence chief Shanmuganathan Sivasankaran alias Pottu Amman in the top rung leadership of the LTTE.  

Funeral arrangements of Balaraj caused a security nightmare for the LTTE, of which cadres are already stretched out along several fronts.
A tight security cordon was imposed by the Tigers in the three days of mourning as many senior Tiger leaders arrived to pay their last respects to the top Tiger commander.
Frequent road patrols and search operations have been carried out in Kilinochchi, according to the reports from the Wanni.

All these measures were intended to prevent infiltration and attacks by the Long Range Reconnaissance Patrol (LRRP) teams of the Sri Lankan Army. 

Balaraj, as the story goes, commanded the battle from the front. This has been a reason for several of battlefield injuries he suffered, of which complications continued to have their toll on his health. He was also reported to be suffering from diabetic conditions from a very young age. Balaraj was injured on several occasions- three times fighting the Indian Peace Keeping Force and later during a counterattack against Operation Yal Devi in 1991.

In 1991 his leg was saved from amputation on the decision of LTTE medicos and he underwent a painful task of leg repair, but he continued to suffer complications of the surgery.
Balaraj fell ill early this year and was hospitalized for two weeks for heart conditions, according to sources familiar with the LTTE.

He was noticeably absent in the battlefront during the first year of the fourth Eelam war due to failing health. However, with the increased military focus in the Weli Oya and Mannar fronts, he reappeared to take the overall command of the LTTE’s operations on both fronts.

Balaraj despite his high profile military role kept away from the limelight of the media. He represented the hardline military thinking of the LTTE and was the leading exponent of a military option to win Eelam. That explains why he was not included in the LTTE team which participated in peace talks.

Able lieutenant

Yet, he was among the most trusted and able lieutenants of Tiger chieftain Prabhakaran and is reported to be revered by his cadres.

Prabhakaran in a condolence message described him as an “idealistic fighter” who “brought us victories”
“The man, who was at the center of many of our Himalayan victories, the heroic military leader, who trained, guided and fought with our fighting formations and conventional brigades, is with us no more. Our nation is in profound grief at his loss.

I loved him deeply as an exceptional military leader. I recognized in him, from the very beginning, the rare martial nature and martial characteristics that were natural to him. I saw him develop as an idealistic fighter with great skill and leadership,”

Fear

His ability to move the fighting units, his focused actions, and his martial characteristics struck fear in the hearts of the enemy. These same characteristics strengthened the conviction and morale of our fighters. They brought us victories.

The LTTE declared three days of mourning in the Wanni and thousands thronged to pay him their last respects. His last rites were held in” Mulliyavalai.

Pro LTTE Tamilnet website flashed pictures of LTTE leader Velupillai Prabhakaran paying his last respects to his top military commander. Later On Friday, his casket was taken in a procession from Kilinochchi to Puthukkudiyiruppu and was placed in Puthukkudiyiruppu Central College.

It was later taken to Mullaitivu Maha Vidyalam and later to the LTTE cemetery in Mulliyabalai, where his funeral was held and was attended by a large number of senior Tiger leader, including Pottu Amman, Soosai, LTTE Political Head, B. Nadesan, Theepan, Tiger Commander Jeyam, LTTE Military advisor Dinesh, Head of the Education unit of Tamil Eelam, Ilankumaran, Head of LTTE justice department, Para, LTTE cadre Thamilenthi, Mannar division commander Laxman.

Balaraj was largely credited for the greatest military feat of the LTTE, which is the capture of the Elephant Pass military garrison in 2000.

Balaraj’s military planning in the EPS attack defied the conventional military wisdom; he commanded a formation of 1,200 Tiger cadres who carried out a daring sea landing in Chempionpattu, Kudarappu in the periphery of the EPS garrison. Having consolidated Kudarappu, they pushed towards Vathirayan and through a surprise attack neutralized the artillery positions and captured what was identified as Vathirayan box.

From there Balaraj led 1,200 cadres who crossed a narrow lagoon, heading towards the A- 9 Highway. They captured a 4 km stretch of the A- 9 road, which is the Main Supply Route, from EPS to Pallai, thereby effectively cutting off supplies to the troops deployed in the EPS military garrison.

Balaraj’s strategy to land in Kudarappu and the general area of Vathirayan box is one of the most daring military plannings in the history of the LTTE- simply put, It was a do or die mission as the failure to overrun the EPS garrison would have effectively locked the Tigers in the middle of a military controlled area without a proper supply route and surrounded by 10,000 soldiers.

On the contrary, the capture of the four km stretch on the A-9 road cut off the MSR of the security forces, forcing the security forces to a humiliating pull back from the garrison, which was guarded by 10,000 troops in response to the offensive waged by not more than 1500 LTTE cadres led by Balaraj.

Later in the hey days of the peace process, Balaraj underwent heart surgery in Singapore in 2003.

Balaraj joined the LTTE as a part-time member in 1983 at the age of 18. He became a full- time member, a year later and was trained in Tamil Nadu under the ninth batch of LTTE cadres who underwent military training facilitated by the Indian Intelligence service, RAW.

He was wounded when his team was set upon by the Army even before they leave for Tamil Nadu for formal training. During the confrontation, several LTTE cadres were killed.

He returned to the Wanni in 1986 and a year later, he would fight his mentor, the Indian Army. He fought bitter urban battles against the IPKF in the Jaffna peninsula and said to have destroyed a battle tank of the Indian Army. When the LTTE was driven to the jungles, he moved to Weli Oya, closer to his village Kokkuthuduvai.

He is credited with offering the IPKF unprecedented resistance and thereby established himself as a fearless Tiger commander.

Later, after the break up of the second and third Eelam wars, each after a short-lived peace negotiations with the LTTE, Balaraj led several military operations. He was badly wounded during the military operation Yal Devi and his leg was narrowly saved from amputation, but he continued to suffer from complications and had been a diabetic patient which in recent years made him redundant in the battlefront. During recent years, his main concern has been the training of the Tiger field commanders at various levels. Several training centres which have been set up to this effect have been personally handled by Balaraj.

Narrowly escaped death

Balaraj narrowly escaped death when the Indian Ocean tsunami hit the coastal belt of Sri Lanka in 2004. He was then based in Vakarai, the former Tiger enclave on the eastern coast which was decimated by the tsunami.

Later in 2006, as the security forces launched military operations to recapture the East, Balaraj was noticeably absent from the battlefront. Balaraj was reported to be in and out of hospital most of last year. Two years ago, when a group of senior Tiger leaders appeared in a picture along with Prabhakaran and his wife Mathivathani commemorating Anton Balasingham, a man whose face was blacked out sitting in a wheelchair appeared in the picture.

Military circles suspected that it was Balaraj and that his leg had finally been amputated. The verification of these reports was a tedious task as the man lived in obscurity. Finally, it was a media communique‚ by the LTTE, which appeared in the LTTE’s peace secretariat website that informed the south that the man who was a mystery to the South is dead and gone once and forever.

Profile

Name: Balasegaram Kandiah alias Balaraj
Born: 27, November 1965 in Kokkuthuduvai, Mullaitivu District
1983: Joined the LTTE as a part time member.
1984: Became a full time member.
1985: Trained in Tamil Nadu by RAW under the 9th Intake of the LTTE cadres.
1986: Returned to Jaffna
1987-89: Fought the IPKF
1990: Took part in the LTTE attack on the Mankulam military camp.
1991: Took part in the failed LTTE attack on the Elephant Pass military camp
1993: led a counter attack against Operation Yal Devi and wounded in the battle.
1995: Led the Tiger cadres against Operation Riviresa, which eventually captured the Jaffna Peninsula.
1996: Functioned as coordinating com mander in the LTTE’s first unceasing waves operation (Unceasing Waves I) which captured the Mullaitivu military camp.
1997-1998: Led a protracted counter Operation against the Operation Jayasikuru, which was eventually abandoned.
2000: Commanded the Unceasing Waves III which overrun the EPS Military Garrison
2003: had a heart attack and underwent a surgery in Singapore
2004: Narrowly survived in the Indian Ocean Tsunami
20 May 2008: Died of a heart attack


தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.

பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டுவிட்டால், எமக்கு துன்பதுயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ்சுக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களிலெல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.
தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன்.

அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல்மிக்க, ஆளுமைமிக்க இலட்சியப்போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படைநகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.

பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே.பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Peace Secretariat of the Liberation Tigers of Tamileelam.
Kilinochchi
Tamileelam.


ரொறன்ரோ
மே 21, 2008

அகவணக்கம்

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கம்!
வீரம் கொழிக்கும் வன்னி மண்ணின் வித்தே!
படை பல நடத்தி பகை வென்றவனே
களம் பல ஆடி விழுப்புண் பட்டவனே
மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவனே
தானைத் தலைவனோடு கை கோர்த்து நடந்தவனே
முப் பொழுதும் அவனுக்குத் தோள் கொடுத்தவனே
அவன் சுட்டுவிரல் காட்டும் திக்கெல்லாம் பாய்ந்தவனே!
எதிரி உன் பெயர் கேட்டு நடுங்கினான்
ஆனை இறவுப் போரில் தளபதி பால்ராஜை
நாற்புமும் சுற்றிவளைத்து முற்றுகைக்கு ஆளாக்கிவிட்டோம்
பால்ராஜ்யை அந்தக் கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது
உயிரோடு பிடிப்பதா அல்லது சுட்டுக் கொல்வதா?
இரண்டிலொன்று நிச்சயம் என எதிரி கொக்கரித்தான்
பால்ராஜ்ஜின் கதை முடிந்து விட்டதாக சிங்களம் சிரித்தது!
எதிரியின் நெருப்பு மழையில் குளித்த வண்ணம்
விடுதலைப் புலிகளின் தளபதி சிலிர்த்து எழுந்தான்
முற்றுகையை உடைத்தான் எதிரியைப் பந்தாடினான்
ஆனையிறவைப் பிடித்தான் புலிக்கொடி ஏற்றினான்
வாகை சூடினான் வீர வரலாறு படைத்தான்
கடல்வழி சென்று குடாரப்பில் கரை இறங்கியவன்
வெற்றிக் களிப்போடு தரைவழி பாசறை திரும்பினான்
தானத் தலைவன் எமக்குக் கிடைத்த சொத்தென்றான்
காலமகள் தந்த விலை மதிப்பற்ற பரிசென்றான்
அவன் காலத்தில் தமிழீழம் மலரும் என்றான்
வீரர்களுக்கு மரணம் இல்லை மறைவும் இல்லை
வானும் நிலவும் காற்றும் மண்ணும் கடலும்
மலையும் உள்ள வரை தமிழ் நெஞ்சங்களில்
புலிகளின் தளபதி நீ நீக்கமற நிறைந்திருப்பாய்!
இனியுன் பெயர் சொல்லிப்  புலி வீரர்
எதிரி படை மீது புயல்போல் பாய்வர்;!
தமிழ் மண் மீட்பர் தமிழ்மானம் காப்பர்
புலிக் கொடி விண்ணில் ஆடி அசைந்தாடும்
உன் தமிழீழக் கனவு விரைவில் நினைவாகும்
அதுவரை ஓயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம்!
உன் கல்லறையில் நின்று சூள் உரைக்கிறோம்!


ஈழத்தின் முதுபெரும் போரியல் வல்லுணர் பிரிகேடியர் பால்ராஜ்.
 அ.மயூரன்,
 

தமிழீழ விடுதலைப் போராட்ட சண்டைக் களங்களில் பால்ராஜ் என்ற மந்திரச் சொல் சிங்களத்தின் சேனைகளை கலங்கடித்து நின்ற வேளை வானலைகளில் எம் காதுக்குள் வந்த செய்தி பொய்க்காதா என ஏங்க வைத்த பிரிகேடியர் பால்ராஜ் (கந்தையா பாலசேகரன்) அவர்களின் மறைவு உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை உலுக்கி பெருந்துயரில் ஆழ்த்தியது. தமிழீழத்தின் இதயபூமி எனப்படும் கொக்குத் தொடுவாயை பிறப்பிடமாகக் (27.11.1965) கொண்ட இவர் 1983 போராட்டத்தில் உள்வாங்கப்பட்டு இந்தியாவிலே 9வது பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக் கொண்டு வன்னி திரும்பியவர்

13.02.1985, அன்று கொக்கிளாயில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது சிறிலங்கா இராணுவத்தின் முகாம் மீதான தாக்குதலின் மூலம் தமிழீழ போரியல் வரலாற்றில் காலடி எடுத்து வைத்த பால்ராஜ். அதனைத் தொடர்ந்து மணலாற்றில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தும் பாரிய முயற்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். அதிலும் குறிப்பாக முந்திரிகைக் குளம், கொக்கைச்சான் குளம், ஆகிய இடங்களில் ஏற்படவிருந்த சிங்களக் குடியேற்றங்களையும், படை நகர்வுகளையும் தடுத்து நிறுத்தி தனது போரியல் யுத்தியினை வெளிப்படுத்தினார்.

தேசியத்தலைவர் அவர்கள் மணலாற்றில் இருந்த காலத்தில் அவரையும் போராளிகளையும் பாதுகாக்கும் நோக்குடன் வன்னியில் உள்ளகப் பாதுகாப்புப் பிரிவினை நிறுவி மேஜர்.பசீலன், லெப்.கேணல்.நவம், லெப்.கேணல்.கிறேஸி, கரும்புலி லெப்.கேணல்.போர்க், ஆகியோருடன் இணைந்து மிகத்திறமையாகச் செயற்பட்டு வன்னியி;ல் இந்திய இராணுவத்தின் அத்தனை வியூகங்களையும் முறியடித்து தனது திறமையை நிலைநாட்டி தேசியத்தலைவரின் நம்பிக்கையையும் றெ;றதோடு இந்திய இராணுவத்தையும் வியப்பில் ஆழ்த்தியவர் பால்ராஜ்.

இந்திய இராணுவம் வெளியேறிய போது வன்னிக்கான ஒருங்கிணைப்புத் கட்டளைத் தளபதியாக பதவி ஏற்றப்பட்டு வன்னியில் தடைக்கற்களாக இருந்த கொக்காவில், மாங்குளம், கிளிநொச்சி, முகாம்களைத் தகர்ததோடல்லாமல் முல்லைத்தீவுத் தளத்தை விரிவாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட கடற்காற்று போன்ற இராணுவ நடவெடிக்கையை தடுத்த சமருக்குத் தலைமை வகித்தவர். மாங்குளம் முகாமிலேயே முதன்முதலில் 50 கலிபர் இயந்திரத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1991 ஜூலை யில் இடம்பெற்ற ஆகாயக் கடல்வெளிச்சமரில் (பலவேகய 01) இலங்கையில் இரண்டு இராணுவம் இருக்கின்றது. என சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியதில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் இணைந்து முக்கிய பங்காற்றியவர். தென்முனையினூடாக ஊடுருவி சிறப்பான தாக்குதலை ஒருங்கிணைத்து நடாத்தி மரபுவழிப் படையணியாக மாற்றுவதில் பெரும்பங்கெடுத்தவர். இதன்மூலம் இவர் உலக இராணுவ விற்பணர்கள் வியக்கத்தக்க வகையில் புதிய புதிய யுத்திகளை அறிமுகப்படுத்தி தனது போரியல் திறமையை மரபுவழியாக மாற்றுவதில் வெற்றிகண்டார். புலிகள் இயக்கத்தில் புதிய யுத்த தந்திரோபாயங்களை அறிமுகப்படுத்தினார்.

இதன் வெளிப்பாடாக உருவான தேசியத்தலைவரின் கனவுக்கு செயல் வடிவம் கொடுத்து 1991 இல். முதலாவது சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனிப் படையணியை உருவாக்கி அதன் முதலாவது சிறப்புத்தளபதியாக 1993 வரை செயற்பட்டார். 1991 களில் வவுனியா மாவட்டத்தில் நடந்த “வன்னிவிக்கிரம” படை நடவெடிக்கையை முறியடித்து தமிழீழப் போராட்டத்தில் முதன்முதலான மரபுவழி நேரடித்தாக்குதலை நடாத்தி உலங்குவான் ஊர்தி ஒன்றையும் சுட்டு வீழ்த்தி தான் ஒரு தலைசிறந்த போரியல் ஆசான் என நிலை நிறுத்தினார். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய அனைத்துப் போரியல் வியூகங்களுக்கும் அடித்தளமிட்டவர் இவரே. 1995 – 1997 வரை மீண்டும் சாள்ஸ் அன்ரனியின் சிறப்புத் தளபதியாக விளங்கி அதனை பல உத்திகளும் உடைய சிறந்தபடையணியாகக் கட்டியெழுப்பினார்.

அதன்பின் மணலாறில் நடத்தப்பட்ட “மின்னல்” படை நடவெடிக்கையை சிறப்பாக முறியடித்தார். அத்துடன் 1993 இல்  கிளாலியில் இடம் பெற்ற யாழ்தேவி நடவடிக்கையில் தலமையேற்றிருந்த லெப்.கேணல். நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய உடனடியாக அங்கு சென்று ஒருங்கிணைப்புக் கட்டளைத் தளபத்pயாகச் தலமையேற்று அக்களம் தமக்குச் சார்பாக இல்லாதிருந்த போதும் குறுகிய நேரத்தில் எதிரிகளை முறியடித்து எதிரிக்கு பல இழப்புக்களை ஏற்படுத்தி சர்வதேச போரியல் நிபுணர்களை அதிரவைத்தார். அச்சண்டையில் காலில் ஊனமுற்ற நிலையிலும் தொடந்து நடைப்பயணங்களை மேற்கொண்டு  பல நூறு தால்குதல்களை நெறிப்படுத்தினார். அத்துடன் பல ஆயிரம் ஆயிரம் புலிகளையும் உருவாக்கி அவர்களுக்கு போரியல் கலை தொடர்பாக பல பயிற்சிகளையும் வழங்கினார்.

இந்த இடத்தில் பிரபல இராணுவ ஆய்வாளர் மாமனிதர் டி. சிவராம் அவர்கள் 2003 இல் வீரகேசரிக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையில் அமெரிக்க இராணுவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பிரிகேடியர் பால்ராஜ். அவர்கள் தலமையேற்று நடாத்திய யாழ்தேவி நடவடிக்கை, குடாரப்புத் தரையிறக்கம், தீச்சுவாலை, ஆகிய சண்டைகளின் வழிநடத்தல்கள் ஆகியவை ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உலகில் குறுகிய நேரத்தில் படை நடவடிக்கை ஒன்றை முறியடித்த போரியல் வீரர்களில் பால்ராஜ் அவர்களும் ஒருவர் என அவ் ஆய்வுக்கட்டுரை தெரிவித்ததாக சிவராம் அவர்கள் எழுதி அன்றைய தினமே பால்ராஜூக்குப் புகழாரம் சூட்டினார்.

அதன்பின் இடம் பெற்ற முன்னேறிப்பாய்தல் நடவெடிக்கையையும் தலமையேற்று முறியடித்து தலைவர் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். பின்னர் முல்லைத்தீவு தளம் தாக்கியழித்த நிகழ்வில் ஒருங்கிணைப்புத் தளபதியாகவும். பின் இடம்பெற்ற சத்ஜெய நடவெடிக்கையில் நேரடியாக களத்தில் வழி நடத்தினார். பின்னர் தாண்டிக்குளம், பெரியமடு, ஆகிய இடங்களில் இடம்பெற்ற செய் அல்லது செத்துமடி என்னும் ஊடறுப்புத் தாக்குதல் இவரது போரியல் திறமைக்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.

பொதுவாக தமிழ|Pழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த ஊடறுப்புத் தாக்குதல் அனைத்தையும் தலமையேற்று சிறப்பாக வழிநடத்தியவர். சிங்கள தேசம் எந்த ஊடறுப்புத் தாக்குதல் நடந்தாலும் அது பால்ராஜின் தலைமையில் நடந்தது அல்லது பால்ராஜ் அந்த இடத்தில் நிற்கின்றது என்று கூறம் அளவுக்கு அவரது போரியல் வல்லமை பாராட்டத்தக்கது. இலங்கையிலேயே தலைசிறந்த போரியல் வல்லுனன் பால்ராஜ் என்றால் அது மிகையாகாது. தேசியத்தலைவரின் நன்மதிப்பையும் பராட்டையும் பெற்றிருந்தவர் இவர்.

அதன்பின் நடந்த ஜெயசிக்குறு இராணுவ நடவெடிக்கைகளின் ஒட்டுமொத்த கட்டளைத் தளபதியாகவும் விளங்கினார். பின்னர் ஓயாத அலைகள் :03 இடம்பெற்றபோது அதில் பெரும்பங்காற்றியதோடு மட்டுமல்ல ஆனையிறவுத் தளம் மீட்புக்காக விடுதலைப்புலிகள் ஒரு தரையிறக்கம் மூலம் தமக்குச் சாதகமில்லாத எந்தப்பகுதியிலும் தாக்குதல் நடாத்தி வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் குடாரப்பு தரையிறக்கமும் இத்தாவில் ஊடறுப்புச் சமரும் நடாத்தி அங்கு 34 நாள்கள் எதுவித வழங்கல்களும் இல்லாமல் எதிரியின் தளங்களுக்குள்ளேயே நின்று புலிகள் ஆனையிறவை மீட்டு பளை வழியாக இத்தாவிலில் வந்து கைகுலுக்கும் வரை நின்று புலிகளின் போரியல் வியூகத்தை சர்வதேசம் வியக்கும் வகையில் நிகழ்த்தி ஆணையிறவு வெற்றியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். பால்ராஜ் தீச்சுவாலையின் ஒருங்கிணைப்புத் தளபத்pயாகவும் இவர் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறக்கும் வரை போர் அரங்கில் கட்டளைத்தளபத்pயாக விளங்கியவர். ஒரு நட்சத்திரத் தளபதியாக ஈழத்தில் வலம் வந்தவர்.

சில களங்களில் புலிகளுக்கு தோல்வி என்ற நிலை வரும் போதும் சண்டைக்களத்தில் திடீரெனப் பிரவேசித்து புதிய வியூகங்களை அமைத்து சண்டையை வெற்றிப் பாதையில் திருப்பிய சமர்க்களங்களின் சரித்திர நாயகர் பால்ராஜ். உதாரணமாக பூநகரி, யாழ்தேவி, ஆகாயக்கடல் வெளிச்சமர் ஆகியவற்றைச் சொல்லலாம்.

இவர் முதுபெரும் போரியல் ஆசான் மட்டுமல்ல ஒரு தலைசிறந்த மனிதனும் கூட போராளிகளுடன் அன்பாக பழகும் தன்மையும், அமைதியான சுபாவமும் கொண்ட இவர் அனைத்துப் போராளிகளையும் அன்பால் கட்டிப் போட்டவர். அவர் களமுனையில் நிற்பது அறிந்தால் போராளிகள் உறுதியுடனும் உத்வேகத்துடனும் போராடுவார்கள். அடேல் பாலசிங்கம் அவர்கள் கூட பால்ராஜ் அவர்களை தனது சுதந்திர வேட்கை நூலில் பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட முதுபெரும் போரியல் ஆசானை நாம் இழந்திருப்பது மாபெரும் துயரமே இதனால் சிங்கள தேசம் மிகவும் மகிழ்ந்திருக்கின்றது. இப்படிப்பட்ட சரித்திர நாயகனுக்கு தலைதாழ்ந்த இறுதிப் பிரியாவிடையினை வழங்கி மன ஆறுதல் அடைவோம்.


About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply