பரதக் கலை

பரதக் கலை

கலைத்துறையில் தமிழர்கள் உலக நாகரிகத்துக்கு கொடுத்த சொத்துக்கள் இரண்டு. ஒன்று நாதஸ்வரம். மற்றது  பரதம் என அழைக்கப்படும் நடனக் கலை.

நடனம் ஆடுபவர் கலைஞன் எனவும் நடனத்தை கற்றுத்தருபவர் நடன ஆசிரியர் எனவும் கூறப்படுகின்றனர். இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவையில் நடனக் காட்சிகள் திரைப்படப் பாடல்களுடன் ஆடப்படுவது வழக்கமாகும். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் கதாநாயகி நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்ற நடன தாரகையாகும்.

பண்டைய தமிழர்கள் ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பர்.  இதனை மகாகவி கம்பர் பாடிய கலைமகள் அந்தாதி மூலம் அறியக்கிடக்கிறது.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கும் என்னம்மை – தூ
உருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்.

ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று வரையறை செய்யப்பட்டாலும் கலைகள் இத்தனைதான் என்று வரையறை செய்ய இயலாது. காலந்தோறும் கலைகளின் எண்ணிக்கையும் தன்மையும் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழரில் பெரும்பாலோர் இந்த அறுபத்து நான்கு கலைகளும் எவையெவை என்று அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் இசைக்கலை, ஆடல்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை ஆகிய அய்ந்து கலைகளும் ‘நுண்கலைகள்’ எனப் போற்றப்படும்.

கலைகளில் சிறந்தது நாட்டியக் கலையே என்பது தமிழ் வழக்கு ஆகும். தாளத்துக்கும், இசைக்கும் ஒத்திசைவாக உடலை நகர்த்தும் கலை வடிவம் நடனம். நடனக் கலை  இசையோடு நெருங்கிய தொடர்புகொண்டது.  அண்மைக்காலத்தில் உருவான இத்துறை, நடனத்தின் இயல்புகளையும்  அதன் தோற்றம்பாணிகள்வகைகலை  போன்ற நடனம் தொடர்பான பல விடயங்களை உள்ளடக்குகிறது.

எல்லாவித கலைகளும் இறைத்தன்மையோடு கடவுளை மையமாகக் கொண்டு ஆடப்படுகின்றன.  குறிப்பாக, இந்திய இசைக்கலையும் ஆடற்கலையும் இறைவனோடு சம்மந்தப்பட்டவை ஆகும். இந்துக் கடவுளர்களில் காணப்படும் பெரும் தெய்வங்களான சிவன், காளி, கிருஷ்ணன், நடன விநாயகர் என்று இறைவனை நடனக்கலையுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது தொன்று தொட்டு இருந்து வருகின்றது.

சிவன் ஆடலரசன் எனப் போற்றப்படுகிறான். அவனே நடனக்கலையை தோற்றுவித்தவன் எனக் கருதப்படுகிறது. பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும்.

பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். பரத முனிவர் எழுதியதாக கருதப்படும் நாட்டிய சாத்திரம் என்ற நூலே பரத நாட்டியம் என்னும் நடனக் கலையை தோற்றுவித்தது எனவும் கூறப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் நடனமான ஒட்டர மாகிதி என்னும் நடனவகையும் இந்தியாவில்  தோன்றிய ஒரு பண்டைய நடனக் கலையாகும்.

பொய்க்கால் குதிரை போன்ற  நாட்டுப்புற நடனங்கள் சில அசைவுகளை உள்ளடக்கியிருக்க, பரதநாட்டியம் போன்ற நடனங்கள் பலவகையான கலை நுணுக்கங்களை உட்படுத்தியவையாக உள்ளன. நடனங்கள் எல்லோரும் பங்குகொண்டு ஆடுபவையாக, சமூக நடனங்களாக அல்லது இது போன்ற அரங்கேற்றம் பார்வையாளருக்கு நிகழ்த்திக் காட்டுவனவாக இருக்கலாம். நடன அசைவுகளில் எவ்வித பொருட்பொதிவும் இல்லாமல் இருக்கக்கூடும். மேற்கத்திய நாட்டாரது  பலே போன்ற நடனங்கள் அவ்வாறு அமைந்துள்ளனவாகும். ஆனால், பல்வேறு இந்திய நடனங்களிலும், வேறு பல கீழைத்தேச நடனங்களிலும் அசைவுகள் பொருள் பொதிந்தவையாகவும், குறியீட்டுத் தன்மைகளுடன் கூடியவையாகவும் காணப்படுகின்றன. நடனங்களில் எண்ணங்களும் உணர்வுகளும் பொதிந்திருக்கலாம் அல்லது  அவை வெளிப்படலாம். அத்துடன், பலவகை நடனங்கள் கதை கூறும் பாங்கிலும் அமைவது உண்டு.

Cosmic Dance என்று அறிஞர்களால் விவரிக்கப்படும் தில்லை நடராசப் பெருமானின் ஆனந்த நடனமும், உருத்ர தாண்டவமும் குறிப்பிடத்தக்கவை. நடனத்திற்கென தமிழகத்தில் பொன்னம்பலம் சபை, வெள்ளி சபை, தாமிர சபை முதலான சபைகள் இருந்துள்ளன. அவைகளில் எல்லாம் ஆடல்வல்லான் ஆடிய அற்புத நடனங்கள் விவரித்துக் கூறப்படுகின்றது.  இந்திய நாட்டில் பலவகையான நடனங்கள் ஆடப்பட்டு வருகின்றன.

சிவனின் ஒரு தோற்றமான ஆடலரசன் (நடராசன்)  உருவம் உலகப் புகழ்பெற்றது தெரிந்ததே. பலர் நினைப்பது போலவோ சொல்வதுபோலவோ இந்தக் காலைத் தூக்கி நின்றாடும்  ஆடலரசன் உருவம் தொன்மை வாய்ந்ததன்று. சைவ நாயன்மார் காலத்தில் – 7 ஆம் நூற்றாண்டில் – தோற்றம் கொண்டு பிற்காலச் சோழர் காலத்தில் மிகப் பெரிய அளவில்  பரவிய  கலை ஆகும். இன்று பல்லாயிரக்கணக்கான ஆடலரசன் சிலைகள் தமிழ்க் கோயில்களில் காணப்படுகின்றன.

நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம்.  அது  அழகுற ஆடுவது எனப் பொருள்படும். அது நூற்றெட்டு உடற் கரணங்களோடும், கை, கால், கண், வாய் முதலிய உறுப்புகளின் தொழில்களோடும் கூடியது. தமிழ்க் கூத்து இன்று பரத நாட்டியம் என்ற பெயரால் வழங்கப்பெறுகின்றது. பாவம், இராகம், தாளம் என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து “பரதம்” ஆகியது என்றும் சொல்கிறார்கள்.

தமிழ் இலக்கியங்களில் நடனம் கூத்து, ஆடல், நடம், நிருத்தம் என்ற சொற்களால் குறிக்கப்பட்டது. சோழர் காலத்தில் கோயில்களில் நடனம் ஆடுவதற்கு ஆடல்கலையில் வல்ல இள மகளிர் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் இறைவனுக்கு அடிமை என்ற பொருளில் தேவதாசிகள் என அழைக்கப்பட்டார்கள். தேவதாசிமுறை பின்னர் ஒழிக்கப்பட்டு விட்டது.  இன்று நடனக் கலையை  சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரும் கற்றுத் தேறலாம்,  அதனை ஒரு தொழிலாகக் கொள்ளலாம் என்ற நிலை  உருவாகியுள்ளது.

சென்ற நூற்றாண்டில் தமிழ் நாட்டிலும்  இலங்கையிலும்  நடனக் கலையை சதிர் என்றும் சின்னமேளம் என்றும் அழைத்தார்கள். அந்த வழக்கம் இன்று இல்லை.

அண்மைக்காலமாகவே இந்த நாட்டியம் “பரத நாட்டியம்” எனக் குறிக்கப்பட்டு உலகம் முழுதும் பரவி வருகிறது. பரத சாத்திரம் என்னும் வடமொழி நூல் எழுதப்பட்ட காலம் சரிவரத் தெரியவில்லை. கிமு 2 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். “நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாவுள்ள தொன்நூல்களும் இறந்தன” என்ற சிலப்பதிகார பாயிரத்தின் மூலம் அடியார்க்கு நல்லார் வடமொழியின் பரத சாத்திரத்திற்கு முந்தியது தமிழ்ப் பரதமே என்று நிலை நிறுத்துகிறார்.

கடைச் சங்க காலத்து நாடகத் தமிழ் நூல்கள் பல இறந்துபட்டுவிட்டன. சயந்தம், செயிற்றியம், முறுவல், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் விளக்கத்தார் கூத்து, செயன்முறை, குணநூல் நன்நூல கூத்த நூல் என்னும் பெயர்களை மட்டுமே அறிய முடிகின்றது. அவை அனைத்துமே நாட்டியம் பற்றியும், நாடகம் பற்றியும் இலக்கண முறையில் விளக்கம் கூறும் நூல்கள் ஆகும். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், அவர் தரும் உரை விளக்கங்களில் செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுவதால் அத்தகைய நூல்கள் அவர் காலத்தில் இருந்துள்ளன என்பதை உறுதி செய்ய முடிகின்றது.

கூத்த நூல் என்னும் பெயருடைய நாடகத் தமிழ் இலக்கண நூல் பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுத்து அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. அவ்வாறே கடைச் சங்க காலத்து அறிவனார் இயற்றியுள்ள பஞ்சமரபு என்னும் நூல் இன்று கிடைத்துள்ளது.

பஞ்சமரபு நாடகத்திற்கு நிருத்தம் என்ற பெயர் உள்ளதாகவும் கூறுகின்றது. இஃது இசைவழி நிகழும் நடனத்திற்குரிய சிறப்புப் பெயர் என்றும் இதற்குச் சான்றாக “இசையுடன் நடனம் நிருத்தமாமே” என்ற பரத நூற்பாவினையும் காட்டுகின்றது. நிருத்தம் என்பது தாண்டவம் முதலான எல்லாக் கூத்தினுக்குரிய பொதுப் பெயராகவும் வழங்கிவருகின்றது. இந்நிருத்தத்தில் தாண்டவம், நிருத்தம், நாட்டியம், குரவை, வரி, கோலம், வகை எனும் எழுவகைக் கூத்துகள் அடங்கியுள்ளன என்றும் அவை முறையே அமைதி, வேடிக்கை, வகை என்ற மூவகைக் கூத்தினுள் அடங்கும் எனவும் அந்நூல் நமக்குக் காட்டுகின்றது.

நடனக்கலை பற்றி விரிவாகப் பேசும் காப்பியம் இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் குறிப்பிடத்தக்கது.  இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். அரங்கேற்று காதையில் மாதவி என்னும் ஆடல்மகள் சோழன் முன்னால்  தன் நாட்டியத் திறம் எல்லாம் தோன்ற ஆடிக் காட்டினாள். அவள் தலையரங்கேறித் தலைக்கோலம் பெற்றாள். அவள் ஆடலைக் கண்டு மகிழ்ந்த சோழ மன்னன், அந்நாட்டு நடைமுறையான இயல்பிலிருந்து வழுவாமல், அரசனின் பச்சை மாலையையும், ‘தலைக்கோலி’ என்ற பெயரையும் மாதவி பெற்றனள்.

தெலுங்கு – வடமொமி ஆகியவற்றின் தலையீடும் செல்வாக்கும் தமிழர் வரலாற்றில் குறுக்கிடுகின்ற வரை தமிழருக்கே உரிய ஆடல் பாடல் ஓங்கி வளர்ந்து இருந்தது.  அண்மைக் காலத்திலேயே அவை மீண்டும் தமிழர்களால் போற்றப்பட்டு வருகின்றன. ஒரு நுண்கலையாக  உயர்ந்துள்ளது.  இந்த நடன அரங்கேற்றம் அதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும்.

கனடியத் தமிழர்கள் அவர்கள் பிறந்த மண்ணில் இருந்து பிடுங்கப்பட்டு அந்நிய நாடுகளில்  வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழர்களாகிய நாங்கள் எமது மொழி, பண்பாடு, கலை போன்ற அடையாளங்களை இழக்கும் அபாயம் இருக்கிறது. இங்கு வாழும் இளம் தலைமுறையினர் தமிழை மறந்து வருகிறார்கள். தமிழைப் படிக்க ஓரளவு வாய்ப்பிருந்தும் தமிழ் படிப்பதை தவிர்த்துவிடுகிறார்கள். வீட்டு மொழி தமிழ் என்ற நிலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு  இளம் பிள்ளைகளின் முதல் மொழியாக ஆங்கிலம் ஆக மாறிவருகிறது.

இந்தப் பின்னணியில் நடனக் கலையை மட்டுமல்லாமல் நமது தாய்மொழியான தமிழையும் கற்க வேண்டும். நடன ஆசிரிகைகள் நடனத்தை தமிழில் சொல்லிக் கொடுக்க வேண்டும். நடனக் கலையும் தமிழ் மொழியும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதவை.


பரதம், நாட்டியம், நிருத்தம், நிருத்தியம் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. பாவ இராக தாள சேர்க்ககையில் பரதம் அல்லது கூத்துப் பிறக்கிறது.

இந்த மூன்று சொற்களும் நாட்டியத்தின் முக்கிய கூறுகளாகும்.

பாவம் என்பது கை, கால், தலை, உடல், இடை மற்றும் இதழ்கள் போன்றவற்றின் அசைவுகளால் மனதில் உண்டாகும் இன்ப துன்பங்களை (எண்பான்சுவைகளை) நடித்துக் காண்பிப்பதாகும். இவற்றுக்கு பாடப்படுகின்ற பாடல்கள், இராகம், மற்றும் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவைகளாகும். கால் மற்றும் கைகளால் செயல்படுகின்ற அசைவுகள் இராக நளினங்களுக்கு ஏற்பவும் தாள கணக்குகளுக்கு ஏற்பவவும் அசைவினைப் பெறுகின்றன. தாளம், காலம், செய்கை, அளவு என்ற மூன்றினாலும் ஏற்படுகின்றன. பரத நாட்டியத்தில் கிண்கிணிகளால் தட்டி தாளம் வெளிப்படுகிறது.

மூன்று தமிழிலும் இயலைவிட இசை இனிமையானது. இயல், இசை இரண்டையும் விட நாடகத்தமிழ் உயர்வானது. காரணம் அதில் இயல், இசை இரண்டும் கலந்திருப்பதுதான்.

நடனம்

Two dancers.jpg

புதும நடனம்

தோன்றிய பண்பாடு பல்வேறு

தோன்றிய காலம் தெரியாது

தென்னிந்தியப் நாட்டார் நடனங்களில் ஒன்றான பொய்க்கால் குதிரையாட்டம்

இந்தோனீசியாவின் சுமாத்திராவைச் சேர்ந்த கோயோ மக்கள் ஆடும் சமன் நடனம்

நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். இது ஒரு விடயத்தின் வெளிப்பாட்டு வடிFSDFSFS வமாகவோ, சமூகத் தொடர்பாடலாகவோ இருக்கலாம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தொடர்புமுறை என்றும் நடனங்களைக் கருதுவது உண்டு. தேனீக்கள் போன்ற சில விலங்குகளும் சில வேளைகளில் நடனத்தைப் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. சீருடற்பயிற்சி (Gymnastics), ஒத்திசை நீச்சல் (synchronized swimming), நடனப் பனிச்சறுக்கு (figure skating) போன்ற விளையாட்டுக்கள் நடனத்தையும் தம்முள் அடக்கியவையாக உள்ளன. கட்டா எனப்படும் தற்காப்புக் கலையும் நடனங்களுடன் ஒப்பிடப்படுவது உண்டு. உயிரற்ற பொருட்களின் அசைவுகள் நடனம் எனக் குறிப்பிடப்படுவது இல்லை.

நடனம் என்பது எவ்வெவற்றை உள்ளடக்கியது என்பது குறித்துச் சமூக, பண்பாட்டு, அழகியல், கலை, நெறிமுறைகள் போன்றவற்றின் எல்லைகளுக்குள்ளேயே விளக்கமுடியும்.

நடனங்கள் பல்வேறு பாணிகளில் உருவாகியுள்ளன. எனினும் எல்லா நடனங்களுமே தம்முள் சில பொது இயல்புகளைக் கொண்டுள்ளன. நடன அசைவுகளுக்கு ஏற்ப உடல் வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருப்பது மட்டுமன்றி, உடல் உறுதியும் முக்கியமானது. இதனாலேயே முறைப்படியாக நடனம் ஆடுபவர்கள் நல்ல நீண்டகாலப் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். நடனங்களை உருவாக்கும் கலை நடன அமைப்பு எனப்படுகிறது.

பொருளடக்கம்

1 தோற்றமும் வரலாறும்

2 தொழிலாக

3 தோற்றம்

3.1 இந்திய நடனக் கலை

3.2 இந்திய பாரம்பரிய நடனங்கள்

4 நடன வரலாற்றை அறிய உதவும் அடிப்படைச் சான்றுகள்

5 தொல்காப்பியர் உணர்த்தும் நடன கூறுகள்

6 படக்காட்சியகம்

7 குறிப்புக்கள்

8 இவற்றையும் பார்க்கவும்

9 வெளியிணைப்புக்கள்

தோற்றமும் வரலாறும்

நடனத்தின் தோற்றத்தை அறிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவான தொல்பொருட் சான்றுகள் இல்லை. இதனால், எப்போது நடனம் மனிதப் பண்பாட்டின் ஒரு பகுதியானது என்று சொல்ல முடியாது. எனினும், நடனங்கள் போன்ற செயற்பாடுகள் இருந்தமையைக் காட்டும் சான்றுகள் பல்வேறு இடங்களிலும் கிடைத்துள்ளன. மிகப் பழைய மனித நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்னரே சடங்குகள், கொண்டாட்டங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பல காரணங்களுக்காக நடனங்கள் மனித வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருக்கக்கூடும். வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே நடனங்கள் ஆடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கும் வகையிலான சான்றுகளைத் தொல்லியல் வழங்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை வாழிடங்களில் காணப்படும் ஓவியங்களில் காணப்படும் உருவங்கள் சில நடனமாடுவதைக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. கிமு 3300 காலப்பகுதியைச் சேர்ந்த எகிப்தியக் கல்லறை ஓவியங்களிலும் இத்தகைய உருவங்கள் உள்ளன. சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தொல்பொருட்களிலும் நடனம் ஆடும் உருவங்கள் காணப்படுகின்றன.

தொன்மங்களைக் கூறுவதற்கும் நிகழ்த்திக் காட்டுவதற்காகவுமே முதன்முதலாக முறையான நடனங்கள் ஆடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எதிர்ப் பாலாருக்குத் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவும் மனிதர்கள் நடனத்தைப் பயன்படுத்தி இருக்கலாம். காதல் புரிவதோடும் நடனங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன. எழுத்து மொழி உருவாவதற்கு முன்னர் கதைகளைப் பிந்திய தலைமுறைகளுக்குக் கடத்துவதில் நடனங்களும் பயன்பட்டன.[1] நோய்களைக் குணப்படுத்துவதற்காச் சாமியாடுதல், வெறியாட்டு போன்றவற்றுக்கு முன்னோடியாகவும் நடனங்கள் விளங்கின. இது நடனத்தின் முதல் பயன்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பிரேசிலின் மழைக்காடுகள் முதல் கலகாரிப் பாலைவனம் வரை உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான தேவைகளுக்கு நடனங்கள் இன்றும் பயன்படுவதைக் காணமுடியும்.[2]

தொழிலாக

தோற்றம்

இந்திய நடனக் கலை

சிவாவின் நடனம்

வேலூர் கோட்டையில்லுள்ள காட்சியகத்தில் இருக்கும் நடராசர்

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் இந்து மதத்தைப் பின்பற்றுவோரிடையே காணப்படும் பண்பாடு வேறுபட்ட தன்மையினை உள்ளடக்கியது. இப் பண்பாடானது உருவில், அமைப்பில் மாறுபாடுகள் பல காணப்பட்டாலும் அவை அனைத்தும் ஒரே நோக்கத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால்,இங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ள

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நடனம் ஆடப்பட்டு வருகிறது. அதில் அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், பழக்க வழக்கங்கள், மொழி, பண்பாடு, தெய்வ வழிபாட்டு முறைகள் ஆகியவை உள்ளீடாக அமையப்பெற்று வெளிப்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் பிற பகுதிகளின் செல்வாக்குகள் காரணமாக நடனக் கலை செம்மைப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்திய அரசின்கீழ் இயங்கிவரும் சங்கீத நாடக அகாதெமியானது இந்திய நடனத்தை எண்வகைப் பிரிவாக அறிவித்துள்ளது. அவை இந்திய சாஸ்திரிய நாட்டிய வகைகள் எனப்படுகின்றன. ஒவ்வொரு வகை நடனமும் அந்தந்தப் பகுதியின் மத வழிபாட்டு முறைகளுக்கேற்ப இங்கு வகைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply