குரு பெயர்ச்சியும் அறிவியலும்

குரு பெயர்ச்சியும் அறிவியலும்

கீரன்

நாம் வாழும் இந்த பூமியில் இருந்து  சூரியன் சராசரி  149.60 மில்லியன் சகிமீ (92.96  மைல்) ) தூரத்தில் இருக்கிறது. பூமி இந்தச் சூரியனைச் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றிவரும் காலத்தை ஓர் ஆண்டு என்று அழைக்கிறோம். ஓரு  நட்சத்திர ஆண்டில் (Sidereal) 365.24219878 (Tropical) நாட்கள் இருக்கின்றன. ஒரு  வெட்பமண்டல ஆண்டில் 365.24219878 நாட்கள் இருக்கின்றன. சூரியன் ஒரு கோள் என்று சோதிடம் சொல்கிறது. இல்லை அது ஒரு நட்சத்திரம் என வானியல் சொல்கிறது.மேலும் புவி ஒரு கோள் என்றாலும் இராசிச் சக்கரத்தில் அதற்கு இடம் இல்லை. காரணம் புவியும் ஒரு கோள் என்பது சோதிடர்களுக்குத் தெரியாமல் இருந்தது.

பூமியைப் போலவே ஏனைய  கோள்கள், உப கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. கீழ்க்கண்ட அட்டவணை ஒரே பார்வையில் புவி உட்பட 9 கோள் பற்றிய தரவுகளைத் தருகிறது.

வான வெளியில் கோள்களின் ஓட்டம்

 

கோள்

 

விட்டம்

 

ஞாயிறு  கோள் தொலைவு  

சுழல் காலம்

 

சுற்றுக் காலம்

 

துணைக் கோள்

 

 

அடர்த்தி

 

 திணிவு

 

 

வெப்பம்

 

அச்சின் சாய்வு

ஞாயிறை

சுற்றும்

வேகம்

  கிமீ கல் மில் கிமீ       நீர்-1 புவி-1 செல்சி பாகை கிமீ
புதன் 4,878 3,029 57,910 58.67 நாள் 87.96 நாள் 0 5.43 0.06 467/-210 0 47.89
வெள்ளி 12,102 7,515 108,200 243 நாள் 224.70 நாள் 0 5.25 0.82 450 177.4 35.03
புவி 12,756 7,921 149,600 23.56 மணி 365.24 நாள் 1 5.52 1.00 -89/58 23.45 29.79
நிலா 3,476 2,159 384,467* 27.32** 27.32** 0 0.60 0.012 123/-233 7.00 31.022***
செவ்வாய் 6,794 4,219 227,940 24.6 மணி 687 நாள் 2 3.93 0.11 -187 23.98 24.13
வியாழன் 142,984 88,793 778,330 9.8 மணி 11.9 ஆண்டு 35 1.33 317.83 -148 3.08 13.06
சனி 120,536 74,852 1,426,940 10.665 மணி 29.46 ஆண்டு 31 0.71 95.2 -178 26.73 9.64
யுறேனியஸ் 51,118 31,744 2,870,990 17.24 மணி 84 ஆண்டு 5 1.24 14.53 -210 97.92 6.81
நெப்தியூன் 49,528 30,756 4,497,070 16.1 மணி 165 ஆண்டு 8 1.67 17.14 -210 28.8 5.43

*புவி-நிலா தொலைவு (கிமீ) **புவியைச் சுற்றும் காலம் *** புவியைச் சுற்றும் வேகம்

இதன் அடிப்படையில் வியாழன் சூரியனைச் சுற்றிவர 11.9 புவி ஆண்டுகள் எடுக்கின்றன.

சோதிடர்கள் பூமியும் ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றிவருவதில்லை, சூரியன்தான் புவி உட்பட ஏனைய கிரகங்களை சுற்றி வருகிறது என்கிறார்கள். உண்மையில் புவிதான்  ஞாயிறைச் சுற்றிவருகிறது ஆனால் எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றிவருவது போன்ற மருட்சி (illusion) ஏற்படுகிறது.  இந்த ஞாயிறின் தோற்றப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதி இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும்.   இது  ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30பாகைகளைக் கொண்ட 12  வீடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியவாறு இராசிகள் பத்து,  நூறு ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படும் விண்மீன் கூட்டங்கள் (Constellations)  ஆகும். அவற்றைத் தொடுத்து வரும் உருவங்களுக்குக் கிடா (மேஷம்)  காளைமாடு (ரிஷபம்) மிதுனம் (இரட்டையர்)  நண்டு (கடகம்) சிங்கம் (சிம்மம்) கன்னி,  துலாக்கோல் (துலாம்)  தேள் (விருச்சிகம்)  வில் (தனுசு)   மகரம் (பாதிமீன் பாதி மனிதன்)  கும்பம் (குடம்)   இரட்டை மீன்கள் (மீனம்)  எனப் பெயர் இட்டுள்ளார்கள்.

இப்படிப் பெயர் இட்ட பின்னர் எந்த விதிக்கட்டுப்பாடுமின்றி அந்த உருவத்துக்குரிய பண்புகளை (குணாம்சங்களை)  அந்த இராசியில் பிறந்தவர்களுக்கு மாடேற்றி விட்டார்கள். எடுத்துக்காட்டாக சிங்க இராசியில் பிறந்த ஒரு பெண் சிங்கம் போல மூர்க்க குணம் படைத்தவளாக இருப்பார்கள்! விருச்சிக இராசியில் பிறந்தவர்கள்  தேள் போல் கொட்டுவார்கள்!

Image result for �ரா�ி வ�்�ம்


சூரியனை வியாழன் ஒருமுறை சுற்றி வர  11.9  ஆண்டுகள் எடுப்பதால் ஒவ்வொரு இராசியையும் கடக்க ஒரு ஆண்டுகள் எடுக்கும். இதனையே வியாழப் பெயர்ச்சி என்று சோதிடர்கள் சொல்கிறார்கள். வியாழன் எதையும் பெயர்ப்பதில்லை. அது தன்பாட்டில் சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாக அண்ட வெளியில் அதனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சோதிடர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் அண்டத்தைப்பற்றி அறிந்திருந்த அதே தரவுகளின் அடிப்படையில் வியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி இவற்றால் தோசம் ஏற்படுகிறது எனறு சொல்லி அது பூசை, யாகம் எனப் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்கிறார்கள்.

இந்த வியாழ பெயர்ச்சி பற்றி ஒரு சோதிடர் சொல்வதைப் படியுங்கள்.

மங்களநாயகன் செவ்வாய் வீட்டிற்கு மாறும் குருப் பெயர்ச்சி பலன்கள்

நிகழும் மங்களகரமான கலியுகாதி 5119 – சாலிவாகன சகாப்தம் 1940 – பசலி 1428 – கொல்லம் 1194ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது புரட்டாசி மாதம் 18ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 04.10.2018 கிருஷ்ணபக்ஷ ஏகாதசியும் வியாழக்கிழமையும் ஆயில்ய நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 40.00க்கு – இரவு 10.05க்கு குரு பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தனுசு ராசிக்கு விகாரி வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் தேதி – 05.11.2018 – திங்கட்கிழமையன்று மாறுகிறார்.

மனித வாழ்க்கையின் ஏற்றம் – இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன.

பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர்.

இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான்.தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் போற்றப்படுகிறார்.

குருபகவான் இராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார். இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். குரு பெயர்ச்சியை முன்னிட்டு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 04.10.2018 மற்றும் 11.10.2018 ஆகிய இரு நாட்கள் குருப் பெயர்ச்சி மகா யாகம் நடைபெறுகிறது.

சரி வாருங்கள்…இந்த மகா குருப்பெயர்ச்சியால் எந்த எந்த ராசிகளுக்கு என்ன என்ன பலன் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். (https://m.dailyhunt.in/news/india/tamil/newstm-epaper-newstm/kuru+beyarcchi+balankal+2018+19-newsid-97698828)

சூரிய குடும்பத்தில் உள்ள வியாழ  கோள் பற்றி வானியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

சூரிய குடும்பத்தில் வியாழன் 

பூமியிலிருந்து தூரம்

588.50 மில்லியன் கிமீ

சூரியனிலிருந்து தூரம்

778.33 மில்லியன் கிமீ – புவியின் தொலைவை விட 5.2 மடங்கு

சுற்றளவு

1,42,984 கிமீ (பூமியைப் போல் 11.2 மடங்கு)

தன்னைத்தானே சுற்றும் நேரம்

9 மணி 55 மணித்துளி (பூமி 24 மணி)

சூரியனை சுற்றி வரும் காலம்

11.86  ஆண்டுகள் அல்லது 4,333 புவிநாள்

சூரியனைச் சுற்றும் வேகம்

வினாடிக்கு 13.06 கிமீ

வெப்பம்

-234 பாரன்கைட் (-148 C)

அடர்த்தி

தண்ணீரை விடக் குறைவு (தண்ணீரில் மிதக்கும்)

சூரியனில் இருந்து

5   ஆவது இடம் (பூமி 3 ஆவது இடம்)

வடிவம்

முதலாவது பெரிய கிரகம் (பூமியைவிட 121.9 மடங்கு பெரியது)

வளிமண்டலம்

சுழன்றடிக்கும் முகில் கூட்டங்கள், அமோனியா, நீரகம் (hydrogen)90 விழுக்காடு, கீலியம் (helium) 10 விழுக்காடு

மேற்பரப்பு

வெப்ப வாயு மறறும் நீர்மம் (Hot gas and liquid)

வியாழனில்  இருந்து வரும் ஒளி பூமியை வந்தடையும்  நேரம்

35 மணித்துளி 52 நொடி (நொடிக்கு 299,792,458 கி.மீ வேகம்)

துணைக் கோள்கள்

63

வளையம்

1

புவியில் ஆளின்நிறை 180 இறாத்தல்

426 இறாத்தல்

அண்டத்தில் வலம் வரும் கோள்களால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. அவற்றால் நன்மை, தின்மை ஏற்படாது. அவை பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் அண்ட வெளியில்  ஓடிக்கொண்டிருக்கின்றன. மனிதர்கள் அறியாமை காரணமாகவே இந்தக் கோள்களுக்கு தெய்வீகம் கற்பித்து அவை மனிதனது உயர்வு, தாழ்வு, நன்மை, தின்மை போன்றவற்றுக்குக் காரணம் என நினைக்கிறான். ஒருவன் தனக்கு வியாழ தோசம், சனி தோசம் இருக்கிறது எனச் சோதிடன் சொல்வதை நம்பினால் உளவியல் அடிப்படையில் அவனுக்குத் தடைகள் வந்து விடும்.Image result for jupiter transit

பொதுவாக  சனி, செவ்வாய், இராகு, கேது பெயர்ச்சியின் போது தோசம் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் வியாழன் விதி விலக்கு. அது எல்லா இராசிக்காரர்களுக்கும் நன்மை செய்யும் கோள் என்று சொல்கிறார்கள். அப்படியிருந்தாலும் வியாழ பெயர்ச்சிக்கு அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் நன்மை பெறலாம் என்பது வெறும் நம்பிக்கையே தவிர உண்மையன்று.  அண்ணளவாக 778.33   மில்லியன் கிமீ (367 மில்லியன் மைல்) அப்பால் இருக்கும் வியாழனுக்கு இங்கு அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் அது அந்தக் கோளைத் திருப்திப் படுத்துமா? குளிர வைக்குமா?

சோதிடர்களில் பலர் ஒழுங்காக படிக்காது, வேறு எந்த வேலையும் செய்யத் திறமை இல்லாது ஏமாற்றிப் பிழைப்பு நடத்த சோதிடத்தை கையில் எடுத்துள்ளார்கள்.   கனடாவுக்கு வரும் சோதிடசிகாமணிகள், சோதிட சக்கரவர்த்திகள், சோதிட பண்டிதர்கள், சோதிட ஆசான்கள்பேரளவு படியாத தெலுங்கர், மாலையாளிகள் ஆவர். இவர்கள்  மூடநம்பிக்கையைப் புகுத்தி தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறார்கள்.  அதற்கு இங்குள்ள செய்தித்தாள்கள், வணிக நிறுவனங்கள்  துணை போகின்றன.

உண்மையான இறை தத்துவம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறப்பதற்கு முன் அவன் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைக்கு – சென்ற பிறவிகளில் செய்த கர்மவினைகளுக்கு – ஏற்ப இறைவனால் படைக்கப்படுகிறான்.  இது அவனது தலையெழுத்து.  இந்த தலைவிதியை யாரும் அழித்தெழுத முடியாது.

ஆனால், சோதிடம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறக்கும்போதுள்ள கிரகங்களின் நிலையே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிறது.
அப்படியாயின் ஒருவன் வாழ்வைக் கிரகங்கள் தீர்மானிக்கின்றனவே தவிர எல்லாம் வல்ல எல்லாம் தெரிந்த எங்கும் நிறைந்த இறைவன் அல்ல என்பது உறுதியாகிறது.

ஆக,  சோதிடத்தை நம்புகிறவன் இறைவனை மறுக்கிறான். அவன் நாத்திகனாகிறான். அது போலவே வாஸ்துவை நம்புகிறவன் அதைவிடப் பெரிய நாத்திகன். காரணம், வாசலை மாற்றி அமைத்தால் வாழ்வே மாறுகிறது என்றால், வாழ்வை இறைவன் தீர்மானிப்பதில்லை,  கிரகங்களும் தீர்மானிப்பதில்லை,  ஒரு வீட்டின் வாசலும் யன்னலும் இருக்கும் இடங்களே தீர்மானிக்கின்றன என்றாகிறது. அதன்படி, வாஸ்துவை நம்புகிறவன் இறைவனையும்  சோதிடத்தையும் மறுக்கிறான்!

தமிழர்கள் அறிவை வளர்க்க வேண்டும். பகுத்தறிவின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். மேற்கு நாடுகள் அறிவுக்கு முதலிடம் கொடுக்கின்றன. அறிவே ஆற்றல் (Knowledge is power) என்கிறார்கள். அதன் மூலம் மண்ணையும் விண்ணையும் அளக்கிறார்கள்.


குரு பெயர்ச்சியும் அறிவியலும்

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply