கருணா விவகாரத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் வகித்த பங்கு – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசீலன்

கருணா விவகாரத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் வகித்த பங்கு – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசீலன்

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற போது நூல் விமர்சன உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருபவருமான அழகு குணசீலன் இதனை தெரிவித்தார்.

வைத்தியகலாநிதி விவேகானந்தன் ஜெயரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அழகு குணசீலன் தொடர்ந்து உரையாற்றுகையில்…

நாங்கள் ஏற்கனவே அறிந்த செய்திகளில் அவர் சொல்லாமல் விட்ட சம்பவங்களை அல்லது தன்னால் காலச்சூழல் கருதி சொல்ல முடியாமல் போன சம்பவங்களை இப்போது சொல்ல வேண்டும் என்ற மன உறுத்தலின் வெளிப்பாடாகவே இந்த நூலை அவர் எழுத தூண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

இது அவரின் நேர்மையான போக்கை வெளிப்படுத்துகிறது. இந்த நூலை வசித்த போது அவர் மீது எனக்கிருந்த விமர்சனங்கள் இல்லாமல் போய்விட்டது.

கருணாவின் பிளவு, அந்த பிளவுக்கு பின்னணியில் இருந்தவர்கள், இந்த பிளவின் பின்னணியில் சிவராமிற்கு இருந்த பங்கு, கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இருந்த பங்கு புலம்பெயர் நாடுகளில் இருந்தவர்கள் வழங்கிய துரோகி பட்டங்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம், என பல விடயங்களை இந்த நூலில் உள்ளடக்கி இருக்கிறார்.

இனந்தெரியாத நபர்கள் என தான் செய்திகளில் சொன்ன விடயங்கள் யார் அந்த இனந்தெரியாதவர்கள் என்பதை இந்த சம்பவங்களை விபரிக்கும் போது தெளிவாக சொல்கிறார்.

இந்த கொலைகளை விடுதலைப்புலிகள் செய்தார்கள், இந்த கொலைகளை ஏனைய இயக்கங்கள் செய்தார் என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு ஆதாரத்துடன் அந்நம்பவங்களை விபரிக்கின்றார்.

ஒரு பத்திரிகையாளன் காலம் கடந்த சூழலில் நடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து தன்னை சுயவிமர்சனம் செய்கிறார்.

நான் இந்த செய்தியை மக்களுக்கு சொல்லியிருக்க வேண்டும், இனத்தின் நன்மைகருதி இதனை சொல்லாமல் விட்டிருக்கிறேன். பத்திரிகையாளன் என்ற நிலையில் இது தவறு என தன்னை சுயவிமர்சனம் செய்கிறார். இந்த சுயவிமர்சனம் நேர்மையான பத்திரிகையாளனுக்கு அவசியமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் பிளவு என்பது தொடர்ந்து வந்திருக்கிறது. ஜி.ஜி.பொன்னம்பலம்- செல்வநாயகம், பிரபாகரன் – உமாமகேஸ்வரன், பிரபாகரன் மாத்தையா, யோகி, கருணா என தொடர்ந்து பின்னர் கருணா பிள்ளையான் பிளவு என்று தொடர்கிறது.

ஏனைய இயக்கங்களுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டிருக்கிறது. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈரோஸ் என அனைத்து இயக்கங்களும் பிளவு பட்டிருக்கின்றன. இந்த பிளவுகள் என்பது தமிழ் அரசியலில் புதிய விடயங்கள் அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் தான் உருவாக்கினார்கள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அல்ல கிழக்கில் இருந்த பத்திரிகையாளர் சங்கம் தான் இந்த உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தது. பின்னர் 2004ல் தான் விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள் என்ற விடயத்தை இந்நூல் விளக்குகிறது.

விடுதலைப்புலிகள் தேர்தல் அரசியலை நம்பியிருந்தவர்கள் அல்ல. தமது இலக்கை தேர்தல் அரசியல் மூலம் அடையலாம் என அவர்கள் ஒரு போதும் எண்ணியதில்லை. இது விடுதலைப்புலிகளின் அரசியலை தெரிந்தவர்களுக்கு புரியும் என அழகு குணசீலன் தெரிவித்தார்.

இந்த நூல் அறிமுக விழாவில் விமர்சன உரையை ஊடகவியலாளர் சண்.தவராசாவும் நிகழ்த்தினார்.

நூல் அறிமுக உரையினை மார்க்கண்டு ஜெயமோகனும் சிறப்புரைகளை ஐ.பி.சி தொலைக்காட்சி செய்திப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் பிரேம் சிவகுரு, தமிழ் ஆரவலர் கிருஷ;ணா அம்hலவாணர், கவிஞர் கல்லாறு சதீஸ் போன்றவர்கள் நிகழ்த்தினார்கள்.

https://drive.google.com/file/d/1F2b551M4MCs9zr3_4D4y4_43NAcgqAC1/view

கருணாவின் பிரிவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரிந்த விடயம் ஊடகவியலாளர் சிவராமிற்கு தெரியும் என இரா.துரைரத்தினம் தனது நூலில் சுட்டிக்காட்டுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அழகு குணசீலன் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு செம்மாக்கிறேத்தன் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் வைத்திய கலாநிதி விவேகானந்தன் ஜெயரூபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அழகு குணசீலன், ஊடகவியலாளர் சண்.தவராசா ஆகியோர் நூலிற்கான விமர்சன உரைகளை ஆற்றியிருந்தனர்.

இதன்போதே அழகு குணசீலன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ஊடகவியலாளர் இரா.துரைரத்தினத்தின் நூல் தொடர்பான விமர்சனத்துடன் இலங்கையின் கடந்த கால மற்றும் இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் விளக்கியுள்ளார்.

கருணாவின் பிளவில் மறைக்கப்பட்டுள்ள இன்னும் பல விடயங்கள்..

இந்த புத்தகத்தில் இன்னும் 29 சிறப்பு அரசியல் தொகுப்புக்கள் உள்ளன.

அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுங்கள்.

இரா.துரைரத்தினம்
0041554422793
0094652223877
0094768524814
thurair@hotmail.com

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினத்தின் செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுகவிழா நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு செம்மாக்கிறேத்தன் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் வைத்திய கலாநிதி விவேகானந்தன் ஜெயரூபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அழகு குணசீலன், ஊடகவியலாளர் சண்.தவராசா ஆகியோர் நூலிற்கான விமர்சன உரைகளை ஆற்றியிருந்தனர்.

இதன்போதே அழகு குணசீலன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ஊடகவியலாளர் இரா.துரைரத்தினத்தின் நூல் தொடர்பான விமர்சனத்துடன் இலங்கையின் கடந்த கால மற்றும் இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் விளக்கியுள்ளார்.

கருணாவின் பிளவில் மறைக்கப்பட்டுள்ள இன்னும் பல விடயங்கள்..

இந்த புத்தகத்தில் இன்னும் 29 சிறப்பு அரசியல் தொகுப்புக்கள் உள்ளன.

அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுங்கள்.

இரா.துரைரத்தினம்
0041554422793
0094652223877
0094768524814
thurair@hotmail.com

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply