யாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்

இராணுவத்தின் ஆழுகைக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இந்த காணி கள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடமே மீளவும் வழங்குவதில் இரா ணுவம் உறுதியாக இருக்கின்றது.

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். பலாலி இராணுவ தலமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2009ம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின்வசம் 25 ஆயி ரத்து 986.67 ஏக்கர் நிலம் காணப்பட்டது. குறித்த நிலத்தில் 88.80 வீதமான நிலம் மக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம் தற்போது மொத்தமாக 4512.82 ஏக்கர் நிலம் காணப்படுகின்றது. இது யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 1.39 வீதமாகும். இதேவேளை வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மட்டும் பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படையின் கீழ் உள்ள 996.74 ஏக்கர் நிலமும், இராணுவத்திடம் உள்ள 2032.19 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 3028.93 ஏக்கர் நிலம் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதேபோல் இராணுவத்தின் கீழ் உள்ள 500 ஏக்கர் நிலத்தை மக்களிடம் மீள கையளிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் மக்களுடைய நிலங்களை மக்களிடம் மீளவும் வழங்குவதில் இராணுவம் தெளிவாக உள்ளது. அதேசமயம் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களுடைய பாதுகாப்பிலும் இராணுவம் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சிறு வன்முறை குழுக்களால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா? என்பது குறித்தும் இராணுவம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது.

இதனடிப்படையில் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல். தொடர்ச்சியாக மக்களுடைய நிலங்களை இராணுவம் விடுவிக்கும். இதேபோல் யாழ்.மாவட்டத்தில் பரவலாக உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஆனால் அவற்றை அகற்றி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணம் எமக்கு தேவையாக உள்ளது. அது குறித்து நாங்கள் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.  அவர்களிடம் இருந்து எமக்கு தேவையான பணம் கிடைக்குமாக இருந்தால் மக்களுடைய காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும் என்றார்.

யாழ்.கோட்டையை தந்தால் மக்களின் காணிகளை விடுவிக்கலாம்.

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்குமாறு தொல்லியல் திணைக்களத்திடம் நாங்கள் கேட்டுள்ளோம். அவ்வாறு யாழ்.கோட்டை இராணுவத்திற்கு தரப்பட்டால் யாழ்.மாவட்டத்தில் இராணுவ த்திடம் உள்ள மக்கள் காணிகள் மக்களிடம் மீள வழங்கப்படும்.

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். இன்று பலாலி படைத்தலமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், கோட்டை தொல்லியல் திணைக்களத்தின் ஆழுகைக் குள் இருந்து கொண்டிருக்கின்றது.  அங்கே இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதன் ஊடாக மக்களுக்கு சொந்தமான காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி மக்களுக்கு காணிகளை வழங்கலாம். மேலும் இராணுவத்தை முழுமையாக அங்கு நகர்த்த இயலும். இது தொடர்பாக தொல்லியல் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருக் கின்றோம். அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்தால் இராணுவத்தை கோட்டைக்குள் நகர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆவா குழுவை அடக்க இராணுவத்திற்கு 2 நாட்கள் போதும்.

ஆவா குழு உள்ளிட்ட யாழ்.மாவட்டத்தில் வன்முறைகளில் ஈடுபடும் குழுக்களை கட்டுப்படுத்துவ தற்கு இராணுவத்திற்கு 2 நாட்கள் போதும், ஆனால் சிவில் நிர்வாகத்தில் தலையிட இராணுவத் திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். இன்று பலாலி படைத்தலமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் ஆவா குழு உள்ளிட்ட பல்வேறு வாள்வெட்டு குழுக்களின் வன்முறைகள் தொடர்பாக அறிந்திருக்கிறோம். ஆனாலும் தற்போது சிவில் விடயங்களில் இராணுவத்திடம் பலம் இல்லை. இராணுவத்திற்கு அந்த விடயங்களிலே தலையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி நாங்கள் மக்களுக்கான செயற்பட்டால் இராணுவத்தின் மீது அபாண்டமான குற்றங்கள் சுமத்தப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் பொலிஸாரிடமே அந்த அதிகாரங்கள் பூரணமாக இப்போது உள்ளது. ஆனால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வன்முறையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதை நாங்கள் பார்கிறோம்.

இந்நிலையில் இவ்வாறான வாள்வெட்டு குழுக்களை அடக்குவதற்கு எமக்கு அனுமதி தாருங்கள் என ஜனாதிபதியை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவ்வாறான அனுமதி எமக்கு தரப்பட்டால் 2 நாட்களில் இந்த சிறு வன்முறை குழுக்களை அடக்குவதற்கு இராணுவத்தால் இயலும். ஆனால் எமக்கு அந்த அனுமதி இன்னும் தரப்படாத நிலையில் எல்லைக்குள் நாங்கள் நிற்கவேண்டிய கடப்பாடு இருந்து கொண்டிருக்கின்றது என்றார்.


இராணுவம் செய்யும் உதவிகள் அரசியல் நோக்கம் கொண்டவை அல்ல

இராணுவம் மக்களுக்கு செய்யும் சேவைகளை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லு ங்கள். நாம் செய்யும் சேவைகள் அரசியல் நோக்கம் கொண்டதோ, அல்லது யாரையும் ஏமாற்று ம் நோக்கம் கொண்டதோ அல்ல.

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். இன்று பலாலி படைத்தலமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,  யாழ்.மாவட்டத்தில் உள்ள இராணுவம் தெற்கில் உள் ள தொண்டு அமைப்புக்களுடன் இணைந்து வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி திட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள்,

மதங்களுக்கிடையிலான நல்லிணக்க திட்டங்கள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் அமைக்கும் திட்டங்கள், வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத் துக் கொடுக்கும் திட்டங்கள், மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள்,

அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்கும் செயற்றிட்டங்கள் என பல்வேறு செயற்றிட்டங்களை இன்றளவும் செய்து வருகின்றது. இதேபோல் 10 ஆயிரம் இராணுவ வீரர்கள் தமது கண்களை தானம் செய்துள்ளார்கள்,

10 ஆயிரம் மலசல கூடங்களை அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதேபோல் யாழ்.மாவட்டத்தில் கார் பந்தயம் மற்றும் மோட்டார் சைக்களின் பயந்தயம் போன்றவற்றை நடாத்தவும் இராணுவம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு இராணுவம் மக்களுக்கு செய்யும் உதவி திட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டN தா அல்லது யாரையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதோ அல்ல. 30 வருடங்கள் இந்த நா ட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்கள் அனுபவித்த துன்பங்களை கண்கூடாக பார்த்து அதன் அடிப்படையில் செய்யப்படும் உதவிகளாகும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் உருவாக்குவ தற்கு முயற்சிக்கின்றார்கள்.

அதன் ஒரு பாகமாகவே இந்த உதவித்திட்டங்கள் அமையும். எ னவே நாம் வழங்கும் உதவி திட்டங்கள் தொடர்பாக சில ஊடாகங்கள் தவறான விமர்சனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றது.

உண்மைகளை அல்லது சரியானவற்றை சரி யானவையாகவும், உண்மையானவையாகவும் மக்களிடம் சொல்லுங்கள். அதேசமயம் இராணும் எதாவது பிழைகள் புரிந்தால் அல்லது தவறான நடத்தைகளில் ஈடுபட்டால் அல்லது இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் அவை குறித்தும் நேரடியாக எமக்கு தெரியப்படுத்துங்கள் அவ்வாறான வர்களுக்கு இராணுவத்தில் தக்க தண்டணைகள் வழங்கப்படும். மேலும் நான் தெற்கில் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கி ய செவ்வியில் மிக தெளிவாக கூறியுள்ளேன்.

வடக்கு மக்கள் குறித்தும், வடக்கு குறித்தும் தெற்கில் கூறப்படும் கருத்துக்களை அப்படியே நம்பாதீர்கள். உண்மையை அறிந்து கொள்ளவடக்குக்கு வாருங்கள், அங்குள்ள மக்களுடன் இயல்பாக பேசி உண்மைகளை அறியுங்கள் என்றும் கூறினேன். ஆகவே ஊடகங்கள் உண்மையை, நல்லவிடயங்களை நல்லபடியாக மக்களுக்கு சொல்லுங்கள் என்றார்.

தயாளன், யாழ்ப்பாண நிருபர்


About editor 3116 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply