திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி
September 15, 2018

தியாகி திலீபனின் நினைவு தினம் நடைபெறும் காலங்களில் களியாட்டங்களைத் தவிர்த்து திலீபனின் நினைவுகளை சுமந்து உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டி நிற்கின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழர் தாயக அரசியல் பரப்பில் ஆட்சி அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம் பெற்றுவரும் இந்தச் சூழலில் ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூக விடுதலையை நேசித்தவர் தியாக தீபம் திலீபன்.
அதற்கு வலுச்சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது உணவு ஒறுப்பில், நல்லூர் வீதியில் மூச்சடங்கிப் போனவர் தியாகி திலீபன்.
இன்றுவரை திலீபனின் ஒரு கோரிக்கைகூட நிறைவேற்றப்படாத நிலையில் துன்பத்தின் நீட்சியில் தமிழினம் இடர்படும் இச்சூழலில் தியாகி திலீபனின் நினைவு நாட்கள் நடைபெறும் இக்காலங்களில் களியாட்டங்களைத் தவிர்த்து திலீபனின் நினைவுகளை சுமந்து உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கவேண்டும் என தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டி நிற்கின்றோம்.
தியாகி திலீபன் எங்களோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரின் கனவு இன்னும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி
அஹிம்சைப் போராளி திலீபன் நினைவு நாளில் காங்கிரஸ் கட்சி சண்டித்தனம்!
“முன்னால் வந்த காதை பின்னால் வந்த கொம்பு மறைத்ததாம்’ – என்பார்கள்.
நேற்று நல்லூரில் திலீபனின் நினைத் தூபி அருகே இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி அறிந்த போது இந்த அனுபவ மொழிதான் நினைவுக்கு வந்தது. தியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகின. திலீபன் தனது உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்த தினமான செப்தெம்பர் 15 ஆம் நாள் நேற்று காலையில் நல்லூரியில் நினைவுத் தூபியில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் எல்லாம் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வுக்கான சிறிய அளவிலான ஒலிபெருக்கிக் கருவிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அஞ்சலி நிகழ்வுகள் முடிவுறும் கட் டத்தில் வடக்கு மாகாண அவைத் தலை வர் சி.வீ.கே.சிவஞானம் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் அஞ்சலி செலுத்தினார். அத்தோடு அஞ்சலி நிகழ்வு பூர்த்தியுற அவ்விடத்தை விட்டு விலகினார. அவரை ஊடகவியலாளர்கள் சூழ்ந் து கொண்டனர். ஊடக வியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க முயன்றா அவர். உடனே பெரிய சத்தமாகக் கதறத் தொடங்கியது ஒலிபெருக்கி.
தங்கள் உரையாடலை வேண்டு மென்றே குழப்பும் விதத்தில் ஒலிபெருக்கி அலறவிடத் தொடங்கியமைக் கண்ட ஊடகவியலாளர்களும், சிவஞானமும் ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்குமாறு கோரினர். பக்கத்தில் நின்ற ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்குமாறு அதன் இயக்குநரை வேண்டினர். அவரும் சத்தத்தைக் குறைக்க முயன்றார்.
அதைக் கண்டதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் – “24 கரட் அசல் அரசியல் மட்டும் செய்யும்’ கட்சியின் – மூத்த பிரகிருதிகள் பாய்ந்து வந்தனர். மீண்டும் சத்தமிட்டு ஒலிபெருக்கியை அலறவிட்டனர். “இந்த இடத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது.” – என்றும் கத்தினர். அதனால் ஜனநாயகப் போராளிகள் கட்சியினருக்கும், அவர்களுக்கும் இடை யில் தள்ளுமுள்ளும், கடும் வாக்கு வாதமும் ஏற்பட்டன.
இதை அவதானித்த சிவஞானம் சத் தமின்றித் த ம்பாட்டில் புறப்பட்டார். “நாங்கள் அரசியல்வாதிகள் எங்கும் கேள்வி கேட்போம். பேட்டி காணுவோம். இதைத் தடுக்க இவர்கள் யார்?” – என்று முணுமுணுத்தபடி ஊடக வியலாளரும் புறப்பட்டனர்.
இனி நான் விடயத்துக்கு வருகிறேன். அந்தத் தூபி அந்த இடத்தில் கட்டப்பட்டு இப்போது முப்பது வருடங்கள். நேற்று அங்கு நின்று சத்தமிட்ட சில குஞ்சு, குருமான்கள் அப்போது பிறந்தும் கூட இருக்கமாட்டா.
987 செப்ரெம்பர் 26 ஆம் நாள் திலீபன் மறை ந்து 2 வாரத்தில் – ஒக்ரோபர் 10 ஆம் திகதி – இந்திய அமைதி காக்கும் படைகள் புலிகளுக்கு எதிரான போரில் குதித்தன. தமிழர் தாயகம் மிக மோசமான யுத்தப் பேரழிகளைச் சந்தித்தது. “ஈழமுரசு’, “முரசொலி’ ஆகிய நாளிதழ் அலுவலகங்களைக் குண்டு வைத்துத் தகர்த்ததோடு இந்தியப் படைகளின் அராஜகம் ஆரம்பமாயிற்று. அதற்குப் பின்னர் இரண்டு, மூன்று மாதங்களில் ஈழநாடு அச்சு இயந்திரம் புலிகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
நானும், பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதனும் பொறுப்பாக இருந்த நாளிதழ் தனித்து நெருக்கடிகளை எதிர் கொண்ட மிக மோசமான கால கட்டம் அது.
புலிகளோ, இந்தியப் படைகளுடன் நேரடி யுத்தத்தில். இன்று எக்காளமிடுவோர் உட்பட ஏனைய அரசியல் தலைவர்களோ கொழும்பிலோ அல்லது இந்தியாவிலோ தஞ்சம் புகுந்துவிட்டனர்.
அப்போது மக்கள் பிரமுகராகத் தனித்து யாழில் நின்றவர் அப்போதைய மாநகர ஆணையாளர் சி.வீ.கே.சிவஞானம் தான். புலிகளுக்கும் இந்தியப் படை களு க் கும் இடையிலான பல ஊடாட்டங் களை “கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலையில் அவர் முன்னெடு த்தமையை நான் நன்கு அறிவேன்.
இந்தியப் படைக்கு ஆதரவாக தமிழ் நாடு வானொலியில் “அன்பு வழி’, “நேசக் கரம்’ என்ற பெயரில் பல சேவைகள் தொடர்ந்து ஒலிபரப்பாகின. அவற்றில் கூட யாழ்ப்பாணத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளாகக் குறிப்பிட்டுக் கூற எவரும் இருக்கவில்லை. அதனால் அவை கூட அடிக்கொரு தடவை யாழ்ப்பாண நகர ஆணையாளர் சிவஞானத்தை அவரின் பெயரை மேற்கோள்காட்டி விடயங்களை அறிவிக்க வேண்டிய நிலையில்தான் இருந்தன.
ஏன், இன்று அதிகம் துள்ளிக் குதிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூலக் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலம் கூடக் கொழும் பில் தான் இருந்தார். பின்னாளில் அவ ருக்கு மாமனிதர் பட்டமளித்த விடுத லைப் புலிகள், இந்தியப் படைகளின் காலத்தில் அவர் கட்சியினரைப் பந்தாடக்கூடத் தவறவில்லை. அவரது கட்சியைச் சர்ந்த சட்டத் தரணி சிவஞானம் யாழில் சுட்டுக் கொல்லப்பட்டபோது குமார் பொன்னம்பலம் எவ்வளவு மனமுடைந்து போனார் என்பதை நானறிவேன்.
வல்வெட்டித்துறையில் அப்போது இருந்த புலிகளின் யாழ். தளபதிகளை மறைவாகச் சந்தித்து எமது ஊடகப் பிரச்சினையைச் சமாளிப்பதற்காக என்னுட னும் கானமயில்நாதனுடனும் வல்வெட் டித்துறையில் கிட்டுவின் அம்மாவின் வீட்டுக்கும் பிற ஓரிரு இடங்களுக்கும் கூட “றிஸ்க்’ எடுத்து, ஆபத்து மிகுந்த – தலைமறைவுப் பயணங்களை முன்னெடுத் தவர் சிவஞானம். அதை இந்த ச் சந்தர்ப் பத்தில் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
இன்று எல்லோரும் போற்றும் திலீபன் தூபியை அந்த இ டத்தில் முதன் முதலில் அமைத்தவர் சிவஞானம்தான். அதுவும் இந்தியப் படைகள் புலிகளுக்கு எதிராக மிக மோசமான யுத்தத்தை முன்னெடுத்த சமயம், சரியாகத் திலீபன் மறைந்து ஓராண்டில் 1988 செப்ரெம்பர் 28 இல் அதைத் தாமே முன்னின்று திறந்தும் வைத்தார் சிவஞானம்.
எனது நினைவு சரி என்றால், அந்த முதல் தூபி அமைப்புக்கு முழுச் செலவையும் அவரே ஏற்றுக் கொண்டார். ஆனால் நல்லூர் கோயிலிடம் யாழ். மாநகர சபை குத்தகை எடுத்திருந்த காணியில் அதனை அவரால் அமைக்க முடிந்தமைக்கு அவரது அப்போதைய மாநகர ஆணையாளர் பதவி உதவியிருக்கும் என நினைக்கிறேன்.
திலீபன் சாவைத் தழுவியது செப்தெம்பர் 26. அவரது பூதவுடல் யாழ். பல் கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்டது செப்ரெம்பர் 28. அதனால் அடுத்த ஆண்டு செப்ரெம்பர் 28 இலேயே அத்தூபி திறக்கப்பட்டது.
இந்தியப் படைகளின் கடும் எதிர்ப்பு, எரிச்சலுக்கு மத்தியிலும், திலீபனை ஓர் அஹிம்சைப் போராளியாக முன்னிறுத்தி, அதைத் தமக்கு சார்பான ஒரே நியாயமாகக் காட்டி திலீபன் தூபியைத் தாமே தமது சொந்தப் பணத்தில் கட்டித் தாமே திறந் து வைத்தார் சிவஞானம். அது நடந்து சரியாக ஐந்தாம் நாள் – எனது நினைவு சரி என்றால் – ஒக்ரோபர் 3ஆம் நாள், யாழ். மாநகர சபையில் தமது அலுவலகத்தில், தமது ஆசனத்தில் இருந்து பணி செய்து கொண்டிருந்த போதே சிவஞானம் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சராமாரியாகச் சுடப்பட்டார். படுகாய மடைந்த போதிலும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துக் கொண்டார்.
அந்த மூலத் தூபி, 1995 இடப் பெயர்வை ஒட்டிய காலத்தில் முதல் தடவையாக உடைக்கப்பட்டது.
1998 காலப் பகுதியில் யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவிருந்த சி.வீ.கே.சிவஞானம், சங்கம் மூலம் ஒரு தொகை நிதி யைச் சேகரித்து அத்துடன் தனது நிதி யையும் ய சலவிட்டு மீண்டும் தூபியைப் புனரமைத்தார்.
அந்தத் தூபியும் மிலேனிய தசாப்தத்தின் பிற்பகுதியில் மீள உடைக்கப்பட்டு இப்போதைய நிலையில் காட்சியளிக்கின்றது. அத்தகைய தூபிக்குப் பக்கத்தில் நின்று சிவஞானம் அரசியல் பேசக்கூடாது, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடாது என்றெல்லாம் இப்போது கூச்சலிடுவது too much போல எனக்குப்படுகின்றது. உங்களுக்கு என்ன தோன்றுகின்றது…?
– மின்னல்-
திரு வித்தியாதரன்
அத்தகைய தூபிக்கு பக்கத்தில் நின்று சிவஞானம் அரசியல் பேசக்கூடாது,
ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடாது என்றெல்லாம் இப்போது கூச்சலிடுவது too much போல
எனக்குப்படுகின்றது.
உங்களுக்கு என்ன தோன்றுகின்றது…?
Too much என்று சொல்வதை விட கடைந்தெடுத்த காடைத்தனம் என்று சொல்ல வேண்டும். ஊடக சுதந்திரத்துக்கும் தனி மனித சுதந்திரத்துக்கும் விடுக்கப்படும்
அறைகூவல் சனநாயகத்துக்கு மாறானது.
வரலாற்றைக் காய்தல் உவத்தல் இன்றி வரலாறாகப் பதிய வேண்டும். இன்று வரலாறு திரிக்கப்படுகிறது. அல்லது மறைக்கப்படுகிறது.
வரலாற்றில் பத்து இலட்சம் மக்களின் குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்படுவதற்குத் துணை போன தமிழ்க் காங்கிரஸ் கட்சி – அந்த மக்களுக்கு இரண்டகம் செய்த கட்சி –
இன்று அதன் தலைவர் மற்றவர்களைப் பார்த்து துரோகிகள் என்கிறார், துரோகம் செய்கிறார்கள் என ஊழையிடுகிறார்!
சனநாயகத்தைக் கண்டு அகில இலங்கை காங்கிரஸ் கட்சி (கட்சிப் பெயரில் ஒற்றையாட்சி அடையாளம் இருக்கிறது)
அச்சம் அடைகிறது. இது நல்லதல்ல.
நக்கீரன்