இன்றைய அரசியலில் திரு சுமந்திரனை நீக்கி விட்டு தமிழ் மக்களது அரசியலை எடை போட முடியாது!
நக்கீரன்
விக்னேஸ்வரனின் அடிவருடிகள், பந்தம் பிடிப்போர் சுமந்திரன் மீது சேறு அள்ளிப் பூசும் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமந்திரன் தமிழர்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்று சொன்னார் என்ற பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.
புதிய அரசியல் யாப்பில் சமஷ்டி என்ற சொல் இருக்காது. அதே போல் ஒற்றையாட்சி என்ற சொல்லும் இருக்காது. இதையே தொடக்க முதல் சுமந்திரன் ஒவ்வொரு மேடையிலும் சொல்லி வருகிறார். அதற்குக் காரணம் உண்டு.
புதிய அரசியலமைப்பு சம்மந்தமான பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது 2015.01.19 ஆம் திகதி சனாதிபதி நாடாளுமன்றில் உரையாற்றுகையில், “சமஷ்டி என்றால் தெற்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஒற்றையாட்சி என்றால் வடக்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் அரசியலமைப்பு மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படக்கூடாது. அவ்வாறான ஆவணமாக அது இருக்ககூடாது. எனவே நவீன அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
சனாதிபதியை மேற்கோள் காட்டித்தான் எல்லா மேடைகளிலும் சுமந்திரன் பேசி வருகிறார்.
சுமந்திரன் செய்யும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரது பேச்சுக்களை காய்தல் உவத்தலின்றி படித்து விளங்கிக் கொள்ள வேண்டும்.
காலியில் நடந்த கூட்டத்திலும் சமஷ்டியைப் பற்றிப் பல விடயங்களை சுமந்திரன் சொல்லியிருந்தார். அவருடைய பேச்சுக்குப் பிறகு அங்கு இருந்த ஒரு சிங்களவர் சிங்களத்தில் அவரிடம் ஒரு கேள்விகேட்கப்பட்டது.
அப்படியானால் சமஷ்டி அரசமைப்பை மட்டும்தானா நீங்கள் ஏற்றுக் கொள்ளுவீர்கள்? என்று சிங்களமொழியில்கேட்கப்பட்டது.
அது சுமந்திரன் அவர்களது பேச்சின் வெளிப்பாட்டில் இருந்து கேட்கப்பட்ட கேள்வியாகும். அவர் வழமையாகச் சொல்லும் பதிலைத்தான் அதிலும் சொல்லியிருந்தார். அதாவது சமஷ்டி என்ற பெயர்ப்பலகை எங்களுக்குத் தேவையில்லை. அதைத்தான் அவர் சொன்னார். அவ்வாறு சொன்னதை இன்று எல்லா ஊடகங்களும் சமஷ்டி தமிழர்களுக்குத் தேவையில்லை என்று சுமந்திரன் சொன்னதாக தலைப்புப் போட்டு பிரசுரித்திருக்கிறார்கள்.
இது கோயபல்ஸ் (Joseph Goebbels) பாணிப் பரப்புரையாகும். அதாவது ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அதனை உண்மை என மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற கோட்பாட்டை ஜெர்மன் நாட்டை நாசிகள் ஆட்சியில் முதன் முதலில் கையாண்டவர்.
இன்று சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற சொற்பதங்களுக்குரிய வரைவிலக்கணம் மாறிவிட்டது. பிரித்தானியா நாட்டு யாப்பு ஒற்றையாட்சி என்று சொல்லப்பட்டாலும் சமஷ்டி ஆட்சியில் காணப்படாத அதிகாரங்கள் அதன் மாநில அரசுகளுக்கு இருக்கின்றன. எடுத்துக் காட்டு ஸ்கொட்லாந்து மாநிலம். பிரிந்து போவதற்குக் கூட ஸ்கொட்லாந்து மாநிலத்துக்கு உரிமை இருக்கிறது.
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து சுதந்திர நாடாக வேண்டும் அல்லது வேண்டாம் என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என வாக்களிக்குமாறு ஸ்கொட்லாந்து மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு (referendum) செப்தெம்பர் 18, 2014 இல் நடத்தப்பட்டது. ‘இல்லை’ என்று 2,001,926 (55.3 விழுக்காடு) பேரும் ‘ஆம்’ என்று 1,617,989 (44.7 விழுக்காடு) வாக்களித்தார்கள்.
A referendum on Scottish independence from the United Kingdom took place on Thursday 18 September 2014.[1] The referendum question, which voters answered with “Yes” or “No”, was “Should Scotland be an independent country?”[2] The “No” side won, with 2,001,926 (55.3%) voting against independence and 1,617,989 (44.7%) voting in favour. The turnout of 84.6% was the highest recorded for an election or referendum in the United Kingdom since the introduction of universal suffrage.
இந்தியா சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டிருந்தாலும் மாநிலங்கள் வங்கி வைத்திருக்க முடியாது. பிரிந்து போகும் உரிமை இல்லை. நாணயம் இல்லை. மத்திய வங்கி இல்லை.
“Athirvu” exclusive interview with Member of Parliament MA Sumanthiran
Athirvu” exclusive interview with Member of Parliament M.A Sumanthiran held on 05-09-2018 at 10.00PM on …
“Athirvu” exclusive live interview with MA Sumanthiran … – YouTube
https://www.youtube.com/watch?v=FONdBWCJxnU
Watch the exclusive live interview in “Athirvu” with M. A. Sumanthiran (MP), held on 02-07-2015 at 9.00PM on …
“Athirvu” exclusive live interview with MA … – Vasantham TV
“Athirvu”exclusive live interview with M. A. Sumanthiran (Hon. Former Minister of Parliament), held on 02-07-2015 …
Vasantham TV – தமிழ் தேசியக் … – Facebook
Vasantham TV was live — with M.A Sumanthiran and 4 others. · October 11, 2017 ·. தமிழ் தேசியக் …
Vasantham TV – Watch the live and exclusive interview in… – Facebook
Watch the live and exclusive interview in Athirvu with M.A Sumanthiran (Tamil National Alliance Member of …
Vasantham TV – தமிழ் தேசியக் … – Facebook
Watch the live and exclusive interview in Athirvu with M.A Sumanthiran (Tamil National Alliance Member of …
Vasantham TV – Athirvu Exclusive Interview with Hon. M. A. …
Watch the live and exclusive interview in Athirvu with M. A. Sumanthiran and Ganjedrakumar Ponnambalam.
Leave a Reply
You must be logged in to post a comment.