முல்லைத்தீவில் மாபெரும் பேரணி! அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்
மகாவலி எல் வலயம் ஊடாக முல்லைத்தீவு மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி முல்லைத்தீவில் சற்றுமுன்னர் மாபெரும் பேரணி ஆரம்பமானது.
முல்லைத்தீவு பி.டபிள்யூ சந்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
இதேவேளை இன்று போராட்டம் நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பேரணியின் போது மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்குமாறு மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்தித்த இணைத்தலைவர்கள் ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.
கோரிக்கைகள்..
- மகாவலித் திட்டத்தின் நன்மை, தீமைகள், சவால்கள் மற்றும் சிக்கல் தன்மைகளை கருத்திற் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மகாவலி திட்டச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வடக்கின் ஏனைய பகுதிகளில் விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகளை கைவிடுமாறும் தங்களை வினையமுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
- கொக்கிளாய், கொக்கத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கெணி கடற்கரையில் சட்டவிரொதமாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகார சபையால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக மீளப் பெற வேண்டும்.
- 1984 வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான, நீதிக்கு புறம்பாக சிங்கள மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட 2000 வாழ்வாதார நிலங்கள் அதன் உண்மையான உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு மீள வழங்க வேண்டும்.
- தமிழர்களின் மரபுரிமையை திட்டமிட்டு சீரழிக்கும் நோக்குடன் மாவட்ட அரசாங்க அதிகாரிகளையும் கிராமிய அமைப்புக்களையும் கலந்துரையாடாது வரலாற்று திரிபை ஏற்படுத்தும் நோக்கோடு தன்னிச்சையாக செயற்படும் தொல்லியல் திணைக்களத்தின் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
- வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரிக்கும் நோக்கோடு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேங்ஙந்களை உடன் நிறுத்த தவறும் பட்டசத்தில் அது இன நல்லிணக்கத்தை மிக மோசமாக பாதிககும்.
- ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நந்திக்கடல், நாயாற்றுக் களப்புக்கள் மீண்டும் சட்ட ரீதியாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட வேண்டும்.
புகைப்படங்கள் – யது
https://www.tamilwin.com/community/01/191900?ref=imp-news
காணி அபகரிப்புக்கு எதிராக- முல்லைத்தீவில் மாபெரும் பேரணி!!
மகாவலி எல் வலயம் ஊடாக முல்லைத்தீவு மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி முல்லைத்தீவில் சற்றுமுன்னர் மாபெரும் பேரணி ஆரம்பமானது.
முல்லைத்தீவு பிடபிள்யூ சந்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.
https://newuthayan.com/story/11/காணி-அபகரிப்புக்கு-எதிராக-முல்லைத்தீவில்-மாபெரும்-பேரணி.html
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலிஅதிகார சபை வழங்கியுள்ளது.
இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர் என குற்றம் சாட்டி , அதனால் மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும். தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்யவேண்டும். என்ற 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
http://globaltamilnews.net/2018/93093/