போருக்குப் பின்னர் மடையுடைத்துப் பாயும் காட்டாற்று வெள்ளம் போல் தமிழர் தாயகத்தில் பாய்கிறது

சிங்களக் குடியேற்றங்கள் போருக்குப் பின்னர் மடையுடைத்துப் பாயும் காட்டாற்று வெள்ளம் போல் தமிழர் தாயகத்தில் பாய்கிறது

எதிர்வரும் 26 ஆம் நாள் திருமுறிகண்டி கோயில் முன்றலில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளைகக் களைந்து, இன விடுதலைக்காக பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையின் மொத்த 65,619 சகிமீ நிலப்பரப்பில் 18,880 சகிமீ தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்குப் பிரதேசமாகும். இதில் 7000 சகிமீ நிலப்பரப்பபை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது.

போர்க் காலத்தில் சற்று ஓய்ந்திருந்த சிங்களக் குடியேற்றங்கள் போருக்குப் பின்னர் மடையுடைத்துப் பாயும் காட்டாற்று வெள்ளம் போல் தமிழர் தாயகத்தில் பாய்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள திருமுறிகண்டிக் கோயிலைச் சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணியில் இராணுவ குடியிருப்புக்கள், உல்லாச கோட்டல்கள் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காணிகளின் சொந்தக்காரர்கள் வவுனியா தடுப்பு முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களது காணிகள் மீளவும் அவர்களுக்கு எந்தக் காலத்திலும் திருப்பி வழங்கப்படமாட்டாது என்றும் குறித்த காணிகளின் உரித்து ஆவணங்களில் இருந்து அவர்களது பெயர்கள் அகற்றப்பட்டிருப்பதாகவும் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் மக்களிடம் மிரட்டும் பாணியில் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.

இதே சமயம் மன்னார் மாவட்டம் பேசாலைப் பகுதியில் அமைந்துள்ள பற்றிமா வீட்டுத்திட்டத்தில் மீள்குடியேறியிருந்த குடும்பங்களை நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடற்படை அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளது. இந்த மக்கள் பேசாலை தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் தெற்கு குப்பிளான் வடக்கில் மீளக்குடியமர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இராணுவத்தினால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளன. இராணுவம் 250 ஏக்கர் காணியைக் கைப்பற்றியுள்ளது. சிங்கள இராணுவம் பாதுகாப்பு வேலியைத் தாண்டி உள் நுழையக் கூடாது என மக்களை எச்சரித்துள்ளது.

பற்றிமா வீட்டுத் திட்டப்பகுதியில் இருந்து போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருந்த 50 குடும்பங்களில் 25 குடும்பங்கள் கடந்த கிழமைதான் அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தன. காடடர்ந்து மண்டிக் கிடந்த அந்த வீட்டுத் திட்டப் பகுதியை கடந்த 2 மாதங்களாக அங்கு சென்று மன்னார் பிரதேச செயலாளரின் மீள்குடியேற்ற நடவடிக்கையின் ஊடாகப் படிப்படியாகத் தாங்களே துப்பரவு செய்த பின்னர் அதில் மீள்குடியேறியிருந்தனர்.

ஒருபுறம் நல்லிணக்கம் பற்றி வாய்ப்பறை அறைந்து கொண்டு மறுபுறம் வட கிழக்கில் இனச் சுத்திகரிப்பில் சிங்கள – பவுத்த பேரினவாத அரசு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த இனச் சுத்திகரிப்பை வட – கிழக்கில் நிலை கொண்டுள்ள சிங்கள இராணுவம் முன்னின்று நடத்துகிறது.

போர் முடிந்த பின்னரும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று வெற்றி விழா கொண்டாடிய பின்னரும் வட – கிழக்கில் புதிதாகப் படைத்தளங்களையும் இராணுவ குடியிருப்புக்களையும் விமான ஓடுபாதைகளையும் தடுப்பு முகாம்களையும் உருவாக்கி வருகிறது. இதற்கும் மேலாக பவுத்தமதத்தவர் எவரும் இல்லாத ஊர்களில் பவுத்த விகாரைகள், பவுத்த தூபிகள், புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

சிங்கள இராணுவம் உயர்பாதுகாப்பு வலயங்கள் கணிசமான அளவு – 40 விழுக்காடு – குறைக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது. இராணுத்தின் கூற்றுப்படடி இன்னும் 60 விழுக்காட்டு நிலப்பரப்பை அது ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் 18 உயர்பாதுகாப்பு வலயங்கள் உண்டு. மொத்தம் 880 சகிமீ நிலப்பரப்பில் 260 சகிமீ உயர்பாதுகாப்பு வலயமாக அதாவது மூன்றில் ஒரு பகுதி காணப்படுகிறது. அதிலிருந்து வெளியேற இராணுவம் பிடிவாதமாக மறுத்து வருகிறது. வட மாகாணத்தின் பல பகுதிகளில் இராணுவ தேவைகளுக்காகவும் இராணுவ குடியிருப்புக்களுக்காவும் 20,000 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதென ததேகூ இன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேச்சந்திரன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இராணுவம் சட்டவிதிகளுக்குப் புறம்பான வகையில் எந்தக் காணியையும் கையகப்படுத்தலாம் என நடந்துகொள்கிறது. அவ்வாறு கையகப்படுத்தப்ட்ட காணிகளில் “இது இராணுவப் பிரதேசம்” என அறிவுப்புப் பலகையை சிங்களத்தில் எழுதி வைத்துள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 44,559 பேர் (12,249 குடும்பங்கள்) தொடர்ந்தும் ஏதிலிகளாக வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் நலன்புரி அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் 53 நலன்புரி நிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்கும் சுமார் 8,000 ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு இராணுவம் நெருக்கடி கொடுக்கிறது. தற்போது அந்தப் பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துள்ள இராணுவம் மற்றும் கடற்படை இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது. தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட

23 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 7,410 ஏக்கரும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 370 ஏக்கரும் இதில் அடங்குகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் இராணுவம் 8,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கின் சில பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இந்தப் பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பிரதேசத்தினுள்

18 கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாகவும் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் பகுதியாகவும் உள்ளடங்குகின்றன. இந்தப் பகுதிகளுக்குள் மீளக்குடியமர்வதற்கு 7,000 குடும்பங்கள் வரை ஏற்கனவே விண்ணப்பித்துவிட்டு மீள்குடியமர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. “உயர்பாதுகாப்பு வலயங்கள் எனத் தாயகத்தின் வளமான நிலங்கள் முழுவதையும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்கள இராணுவம் இன்று போர் முடிந்துள்ள நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் எதற்காக எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில் அவை, அபாயகரமான பிரதேசங்கள் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்றும் நேரத்திற்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றது” என ததேகூ இன் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா காட்டமாகக் குறிப்பிடுகிறார்.

மேலும் “வி.புலிகள் வசம் இருந்த நிலங்கள், அவர்களுக்கு விற்கப் பட்ட காணிகள் போன்றவற்றை சிங்கள இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. மறுபுறத்தில் தொழிலுக்காக என்று கூறிக்கொண்டு வந்து தங்கும் சிங்களவர்கள் சில நாட்களிலேயே நிரந்தர உரிமை கேட்டவுடன் அவை வழங்கப்படுகின்றன.

“அது மட்டுமல்லால் அவர்கள் குடியேறும் பகுதிகளில் இராணுவத்தினதும் அமைச்சர்களினதும் ஆதரவுடன் விகாரைகள் முதற்கொண்டு பள்ளிக்கூடங்கள் வரை அமைக்கப்படுகின்றன. இவை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்டாலும் அதற்குப் பதிலும் இல்லை. இந்நிலையில் எங்கள் இனம் பாரம்பரியமாக வாழ்ந்த நிலங்களிலேயே ஏதிலிகளாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றது” என மாவை சேனாதிராசா அரசு மீது குற்றம் சாட்டுகிறார்.

முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பகுதியில் சிங்களக் குடும்பங்கள் புதிதாகக் குடியேற்றப்பட்டுள்ளன. கேட்டால் 1960 காலப் பகுதியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என உதவி அரச அதிபர் எஸ்.தயானந்தா தெரிவித்தார். இவர்களில் ஒருதொகுதி மக்கள் (37 குடும்பங்கள்) கடந்த ஆண்டு முகத்துவாரம் பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு தொகுதி மக்களுக்கு (45 குடும்பங்கள்) புதிதாகக் காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். மணல் ஆறு (வெலிஓயா) என்ற பிரதேச செயலகப் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதில் 8 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன. அவற்றில் குமுளமுனை, தண்ணிமுறிப்பு, அளம்பில், கருநாட்டுக்கேணி போன்ற கிராமசேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன.

கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், தென்னமரவாடி, முந்திரிகைக்குளம், அக்கரைவெளி, கலியாணபுரம், மாரியாமுனை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1983 ஆம் ஆண்டு அரசின் ஆதரவோடு அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதன்போது அக்கரைவெளி, முந்திரிகைக்குளம், கலியாணபுரம் போன்ற இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. எஞ்சியிருந்த தமிழ்ப் பிரதேசங்களான கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, தென்னமரவாடி ஆகிய கிராமங்கள் சிங்களப் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இப்போது சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.

கொக்கச்சன்குளம் என்ற இடத்தில் 165 சிங்களக் குடும்பங்கள் புதிதாக குடியேற்றப்பட்டுள்ளன. தற்போது கொக்கச்சன்குளம் என்பது கலபோவசெவென எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செட்டிக் குளத்தில் புதிதாகக் குடியேறியுள்ள 75 சிங்களக் குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கும் பணி இடம் பெற்றுவருகின்றது.

இதே சமயம், 28 ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட போதும் அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றித் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாகப் பொய் ஆதாரங்கள் காட்டி இந்தப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெறுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.

இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலோ, போராடினாலோ, போராடத் தலைப்பட்டாலோ உடனே அரசு அவர்களை பிரிவினை வாதிகளாகவும் ஆயுதவிரும்பிகளாகவும் சித்திரிக்கிறது. இதன் மூலம் சிங்கள அரசு செய்துவரும் நில ஆக்கிரமிப்பை, இனச் சுத்திகரிப்பை மூடி மறைத்துக் கொண்டிருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சுர கோயிலில் இருந்து 50 மீற்றர் தொலைவில் மகாதோட்ட இராஜமகா விகாரை என்ற பெயரில் பவுத்த விகாரை புதிதாக இராணுவத்தினால் நிருமாணிக்கப்பட்டு அதில் 1,500 கிலோ நிறையுள்ள புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருக்கேதீச்சுரத்தின் பண்டைய பெயர் மாதோட்டம் ஆகும். இவ்வாறு வடக்கில் விகாரைகள் கட்டவும் பவுத்த சிலைகள் நிறுவவும் வடக்கின் வசந்தம் என்ற அபிவிருத்தித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்தே செலவழிக்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் கன்னியாவில் உள்ள வென்னீரூற்றுக் கிணறுகளை அந்த மாவட்ட சிங்கள அரச அதிபரால் தொல்பொருள் திணைக்களத்தின் சார்பில் இரவோடு இரவாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வென்னீரூற்றுக் கிணறுகள் உட்பட்ட பகுதி திருகோணமலை நகர பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இன்று இந்த கன்னியா வென்னீரூற்றுப் பகுதி புனித நகரமாக்கப்பட்டுள்ளது.

பெரிய புத்தர் சிலை ஒன்று புதிதாக நிறுவப்பட்டு காலையிலும், மாலையிலும் புத்தசமய பிரார்த்தனைகள் நடக்கிறது. அங்கு பவுத்த பிக்கு ஒருவர் நிரந்தரமாகக் குடியேறியுள்ளார். பாதுகாப்புக்காக இராணுவ முகாம் நிருமாணிக்கப்பட்டுள்ளது. அறிவித்தல்கள் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளன. தொடராக அமைக்கப்பட்டுள்ள சிறிய கடைகள் சிங்களவர்களால் நடாத்தப்படுகின்றது. இதிகாச காலம்தொட்டு தமிழ் ஊராக இருந்த கன்னியா எமது காலத்திலே எமது கண்முன்னே பவுத்த மயமாக்கப்பட்டுள்ளது. இந்த வென்னீரூற்றுக் கிணறுகளை இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கடன் செய்வதற்கு வெட்டினான் என்பது அய்தீகம்.

மாதகலில் மிகப் பெரிய பவுத்த விகாரை சிறீலங்கா கடற்படையால் கட்டப்பட்டுள்ளது. இதற்காக பல தனியார் காணிகளைக் கடற்படை வலோத்காரமாக கையகப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் பவுத்த பிக்குணி சங்கமித்த அரசமரக் கிளையோடு வந்து இறங்கியதாகக் கூறும் கதையின் அடிப்படையிலேயே இந்த பவுத்த விகாரை இந்துக் கோவில்களையும் உள்ளடக்கி நிருமாணிக்கப் பட்டிருக்கிறது. ஒரு நாட்டின் இராணுவம் சரி, கடற்படை சரி இவ்வாறு விகாரைகள் கட்டுவதில் ஈடுபடக் கூடாது. ஆனால் சிறீலங்காவைப் பொறுத்தளவில் இதுவே விதியாக இருக்கிறது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் மூன்றாவது ஆண்டு நிறைவு அண்மையில் தேசிய துக்க நாளாக அனுட்டிக்கப்பட்ட வேளையில் அதற்கு அருகிலுள்ள வட்டுவாகல் கிராமத்தில் இரகசியமாக அமைக்கப்பட்ட பவுத்த தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாரிய இனப்படுகொலை இடம்பெற்ற இந்தப் பகுதிக்குள் தமிழர்கள் எவரும் குடி அமர்வதற்கோ அங்கு செல்வதற்கோ அனுமதிக்கப்படாத நிலையில் மிகவும் பூடகமாக இங்கு பவுத்த தூபி அமைக்கப்பட்டுள்ளது. மாங்குளத்தில் ஒரு பாரிய புத்தர் சிலையோடு பவுத்த தூபி கட்டப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து வடக்கே செல்லும் ஏ9 நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் 17 பவுத்த விகாரைகள், தூபிகள் நிறுவப்பட்டுள்ளன. கேட்டால் வடக்குக்கு யாத்திரை போகும் பவுத்த சிங்களவர்கள் பவுத்த விகாரைகள் இருக்கும் இடங்களில் தங்கிப் போகவே பவுத்த விகாரைகளும், தூபிகளும் சிலைகளும் நிறுவுவதாக சிங்கள அரசு தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது.

அண்மையில் முல்லைத்தீவின் கரையோரமாக கொக்கிளாயிலிருந்து முள்ளிவாய்க்காலை இணைக்கும் கரையோரப் பாதை சீனாவின் ஆதரவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பாதை திறக்கப்பட்டது.

முன்னர் விடுதலைப் புலிகளின் நிழல் அரசின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சியில் உள்ள தெருக்களின் பெயர்கள் மகிந்த இராசபக்சே மாவத்தை, அளுத்மாவத்தை போன்ற சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. ஏ09 நெடுஞ்சாலையில் உள்ள கனகராயன் குளத்திலிருந்து பிரிந்து செல்லும் மூன்று வீதிகளுக்குக் கோசல பெரேரா வீதி, அனுர பெரேரா வீதி, வணக்கத்துக்குரிய யற்றிராவன விமல தேரர் வீதி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளன. முதல் இரண்டும் போரில் பங்கு கொண்ட இராணுவ வீரர்களின் பெயர்களாகவும் மூன்றாவது வீதிக்கான பெயர் புத்தபிக்கு ஒருவரின் பெயருமாகும்.

உசுப்பியெழுப்பப்படும் சிங்கள-பவுத்த பேரினவாதம் பவுத்த கோயில்களையும் புத்தர் சிலைகளையும் சிங்கள – பவுத்த மேலாதிக்கத்தின் குறியீடுகளாக சிங்கள பேரினவாத அரசு வட கிழக்கு முழுதும் நட்டுவைத்து வருகிறது. உலக வரலாறு நெடுகிலும் ஆதிக்கத்தினதும் ஆக்கிரமிப்பினதும் குறியீடாக இருக்கும் கொடிகள், இலட்சனைகள் போன்று பவுத்த கோயில்கள், புத்தரின் சிலைகள் ஆக்கப்பட்டுள்ளன.

ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே தன்னை ஒரு சனநாயகவாதியாகவும் சிறீலங்கா அரசு சனநாயக நாடு என்றும் உலகத்துக்குச் சொல்லுகிறார். மறுபுறம் தமிழ் இனத்தின் அடையாளத்தையும் இருப்பையும் மெல்ல மெல்ல அழித்து காலவோட்டதில் அந்த இனத்தையே சுத்திகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதனையே தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள், தேவையற்ற இராணுவ தளங்கள், குடியிருப்புக்கள், பவுத்த மயமாக்கல் போன்றன எடுத்துக் காட்டுகின்றன.

உயர்பாதுகாப்பு வலயங்கள் எனத் தாயகத்தின் வளமான நிலங்கள் முளுவதையும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்கள இராணுவம் இன்று போர் முடிந்த பின்னருமம் உயர்பாதுகாப்பு வலயங்கள் எதற்காக என கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில் அவை, அபாயகரமான பிரதேசங்கள் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்றும் நேரத்திற் கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றது.

இதுபோதாதென்று புதிதாக போரின் பின்னர் புலிகள் இருந்தவை, புலிகளுக்கு விற்கப்பட்டவை, புலிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டவை என வகைப்பாடுகளை போட்டுக் கொண்டு நிலங்களை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. மறுபுறத்தில் தொழிலுக்காக என்று கூறிக்கொண்டு வடக்குக்கு வரும் சிங்களவர்கள் சில நாட்களிலேயே நிரந்தர வதிவிட உரிமை கேட்கின்றனர். கேட்டவுடனேயே அவை வழங்கப்படுகின்றன.

அது மட்டுமல்லால் அவர்கள் குடியேறும் பகுதிகளில் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் அமைச்சர்களினதும் அனுமதிக் கடித்ததுடன் விகாரைகள் முதற்கொண்டு பள்ளிக் கூடங்கள் வரை அமைக்கப்படுகின்றன. இவை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்டாலும் பதில் இல்லை. இந்நிலையில் தமிழர்கள் அப்பன், பாட்டன், முப்பாட்டன் காலம் முதல் வாழ்ந்து வந்த மண்ணில் ஏதிலிகளாக, பிச்சைக்காரர்களாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.

இவற்றுக்கு எதிராக போராடினாலோ, போராடத் தலைப்பட்டாலோ ததேகூ ப்பு வி.புலிகள் கேட்டதைக் கேட்கிறது என சிங்கள அரசு சொல்கிறது. அதன் மூலம் இன அழிப்பை மூடி மறைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் எதிர்வரும் 26 ஆம் நாள் முறிகண்டி கோயில் முன்றலில் காலை 10 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டத்தை ததேகூ நடத்தவுள்ளது. இதில் கட்சி வேறுபாடுகளைக் களைந்து இன விடுதலைக்காக பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசு தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறீலங்கா இராணுவத்தினரின் நில அபகரிப்புக்கு எதிராக யூன் 26, செவ்வாய்கிழமை, புலம்பெயர் நாடுகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அதன் மூலம் தாயகத்தில் நடைபெறும் அறவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட சமாந்திரமாக புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்டும் என நாகதஅ அறிவித்தித்துள்ளது.

கனடாவில் நாகதஅ முன்னெடுக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கனடிய தமிழர் பேரவை, கனடிய தமிழர் இணையம், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர்சங்கங்கள் பங்குபற்றுகின்றன. ரொறன்ரோவில் உள்ள சிறீலங்கா துணைத் தூதுவாரலாயத்துக்கு முன்னாள் இந்தப் போராட்டம் இடம் பெறும்.

எதையும் இழக்கலாம் ஆனால் நிலத்தை இழந்தால் ஒரு இனம் தனது தேசிய அடையாளத்தை இழந்து விடும் என்பது வரலாறு படிப்பிக்கும் படிப்பினை ஆகும். (Eelanadu – June, 2012)


முள்ளிக்குளத்தில் வாழும் மீனவக் குடும்பங்களின் கண்ணீர் கதை

அந்தச் செவ்வியை பிபிசி தமிழோசை தனது செப்தெம்பர் மாதம் 2 ஆம் நாள் ஒலிபரப்பில் ஒலிபரப்பியது.  அதன் வரிவடிவத்தையும் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் “நாங்கள் மீன் பிடிப்பதென்றால்  கடற்படையிடம் பாஸ் எடுக்க வேண்டும். அதுவும் ஒரு மணித்தியாலமே மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது” என்று ஒரு மீனவர் சொன்ன  செய்தி வெளியிடப்படவில்லை.Image result for இலங்கை முள்ளிக்குளம்

மீன்பிடித் தடைக்கு வி.புலிகள் இப்போதும் இருக்கிறார்கள் என்ற பயம் காரணமா?

மகிந்த இராசபக்சே அரசு  இலங்கையின் இறுதிப் போரின் போது உள்ளுரில் இடம்பெயர்ந்திருந்த 3 லட்சம் பேரையும் மீள்குடியேற்றம் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இது நடைபெறப் போவதில்லை. முள்ளிக்குளம் போலவே தமிழ்மக்களது காணி பூமிகளை சிங்கள இராணுவமும் கடற்படையும் ஆக்கிரமித்துள்ளது. அதில் பாரிய இராணுவ முகாம்கள், குடியிருப்புக்கள் உல்லாச விடுதிகள், நட்சத்திர உணவகங்கள் போன்றவற்றை இராணுவம் நிறுவியுள்ளது.  அதற்கு மேலாக அந்தக் காணிகளில் இராணுவமும் கடற்படையும் விவசாயம் மற்றும் வியாபாரம் செய்கின்றன.

இராணுவம் தனியார் காணிகளை அடாத்தாகப் பறித்து அதில் பவுத்த விகாரைகள், தூபிகள், புத்தர் சிலைகள் நிறுவி வருகிறது. ஒரு நாட்டின் “தேசிய” இராணுவம் இப்படி ஒரு குறிப்பிட்ட மக்களது வழிபாட்டுத் தலங்களை நிருமாணிப்பது சிறீலங்காவில் மட்டுமே இடம்பெறுகிறது.  இதில் வேதனை என்னவென்றால் இந்த இடங்களில் புத்தரை வழிபடுவதற்குப் பவுத்தர்கள் இல்லை. இவை பெரும்பாலும் சைவ சமயத்தைச் சார்ந்த  மக்கள் வாழும் தமிழ்க் கிராமங்கள். எனவே இது சிங்கள – பவுத்த அரசால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிட்ட கலாசாரப்  படுகொலை (Cultural Genocide) யாகும்.

இன்று வடக்கும் கிழக்கும் இராணுவத்தின் கோரப்பிடியில் உள்ளன. அங்கு சிவில் நிருவாகம் முடக்கப்பட்டு அப்பட்டமான இராணுவ ஆட்சியே நடக்கிறது. வடக்கு கிழக்கு ஆளுநர்கள் ஓய்வுபெற்ற சிங்கள இராணுவ அதிகாரிகள். தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும்  திருகோணமலை, அம்பாறை, மன்னார், வவுனியா மாவட்டங்களில் சிங்களவர்களே அரசாங்க அதிபர்களாக அரசினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டில் 6 குடிமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விழுக்காட்டில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

இவற்றைப் பார்க்கும் போது இராசபக்சேயின் அரசின் நடவடிக்கைகள்  இனங்களுக்கு இடையிலான  நல்லிணக்கத்தை வளர்ப்பதாக அமைந்திருக்கிறதா?

பூனைக்கு விளையாட்டு எலிக்கு உயிர் போகுது என்பது போல போரில் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற மிதப்பில் இருக்கும் மகிந்த இராசபக்சே அரசுக்கு தமிழர்களது அவலம் விளையாட்டாக இருக்கிறது.

இவையாவும் இலங்கையில் தமிழ்மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு தக்க சான்றாக இருக்கின்றன.

தமிழ்மக்களை ஒத்துரிமையோடு வாழப் பெரும்பான்மை சிங்களவர்கள் அனுமதிக்காத காரணத்தினால்தான் தமிழ் நாட்டுக்கு செல்லும் சிங்களவர்கள்  தாக்குதலுக்கு உள்ளாக நேரிடுகிறது. அதன் மூலம் சிறீலங்காவின் பாசீச ஆட்சியின் அலங்கோலத்தை பன்னாட்டு சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வாய்ப்பும் ஏற்படுகிறது.

நக்கீரன்


சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத முள்ளிக்குளம் மக்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 செப்டம்பர், 2012 –  ஜிஎம்டி

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது உள்ளுரில் இடம்பெயர்ந்திருந்த 3 லட்சம் பேரையும் மீள்குடியேற்றம் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில், தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய விடயங்கள்

தமது கிராமங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதனால், தங்களின் மீள்குடியேற்ற கனவுகள் சிதைந்துபோயிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

மீள்குடியேற முடியாத கிராமங்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முள்ளிக்குளமும் ஒன்று. இங்கு முன்னர் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.Map of Mullikulam Tank

இவற்றில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முள்ளிக்குளத்திற்கு அருகில் உள்ள மறிச்சுக்கட்டி என்ற இடத்திலும் 110 குடும்பங்கள் காயாக்குழி என்ற இடத்திலும் காட்டுப் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமிழகத்தில் இன்னும் தஞ்சமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

“காடுதான். ஆனாலும் இங்கேதான் தங்கியிருக்கோம்”

“வீடுகளையும் காணிகளையும் எட்டிப்பார்க்கின்ற தொலைவில் நாங்கள் இருக்கின்றோம். ஊருக்குள் செல்ல எங்களுக்கு அனுமதியில்லை.எமது தோட்டங்கள் வயல்களில் கடற்படையினர் பயிர் செய்கின்றார்கள். நாங்கள் தொழில்வாய்ப்பின்றி யானைகள் சரணாலயமாகிய காட்டுப் பகுதியில் குடியிருக்கின்றோம். “என்றார் மறிச்சுக்கட்டியில் உள்ள முள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் ஒருவர்.

காயாக்குழியில் இருப்பவர்களும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணத்திலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச சபையினால் பவுசர் மூலம் வழங்கப்படுகின்ற நீரையே அவர்கள் தமது குடிநீருக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.

“பவுசர் வராவிட்டால் அன்று குடிப்பதற்குத் தண்ணீர் கிடையாது. சமையலும் செய்ய முடியாது. கழிப்பறை வசதிகளும் இல்லை. குளிப்பதற்கென கிடங்கு ஒன்றில் இருந்து கிடைக்கின்ற தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. எல்லோருக்கும் இங்குள்ள தண்ணீர் போதாது. முந்துபவர்கள் மட்டும்தான் குளிக்க முடியும்” என்று தமது நிலைமை குறித்து காயாக்குழியில் உள்ளவர் ஒருவர் கூறுகிறார்.

“சொந்த இடமே வேண்டும்”

முள்ளிக்குளத்தில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று வருவதற்கு மாத்திரம் கடற்டையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

“ஊருக்குள் எவரும் செல்ல முடியாது. நிரந்தரக் கட்டிடங்கள் அமைத்து அங்கு கடற்படையினர் தங்கியிருக்கின்றார்கள்” என்றார் ஊர்ப் பெண்மணி ஒருவர்.

முள்ளிக்குளம் பகுதி மக்களை வேறிடத்தில் குடியமர்த்துவதற்கென 120 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொந்தக் கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே முள்ளிக்குளம் பகுதி மக்களின் விருப்பமாக இருக்கின்றது.

எதையும் இழக்கலாம் ஆனால் நிலத்தை இழந்தால் ஒரு இனம் தனது தேசிய அடையாளத்தை இழந்து விடும் என்பது வரலாறு படிப்பிக்கும் படிப்பினை ஆகும்.

நக்கீரன்

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/09/120902_mullikulamlandgrab.shtmlPlans for Militarization and Colonization are Going on at a Feverish Pace

by a concerned Tamil human rights activist

June 13, 2009

The colonization they intend is seen already in the Eastern Province in and around Trincomalee port and in the Northern Province around the KKS and Point Pedro port, and Pallaly airport. They also hope to create new high-security zones and also bring in Sinhala IRC prisoners from the jails, providing them early release as long as they are prepared to live and cultivate some land provided by the  GOSL/SLA, along with free housing. So they get free land, a house, and other help, including financial assistance so that they increase the Sinhala population in and around the Northern and Eastern Province. Buddhist temples and Singhala schools will also be established and they would force Tamils living in the area to learn Singhalese.

These comments were based on meetings and conversations with Sinhalese who have mutual friends in the GOSL, SLA, etc. I am also in touch with various Singhalese leaders, especially those who have links to the US.

The SLA army is going ahead full scale to increase the strength of the army alone by 100,000 or more, as seen from the publicly announced statements.  They also are going to establish more Police stations in the 4 districts such as Mannar, Kilinochchi, Mulaitheevu and Vavuniya.

Sinhala Home Guards in settlements near Padawiya 1999

The biggest Sinhala colonization scheme in the Northern Province is the Padaviya Tank area, which although it is part of the Medawachichiya District borders Vavuniya and Mullaitheevu in the Eastern coastal area. They want to expand this further Northwards and, more importantly, Eastwards to the  Indian  Ocean and cut off any continuity between the Northern and Eastern Provinces, thus destroying any claims of the Tamils in the future of a Tamil homeland. The Weli Oya (original Tamil name = Manal Aru) area (1) also is involved and extends further South and North, towards Trincomalee. They have built a big hospital there, and now want to expand it utilizing reconstruction funds. This is a 99% Singhalese colony with the balance being Muslims. Injured Tamils were also brought there with expansion in mind. What a perfect excuse to use foreign funds!?

The GOSL has previous history, for the past 5 decades, where they have used prisoners to settle down and colonize the North and the East.

Tamil lands will be misappropriated, government lands will be distributed and questionable titles would be acquired for the establishment of Sinhala colonies. The armed forces also would be provided with permanent and comfortable housing and encouraged to raise their young families with other incentives, especially in the 4 districts, thereby increasing the Singhala population which is currently non-existent. Most of the government servants and families will be Singhalese and Muslim officials, rather than people from the area. Muslims also would be encouraged to settle down in these districts and Muslims’ mother tongue is Tamil.

The Singalese and Muslim fisherman would be encouraged and assisted to settle down in the East and West coast of the two districts. Since the electoral voting system in Sri Lanka has been now changed from first-past-the-post to proportionate representation, these Singhalese minorities together with Tamil quislings will have a bigger say in administering the Tamil region, like what has happened in the Eastern province with Pillaiyan being the Chief Minister and   Karuna the Minister. They are hoping to allow Douglas Devananda, who is already a Minister, Anandasangaree, the TULF leader, PLOTE’s Sitharthan and a few other quislings to provide the leadership. A few TNA MP’s from the Vavuniya and Mannar district are also being forced to join this group or at least break away from the TNA and a few assassinations or threats of physical harm, like bombings of their homes, intimidation, and harassment could occur if they do not cooperate.

Before 1983

100,000 Muslims from Puttalam and Anuradhapura, whose parents and grandparents left the Northern province 20 years ago, are being encouraged to now return and claim their land and buildings and start businesses. Some Singhalese traders are also encouraged to move into businesses and GOSL will provide assistance, all under the rehabilitation, reconstruction and so-called reconciliation process utilizing foreign aid, funds, loans, grants and budget funds as part of a decentralized and devolved budget process. The main purpose of these maneuvres is destroying the Tamil identity and domination even in their own homeland.

Sinhalese nationalists in and out of government are already claiming that there has been no anti-Tamil discrimination, and, therefore, Tamils never have had any problem except for LTTE terrorism. That is why Rajapakse states that there are no minorities in Sri Lanka and, therefore, the Tamil identity itself is going to be destroyed. At least that is the aim of the Rajapakses.

All this will be done while 300,000  Tamils languish in the “concentration camps” and are very slowly released to different regions under the excuse of landmines making it unsafe for Tamils to return to their own homes. This process will go on for 3 years. Already 3 months have passed, as quite a number of Tamils came to the camps in the first 3-4 months of the year.

Read the book written in 1988 by Malinga Herman Gunaratne, a friend of Minister Gamini Dissanayake,  called State of the Sovereign State.  Details of planned colonization and efforts in that direction with the foreign-funded Mahaveli River Diversion Scheme are elaborated. Gamini’s private secretary Palitha Pelpola is settled in the US for the last 15 years.

Footnotes:

1. “Bloody Past”, Sunday Times, Colombo, July 1, 2007, Weli Oya (Manal Aru in Tamil) has been a bone of contention from the beginning of the ethnic conflict. When the Tamil rebel movements began their violent campaign to establish an Eelam comprising the North and East, one of the first things that the nationalist elements in the then J.R. Jayewardene Government did was to settle Sinhalese in this stretch of land ending at the Kokilai lagoon, tracing ancient Sinhala habitats and thereby effectively ousting Tamils who were there [with military force, killing some]. The idea was to drive a wedge into the claim for a contiguous Eelam. Already there were Sinhalese resettled up to places like Somapura, which even has an ancient temple, Chetiyagiriya Raja Maha Viharaya with some of its ruins intact.

Kokilai lagoon too has been a favourite fishing ground for migratory fishermen from areas like Negombo from time immemorial.

The result of this sudden attempt to drive a wedge was the first brutal massacre on November 30, 1984, of unarmed Sinhalese [prisoners] settled in two farms Kent and Dollar, earlier set up by two leading Tamil firms in Colombo for Tamils. Two busloads of Tigers who descended on the two farms hacked shot and blasted 33 people (men, women and children) in Dollar Farm and 29 in Kent farm. Only a few survived the ordeal.

The struggle has been bloody ever since. The most significant showdown in the region since has been the abortive attempt by the LTTE to capture Weli Oya in July 1995, which ended with it losing some 400 cadres. The attackers fled leaving most of their dead behind. Then in 1999 when the Tigers “Unceasing Waves” reversed most of the gains made by Operation Jayasikurui, they even managed to take back the Dollar and Kent Farms, which had by then been renamed as Gajabapura and Monarawewa.

2. Quote from Inner City Press: “Meanwhile at the UN’s noon media briefing on June 12, asked Ban Ki-moon’s Spokesperson Michele Montas had read out a statement that access to the camps in Vavuniya in northern Sri Lanka is getting better and new camps are being built — internment camps, with UN money — Inner City Press asked for the UN’s response to Sri Lankan authorities’ statement that they will use prison labor in the north.

Ms Montas said, “no comment at this point, maybe later we will see how the issue is being discussed.” Video here, from Minute 18:39.
Later Ms Montas’ office sent Inner City Press the following response:

Subj: Response from OCHA on your question at the noon briefing
From: spokesperson-do not reply [at] un.org
To: Inner City Press
Sent: 6/12/2009 12:43:56 P.M. Eastern Standard Time
On the use of prison labour in reconstruction in Sri Lanka, we have not heard these allegations and have no information.

Apparently, the UN’s “close monitoring” of Sri Lanka doesn’t even read the news from Colombo, with quotes from government officials.


Prison inmates to be deployed for the redevelopment process in Sri Lanka’s North

Thu, Jun 11, 2009, SL Time, ColomboPage News Desk, Sri Lanka.

June 11, Colombo: Sri Lanka government is planning to deploy prison inmates for the redevelopment process in the liberated areas of the North.

Prison Commissioner General, Major General V.R Silva told the media that this would be an appropriate decision to develop the liberated areas in North.

According to statistics, there are nearly 30,000 inmates are in the prisons at the moment. Most of them are able-bodied people with various skills, he added.

Yes, the skills of those in jail, including for violent crime, are those the Sri Lankan government is unleashing in the north. And the UN? They “have not heard these allegations and have no information.”
Published: June 19, 2009

Received from D.G (California)


ஈழம்: இருதய பூமியை இழக்கும் அபாயம் – தீபச்செல்வன்

Published By பெரியார்தளம்

October 10th 2011

ஈழத்தின் வடக்கு-கிழக்கு நிலப்பகுதியின் இடையில் இருதய பூமியாக உள்ள கொக்கிளாய்ப் பிரதேசத்தில் அரங் கேற்றப்படும் விடயங்கள் ஒட்டுமொத்த ஈழத்தையும் அதிரப் பண்ணியுள்ளன. துண்டிக்கப்பட்ட பகுதியைப் போலவும் ராணுவத்தினரால் மூடிவைக்கப்பட்டு ஆளப்படும் பகுதியைப் போலவும் இருக்கும் கொக்கிளாயில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் பெருந்துன்பங்களை அனுபவிக்கிறார்கள். வடக்கு-கிழக்கு நிலத்தின் இணைவிடம் என்பதால் அந்த இருதய நிலத்தில் ஈழத் தமிழர்களின் இருப்பைச் சிதைத்து அதைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அரசு முழுநடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. ராணுவத்தின் கோட்டையாக 28 வருடங்களாக இருந்த கொக்கிளாய்ப் பிரதேசம் அழிந்து, பேரழிவுகளைச் சுமந்த நிலத்தைப் போலுள்ளது. அழிந்த நிலத்தில் மீள்குடியேறும் மக்களின் கதையோ பெரும் அவலம் மிக்கது.

கொக்கிளாய்ப் பிரதேசத்தை யாரும் உள்நுழைய முடியாத நிலப்பகுதியாகவே ராணுவம் கட்டுப்பாடு செலுத்துகிறது. அது ஈழத்தின் வடக்கில் முல்லைத் தீவின் கிழக்குப் பக்கமுள்ள பிரதேசம். முல்லைத்தீவில் இருந்து நாயாற்றையும் கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி முதலிய கிராமங்களையும் கடந்து கொக்கிளாய்ப் பிரதேசத்திற்குச் செல்ல முடியும். நாயாற்றைக் கடந்ததும் ராணுவத்தின் முதலாம் சோதனைச்சாவடியை எதிர்கொள்வதுடன் கொக்கிளாயை அடையும்வரை மேலும் இரண்டு சோதனைச்சாவடிகளையும் எதிர்கொள்ள வேண்டும். அங்கு வாழும் மக்கள், அங்குள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் தவிர எவரும் உள்ளே செல்ல முடியாது. தொடர்பின் உச்ச வளர்ச்சி கொண்ட இன்றைய காலத்தில் கொக்கிளாய்ப் பிரதேசத்தின் நிலை திட்டமிட்டு முடக்கப்பட்டிருக்கிறது.

அங்கு இன்று இறுதிச் சோதனைச் சாவடியாக உள்ள இடத்தில் 1994இல் விடுதலைப் புலிகள் ஒரு தாக்குதலை நடத்தியிருந்தார்கள். அதில் இராணுவத்தினர் நிலைகுலைந்தார்கள். மேலும் அந்த இடத்தில் நடந்த தாக்குதல் ஒன்றில் 154 பெண் புலிகள் களப்பலியடைந்தார்கள். இப்போது அந்த இடம் பலத்த பாதுகாப்பு கொண்ட ராணுவ முகாமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கொக்கிளாயிற்குச் செல்லும்போது கிராமத்தின் வாசலில் குழந்தைகள் சிலர் மரத்தின் கீழ் தறப்பாளை விரித்துப் படித்துக்கொண்டிருந்தார்கள். முன்பள்ளிக் குழந்தைகளுக்குக் கட்டடங்களோ கல்வி உபகரணங்களோ ஏதுமில்லை. ஒரு வீதிக்கரையில் அவர்கள் புழுதியில் குளித்தபடி படித்துக்கொண்டிருந்தார்கள். இந்தக் குழந்தைகளை எப்படி இந்த வெளியில் வைத்துப் பாடம் சொல்லிக்கொடுப்பது என்று அந்த முன்பள்ளியின் ஆசிரியர் சொல்லிக்கொண்டிருந்தார்.

கொக்கிளாயில் முகத்துவாரம்தான் முக்கிய இடம். அதை நோக்கிச் செல்லும்போது வீதியின் இரண்டு பக்கங்களிலும் அழிவுகளும் இடையிடையே தறப்பாள் கூடாரங்களும் உள்ளன. அந்தப் பிரதேசத்தில் நின்ற நீண்ட காலப் பயன்தரு மரங்கள் அழிந்துபோக இப்போது அந்த மரங்களின் விதையிலிருந்து முளைத்த இளம் மரங்கள் சில நிற்கின்றன. இடையிடையே நீண்டகாலமாக உக்கி உருக்குலைந்த வீடுகள் கிடக்கின்றன. மீள்குடியேற்றம் நடந்து ஒரு வருட காலமாகிறபோதும் சில நாட்களேயானதுபோலத் தற்காலிகத் தறப்பாள் குடியிருப்புகளாக அந்தப் பகுதி காட்சியளிக்கிறது. 28 வருடங்களாக மக்கள் வாழாத பகுதி என்பதால் காட்டு மரம், செடிகொடிகள் பரவி அடர்ந்துள்ளன. உலக அழிவின் பிறகு நுழையும் உணர்வைத்தான் கொக்கிளாய் தந்துகொண்டிருந்தது. முகத்து வாரத்தை அடைந்தபோதுதான் கொக்கிளாய் வைத்திருக்கும் அதிரும் கதைகளைப் பார்க்க முடிந்தது.

முகத்துவார முகப்பில் புத்தர்சிலை வரவேற்றது. ராணுவத்தினர் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முகத்துவாரம் மிகக் கலகலப்பாக இருக்கிறது. சிங்கள மக்கள் மீன்பிடித் தொழிலில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வீடுகளின் முன்பாக முற்றத்திலும் வீட்டு விறாந்தைகளில் பெரும் பாத்திரங்களிலும் மீன்கள் குவியலாகவும் பரப்பப்பட்டும் காய்கின்றன. கடற்கரையில் படகுகளைக் கழுவுவது, மீன்களைப் பறிப்பது, துப்புரவாக்குவது போன்ற பணிகளில் சிலர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். மின்சாரம், கடைகள், கூட்டுறவுக் கடைகள், கிராம அலுவலர் என்று முழுமையான நிர்வாக உதவிகளுடன் அந்தக் குடி யேற்றத்தில் சிங்கள மக்களின் வாழ்க்கை நகர்கிறது. அவர்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். என்னைப் பார்த்த சிங்களத் தாய் ஒருத்தி “யார் நீ? எங்கு வந்தாய்?” என்றார். அவரது முகத்தில் என்னைப் பார்த்த பதற்றமும் என்மீது கொண்ட சந்தேகமும் தெரிந்தன.

கொக்கிளாயில் தமிழ்ப் பாடசாலையொன்று இருக்கிறது. ஒரே ஒரு ஓலைக் கொட்டகைதான். அதில் 85 மாணவர்கள் படிக்கிறார்கள். காற்றால் மணற் புழுதி பிள்ளைகள்மீது படிந்துகொண்டிருக்கிறது. பாடசாலை என்று அதை எப்படிச் சொல்லுவது? போதிய தளவாடங்கள் இல்லை, பிள்ளைகளுக்குக் கல்வித் துறைசார் அறைகளோ உபகரணங்களோ இல்லை, அதிபர் அலுவலகம் இல்லை, நூலகம் இல்லை. ஒன்றுமே இல்லாத அந்தக் கொட்டிலைத்தான் பாடசாலை என்று சொல்லித் தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்க விட்டுள்ளார்கள். கொக்கிளாய்த் தமிழ்ப் பாடசாலையின் புராதனக் கட்டடங்கள் அழிந்து அடையாளமே தெரியாமல் இருக்கின்றன. போக்குவரத்தற்ற அந்தப் பிரதேசத்தில் நான்கைந்து கிலோ மீற்றர் தூரங்களைக் கடந்து பிள்ளைகள் வந்து படிக்கிறார்கள். ஈழத்துக் குழந்தைகள் இப்படியான ஒரு காலத்தையும் சூழலையும்தான் தங்கள் கல்வியாகப் படிக்கிறார்கள்.

முகத்துவாரத்தில் சிங்களப் பாட சாலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. 15 பிள்ளைகளுக்காக நான்கு இரட்டை மாடிக் கட்டடங்களில் பள்ளி அமைக்கப்பட்டிருக்கிறது. சகல வசதிகளுடனும் அந்தப் பள்ளி இயங்குகிறது. ஒவ்வொரு வகுப்பறையிலும் பிள்ளைகள் ஒரு சிலர் இருந்தனர். சில வகுப்பறைகள் வெறுமையாகவும் இருந்தன. அந்தப் பாடசாலையின் அதிபர் 50 பிள்ளைகள் படிப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால் அந்தப் பகுதியின் கிராம சேவகர் 15 பிள்ளைகள் மட்டுமே படிப்பதாகவும் ஏனைய பிள்ளைகள் தெற்கில் சொந்த இடங்களில் படிப்பதாகவும் குறிப்பிட்டார். எதையும் அறியாத இந்தப் பிள்ளைகள் இப்படித்தான் பாகுபடுத்திப் பார்க்கப்படுகிறார்கள். இப்படித்தான் புறக் கணிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன.

கொக்கிளாய் ஈழத் தமிழர்களின் இருதய பூமி. அப்படியிருக்க எப்படி அங்குச் சிங்களவர்கள் வந்து குடியேறினார்கள்? இன்று அதன் ஒரு பகுதி சிங்களக் கிராமமாக மாறியது எப்படி? 1984இல் ஈழப் போராட்டம் வெடித்த காலகட்டத்தில் அங்குக் காலம் காலமாக வாழ்ந்துவந்த மக்களைக் கால அவகாசத்தில் ராணுவத்தினர் விரட்டியடித்தார்கள். அவர்கள் முல்லைத்தீவு முதல் தமிழ்நாட்டு முகாம்கள்வரை அலைந்தார்கள். தமிழ் மக்களை வெளியேற்றிய உடனேயே அங்கு முப்பது சிங்களக் குடும்பங்கள் கொண்டுவந்து குடியேற்றப்பட்டன. தெற்கில் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்த அவர்களுக்குப் பல விதமான சலுகைகள் வழங்கப்பட்டுக் குடியேற்றத்திற்கு ஊக்குவிக்கப்பட்டனர். இன்று அவர்கள் 300 குடும்பங்களாகப் பெருகிவிட்டார்கள். இப்போது முகத்துவாரத்திலுள்ள தமிழர்களின் மீன்பிடி உரிமைகள் எல்லாம் சிங்கள வர்களின் கைகளில் உள்ளன.

வயல் விதைப்பு உரிமைகள், மீன்பிடி உரிமைகள் இவற்றை மீள்குடியேறிய தமிழ் மக்கள் கோரியபோது அவற்றை மீளக் கையளிக்கச் சிங்கள மக்கள் மறுக்கிறார்கள். முப்பது வருடங்களாக அந்த நிலத்தில் சிங்களவர்கள் தொழில் செய்வதால் அந்த நிலத்தில் சிங்களவர்களுக்கும் பங்குள்ளது என்று மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித செனாரத்தன கூறியுள்ளார். ஈழத் தமிழர்களின் வாழ்நிலம் இன்று சிங்களவர்கள் உழைக்கும் வளமேடாகிவிட்டது. சலுகைகளுக்கான கனவு நிலமாகிவிட்டது. கொக்கிளாய்க் கிராமத்தை அதன் வரலாற்று மற்றும் புவியியல் முக்கியத்துவம் கருதி ஆக்கிரமிக்கும் நோக்கில் நிலைமைகளை அரசு அமைத்துவருகிறது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் மீன்பிடிச் சமூகமே அதிகம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. சிறுவன்குளம் ஒரு பக்கமும் கொக்கிளாய் ஆறு மறுபக்கமுமாக உள்ள புளியமுனை மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகிறார்கள். போதிய உபகரணங்கள் இல்லாததால் மீன்பிடித் தொழில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

புளியமுனை முழுவதும் தறப்பாள் கூடாரமயமாகவே இருக்கிறது. மணல் வெளியில் தறப்பாள் கூடாரங்களை அமைத்து மக்கள் குடியேறியிருக்கிறார்கள். மணல் வீதிகள் திருத்தப்படாததால் நிலத்தில் கால் வைத்தாலே புதைகிறது. அடியெடுத்து வைக்க முடியாத அந்தத் தெருக்களில் நடப்பதே பெரிய போராட்டம். 28 வருடங்களாக ஆட்களற்ற அந்தப் பகுதி முழுவதும் மணல் வீதிகளாக உள்ளன. அவற்றைத் திருத்திப் போக்குவரத்திற்கு உதவும்படி மக்கள் விடுத்த கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. ஆனால் நிவாரணங்களை நிறுத்துவதிலும் அரச எம்பிக்களை அழைத்து வந்து பிரச்சாரங்களுக்கு உதவுவதிலும் அதிகாரிகளின் நேரமும் கவனமும் செலவாகின்றன. தற்காலிக வீடுகளோ நிரந்தர வீடுகளோ கட்டிக் கொடுக்கப்படாமல் மணல்வெளியில் தவிக்கும் அந்த மக்களது வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பவர்கள் யாருமில்லை. ஒரு வருடத்தைக் கடந்த நிலையில் அவகாசங்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களைத் தவிக்கவைக்கிறார்கள்.

இப்போது கொக்கிளாயை அதிரப்பண்ணுகிற விடயம் நிலம்தான். முன்பொரு காலத்தில் முப்பது குடும்பங்களாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் இப்போது 300ஆகப் பெருகியுள்ள நிலமையில் அவர்களுக்குக் காணிகள் வழங்கப்படவுள்ளன. அரச அதிகாரி ஒருவர் இதை நிறைவேற்றுவதாக வாக்களித்தே பதவி பெற்றிருக்கிறார். சிங்கள மக்களுக்குக் காணியைப் பகிர்ந்தளிப்பேன் என்கிற சத்தியப் பிரமாணத்துடன்தான் அவர் பதவி பெற்றுக்கொண்டார் எனச் சொல்லப்படுகிறது. கொக்கிளாயில் காணி போதாது என்றால் கொக்குத் தொடுவாயிலும் கொடுக்கலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.Image result for கொக்கிளாய்

கொக்குத்தொடு வாயில் இன்னும் ஒரு குடும்பமும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. கொக்கிளாயில் வாழ்ந்த மக்கள் முப்பது வருட காலமாக நடந்த யுத்தத்தால் இடம்பெயர்ந்து பல்வேறு திசைகளுக்கும் பிரதேசங்களுக்கும் சிதறுண்ட நிலையில் இப்போதுதான் மீளத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். பலர் இன்னும் திரும்பவில்லை. பலர் திரும்ப இன்னும் அனுமதிக்கப்படவில்லை. தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த காணி நிலங்களைப் பறித்துச் சிங்களவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்கிற செய்தி கேட்டு அந்த மக்கள் துடிக்கிறார்கள்.

ஒரு சிறுமியாக இடம்பெயர்ந்து தமிழ்நாடுவரை சென்று திரும்பிவந்த லூசியா தாங்கள் பிரார்த்தனை செய்து வந்த தேவாலயம்கூட இன்று சிங்களவர்களின் கையில் பறிபோய்விட்டது என்று அந்தத் தேவாலயத்தில் வீழ்ந்து அழுதார். தன் தந்தையின் தொழில் உரிமையையும் இன்று சிங்களவர்கள் கையகப்படுத்திவிட்டார்கள் என்றும் இவற்றை எந்த எல்லைவரை சென்றாகிலும் போராடி மீட்டாக வேண்டும் என்றும் சொன்ன லூசியாவின் முகத்தில் நிலத்தைப் பிரிந்த இருபத்தெட்டு ஆண்டுத் துயரம் தெரிந்தது. யுத்தத்தால் கொக்கிளாயை விட்டுப் பெயர்ந்து சென்றவர்களது காணிகளும் பறவைகள் சரணாலயம் அழிக்கப்பட்ட காணிகளும் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் உள்ளதாக மக்களிடத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கொக்கிளாய்ப் பறவைகள் சரணாலயத்தை அழிப்பது அந்தப் பகுதிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஈழத்திற்கும் சூழலுக்கும் தீங்கு இழைக்கும் நடவடிக்கை. ஆனால் பறவைகள் சரணாலயத்தின் சில பகுதிகள் தற்போது அழிக்கப்பட்டுள்ளன.

இன்று ஈழத்து நிலமே மிகுந்த ஆபத்தில் உள்ளது. அதிலும் கொக்கிளாய் நிலப்பகுதி அதிக ஆபத்துடன் உள்ளது. இருதய பூமிகளில் ஒன்றான கொக்கிளாயின் அருகில் உள்ள மணலாற்றை இழந்துவிட்டோம். நிலங்களைக் கொள்ளையிடும் நடவடிக்கையை ஆளும் எல்லா அரசுகளும் நுட்பமாக முன்னெடுக்கின்றன. சிங்களக் குடியேற்றம் வாயிலாகத் தமிழர்களின் எண்ணிக்கையைவிடச் சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்களின் உரிமைகளைப் பறிக்க இலங்கை அரசும் ராணுவமும் திட்டமிட்டுள்ளன. ராணுவத்தின் உச்சகட்டமான கட்டுப்பாடு செலுத்தப்படும் இந்தப் பகுதி ஊடகங்களாலும் தமிழ் அரசியல் பிரதி நிதிகளாலும் கண்டுகொள்ளப்படாத நிலையிலிருப்பது இந்தப் பகுதியை ஆக்கிரமிக்கவும் வாழுரிமையைப் பறிக்கவும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு இன்னும் உந்துதலை அளித்துள்ளது. இழக்கும் நிலையில் உள்ள கொக்கிளாய் நிலத்திற்கு ஏற்பட்ட ஆபத்து என்பது ஒட்டுமொத்த ஈழ நிலத்திற்கும் தமிழ் இனத்திற்கும் ஆபத்தை உரு வாக்கப்போகிறது.

நன்றி: காலச்சுவடு


165 Sinhala families settled in Tamil village Kokkachchaankulam in Vavuniya North

by D.B.S. Jeyaraj

24 June 2011

Northern Spring – http://www.development.lk

Northern Spring – http://www.development.lk

“Sinhalaisation” of North continues. Tamil village in Vavuniya district re-settled with Sinhalese without knowledge of district administration.

Kokkachchaankulam is a Tamil village in Vedivaithakallu GS div under Nedunkerny divisional secretary in the Vavuniya North Piradesha sabhai.Image result for Kokkachchaankulam in Vavuniya North

Kokkachchaankulam can be reached via Semamadu, Oothukulam & Ariyakundam. Nedunkerny can be reached from Kokkachchaankulam via Vedivaithakallu.

Tamil residents were displaced by war & this agricultural village was described as “abandoned” in Vavuniya district official reports.

After a survey undertaken by Mahaweli Authority personnel in March 2010, a “quiet” plan was implemented to reconstruct village & settle Sinhalese.

The settlement scheme was brought under the Vavuniya south Sinhala division & temporary land permits were issued to 165 Sinhala families.

The 165 families were settled in Kokkachchaankulam with the help of the military & without officially informing Vavuniya district secretary.

More than 300 acres of paddy land owned by Tamils was cultivated by residents in Kokkachchaankulam prior to displacement due to war.

The Army repaired & reconstructed by December 2010 the damaged anecut & deepened the tank enabling paddy cultivation to resume in Kokkachchaankulam.

Rs 4.5 million was allocated for anecut/tank restoration & settlement of 165 Sinhala families allegedly through “Northern Spring” funds.

A further 20 million rs was allocated for construction of a 22 km gravel road from Kokkachchaankulam to Mahakachchankodi in Vavuniya south.

Road work was started by a Pvt contractor Bandara in April 2011.30 ft wide jungle is cleared & a 24ft road with 12 ft gravel is being built.

The “Sinhalaised” village of Kokkachchaankulam is to be renamed “Kalabowasewa”. The new rd will be called Mahakachchankodi -Kalabowasewa road

This is a bundle of tweets  posted on twitter by D.B.S. Jeyaraj

Reply to this comment

 • Mr.Native Tamil says: Sinhalese hidden motive for changing demographics of North East is serious GENOCIDE and refusing the native Tamils political rights to share the power by GOSL is purely OPPRESSION.
  • Samarasekara says:Reply to this comment
   • Mr.Native Tamil says: Your ignorance only make me laugh, It is not a channel 4 video that you guys refusing the actual truth by repeating the same pattern of the lies in order to protect some of your high-level donkeys. It is over 3000 years old history and reality. Archaeological evidence and untold history go back even before Buddha and Sinhala Wijayan born. Eelam and ELANKAI both names born from the pure Tamil word, later Sanskrit ‘Sri’ joint as adjective word.(1972)SRI+ELANKAI= SRILANKA. Maybe you cannot digest this fact. Also, I can prove you that Historical and Traditional homeland map even up to Devinuwara Sivan Temple.(Tondeshwaram Kovil)
   • I challenge you if you come with the foolishness to say Native Tamils don’t have Homeland in Sri Lanka, I can simply prove with your historical evidence Sinhalese don’t have a homeland in Srilanka.
   • If NO ONE read or care about your fabricated garbage, of course, no one denied it!
   • My dear Sam,
   • June 25, 2011, at 11:09 am
  • Mr.Native Tamil says: June 25, 2011 ,at 3:12 am
   Traditional Homeland same like North&East Tamils Traditional Homeland. Not other way! One Family cannot forcefully interfere with another Family (Homeland). I don’t know how long take to understand this simple fact by GOSL and current Mahinda?
   ————————————————
  • June 25, 2011 ,at 4:27 am
 • Reply to this comment
 • This is the root cause for the ethnic problem. GOSL should stop this unacceptable colonisation,
  and investigate the past state-sponsored colonisation (in Kanthalai, Manalaru…[LLRC?]) how is that destroy the ethnic relationship and motivate the violence on the border villages? As South&West Sinhalese Traditional Homeland same like North&East Tamils Traditional Homeland. Not other way! One Family cannot forcefully interfere with another Family (Homeland). I don’t know how long take to understand this simple fact by GOSL and current Mahinda?
 • June 25, 2011, at 3:12 am

தமிழீழப் பிரதேசத்தில் அதிகரிக்கும் சிங்களமயமாக்கல்: அனலை நிதிஸ் ச. குமாரன்

[Thursday, 2011-09-29 ]

தமிழீழத் தேசத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் பாரிய அளவிலான சிங்களமயமாக்கல் அதிகரிக்கின்றன. தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி நின்ற பல கட்டடங்கள் புனரமைப்பு என்கிற பெயரில் இடிக்கப்பட்டு பின்னர் சிங்கள பண்பாட்டுடைய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேதமடைந்த தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைத் திருத்திக் கொடுப்பதற்குப் பதிலாக இடித்துவிட்டு, தமிழர் வாழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் என்பன புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. சிங்கள மக்களை தமிழர் பிரதேசங்களில் குடியமர்த்தும் வேலைகளும் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பல சிங்களமயமாக்கல் திட்டங்கள் தமிழர் பிரதேசங்களில் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு தற்போது குறித்த பிரதேசங்களிலுள்ள மக்கள் சிறுகுடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். வடபகுதிக்கு செல்லும் நுழைவாயிலாகவுள்ள ஓமந்தை சோதனைச் சாவடியானது ஓமந்த என்ற சிங்கள உச்சரிப்பிலேயே உச்சரிக்கப்படுகின்றது. குறித்த நுழைவாயிலுள்ள சோதனைச் சாவடியின் ஊடாகப் பயணிப்பவர்களில் 90 வீதமானவர்கள் தமிழர்களாவர். ஆனால் இங்கு கடமையில் நிற்கும் சிங்களப் படையினர் ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிங்களத்திலேயே பதில் சொல்ல வேண்டும் என்கிற பரிதாப நிலையையே தமிழர்கள் நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிகொண்டு விட்டதாகவும், வடக்குக்குத் தேவை அபிவிருத்தியே என்கிற பிரச்சாரத்தை முடக்கி விட்டார் மகிந்த ராஜபக்ச. இவருடைய அபிவிருத்திப்பணிக்கு கொடுக்கப்பட்ட பெயர்தான் ‘வடக்கின் வசந்தம்’. அடிக்கட்டுமானப் பணிகள், மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, நன்னீர் மீன்பிடி, சுகாதாரம், விளையாட்டு, கலாச்சார விடயங்கள், போக்குவரத்து போன்ற பல்வேறு விடயங்கள் ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டத்தின் உண்மையான பயனாளிகளாகவுள்ள தமிழர்களை குறித்த வடக்கின் வசந்தம் திட்டம் அதிகம் சென்றடையவில்லை. மாறாக வேலையற்ற சிங்கள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர். தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்திற்கான ஒப்பந்தக்காரர்களாக சிங்களவர்களே உள்ளனர்.

வடக்கின் வசந்தத்தின் பயனாளிகள்

தமிழர்களையும் மற்றும் உலக நாடுகளையும் ஏமாற்றச் சூட்டப்பட்ட பெயர்தான் ‘வடக்கின் வசந்தம்’. வெளிநாடுகளின் பணத்தை பெறுவதற்கும் மற்றும் தமிழர்களை ஏமாற்றிக் காலத்தை கழிப்பதற்குமே குறித்த திட்டம் தொடங்கப்பட்டது. குறித்த திட்டத்தினால் பயனடைபவர்கள் அதிகமானோர் சிங்கள மக்களே. போரின்போது புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கும் மற்றும் நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் அகதிகளாக்கப்பட்ட மூன்று லட்;சத்திற்கும் அதிகமான தமிழர்களை மனிதக்கேடயங்களாகவே இன்னும் சிங்கள அடக்குமுறை அரசு வைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய அகதிமுகாம் என்று பெயரெடுத்த மனிக்பார்ம் முகாமை மூடிவிட்டு அடுத்த இரு வாரங்களுக்குள் அங்கிருக்கும் 7,400 மக்களையும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கோம்பாவில் பகுதியில் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள 600-ஏக்கர் காணியில் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

தமது சொந்த இடங்களுக்கு சென்று வாழ அனுமதி மறுக்கும் சிங்கள அரசு மீண்டும் தற்காலிக இடத்திலேயே தங்கவைக்கவுள்ளது. தமிழ் அசியல்வாதிகள் இதனை எதிர்த்து காரணம் கேட்டதற்கு குறித்த பிரதேசங்களுக்கு மக்களை அனுமதிக்க முடியாதென்றும் குறித்த இடங்களை வணிக, இராணுவ நோக்கத்திற்காக அரசு பாவிக்கப்போவதாகக் கூறியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்கள் அகற்றப்படாமல் இருப்பதனாலும் குறித்த இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த முடியாதெனத் தெரிவிக்கிறது சிங்கள அரசு.

சிறிலங்காவின் ஒட்டுமொத்த பரப்பளவான 65,619 சதுரகிலோமீற்றரில் 18,880 சதுரகிலோமீற்றர் தமிழ் மக்கள் வாழ்கின்ற வடக்குக் கிழக்குப் பிரதேசமாகும். இரு வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்த நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னர் தமிழர் வாழ் பிரதேசங்களில் 7,000 சதுரகிலோமீற்றரை பாதுகாப்புப் படையினர் தமது ஆளுகைக்குட்படுத்தியுள்ளனர். தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அடிக்குஅடி தடுப்புக் காவல் நிலையங்களும், இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்த முகாம்களின் தொகையிலும் விட இப்போது அதிகம் தமிழர் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

‘வடக்கின் வசந்தத்தின்’ திட்டத்தின்படி கலாச்சார நிலையங்களை மீள்கட்டிக் கொடுப்பதற்குப் பதில் அவற்றை தரைமட்டமாக்கி பின்னர் சிங்கள கலாச்சார நிறுவனங்களை கட்டுகிறது சிங்கள அரசு. தமிழர் பிரதேசங்களிலிருந்த 2,500 சைவ ஆலயங்களும், 400 கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அழிக்கப்பட்ட வணக்க தலங்களை மீளப்புனரமைப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை. அத்துடன் இத்தலங்களில் அதிகமானவை முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் தாயகப் பூமியில், கடந்த இரு வருடங்களுக்குள் 2,500 புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்ககூடாது என்கிற பழமொழிக்கேற்ப சிங்கள அரசும் புத்த விகாரைகளையும், சிலைகளையும் அமைத்த பின்னர் ஒட்டுமொத்த தமிழர் பிரதேசங்களிலும் சிங்கள மக்களை குடியமர்த்தத் திட்டம் போட்டுள்ளது போலும். இதற்கு இடப்பட்ட பெயர்தான் வடக்கின் வசந்தம். இதன் பயனாளிகள் சிங்களவர்களும், சிங்கள அரசுமே.

துரிதகெதியில் இடம்பெறும் சிங்களமயமாக்கல்

தமிழர்களை அவர்களின் கிராமங்களிலிருந்து துரத்தியடித்துவிட்டு சிங்களவர்களை குடியமர்த்தும் வேலைகளை துரிதகெதியில் செய்கிறது சிங்கள அரசு. ஏற்கனவே புதிதாகக் குடியேறிய சிங்கள மக்களுக்கான வீடுகளை அமைக்கும் பணி செட்டிகுளத்தில் இடம்பெற்றது. 75 சிங்களக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த வீடுகள் அமைக்கப்பட்டன. இவற்றைவிட கொச்சான்குளம் என்ற இடத்தில் 165 சிங்களக் குடும்பங்கள் புதிதாகக் குடியேற்றப்பட்டனர். மேலும் தற்போது கொச்சான்குளம் என்பது ‘காலபொவசெவென’ என சிங்கள மொழிப்பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய்ப் பகுதியில் இலவசமாக காணிகள் வழங்கப்பட்டு 82 சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. கொக்கிளாய் மேற்கு கொக்கிளாய் கிழக்கு புளியமுனை கருநாட்டுக்கேணி முகத்துவாரம் தென்னமரவாடி முந்திரிகைக்குளம் அக்கரைவெளி கலியாணபுரம் மாரியாமுனை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1983-ஆம் ஆண்டு அரசின் ஆதரவோடு அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்போது அக்கரைவெளி முந்திரிகைக்குளம் கலியாணபுரம் போன்ற இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. எஞ்சியிருந்த தமிழ்ப் பிரதேசங்களான கொக்கிளாய் மேற்கு கொக்கிளாய் கிழக்கு புளியமுனை தென்னமரவாடி ஆகிய கிராமங்கள் சிங்கள மொழிப் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இப்போது சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன.

கொக்கிளாய்ப் பகுதியில் பொது மற்றும் தனியார் காணிகளை உள்ளடக்கி பௌத்த விகாரை ஒன்று கட்டுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொக்கிளாய் மருத்துவமனைக் காணியின் ஒரு பகுதி கொக்கிளாய் உபதபாலகக் காணியின் ஒரு பகுதி மற்றும் தனியார் ஒருவரது காணி என்பவற்றை இணைத்து இந்த விகாரை அமைக்கப்படவுள்ளது. ஏற்கனவே பிரசித்தமான அரசடிப் பிள்ளையார் ஆலயம் இந்தப் பகுதியிலிருந்து அழிக்கப்பட்டு அவ்விடத்திலேயே விகாரை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கருணாற்றுக்கேணி கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் தண்ணிமுறிப்பு குமுழமுனை தென்னமரவாடி போன்ற தமிழ்க் கிராமங்களை உள்ளடக்கி வெலிஓயா என்ற பிரதேச செயலர் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்வுள்ளன என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த பிரதேச பிரிவொன்று சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால் தமிழர்கள் சில வருடங்களில் சொந்தக் கிராமங்களை விட்டு வெளியேறுவதைத் தவிரவேறு வழியில்லை.

1980-களின் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டபோது கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் சுமார் 11 சிங்களக் குடும்பங்களே தொழில் நோக்கத்திற்காக தங்கியிருந்தனர். தற்போது குறித்த முகத்துவாரம் பகுதியில் 280 குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் அநேகமானவை தமிழர்களுக்குச் சொந்தமானவை என்பதுடன் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைக் காணியும் தமிழர்களுக்குச் சொந்தமானது. குறித்த இப்பெரதேசத்தில் மேலும் சுமார் 140 சிங்களக் குடும்பங்கள் இந்த வாரம் குடியமர்த்தப்பட்டுள்ளனர். கொக்கிளாய் ஏரி முகத்துவாரம் கடற்பகுதி போன்றன தற்போது சிங்கள மக்களின் அதிக்கத்தின் கீழ் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர் பிரதேசங்களைச் சட்ட ரீதியாகவே கொள்ளையடிக்கும் சிங்கள அரசு குடியேறும் சிங்கள மக்கள் அறியும் வகையில் சிங்கள மொழியை தமிழர் பகுதிகளில் ஊக்கிவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே மடு வீதியை அண்மித்துள்ள தமிழ்ச் சிறார்களுக்கான பாடசாலைகள் மிகவும் சேதமடைந்துள்ள இந்நிலையில் இப்பாடசாலைகள் திருத்தப்படாது புதிதாகக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களச் சிறார்களுக்கான சிங்கள மொழிப் பாடசாலை ஒன்று புதிதாகக் கட்டப்படுகின்றது.

சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒரு சில பெயர்ப்பலகைகள் காணப்பட்ட வடக்குப் பகுதியில் தற்போது பெருமளவான சிங்களப் பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றன. சில இடங்களின் முன்னணி சந்திகளில் காணப்படும் பெயர்ப்பலகைகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே காணப்படுகிறது. பேரூந்துகளிலும் சிங்கள மற்றும் ஆங்கிலச் சொற்களையே அதிகம் காணக்கூடியதாக உள்ளது.

ஏ-09 நெடுஞ்சாலையில் உள்ள கனகராயன்குளத்திலிருந்து பிரிந்து செல்லும் மூன்று வீதிகளுக்கு கொசல பெரேரா வீதி அனுரா பெரேரா வீதி வணக்கத்திற்குரிய யற்றிராவன விமல தேர வீதி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. குறித்த முதல் இரண்டும் யுத்தத்தில் பங்குகொண்ட இராணுவ வீரர்களின் பெயர்களாகவும் மூன்றாவது வீதிக்கான பெயர் புத்த பிக்கு ஒருவரின் பெயருமாகும். கிளிநொச்சி நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மகிந்த ராஜபக்சா மாவத்தை அலுத் மாவத்தை போன்ற சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.

‘வடக்கின் வசந்தம்’ என்கிற திட்டத்தின் மூலமாக இடம்பெற்றுவரும் சிங்களமயமாக்கல் துரிதகெதியில் தமிழரின் பிரதேசங்களில் இடம்பெற்று வருகிறது. தமிழர்கள் தூங்கி எழும்புவதற்கு முன்னரே சிங்கள ஆதிக்கம் தென்படுகிறது. உலக நாடுகளை ஏமாற்றவும் தமிழர்களின் கண்களைக் கட்டிவிட்டு தமிழீழப் பிரதேசத்தை கொள்ளையடிக்கிறார்கள் பகல் கொள்ளையர்கள். விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஒதுங்கியிருந்தவர்களெல்லாம் துணிந்து சென்று தமிழர்கள் மீது சேட்டை செய்யும் நிலை இன்று மாறியுள்ளது.

அதிவேகமாக இடம்பெறும் சிங்களமயமாக்கல் திட்டத்தின் மூலமாக அடுத்த ஒரு தசாப்தங்களுக்குள்ளாகவே தமிழர்களின் தாயக பூமி என்கிற இடம் காணாமல் போய்விடும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். வரும் முன் காப்போம் என்கிற நோக்கில் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் சிங்கள அரசின் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதுடன் தமிழர்களின் பிரதேசத்தை காப்பாற்றலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply