“சம்பந்தனின் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும்”

” சம்பந்தனின் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும்”

இலங்கையராக நாம் அனைவரும்  ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்  கூறும் காரணிகளை  இந்த நாட்டின் சிங்கள பெரும்பான்மை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட உறுப்பினர்கள் தமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை கையாளும் வகையில் பல்வேறு சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் சந்திப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியாக  செயற்படும் 16 பேர் கொண்டு குழுவினராக நாம் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வரும் நிலையில் நாம் முன்னெடுக்கும்  காரியங்கள், எதிர்காலத்தில் நடைபெறும் அரசியல் காரணிகளில் நாம் எவ்வாறு செயற்படுவோம் என்ற விடயங்கள் மற்றும் சு.க.வின் கொள்கைகளிலிருந்து அடுத்து நாம் செயற்படும் காரியங்கள் குறித்து இன்றைய சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் கலந்துரையாடினோம்.

தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையிலும் அனுபவமிக்க அரசியல்வாதி என்ற வகையிலும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்  எமக்கு முன்வைத்த காரணிகளை அனைத்தையும் இந்த நாட்டின் சிங்கள பெரும்பான்மை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையராக நாம் அனைவரும்  ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும் என அவர் கூறியமை முக்கியமானதாகும். இந்த நிலைப்பாட்டினை எட்டவே கடந்த காலங்களில் கடுமையாக போராட வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்று அவர்களின் நிலைப்பாடுகள் நாட்டினை ஐக்கியப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

தமிழ் தலைமைகளே இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வருகின்ற நிலையில் தெற்கின் அரசியல்வாதிகள் இந்த நிலைபாட்டினை செவிமடுக்காத காரணத்தினாலேயே இந்த நாடு குழப்பமடைந்தது என்பதை  மீண்டும் சிந்திக்க வேண்டும்.

சம்பந்தன் ஒரு நேர்மையான அதேபோல் கொள்கையுடன் பயணிக்கும் அரசியல் வாதியாவார். ஆகவே எம்முடனான சந்திப்பில் அவர் முன்வைத்த காரணிகள் மிகவும் முக்கியத்துவமானவையாகும்.

ஆகவே அவருடன் நடந்த இந்த பேச்சுவார்த்தையை எமது அரசியல் பயணத்திலும் அதேபோல் நாட்டின் அரசியல் பயணித்திலும் மிகவும் மகத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதுகின்றோம் என்றனர்.

http://www.virakesari.lk/article/34154


SLFP rebel group meets Sampanthan

2018-05-30

The Tamil National Alliance (TNA) led by Opposition Leader R. Sampanthan and a delegation from the SLFP rebel group of 16 Parliamentarians met at the Opposition Leader’s office today to discuss the current political situation of the country and issues related to both parties. Pix by Nisal Baduge


About editor 3157 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply