அங்கோரின் மறு கண்டு பிடிப்பு – அத்தியாயம் 5
கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன்
09 ஞாயிற்றுக்கிழமை
27.05.2018
ஹென்றிய மெளஹாட் என்ற இயற்கை ஆர்வலர் 1860-ஆம் ஆண்டில் கம்போடியாவை பார்வையிட்டார். 15-ஆம் நூற்றாண்டு மத்தியில் தலை நகர் அழிக்கப்பட்ட பின்னர்
அங்கோரின் அழிவுகளைக் கண்ட முதல் வெளிநாட்டவர் என்ற பெருமைக்கு உரியவர் இவர். அழிவுகளில் ஆர்வம் கொண்ட முதல் ஐரோப்பியர் மெளஹாட் என்ற போதும் அங்கோரை இவர் கண்டுபிடித்தார் என்பது மெய்ப்பிக்க முடியாததாக இருந்தது. வேறு பல வெளிநாட்டவரும் இந்த இடங்களைக் கண்டு இவருக்கு முன்பே எழுதியிருந்த
னர். ஆனால் அவர்களுடைய அறிக்கைகள் மேற்கத்திய நாடுகளின் பார்வைக்குப்படாமல் போயின.
சீனா, ஜப்பான், அரேபியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல் தேசத்து வெளிநாட்டு வியாபாரிகள் கம்போடியா வின் தலைநகரங்களான ப்னோம் பென்ச், மற்றும் லோபெக் ஆகிய இடங்களில் 16 ஆம் நூற்றாண்டில் வசித்தனர். அடுத்து வந்த நூற்றாண்டுகளில் டச்சு, ஆங்கிலத்தார் ஒன்றாக சேர்ந்தனர். ஆகையால் மெளஹாட்டிற்கு முன்பே அங்கோரின் அழிவுகள் வெளிநாட்டவர்களுக்கு தெரிந்திருந்தது என்பதில் வியப்பில்லை.
16 ஆம் நூற்றாண்டில் டச்சுக்களால் சுமத்திராவிலிருந்து அகதிகளாக விரட்டப்பட்ட போர்க்சீசியர்கள் கம்போடியாவில் அடைக்கலம் அடைந்தனர். அங்கோரின் அழிவுகளை கண்ட ஆரம்பகால ஐரோப்பியர்களில் இவர்களும் இருந்தார்கள். பிரான்சிஸ்கன் மற்றும் டொமினிக்கன் ஆகியவற்றின் போர்ச்சுக் கல், ஸ்பானிஷ் சமய அமைப்புகள் மலாக்காவிலிருந்து இதே நூற்றாண்டில் இங்கே வந்தன. டியோகோடூ கெளடோ தொகுத்த போர்ச்சிக்கீசிய நிகழ்ச்சி வரலாற்றில் அங்கோர் பற்றிய பல விவரங்கள் இருக்கின்றன. டூகெளடோ கம்போடியாவுக்கு செல்லவில்லை என்ற போதும் இவருடைய தகவல்களுக்கு முக்கிய காரணகர்த்தா அண்டோனியோ டி மெதலேனா என்பவராவார். இவர் ஒரு சமயத் துறவி.
இவர் 1585- ஆம் ஆண்டில் அங்கோருக்கு சென்றார். 16-ஆம் நூற்றாண்டின் மத்தியில் யானை வேட்டைக்குச் சென்ற அரசன் ஒருவன் தாவரங்கள் சூழ்ந்த இடத்தில் பல பிரமாண்டமான கட்டடங்களைக் கண்டான் என்று அரசனைக் குறித்து விவரித்து எழுதியுள்ளார். மேலும் அங்கோர்வாட் மற்றும் அங்கோர்தோம் என்ற அரச நகர் குறித்தும் பல முக்கியமான தகவல்களை இவர் கொடுத்துள்ளார்.
வெளியிடப்பட்ட மற்ற அறிக்கைகளுக்கு டுகெளடோவின் அறிக்கை அடிப்படையாக இருந்ததாக தெரிகிறது. 1601 ஆம் ஆண்டு அங்கோராவைப் பற்றிய விவரங்களை மார்சிலோ டி ரியடெனிரா என்பவர் வெளியிட்டார்.
கம்போடியாவில் பழைய நகரம் ஒன்றின் அழிவுகள் இருந்தன. அவைகள் ரோமரர்களால் அல்லது அலெக்ஜான்டரால் கட்டப்பட்டவை என்று சிலர் கூறுகிறார்கள். கபிரேயில் குபிரோக டி சன்அந்தோனியோ என்பவர் 1603-ஆம் ஆண்டில், உள்ளூர்வாசிகள் கேட்டிராததும், பார்த்திராத துமான ஒரு நகரம் 1570 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது என எழுதியுள்ளார்.
1570-ஆம் ஆண்டில் அழிவுகளை பலர் பார்த்ததாக கிறிஸ்டோலல் டி ஜக்யூ என்பவர் அறிவிப்பதோடு இந்தோசீனாவுக்கு பயணம் செய்து இவர் எழுதிய புத்தகத்தில் அன்ஜோன் என்று இந்த இடத்தை அழைத்து அங்கோர்தோம் நகரத்தை சுற்றி இருந்த சுவரைப் பற்றி எழுதி இருக்கிறார்.
1580-ஆம் ஆண்டில் கம்போடியா சென் பீட்டர்ஸ் கோயிலைப் போல யூதர் அல்லாதவர்களுக்கு இடையில் இக் கோவில் புகழுடன் விளங்கியது. டச்சு பார்வையாளர்களின் சில அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் வலிமையான வியாபாரதொடர்பு 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இருந்ததாக இவை குறிப்பிடுகின்றன.
1641 ஆம் ஆண்டில் கிரார்டு வான் உஸ்தோப் என்பவர் அங்கோர் பற்றி எழுதி இருக்கிறார். அதற்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து யஹன்றிக் இஞ்ஜிக் என்பவர் எழுதியுள்ளது:-
“அங்கோர் என்று அறியப்பட்ட மிகவும் மகிழ்ச்சிகரமான அழகிய நகருக்கு மன்னர் வருகை தந்தார். இந்த நகரத்தை போர்ச்சுகீசியர்களும் காஸ்டிலியன்களும் ரோம் என்று அழைத்தனர். இந்நகரம் வில் இருந்த ஸ்பானிஷ் மத பிரச்சார குழு பழமையான அழிவுகள் கொண்ட நகரத்தைப் பற்றி கேள்விப்பட்டு அழிவு கள் புனரமைப்பு செய்யப்பட்டு அந்த நகரம் கிறிஸ்துவ மதப் பிரச்சார குழுவிற்கு பிலிப்பென்சுக்கு வெளியில் புறக்காவல் நிலையமாக விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது. 1672-ஆம் ஆண்டில் செங்ரூல் என்ற பிரான்ஸ் மதப்பிரச்சார குழு, நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து எட்டு நாள் பயணத்தொலைவில் பழமையான நகரமும், புகழிற்குரிய கோயிலும் அமைந்திருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.
சென் பீட்டர்ஸ் கோயிலைப் போல யூதர் அல்லாதவர்களுக்கு இடையில் இக் கோவில் புகழுடன் விளங்கியது. டச்சு பார்வையாளர்களின் சில அறிக்கை களும் வெளிவந்துள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் வலிமையான வியாபார தொடர்பு 16மற்றும் 17 ஆம் நூற்றாண்டு களில் இருந்ததாக இவை- குறிப்பிடு கின்றன.
1641 ஆம் ஆண்டில் கிரார்டு வான் உஸ்தோப் என்பவர் அங்கோர் பற்றி எழுதி இருக்கிறார். அதற்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து யஹன்றிக் இஞ்ஜிக் என்பவர் எழுதியுள்ளது:-
“அங்கோர் என்று அறியப்பட்ட மிகவும் மகிழ்ச்சிகரமான அழகிய நகருக்கு மனனர் வருகை தந்தார். இந்த நகரத்தை போர்ச்சுகீசியர்களும் காஸ்டிலியன்களும் ரோம் என்று அழைத்தனர்.
ப்னோம் பென்ச்லிருந்து 8 அல்லது 10 நாள் பயணத் தூரத்தில் அமைந்திருந் தது”- என்று அவர் பதிவு செய்திருக்கிறார்.
அங்கோரில் இருக்கும் ஜப்பானிய ஆதாரம், அங்கோர்வாட் 7ஆம் நூற்றாண்டில் மணற்பாறையில் செதுக் கப்பட்டது எனக் கூறுகிறது. அங்கோர்வாட் டின் இரண்டாம் நிலை தூண் மீது காணப் படும் 1632ஆம் ஆண்டு திகதியோடு கூடிய பகாண்டாயூ எழுதிய கையயழுத்து ஒத்துப் போகின்றன. அங்கோர் நகரைப் பார்வையிட்ட மோரிமோட்டோ பகாண்டாயூ இதை மனப்பூர்வமாக எழுதியதோடு தனது தந்தையின் நினைவாக நான்கு புத்தர் சிலைகளை அங்கோர்வாட்டுக்கு அர்ப்பணித்ததார் எனத் தெரிகிறது. 1632ஆம் ஆண்டுக்கும் 1634 ஆண்டுக் கும் இடையில் நாகசாகியிலிருந்து அங் கோருக்கு சென்ற கென்ரியூ ´மனோ என்ற மொழிபெயர்ப்பாளர் அங்கிருந்த கோயிலை பாராட்டும் வகையில் மிகத் துல்லியமாக வரைந்துள்ளார். அங்கோர் வாட் பற்றிய மிகவும் பழமையான வரைபடம் இதுதான். அவர் அந்தக் கோயிலை ஜெடவானா விகாரா என்றும் இந்தியாவில் உள்ள புத்தமத பீடம் என்று கூறுகிறார். எந்த இடத்திலும் அங்கோர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் மற்ற வழக்கத்திற்கு மாறான வடிவ மைப்பு மற்றும் மேற்கு நோக்கிய முக அமைப்பு யாவும் அங்கோர்வாட் அடை யாளத்தை உறுதி செய்கின்றன.
அந்த வரைபடத்தில் எழுதியிருக்கும் குறிப்பு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. அதிலே, தூண்களிலே இருக்கும் சிற்பங் கள் நான்கு கடவுள்கள் கயிறு இழுக்கின்றன என்று குறிக்கப்பட்டுள்ளது. பாற்கடலை கடையும் இக்காட்சி துல்லிய மாக அங்கோர்வாட் கலை காட்சியகத்தில் உள்ள தூண்களைச் சுட்டிக்காட்டுகிறது.
வேறு பல வெளிநாட்டவர்களும் அங்கீகரிக்கப்படாத பல தகவல்களை வெளியிட்டனர். டாக்டர் அவுஸ் என்ற அமெரிக்க மதப்பிரசாரகர் சியாமில் நெடுங்காலம் வாழ்ந்தவர். அங்கோரைப் அற்புதமாக 1855ஆம் ஆண்டில் – அதாவது யஹன்றி மெளஹாட் அழிவுகளை பார்ப்பதற்கு ஐந்து ஆண்டு களுக்கு முன்னர் எழுதி யிருக் கிறார். இக்கருத்தும் மற்றவைக ளைப் போலவே யாருடைய கண்ணுக் கும் தெரியாமல் யாருடைய காதுகளுக் கும் கேட்காமலேயேட்டனர். டாக்டர் அவுஸ் என்ற அமெரிக்க மதப்பிரசாரகர் சியாமில் நெடுங்காலம் வாழ்ந்தவர். அங்கோரைப் பற்றி மிகவும் போய்விட்டது.
சர்லஸ் எமில் பெளலி என்ற பிரான்சு நாட்டு சமய பிரச்சாரகர் 1850ஆம் ஆண்டு அங்கோரை பார்த்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது பயணக் குறிப்புகளை வெளியிட்டார். இதுவும் பொதுமக்களின் கவனத்தைக் கவர வில்லை.
டி.ஞ.கிங் என்ற ஆங்கிலேயர் 1859 ஆம் ஆண்டில் சியாம் கம்போடியாவில் வாழ்ந்தவர், இவர் மெளஹாட்டிற்கு ஓர் ஆண்டு முன்பு லண்டனில் உள்ள ராயல் ஜியோ கிராபிக்கல் சொசைட்டியில் ஓர் ஆராய்ச்சி கட்டுரையைப் படித்தார். அழி வுகளைக் குறித்து அவர் கீழ்க்கண்ட வாறு குறிப்பிடுகிறார்:-
“பிரெஞ்ச் மொழியில் உள்ள வரைபடம் பெரிய ஏரி, அழிவுகள், காட்டில் தனியாக அழிந்த நிலையில் கோயில் இருந்தது. அக்கோயில் தற்கால சந்ததியருக்கு மிகவும் முக்கிய பழைய சந்ததியரின் நினைவுச் சின்னமாக திகழ்கிறது”- என்று அவர் எழுதியுள்ளார். இவருடைய அறிக்கை ஏன் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு மெளஹாட் இங்கிலாந்திலிருந்து தென்கிழக்கு இங்கிலாந்தில் வாழ்ந்தனர். நண்பர் ஒருவர் தந்த சியாம் பற்றிய புத்தகத்தால் உணர்ச்சி தூண்டப்பட்டு கிழக்கு நாடுக ளுக்கு பயணம் துவக்கினார். நிதி உதவி யும் லண்டனில் உள்ள ராயல் ஜியோகிரா பிக்கல் சொசைட்டியில் பெறாத போதும் அதனுடைய ஆதரவு அவருக் குக் கிடைத்தது. கிழக்கு நாடுகளுக்கு 1858ஆம் கு பயணம் துவக்கினார். நிதி உதவி எதைஆண்டில் மெளஹாட் புறப் பட்டு சியாம், கம்போடியா ஆகிய நாடுகள் முழுவதிலும் தரை வழி பயணம் மேற் கொண்டார். அங்கோர்வாட்டில் இருந்த கோயிலைப் பார்வையிட்டு அளவெடுத் தார்.
மேலும் விரிவான குறிப்புகளை அழிவுகளைப் பற்றிய தனது கருத்து களில் இணைத்து வைத்தார்.
1861ஆம் ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனது 35ஆவது வயதில் மெளஹாட் லாவோசில் இறந்து போனார்.
அவருடைய நாட்குறிப்புகளும், அவருடைய பயண ஆவணங்களும் 1864ஆம் ஆண்டில் அவருடைய மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.