இராஜ இராஜப் பெரும் பள்ளி எனும் வெல்கம் விகாரை நாதனார் கோயில்

இராஜ இராஜப் பெரும் பள்ளி எனும் வெல்கம் விகாரை நாதனார் கோயில்

பாலசுகுமார் சேனையூர்
மேனாள் முதன்மையர் கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக் கழகம்

தமிழ் நாட்டில்  பௌத்தத்தின் தாக்கம் இருந்த காலகட்டத்தில் ஈழத்தின் வடக்கு கிழக்கு  தமிழர் வாழும்  பிரதேசங்ளில் தமிழ் பௌத்தச் செல்வாக்கு இருந்ததற்கான ஆதாரங் கள் காணப்படுகின்றன. அவை சிங்கள பௌத்த பண்பாட்டிலிருந்து வேறுபட்ட ஒரு பண்டுத் தளம். ஆனால்  இன்று அவை தமிழர் அடையாளங்கள் அல்லாமல் சிங்கள அடையாளங்களாகவே  மாற்றப்பட்டுள்ளமை  இனவாத நோக்கு நிறைந்தததே.

பரணவிதான போன்ற  தொல்பொருள் பேராசிரியர்கள் வரலாற்று திரிபு வாதத்தை மேற் கொண்டனர் என்றே சொல்ல வேண்டும்.

திருகோணமலை வரலாற்று ஆராயச்சியாளர்களின் சொர்க்கபுரி என்று சொல்லும் அளவுக்கு  கல்வெட்டுகளும் தொன்மைக்கால வாழ்வியல் ஆதாரங்களும் கலாசார சின்னங்களும்  நிறைந்த இடம். மக்கள்   மக்கள் பண்டைய காலங்களில் வாழ்ந்த   இடங்கள்  காடுகளில் மறைந்து கிடக்கின்றன. அந்தவகையில் 1929 ஆம் ஆண்டளவில் தொல் பொருளியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இடம் வெல்கம் விகாரை எனப்படும் இராஜ இராஜப் பெரும்பள்ளியாகும். பௌத்தர்கள் இதனை வில்கம் விகார என அழைத்தாலும் தமிழர்கள் இதனை நாதனார் கோயில் என அழைக்கின்றனர்.

கோயில் போன்ற அமைப்புகளும் விகாரைக்குரிய அழிபாடுகளும் திராவிடக் கட்டிடக் கலை மரபுகளையும் உள்ளடக்கியதாக இந்தக் கட்டிடத்
தொகுதி காணப்படுகிறது. அரண்மனை கோயில் விகாரை என மூன்று கட்டிடத்தொகுதியின் அடையாளங்களாக பரவிக் கிடக்கின்றன. இங்கு கிடைக்கும் தொல் பொருளியல் சான்றுகள்.

திருகோணமலை நகரத்திலிருந்து சிலகல் தொலைவில் இந்த பழைய நகரம் காணப்படுகிறது. யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் பன்குளத்துக்கு முன்னதாக கன்னியாவைத் தாண்டிப் போகும்போது நாம் இராஜ இராஜப் பெரும் பள்ளியை அடைய முடியும்.

பிராமிக் கல் வெட்டுக்களும் தமிழ் கல்வெட்டுக்களும் இந்த இடத்தின் வரலாற்றுக் காலத்தை உறுதிப்படுத்துகின்றன.  கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டு கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலகட்டங்களில் பராமரிக்கப்பட்டு நான்காம் ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டங்களில் பராமரிப்பு இன்றி அழிபாடுகளைக் கண்டுள்ளமையும் அறிய முடிகிறது.

கி.பி.ஒன்பதாம் நூற்றண்டில் சோழ மன்னர்களின் ஈழம் மீதான படையெடுப்பு திருகோணமலை முழுவதையும் தங்கள்
ஆழுகைக்கு கீழ் கொண்டு வந்தமையும் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஈழம் மீதான படையெடுப்பு திருகோணமலை முழுவதையும் தங்கள் ஆழுகைக்குக்  கீழ் கொண்டு வந்தமையும் தமிழர் பகுதி எங்கும் அவர்கள் ஆட்சிக்கு சான்றாக கல்வெட்டுக்களும் கட்டிட
எச்சங்களுமாக உள்ள இடங்களில் இராஜ இராஜப் பெரும்பள்ளி எனும் நாதன் கோயில் முக்கியம் பெறுகிறது.

இங்கு உள்ளது போலவே சேற்றுவில்(சேருவாவில ) விகாரையில் உள்ள தமிழ்க் கல்வெட்டு இராஜ இராஜ சோழன் அதனை புனரமைத்த கதையைக் கூறுகிறது.

இந்த இடத்துக்கு வந்த சோழர்கள் இதனைப் புனரமைத்து இராஜ இராஜப் பெரும் பள்ளி எனவும் பெயரிட்டு பலவகையான கொடையும் அளித்ததாக பேராசிரியர் பத்மநாதன் தன்னுடைய இலங்கை தமிழ் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இராஜ ராஜசோழன், இராஜேந்திர சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்களும் சோழப் பிரதானிகளின் கல்வெட்டுக்களும் இதில் அடங்கும். இங்கு பதினாறு கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

சுற்று வட்டாரத்தை மேலும் ஆய்வு செய்கிற போது இன்னும் பல கல்வெட்டுக்கள் வெளியே வரலாம். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல
தானம் வழங்கப்பட்டதையும் கொடை அளித்தமைப் பற்றியுமே பேசுகின்றன.

கட்டிட இடிபாடுகள் ஈழத்தில் வேறு இடங்களில் கிடைக்காத பல பாவனைப் பொருட்கள் கல்லில் செய்யப்பட்டதாக அடையாளம் காணப்படுகின்றன. இந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலமாகவும் அரண்மனைத் தொகுதியை அண்மித்ததாகவும் ஒரு வணிக மையத்தை கொண்டதாகவும் இருந்திருக்க கூடிய பண்புகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நகைகளை பாதுகாக்கும் கல்பெட்டகம் குளிக்கப் பயன்படுத்தப்படும் கற்தொட்டி, சித்திர வடிவக் கற்களும் குண்டான் வடிவிலான குடைந்து தோண்டி எடுத்த தனியான கல் குண்டானும் இங்குள்ள சிறப்பம்சங்களாகும். பிரதானமான கட்டிடத் தொகுதி கோயில் போன்ற அமைப்பையே சுட்டி நிற்கிறது அதற்கடுத்ததாக இருக்கும்பகுதியே விகாரையின் அமைப்பை கொண்டுள்ளது. பெரும்பாலாதாக்கம் இருந்த காலகட்டத்தில் தபிரதேசங்ளில் தமிழ் பௌத்த இன்று அவை தமிழர் அடையாளஙகளாக செல்வாக்கு இருந்ததற்கான  ஆதாரங்கள் காணபப் படுகின்றன. அவை சிங்கள பௌத்த  பண்பாட்டிலிருந்து வேறுபட்ட ஒரு பண்பாட்டுத் தளம்.

தொல் பொருளியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இடம் வெல்கம் விகாரை எனப்படும் இராஜ இராஜப் பெரும் பள்ளியாகும். பௌத்தர்கள் இதனை வில்கம் விகார என அழைத்தாலும் தமிழர்கள் இதனை நாதனார் கோயில் என அழைக்கின்றனர். கோயில் போன்ற அமைப்புகளும் விகாரைக்குரிய அழிபாடுகளும் திரவிடக் கட்டிடக் கலை மரபுகளையும் உள்ளடக்கியதாக இந்தக் கட்டிடத் தொகுதி காணப்படுகிறது. அரண்மனை கோயில் விகாரை என மூன்று கட்டிடத் தொகுதியின் அடையாளங்களாக பரவிக் கிடக்கின்றன.  இங்கு கிடைக்கும் தொல்பொருளியல் சான்றுகள்.
திருகோணமலை நகரத்திலிருந்து சில கல் தொலைவில் இந்த பழைய நகரம் காணப்படுகிறது. யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் பன்குளத்துக்கு முன்னதாக கன்னியாவைத் தாண்டிப் போகும்போது நாம் இராஜ இராஜப் பெரும் பள்ளியை அடைய முடியும்.

பிராமிக் கல் வெட்டுக்களும் தமிழ் கல்வெட்டுக்களும் இந்த இடத்தின் வரலாற்றுக் காலத்தை உறுதிப்படுத்துகின்றன கிறிஸ்துவுக்கு
முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டு கி.பி இரண்டாம் நூற்றண்டு காலகட்டங்களில் பராமரிக்கப்பட்டு நான்காம் ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டங்களில் பராமரிப்பு இன்றி அழிபாடுகளைக் கண்டுள்ளமையும் அறிய முடிகிறது.

கி.பி.ஒன்பதாம் நூற்றண்டில் சோழ மன்னர்களின் ஈழம் மீதான படையெடுப்பு திருகோணமலை முழுவதையும் தங்கள் ஆழுகைக்கு கீழ் கொண்டு வந்தமையும் தமிழர் பகுதி எங்கும் அவர்கள் ஆட்சிக்கு சான்றாக கல்வெட்டுக்களும் கட்டிட எச்சங்களுமாக உள்ள இடங்களில் இராஜ இராஜப் பெரும் பள்ளி எனும் நாதன் கோயில் முக்கியம் பெறுகிறது.

இங்கு உள்ளது போலவே சேற்று வில்(சேருவாவில) விகாரையில் உள்ள தமிழ் கல்வெட்டு இராஜ இராஜ சோழன் அதனை புனரமைத்த கதையைக்
கூறுகிறது.

இந்த இடத்துக்கு வந்த சோழர்கள் இதனை புனரமைத்து  இராஜ இராஜப் பெரும் பள்ளி எனவும் பெயரிட்டு பலவகையான கொடையும் அளித்ததாக
பேராசிரியர் பத்மநாதன் தன்னுடைய இலங்கை தமிழ் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இராஜராஜசோழன், இராஜேந்திர சோழன்
ஆகியோரின் கல்வெட்டுக்களும் சோழப் பிரதானிகளின் கல் வெட்டுக்களும் இதில் அடங்கும். இங்கு பதினாறு கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

சுற்று வட்டாரத்தை மேலும் ஆய்வு செய்கிற போது இன்னும் பல கல்வெட்டுக்கள் வெளியே வரலாம். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல
தானம் வழங்கப்பட்டதையும் கொடை அளித்தமைப் பற்றியுமே பேசுகின்றன.

கட்டிட இடிபாடுகள் ஈழத்தில் வேறு இடங்களில் கிடைக்காத பல பாவனைப் பொருட்கள் கல்லில் செய்யப்பட்டதாக அடையாளம் ணப்படுகின்றன.
இந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலமாகவும் அரன்மனைத் தொகுதியை அண்மித்ததாகவும் ஒரு வணிகமையத்தை கொண்டதாகவும் இருந்திருக்க
கூடிய பண்புகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நகைகளை பாதுகாக்கும் கல் பெட்டகம் குளிக்கப் பயன்படுத்தப்படும் கற்தொட்டி, சித்திர வடிவக் கற்களும் குண்டான் வடிவிலான குடைந்து தோண்டி எடுத்த தனியான கல் குண்டானும் இங்குள்ள சிறப்பம்சங்களாகும்.

பிரதானமான கட்டிடத் தொகுதி கோயில் போன்ற அமைப்பையே சுட்டி நிற்கிறது அதற்கடுத்ததாக இருக்கும்பகுதியே விகாரையின் அமைப்பை கொண்டுள்ளது. பெரும்பாலான கட்டிட இடிபாடுகள் சோழர் காலக் கட்டிடப் பாணியயையே பின்பற்றியுள்ளமை தமிழர் கலாசார அடையாளங்களின் நீட்சியை சொல்லி நிற்கிறது.

“வெல்காமமே” பின்னர் “வெல்கம்” என மாறியதாக சிலரின் கருத்துக்களும் கவனத்துக்கு உரியதே.

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் இராஜ இராஜப் பெரும் பள்ளி தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.

Arangam News E-paper 18-May-2018.pdf>

file:///C:/Users/Thang/Folder%20D/Old%20F%20(E)%20on%20Owner/thanga3/Perumpalli%20ruins.pdf


 

About editor 3121 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply