சீமான் மலையாளி அல்லர் அவர் தமிழர்

சீமான் மலையாளி அல்லர், அவர் தமிழர்

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

*அரசியல் இலாபத்துக்காக தமிழரை மடைமாற்றுவதற்காக சீமானை மலையாளி எனவும் அவரது தந்தை மலையாளி எனவும் பொய்யாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.*

சீமான் 1970 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 10 ஆம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் அரினையூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

சீமான் நாடார் என்கின்றனர். நாடார் என்பது தமிழைத் தாய்மொழியாகப் பேசும் தமிழ்ச்சாதி. அப்படி என்றால் அவரை மலையாளி என்று எப்படி சொல்ல முடியும்.

அவர் சைமன் என்ற தனது பெயரை சீமான் என மாற்றிக்கொண்டார் எனச் சிலர் பதிவிடுகின்றனர்.

சூரியநாராயண சாஸ்திரி என்ற பெயரை பரிதிமாற்கலைஞர் எனவும், வேதாசலம் என்ற பெயரை மறைமலை அடிகள் எனவும் தமிழறிஞர்கள்கூட தம் பெயரை தமிழ்ப்பெயராக மாற்றிவைத்துக் கொண்டனரே.

கருணாநிதியும் தட்சிணாமூர்த்தி என்ற தனது பெயரை கருணாநிதி என மாற்றிவைத்துக் கொண்டார் அல்லவா.

சீமானை கிருத்துவர் எனவும் அவர் இந்து அல்ல எனவும் சிலர் பதிவிடுகின்றனர்.

அவர் ஒரு கிருத்துவரின் மகன். அதாவது கிருத்துவ நாடாரின் மகன். நாடார் சமுதாயத்தில் 40 சதவீத மக்கள் ஆங்கிலேயர் காலத்தில் இந்து மதத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையால் கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டனர். இப்போது 60 சதவீத நாடார்கள்தான் இந்துவாக உள்ளனர். தமிழ்ச்சமுதாயத்தின் ஒரு பகுதி மதம் மாறிவிட்டால் அவர்கள் தமிழர் இல்லையா? நாடார்களில் 40 விழுக்காடு மதம் மாறி உள்ளனர். ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு இந்து என்று வைத்துக்கொள்ளுங்கள். கிருத்துவ மதத்துக்கு மாறிவிடுகிறீர் என்றால் இப்பொழுது நீங்கள் மதத்தால் கிருத்துவர்.
மதம் மாறிவிட்டீர் என்பதால் நீங்கள் இப்பொழுது தமிழன் இல்லையா?

மதம் என்பது வழிபாட்டுக் கலாச்சாரம். மதம் மாற முடியும். ஆனால் இனம் மாற முடியாது. மதம் மாறிவிட்டால் தமிழன் இங்கிலிஷ்காரன் ஆகமாட்டான்.

இந்துவாக இருந்த மக்கள் கிருத்துவத்துக்கு மதம் மாறிவிட்டனர். பிறகு அந்த மக்கள் மீண்டும் இந்து மதத்துக்கு வரமுடியாதா? சைமன் என்ற சீமான் இந்துவாக இருந்து கிருத்துவ மதத்துக்கு மாறிய நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்.

இப்போது அவர் முருகனை கடவுளாக ஏற்கிறார். திருமுருக வழிபாடு செய்கிறார். சிவனை கடவுளாக ஏற்கிறார். குலதெய்வங்களை கடவுளாக ஏற்கிறார்.
குறிஞ்சிநிலக் கடவுள் முருகனையும், முல்லைநிலக் கடவுள் திருமாலையும், மருதநிலக் கடவுள் இந்திரனையும், நெய்தல்நிலக் கடவுள் வருணனையும் கடவுளாக ஏற்கிறார்.
சைவத்தையும், வைணவத்தையும் தனது மதங்களாக ஏற்கிறார்.

இந்துவாக இருந்து கிருத்துவ மதத்திற்குச் சென்றவர்கள் கிருத்துவ மதத்திலிருந்து மீண்டும் இந்து மதத்துக்கு வந்தால் அவர்களை இந்துவாக ஏற்கமாட்டார்களா?

நடுகல் வழிபாட்டு முறையிலிருந்து வளர்ந்த குலதெய்வ வழிபாடும், சைவ வைணவ வழிபாட்டு முறைகளும் தொன்றுதொட்டு தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளாகும்.

சங்க காலத்தில் மலைவாழ் மக்கள் முருகனையும், அதனை அடுத்த முல்லைநில காட்டுப்பகுதி மக்கள் திருமாலையும், வறண்ட பாலைநில மக்கள் காளியையும், ஆற்றுப் பாசனப் பகுதி மக்கள் இந்திரனையும், கடலோர மக்கள் வருணனையும் வழிபட்டனர்.

சங்க காலத்திற்கு பிறகு புத்தமும், சமணமும் தமிழகத்திற்கு வந்தன. பல தமிழர்கள் புத்த மதத்திற்கும் சமண மதத்திற்கும் மாறினர். பிறகு ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்தில் மீண்டும் சைவமும் வைணவமும் வளர்ந்தன. அதனால் புத்தமும் சமணமும் தமிழகத்தில் அழிந்தன. பல புத்த கோயில்கள் சைவ வைணவ கோயில்களாக மாற்றமடைந்தன.

சேரநாட்டு வணிகர்கள் மூலமும், அரேபிய வணிகர்கள் மூலமும் இசுலாம் மதம் கடல்வழியாக தமிழகத்திற்கு வந்தது. சைவ மதத் தமிழர்கள் சிலர் இசுலாத்திற்கு மாறினர். உருது பேசும் இசுலாமியர் தவிர்த்து மற்ற இசுலாமியர் அனைவரும் சைவராக இருந்து மதம்மாறிய தமிழர்கள்.

ஐரோப்பியர் வருகையால் கிருத்துவம் தமிழகத்திற்கு வந்தது. சைவ மதத் தமிழர்கள் சிலர் கிருத்துவத்திற்கு மாறினர். தமிழகத்து கிருத்துவர்கள் எல்லாம் ஐரோப்பியர் அல்லர். அவர்கள் சைவராக இருந்து மதம்மாறிய தமிழர்கள்.

கி.பி 8 ஆம் நூற்றாண்டில் சேரநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவர் சேரமான் பெருமாள். அவர் சைவராக இருந்தவர். பிறகு அரேபியா சென்று முஸ்லிமாக மாறினார்.
முஸ்லிமாக மாறிவிட்டார் என்பதால் அவர் தமிழர் இல்லையா?

இராமதேவர் என்ற ஒரு சித்தர். 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் அரேபியா சென்று முஸ்லிமாக மாறி யாகோபு என பெயர் மாற்றிக்கொண்டு மீண்டும் வந்தார்.
அவர் மதம் மாறிவிட்டதால் அவரை தமிழர் இல்லை அரபியன் என்று சொல்ல முடியுமா?

நமக்கு தெரிந்தவர்கள், நம் சொந்தக்காரர்கள் கிருத்துவராக மாறுவதை நாம் பார்த்ததில்லையா? அவர்கள் மதம் மட்டுமே மாறும். இனம் தமிழர்தான்.

மதத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது.

இனம் பிறப்பால் வருவது. இனம் வேறு மதம் வேறு.

சிலர் சொல்வது போல  பல தலைமுறைகளுக்கு முன்பு சீமானின் முப்பாட்டன்களில் ஒருவர் கேரளத்தில் இருந்து வந்தவர் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.
கேரளாவில் இருப்பவர்கள் அனைவரும் மலையாளி இல்லை.

தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, மூணாறு, பாலக்காடு ஆகிய பகுதிகள் முழுவதும் தமிழர் வாழும் பகுதிகள்.
பெங்களூரில் தமிழர் இல்லையா?

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் முழுவதும் தமிழர் பகுதிதானே.. அங்கிருந்து தமிழர் எவராவது தமிழகத்திற்கு வந்தால் அவரைத் தெலுங்கர் எனவும் நீ தமிழனல்ல எனவும் சொல்ல முடியுமா?

கேரளாவில் நம்பூதிரிகள் மற்றும் நாயர்களைத் தவிர அனைவருமே தமிழர்கள்தான்.

500 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் மலையாளம் என்ற மொழியே உருவாகவில்லை.

கேரளா 500 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்பேசிய சேரநாடு.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நம்பூதிரிகள் என்னும் ஆரிய பிராமணர்கள் கேரளத்தில் குடியேறி தமிழோடு அளவுக்கதிகமாக சமஸ்கிருத சொற்களைக் கலந்து பேசி தமிழைச் சீரழித்ததால் தமிழ் சிதைந்து மலையாளம் ஆனது. கேரளத்தில் தனித்தமிழ் இயக்கம் தோன்றி மலையாளத்தில் கலந்துள்ள சமஸ்கிருதச் சொற்களை அகற்றினால் மலையாளம் தூய தமிழ் ஆகும்.

http://tamilmahendran.blogspot.ca/2018/


About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply