விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம்.
ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம் அது. இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்த தினம்.
அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சுமார் 22 வருடங்களையும் கடந்து முள்ளிவாய்கால் வரை தொடரப் போகின்றது என்று இந்தியாவின் தலைவர்களோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்களோ கனவு கூடக் கண்டிருக்கமாட்டார்கள்.
அன்று காலை யாழ்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தியப்படை முகாம்களில் இருந்து இடைக்கிடை துப்பாக்கிவேட்டுக்கள் தீர்க்கப்பட்டபடி இருந்தன.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்த்திகள் வானில் பறந்தபடி யாழ்குடாவை நோட்டமிட்டு அலைந்தன.
அதைவிட, தாளப்பறந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியப் படைகளின் ஷமிராஜ் 2000| சண்டை விமானங்களின் இரைச்சல்கள் யாழ் மக்களுக்கு மிகுந்த அச்சமூட்டுவதாக இருந்தது.
வீதிகள் மனித ஆரவாரங்கள் எதுவும் இல்லாது வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆங்காங்கே விடுதலைப் புலிகளின் வாகன நடமாட்டங்களையும், துவிச்சக்கரவண்டிகளில் நடமாடிய ஒரு சில விடுதலைப் புலிகளையும் தவிர, வீதிகள் அனைத்தும் ஆள்அரவமற்றே காணப்பட்டன.
யாழ்ப்பாண மக்கள் மறுபடியும் ஒரு யுத்த சூழலை உணர்ந்தார்கள். கடந்த சில நாட்களாக வடக்குகிழக்கில் இடம்பெற்று வந்த நிகழ்வுகள், நிலமையை அவர்களுக்கு தெளிவாகவே உணர்த்தியிருந்தன. ஷஒவ்வொரு வீடுகளிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டு சில மாதங்களாக பாவிக்கப்படாமல் இருந்த பதுங்கு குழிகளை மறுபடியும் தூசு தட்டி, செப்பனிட்டு, உணவுப் பொருட்டகளைச் சேமித்துவைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். யுத்த சூழ்நிலைக்குள் பல வருடங்களாக வாழ்க்கை நடாத்திப் பழக்கப்பட்டுவிட்ட அந்த மக்களுக்கு, நிலமையை எதிர்கொள்ளும் பக்குவம் இயல்பாகவே ஏற்பட்டிருந்தது.
தலைவரின் தலைக்கு விலை:
முன்னைய நாள் (9ம் திகதி) இரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் மாலைச் செய்தியறிக்கை நிலமையின் தீவிரத்தை யாழ்ப்பாண மக்களுக்கு நன்றாகவே விளக்கியிருந்தது.
புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் போர் பிரகடனம் செய்திருக்கும் விடயம் செய்தியறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.
புலிகளை நீராயுதபாணிகளாக்கும் நோக்கத்துடன் இந்திய அமைதிகாக்கும் படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக ஷலங்காப் புவத்தை| மேற்கோள் காண்பித்து அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு விடயமும் அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலை அறிவிக்கப்பட்டிருந்தது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை உயிருடனோ, அல்லது பிணமாகவோ பிடிக்கும் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்படும் என்று ஜே.ஆர். அறிவித்திருந்தார்.
நிலமையின் தீவிரத்தை இந்த அறிவிப்பு யாழ்மக்களுக்கு தௌ;ளெனப் புரிய வைத்திருந்து.
தலைவரைக் குறிவைத்து நகர்வு:
அத்தோடு, 9ம் திகதி இரவு இந்தியப் படைகளின் சீக்கிய அதிரடிப்படைப் பிரிவினர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை பற்றிய செய்தியும் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியிருந்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கை ஒன்றை 9ம் திகதி இரவு இந்தியப் படையினர் இரகசியமாக மேற்கொண்டிருந்ததாக அந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி, அதிக கலவரத்தை தோற்றுவித்திருந்தது.
யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் முகாமிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகப் பேசப்பட்டது. 9ம் திகதி இரவு 9 மணியளவில் சுமார் 25 சீக்கிய அதிரடிப்படையினர் இந்தப் பிரம்படி முகாமைக் குறிவைத்து நகர்வொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பிரம்படி வீதிக்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள பிரவுன் வீதியில் வசித்துவந்த ஒருவரின் வீட்டுக்கதவு நள்ளிரவில் தட்டப்பட்டது. அவர் கதவைத் திறக்க வந்தபோது, ஷவாசலில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு வெளியில் வருமாறு| உத்தரவிடப்பட்டது. அவ் உத்தரவுக்கமைய செய்துவிட்டு வெளியில் வந்தவருக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது வீட்டைச் சூழ இராணுவ சீருடையில் ஆயுதம் தரித்த சுமார் 25 சீக்கியப் படை வீரர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் அனைவரினதும் முகங்களிலும் பதட்டம் காணப்பட்டது.
யாழ் கோட்டைக்கு எப்படிச் செல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். அந்த நபர் வழியைக் காண்பித்ததும், மதில்களைத் தாண்டிக் குதித்தபடி அவர்கள் அந்த திசையை நோக்கி புறப்பட்டார்கள். சிறிது நேரத்தில் காணாமல் போனார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த பிரம்படி வீதி முகாம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு, தலைவரைக் கைது செய்தும் திட்டத்துடன் அவர்கள் முயற்சி ஒன்றை மேற்கொண்டதாகவும், ஏதோ காரணத்தினால் அது கைக்கூடவில்லை என்றும் மக்கள் மத்தியில் மறு நாள் செய்தி பரவியிருந்தது.
நாங்கள் சாகத்துணிந்துவிட்டோம்
விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தை இந்தியா திணிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக, புலிகளுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான இறுதி முயற்சி ஒன்று சில இந்திய இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில்; நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் கட்டளையிடும் அதிகாரி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கும், இந்தியப் படைகளின் 54வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியான மேஜர்.ஜெனரல் ஹரிக்கிரத் சிங்கும், புலிகளின் தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்தார்கள். அவர்கள் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்காப்டரில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கினார்கள்.
விடுதலைப் புலிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை இந்தியப்படையினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பதே அந்த அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது. இந்தியப்படையினரின் இராணுவ பலம் பற்றி விபரித்து, பலவந்தமாக புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதற்கு தாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் விடயத்தை விளக்கி, இந்தியப்படையினரிடம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்துவதே அவர்களின் திட்டமாக இருந்தது. புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப்படையினருடன் அவர்கள் மோத வேண்டி ஏற்படும் என்பதுடன், அதன் காரணமாக புலிகள் அமைப்பு முற்றாகவே அழிக்கப்பட்டுவிடவும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் புலிகளின் தலைவரிடம் தெளிவுபடுத்த விரும்பினார்கள்.
யாழ் பலகலைக்கழக மைதானத்தில் இந்தியப் படை அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிக்காப்டர் வந்திறங்கியது. அதில் இருந்து இறங்கிய இந்தியப்படை அதிகாரிகளால் அங்கு காணப்பட்ட சில மாற்றங்களை அவதானிக்கமுடிந்தது.
மைதானம் முழுவது ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் காவல்கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் முகங்கள் இறுக்கமடைந்து, கடுமையாக காணப்பட்டதை அந்த இந்திய அதிகாரிகள் அவதானித்தார்கள். ஹரிக்கிரத் சிங், திபீந்தர் சிங் போன்ற இந்தியப்படை அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாக விடுதலைப் புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழகியவர்கள். விடுதலைப் புலிகளின் திருமணச்சடங்குகள் உட்பட பல குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு புலிகளுடன் நெருக்கமான நட்பைப் பேணிவந்தவர்கள்.
அந்த அதிகாரிகளை புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா ஹெலிக்காப்டரில் அழைத்துச் சென்று, முல்லைத்தீவிலுள்ள தமது தளங்களையும், காடுகளையும் சுற்றிக்காண்பிக்கும் அளவிற்கு புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழக்கத்தையும், நெருக்கத்தையும் கொண்டிருந்தவர்கள். புலி உறுப்பினர்களும் அந்த இந்தியப்படை அதிகாரிகளை மிகவும் மதித்ததுடன், அவர்களைக் காணும் சந்தர்ப்பங்களில் கைகளை அசைத்து தமது அன்பைப் பரிமாறும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.
ஆனால் அன்றைய தினம் அந்த இந்திய அதிகாரிகள் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கியபோது, புலி உறுப்பினர்கள் எவருமே முன்னர் போன்று இந்திய அதிகாரிகளுடனான தமது நட்பை வெளிக்காண்பிக்க முன்வரவில்லை. காவல்கடமைகளில் ஈடுபட்டிருந்த புலி வீரர்களின் முகங்கள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டன. நிலைத்த பார்வைகளுடன், ஆயுதங்களை ஊறுதியாகக் கரம்பற்றி தமது காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சிறிய புன்முறவல் கூடச் செய்யாத அந்த இளைஞர்களைப் பார்த்ததும் இந்தியப்படை அதிகாரிகளுக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது.
புலிகளுடனான தமது நட்பைப் பயன்படுத்தியும், சிறிது பயமுறுத்தல்களைப் பிரயோகித்தும் புலிகளைப் பணியவைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அங்கு சென்றிருந்த இந்தியப்படை அதிகாரிகள் இருவருக்கும், புலிகளின் முகங்களில் ஏற்பட்டிருந்த அந்தப் புதிய மாற்றம், தாம் நினைத்துவந்தது போன்று நிலமை அவ்வளவு இலகுவாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாகப் புரிந்தது. விடுதலைப் புலிகள் சூழ்நிலைகளுக்கேற்ப தமது உணர்வுகளையும், தங்களையும் மாற்றிவிடும் பக்குவத்தைப்; பெற்றிருந்தது மறுபடியும் அன்று அவர்களுக்குப் புரிந்தது.
புலிகளின் தலைவர் பிரபாகரைச் சந்திப்பதற்கென்றே அந்த அதிகாரிகள் அங்கு வருகைதந்தார்கள். பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கிய இந்தியப்படை அதிகாரிகளை புலிகளின் உள்ளூர் தலைவர் ஒருவர் புலிகளின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களைச் சந்தித்த புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா, தலைவர் பிரபாகரன் அங்கு இல்லை என்பதைத் தெரிவித்து, இந்திய அதிகாரிகள் தலைவரைத் தேடிவந்ததன் காரணத்தை விசாரித்தார்.
இந்தியப் படை அதிகாரிகள் தாம் அங்கு வந்த நோக்கத்தை விளக்கினார்கள். புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப்படைகள் அவற்றைப் பலவந்தமாகக் களைய நேரிடும் என்பதையும், அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் புலிகள் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தார்கள். புலிகள் அமைப்பின் அரசியல் எதிர்காலம் இதனால் பாதிக்கப்பட்டுவிடும் என்று விளக்கிய அதிகாரிகள், இந்த முறுகல் நிலையைத் தவிர்த்து புலிகள் அரசியல் ரீதியாக எவ்வாறு நகர்வுகளை மேற்கொண்டு வெற்றிபெறலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அனைத்தையும் பொறுமையாகச் செவிமடுத்த மாத்தையா, முகத்தில் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், புலிகளின் நிலைப்பாட்டை இந்தியப்படை அதிகாரிகளிடம் உறுதியாகத் தெரிவித்தார்.
“”நாங்கள் சாகத் துணிந்து விட்டோம். மரியாதையை இழந்து வாழ்வதைவிட சாவை அணைத்துக்கொள்வது மேல்”” என்று மாத்தையா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுவதற்கு அங்கு எதுவுமே இருக்கவில்லை. இரண்டு தரப்பினரும் கைகுலுக்கி விடைபெற்றார்கள்.
புலிகளின் உணர்வுகளையும், அதில் காணப்பட்ட நியாயப்பாட்டையும் இந்தியப் படை அதிகாரிகளால் நன்றாகவே புரிந்துகொள்ளமுடிந்தது. தமது கொள்கையிலும், தமது மக்களின் விடுதலை தொடர்பாகவும், புலிகள் காண்பித்த உறுதியைக் கண்ட இந்திய அதிகாரிகளுக்கு, புலிகள் அமைப்பு தொடர்பாக பாரிய ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. அதிக மரியாதையும் ஏற்பட்டது. (பின்நாட்களில் இந்த இரண்டு அதிகாரிகளும் புலிகள் பற்றியும், அவர்களுடனான யுத்தம் பற்றியும் தமது சுயசரிதைகளிலும், செவ்விகளிலும் குறிப்பிடும் போது, தமது இந்த உணர்வுகளை பிரமிப்புடன் வெளிப்படுத்தியிருந்தார்கள்.)
ஆனால் ஒரு இராணுவ அதிகாரி என்ற ரீதியில் இந்திய அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடந்தேயாகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதனால், புலிகளுக்கு எதிரான அடுத்த நடவடிக்கைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற யோசனைகளுடன், மீண்டும் பலாலி விமானத் தளத்தை வந்தடைந்தார்கள்.
கேவலமான நடவடிக்கை:
அக்டோபர் 10ம் நாள், ஊரடங்கு உத்தரவுடனும், முன்னைய நாள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தியப் படையினரின் இரகசிய நடவடிக்கைகள் பற்றிய செய்திகளுடனும் உதயமானது.
அன்று காலை யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் மராத்திய காலட்படையின் முதலாவது பட்டாலியன் ( குசைளவ டீயவவயடழைn ழக ஆயாயசயவவய டுiபாவ ஐகெயவெசல ) நகர்வொன்றை மேற்கொள்ள ஆரம்பித்தது.
இந்தியாவின் ஜனநாயக முகமூடியை கிழித்த ஒரு நகர்வென்று இந்தியப் படையின் அந்த நகர்வைக் குறிப்பிடலாம்.
யாழ் குடாவில் இயங்கிவந்த பத்திரிகைக் காரியாலயங்களையும், அச்சகங்களையும் முடக்கிவிடும் நோக்கத்துடன் இந்தியப் படையின் அந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது.
யாழ்பாணத்தில் இயங்கிவந்த ஷஈழமுரசு|, ஷமுரசொலி|, ஷஈழநாடு| போன்ற பத்திரிகைக் கரியாலயங்களைச் சுற்றிவழைத்த இந்தியப் படையினர் அந்த பத்திரிகை அலுவலகங்களை குண்டு வைத்துத் தகர்த்தார்கள்.
உலகின் மிகச் சிறந்த ஜனநாயக் கட்டமைப் கொண்ட நாடு என்று பெருமையாகத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் இந்தியா, 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி யாழ்பாணத்தில் மேற்கொண்ட இந்த இழி செயலை, சரித்திரம் என்றுமே மன்னிக்க மாட்டாது.
எந்த ஒரு நாடுமே யுத்த காலங்களில் கூட நடுநிலையான பத்திரிகைகளின் மீது கைவைத்தது கிடையாது. அதுவும் பகிரங்கமாகச் சென்று பத்திரிகைக் காரியாலயங்களை குண்டுவைத்து தகர்ப்பதென்பது, எந்த ஒரு ஜனநாயகவாதியினாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு நடவடிக்கை என்றுதான் கூறவேண்டும். பத்திரிகை தர்மம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசிக்கொள்ளும் தார்மீக உரிமையை இந்தியா முற்றாகவே இழந்துவிட்ட ஒரு சந்தர்ப்பம் என்று அதனைக் குறிப்பிட முடியும்.
அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் “உதயன்” பத்திரிகை காரியாலயத்தையும் சுற்றிவழைத்து ”சீல்” வைத்தார்கள்.
பின்னர் கொக்குவில் பிரதேசத்தில் இயங்கிவந்த புலிகளின் ஷநிதர்சனம்| தொலைக்காட்சி நிலையத்தையும் கைப்பற்றி நிலை கொண்டார்கள்.
“யாழ் நிலவரம் தொடர்பாக நடுநிலையான செய்திகள் வெளிவர வேண்டும்” என்பதற்காகவே தாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, தமது இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா பின்னர் நியாயம் கற்பித்திருந்தது. ஆனால் உண்மையிலேயே, அடுத்த சில நாட்களில் யாழ் குடாவில் இந்தியப் படைகள் ஆட இருந்த கோர தாண்டவம் பற்றிய உண்மையான செய்திகள் வெளிவராமல் தடுக்கவே இந்தியா இப்படியான கீழத்தரமான செயல்களை மேற்கொண்டிருந்தது.
இதே தினத்தில் சென்னையில் புலிகளின் அலுவலகங்கள் சிலவற்றைச் சுற்றி வழைத்த இந்தியப் பொலிஸார், புலிகளுக்கு சொந்தமான ஆறு தொலைத் தொடர்பு கருவிகளையும் கைப்பற்றி இருந்தார்கள்.
இதே தினத்தில் யாழ்பாணத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் சில முகாம்களும் இந்தியப்படையினரால் சுற்றி வழைக்கப்பட்டன. சில விடுதலைப் புலி உறுப்பினர்களும், அப்பாவித் தமிழ் இளைஞர்களும் இந்தியப்படையினரால் கைதுசெய்யப்பட்டார்கள். இதுபற்றி அன்றைய ஷஆல் இந்திய ரேடியோ| மாலைச் செய்தியில் ஷஷ131 விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்தியப்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 27 ஆயுதங்களையும் இந்தியப்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும்|| தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராஜீவ் மேற்கொண்ட யுத்தப் பிரகடனம்:
1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை இந்தியா உத்தியோகபூவமாகப் பிரகடனப்படுத்தியது.
இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்படும் இந்த முடிவை மேற்கொண்டதில் முழுப்பங்கும் அன்றை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையே சாரும்.
இந்தியாவின் படைவீரர்களுக்கும், அதன் படைத்துறை அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏன் இந்தியாவின் ஒவ்வொரு பிரஜைக்கும் கூட வரலாற்றில் பாரிய ஒரு தலை குனிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு முடிவாக, அன்று ராஜீவ் காந்தி எடுத்த அந்த முடிவு அமைந்திருந்தது.
இந்தியாவை முழுமையாகவே நம்பியிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியத் தலைவர் செய்திருந்த துரோகத்தின் விழைவு எத்தனை வேதனை நிறைந்ததும், கொடூரமுமானதும் என்பதை, அவர் அப்பொழுது உணர்ந்து கொள்ளவேயில்லை.
ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் இரத்தால் எழுதப்பட்ட அவலங்களின் அந்த அத்தியாயங்களை அடுத்த வாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.
தமிழ் நாடு முதலமைச்சருக்கு பிரபாகரன் எழுதிய கடிதம் (அவலங்களின் அத்தியாயங்கள்- பாகம்-2) –நிராஜ் டேவிட்
இந்தியாவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பமானது.
அந்த யுத்தத்தை இந்தியாவே ஆரம்பித்தும் வைத்தது.
இந்தியா ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை ஆரம்பித்துவிட்டது என்று தெரிவித்து, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார்.
அக்டோபர் 10 இல், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பித்திருந்த மறு நாள், அதாவது 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்;, இந்தியா தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை எவ்வாறு ஆரம்பித்திருந்தது என்று விபரித்திருந்தார்.
பிரபாகரன் அவர்கள் அந்தக் கடிதத்தில் இந்தியாவின் நகர்வுகள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: ’எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்தியப் பாதுகாப்பு மந்திரி திரு. பந்த், இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் nஐனரல் சுந்தர்ஐp ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா ஜனாதிபதி nஐயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்குப் பொது மன்னிப்பு இல்லையென்றும் nஐயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியச் சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது. 1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகை (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர். அதன்பின் நன்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம்.
போர் மூண்டது.
இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம். நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காகப் போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிடப் போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்”” இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் எம்.ஜி.ஆருக்கு அனுப்பிவைத்த அவசரக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
ஈழ தேசம் அதிர்ச்சிக்குள்ளானது.
இதேபோன்று, இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, சென்னையில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை ஒரு புத்தகத்தை வெளியிட்டது.
YOU TOO INDIA? (இந்தியா.. நீ கூடவா?) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்திலும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியா எப்படி ஆரம்பித்திருந்தது என்பது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது:
ஷஷவிடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களும் மறைந்த தமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கையில், இந்திய அரசோ, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பாரிய அழித்தொழிப்பு யுத்தத்தை மேற்கொள்ளுவதற்கு தனது அமைதிகாக்கும் படையை ஏவியிருந்தது. ஷஇந்தியப் படையினருக்கு எதிரான யுத்தம்| என்பது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தமது கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா அவர்களது உற்ற நன்பன். அவர்களது ஒரே பாதுகாவலன். ஈழ மண்ணில் இந்தியப் படைகளின் பிரசன்னம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அன்பினதும், சமாதானத்தினதும் சின்னமாகவே நோக்கப்பட்டு வந்தது.
அதேவேளை, விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையிலும் இந்தியாவை அவர்களது ஊக்கு சக்தியாகவே அவர்கள் நோக்கி வந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கான பாதுகாப்பையும், ஆயுத உதவிகளையும் வழங்கக்கூடிய ஒரு நட்பு சக்தியாகவே அவர்கள் இந்தியாவை நோக்கி வந்தார்கள்.
இப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா யுத்தம் புரிய ஆரம்பித்த போது ஈழ தேசமே அதிர்ச்சிக்குள்ளானது.||
இவ்வாறு அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திபிந்தர் சிங் தீட்டிய திட்டம்
விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளின் இறுதி திட்டங்களை இந்தியப் படைகளின் தென் பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். பலாலி விமானப்படைத் தளத்தில், இந்தியப்படை உயரதிகாரிகள் மத்தியில் இந்தியப்படைகளின் நகர்வுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தமது திட்டங்களுக்கு அவர் இறுதி வடிவம் வழங்கிக்கொண்டிருந்தார்.
கண்களில் ஆர்வம் பொங்கவும், வெற்றி உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியிலும் இந்தியப்படை அதிகாரிகள் தளபதியின் திட்டங்களைச் செவிமடுத்தபடி நின்றார்கள்.
புலிகளின் தலைவரையும், யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றுவதற்கு இந்தியப் படையணிகள் தயார் நிலையில் நின்றன.
யாழ் நடவடிக்கைகளுக்கான பொறுப்புக்கள், இந்திய இராணுவத்தின் 54வது டிவிஷன் படையணிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
கள நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவத்தின் பின்வரும் படையணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன:
18வது காலாட் படைப்பிரிவு.
41வது காலாட் படைப்பிரிவு.
72வது காலாட் படைப்பிரிவு.
91வது காலாட் படைப்பிரிவு.
115வது காலாட் படைப்பிரிவு.
65வது கவச வாகனப் பிரிவு.
831வது இலகு மோட்டார் படைப்பிரிவு.
25வது படைப்பிரிவு
10வது பரா கொமாண்டோ படைப்பிரிவு என்பன புலிகளுடனான யுத்தத்திற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றிற்கு மேலதிகமாக, 13வது சீக்கிய கொமாண்டோ அணியினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். குவிக்கப்பட்டிருந்த இந்திய ஜவான்கள் முன்நிலையில் தமது தாக்குதல் திட்டத்தை விபரித்த திபீந்தர் சிங், ஷஇரண்டு நாட்களுக்குள் இந்தியப் படை தமது பிரதான நோக்கத்தை நிறைவு செய்துவிட வேண்டும்|| என்று தெரிவித்தார்.
அங்கு திரண்டிருந்த இந்தியப்படை வீரர்களும், புலிகளுடனான தமது யுத்தம் இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்துவிடும் என்று உறுதியாகவே நம்பினார்கள். ஷஜெய்ஹிந்| என்று வெற்றிக் கோஷமிட்டார்கள். அவர்களின் கோஷம் வானை எட்டும்படியாக இருந்தது.
ஆனால், இவ்வாறு வெற்றிக் கோஷம் இட்ட இந்திய ஜவான்களில்; பலர் அடுத்த இரண்டு நாட்களில் அநியாயமாக தமது உயிர்களை இழக்க இருந்தது, பாவம் அவர்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.
தமது தளபதி கூறியது போன்று இரண்டு நாட்களில் மட்டுமல்ல இரண்டு வருடங்கள் கடந்தும் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்ற உண்மையும் அவர்களுக்கு அப்பொழுது புரிந்திருக்கவில்லை.
அந்த உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்டபோது காலம் கடந்துவிட்டிருந்தது.
தலைவரைக் கைதுசெய்யும் திட்டம்:
இந்தியப் படை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்கென அவர்கள் வகுத்திருந்த திட்டம் யதார்த்தமானது. மிகுந்த புத்திசாலித்தனமானதுடன், நடைமுறைச் சாத்தியம் மிக்கதாகவும் அமைந்திருந்தது. அனைத்து இந்தியப்படை அதிகாரிகளும் இந்த திட்டத்தை இட்டுத் திருப்தி தெரிவித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ளவென இந்திய இராணுவத் தலைமை வகுத்திருந்த திட்டத்தை ஆராய்ந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு, அத்திட்டத்தில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை. எந்தவிதச் சந்தேகமும் இன்றி இந்திய இராணுவ நடவடிக்கை வெற்றி அளிக்கும் என்றே அவர்கள் நம்பினார்கள்.
முதலில் திடீர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைது செய்துவிடுவது, அல்லது அவரை கொலை செய்துவிடுவதே இந்தியப்படையினரது பிரதான திட்டமாக இருந்தது.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கொக்குவில் பிரதேசத்தில் பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவரது இருப்பிடத்தின் மீது திடீர் முற்றுகை ஒன்றை மேற்கொண்டு தலைவரைக் கைப்பற்றி, மற்றைய போராளிகளிடம் இருந்து அவரை அகற்றிவிட்டால், புலிகள் அமைப்பே முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதை இந்தியப்படை அதிகாரிகள் திடமாக நம்பினார்கள். அத்தோடு, புலிகளின் தலைமைக் காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி தலைமையகத்தையும், புலிகளின் தலைவரையும் கைப்பற்றிவிடும் பட்சத்தில், மற்றைய போராளிகளின் மனஉறுதி குலைந்து, அவர்களின் போரிடும் ஆற்றல் குன்றிவிடும் என்று கணித்திருந்தார்கள்.
முதலாவது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பின்னர் புலிகள் அமைப்பை மிக இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே அவர்கள் நினைத்தார்கள்.
இந்திய இராணுவத்தில் அதிஉச்ச பயிற்சியைப் பெற்ற பராக் கொமாண்டோக்கள் 103 பேரை, யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் திடீரென்று தரையிறக்கி, புலிகளின் தலைவர் தங்கியிருந்த பிரம்படி வீட்டை முற்றுகையிட்டு தலைவரைக் கைது செய்வதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது. அதேவேளை, சீக்கிய மெதுரகக் காலாட்படையினர் 100 பேர், பரா துருப்பினர் தரையிறங்கிய பிரதேசத்திற்கு விரைந்து அந்தப் பகுதியைத் தளப்பிரதேசமாக தக்கவைத்திருப்பது அவர்கள் வகுத்திருந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக இருந்தது.
புலிகளின் தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும்; கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரம்படி வீதி இல்லத்தை, இந்தியப்படையினர் ஏற்கனவே மோப்பம் பிடித்திருந்தார்கள். இந்தியப்படை உயரதிகாரிகள் அந்த இடத்தில் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்கள். அந்த இருப்பிடம் பற்றிய வரைபடத் தகவல்களை மாற்றுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெற்றிருந்தார்கள்.
போதாததற்கு, கடந்த 9ம் திகதி நள்ளிரவு கால்நடையாக ஒரு நகர்வினை மேற்கொண்டிருந்த சீக்கிய காலட்படையினரும், பரா கொமாண்டோப் படைப்பிரிவில் சிலரும், திருநெல்வேலியில் இருந்து செல்லும் பாதை வழியாக நகர்வினை மேற்கொண்டு, பின்னர் பிரம்படி வீதியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரயில் பாதை வழியாக திரும்பிச் சென்றிருந்தார்கள். பொதுமக்களது வளவுகளுக்குள்ளாகவும் இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரம்படி வீதியைப் பரிட்சயப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நகர்வென்றே இந்த இரகசிய நகர்வு பற்றிக் கூறப்படுகின்றது. அதேவேளை, சந்தர்ப்பம் கிடைத்தால் புலிகளின் தலைவரை கைப்பற்றிவிடும் நகர்வாகவும் அந்த 9ம் திகதிய நகர்வு அமைந்திருந்தது.
இவ்வாறு பிரம்படி சுற்றாடல் பற்றிய அறிவினைக் கொண்டிருந்த இந்தியப்படை பரா கொமாண்டோக்கள் முன்நகர, தலைவரது இல்லத்தை நெருங்கி நடவடிக்கை மேற்கொள்ளுவதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது.
அடிப்படைத் திட்டங்கள்:
அதேவேளை, இந்தப் பிரதான திட்டத்திற்குச் சமாந்தரமாக, மேலும் ஐந்து அடிப்படைத் திட்டங்களையும் இந்தியப்படை உயரதிகாரிகள் வகுத்திருந்தார்கள்.
1. ஒரே நேரத்தில் தரை, கடல், மற்றும் ஆகாய மார்;க்கமாக தரையிறக்கங்களை மேற்கொண்டு யாழ் குடாவை மிக விரைவாகக் கைப்பற்றிவிடுவது.
2. குறைந்தது ஒரு வினியோக பாதையையாவது திறந்து, யாழ் நகருக்குள் நகர்வினை மேற்கொள்ளும் துருப்பினருக்கு வினியோகங்களை மேற்கொள்ளுவது.
3. பாதுகாப்பான வினியோகப் பாதையை அமைத்துக்கொள்ளும்வரை, யாழ் நகருக்குள் நுழைந்துள்ள படையினருக்கு வான் வழியாக வழங்கல்களை மேற்கொள்ளுவது.
4. நகருக்குள் நுளையும் துருப்பினருக்கு உதவும் முகமாக, அவர்களால் குறிப்பிடப்படும் இடங்களுக்கு, விமானங்களில் இருந்தும், கப்பல்களில் இருந்தும், ஆட்டிலறிகள் மூலமும் சூட்டாதரவை வழங்குவது.
5. யாழ் குடாவிற்கான அனைத்து கடல்வழிப் பாதைகளையும் முற்றுகையிடுவது.
இவையே, யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்காக இந்தியப்படையினர் வகுத்திருந்த அடிப்படைத் திட்டங்களாக இருந்தன.
ஈழத் தமிழர்களின் ஷகலாச்சாரத் தலைநகர்| என்று கூறப்படுகின்ற யாழ்பாணத்தைக் கைப்பற்றி நிலைகொண்டுவிட்டால், மற்றைய பிரதேசங்களை இலகுவாக கைப்பற்றிவிடமுடியும் என்பது இந்தியப்படை அதிகாரிகளினது அசைக்கமுடியாத நம்பிக்கை.
உண்மையிலேயே இது நல்லதொரு திட்டமும் கூட.
இந்தியப் படையினரது ஆட்பலம், ஆயுத மேலான்மை, போர் அணுபவம், கேந்திர அனுகூலம் போன்றனவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான ஒரு திட்டம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
கவனத்தில் எடுக்கமறந்த விடயம்:
உண்மையிலேயே புலிகளை ஒழிக்கவென வகுக்கப்பட்டிருந்த திட்டம் சிறந்த ஒரு திட்டம் என்றே தற்பொழுதும் போரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். எந்த ஒரு போரியல் வல்லுனராலும், அதைவிடச் சிறந்த ஒரு நகர்வுத் திட்டத்தை வகுத்திருக்கமுடியாது என்றே அவர்கள் தமது ஆய்வுகளின் போது தெரிவிக்கின்றார்கள்.
ஆனாலும், புலிகளை மடக்கவென மிகவும் கவனமாகவும், நுணுக்கத்துடனும் அந்தத் தாக்குதல் திட்டத்தை வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், அந்தத் திட்டத்தில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்காது விட்டிருந்ததுதான் இந்தியப் படையினரின் மிகப் பெரிய தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தது.
அதாவது, தமது பலம் பற்றியும், தமது நகர்வுகள் பற்றியும் சிந்தித்து திட்டம் வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், தாம் இம்முறை மோத இருப்பது ஷவிடுதலைப் புலிகளுடன்| என்ற விடயத்தை மறந்துவிட்டிருந்ததுதான் அவர்களது திட்டம் படுதோல்வியடையக் காரணமாக இருந்தது.
தமது உயிரைத் துச்சமென மதித்து களமாடும் வழக்கத்தைக் கொண்ட ஒரு அமைப்பை களமுனையில் தாம் சந்திக்கவேண்டி வரும் என்ற உண்மையை இந்தியப்படை அதிகாரிகள் உணர்ந்துகொண்டிருக்கவில்லை. ஒரு நிதர்சனத் தலைவனையும், அவனால் வளர்த்தெடுக்கப்பட்டு, வழிநடத்தப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் தாம் களத்தில் சந்திக்கவேண்டி வரும் என்பதையும் இந்தியப்படை அதிகாரிகள் மறந்துவிட்டிருந்தார்கள். தாம் வகுந்தெடுத்த எதிரிக்குப் பக்கபலமாக, அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒரு மக்கள் கூட்டமும் களமிறங்கிவிடும் என்ற யதார்த்தத்தையும் இந்தியப்படையினர் உணர்ந்துகொள்ளத் தலைப்படவில்லை.
இவ்வாறு சில அடிப்படைகளைக் கவனத்தில் கொள்ளாது, புலிகளுக்கு எதிராக திட்டங்களை இந்தியப்படையினர் வகுத்திருந்த காரணத்தினாலே, ஈழ மண்ணில்; பல வரலாற்றுத் தோல்விகளையும், அவலங்களையும் அவர்கள் தொடர்ச்சியாகச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.
அந்த அவலங்களின் அத்தியாயங்களை அடுத்து வரும் வாரங்களில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
தொடரும்…
அக்டோபர் மாதம் 16ம் திகதி உரும்பிராய் பகுதிக்குள் இந்தியப் படையினர் நுழைந்ததைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட மனித வேட்டைகள் பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்;.
உரும்பிராய் பிரதேசத்தில் இந்தியப் படையினர் சகட்டு மேனிக்கு சுட்டுக்கொண்டும் குண்டு வீசிக்கொண்டும் தமது நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் அங்கிருந்த மக்கள் பயத்தினால் வீடுகளினுள்ளும் வேறு மறைவிடங்களிலும் மறைந்திருக்கவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
அவ்வாறு மறைந்திருந்த பொதுமக்களால் சில விடயங்களை அவதானிக்கவும் முடிந்தது.
உரும்பிராய் பிரதேசத்தைச் சுற்றிவழைத்திருந்த இந்தியப் படையினர் சிங்களப் பாஷையில் பேசிய அதிசயத்தை பல சந்hர்ப்பங்களில் அவர்களால் கேட்கமுடிந்தது.
பொது மக்களுக்கோ ஆச்சாரியம். அவர்களால் தங்கள் காதுகளையே நம்பமுடியவில்லை.
இந்திய இராணுவம் சிங்களம் பேசுவதா? ~ஏதாவது கனவு கினவு காண்கின்றோமா| -என்று சந்தேகித்து பலர் தங்களைத் தாங்களே கிள்ளியும் பார்த்துக்கொண்டார்கள்.
பயத்தில் ஹிந்தியை சிங்களம் என்று தவறாகப் புரிந்துகொண்டுவிட்டோமோ என்று கூட அவர்கள் சந்தேகப்பட்டார்கள். படிப்படியாகவே உண்மை நிலையை அவர்களால் விளங்கிக்கொள்ள முடிந்தது.
இந்தியப் படையினருடன் ஸ்ரீலங்காப் படையினரும் இணைந்து மனித வேட்டைக்கு வந்திருந்ததை அவர்களால் உணர முடிந்தது.
இந்தியப் படையனருடன் இணைந்து ஸ்ரீலங்காப் படைவீரர்களும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதை யாழ் குடாவாசிகள் பலர் உறுதிப்படுத்தியிருந்தார்கள். ~முறிந்த பனை| என்ற தொகுப்பு முதற்கொண்டு இந்தியப்படையினரின் இராணு நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் பற்றி வெளியிடப்பட்ட பல புத்தகங்களிலும் இந்தியப் படையினருடன் ஸ்ரீலங்காப் படையினரும் இணைந்து செயற்பட்ட உண்மை உறுதிப்படுத்துப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்காப் படைகளை துணைக்கழைத்த இந்தியா
புலிகளுடனான சண்டைகள் இந்த அளவிற்கு மோசமானதும் கடினமானதுமாக இருக்கும் என்பதை ஈழ மண்ணில் வந்திறங்கிய இந்தியப் படையினர் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. புலிகள் மிக இலகுவாக தமது வழிக்கு வந்துவிடுவார்கள்@ அல்லது புலிகள் இந்தியாவை மீறிச் செயற்படமாட்டார்கள் என்றே அவர்கள் ஆரம்பத்தில் நினைத்திருந்தார்கள்.
ஒருவேளை புலிகளுடன் மோதவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் கூட ஓரிரு நாட்களுக்குள் புலிகளை முற்றாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே கணிப்பிட்டும் இருந்தார்கள்.
புலிகள் யுத்த முனையில் மிகவும் பலமான எதிர்ப்புக்களைக் காண்பித்து இந்தியப் படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி இந்தியப் படையினரை எதுவுமே செய்யமுடியாத ஒரு வகை கையறு நிலைக்குள் கொண்டுவந்திருந்ததைத் தொடர்ந்து யாழ்பாணத்தில் தங்கியிருந்த ஸ்ரீலங்காப் படையினரின் உதவியையும் பெறுவதற்கு இந்தியப்படைத்துறைத் தலைமை தீர்மாணித்தது.
இந்திய இராணுவத் தலைமையின் ஆலோசனையின்படி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். இடம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். சந்தர்ப்பம் பார்த்திருந்த ஸ்ரீலங்கா அரசாங்கம் உடனடியாகவே இதற்குச் சம்மதித்தது. ஸ்ரீலங்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அத்துலத் முதலி யாழ் குடாவில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினருக்கு அவசரச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். புலிகளுக்கு எதிரான இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அந்த அவசரச் செய்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி ஸ்ரீலங்காப் படைகளின் ஒத்துழைப்புக்கள் மிகவும் இரகசியமாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்காக ஸ்ரீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த ~ஒப்பரரேசன் லிபரேசன்| இராணுவ நடவடிக்கைகளுக்கு என்று தயார்படுத்தப்பட்டிருந்த ஸ்ரீலங்காப் படையணிகள் இந்தியப் படையினருடன் இணைந்து களம் இறக்கப்பட்டன.
இந்தியப் படையினரின் யாழ் நகர் நோக்கிய நகர்வுகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் வழிகாட்டிகளாகவும் துனைப் படையினராகவும் பணியாற்றி ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஒப்பரேஷன் லிபரேசன் படைநகர்வுகளுக்கு என்று தயாரிக்கப்பட்டிருந்த யாழ் வீதிகள் தொடர்பான வரைபடங்களையும் இந்தியப் படையினரின் நகர்வுகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் கொடுத்துதவினார்கள்.
யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினர் யாழ் குடாவிலுள்ள குடியிருப்புக்களை நோக்கி ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டும் ஸ்ரீலங்கா விமானப் படையினரின் ஹெலிக்காப்டர்கள் புலிகளின் இலக்குகள் என்று சந்தேகிக்கப்பட்ட இடங்கள் மீது குண்டு வீச்சுக்கள் நடாத்தியும் இந்தியப் படையினரின் ~ஒப்ரேசன் பவான்| இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள்.
சாட்சிகள்:
இலங்கை வானொலியில் மிகவும் பிரபல்யமான ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரேடியோ நடராஜா. அவர் அப்பொழுது யாழ்பாணத்தில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். மற்றத் தமிழ் மக்கள் போலவே அவரும் இந்தியா மீது மிகுந்த அபிமாணம் கொண்டிருந்த ஒரு நபர். இந்தியப் படையினர் நகர்வினை மேற்கொண்ட போது அவர்களுடன் பேசிச் சமாழித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தனது வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்த மற்றவர்களிடமும் இதனைக் கூறி அவர்களையும் அசுவாசப்படுத்திக்கொண்டிருந்தார்.
இந்தியப் படையினர் அவரது வீட்டினுள் நுழைந்தபோது இந்தியப் படையினருடன் பேசி விளங்கப்படுத்துவதற்காக வாசலுக்குச் சென்றார். இந்தியப் படையினர் அவரை விசாரித்தார்கள். தனது மகனும் மனைவியும் தன்னுடன் இருப்பதாகத் தெரிவித்த அவர் தனது மகனையும் மனைவியையும் வாசலுக்கு வரும்படி அழைத்தார். வீட்டினுள் இருந்த மகன் வெளியே வருவதற்காக எழுந்து நின்று சட்டை அணிந்துகொள்ள முற்படுவதை ஜன்னல் வழியாகக் கண்ட ஒரு சிப்பாய் தனது துப்பாக்கி முனையை ஜன்னலினுள்ளே செலுத்தி சுடத் தொடங்கினான். நடராஜாவின் மகன் தரையில் விழுந்து படுத்துவிட்டதால் துப்பாக்கிச் சன்னங்கள் எதுவும் அவன் மீது படவில்லை.
அதேவேளை வாசலில் இந்தியப் படையினருடன் பேசிக்கொண்டிருந்த நடராஜா மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அவர் பிணமாக வீழ்ந்தார். வாசலிலும் வீட்டினுள்ளேயும் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதையும் தனது கணவர் மகன் இருவரும் தரையில் வீழ்ந்ததையும் கண்ட நடராஜாவின் மனைவி இருவருமே கொல்லப்பட்டுவிட்டதாக நினைத்து பயத்தில் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி ஓட ஆரம்பித்தார். அவர் பின்பக்கம் வேலி வழியாக தப்பி ஓடவதைக்கண்ட ஒரு சிப்பாய் கத்தினான்: ,பஸ்சங் கியா, (பின்னால் ஓடுகிறார்) என்று அவன் சிங்களத்தில் கத்தியதுதான் இந்தியப் படையினருடன் சிங்களப் படையினரும் இணைந்து வந்திருந்தார்கள் என்பதற்கான முதல் அறிகுறி.
அமெரிக்காவில் இருந்து சாந்தி என்பவர் தனது மகனுடன் விடுமுறைக்கு வந்திருந்தார். இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் யாழ்ப்பாணம் வந்து உரும்பிராயில் தங்கியிருந்தார். 16ம் திகதி அப்பிரதேசத்தில் தொடர்ந்து முழங்கிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தினால் அச்சமுற்ற அவர்கள் வீட்டினுள் பதுங்கியபடி அந்த இரவைக் கழித்தார்கள். மறு நாள் காலை துப்பாக்கிச் சூட்டு ஒலிகள் சற்று ஓய்ந்ததைத் தொடர்ந்து நிலமையைப் பார்ப்பதற்காக அவர் கதவைத்திறந்து கொண்டு வெளியே செல்ல நினைத்தார்.
கதவை மெதுவாகத் திறந்து வெளியே செல்ல எத்தனித்த போது அவரை முந்திக்கொண்ட அவரது வளர்ப்பு நாய் ஓரளவு திறந்த கதவு வழியாக வெளியே பாய்ந்தது. குரைத்தபடி சென்ற நாயை நோக்கி பல முனைகளில் இருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. ஓலத்துடன் நாய் சுருண்டு விழுந்தது. அப்பொழுதுதான் அவரது வீட்டின் அருகே ஒரு கவச வாகனம் நின்றுகொண்டிருப்பதை சாந்தி அவதானித்தார். உடனே வீட்டின் கதவை இறுக அடைத்துவிட்டு தனது மகனையும் இழுத்துக்கொண்டு மீண்டும் வீட்டினுள் ஒரு பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக்கொண்டார். அந்தச் சமயத்தில் வெளியில் சில சிப்பாய்கள் சிங்களத்தில் பேசியது அவரது காதில் விழுந்தது: மே பரன கெதர. கடாண்ட ஹறி அமாறு. மோட்டார் எக்க உஸ்ஸாண்ட|| (இது பழைய வீடு. உடைப்பது கஷ்டம். ஒரு மோட்டார் அடி) ஆனால் தெய்வாதீனமாக அந்த வீட்டிற்கு எதுவும் நடைபெறவில்லை.
இதேபோன்று யாழ் குடாவில் இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் ஒத்துழைப்பு வழங்கியதுடன் நேரடியாக பங்குகொண்டும் இருந்ததற்காக பல ஆதாரங்கள் பின்னர் வெளியாகி இருந்தன.
தமது இராணுவ நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்காப் படையினர் உதவியது பற்றி இந்தியப் படை அதிகாரிகள் எழுதியிருந்த பல புத்தகங்களிலும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு இந்தியப் படையினர் ஸ்ரீலங்காப் இராணுவம் என்ற பேயிடமே உதவி பெற்றிருந்ததானது ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா இழைத்த மிகப் பெரிய துரோகம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது.
வெட்கமடைந்த இந்தியப் படையினர்:
இந்தியப் படையினர் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட மனித வேட்டைகள் எல்லை அற்று தொடர்ந்தவண்ணமே இருந்தன.
ஸ்ரீலங்காப் படைகளைச் சேர்ந்த கொலையாளிகளையும் துணைக்கழைத்துக்கொண்டு யாழ்குடாவெங்கும் மனித வேட்டையில் இறங்கியிருந்த இந்தியப் படையினர் பெண்கள் குழந்தைகள் வயோதிபர்கள் என்று பாராமல் தமிழ்கள் என்று இனங்கண்டுகொண்ட அனைவரையும் படுகொலை புரிந்தபடி முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினரைத் தடுத்து நிறுத்துவதிலும் போரிட்டுக் அழிப்பதிலும்; துரத்தி அடிப்பதிலும் விடுதலைப் புலிகள் தீரம் காண்பித்துக்கொண்டிருந்தார்கள். பல முனைகளிலும் முன்னேறிய ஆயிரக் கணக்கான இந்தியப் படையினரை ஒரு சில போராளிகளைக் கொண்ட புலிகள் அணிகள் தோல்வியடையச் செய்த சந்தர்ப்பங்கள் பல இருந்தன.
ஒரு பனை மரத்தில் பரன் அமைத்து பதுங்கியிருந்த ஒரு விடுதலைப் புலிப் போராளியே இந்தியப் படையின் பாரிய அணி ஒன்றை நாட்கணக்காக தடுத்து நிறுத்தி சாதனை புரிந்த சம்பவங்களும் உள்ளன.
புலிகள் எங்கிருந்து தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள் என்று இந்தியப் படையினருக்கு தெரியாது. பனைத் தோப்பில் இருந்து இடைக்கிடையே துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கும். முன்னேற முற்பட்ட ஓரிரு ஜவான்களும் சரியாக குறிபார்த்து சுடப்பட்டு; வீழ்த்தப்பட்டுவிடுவதால் மற்றய இந்தியப் படைவீரர்கள் தொடர்ந்து முன்னேறப் பயந்து நிலை எடுத்துப் பதுங்கிவிடுவார்கள்.
பனங்காணியை நோக்கி சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளுவார்கள். ஓரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இவ்வாறு இந்த விளையாட்டு தொடரும். பனை மரத்தின் மீது பரன் அமைத்து தங்கியிருக்கும் புலி வீரரிடம் துப்பாக்கிச் சன்னம் தீர்ந்து அவர் அங்கிருந்து நகர்ந்த பின்னர் அல்லது அவர் வீர மரணம் அடைந்த பின்னர்தான் இந்தியப் படையினருக்கு தாம் ஏமாந்திருந்த விடயம் தெரியவரும். தமது இயலாமையை நினைத்து வெட்கப்படுவார்கள்.
அதேவேளை இதுபோன்ற சம்பவங்களை மனதில் வைத்துக்கொண்டு வியூகங்களை மாற்றி அமைத்து இந்தியப் படையினர் மண் கௌவ்வியதும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் பனங்காணிகளில் இருந்து புறப்படும் ஓரிரு துப்பாக்கி வேட்டுக்களைப் பார்த்துவிட்டு அங்கு ஒரு புலிப் போராளி மட்டும்தான் இருப்பார் என்று நினைத்து அள்ளி அடித்துக்கொண்டு பனங்காணிக்குள் நுழையும் இந்தியப் படையினர் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளால் சுற்றிவழைக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பலவும் உள்ளன.
புலிகளின் தாக்குதல்கள் எந்த வடிவில் எங்கிருந்து எப்பொழுது மேற்கொள்ளப்படும் என்று இந்தியப் படையினருக்கு புரியாமல் இருந்தது. சந்தர்ப்பவசமாக அவற்றை அவர்கள் எதிர்கொண்ட போது வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டிருந்தார்கள்.
தாம் மிகவும் இலகுவாக நினைத்து சண்டையை ஆரம்பித்திருந்த விடுதலைப் புலிகள் ஒன்றும் சாமான்யமானவர்கள் அல்ல. உயர்ந்த இலட்சியத்துடன் பயிற்றப்பட்டு உறுதியுடன் வளர்க்கப்பட்டு உயிரைக் கூட மதிக்காது போராடும் வல்லவர்களை தாம் சமாளிக்கவேண்டும் என்பதை இந்தியப் படையினர் படிப்படியாக உணர ஆரம்பித்தார்கள்.
தாங்கிகளை நம்பிய இந்தியப் படை:
இந்தியப் படைத் தலைமைக்கு ஒரு விடயத்தில் நல்ல தெளிவு இருந்தது.
அதாவது விடுதலைப் புலிகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். அதிகளவு போராளிகள் அவர்களிடம் கிடையாது. புலிகள் அமைப்பில் சுமார் 1500 பேர் அளவில்தான் இருப்பார்கள். அதுவும் அவர்கள் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை யாழ்ப்பாணம் மன்னார் என்று பல இடங்களிலும் பரந்துதான்; நிலைகொண்டிருப்;பார்கள். யாழ் குடா முழுவதுமாக பல முனைகளில் முன்னேறிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியப் படையினரை ஒரு சில போராளிகளால் சமாளிக்கவே முடியாது என்பதில் இந்தியப் படை உயரதிகாரிகள் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.
அத்தோடு இந்தியப் படையினர் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்திருந்த யுத்த தாங்கிகளும் புலிகளுக்கு எதிரான சண்டைகளில் பாரிய வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
ஆனால் பல சந்தர்ப்பங்களில் புலிகள் வகுத்திருந்த வியூகங்கள் அவர்கள் மேற்கொண்ட புதிய போர் உத்திகள் இந்தியப் படை அதிகாரிகளின் எண்ணங்களில் மண்ணை அள்ளிப் போட்டிருந்தன.
பல முனைகளில் முன்னேறிய இந்தியப் படை அணிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இடைமறித்து தாக்கப்படுவார்கள். சண்டைகள் மிகவும் உக்கிரமாக நடைபெறும். இந்தியப் படையினர் முன்னேறவே முடியாதபடிக்கு தாக்குதல்கள் மிகவும் தீவிரமாக இருக்கும். ~~சரி புலிகள் இந்த இடத்தில் மிகவும் பலமாக இருக்கின்றார்கள் தொடர்ந்து முன்னேறுவது அவ்வளவு உசிதம் அல்ல. திரும்புவதே புத்திசாலித்தனம்|| என்று நினைத்துக்கொண்டிருக்கையில் புலிகள் தரப்பில் இருந்து காண்பிக்கப்பட்டுக்கொணடிருந்த எதிர்ப்புக்கள் திடீரென்று நின்றுவிடும். புலிகள் பக்கமிருந்து ஒரு வேட்டுத்தானும் தீர்க்கப்படமாட்டாது. புலிகள் முற்றாகவே தமது தாக்குதல்களை நிறுத்திவிடுவார்கள்.
அடுத்து என்ன செய்வது என்று இந்தியப் படையினர் தடுமாறுவார்கள். தொடர்ந்து முன்னேறுவதா? அல்லது திரும்புவதா? தீர்மாணம் எடுக்கமுடியாது படை அதிகாரிகள் தடுமாறுவார்கள்.
புலிகள் பலமுடன் இருக்கும் பிரதேசத்தினுள் தொடர்ந்து முன்னேறினால் தாம் சுற்றிவழைக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயம் அவர்களை பிடித்துக்கொள்ளும். புலிகள் தரப்பில் இருந்து தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் திரும்பவும் மனமில்லை. தீர்மாணம் எடுக்கமுடியாமல் நாள் முழுவதும் யோசிப்பார்கள். யுத்த தாங்கிகளை முன்நிறுத்தி படை முன்னேற்றத்திற்கு வியூகம் வகுப்பார்கள். இந்தியப் படையினருக்கு அப்பொழுது உதவி புரிய ஆரம்பித்திருந்த மாற்றுத் தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்களை கிராமங்களினுள் அனுப்பி தகவல்சேகரித்தபோது அவர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஏற்படும்.
எதிர்முனையில் ஒரு புலி உறுப்பினர் கூட இல்லை என்று திரும்பிவந்த தமிழ் குழு உறுப்பினர்கள் கூறுவார்கள்.
ஆரம்பத்தில் அந்த தகவலையும் சந்தேகித்து பின்னர் ஒருவாறு உண்மையை உறுதிசெய்துகொண்டு முன்னேற நினைக்கும்போது புலிகள் இந்தியப் படையினருக்கு பின்புறமாக தாக்குதல்களை ஆரம்பித்திருப்பார்கள். தாங்கிகளை முன்நிறுத்தி முன்னேற நினைத்திருக்கையில் புலிகள் திடீரென்று பின்புறம் இருந்து தாக்க ஆரம்பித்ததால் இந்தியப் படையினர் நிலை குலைந்து போய்விடுவார்கள்.
புலிகளுக்கும் இந்தியப் படையினரின் யுத்த தாங்கிகளுக்கும் இடையில் இப்பொழுது இந்தியப் படை ஜவான்கள். யுத்த தாங்கிகளை பயன்படுத்த முடியாது. இந்தியப் படையினர் தமது பழமைவாய்ந்த எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளை இயக்கும் முன்பதாகவே அவர்களில் பலர் புலிகளின் நவீன ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி வீழ்ந்துவிடுவார்கள்.
இவ்வாறு இந்தியப் படையினரின் அதிக எண்ணிக்கையிலான படைவீரர்கள் மற்றும் அவர்கள் முன்நிலைப்படுத்தி பயன்படுத்திய யுத்த தாங்கிகள் என்பன கூட பல சந்தர்ப்பங்களிலும் செயலற்றவையாகவே மாற்றப்பட்டிருந்தன – புலிகளின் புதிய போர் யுக்திகளினால்.
பின்னடைவை ஏற்படுத்திய கன்னிவெடிகள்:
அடுத்ததாக புலிகளின் கன்னி வெடிகள் இந்தியப் படையினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. கன்னி வெடிகள் எந்த ரூபத்தில் மறைந்திருக்கும் என்பதை இந்தியப்படையினரால் கற்பனை செய்யவே முடியவில்லை. தெருவோரம் கைவிடப்பட்டிருக்கும் துவிச்சக்கர வண்டிகூட இந்தியப் படையினர் அருகில் செல்லும்போது வெடித்துச் சிதறும்.
வீதிகளில் அமைந்திருக்கும் மதகுகளின் கீழ்தான் கன்னிவெடிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்றில்லை. தாரிட்டு நன்றாகப் பூசி மெழுகிக் காணப்படும் தெருக்கள் கூட திடீரென்று வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திவிடும். தெருக்களிலும் வீதியோரங்களிலும் கன்னிவெடி பொருத்தப்பட்டிருக்கும் என்று அவதாணித்து மிகவும் கவனத்துடன் நகர்ந்துகொண்டிருக்கும் போது மின் கம்பங்களின் மேலே இருந்து கிளைமோர் வெடித்து பல இந்தியப் படையினர் கொல்லப்பட்டுவிடுவார்கள்.
இந்தியப் படையினரைப் பொறுத்தவரை ஈழ மண்ணில் அவர்களை அதிக அச்சத்திற்குள்ளாக்கிய ஒரு விடயம் என்னவென்றால் புலிகள் மேற்கொண்ட கன்னி வெடித்தாக்குதல்கள் என்றால் மிகையாகாது.
இந்தியாவின் யுத்த அனுபவம்:
இந்தியப் படையினர் 1971ம் ஆண்டே கடைசியாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பாக்கிஸ்தானுடன் இந்தியா மேற்கொண்டிருந்த அந்த யுத்தத்திற்கு பின்னர் இந்தியப் படையினருக்கு யுத்த அனுபவம் அவ்வளவாகக் கிடையாது. காலிஸ்தான் சீக்கியத் தீவிரவாதிகளை அடக்குவதற்காகப் பஞ்சாப் பொற்கோவிலில் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த `புளுஸ்டார்` படை நடவடிக்கை (Operation Blue star) தவிர 16 வருடங்களாக இந்தியப் படை யுத்த நடவடிக்கைகள் எதிலுமே ஈடுபட்டது கிடையாது.
திடீரென்று ஈழத்தில் புலிகளுடன் இந்தியப் படையினர் யுத்தத்தில் குதிக்கவேண்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் படையினர் தடுமாறித்தான் போனார்கள்.
அதுவும் புலிகள் இந்தியப் படையினருக்கு தொடர் இழப்புக்களை வழங்கிவர அவற்றை வெற்றி கொள்ள முடியாத இந்தியப் படையினர் தமது இயலாமையை அப்பாவி மக்கள் மீது காண்பிக்க ஆரம்பித்திருந்தார்கள். புலிகளை வெற்றிகொள்ளமுடியாத இந்தியப் படையினர் தமது கோபத்தை அப்பாவி ஈழத் தமிழர்கள் மீது செலுத்தினார்கள். நூற்றுக்கணக்கான மக்களை கொன்றொழித்தார்கள். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அழித்தார்கள். அவர்கள் ஈழ மண்ணில் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தம் இப்படித்தான் அமைந்திருந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையில் இந்தியப் படையினர் தமது கைகளில் ஒன்றைப் பின்னால் கட்டிக்கொண்டு யுத்தம் புரிந்து வருவதாக இந்தியா கூறியதுதான்.
அந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையான இந்தக் கூற்றை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஊடகங்களுக்கு கூறிக்கொண்டிருக்கும் போது இந்தியப் படையின் ஒரு அணி யாழ் வைத்தியசாலைக்குள் பாரிய மனித வேட்டை ஒன்றை நடாத்தப் புறப்பட்டிருந்தது.
1987ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ம் திகதி.
நேரம்: அதிகாலை 1 மணி.
திட்டமிட்டபடி இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளின் தலைவரை குறிவைத்து தமது நகர்வினை ஆரம்பித்திருந்தன.
விடுதலைப் புலிகளின் தலைவரைக் குறிவைத்த அந்த அதிரடி இராணுவ நடவடிக்கையில் இந்திய இராணுவத்தின் இரண்டு முக்கிய படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டன.
1. இந்தியப் படையின் முக்கியமான படை அணியான பராக் கொமாண்டோக்கள் (Para Commandos)
2. 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 – Sikh Light Infantry)
நான்கு எம்.ஐ.-8 (MI8) ஹெலிக்காப்டர்கள் பராக் கொமாண்டோக்களையும், விஷேட பயிற்சி பெற்ற சீக்கியக் காலாட்படையினரையும் தரையிறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
ஸ்ரீலங்கா வான் படையினரின் வழிகாட்டல்களிலேயே இந்த தரையிறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கிருந்ததாகக் கூறப்படும் இல்லத்தை முற்றுகையிட்டு அவரைக் கைப்பற்றும் பணி, 100 பராக் கொமாண்டோக்களிடம் (Para Commandos) ஒப்படைக்கப்பட்டிருந்தது.
புலிகளின் தலைவரைக் கைப்பற்றிக் கொண்டு திரும்பும் பராக் கொமாண்டோக்களை ஹெலிக்காப்டர்களில் பத்திரமாக திருப்பி அனுப்பிவைப்பதற்காக யாழ் பல்கலைக்கழக மைதானத்தை கைப்பற்றி, தளமாக்கி, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பணி 13வது சீக்கிய மெது காலாட் படையினரிடம் (13 – Sikh Light Infantry) ஒப்படைக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி வீதியும், பிறவுன் வீதியும் இணையும் சந்திக்கு அருகே உள்ள கொக்குவில் கிராமசபைக்கு முன்பாக உள்ள வெட்டவெளியில் பராக் கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டார்கள்.
ஆனால், இந்தியப் படைத்துறை அதிகாரிகள் நினைத்தபடி தரையிறக்கம் அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை.
இந்தியப் படையினர் சற்றும் எதிர்பார்க்காத அளவிற்கு புலிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள்.
தரையிறக்கம் இடம்பெற்ற இடத்தினை வெகுவிரைவில் சூழ்ந்து கொண்ட விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.
எங்கிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பல முனைகளில் இருந்தும் தரையிறங்கிய ஹெலிகளைக் குறிவைத்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டபடியே இருந்தன.
ஐந்து தரையிறக்கங்களை மட்டுமே இந்தியப் படையினரால் அங்கு மேற்கொள்ள முடிந்தது. புலிகளின் எதிர்ப்பு அத்தனை கடுமையானதாக இருந்தது. இந்தியப்படையினரின் மூன்று ஹெலிகள் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தரையிறக்கத்தை கைவிட்டு தளம் திரும்பவேண்டி ஏற்பட்டது.
பரசூட்டில் குதித்த சீக்கியர்கள்:
இதேவேளை, இந்தியப் படையினர் தமது முற்றுகைத் தாக்குதல் திட்டத்தின் அடுத்த கட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்கள்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தை அண்டிய பகுதியில் 13வது சீக்கியப் படையணியினரைப் பரசூட்டுக்களின் மூலம் தரையிறக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள எத்தனித்தார்கள்.
முன்னைய தரையிறக்க நடவடிக்கையைப் போலல்லாமல், இந்த தரையிறக்க நடவடிக்கையை மிகவும் இரகசியமாக மேற்கொள்ளுவதே இந்தியப் படையினரின் திட்டமாக இருந்தது.
கொக்குவில் பிரதேசத்தில் பராக் கொமாண்டோக்களை ஆரவாரத்துடன் தரையிறக்கி புலிகளின் கவனத்தை அங்கு முற்றாகத் திருப்பிவிட்டு, பல்கலைக்கழக மருத்துவபீட பிரதேசத்தில் சீக்கியத் துருப்பினரை பரசூட்டுக்கள் மூலம் இரகசியமாக தரையிறக்கி நிலை கொள்ள வைப்பதே இந்தியப்படையினரின் திட்டமாக இருந்தது. இவ்வாறு இரகசியமாக தரையிறங்கும் சீக்கியப்படையினர், யாழ் மருத்துவபீட வளாகத்தைத் தமது தளமாக ஆக்கிக் கொள்ளுவதுடன், தேவை ஏற்பட்டால் கொக்குவில் பிரதேசத்தில் தரையிறங்கிய பராக்கொமாண்டோக்களுடன் சண்டைகளில் ஈடுபட்டிருக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு பின்புறம் இருந்து தாக்குதல்களைத் தொடுத்து, ஒரு அதிர்ச்சி நடவடிக்கையை மேற்கொள்ளுவதும் அவர்களது திட்டமாக இருந்தது.
உண்மையிலேயே இது நல்லதொரு திட்டம்தான்.
ஆனால் எதிர்காலத்தையும், எதிரியின் எந்த ஒரு நகர்வினையும் கச்சிதமாகக் கணிப்பிடவல்ல தலைவர் என்று அவரது எதிரிகளால் கூட பாராட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர், இந்தியத் துருப்புக்கள் இவ்வாறுதான் தமது நகர்வினை மேற்கொள்ளக்கூடும் என்று தமது போராளிகளுக்கு ஏற்கனவே எச்சரித்திருந்தார். அப்படி ஒரு நகர்வு மேற்கொள்ளப்படும் பொழுது அதனை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்றும் அவர் திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, யாழ் மருத்துவ பீட கட்டிடத்தின் மாடிகளிலும், அருகில் இருந்த மரங்களிலும் விடுதலைப் புலிப் போராளிகள் நிலை எடுத்திருந்தார்கள். பின்நாட்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுப் பொருப்பாளராக இருந்த பொட்டு அம்மாணின் தலைமையிலேயே இந்த தற்காப்புத் தாக்குதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தியப் படை வீரர்கள் பரசூட்டுக்களில் குதிக்க ஆரம்பித்ததும் ஏற்கனவே நிலையெடுத்து பதுங்கியிருந்த விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.
நள்ளிரவு.
காரிருளில் பரசூட்டுக்களில் தொடர்ச்சியாகக் குதித்துக்கொண்டிருந்த இந்திய படையின் சீக்கிய காலாட் படைப்பிரிவினருக்கு எங்கிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன என்று புரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் இருந்து துப்பாக்கிச் சன்னங்களின் ஒளிகள் தம்மை நோக்கி வந்துகொண்டிருப்பதை அவர்கள் அவதாணித்தார்கள். பரசூட்டுக்களில் தரையிறங்கிக்கொண்டிருந்த பல இந்திய வீரர்கள் தரையைத் தொடும் முன்னதாகவே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அநியாயமாக இறந்துவிட்டிருந்தார்கள்.
இதில் தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி மேஜர் பீரேந்திர சிங்கும் ஒருவர்.
அத்தோடு தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவின் தொலைத்தொடர்பு இயக்குனரும் கொல்லப்பட்டிருந்தார்.
இந்திய ஜவான்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம்:
தரையிறங்கிக்கொண்டிருந்த சீக்கிப் படைவீரர்களுக்கும்சரி, தரையிறக்கத்தை பாலாலி இராணுவத் தளத்தில் இருந்து நெறிப்படுத்திக்கொண்டிருந்த இந்தியப் படை அதிகாரிகளுக்கும் சரி, களமுனையில் என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை.
சீக்கிய காலாட் படையினரை தரையிறக்கவெனச் சென்ற ஹெலிக்கப்டர்கள் சுமார் 30 படையினரை மட்டுமே தரையிறக்கிவிட்டு, துப்பாக்கிச் சூடு அதிகமாக இருப்பதாகவும், மற்றவர்களை தரையிறக்கமுடியாது என்றும் கூறிவிட்டு தளம் திரும்பிவிட்டன. தரையிறங்கியவர்களின் கதி என்னவென்று அறிவதற்கும் தளத்தில் இருந்தபடி தாக்குதல் நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்த அதிகாரிகளால் முடியவில்லை. தொலைத் தொடர்பு முற்றாகவே துண்டிக்கப்பட்டிருந்தது.
தரையிறக்கத்தை மேற்கொண்டிருந்த படையினர் கதி அதைவிட மோசமானதாக இருந்தது. திரும்பிய பக்கமிருந்தெல்லாம் துப்பாக்கி வேட்டுக்கள் தம்மை நோக்கி வந்தவண்ணம் இருந்தன. கடும் இருளில் தமது சகாக்கள் எங்கிருக்கின்றார்கள், தாம் எங்கு நிலை எடுக்கவேண்டும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று எதுவுமே அவர்களுக்குப் புரியவில்லை. தமது அணிக்கு தலைமைதாங்கிவந்த அதிகாரியிடம் இருந்தும் எந்த வித உத்தரவும் வந்தபாடில்லை. தளத்துடனும் எந்தவித தொடர்பும் இல்லை. தமது தரப்பில் எத்தனை பேர் தப்பி இருக்கின்றார்கள்? யார் யார் உயிருடன் இருக்கின்றார்கள்? யார்யார் இறந்திருக்கின்றார்கள்? அவர்கள் எங்கெங்கு நிலை எடுத்திருக்கின்றார்கள்? தமது தற்போதைய பலம் என்ன? தமக்கு வெளியில் இருந்து எதாவது உதவிகள் கிடைக்குமா? – எதுவுமே அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
காரிருள் அவர்களுக்கு எதனையும் தொடர்ந்து செய்வதற்கு அனுமதியளிக்கவும் இல்லை.
இரகசியமான நகர்வினை மேற்கொள்ளவென வந்த அவர்களது நடவடிக்கைகள் பகிரங்கமானது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காதது. இரகசியமாகத் தரையிறங்கி, அங்கு பாதுகாப்பு அரன்களை உருவாக்கி நிலையெடுப்பதற்கு ஏதுவாக இந்தியப் படையினர் தம்முடன் சிறிய சவள்களும், சாக்குப் பைகளும் கொண்டு வந்திருந்தார்கள். தரையில் படுத்திருந்தபடி தாம் உடன் கொண்டுவந்திருந்த சவள்கள் மூலம் மண்ணைத் தோண்டிய சீக்கியப் படை வீரர்களுக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்தது. அந்தப் பிரதேசம் கடினமான தரையமைப்பைக் கொண்ட பிரதேசம் என்பதால், அவர்களுக்கு அதுவும் முடியவில்லை.
நிலத்தில் படுத்திருந்து நிலை எடுத்தபடி அனைத்து திசைகளை நோக்கியும் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.
இரண்டு இந்திய ஜவான்கள் தமது துப்பாக்கி ரவைகள் தீர்ந்துவிட்ட நிலையில் தம்மைப் பாதுகாக்கவெனத் தமது துப்பாக்கி முனைகளில் பொருத்தப்பட்டிருந்த பையனைட் கத்திகள் (டீயலழநெவ) கொண்டு புலிகளை தாக்க ஆரம்பித்திருந்தார்கள்.
விடிய ஆரம்பித்ததும், விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை இனங்கண்டு துல்லியமாகத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தினுள் தரையிறங்கிய 30 இந்திய சீக்கியப் படைவீரர்களுள் 29 வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ஒரு ஜவான் புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டார்.
இதேவேளை, கொக்குவில் பிரதேசத்தில் ஏற்கனவே தரையிறக்கப்பட்டிருந்த 100 பாராக் கொமாண்டோக்களும், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்……..
தொடரும்..
ஒப்பரேஷன் பவான் இராணுவ நடவடிக்கை – (அவலங்களின் அத்தியாயங்கள்- பாகம்-4) –நிராஜ் டேவிட்
”பவான்” என்ற ஹிந்தி வார்த்தைக்குக் காற்று என்று அர்த்தமாம். இந்தியப்படையினர் காற்றைப் போல யாழ்ப்பாணத்தினுள் உடுருவி, யாழ்ப்பாணம் முழுவதையும் வியாபித்து நிற்கும் நோக்குடன்தான் அவ்வாறு பெயரிட்டார்களோ தெரியவில்லை.
ஆனால், நடைமுறையில் இந்தியப் படையினரால் காற்றைப் போன்று இலகுவாக யாழ்ப்பாணத்தினுள் ஊடுருவ முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினர் வைத்த ஒவ்வொரு அடியும் அவர்களுக்கு புதைகுழிகளாகவே இருந்தன. அங்கு அவர்கள் சந்தித்த ஒவ்வொரு வீடுகளும் அவர்களது எதிரியின் காப்பரன்களாக மாறியிருந்தன. அவர்கள் சென்ற பாதைகளில் இருந்த பனை மரங்களும், படலைகளும் கூட, அவர்களை தடுத்து நிறுத்தும் எதிரிகளாகவே உருப்பெற்றிருந்தன.
இந்தியப்படையினர் திட்டமிட்டபடி யாழ்ப்பாணத்தில் எதுவுமே நடக்கவில்லை.
யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட சீக்கியப் படைவீரர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுவிட, கொக்குவில் கிராம சபைக்கு அருகாமையில் தரையிறக்கப்பட்ட சுமார் 100 பராக் கொமாண்டோக்கள், தமது அடுத்த கட்ட நகர்வென்ன என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.
பிரம்படி வீதியில் அமைந்துள்ள புலிகளின் தலைவரது இருப்பிடத்தைச் சுற்றிவழைத்து புலிகளின் தலைவரைக் கைதுசெய்து அழைத்துச் செல்லுவதே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதான பணி. அவ்வாறு புலிகளின் தலைவரைக் கைது செய்து அவரை ஹெலிக்காப்டரில் கொண்டு செல்வதற்கு வழி சமைக்கும் வகையில், ஹெலிக்காப்டர் இறங்குவதற்கு ஒரு தளப் பிரதேசத்தை தயார்படுத்துவதே பரசூட்டில் தரையிறங்கிய சீக்கியப் படையினரின் பணி. தளப்பிரதேசத்தை தயார்படுத்தும் பணியினை மேற்கொள்ளவென வந்த சீக்கியப் படையினரின் பணியினை விடுதலைப் புலிகள் முற்றாகவே முடக்கிவிட்டதால், பராக் கொமாண்டோக்கள் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனை கைப்பறினாலும், தளம் எதுவும் அங்கு அமைக்க முடியாத நிலையில் அவரை எந்த வழியாகக் கொண்டு செல்லுவது என்று இந்தியப்படை அதிகாரிகளால் தீர்மானிக்கமுடியவில்லை.
பலாலி விமாணத்தளத்தில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்த இந்தியப்படை உயரதிகாரிகளின் கவனம் முழுவதுமே, யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறங்கி புலிகளின் முற்றுகைக்குள் இலக்காகிக் கொண்டிருந்த சீக்கிய வீரர்களை மீட்பதிலேயே இருந்ததால், பராக் கொமாண்டோக்களின் நகர்வுகள் பற்றிய உத்தரவை வழங்குவதில் பலத்த காலதாமதமும், குழப்பங்களும் ஏற்பட்டிருந்தன.
அத்தோடு புலிகள் தரப்பில் இருந்து காண்பிக்கப்பட்ட எதிப்புக்களும், பராக் கமாண்டோக்கள் இலகுவாக நகர முடியாதபடிக்கு பல தடைகளைப் போட்டிருந்தன. புலிகளின் கடுமையான எதிர்ப்புக்கள், இந்தியக் கமாண்டோக்களின் நகர்வினை திசைமாற்றியும் விட்டிருந்தது. புலிகள் இந்த அளவிற்கு தயாராக இருந்து யுத்தம் புரிவார்கள் என்று இந்தியப்படை அதிகாரிகள் கனவிலும் நினைக்கவில்லை.
புலிகளின் எதிர்ப்பு அவர்கள் எதிர்பார்த்ததை விட பன்மடங்கு அதிகமாகவும், கடுமையானதாகவும் இருந்ததால் அடுத்து என்னசெய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்திருந்தார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்ததைப் போன்று, பிரம்படி வீதியிலும் இந்தியப் பராக் கொமாண்டோக்களை மடக்குவதற்கு புலிகள் ஏதாவது பொறிகளை வைத்திருப்பார்களோ என்ற பயமும், கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்த இந்தியப்படை உயரதிகாரிகளைப் பிடித்துக்கொண்டது. இவற்றின் காரணமாக, பராக் கமாண்டோக்களின் நகர்வினைச் சற்று தாமதிக்குமாறு இந்தியப் படை நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்த உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கவேண்டி ஏற்பட்டது.
பிரபாகரனின் வீடு எங்கே?
யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் வசித்து வந்த ராஜா என்பவர் நள்ளிரவு முதல் கேட்டுக்கொண்டிருந்த தொடர்ச்சியான துப்பாக்கிச்சூட்டு சத்தத்தை மிகுந்த அச்சத்துடன் அவதானித்துக் கொண்டிருந்தார். பாரதூரமாக ஏதோ நடந்துகொண்டிருக்கின்றது என்பது மட்டும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெளிவாகப் புரிந்தது. அதிகாலை நான்கு மணியளவில் அவரது வீட்டின் வாசல்கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தவருக்கு அதிர்ச்சி. ஆயுதம் தரித்த சுமார் ஐம்பது இந்தியப் படையினர் அங்கு நின்றார்கள். அவர்களின் முகங்களில் கோபமும், பதட்டமும் தெரிந்தது.
அவரது அனுமதி இன்றியே வீட்டினுள் நுழைந்த சில இந்தியப் படை அதிகாரிகள், புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும், சாரா என்பவர் பற்றியும் விசாரித்தார்கள். அவர் தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்லும்படி கூறிவிட்டு வீட்டை முழுவதுமாகச் சோதனையிட்டார்கள். வீட்டின் சுவரில் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த ஒரு படத்தைக் காண்பித்து ”இது பிரபாகரனது படமா?” என்று ஒரு வீரர் கேட்டார். அதற்கு ராஜா, ”இல்லை இது குருமகாராஜின் படம்” என்று தெரிவிக்கவே, படத்தின் மீது டார்ச் அடித்துப் பார்த்துவிட்டு ”மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று அந்த வீரர் கூறினார்.
இந்தியப் படைக் கமாண்டோக்கள் ராஜாவின் வீட்டில் அதிகாலை ஐந்துமணிவரை தங்கியிருந்தார்கள். இந்த இராணுவ நடவடிக்கையை நெறிப்படுத்திக்கொண்டிருந்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவைப் பெறுவதற்காகவே அவர்கள் இவ்வாறு தாமதித்திருக்கலாம். பின்னர் மேலிடத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவிற்கு அமைய அதிகாலை இந்தியப் படை கொமாண்டோக்கள் ராஜாவின் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள்.
பிரபாகரன் வீட்டிற்கு வழி காண்பிக்க தம்முடன் வருமாறு கூறி ராஜாவையும், அவரது மருமகன் குலேந்திரனையும் அழைத்துக்கொண்டு இந்தியப் படைக் கமாண்டோக்கள் புறப்பட்டார்கள். எத்தனையோ கெஞ்சியும் ராஜாவையும், குலேந்திரனையும் அவர்கள் விடவில்லை.
பிழையான வழிநடத்தல்?
இந்தியப் படையினரின் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் பற்றி பின்நாட்களில் புத்தகங்கள் எழுதிய லெப்.ஜெனரல். திபீந்தர் சிங், எம்.ஆர்.நாராயன்சுவாமி, ராஜேஸ் காடியன் போன்றவர்கள், அக்டோபர் 12ம் திகதி புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை அடையாளம் காண்பிக்கவென்று இந்தியப் படையினர் அழைத்துச் சென்ற நபர் இந்தியப் படையினரை பிழையான பாதையில் வழிநடத்திச் சென்றதாலேயே, இந்தியப் படையினரால் தமது இலக்கினை அடைய முடியாமல் போனதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். தமது தோல்விக்கும், இயலாமைக்கும் காரணம் கற்பிக்கவே இந்தியத் தரப்பினர் இவ்வாறு வீன்பழிபோடச் சந்தர்ப்பம் இருக்கின்றது. அதேவேளை, புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை காண்பிக்கவென்று ராஜா என்பவரை அழைத்துச் சென்ற இந்தியப் படையினரால் சரியான இடத்திற்குச் செல்வதற்கு முடியவில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது. அத்தோடு, ராஜாவின் மருமகனான குலேந்திரன் 12ம் திகதி இந்தியப் படையினரால் கொல்லப்பட்டிருக்கின்றார். இவை அனைத்தையும் அடிப்படையாய வைத்துப் பார்க்கின்ற பொழுது, அந்த இரண்டு நபர்களும் தமது வரலாற்றுக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றி இருப்பதற்கான சாத்தியத்தை ஊகிக்கக்கூடியதாகவே இருக்கின்றது.
இரத்தப் பாதையில் இந்தியப் படைகள்:
அடுத்த சில நாட்களில் ஈழத்தமிழர் வரலாற்றில் மிகவும் துன்பகரமான ஒரு அத்தியாயம் இந்தியப் படையினரால் எழுதப்பட்டது. அது ஈழத்தமிழரின் இரத்தினாலேயே எழுதப்பட்டதுதான் இன்னும் பெரிய சோகம்.
புலிகளின் தலைவரைப் பிடிப்பதற்கென்று கூறி, தமது அடுத்த கட்ட நகர்வினை மேற்கொண்ட இந்தியக் கமாண்டோக்கள் சென்ற பாதை ஈழத்தமிழர்களின் இரத்தத்தால் நனைக்கப்பட்டதாகவே அமைந்திருந்தது. செல்லுமிடமெல்லாம் கொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் கொடுமைகளையும்; மேற்கொண்டபடிதான் இந்தியப் படையினர் தமது அமைதிகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
தமக்கு பாதுகாப்பாக இருப்பார்கள், சிங்களப் படையினரிடம் இருந்து தம்மை காப்பாற்றுவார்கள், தமக்கு ஒரு நிரந்தரச் சமாதானச் சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பார்கள் என்றெல்லாம் ஈழத்தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியப்படையினர், ஈழத்தமிழர்களை அழித்தொழிப்பதில் என்றுமில்லாதவகையில் முனைப்புக் காண்பித்தார்கள். அந்த அவலங்களின் அத்தியாயங்களைத்தான் தொடர்ந்து வரும் வாரங்களில் நாம் மிக மிக விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
புலிகளின் தலைவரைப் பிடிப்பதற்கென்று வந்திருந்த பராக் கொமாண்டோக்கள், தமது முயற்சி கைக்கூடாமல் போனதினால் ஏற்பட்ட ஆத்திரத்தை அப்பிரதேசத்தில் இருந்த அப்பாவித் தமிழ் மக்களின் மீது திருப்பியிருந்தார்கள். புலிகளின் பலத்தை எதிர்கொண்டு தமது நகர்வினைத் தொடர முடியாது தவித்துக்கொண்டிருந்த பராக் கொமாண்டோக்கள், தமக்கு உதவி வந்து சேரும் வரை அப்பிரதேசத்தில் ஒரு தளத்தை அமைத்து நிலைகொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.
மறுதினம், இந்தியப் பராக் கொமாண்டோக்கள் எதிர்பார்த்த உதவி அவர்களை நோக்கி மெதுவாக வர ஆரம்பித்திருந்தது.
அந்த உதவிகள் எப்படி வந்தன தெரியுமா? ஈழத்தமிழர்களின் உடல்களை நிலத்தில் கிடத்தி; அவற்றின் மீது கவசவாகனங்களை செலுத்தியே அந்த உதவிகள் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தன.
ஈழத் தமிழர்களின் இரத்தத்தால் போடப்பட்ட பாதையில் இந்தியப் படையினரை நோக்கி விரைந்த அந்த உதவி நடவடிக்கை பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.
அப்பிரதேசத்தின் ஒரு வீட்டிலிருந்த ராஜா என்பவரையும், அவரது மருமகனான குலேந்திரன் என்பவரையும் தமக்கு வழி காண்பிக்கவென அழைத்துக்கொண்டு, புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.
ராஜாவின் வீட்டில் இருந்து ஒரு ஒழுங்கை வழியாக ஒரு தொகுதி இந்தியப் படையினர் நகர்வினை மேற்கொண்ட அதேவேளை, பெரும்பாலான இந்தியக் கொமாண்டோக்கள் அந்த ஒழுங்கையின் இரு மருங்கிலும் அமைந்திருந்த வீட்டு வளவுகளினூடாகவே தமது நகர்வினை மேற்கொண்டார்கள். வேலிகள், மதில்கள் போன்றனவற்றில் ஏறிக் குதித்து அவர்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனது இருப்பிடம் அமைந்துள்ளதாக கூறப்பட்ட பிரம்படி வீதிக்கு வந்துசேர்ந்ததும், அவர்களை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
அப்பகுதியில் உள்ள பனங்காணி ஒன்றிலிருந்தே முதலில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. முதலாவது துப்பாக்கி வேட்டிலேயே மூன்று இந்தியப் படை வீரர்கள் தாக்கப்பட்டு தரையில் வீழ்ந்தார்கள்.
இந்தியப் பராக் கொமாண்டோக்களுக்கு தலைமை தாங்கிச் சென்ற ஒரு அதிகாரி, துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட பனங்காணிக்கு அருகில் அமைந்திருந்த வீட்டைக் குறிவைத்து செல் தாக்குதலை மேற்கொள்ளுமாறு இந்தியக் கொமாண்டோக்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்திய இராணுவத்தினர் செல் தாக்குதல் நடத்துவதற்கென்று தமது மோட்டார் லோஞ்சரை குறிவைத்திருந்த அந்த வீடு பொன்னம்பலம் என்ற இளைப்பாறிய சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானது.
ஆரவாரங்கள் அதிகமானதைத் தொடர்ந்து அவர் தனது இளைய மகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வர முற்பட்டபோதுதான், தனது வீட்டைக் குறிவைத்து இந்தியப் படையினர் மோட்டார் லோஞ்சரை நிலைப்படுத்திக் கொண்டிருப்பதை அவர் அவதானித்தார்.
உடனே தனது குடும்பத்தினரை தரையில் விழுந்து படுக்கும்படி உரக்கக் கத்திவிட்டு, இளைய மகளையும் இழுத்துக் கொண்டு தானும் தரையில் விழுந்து படுத்தார். அடுத்த வினாடி அவரது வீடு இந்தியப் படையினரின் செல் தாக்குதலுக்கு இலக்கானது.
மறுநாள் காலைவரை அவரும் குடும்பத்தினரும் ஒரு கட்டிலின் கீழே தரையில் படுத்தபடி கிடந்தார்கள். அந்த வீட்டின் கூரை முழுவதும் முற்றாகச் சேதமாக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் இருப்பிடம் ஒன்றைத் தாம் வெற்றிகரமாகத் தகர்த்துவிட்டதாக இந்தியப் படை கொமாண்டோக்கள்; தமது மேலதிகாரிகளுக்கு தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.
இந்தியப் படையினர் ஆடிய கோர தாண்டவம்:
இந்தியப் படையினரைப் பொறுத்தவரையில் அப்பிரதேசத்தில் இருந்த அனைத்துமே அவர்களுக்கு எதிரிகளின் இருப்பிடமாகத்தான் தென்பட்டன. அங்கு இருந்த அனைவருமே எதிரிகளாகவே அவர்களுக்கு தென்பட்டார்கள். அவர்களுக்கு அங்கு ஏற்பட்டிருந்த தோல்வியும், இயலாமையும், அச்சமும் அவர்களை அவ்வாறே சிந்திக்கவும் வைத்தது.
தம்மை நோக்கி விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்த ஆரம்பித்ததும், அவர்கள் சகட்டுமேனிக்கு திருப்பிச் சுட ஆரம்பித்திருந்தார்கள். தம்மை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட திசையை நோக்கி மட்டுமல்லாமல், அனைத்து திசைகளை நோக்கியும் அவர்கள் சுட ஆரம்பித்திருந்தார்கள்.
இந்தியப் படையினருக்கு வழி காண்பிக்கவென்று அழைத்துச் செல்லப்பட்ட ராஜா, பனங்காணியில் இருந்து புலிகள் தாக்குதலை ஆரம்பித்த மறுகணமே அருகில் இருந்த வீட்டின் ஊடாகப் பாய்ந்தோடி, தனது வீட்டை வந்தடைந்துவிட்டார்.
ராஜாவுடன் அழைத்து செல்லப்பட்ட அவரது மருமகனான குலேந்திரன் இந்தியப் படையினரால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சண்டைகள் அரம்பித்துவிட்டதை உணர்ந்த ஜீவா என்ற பல்கலைக் கழக மாணவன், கிருபா என்ற தனது நன்பனுடன் அவனது சகோதரி ஒருவருடைய வீட்டில் இருந்து பின்புற வழியாக வெளியேற முற்பட்டபோது, அங்கு பதுங்கியிருந்த இந்தியப் படையினர் அவர்களைச் சுட்டுக் கொன்றார்கள்.
தனபாலசிங்கம் என்ற விரிவுரையாளர் தனது குடும்பம் சகிதமாகவும், அயலவர்கள் சிலருடனும் தனது வீட்டினுள் மிகுந்த அச்சத்துடன் அமர்ந்திருந்தார். அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் தச்சுத் தொழிலாளியான கோபாலக்கிருஷ்னன் என்பவரும் நிலமை பற்றி அறிந்து கொள்வதற்கு அங்கு வந்திருந்தார்.
சண்டைகள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து வெளியே நகர முடியாதபடிக்கு அங்கேயே தங்கிவிட்டிருந்தார். அருகில் அதிகரிக்க ஆரம்பித்திருந்த துப்பாக்கிவேட்டுச் சத்தங்கள், அவர்களைப் பயத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருந்தன.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியுடன் இருந்த மற்றவர்களுக்கு தனபாலசிங்கம் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தார். ~~இந்தியப் படையினர் ஸ்ரீலங்கா இராணுவத்தைப் போன்று பொதுமக்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள்.
விடுதலைப் புலிகளுடன் மட்டும்தான் அவர்களுடைய சண்டைகள் இருக்கும். அப்பாவித் தமிழ் மக்களை அவர்கள் நிச்சயம் நேசிப்பார்கள். எனவே நாம் ஒன்றும் அதிகமாகப் பயப்படத் தேவையில்லை.|| என்று கூறிக்கொண்டிருந்தார்.
இந்தியப் படையினர் அந்த விரிவுரையாளரின் நம்பிக்கையை சிறிது நேரத்திலேயே சிதறடித்திருந்தார்கள்.
அவரது வீட்டிற்குள் புகுந்த சில இந்தியப் படை வீரர்கள், தனபாலசிங்கத்தையும், அவரது மனைவி, ஒரு குழந்தை போன்றவர்களை சுட்டுக் கொன்றார்கள். தனபாலசிங்கத்துடன் அவரது வீட்டில் தங்கியிருந்த அயல்வீட்டுக்காரரான கோபலகிருஷ்னனும் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த வீட்டில் தங்கியிருந்த மற்றொரு பெண்மணி, அவருடைய ஒன்பது வயது மகன் உட்பட அங்கு தங்கியிருந்த வேறு ஆறு பேரும் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த வீட்டில் தங்கியிருந்தவர்களுள் ஏழு வயது நிறம்பிய ஒரு சிறுவன் மட்டுமே பலத்தகாயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்.
மற்ற அனைவரையும் இந்தியப் படையினர் இரக்கமற்ற முறையில் கொடூரமாகச் சுட்டுத்தள்ளியிருந்தார்கள்.
பராக் கொமாண்டோக்கள் அமைத்த தளம்:
இவ்வாறு கோர தாண்டவமாடியபடி தமது அமைதிகாக்கும் பணியினை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் உடனடியாக அப்பிரதேசத்தில் ஒரு தளத்தினை அமைத்து நிலை கொள்ள வேண்டி இருந்தது.
இரகசியமாக நகர்ந்து புலிகளின் தலைவரைப் பிடிக்கும் தமது திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு மிகுந்த சங்கடமான ஒரு நிலை அங்கு உருவாகி இருந்தது. அதாவது அங்கு தரையிறங்கியிருந்த இந்தியக் கொமாண்டோக்கள் பத்திரமாக திரும்பவேண்டும் என்ற கவலை பிரதானமாக அவர்களைப் பிடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.
அவசர அவசரமாகத் தீட்டப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அப்பிரதேசத்தில் சற்று பெரியதும், மதில்களுடன் கூடியதும், இலகுவாக நிலை எடுக்கக்கூடியதுமான ஒரு வீட்டை தமது தற்காலிக தளமாக மாற்றிக் கொள்ள இந்தியப் படையினர் தீர்மானித்தார்கள்.
அவர்கள் தமது தளத்தை அமைத்துக்கொள்வதற்கு ஏற்றாற்போன்று ஒரு வீடு அப்பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
திருமதி விஸ்வலிங்கம் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடே அவ்வாறு இந்தியப் படை அதிகாரிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டை கைப்பற்றுவதற்காக இந்தியப் படை அதிகாரிகள் சில கொமாண்டோக்களை அங்கு அனுப்பினார்கள்.
திருமதி விஸ்வலிங்கத்தின் வீட்டினுள் நுழைந்த இந்தியப் படையினர், அங்கிருந்த பத்து பேரையும் ஈவிரக்கம் இன்றிச் சுட்டுக் கொண்றார்கள். தாம் அந்த வீட்டினுள் முகாம் அமைக்கும் விடயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் அந்த வீட்டில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்.
திருமதி விஸ்வலிங்கத்தின் வீட்டை தலைமையகமாகக் கொண்டு, ஒரு பக்கத்தில் ரெயில் பாதையையும், கிழக்கே ஒரு வெட்ட வெளியையும் எல்லையாகக் கொண்டு ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பை இந்தியப் படையினர் தமது தளப் பிரதேசமாக மாற்றி நிலையெடுத்து நின்றார்கள்.
அவர்கள் அமைத்திருந்த தளப் பிரதேசத்தினுள் இருந்த, அந்தத் தளப் பிரதேசத்தினுள் நுழைந்த, அந்தத் தளப் பிரதேசத்தைக் கடந்து சென்ற அனைவரையும் அவர்கள் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றார்கள். அவ்வாறு செய்வதற்கான உத்தரவும் அவர்களுக்கு அவர்களது மேலதிகாரிகளினால் வழங்கப்பட்டிருந்தது.
திருமதி விஸ்வலிங்கத்தினுடைய வீட்டின் முன் அறையை அவர்கள் காயப்பட்ட தமது வீரர்களுக்கு சிகிட்சையளிப்பதற்கு ஏற்றாற்போன்று ஒரு சிறு மருத்துவமனையாக மாற்றியிருந்தார்கள்.
தமது முகாம்களில் இருந்து அவர்களுக்கு மேலதிக உதவிகள் வந்து சேரும் வரைக்கும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள இப்படியான எத்தனங்களை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையில் அவர்கள் நிலை கொண்டிருந்த பிரதேசத்தினை பாதுகாக்கும் நோக்குடன் யாழ் கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.
விடுதலைப் புலிகளின் நிலைகள் அமைந்திருந்த இடங்கள் என்று இந்திய பராக் கொமாண்டோக்களினால் அடையாளம் காண்பிக்கப்பட்ட இடங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றபடியே இருந்தன.
தமிழ் மக்கள் அனைவருமே இந்தியப் படைக் கொமாண்டோக்களுக்கு புலிகளாகவே தென்பட்டதால், அவர்கள் தமிழ் மக்கள் வாழ்ந்த வீடுகளையும் புலிகளின் இருப்பிடமாகவே அறிவித்திருந்தார்கள்.
இதில் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால், யாழ் குடாமீது ஷெல் தாக்குதல்களை நடாத்துவதற்கு இந்தியப் படை அதிகாரிகள் ஸ்ரீலங்காப் படையினரிடமும் உதவி கோரி இருந்தார்கள்.
மிகவும் சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் ஸ்ரீலங்காப் படையினர் அந்த உதவிகளை தாராளமாக வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
பொட்டம்மான் படுகாயம்! அவலங்களின் அத்தியாயங்கள்! – பாகம்-6 – நிராஜ் டேவிட்
தம்மீது நிர்ப்பந்திக்கப்படும் ஆக்கிரமிப்பில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், தம்மீது திணிக்கப்படும் போரில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்கும், ஒரு தரப்பு மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை.
விடுதலைப் புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகளைப் பொறுத்தவரையில், இந்தியப் படையினர் மேற்கொண்டது போர் நடவடிக்கை.
விடுதலைப் புலிகள் மேற்கொண்டதோ போராட்ட நடவடிக்கை.
இந்தியப் படைகள் புலிகள் மீது, அவர்களை அழித்தொழிக்கும் வகையிலான ஒரு போரை திணித்திருந்தார்கள்.
புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைந்து அவர்களை நிராயுதபாணிகளாக்கி அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கவும், அவர்களை அழித்தொழிக்கவும், இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைதான் புலிகளுக்கு எதிரான அவர்களது போர் நடவடிக்கை.
அதேவேளை விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இந்தியப் படையினரின் யுத்த முனைப்புக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், இந்தியாவின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், அவர்கள் வேறு வழியில்லாது மேற்கொண்ட அந்த தற்காப்பு நடவடிக்கையை ‘போராட்டம்’ என்று குறிப்பிடலாம்.
போரும், போராட்டமும்:
இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு, ஈழத்தமிழர் மீது இந்தியா திணித்திருந்த போரைப் பற்றி கடிதம் எழுதியிருந்தார். இந்தியா ஈழத்தமிழர்கள் மீது திணித்திருந்த யுத்தத்தில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றும்படியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவர் தனது கடிதத்தில், ஆயிரக்கணக்கான போராளிகள் யுத்தத்தில் மடியும் அதேவேளை பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களும் இந்தியா திணித்துள்ள இந்தப் போரில் சிக்குண்டு மடியும் அபாயம் உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகள் என்பவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்டவர்கள் அல்ல. ஈழத் தமிழர்களில் ஒரு அங்கமே விடுதலைப் புலிகள். இது ஒரு மக்கள் அமைப்பு. மக்கள்தான் புலிகள்! புலிகள்தான் மக்கள்.
எனவே எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத ஒரு யுத்தத்தை இந்தியா ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்துள்ளது. இந்த அநியாயத்தை இந்திய மக்கள், குறிப்பாக தமிழ் நாட்டுத் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். தமிழ் நாட்டு மக்கள் மாத்திரம் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் எழுப்பினால், எம் இனத்திற்கு எதிரான இந்தியாவின் அழித்தொழிப்பு யுத்தத்தை நிறுத்திவிடமுடியும்.
எனவே உண்மை நிலையை தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, எமது மக்களின் போராட்டத்திற்கு சார்பான அலையை தமிழ் நாட்டில் உருவாக்கி எமது மக்களை இந்திய அரசின் அழித்தொழிப்பு போரில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று எழுதியிருந்தார்.
இந்தியப் படைகள் புலிகளுக்கு எதிரான போரை ஆரம்பித்த மூன்று நாட்களுக்குள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இரண்டு அவசரக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார்.
அந்தக் கடிதங்களில், இந்தியப் படைகள் ஈழத் தமிழர்கள் மீது திணித்திருந்த போரினால் 150 ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 500 ற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டவென ஈழ மண்ணில் வந்திறங்கிய இந்தியப் படைகள் ஈழத் தமிழருக்கு எதிராக முழு அளவிலான யுத்தமொன்றில் இறங்கியுள்ளது பற்றி தனது கவலையையும், அதிருப்தியையும் அவர் தனது கடிதங்களில் வெளியிட்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் மீது இந்தியா திணித்திருந்த போரை எதிர்த்து போராடுவரைத் தவிர தமக்கு வேறு எந்த வழியும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், அப்பாவி மக்கள் மீது இந்தியப்படை நடாத்தும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
விடுதலைப் புலிகள் மீது என்று கூறி, ஈழத் தமிழர்கள் மீது இந்தியா தொடுத்திருந்த யுத்தத்தின் ஆரம்பத்திலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் எழுதியிருந்த அந்தக் கடிதங்கள், தம்மீது திணிக்கப்பட்டிருந்த போரை விலக்கிக்கொள்ளும்படி அக்கடிதங்களில் அவர் விடுத்திருந்த வேண்டுகோள்கள் அனைத்துமே, விடுதலைப் புலிகள் இந்தியப் படையினருடனான யுத்தத்தை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.
புலிகள் விரும்பாத ஒரு போரை இந்தியா புலிகள் மீது திணித்ததினாலேயே, வேறு வழி எதுவும் இல்லாமல் அந்தப் போரை எதிர்கொண்டு போராடவேண்டிய கட்டாயம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருந்தது.
புலிகளின் இழப்பு:
இந்தியாவிற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய போராட்டம் என்பது, புலிகளைப் பொறுத்தவரையில் அவ்வளவு இலகுவான ஒன்றாக இருக்கவில்லை.
ஏற்கனவே, விடுதலைப் புலிகளை களமுனையில் வழி நடாத்திக்கொண்டிருந்த சிரேஷ்ட தளபதிகளான பொன்னம்மான், கிட்டு, புலேந்திரன், குமரப்பா, திலீபன் என்று பல முக்கிய போராளிகள் இல்லாத நிலையிலேயே புலிகள் இந்தியாவுடனான யுத்தத்தைச் சந்தித்திக்கவேண்டியிருந்தது.
யுத்தம் ஆரம்பமான முதலாவது நாளிலேயே, புலிகள் தரப்பு பல இழப்புக்களை சந்திக்க ஆரம்பித்திருந்தது.
இந்தியப் படையினருக்கு எதிராகப் போராடக் களமிறங்கிய பெண்புலிகள் தனது முதலாவது இழப்பைச் சந்திக்க நேர்ந்தது.
ஒக்டோபர் 10ம் திகதி, கோப்பாய் வழியாக முன்னேற முயன்ற இந்தியப் படையினரை இடைமறித்துத் தாக்குதல் மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் பெண்கள் அணி, இரண்டாவது லெப்டினட் மாலதி (மன்னாரைச் சேர்ந்த பேதுறு சகாயசீலி) என்ற போரளியை இழந்து நின்றது. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாவீரரான முதலாவது பெண் போராளி மாலதி என்பது குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு மோதலில் புலிகள் அமைப்பின் மற்றொரு முக்கிய தளபதியான லெப்டினட் கேணல் சந்தோசமும் வீரமரணம் அடைந்திருந்தார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த விஞ்ஞானபீட மாணவராக இருந்த இவர், புலிகள் அமைப்பில் இருந்த மிகச் சிறந்த போராளிகளுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று ஒக்டோபர் 11ம் திகதி நள்ளிரவில் யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட இந்தியப் படையினருடன் நடைபெற்ற சண்டையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான பொட்டு அம்மான் படுகாயம் அடைந்திருந்தார்.
இதேபோன்று புலிகள் அமைப்பின் பல முக்கிய போராளிகளும், இந்தியப் படையினருடனான சண்டைகளில் கொல்லப்பட்டும், காயமடைந்தும் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள்.
ஆனால் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார்கள். எக்காரணம் கொண்டும், இந்தியப் படையினரிடம் சரணடைவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
இந்தியப் படையினரிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்து, அவமானப்பட்டு மரணிப்பதைவிட, மானத்துடன் போராடி வீரமரணம் எய்துவது மேல் என்று ஒவ்வொரு புலி உறுப்பினரும் கங்கணம் கட்டிக்கொண்டு யுத்தமுனைக்குச் சென்றார்கள்.
அவர்கள் எதிர்பார்த்த யுத்தமுனை வெகு விரைவில் அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தது…
இந்தியப் படையின் ஆரம்ப கட்ட இழப்பு
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பமான தினத்திலேயே இந்தியப் படையினருக்கு ஏற்பட்டிருந்த பாரிய இழப்பானது, ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொள்ள இருந்த முழு நடவடிக்கையின் வெற்றியையுமே கேள்விக்குள்ளாக்கியிருந்தது.
எந்த ஒரு போர் நகர்விலும் முதலாவது வெற்றி என்பது மிகவும் முக்கியமானது என்றே அனைத்து போரியல் நிபுணர்களும் குறிப்பிடுகின்றார்கள். யுத்தம் ஆரம்பான முதல் தினங்களில் ஏற்படுகின்ற வெற்றிகள், தோல்விகள் என்பன, அந்த யுத்த நடவடிக்கையின் இலக்கையும் இறுதி முடிவையும் நிர்ணயித்துவிடுவதாக போரியல் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.
போராடும் படையினருக்கு உளவியல் ரீதியில் உற்சாகத்தையும், தைரியத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் இலகுவாக வெற்றிகொள்ளக்கூடிய ஒரு இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதனைக் குறிவைத்துத்தான் எந்த ஒரு தலைவனும் தனது முதலாவது தாக்குதல் திட்டத்தை வகுப்பது வழக்கம்.
ஏனெனில் எந்த ஒரு யுத்த நடவடிக்கைக்கும், முதல் ஓரிரு நாட்களில் ஏற்படுகின்ற தோல்விகள், அந்த நடவடிக்கையின் இறுதி வெற்றிக்குப் பாரிய பின்னடைவைத் தந்துவிடும் என்பதே போரியல் யதார்த்தம்.
இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட ஒப்பரேஷன் பவான்| (Operation Pawan) இராணுவ நடவடிக்கையும் படுதோல்வியில் முடிவடைவதற்கு ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள்தான் காரணம் என்று போரியல் அறிஞர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.
இந்தியப் படையினர் தமது தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்த தினமே பாரிய இழப்புக்ளைச் சந்தித்திருந்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்கு என்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் தரையிறக்கப்பட்ட துருப்பினர் அனைவருமே ஒட்டுமொத்தமாக புலிகளினால் அழிக்கப்பட்ட நிகழ்வானது, தொடர்ந்து உற்சாக மனோபாவத்துடன் போராட முடியாத வகையில் இந்தியப்படையினரின் மனநிலையைச் சிதைj;துவிட்டிருந்தது.
அதுவும், இந்திய இராணுவத்தின் அதி உச்சப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்றும், இந்திய இராணுவத்தின் சிறந்த, சாகாசம் புரியக் கூடிய வீரர்கள் என்றும், ஒவ்வொரு இந்தியப் படையினனது மனங்களிலும் குடியிருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்கள் (Para Commandos), புலிகளின் பொறியில் மாட்டி தடுமாறிய சம்பவம், பரிதாபமாக உயிரை இழந்திருந்த சோகம் என்பன, ஒவ்வொரு இந்தியப் படையினனது மனங்களிலும் கிலேசத்தை ஏற்படுத்தியிருந்தது.
புலிகளை இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம், இன்னும் ஓரிரு நாட்களுக்குத்தான் இந்தச் சண்டைகள், அதன் பின்னர் புலிகள் சரனடைந்து விடுவார்கள், என்றெல்லாம் தமது தளபதிகள் கூறியதை நம்பி உற்சாகத்துடன் களமிறங்கியிருந்த இந்தியப் படை வீரர்களுக்கு, தாம் நினைத்தபடி களமுனை இலகுவான ஒன்றாக இருக்கப்போவதில்லை என்று முதன்முதலில் புரிய ஆரம்பித்திருந்தது.
சாதாரண இந்தியப் படை ஜவான்களின் மனங்களில் ஏற்பட ஆரம்பித்திருந்த இந்த வகை மனவோட்டம், களமுனைகளில் இந்தியத் தரப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவை பெற்றுத் தந்திருந்தது.
தொடர்ந்து நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள முடியாமல் போனதற்கும், ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியே பிரதான காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்தியாவின் யுத்த வரலாற்றில், அது தனது யுத்த தந்திரங்களை மாற்றியமைக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவமாகவும், யாழ் பல்கலைக்கழக தரையிறக்கம் இந்தியப் படைத்துறைத் தளபதிகளுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருந்தது.
அதுமட்டுமல்ல, பின்நாட்களில் ஈழ மண்ணில் இருந்து இந்தியப் படைகள் பின்வாங்கிய பின்னரும் கூட, இந்தியப் படைத்தளபதிகளும், இராஜதந்திரிகளும் தமக்குள் பொருமிக்கொண்டும், தம்மிடையே சண்டைகள் பிடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும் இருப்பதற்கு காரணமாக அமைந்த ஒரு சம்பவமாக, அன்றைய அந்தத் தரையிறக்கத் தோல்விகள் அமைந்திருந்தன.
குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்:
புலிளுடனான தாக்குதலை- குறிப்பாக புலிகளிடம் அடிவாங்கிய யாழ் பல்கலைக்கழக மைதான தரையிறக்க நடவடிக்கையை நெறிப்படுத்திய இந்தியப் படை அதிகாரியின் பெயர் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்.
இந்தியப் படை நடவடிக்கை பற்றி பின் நாட்களின் அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். அவர் கூறுகையில்,
முதலில் புலிகளுடன் நாம் எதற்காக மோதுகின்றோம் என்று எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை. எந்த ஒரு தாக்குதலுக்கும், யுத்தத்திற்கும் ஏதாவது ஒரு குறிக்கோள் இருப்பது அவசியம். ஆனால் புலிகளுடன் நாம் ஆரம்பித்த யுத்தத்தைப் பொறுத்தவரையில் எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை.
அன்று தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் எனக்கு ஒன்பது ஹெலிகாப்டர்கள் தேவை என்று கேட்டிருந்தேன். தரையிறங்கிய துருப்பினருக்கு வானில் இருந்து தேவையான சூட்டாதரவை வழங்குவதற்கென்று இதனை நான் கோரி இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அவை மறுக்கப்பட்டிருந்தது.
முக்கியமாக இந்திய அமைதிகாக்கும் படையின் யுத்த நடவடிக்கைகளை வெறும் அரசியல் இராஜதந்திரியான தீட்ஷித் நெறிப்படுத்த ஆரம்பித்ததுதான் அனைத்தும் பிழையாகிப் போவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. இவ்வாறு ஹரிகிரத் சிங் தெரிவித்திருந்தார்.
கொமாண்டரின் முட்டாள்தனம்:
புலிகளை வழைத்துப் பிடிப்பதற்கு என்று கூறி இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட அந்த தரையிறக்கம் பற்றி பின்நாட்களில் கருத்து தெரிவித்த முன்நாள் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீக்ஷித், அது இந்தியப் படை கொமாண்டரது முட்டாள்தனமான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார். மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் மேற்கொண்ட முட்டாள்தனமான தரையிறக்க நடவடிக்கையினால்தான் இந்தியப் படையினர் அதிக இழப்புக்களைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. பூரண நிலவில், புலிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் ஹெலிக்கொப்டர் தரையிறக்கத்தை மேற்கொள்வதை, முட்டாள்தனம் என்று குறிப்பிடாமல் வேறு எவ்வாறு கூறமுடியும்? இந்தியப் படையினரின்; திட்டத்தை தொலைத் தொடர்பு பரிமாற்றங்களின் போது புலிகள் நிச்சயம் ஒட்டுக்கேட்டிருப்பார்கள் என்பதை இந்தியப் படை அதிகாரிகள் புரிந்துகொண்டிருக்கவேண்டும். மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் ஒரு நல்ல அதிகாரி கிடையாது. இலங்கையில் இந்தியப் படைக்கு கிடைத்த முதலாவது ஜெனரல் ஒரு முட்டாள் என்பது எமக்கு ஒரு பெரிய பின்னடைவே என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை.
புலிகள் மீது இந்தியப் படைகள் மேற்கொண்ட திடீர் தாக்குதல் முயற்சி பற்றி ஜெனரல் கல்கட் பின்நாட்களில் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில்,
யாழ் குடாவை கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டப்படும்போது நானும் அங்கிருந்தேன். உண்மையிலேயே அது நல்லதொரு திட்டமாகவே இருந்தது. அதேவேளை நடவடிக்கைகள் பிழைத்தது பற்றி நான் கருத்துக் கூறுவது அவ்வளது நல்லதாக இருக்கமாட்டாது. ஏனெனில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்போது நான் அங்கு இருக்கவில்லை.
அன்றைய கள நிலவரங்களையும், தேவைகளையும் அடிப்படையாக வைத்துத்தான் நடவடிக்கை தொடர்பான முடிவை ஜெனரல்; ஹரிகிரத் சிங் எடுத்திருப்பார். அதனால் அந்த நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நான் தீர்ப்புக் கூறுவது பொருத்தமல்ல. ஆனால் ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். அவர் எடுத்திருந்த எந்த ஒரு முடிவையும் அவர் தனது மேலதிகாரிகளுடன் நிச்சயம் கலந்தாலோசித்திருக்கவேண்டும். யாழ்ப்பாண தரையிறக்க விடயத்தைப் பொறுத்தவரை அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.
விடுதலைப்புலிகளின் பலம், அவர்களிடமுள்ள ஆயுதங்களின் விபரங்கள் என்பன தெரியாமல் நேரடியாகச் சென்று அவர்களைத் தாக்க முற்பட்டதே எமது பின்னடைவிற்கு காரணம் என்று நான் நினைக்கின்றேன்.
அதேவேளை, இந்தியப் படையினருக்கு புலிகள் தொடர்பாக வழங்கப்பட்டிருந்த பிழையான தகவல்களும், பிழையான முடிவை நாம் மேற்கொள்ளக் காரணமாக அமைந்திருந்தது என்ற உண்மையையும் அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். புலிகள் ஒருபோதும் இந்தியப் படையினரைத் திருப்பித் தாக்கமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருந்த புலனாய்வுத் தகவல்களும் எங்களை பிழையாக வழிநடத்தியிருந்தன. இவ்வாறு ஜெனரல் கல்கட் தெரிவித்திருந்தார்.
ஆகமொத்தத்தில், இலங்கை வந்த இந்திய உயரதிகாரிகள் அனைவரும் இந்தியா திரும்பியதும், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி அடித்துக்கொள்ளும் அளவிற்கு, ஈழமண்ணில் பாரிய தோல்வியை விடுதலைப் புலிகள் அவர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.
இன்று கூட, இந்தியப் படைகளின் அந்த அக்டோபர் நடவடிக்கை பற்றி எழுதும், பேசும் அனைத்து ஆய்வாளர்களும், அறிஞர்களும், அன்றைய தினத்தில் இந்தியப் படைகளுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு அசம்பாவிதம் எதிர்காலத்தில் எப்போதுமே ஏற்பட்டுவிடக்கூடாது என்றுதான் குறிப்பிடுகின்றார்கள்.
இந்தியப் படையினருக்கு அந்த இரவில் ஏற்பட்ட கெட்ட கனவு அன்றுடன் மட்டும் முடிந்துவிடவில்லை.
அதுபோன்ற பல கெட்ட கனவுகளை ஈழ மண்ணில் இந்தியப் படைகள் தொடர்ந்தும் காண நேர்ந்தது.
இந்திய அரசியல்வாதிகள் ஈழத்தமிழருக்கு தொடர்ந்து செய்துவந்த துரோகங்களின் தண்டனையை, பாவம் இந்தியப் படை ஜவான்களே அறுவடை செய்ய நேர்ந்ததுதான் உண்மையிலேயே மிகப் பெரிய சோகம்.
இரகசிய இராணுவ நடவடிக்கையும் பகிரங்கப் படுகொலைகளும்!அவலங்களின் அத்தியாயம்! பாகம்-7 -நிராஜ் டேவிட்
..என்ற ஒரு புதிய அத்தியாயத்தை வரைய ஆரம்பித்தது.
ஈழத்தமிழர்களைக் காப்பாற்றப் போவதாகக் கூறி இலங்கை வந்த இந்தியப் படை வீரர்கள் கண்களில் அகப்பட்ட தமிழர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிய ஒரு கொடூர செயலைப் புரிய ஆரம்பித்திருந்தார்கள்.
புலிகளின் பூரண முற்றுகைக்குள் அகப்பட்ட நிலையில் யாழ் பிரம்படி ஒழுங்கையில் தளம் அமைத்திருந்த இந்திய பராக் கொமாண்டோக்கள் தமக்கு மேலிடத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுகளின்படி கண்களில் அகப்பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
திருமதி விஸ்வலிங்கம் என்பவருடைய வீட்டில் தங்கியிருந்த பத்துப் பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அந்த வீட்டை அவர்கள் தமது தற்காலிக தளமாக ஆக்கிக்கொண்டு அங்கு நிலை எடுத்திருந்தார்கள்.
காயப்பட்ட நிலையில் மணியம் என்பவர் தெரியாமல் அந்த வீட்டினருகே வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டார். அவரை உள்ளே அழைத்த இந்தியப் படைவீரர்கள் அங்கு அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.
மதிய வேளையில் தனது உறவினர் ஒருவரைத் தேடி அங்கு வந்த சோமசுந்தரம் என்பவரும் சுடப்பட்டார். தெரிந்தோ தெரியாமலோ திருமதி விஸ்வலிங்கத்தின் வீட்டைக் கடந்து சென்றவர்கள் அனைவருமே ஈவிரக்கம் இன்றிச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
ஸ்ரீலங்காப் படைகள் வழங்கிய உதவிகள்:
இதற்கிடையில் முற்றுகைக்குள் அகப்பட்ட இந்தியப் பராக் கொமாண்டோக்களுக்கு உதவியாக யாழ் கோட்டையில் இருந்து பரவலாக செல் தாக்குதல்கள் ஆரம்பமாகி இருந்தன. யாழ் கோட்டையில் இருந்து தொடர்ச்சியாக எறிகணைகள் ஏவப்பட்டபடியே இருந்தன.
புலிகளின் கவனத்தைத் திசை திருப்பவும் புலிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தவும் செல்தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டபடியே இருந்தன. அந்த செல் மழையில் பல தமிழ் உயிர்கள் கொல்லப்பட்டன. பல வீடுகள் சேதமாக்கப்பட்டன. பலர் அங்கவீனமானார்கள்.
இந்த செல் தாக்குதல் விடயத்தில் வெளிவராத ஒரு உண்மையும் இருந்தது.
அதாவது இப்படியான ஒரு செல்தாக்குதலை மேற்கொண்டிருந்தவர்கள் கோட்டையில் இருந்த ஸ்ரீலங்காப் படையினர் என்பது பின்நாட்களிலேயே தெரியவந்தது.
யாழ் கோட்டையினுள் தங்கியிருந்த இந்தியப்படையினரிடம் செல்கள் ஏதும் இருக்கவில்லை. அதேவேளை முற்றுகைக்குள் உள்ளாகி இருந்த இந்தியப்படையினரை உற்சாகப்படுத்த அப்பிரதேசத்தில் செல் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளுவதும் இந்தியப்படைத் தரப்புக்கு அவசியமாக இருந்தது. அதனால் இந்தியப்படை அதிகாரிகள் ஸ்ரீலங்காப் படையினரிடம் அந்த உதவியைக் கோரி இருந்தார்கள்.
“ஒப்பரேஷன் லிபரேசன் ”நடவடிக்கையைத் தொடருவதற்கு உதவியாக ஏற்கனவே பெருமளவு செல்களை கோட்டையில் இருந்த ஸ்ரீலங்காப் படைகள் தமது களஞ்சியங்களில் சேமித்து வைத்திருந்தார்கள். இந்தியப் படைகளின் வருகையைத் தொடர்ந்து அவற்றைப் பாவிக்கும் நல்ல தருணம் கிடைக்காமல் அவர்கள் பொருமிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆவலைத் தீர்த்துவைக்கும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இந்தியப் படைத்துறைத் தலைமை வழங்கியதைத் தொடர்ந்து அவர்களது செல் தாக்குதல்கள் மிகுந்த உற்சாகத்துடன் மீண்டும் ஆரம்பமாகின.
யாழ்ப்பாணம் மீண்டும் செல்-வந்த(?) நாடாக மாற ஆரம்பித்தது.
புதிய திட்டம்:
புலிகளின் முற்றுகைக்குள் அகப்பட்ட நிலையில் நகரமுடியாதபடி பிரம்படி வீதியில் தற்காலிகத் தளம் அமைத்து தங்கியிருந்த இந்தியப்படை பராக் கொமாண்டோக்களை மீட்பதற்கு என்று ஒரு புதிய திட்டம் இந்தியப் படை அதிகாரிகளால் வகுக்கப்பட்டது.
அந்த திட்டத்தின் விபரங்கள் சங்கேத வார்த்தைகளினுடாக பராக் கொமாண்டோக்களுக்கும் அறிவிக்கப்பட்டன. பராக் கொமாண்டோக்களை மீட்கும் பணி 12.10.1987ம் திகதி அதிகாலை 2 மணிக்கு ஆரம்பமானது.
அதிகாலை திடீரென்று வானில் தோன்றிய இந்தியப் படைக்குச் சொந்தமான ஹெலிக்கொப்டர்கள் 50 மி.மீ. இயந்திரத் துப்பாக்கியால் சகட்டுமேனிக்கு சுட்டுக்கொண்டு இங்கும் அங்கும் பறந்து திரிந்தன. ஹெலிக்கொப்டர்களில் இருந்து செல்களும் ஏவப்பட்டன.
இந்தியப் படையினர் ஒரு புதிய தரையிறக்கத்தை மேற்கொள்வதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கான அனைத்து எத்தனங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியப் படையினரின் தொலைத்தொடர்புச் சாதனங்களும் பிரம்படி ஒழுங்கைக்கு அருகில் உள்ள வீதிகளின் பெயர்களையும் தரையிறக்கத்தை மேற்கொள்ளுவதற்கு தோதான தரை அமைப்பைக் கொண்ட இடங்களின் பெயர்களையும் அடிக்கடி குறிப்பிட்டு இந்தியப் படையினர் மற்றொரு தரையிறக்கத்தை மேற்கொள்ள இருப்பதாக புலிகளை நம்பவைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருந்தன.
இந்தியப் படையினரின் ஆரவாரங்களையும் பரிமாறப்பட்ட அவர்களது தொலைத்தொடர்பு பரிவர்த்தனைகளையும் அவதானித்த புலிகள் இந்தியப் படையினரின் புதிய தரையிறக்கம் ஒன்றை எதிர்கொள்ளுவதற்கு தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையில் இந்தியப் படையினர் தங்கியிருந்த கோட்டை முகாமில் இருந்தும் இந்தியப் படையினர் ஒரு நகர்வினை மேற்கொள்ள ஆரம்பிப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டார்கள். அந்த நகர்வினை எதிர்கொள்ளவும் புலிகளின் ஒரு அணி அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் கவனத்தை பல திசைகளிலும் திருப்பிவிட்டு இந்தியக் கமாண்டோக்களை மீட்பதற்கான ஒரு உண்மையான நகர்வினை மிகவும் இரகசியமாக இந்தியப் படையினர் மேற்கொண்டார்கள்.
புலிகள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்த நகர்வு அமைந்திருந்தது.
இந்தியப் படையின் மேஜர் அனில்கவுல் என்பவர் தலைமையில் இந்தியப் படைக்குச் சொந்தமான இரண்டு யுத்தத் தாங்கிகள் (main Battle tanks) காங்கேசன்துறை தளத்தில் இருந்து புறப்பட்டு தெற்கு நோக்கி நகர ஆரம்பித்திருந்தன. நள்ளிரவில் டாங்கிகளின் இரைச்சல் யாழ் மக்களுக்கு புதிதாக இருந்தது. புலிகளின் வாகன இரைச்சலாக இருக்கலாம் என்று எண்ணி மக்கள் அவ்வளவு அக்கறை காண்பிக்கவில்லை.
காங்கேசன்துறையில் இருந்து புகையிரதப் பாதை வழியாகவே பயணம் மேற்கொண்ட அந்த இரண்டு யுத்தத்தாங்கிகளும் சந்தடியின்றி பிரம்படி ஒழுங்கையை வந்தடைந்தன.
ஏற்கனவே சங்கேத பாஷையின் மூலம் பரிமாறப்பட்டிருந்த அந்த மீட்பு நடவடிக்கை பற்றிய விபரத்தை அறிந்திருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்களும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள்.
அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தத்தில் இந்தியக் கொமாண்டோக்களின் அடுத்த கட்ட நடவடிக்கை மெதுமெதுவாக – அதேவேளை மிகவும் அழுத்தமாக எழுதப்பட்டது.
இரகசிய நடவடிக்கை
யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் ஒரு தற்காலிக தளத்தை அமைத்து நிலைகொண்டபடி புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்த பராக் கொமாண்டொக்களை மீட்பதற்காக இந்தியப் படையினரின் இரண்டு யுத்த தாங்கிகள் காங்கேசன்துறை இராணுவ முகாமிலிருந்து புறப்பட்டன. வீதிகளில் புலிகள் சென்றி அமைத்து நிலைகொண்டபடி அனைத்து திசைகளிலும் இருந்து முன்ஆற ஆரம்பித்திருந்த இந்தியப் படைகளின் பல்வேறு அணிகளையும் எதிர்த்துக் கடுஞ்சமர் புரிந்து கொண்டிருக்கையில் யுத்த தாங்கிகளின் மீட்பு நகர்வு மிகவும் இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை இந்த இரகசிய நடவடிக்கை பற்றிய விபரங்கள் சங்கேத மொழிகளில் தொலைத்தொடர்பு கருவிகளின் ஊடாக பராக் கொமாண்டோக்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர்களும் டாங்கிகளின் வருகையை எதிர்பார்த்து ஒரு பாதையில் நிலைகொண்டபடி தயார் நிலையில் இருந்தார்கள்.
காங்சேன்துறையில் இருந்து ரயில் பாதை வழியாக மெல்ல மெல்ல நகர்ந்த அந்த இரண்டு யுத்ததாங்கிகளும் பிரம்படி ஒழுங்கைக்கு அருகில் வந்ததும் திடீரென்று ஊருக்குள் திரும்பின.
நள்ளிருட்டு இந்த தாங்கிகளின் வருகையை மறைத்துவிட்டிருந்தது.
பல்வேறு திசைகளில் இருந்தும் யாழ்ப்பாணத்தை நோக்கிய இந்திய இராணுவத்தின் முற்றுகை நகர்வுகள் ஆரம்பமாகி விட்டிருந்த நிலையில் புலிகளின் கவனம் முழுவதும் அந்த முன்நகர்வுகளை எதிர்கொள்வதிலேயே இருந்தன.
வானில் வட்டமிட்டபடி சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளிக்கொண்டிருந்த ஹெலிக்காப்டர்களை எதிர்கொண்டு சண்டையிடவேண்டிய தேவையும் புலிகளுக்கு உருவாகி இருந்தது.
யாழ் கோட்டையில் இருந்து நிமிடத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் பொழியப்பட்டுக்கொண்டிருந்த செல் மழையில் இருந்து தப்பவேண்டிய கட்டாயமும் புலிகளுக்கு இருந்தது.
ஏற்கனவே யாழ்க்குடாவில் ஆரம்பமாகி இருந்த மக்கள் இடப்பெயர்வுக்கு உதவவேண்டிய நெருக்குதல்களும் புலிகளது உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
அடுத்ததாக வானில் இருந்து மற்றுமொரு தரையிறக்கம் திடீரென்று இடம்பெறலாம் என்று எதிர்பாத்து புலிகளின் சில படையணிகள் பரவலாகவும் நிலைகொண்டு காத்திருந்தன.
புலிகளின் முக்கிய படையணிகளின் கவனம் பல்வேறு திசைகளிலும் திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில் சந்தடியில்லாமல் நகர்ந்து பிரம்படி ஒழுங்கையை வந்தடைந்த யுத்த தாங்கிகள் அங்கு தமது ருத்திர தாண்டவத்தை ஆரம்பித்தன.
ரயில் பாதையை அண்டி கட்அவுட் நிலை எடுத்திருந்த புலிகளின் ஒரு சிறு அணியால் முற்றிலும் இரும்பினாலான அந்த யூத்த தாங்கிகளின் நகர்வை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்களின் துப்பாக்கி வேட்டுக்கள் அனைத்தும் கடினமான உருக்கு இரும்பினாலான அந்த தாங்கிகளின் உடம்பில் பட்டுத் தெறித்தனவே தவிர பாதிப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தாங்கி வந்து சேர்ந்த இடம் எது என்று பார்ப்பதற்காக தனது தலையை வெளியே நீட்டிய மேஜர் அனில் கவுல் என்ற அதிகாரி சூட்டுக் காயத்திற்கு உள்ளாகி இருந்தார். அவரது ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது. மற்றப்படி அந்த மீட்பு நடவடிக்கை இந்தியப் படையினருக்கு வெற்றிகரமானதாகவே அமைந்திருந்தது.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படையினர்
தமது உயிர்களைக் கைகளில் பிடித்தபடி பிரம்படி வீதிச் சுற்று வட்டாரத்தில் நிலையெடுத்திருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்கள் தமது மீட்பு உறுதியாகிவிட்ட சந்தோஷத்தில் அதுவரை அடக்கி வைத்திருந்த தமது கோபத்தை அப்பிரதேச மக்களின் மீது செலுத்த ஆரம்பித்தார்கள்.
அங்கிருந்த வீடுகளை எரித்தார்கள். கண்களில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினார்கள்.
பிரம்படி வீதியை வந்தடைந்த யுத்த தாங்கிகள் சுமார் 40 நிடங்கள் வரை அப்பிரதேசத்தில் நின்றன. கொல்லப்பட்ட எட்டு இந்தியப் படைவீரர்களின் உடல்கள் மற்றும் படுகாமடைந்த ஆறு படைவீரர்கள் யுத்த டாங்களினுள்ளே ஏற்றப்பட்டும்வரை அங்கு கொடூரச் சம்பவங்கள் பல இடம்பெற்றன.
இந்திய இராணுவ வீரர்களால் தமது பாதுகாப்பிற்கென பணயக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த பலரும் கயிற்றினால் பிணைக்கப்பட்டு தாங்கிகளின் சங்கிலிச் சில்லுகளின் கீழே கிடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் உடல்கள் நசுங்கிச் சிதைந்தன.
ஏற்கனவே இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டவர்கள் மற்றும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களும் டாங்கிகளால் மிதித்து சிதைக்கப்பட்டார்கள். இந்தியப் படைக்கொமாண்டோக்களை ஏற்றிக்கொண்டு திரும்பிய டாங்கிகள் அங்கிருந்த சில வீடுகளையும் கட்டிடங்களையும் குண்டு வீசித் தகர்த்துவிட்டும் சென்றன.
பிணக் குவியல்களில் புலர்ந்த பொழுது:
மறுநாள் பொழுது பிணக் குவியல்களின் காட்சியாகவே புலர்ந்தது.
டாங்கிகள் வந்து சென்ற வீதிகள் முழுவதுமே பிணங்கள் சிதைவடைந்து சிதறிக் காணப்பட்ட காட்சி யாழ் மக்களுக்கு புதிதான ஒன்றாகவே இருந்தது.
ஸ்ரீலங்காப் படைகளுடனான இத்தனை வருட கால கொடிய யுத்தத்திலும் இதுபோன்ற ஒரு காட்சியை யாழ் மக்கள் காணவில்லை.
ஸ்ரீலங்கா விமானங்களின் குண்டு வீச்சுக்கள், படுகொலைகள், சுற்றிவழைப்புக்கள், இனஅழிப்பு நடவடிக்கைகள் என்று எத்தனையோ அழிவுக் காட்சிகளை யாழ் மக்கள் பார்த்து அனுபவித்திருந்த போதிலும் அன்றைய நாளில் டாங்கிகளால் சிதைக்கப்பட்ட நிலையில் மனித உடல்கள் சிதறிக்கிடந்ததான அந்தக் காட்சி அவர்களுக்கு அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்துவதாகவே இருந்தது.
அதுவும் தங்களைக் காப்பதற்கென்று வந்திருந்த இந்தியப் படையினர் இப்படி ஒரு அட்டூழியத்தைச் செய்திருந்தார்கள் என்பதை அவர்களால் ஜீரணிக்கமுடியாமல் இருந்தது.
அப்பிரதேசத்தில் 40 இற்கும் மேற்பட்ட உடல்கள் டாங்கிகளினால் ஏற்றப்பட்டு சிதைந்து சின்னாபின்னமாகிப்போய் காணப்பட்டன.
அங்கும் இங்கும் சிதறிக்கிடந்த அந்த உடல்கள், உடலின் பாகங்கள் எஞ்சியிருந்த பிரதேசவாசிகளினாலும் சில விடுதலைப் புலி உறுப்பினர்களாலும் சேகரிக்கப்பட்டு ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு ஏரியூட்டப்பட்டன.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்தியப் படையினரின் படுகொலைகள் அன்றுடன் முடிந்துவிடவில்லை. இந்தியப் படைகள் ஈழ மண்ணில் நிலைகொண்டிருந்த அந்த இரண்டு வருட காலப்பகுதிகளிலும் அவை தொடரவே செய்தன.
அன்று எரிக்கப்பட்ட அந்தப் பிணக் குவியல்கள் அடுத்த சில நாட்களில் இந்தியப் படையினர் ஈழ மண்ணில் ஆட இருந்த கோரதாண்டவம் பற்றிய செய்தியை முன் அறிவித்தபடி எரிந்துகொண்டிருந்தது.
முதியவர்களை கொலைசெய்த இந்தியப் படையினர் !-அவலங்களின் அத்தியாயங்கள்- 9 –நிராஜ் டேவிட்
புலிகளுடன் சண்டைகள் மூளும் பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் தலைநகரையும் அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் நிலை கொண்டிருந்தனர்.
ஒக்டோபர் 11ம் திகதி நள்ளிரவு இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த பரசூட் தரையிறக்கத் தாக்குதல் நடவடிக்கை மட்டும் இந்தியப் படையினர் நினைத்தபடி வெற்றிகரமாக நடைபெற்றிருந்தால், அவர்களது எண்ணம் நிச்சயம் ஈடேறியிருக்கும். ஆனால் புலிகளின் எதிர்த்தாக்குதலும் அதில் புலிகள் அடைந்திருந்த வெற்றியும் இந்தியப் படையினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் தமது யாழ் முற்றுகையின் இரண்டாம் கட்டத்திற்கு செல்வதற்கு முற்பட்ட போதிலும், அதுவும் அவர்களுக்கு ஈடேறவில்லை. யாழ் கோட்டையில் இருந்து நகர்வினை மேற்கொண்டு யாழ் நகரைக் கைப்பற்றுவதும் அவர்களுக்கு முடியாது போயிருந்தது. யாழ் கோட்டை வாயில்களை அடுத்து புலிகள் அமைத்திருந்த பலமான கட்அவுட் நிலைகள் இந்தியப் படையினரின் எந்தவொரு நகர்வினைவும் சாத்தியமற்றதாக்கியிருந்தது.
யாழ் கோடைக்குள்ளிருந்த இந்தியப் படையினர் வெளியே நகரமுடியாது தவித்ததானது அவர்கள் ஒரு முற்றுகைக்குள் உள்ளானது போன்ற ஒரு பீதியை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. யாழ் கோட்டைக்குள் அடைபட்ட நிலையில் இருந்த இந்தியப் படையினரைப் பொறுத்தவரையில் இதுபோன்ற ஒரு அனுபவம் அவர்களுகளுக்கு முன்னெப்போதுமே ஏற்பட்டதில்லை.
முகாமொன்று பூரண முற்றுகைக்கு உள்ளாகி, அந்த முகாமிற்குள் அடைபட்டிருந்த அனுபவம் இந்தியப் படையினருக்கு முன்னெப்போதும் ஏற்பட்டதேயில்லை. அதுவும் வேற்று நாடொன்றில் இவ்வாறு அநாதரவாக விடப்பட்டது போன்றதொரு நிலை அவர்களைக் கதிகலங்க வைத்தது.
போதாததற்கு கோட்டையில் தங்கியிருந்த ஸ்ரீலங்காப் படையினரும் புலிகள் பற்றியும் தமிழ் மக்கள் பற்றியும் இந்தியப் படையினரின் பயத்தை அதிகரிப்பது போன்ற கதைகளை அவிழ்த்துவிட்டிருந்தார்கள்.
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் இருந்து ஒரு காரியத்தை மட்டும் ஒழுங்காகச் செய்தார்கள். யாழ் நகரிலுள்ள மக்கள் குடியிருப்புக்களை நோக்கி சகட்டுமேனிக்கு செல் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அங்கிருந்த ஸ்ரீலங்காப் படையினரும் அதற்கு உற்சாகம் வழங்கினார்கள்.
விளைவு- பல தமிழ் மக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன. தமிழ் மக்கள் மறுபடியும் ஒரு அகதி வாழ்க்கையை நோக்கிச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
படுகொலைகளின் அத்தியாயங்கள்:
யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கும், யாழ் கோட்டையினுள் அடைபட்ட நிலையில் புலிகளின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த இந்தியப் படையினரை மீட்பதற்கும், புலிகளை ஒழிப்பதற்கும் என்று இந்தியப் படையினர் பலாலியில் இருந்து பல முனைகளிலும் நகர்வுகளை ஆரம்பித்திருந்தார்கள்.
உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினுடான இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது. இந்தியப் படையின் பிரிகேடியர்களான சாமேராமும் ஜே.எஸ்.டிலானும் அந்தப் படைப்பிரிவை தலைமை தாங்கி வழி நடாத்திக் கொண்டிருந்தார்கள். இந்தப் படைப்பிரிவு உரும்பிராய் பிரதேசத்தை வந்தடைந்தபோது மற்றொரு அனர்த்தம் நிகழ்ந்தது.
பாதையூடாக நகர்வினை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் படுகொலைகளின் அத்தியாயமொன்று தமிழ் மக்களின் இரத்தத்தினால் எழுதப்பட்டது.
கண்ணிவெடிச் சம்பவத்தை அடுத்து இந்திய இராணுவத்தினர் கண்களில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றார்கள். பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பலவும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. அச்சத்தின் காரணமாக வீடுகளைப் பூட்டிவிட்டு வீட்டினுள்ளேயே மறைந்திருந்தவர்களை கதவுகளை உடைத்துக்கொண்டு உட்சென்ற இந்தியப்படையினர் சுட்டுக்கொன்றார்கள்.
உரும்பிராய் பிரதேசத்தில் 93 வயது மூதாட்டி உட்பட நான்கு பெண்கள் தங்கியிருந்த ஒரு வீட்டினுள் புகுந்த இந்தியப் படையினர் அங்கிருந்த நான்கு பெண்களையும் கொடூரமாகச் சுட்டுக் கொன்றார்கள். நோய் காரணமாக படுக்கையில் இருந்த மூதாட்டி கட்டிலில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். மற்றயை இளம் பெண்களின் சடலங்கள் வீட்டின் பின்பகுதியில் இருந்து பின்னர் கண்டெடுக்கப்பட்டன.
உரும்பிராய் சந்திக்கு வடக்கே ஐம்பது யார் தொலைவில் இலங்கை திருச்சபைக்கு எதிரே இருந்த பொன்னம்பலம் என்பவருக்குச் சொந்தமான வீடொன்றினுள் அயலில் வசித்த சிலர் அடைக்கலம் தேடிச் சென்றிருந்தார்கள். ஆசிரியரான பஞ்சாட்சரம் என்பவருடைய குடும்பம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியான பிரேமா, அவரது தாயான திருமதி சின்னத்துரை போன்றவர்களும் அந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்திருந்தார்கள்.
பொன்னம்பலத்தின் குடும்பத்தினர். மற்றும் அடைக்கலம் தேடி வந்தவர்கள் என்று மொத்தம் 11 பேர் அங்கு தங்கியிருந்தார்கள். அந்த வீட்டை சூழ்ந்துகொண்ட இந்தியப் படையினர், வீட்டில் தங்கியிருந்த அனைவரும் உடனடியாக வெளியே வரவேண்டும் என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் உத்தரவு பிறப்பித்தார்கள். வெளியே வராவிட்டால் வீட்டையே குண்டுவீசித் தகர்த்துவிடப் போவதாகவும் எச்சரித்தார்கள்.
வேஷ்டி ஒன்றைக் கிழித்து வெள்ளைக் கொடி தயார் செய்த பொன்னம்பலம், அந்தக் கொடியை கையில் ஏந்தியபடி வீட்டை விட்டு வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து வீட்டிலிருந்த மற்றவர்களும் வெளியே வந்தார்கள்.
“பையா“| என்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. திருமதி சின்னத்துரை, பொன்னம்பலம் தவிர மற்றவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்.
திருமதி சின்னத்துரையின் கணவர் தனது மனைவியையும், மகள் பிரேமாவையும் பாதுகாப்பாக பொன்னம்பலத்தின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு உரும்பிராய் சந்தியிலிருந்த தனது வீட்டியேயே தங்கியிருந்தார். “கவலைப்படாதேயும் அவையள் சண்டை பிடிக்கவந்த இராணுவத்தினர் இல்லை. அவையள் அமைதிகாக்கும் இராணுவத்தினர். நான் அவர்களுக்கு விளங்கப்படுத்துவேன்“ என்று மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலேயே தங்கிவிட்டார். அவரும் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
வயது முதிந்தவர்களும், பெண்களும், குழந்தைகளுமே இப்பிரதேசத்தில் அனேமாகக் கொல்லப்பட்டிருந்தார்கள். இளைஞர்கள் ஏற்கனவே அப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இருந்ததால் இளைஞர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் குறைவு என்றே கூறவேண்டும்.
தொடர்ந்த கொலைகள்:
அப்பிரதேசத்தில் இருந்த வீடொன்றில், யாழ் பல்கலைக்கழக மாணவியான அம்பிகா என்ற பெண்ணின் தாயாரும், பாட்டியும் மலையகத்தைச் சேர்ந்த வயதான வேலைக்காரர் ஒருவரும், மற்றொரு முதியவரும் வசித்து வந்தார்கள். அப்பிரதேசத்தில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, வீட்டைப் பூட்டிவிட்டு கட்டில்களின் கீழேயும் மேசைகளின் கீழேயும் மறைந்திருந்த அந்த முதியவர்கள் தங்களது வீட்டைக் கடந்து யுத்த தாங்கியும் இந்தியப் படையினரும் செல்வதை இரைச்சலின் மூலமும் பேச்சொலிகள் மூலமும் அறிந்துகொண்டார்கள். இந்த அரவங்கள் ஓய்ந்து சிறிது நேரத்தின் பின்னர், அந்த வீட்டில் இருந்த முதியவர் மெதுவாக எழுந்து வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்று நிலமையை அவதானிப்பதற்கு எத்தனித்தார்.
அங்கிருந்த எவருமே இந்தியப் படையினருக்கு கொஞ்சமும் பயப்படவில்லை. சண்டைகளின் இடைநடுவில் சிக்குண்டுவிடுவோம் என்ற பயம் அவர்களுக்கு இருந்ததே தவிர, ஸ்ரீலங்கா இராணுவம் போன்று இந்தியப் படையினர் அப்பாவி மக்களை கொலைசெய்துவிடுவார்கள் என்ற அச்சம் அங்கிருந்த முதியவர்களுக்குச் சிறிதும் கிடையாது.
வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் எட்டிப் பார்த்த முதியவரை நோக்கி ஒரு துப்பாக்கிச் சன்னம் சீறிக்கொண்டு புறப்பட்டது. இந்திய யுத்த தாங்கியின் பின்னால் மறைந்தபடி வந்திருந்த படை வீரர்களில் சிலர் அப்பிரதேசத்தில் ஏற்கனவே பதுங்கி நிலையெடுத்திருந்தார்கள். அவர்களில் ஒருவனே முதியவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தான். எந்தவித சத்தமும் இடாது அந்த முதியவர் சரிந்து கீழே வீழ்ந்தார்.
அதனைத் தொடர்ந்து மேலும் சில இந்தியப் படை வீரர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த அம்பிகாவின் தாயாரையும், பாட்டியையும் சுட்டுக்கொன்றார்கள். முதலாவது வெடிச் சத்தம் கேட்டதுமே நிலமையைப் புரிந்துகொண்டு மறைவிடம் ஒன்றினுள் பதுங்கிக்கொண்ட அந்த மலையக வேலையாள் மட்டும் உயிர் தப்பியிருந்தார்.
இந்தியக் கொலைகாரர்கள்:
இந்தியப் படையினர் அப்பிரதேசத்தில் அந்த இரண்டு நாட்களிலும் மேற்கொண்ட கொலைகள் எண்ணில் அடங்காதவை. பல படுகொலைச் சம்பவங்கள் அங்கு இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அனேகமான சம்பவங்கள் பற்றிய செய்தியை வெளியே தெரிவிப்பதற்குக் கூட எவருமே மிஞ்சாத வகையில் பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அங்கு இடம்பெற்றிருந்தன. அப்பிரதேச மக்கள் என்றுமே கண்டும், கேட்டும் அறிந்திராத அவலங்களை அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அனுபவிக்க நேர்ந்தது.
அப்பிரதேசத்தில் வசித்து வந்த சிவப்பிரகாசம் என்ற நபர் முறிந்த பனை என்ற நூலின் ஆசிரியர்களிடம் கூறும்போது “எனது வீடு அமைந்திருந்த அரை மைல் சுற்று வட்டாரத்திற்குள் மாத்திரம் 18 பொதுமக்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டார்கள். இவர்களில் ஏழு பேர் மட்டுமே ஆண்கள், அவர்களும் 60 வயதைக் கடந்திருந்தவர்கள்” என்று தெரிவித்திருந்தார்.
நாற்பத்தேழு வயது வர்த்தகரான இலகுப்பிள்ளை ஏகாம்பரம், முப்பது வயதான அவரது மனைவி டொரத்தி, மூன்று வயது மகள் ஷெரின் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வந்து விழுந்து வெடித்த ஷெல்களால் அதிர்ச்சியுற்ற அவர்கள் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான கட்டிடம் ஒன்றில் தங்குவது நல்லது என்று நினைத்து வீட்டை விட்டு பின் வாசல் வழியாக வெளியே வந்தார்கள். அங்கு பதுங்கியிருந்த இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
ஏகாம்பரத்தின் வீட்டுக்கு அடுத்ததாக டொரத்தியின் மைத்துனி திருமதி சீனித்தம்பியின் வீடு இருந்தது. திருமதி சீனித்தம்பி, அவரது தாயார், அவரது சகோதரன், ஏழு வயதுக் குழந்தை ஒன்று என்று பலர் அங்கு தங்கியிருந்தார்கள். அவர்களது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த இந்தியப்படையினர் வீட்டில் இருந்த அனைவரையும் சுட்டுக்கொன்றார்கள். அவர்களது உடல்களையும் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்த ஏகாம்பரம் தம்பதிகளின் உடல்களையும் அருகில் காணப்பட்ட குழி ஒன்றினுள் போட்டு கிரவல் கற்களினால் மூடியிருந்தார்கள்.
சிறிது காலத்தின் பின்னர் அந்த குழியைத் தோண்டிய போது, ஏகாம்பரம் தனது குழந்தையை அணைத்தபடி எலும்புக்கூடாக காட்சியளித்ததாக ஊர்மக்கள் தெரிவித்தார்கள்.
இதேபோன்று அப்பிரதேசத்தில் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சோகச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. தங்களது இளம் பிள்ளைகளை பாதுகாப்பாக ஏற்கனவே வெளியே அனுப்பிவிட்டு வீடுகளில் தங்கியிருந்த வயது முதிந்தவர்களே அனேகமாக கொல்லப்பட்டிருந்தார்கள். வீடுகளுக்குள் நுழைந்த இந்தியப்படை வீரர்கள் அங்கு தங்கியிருந்த முதியவர்களை இரக்கம் இன்றிச் சுட்டுக் கொன்றிருந்தார்கள்.
அப்பிரதேசத்தில் மட்டும் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ற்கும் அதிகம் என்று உத்தியோகப்பற்றற்ற கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்காப் படைகளும் களத்தில்?
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, இந்தியப் படையினாரின் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினரும் துணைபோயிருந்தது பற்றிய பல செய்திகள் அந்த காலகட்டத்தில் வெளியாகி இருந்தன.
இந்தியப் படையினர் யாழ்நகரை நோக்கி ஸ்ரீலங்காப் படையினரின் உதவிகளையும் பெற்றிருந்த விடயம் அப்பொழுது மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. தமிழ் நாட்டில் எதிர்ப்புக்கள் உருவாகிவிடும் என்பதால் இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் உதவிய விடயங்கள் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.
ஆனாலும், இந்தியப் படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஸ்ரீலங்காப் படையினர் பல சந்தர்ப்பங்களில் தம்மை மறந்த நிலையில் சிங்களத்தில் பேசிய தம்மை வெளிக்காண்பித்திருந்தார்கள்.
இந்தியப் படையினருக்கு வழி காண்பித்து அவர்களை அழைத்துச் சென்ற ஸ்ரீலங்காப் படையினருக்கு ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியாது, தமிழும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது சிங்களம் மட்டுமே.
மற்றய ஸ்ரீலங்காப்படை வீரர்களுடன் அவர்கள் சிங்களத்தில் பேசியதை வீடுகளில் மறைந்திருந்த பல தமிழ் மக்கள் கேட்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியப்படையினர் மேற்கொண்டிருந்த படுகொலை நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களின் ஜென்ம விரோதிகளான சிங்களப் படையினரையும் துணைக்கழைத்துச் சென்றதானது ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய துரோகங்களுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.nirajdavid.com/முதியவர்களை-கொலைசெய்த-இந/
சிங்களத்தில் பேசிய இந்தியப் படையினர் (அவலங்களின் அத்தியாயங்கள்-10) – நிராஜ் டேவிட்