மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்! அமைதியாக இருந்த சபை!
ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தனி ஈழ கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நிலை குறித்து நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் விசேட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இவற்றையும் மீறி ஈழம் பிறக்குமாயின் அது மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்திலேயே பிறக்கும்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது பொதுஜன முன்னணியும் மிகவும் கீழ்த்தரமாகவே தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தார்கள்.
அரசாங்கத்திற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் ஈழம் உருவாக வழிவகுக்கும் என அப்பாவிச் சிங்கள மக்களை வழிநடத்தி இருந்தார்கள்.
இது மிகவும் தவறானது. இப்படியாக சாதாரண சிங்கள மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என நாடாளுமன்றில் சம்பந்தன் எச்சரித்தார்.
இதேவேளை நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் விசேட விவாதத்தில் ஆளும் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாடும் பொது பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
விமல் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு இடையிலும் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
எனினும் சம்பந்தனின் உரையின் போது கூட்டு எதிர்க்கட்சியோ வேறு கட்சியினரோ எவ்வித குழப்பங்களையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருந்தார்கள்.
மஹிந்தவை பகிரங்கமாக விமர்சித்த போதும் கூட்டு எதிர்க்கட்சியினர் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. அத்துடன் சம்பந்தன் தனது உரையை முடித்துக்கொண்டு அமரும் போது அவருடைய உரைக்காக கைத்தட்டல்கள் எழுந்ததையும் அவதானிக்க முடிந்தது.
http://www.tamilwin.com/parliment/01/174747?ref=home-feed
சிங்கத்தின் காலில் காயம் பட்டாலும் சீற்றம் குறைவதில்லை!