ஆணைக் குழுவின் உறுப்பினருக்கு சட்டத்தரணி விடும் அச்சுறுத்தலைக் கண்டும் நீதித்துறை கண்மூடி உறங்குகின்றதா?
ந.மதியழகன்
பெப்ரவரி 11 ஆம் திகதி உங்கள் மீது தாக்குதல் தொடங்கப்படும். அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருங்கள் என ஓர் ஆணைக் குழுவின் உறுப்பினருக்கு சட்டத்தரணி விடும் அச்சுறுத்தலைக் கண்டும் நீதித்துறை கண்மூடி உறங்குகின்றதா அல்லது நீதிமன்ற பணியாளர் என்பதனால் மௌனம் காக்கின்றதா என்ற ஐயம் எழுகின்றது.
இலங்கையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 19 ஆம் திருத்தச் சட்டம்மூலம் அளிக்கப்பட்ட உரிமைகளின் அடிப்படையில் தலையிடும் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் காலத்து சட்டமீறல்களை உடனுக்குடன் பதிவு செய்யும் நிலமை ஏற்படும்போது அரசியலில் அபகீர்த்தி ஏற்படும் என அஞ்சும் தரப்பு ஆணைக்குழு மீது தாக்குதலைத் தொடுக்கின்றது.
அதாவது தேர்தல் திணைக்கள அதிகாரிகளே தமக்கு எதிராக செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர மேயர் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளது மட்டுமன்றி 11 ஆம் திகதியோடு தாக்குதல் தொடுக்கப்படும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என அச்சுறுத்தலும்அ விடுத்துள்ளார். இது ஒரு சட்டத்தரணியே சட்டத்துறை மீது கொண்டுள்ள மதிப்பும் பண்பும் தெரிகின்றது.
குறித்த கூற்றினை தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனம் 17.01.2018 முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் இளைங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தெரிவித்தார். அதாவது பொய்யான வழக்குகள் சோடிக்கப்படுகின்றன. நாங்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலிலே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மல்லாகம் நீதிமன்றில் எம்மைக் கொண்டுசென்று விட்டுள்ளார்கள் எனவும் சட்டத்தை மீறாத தமது தேர்தல் பிரச்சாரங்களின் மீது தடையை ஏற்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ரத்னஜீவன் எச். ஹுல் என்பவரே கொழும்பு பத்திரிகைகளான சண்டே ரைம்ஸ் மற்றும் ரெலிக்கிராவில் எமது கட்சியைக் குறிவைத்துத் தாக்கி மோசமான கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எங்களுடைய வேட்பாளர்கள் கைது செய்யப்படவேண்டும் எனத் தாக்கியிருக்கின்றார். எங்கள் மீது சரியான முறையில் வழக்குத் தாக்கல்செய்யவில்லை என பொலிசார்மீதும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
இன்று 11 ஆம்திகதி தாக்குவோம் என பகிரங்கமாக காலவரையறை குறிப்பிட்டு ஓர் சட்டத்தரணி அரச ஆணைக்குழு ஒன்றின் உறுப்பினருக்கே அச்சுறுத்தல் விடும் நிலமையிலும் எந்த நீதிமன்றமும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவே சாதரண ஓர் பொதுமகன் ஒரு குடிமகனுக்குத் தெரிவித்திருந்தால் அவனுக்கு ஆவா குழுவென்றோ அல்லு டில்லு குழு என்றோ பட்டம் சூட்டி சிறையில் தள்ளுவதற்கு எத்தனை சட்டங்கள் உள்ளதோ அத்தனை சட்டங்களையும் உபயோகித்து நாம் சட்டத்தை காக்கின்ற காவலர்கள் என சிலர்ரு முண்டியடித்திருப்பர்.
இருப்பினும் இவ் விடயத்தில் மௌனம் காக்கப்படுகின்றது. தொடர்ந்தும் மௌனமே காக்கப்படும் எனவும் தெரிகிறது. ஏனெனில் இதனை கூறியவர் ஓர் நீதிமன்றப் பணியாளர் ( சட்டத்தரணி என்ற வகையில் ) இந்தச் சட்டத்தரணியே தான் மட்டுமே தமிழ் உணர்வாளன் எனக் காண்பிப்பதற்கு முந்திரிக்கொட்டைபோன்று முண்டியடித்து திணைக்களத்தின் அனுமதியோடு மட்டும் முற்றவெளியில் இடம்பெறவிருந்த பௌத்த துறவியின் தகனக் கிரிகையினை தடுப்பதற்கான முயற்சி எடுத்தும் இறுதியாக நீதிமன்றமே அனுமதி வழங்கும் நிலமைக்கும் இட்டுச் சென்றவர்.
அது மட்டுமன்றி அரசியலில் கொள்ளை கொள்ளை எனக் கூறியவர்கள் அதனைக் கைவிட்டு பதவிகளுக்காக இடம்பிடிக்க முடிவினை மாற்றும்போது அந்த இடம் வேறு யாரின் கைக்குப் போய்விடக்கூடாது என்பதற்காக தற்போது அதனை ஏற்கின்றோம் எனக் கூறி ஏமாற்றுவதுபோல் இதற்கும் எந்த நியாயத்தினைக் கூறுவார்களோ யாம் அறியோம். ஆனால் தவறு எனில் அது எவர் செய்யினும் தவறுதான் என சொல்லப்படுவது போல் வன்முறையை தூண்டுபவர்கள் சாதாரண குடிமகனோ அல்லது சட்டத்தரணியோ சட்ட நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படும்போது அரச இயந்திரமும் நீதித்துறையும் மௌனம் காக்கமேயானால் இந்த அச்சுறுத்தல் வன்முறையாகவும் மாறலாம்.
நீதியை மதிக்க வேண்டும் நீதிமன்றங்கள் கோயிலாக பார்க்கப்பட வேண்டும் எனில் நீதிந்துறையின் புனிதமும் காக்கப்பட வேண்டும். அதனை நீதித்துறையின் பணியாளர்களான சட்டம் தெரிந்தவர்களே பின்பற்றாத நிலையில் சாதாரண குடிமக்களிற்கு மட்டும்தான் சட்டமா என்ற ஐயம் எழுகின்றது. இதனால்தான் என்னவோ அண்மையில் ஓர் மூத்த அரசியல்வாதி தனது உரையில் இன்று இலங்கையில் அதிக ஊழல் மிக்க நிறுவனமாக இரண்டு இடங்கள் உள்ளன. அதில் இரண்டாவது இடத்தில் நீதி மன்றம் உள்ளது எனத் தெரிவித்தார். ( குறித்த விடயமும் தற்போது இன்னுமோர் நீதிமன்றில் உள்ளது. )
இவ்வாறு ஆணைக்குழுவின் உறுப்பினருக்கு எதிராக விடும் அச்சுறுத்தல் தொடர்பில் அவசரமாக ஆணைக்குழுவினால் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு அச்சுறுத்தலுக்கு உள்ளான உறுப்பினரால் 19 ஆம் திகதி யாழில் இருந்து வெளிவந்த பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த கட்சியின் அமைப்பாளரும் சட்டத்தரணியுமானவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதோடு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கோரியுள்ளார்.
88, செம்மணி வீதி
நல்லூர்
யாழ்ப்பாணம்
பல பத்திரிகைகளில் ஒரு கட்சிக்காரரகள்; எனக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் எதிராக பல பொய்ச்செய்திகளைத் தொடர்ச்சியாக உண்டாக்கி வருகின்றனர்.
தேர்தல் ஆணக்குழுவில் நாம் எமது கடமையைப் பக்கச் சார்பற்றுச் செய்து வருகிறோம். முதன்முதலாக ஆலயமொன்றில் ஒரு தேர்தல் சம்பந்தமான கூட்டத்தை நாம் நிறுத்தியது ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் தான.; அதற்காக நாங்கள் கிறிஸ்தவருக்கு எதிரானவர் என்றல்ல. மேலும் மாவிட்டபுரத்துக் கோவில், ,பழம் வீதி வைரவர் கோவில் என்பவற்றில் நடந்த கூட்டங்களிற்கும் புத்தளத்து இஸ்லாமிய பள்ளியொன்றில் நடந்த பிரசங்கத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சட்டங்களை அதிகமாக மீறி வருகின்ற கட்சி ஒன்று, நான் சைவசமயத்துக்கு எதிராக மட்டுமே இயங்குகின்றேன் என்று சொல்லிச் சண்டித் தனத்தில் கிளம்பியுள்ளனர். எனக்கு எதிராக வம்புவேலை செய்வோமென்று பத்திரிகைகளிலும் வெருட்டியுள்ளார்கள். நான் ஒரு மனநோயாளியென்றும், என்னை விடுதலைப்புலிகள் 2006ம் ஆண்டு துரத்தியது புலிகள் செய்த ஒரு நல்ல காரியம் என்றும் இப்பொழுது டான் தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார்கள்.
கூடவே, அவர்களது கட்சிக்காரரரும் சட்டத்தரணியுமாகிய ஒருவர் விடாது என்க்கு எதிராகப் பல வழக்குகள் தொடர்வேனென்றும் வெருட்டிப் பார்க்கிறார். இவர்களோடு; அதிபர் பரீட்சையில் சித்திபெறாது பின் பத்திரிகையாசிரியராய் அமர்ந்த ஒருவர் தன் பத்திரிகையின் தலைப்பக்கத் தலையங்கத்திலேயே பிழையாகத ;தமிழில் என் பெயரை றட்ணஜீவன் என்று எழுத்துக்கூட்டியுள்ளார்.
இந்த வெருட்டல்களுக்காக ஆணைக்குழு தன் கடமைகளை நிறுத்தப் போவதில்லை. கிறிஸ்தவ ஆலயமோ, இந்துக் கோவிலோ, இஸ்லாமிய பள்ளிவாசலோ, வேறுசமயத்து வளாகமோ அரசியலுக்குட்படுத்தப் பட்டால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மக்களுக்குக் காவாலிகள் யாரென்று தெரியும். கல்வி அறிவாளர்களான எம் தமிழ்வாக்காளர் தம்மைப் புத்திஜீவிகள் போல் நடிப்பவர்களைப்பற்றி சிந்தித்து செயல்படவேண்டும்.
இப்படிக்கு
சா. இரத்தினஜீவன் ஹே. ஹுல்
Leave a Reply
You must be logged in to post a comment.