Political Column 2015 (2)

தேர்தலில் வெற்றிபெற இனவாதத்தை கையிலே தூக்கும்  இராஜபக்சா!

நக்கீரன்

இராஜபக்சாவை ஆதரித்து கடந்த யூன்  12, 2015 இல் மாத்தறையில் நடந்த கூட்டத்தில் கூடிய மக்களுக்கு விடுத்த செய்தியில் 2009 ஆம் ஆண்டு தான் தோற்கடித்த   வி.புலிகளுக்கு  இப்போதைய அரசு புத்துயிர் கொடுக்க முனைவதாக குற்றம்சாட்டினார்.

முன்னர் நுககொட, கண்டி, இரத்தினபுரி போன்ற இடங்களில் நடந்த கூட்டங்களை விட மாத்தறைக் கூட்டத்தில் அதிகளவில் மக்கள்  கலந்து கொண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது.  சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மூன்றில் ஒரு பங்கு) கலந்து கொண்டுள்ளார்கள்.

1970 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மகிந்த இராஜபக்சா தொடர்ந்து அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக, இருமுறை சனாதிபதியாக பதவி வகித்துள்ளார். இவற்றைச் சுட்டிக் காட்டி அவருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவரிடம் சொல்லிவிட்டார். இருந்தும் பதவி ஆசை, அதில் கிடைக்கும் சுகம் காரணமாக  மீண்டும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதம வேட்பாளராக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக இராஜபக்சா தெரிவித்துள்ளார்.

கடந்த சனவரி 8 ஆம் நாள் நடந்த தேர்தலில் 449,072 வாக்கு வித்தியாசத்தில் தோற்ற இராஜபக்சா முழுமையாக முடிவுகள் வெளிவராத நிலையிலும்  அலரிமாளிகையை காலிசெய்து பெட்டி படுக்கையுடன்  உலங்குவானூர்தியில்  தனது சொந்த ஊரான மெதமுலானவுக்கு பறந்து சென்றார்.  சனவரி 9 காலை தன்னைப் பார்த்து ஆறுதல் சொல்லவந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது  தான் தோற்கவில்லை என்றும் தமிழர்களால் தனக்கு ஏற்பட்ட தோல்வியை  ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் சொன்னார்.  தன்னைப் பொறுத்தளவில்  பெரும்பான்மை  சிங்கள – பவுத்த வாக்காளர்கள் (50.64%) தனக்குத்தான்  வாக்களித்துள்ளார்கள் எனச் சொன்னார்.   தனது தோல்விக்கு வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலும்  வாழும் தமிழர்களது வாக்கு வங்கிதான் காரணம் என்றும் குற்றம் சுமத்தினார்.  ஆட்சி அதிகாரம் சிங்கள மக்களது கைகளைவிட்டுப் போகவில்லை  நான் தோல்வி அடைந்ததால் தமிழர்கள் எந்தப் பயனையும்  அடையப் போவதில்லை என்றும் சாபம்  போட்டார்.

மகிந்த இராஜபக்ச இந்தப் பஞ்சப் பாட்டை  மறக்காமல்  தனக்கு ஆதரவாக தென்னிலங்கையில் நடைபெறும் கூட்டங்களில் கூடும் மக்களுக்கு  செய்தியாகச்  சொல்லி  வருகிறார்.

மகிந்த இராஜபக்சாவுக்கு ஆதரவு திரட்டும்  கூட்டங்களுக்கு சுதந்திரக் கட்சியினர் போகக் கூடாது என்று சுதந்திரக் கட்சித் தலைவர் சிறிசேனா விதித்த தடையை 76 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டை செய்யவில்லை. இது சுதந்திரக் கட்சியின் தலைவராக  சிறிசேனா இருந்தாலும் கட்சி அவரது முழுக்கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதைக் காட்டுகிறது. இதில் வியப்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை.  இராஜபக்சா  சனாதிபதி என்ற முறையில் சுதந்திரக் கட்சியை பத்து ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவரால் அமைச்சர் ஆனவர்கள், அவரது தயவால்  ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டவர்கள்,  ஊழலில்  புரண்டவர்கள்  தொடர்ந்து அவரை ஆதரிக்கிறார்கள். ஊழல்  செய்தவர்கள், ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்பவர்கள், பதவி இழந்தவர்கள்  அதிலிருந்து தப்ப   இராஜபக்சா என்ற   படகு அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

இதுவரை காலமும்  தன்னை ஆதரித்து நடைபெறும் கூட்டங்களுக்கு செய்தியை மட்டும்  தெரிவிக்கும் இராஜபக்சா இம்முறை கூட்டத்துக்குப் போய் அதில் கலந்து கொண்டுள்ளார்.  ஆனால் மேடை ஏறவில்லை. அடுத்த கூட்டத்தின் போது மேடையேறப் போவதாக  பயமுறுத்தியுள்ளார். மகிந்த இராஜபக்சா தனது செய்தியில் பின்வரும் அம்சங்களை வலியுறுத்தியிருக்கிறார்.

(1) யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைக்கப்பட்டிருக்கும்  159 இராணுவ முகாம்களில்  சிறிசேனா அரசு 59 முகாம்களை மூடிவிட்டது.

(2) சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வி.புலிகளை விடுதலை செய்ய சிறிசேனா  அரசு ஆயத்தங்கள் செய்து வருகிறது.

(3) சீனாவும் உருசியாவும்  வி.புலிகளைத் தோற்கடிக்க எமக்கு உதவினார்கள். ஆனால் இந்த அரசு சீன முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்லாத்  திட்டங்களையும் நிறுத்திவிட்டது.

(4) என்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி  என்னை யாரும் வீழ்த்திவிட முடியாது. எனவே வி.புலிகள் மீண்டும் தலையெடுக்க விடாமல் தடுக்க மக்கள் முன்வரத்  தயாராக இருக்க வேண்டும்.

(5)  இப்போதுள்ள அரசின் ஈழ சார்பான  வெளியுறவுக் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லையேல்  நாட்டுக்கு  ஆபத்து.

(6) வி.புலிகள் 2009 இல் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் இப்போதுள்ள அரசு அதன் மீள் எழுச்சிக்கு வழிகோலுகிறது.

(7) மக்கள் வி.புலிகள் மீளத் தலைதூக்குவதைத்   தடுக்க முன்வரவேண்டும்.

மே 2009 இல்  போர் முடிவுக்கு வந்ததும் வி.புலிகளைத் துடைத்து அழித்துவிட்டதாக  இராஜபக்சா  மார் தட்டினார். இன்று அதே இராஜபக்சா  வி.புலிகள் மீளத்  தலையெடுக்கிறார்கள் என ஒப்பாரி வைக்கிறார்.

மகிந்த இராஜபக்சாவை தீவிரமாக  ஆதரித்து  மூன்று அரசியல்வாதிகள் மேடைகளிலும் தொலைக்காட்சியிலும் பேசிவருகிறார்கள். ஒருவர்  தேசிய சுதந்திர  முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச. இவர் முன்னர் ஜாதிக விமுக்தி பெரமுனையில் இருந்த காலத்தில் செஞ்சட்டை தோழர் என அடையாளம் காணப்பட்டவர்.  மற்றவர்  தீவிர  ரொஸ்கியவாதி என நாம் நினைத்துக் கொண்டிருந்த  நவ  சாம சமஜவாதக் கட்சித் தலைவர்  தோழர் வாசுதேவா நாணயக்கார. மூன்றாம் பேர்வழி  மகாஜன எக்சத் பெரமுன என்ற கட்சியின் தலைவா தினேஷ் குணவர்த்தனா.  இவரும் தன்னை ஒரு சோசலீசவாதி என்று சொல்லிக் கொள்பவர்.

இவர்களது முன்னோடிகளான  தோழர் என்.எம். பெரேரா,  தோழர் கொல்வின் ஆர். டி சில்வா, மார்க்சீயவாதி   தோழர்  எஸ்.ஏ. விக்கிரமசிங்கி, தோழர் பீட்டர் கெனமன் போன்றோர் முதலில்  கம்யூனிசம், மார்க்சீயம், ட்ரொட்ஸ்கிசம், சோசலீசம் பேசி முடிவில் அவற்றை மூட்டை கட்டி வைத்துவிட்டு   பச்சை சிங்கள – பவுத்த இனவாதக் கட்சியான சுதந்திரக் கட்சியோடு கூட்டணி வைத்து அமைச்சர்கள் ஆனவர்கள்.  சிங்கள – பவுத்த பேரினவாத அரசியலுக்கு  கறைபடிந்த நீண்ட வரலாறு உண்டு.

1956  இல் எஸ்டபுள்யூஆர்டி பண்டாரநாயக்காவுக்கு  தனிச் சிங்களம் மட்டும்  முழக்கம்  ஆட்சியைப் பிடிக்க உதவியது.

1970 இல் பவுத்தத்துக்கு முதலிடம், சிங்களம் மட்டும் சட்டத்துக்கு அரசியல் யாப்பில் இடம், சிறுபான்மை இனத்தவருக்கு இருந்த ஒரேயொரு பாதுகாப்பான  29 ஆவது சட்ட விதியை ஒழிப்போம் எனக் கூறி   சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியைப் பிடித்தார்.

2010 இல் வி.புலிகளது பயங்கரவாத்தை ஒழித்து வடக்கையும் கிழக்கையும்  தென்னிலங்கையோடு இணைத்து விட்டதை சுட்டிக் காட்டி   சனாதிபதி தேர்தலில்  இராஜபக்சா வெற்றி  பெற்றார்.

2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் தோற்றாலும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல புலிகளைச் சாட்டாக வைத்து ஆட்சியை பிடிக்க மகிந்த இராஜபக்சா சிங்கள – பவுத்த பேரினவாத ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

இந்தப் பரப்புரை மூலம்  இராஜபக்சா சிங்கள மக்களின் மனங்களில்  அச்சத்தை விதைக்கிறார்.  “தேசபக்தர்களுக்கு  பெரும் அதிர்ச்சி தரும் வகையில்  ஈழக் கொடி மீண்டும் ஏற்றப்படுகிறது. 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டு விட்டன.  அரசில் உள்ள ஒரு சாரார் பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுமாறு வற்புறுத்துகின்றனர்.  எரிக் சொலெய்ம் போன்ற சமாதான செயற்பாட்டாளர்கள்  நாடு மீண்டும் சுவாலைவிட்டு  எரிய வேண்டும் என விரும்புகிறார்கள். இவர்கள் எல்லோரும் பிரிவினைக்கான நிகழ்ச்சி நிரலில் வேலை செய்கிறார்கள்”   என மாத்தறையில்  “மகிந்தாவை மீண்டும் கொண்டு வாருங்கள்”  என்ற தொனிப் பொருளில் நடந்த கூட்டத்துக்கு அனுப்பி வைத்த செய்தியிலேயே  மகிந்த இராஜபசக்சா இப்படி விஷம் கக்கியுள்ளார்.  உண்மையில் இந்த 59 முகாம்களும் இராஜபக்சா சனாதிபதியாக இருந்த காலத்தில் மூடப்பட்டவையாயும். “சிறிலங்காவில் புதிய அரசாங்கம் கடந்த சனவரி மாதம் பதவிக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகளை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிக்கை மூலம்  நிராகரித்துள்ளது.

மகிந்த இராஜபக்சா மட்டுமல்ல அவரது தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவருமான   நிமால் சிறிபால  டி சில்வா  இனவாத ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை மீண்டும் நாட்டுக்குள் வரவழைப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு  பாரிய அச்சுறுத்தலாகும் என்றும் புலம்பெயர்  தமிழர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் நாட்டுக்கு மிகவும் ஆபத்தாக  அமைந்துவிடும் எனவும்  வாந்தி எடுத்துள்ளார்.

“புலம்பெயர் அமைப்புகளுடனும் புலி அமைப்புகளுடனும் இலண்டனில் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை முக்கிய பங்கினை வகித்துள்ளன. அதேபோல் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீராவும் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் செயலாளரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கு என்னவென்பது தெளிவாகத் தெரிகின்றது” என நிமால் டி சில்வா பேசியிருக்கிறார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேசத்தின் தேவைக்கும் புலம்பெயர் புலிகளின் தேவைக்கும் அமையவே நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டை நாம்  தொடக்கத்தில் இருந்தே முன்வைத்தோம். ஆனால் அதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. இப்போது இவர்களின் உண்மை நிலைமை என்னவென்பது வெளிச்சத்துக்கு வருகின்றது. இந்த அரசாங்கம் வடக்கில் பிரிவினை வாதிகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டுவருகின்றது. இன்னும் சிறிதுகாலம் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்குமானால் மீண்டும் ஈழத்துக்கான அடித்தளம் இடப்படும். எனவே நாட்டின் நிலைமைகளை மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் . மீண்டும் நாட்டில் குழப்பங்கள் வருமானால் அது மூவின மக்களையுமே பாதிக்கும். எனவே தமிழ், முஸ்லிம் மக்களும் தமது பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்கவேண்டும்” என  தமிழ் – முஸ்லிம் மக்களை எச்சரிக்கும் பாணியில் பேசியுள்ளார். அதாவது  சிறிசேனா – இரணில் அரசு நீடித்தால் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை வெடிக்கும் எனச் சொல்கிறார்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்  பேய் போல் தெரிவது போல இராஜபக்சா தானே மூடிய முகாம்களை சிறிசேனா அரசு பதவிக்கு வந்தபின் மூடியதாக கொஞ்சமும் வெட்கப்படாமல் பொய் உரைக்கிறார். சனாதிபதி சிறிசேனா அரசுக்கு எதிராக தூக்குவதற்கு இராஜபக்சா வசம் எத்தனையோ ஆயுதங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்   அவற்றைப் பயன்படுத்தாது தமிழ்ப் புலி மீண்டும் வந்துவிட்டது என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்.  இராஜபக்சா தமிழ் – சிங்கள சமூகங்களிடையே அச்சத்தையும் பகைமையையும் உருவாக்க மெத்தப் பாடுபடுகிறார். அவர்களுக்கிடையே நல்லிணக்கமும் நட்பும்  நிலவினால் தனது  இனவாத அரசியலுக்கு ஆபத்து என நினைக்கிறார்.

இராஜபக்சா ஆட்சிக் காலத்தில்  திறைச்சேரிப் பணம் பல   மலைவிழுங்கித் திட்டங்களுக்கு  தண்ணீர் போல் செலவழிக்கப்பட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லா மேம்பாட்டுத் திட்டங்களும் அவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டன. அம்பாந்தோட்டை கொழும்பில் இருந்து 250 கிமீ (180 கல்) தொலைவில் உள்ளது. இந்த வெள்ளையானைத் திட்டங்கள் சுற்றுச் சூழல், திட்டம்பற்றிய நன்மை தின்மை, இலாப நட்டம் பற்றி அவர் கிஞ்சித்தும் கவலைப் பட்டதாக இல்லை.

(1) 2013 இல் மத்தள இராஜபக்சா பன்னாட்டு விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. சீனாவிடம் கடன் வாங்கிய  நிதியில்தான் இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. 2013 இல் திறக்கப்பட்ட இந்த விமான நிலையத்துக்கு  செலவான   தொகை 210 மில்லியன் (ரூபா765 மில்லியன்)  அமெரிக்க டொலர்கள் ஆகும்.  இன்று அந்த விமான நிலையத்தில் எந்த நாட்டின் விமானமும் தரையிறங்குவதில்லை! ஒரேயொரு flydubai  விமான சேவை மட்டும் இந்த விமானத்தைப் பயன்படுத்துகிறது! வருமானம் மாதம் ரூபா 16,000!

(2)  361 மில்லியன் (ரூபா 1.3 பில்லியன்)  அமெரிக்க டொலர் செலவில் சீன நிறுவத்தினால் கடன்பட்டுக் கட்டிய  மகம்புர மகிந்த இராஜபக்சா துறைமுகம் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஒரு வாரத்தில் ஒரு  கப்பல்  நங்கூரம் பாய்ச்சுவதே அபூர்வமாம்.

(3) கொழும்புக்குப் பதில் அம்பாந்தோட்டைக்கு வியாபாரத்தை இழுக்க  52  மில்லியன் அமெரிக்க டொலரில் (ரூபா 189 மில்லியன்) கட்டிய நவீன 6 ஒழுங்கை நெடுஞ்சாலையும் அதிகம் பயன்படுத்தப் படாது கிடக்கிறது.

(4)   2011 இல் 47 ஏக்கர் காணியில்  32,000 பேர் உட்காரக்கூடிய  சூரியவேவா விளையாட்டு அரங்கு ரூபா 700 மில்லியன் செலவில் கடன்பட்டுக் கட்டப்பட்டது. அந்த விளையாட்டு அரங்கில் இதுவரை 10 கிறிக்கட் போட்டிகளே நடைபெற்றுள்ளன.

(5) 2013 இல் நடந்த பொதுநல நாடுகளது உச்சி மாநாட்டின் போது பயன்படுத்தப்படுவதற்கு  பெரிய மாநாட்டு அரங்கம் கட்ட 15.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவழிக்கப்பட்டது. இன்று  அதனை யாரும் பயன்படுத்துவதில்லை.

(6)  300 ஏக்கர் காணியில் ஒரு  தாவரயியல் தோட்டம்  உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த தோட்டத்துக்கு   தொன் கணக்கில் தண்ணீர் தேவைப்படுகிறது. அதே சமயம் ஊர் மக்கள் குடிக்கிறதுக்குத்  தண்ணீர் இல்லாமல் அல்லாடுகிறார்கள்.

ஆனால் இந்த வெள்ளை யானைகள் பற்றி இராஜபச்சா அல்லது அவரது ஆதரவாளர்கள் யாரும் வெட்கமோ துக்கமோ  கொள்வதாகத் தெரியவில்லை.  மாறாக  தேர்தலில் வெற்றிபெற  இராஜபக்சா இனவாதத்தை கையிலே தூக்குகிறார்!  (19-06-2015)

 

http://tamil24news.com/news/2015/07/03/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d-

காணி நிலத்திடையே  வீடுகள்  கட்டித் தர வேண்டும்!

நக்கீரன்

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும் என்ற கட்டுரையை வியாழன் (ஏப்ரில் 2) இரவு எழுதி முடித்துவிட்டு நித்திரைக்குப் போய்விட்டேன். அரசு முதல் கட்டமாக  1,000 ஏக்கர் காணி கையளிக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் வயாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு கிராமசேவைப் பிரிவுகளில் 197 ஏக்கர் காணியும் வலிகாமம் கிழக்கில் வளலாய் கிராம சேவகர் பிரிவில் 233 ஏக்கர் காணியும் ஆக மொத்தம்  430 ஏக்கர் காணி மட்டுமே  மக்களுக்கு கையளிக்கப்பட்டது என எழுதியிருந்தேன். மிகுதி 570 ஏக்கர் காணிபற்றி ஒன்றும்   தெரியாது  இருந்தது.

அடுத்த நாள் காலை எழும்பி இணைய தளங்களைப் பார்த்த போது அரசு கையளித்த 430 ஏக்கர் போக   உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த  8 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய மிகுதி 570 ஏக்கர் காணியில் வாழ்ந்த மக்களுக்கு எதிர்வரும்  சித்திரைப் புத்தாண்டு அன்று கையளிக்கப்படும் என்ற இனிப்பான செய்தியை  யாழ்ப்பாண அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வளலாயில் மேலும் 195 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன் காங்கேசன்துறை தெற்கு (ஜே/235), பளைவீமன்காமம் வடக்கு (ஜே/236), பளைவீமன் காமம் தெற்கு (ஜே/237), கட்டுவன் (ஜே/238), தென்மயிலை (ஜே/240), வறுத்தலைவிளான் (ஜே/241), மயிலிட்டி வடக்கு (ஜே/246), தையிட்டி தெற்கு (ஜே/250) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே பகுதியளவில் அடுத்த கட்டமாக விடு விக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு முடியுமுன்னர் 5,382 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட வேண்டும். போர் முடிந்துவிட்டது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள்.  எனவே வடக்கில் இராணுவமோ இராணுவ முகாம்களோ இருக்க வேண்டியதில்லை. குறைந்த எண்ணிக்கையில் இராணுவம்  இருந்தால் போதும்.

இராஜபக்சாவும் சிறிசேனாவும் ஒன்றுதான் பெயர்தான் வித்தியாசம் என்று புலம்பிய கஜேந்திரகுமார் இனி வாய் திறக்கக்கூாடாது. சனாதிபதி தேர்தலை புறக்கணிக்க அவர் விடுத்த வேண்டுகோள் இராஜபக்சாவை சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற எடுத்த மறைமுக முயற்சியாகும்.

குறித்த பகுதிகளில் நடைபெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் முடிவடைந்ததும் எதிர்வரும் 7 ஆம் நாள்  அப்பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடவுள்ளனர். ஏற்கனவே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள வளலாய் மற்றும் வயாவிளான் பகுதியில் குடியேறிய மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு பல அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளது.  அது போன்று அப்பகுதிகளுக்கான மின்சார இணைப்புகளை விரைந்து ஏற்படுத்திக் கொடுப்பதற்கும்  இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது.

வலிகாமம் வடக்கில் கையளிக்கப்பட்ட காணிகள் போக மேலும்  5,382 ஏக்கர் காணி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அகப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.  இந்த வலயற்திற்குள்  இராணுவ குடியிருப்புகள், உணவகங்கள், நீச்சல் தடாகங்கள், விளையாட்டு மைதானங்கள், பவுத்த கோயில்கள்  அமைத்துள்ளன. கோல்ஃ விளையாடுவதற்கு மட்டும் 300 ஏக்கர் காணி பயன்படுத்தப்பட்டுள்ளது. இராணுவம் அபகரித்த காணியில் கத்தரி, மிளகாய் தோட்டம் செய்யப்படுகிறது. அதனை அச்சுவேலி மற்றும் திருநெல்வேலி சந்தைகளில் எமது மக்களுக்கு விற்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் குறைந்தது இரண்டு பரப்புக் காணியில் (குருநகர், பாசையூர் பகுதிகளில்  கால், அரைப்  பரப்பு) ஒரு சின்ன வீடுகட்டி வாழ்வதையே பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்.  மேலும் யாழ்ப்பாணத்தில் காணிச் சண்டை, வேலித் தகராறுதான் அதிகம் இடம்பெற்றன. ஒரு காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் முக்கால் விழுக்காடு காணி வழக்குகளாகும்! இப்போது நிலைமை என்னவென்று  தெரியவில்லை.

வலிகாமம் வடக்கைப் போலவே சம்பூரில்  போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களது காணிகளை கடந்த 9 ஆண்டுகளாக  அரசு  ஆக்கிரமித்துள்ளது.இலங்கை பேரினவாத அரசால் யூலை 26, 2006 அன்று  சம்பூரில் கிழக்கை மையப்படுத்தி தொடங்கிய போர்  மே 18, 2009 இல் முடிவடைந்தது.

வளம் கொழிக்கும் திருகோணமலை மாவட்டத்தின் மத்தியில் எழில் மிகு சம்பூர் கிராமம் வயல்கள் நிறைந்ததும் கடல் மற்றும் குளங்களைக்  கொண்டு விளங்குகிறது.   நெய்தலும் மருதமும் அருகருகே அமைந்துள்ளன. மூன்று பக்கங்கள் கடலாலும் மறுபக்கம் வயல்களாலும் சூழப்பட்டு பெயருக்கேற்றவாறு சம்பூரணமாகக் காணப்படுகிறது. தொன்மையான சம்பூர் கிராமம் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. மூதூர் நகரிலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள சம்பூர் பிரதேசம் 2 கிராம அதிகாரிகள் பிரிவுகளையும் 35.9 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.  அத்தோடு இப்பிரதேசத்தில் உள்ள மற்றய கிராமங்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ள ஒரு கிராமமாகும்.

மாவிலாற்றின் கண்மாய்களை  யூலை 26, 2006 இல் வி.புலிகள் மூடிவிட்டதைத் தொடர்ந்து  இராணுவம் யூலை 28, 2006 இல்  ‘Operation Watershed’       என்ற பெயரில்  இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது.    இதுவே ஈழப்போர் 4 இன் தொடக்கமாகும். அன்று மாலை 5.15 மணி அளவில் மூதூர் கிழக்கைச் சேர்ந்த சம்பூர், கூனித்தீவு, நவரத்தினபுரம், சூடைக்குடா, கடற்கரைச் சேனை ஆகிய கிராமங்கள் மீது கண்மூடித்தனமான எறிகணை, பல்குழல் பீரங்கி, விமானத் தாக்குதல்கள் இடைவிடாது நடந்தன. இதனால் இப் பிரதேச மக்கள் உடுத்த உடையுடன் உறவுகளை இழந்து, வீடுவாசல் உடைமைகளை இழந்து, கால்நடைகளை இழந்து  ஏதிலிகளாக மட்டக்களப்பு வரையும் ஓடினார்கள்.  ஏதிலி முகாம்களில் வாழ்ந்த இந்த மக்கள்  எழுத்தில் வடிக்க முடியாத  துன்ப துயரங்களுடன் வாழ்ந்து வந்தார்கள்.

2006 இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஏதிலிகளாகினர். வாகரையில்  300 க்கும் அதிகமான தமிழர்கள்  கொல்லப்பட்டனர். சம்பூரில் மக்களின் பொருட்கள் இராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டன.  வீதிகளுக்கு சிங்களப் பெயர் சூட்டுனார்கள். தமிழ் – முஸ்லிம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இராணுவத்தின் வல்வளைப்புக்கு உட்படுத்தப்பட்ட நிலம் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. ஓகஸ்ட் 11, 2006  அன்று மாவிலாற்றைப்  பிடித்து விட்டதாக இராணுவம் அறிவித்தது.  ஈழப்போர் 4  மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.

முதல் கட்டம்                –      மாவிலாறு, கட்டைபறிச்சான், மூதூர்
இரண்டாவது கட்டம்  –     சம்பூர்,  வெருகல், வாகரை
மூன்றாவது கட்டம்      –      மட்டக்களப்பு, உன்னிச்சை, தொப்பிக்கலை

இடம்பெயர்ந்த மக்களில் ஒரு சாரார் இன்னும் மீள்குடியமர்த்தப் படவில்லை. வாழையடி வாழையாக வாழ்ந்த இந்தக் கிராம மக்களுக்குச் சொந்தமான 10,000 ஏக்கர் நிலம் இராணுவத்தினால் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்டது.  அதனைச் சுற்றி மண்ணணை அமைக்கப்பட்டு பாதுகாப்பு வேலியும் போடப்பட்டது. இதில் மக்களுக்குச் சொந்தமான  வயல் நிலங்களும் அடங்கும்.  மாவிலாறு, சம்பூர், வாகரை ஆகிய பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள்  நூறு ஆண்டு பழமை வாய்ந்த காணி உறுதிகளை  வைத்திருக்கின்றனர். இந்த 10,000 ஏக்கரில்  அனல் மின் நிலையத்துக்கு 1,500 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டதாக  இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.  மேலும் 234 ஏக்கர் காணி திருகோணமலை கடற்படையினர் தளம் அமைக்க ஒதுக்கப்பட்டது.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கட்டைப்பறிச்சான், பட்டித்திடல், மணல்சேனை, கிளிவெட்டி போன்ற அகதிகள் முகாம்களில் 848 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். 310 குடும்பங்கள் கிளிவெட்டி முகாமிலும் பட்டித்திடல் அகதிகள் முகாமில் 134 குடும்பங்களும் மணல்சேனை அகதிகள் முகாமில் 134 குடும்பங்களும்  வாழ்ந்து வருவதுடன் கிளிவெட்டி அகதிகள் முகாமிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த முகாம்களில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசினால் தொடக்கத்தில் உலர் உணவு வழங்கப்பட்டு வந்தது பின்னர் டிசெம்பர் 22, 2012 நாள் முதல் அந்த உதவி நிறுத்தப்பட்டுவிட்டது.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  சம்பூர், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, சூடைக்குடா மற்றும் இளக்கந்தை ஆகிய 5 பாரம்பரியத் தமிழ்க் கிராமங்கள் அடங்குகின்றன. மூதூர் பிரதேச செயலகத்தின் 2008 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி இப்பகுதியில்  1, 940 குடும்பங்களைச் சேர்ந்த 7,494 பேர் வாழ்ந்து வந்தனர். இந்த மக்கள் மொத்தம் 3,500 ஏக்கர் நெற்காணி, 600 ஏக்கர் குடியிருப்புக் காணிக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் தேசிய அனல் சக்திக் கூட்டுத்தாபனமும் சிறிலங்கா மின்சார சபையும் இணைந்து சம்பூரில் 500 மெகா வார்ட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் நிருமாணித்து வருகிறது. இத் திட்டம் காரணமாக அங்கு வாழ்ந்து வந்த 7,494 பேர் தெருவோரத்துக்குத் துரத்தப்பட்டார்கள். அவர்கள் சிறு தறப்பாள் கொட்டில்களில் கடந்த 9 ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்மக்கள் வாழ்ந்த சுமார் 500 வீடுகளை எவ்வித முன்னறிவித்தலுமின்றி முன்னைய மகிந்த இராசபக்சே அரசு தரைமட்டமாக்கியது. சம்பூர், மூதூர் கிழக்கு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய ஆறு கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள ஏறத்தாள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களின் பூர்வீக நிலங்கள் அரசின் இந்த நடவடிக்கையால் அபகரிக்கப்பட்டது. மொத்தம் 5,547 ச.கி.மீ  தமிழர் நிலம் அரசினால் கபளீரம் செய்யப்பட்டு விட்டது.

உயர்பாதுகாப்பு வலயங்கள் எனத் தாயகத்தின் வளமான நிலங்கள் முழுவதையும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்கள இராணுவம் இன்று போர் முடிந்துள்ள நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் எதற்காக எனக் கேள்வி எழுப்பப்பட்டால் அவை அபாயகரமான பிரதேசங்கள் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்றும் நேரத்திற்கொரு கதை சொல்லிக் கொண்டு வந்தது.  மேலும் வி.புலிகள் வசம் இருந்த நிலங்கள், அவர்களுக்கு விற்கப்பட்ட காணிகள் போன்றவற்றை சிங்கள இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. மறுபுறத்தில் தொழிலுக்காக என்று கூறிக்கொண்டு வந்து தங்கும் சிங்களவர்களுக்கு  சில நாட்களிலேயே நிரந்தர வதிவுரிமை கேட்டவுடன் அவை வழங்கப்படுகின்றன.

இந்த மக்களில் ஒரு சாரார்  ஏழு ஆண்டுகள் கழித்து  மார்ச்சு 24, 2013 இல்

நவரத்தினபுரம், கூனித்தீவு மக்கள்  மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சம்பூர், கடற்கரைச்சேனை மக்கள் தொடர்ந்தும் ஏதிலி முகாம்களிலேயே முடங்கிக் கிடந்தனர்.

இந்த மக்கள்  தங்கள் சொந்தக்கிராமங்களுக்குத் திரும்பிச் சென்று மீளக்குடியமர இராணுவம் அனுமதி வழங்க மறுத்த நிலையில் கட்டைப்பறிச்சான், பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கிளிவெட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையங்களில் கடந்த ஒன்பது  ஆண்டுகளுக்கு மேலாக தங்க வைக்கப்பட்டுனர். அவர்களுக்கான உலர் உணவு நிவாரணம் உலக உணவு செயற்றிட்டத்தின் [WORLD FOOD PROGRAMME] கீழ் வழங்கப்பட்டு வந்தது.

இவர்களுக்கு இப்போது விடிவு காலம் பிறந்துள்ளது. சம்பூர்  மக்களது காணிகளுக்கு உயர் கட்டுப்பாட்டு வலயத்தில் இருந்து விடுதலை கிடைக்கவுள்ளது!

திருகோணமலை சம்பூரில் கடற்படையினரின் தேவைகளுக்காக உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு மக்களிடம் பறிக்கப்பட்ட 234 ஏக்கர் காணியும், பொருளாதார அபிவிருத்தி வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 818 ஏக்கர் காணியும் வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன் பொது மக்களிடம் மீள அளிக்கப்படும் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரில் 03 ஆம் நாள் சம்பூர் சென்ற  பிரதமர் விக்கிரமசிங்கி  அங்கு முகாம்யிட்டுள்ள கடற்படை அதிகாளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  இதனைத் தொடர்ந்து பத்திரகாளி அம்மன் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த மக்களைச் சந்தித்த இரணில் விக்கிரமசிங்கி அரசு கைப்பற்றிய  காணிகள்  ஏப்ரில் 28 ஆம் நாள் மக்களிடம் கையளிக்கப்படும் என்ற உறுதிமொழியைக் கொடுத்துள்ளார்.

அரசாங்கம் கைப்பற்றிய காணிகளை  மீளக் கையளிக்காது என்ற  அவநம்பிக்கை குடிகொண்டிருந்த நேரத்தில்   ஆட்சி மாற்றம் காரணமாக சம்பூர் மக்களுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. இருண்டு போன அவர்களது வாழ்வில்  நம்பிக்கைக் கீற்று  தெரிகிறது.

அரசாங்கம் காணிகளைத் திருப்பிக் கொடுத்தால் மட்டும் போதாது.  அவற்றில் குடியிருக்கத் தேவையான வீடு, கிணறு, வேலி போன்றவற்றை கட்டுவதற்கு அரசு நிதியுதவி செய்ய முன்வர வேண்டும்.  அல்லது வேறுநாடுகள், அரச சார்பற்ற   அமைப்புகளது உதவியைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையேல் மக்கள் பாதிக் கிணறைத் தாண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

http://www.seithy.com/breifArticle.php

 

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்!

நக்கீரன்

கடவுள் விடை கொடுத்தாலும் பூசாரி விடை கொடான் என்பது போல அரசு தமிழ் மக்களிடம் இருந்து பறித்த காணிகளை திருப்பிக்  கொடுப்பதில் இராணுவம் தொடர்ந்து இடையூறாக இருந்து வருகிறது. முதலில் வலிகாமம் வடக்கில் நிலமை எப்படியிருக்கிறது எனப் பார்ப்போம்.

1980 ஆம் ஆண்டுகளிலேயே யாழ்ப்பாணத்தில் போர் காரணமான இடம்பெயர்வுகள்  தொடங்கிவிட்டன. 1981 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி 831,112 (7.40%) இலட்சமாக இருந்த யாழ்ப்பாணக் குடாநாட்டின்  குடித்தொகை 2012 இல் இடப்பெயர்வு காரணமாக 583,378 (5.23%) ஆகக் குறைந்துவிட்டது.    இடப்பெயர்வு ஏற்படாது இருந்திருந்தால் இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் மக்கள் தொகை 14 இலட்சத்தைத்  தாண்டியிருக்கும். May 26th 1987

மே 26, 1987  முதல்  சிறிலங்கா இராணுவம் வடமராட்சியில் மேற்கொண்ட  “Operation Liberation”  நடவடிக்கையின் போதுதான் முதல்முறையாக பாரிய இடப்பெயர்வு ஏற்பட்டது.  அதன்போது சுமார் ஒரு இலட்சம் வரையிலான மக்கள்  வடமராட்சியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் தென்மராட்சிக்கும் சென்றிருந்தார்கள்.

வடமராட்சியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் பின் 1987 ஒக்தோபரில் இலங்கை வந்த  இந்திய இராணுவம் மக்களின் வீடுவாசல்களைஆக்கிரமித்திருந்தது. 1990 இல் இந்திய இராணுவம் வட கிழக்கை விட்டு வெளியேறியது. ஆனால் அதே ஆண்டு  ஆனி மாதம் பலாலியிலிருந்து சிங்கள இராணுவம் முன்னேறியபோது ஆயிரக்கணக்கான மக்கள் வலிகாமம் வடக்கில் இருந்து வெளியேறினார்கள்.  வெளியேறியவர்கள் முகாம்களை அமைத்து  தொண்டைமானாறு கெருடாவில், உடுப்பிட்டி, அச்சுவேலி ஆகிய இடங்களில் குடியேறியினார்கள்.

வலிகாமத்திலும் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலில் முகாம்களில் வாழ்ந்த மக்கள்  தமது வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்வதற்காக வன்னிக்கு இடம் பெயர்ந்தார்கள்.  இவ்வாறு வன்னிக்குச் சென்றவர்களில்  சுமார் 1,000 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 2009 க்குப் பின்னர் மீண்டும் அங்கிருந்து இடம்பெயர்ந்து வலிகாமம்  வடக்கில் முகாம்களில்  சிறிய குடிசைகளைக் கட்டி வாழ்கிறார்கள்.

1990 இல்     தமது  பொன்கொழிக்கும்  வளமான  மண்ணை விட்டு வெளியேறிவர்கள் – 25 ஆண்டுகளுக்கு முன்னர்  தமது வாழ்வாதாரங்களையும் அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டன்  வாழ்ந்த நிலத்தையும் மனைகளையும் தோட்டம் துரவுகளை இழந்தவர்கள் – இந்த ஆண்டின் தொடக்கம் வரை தமது சொந்தமான வீடு,காணி, தோட்டம் துரவுகளுக்கு மீள்குடியேற  முடியாதவர்களாகவே  இருந்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 44,559 பேர் (12,249 குடும்பங்கள்) தொடர்ந்தும் முகாம்களிலும் 53  நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும்  வாழ்ந்து வருகிறார்கள்.

வலிகாமம் வடக்கில் 23 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 7,410 ஏக்கரும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 370 ஏக்கரும் பாதுகாப்பு வலயம்  என்ற போர்வையில்  இராணுவம் கைப்பற்றி இருக்கிறது.

1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட போது 44 கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களில் 11  பிரிவுகளில் முழுமையாகவும், ஆறு பிரிவுகளில் பகுதி அளவிலும் மீளக்குடியேறுவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் யாரும் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை. ஏனைய பகுதிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகத்தான் இன்றுவரையில் இருக்கின்றது.

உயர் பாதுகாப்பு வலயம் பற்றிய அறிவிப்பு முதற் தடவையாக 1986 இல் வெளியிடப்பட்டது. அதன்படி பலாலி விமான நிலையத்திலிருந்து 1,000 மீட்டர்  தூரம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இதுதான் முதலாவது பிரகடனமாகும். இதனைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதி முழுவதும் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. உண்மையில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் அனைவரும் முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னரே இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

2003 ஆம் ஆண்டு ஏதிலிகள்  அவை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 18 இடங்கள் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன.  இது 160 சகிமீ  பரப்புக்கு ஒத்ததாகும்.   யாழ்ப்பாணக்  குடாநாட்டின் நிலப்பரப்பில் (1,025 சகிமீ) இது 18 விழுக்காடு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையேயான அமைதிப் பேச்சுக்களில் (2002 – 2004) அதிஉயர் பாதுகாப்பு வலயச் சிக்கல் முக்கியமானதாக இருந்தது.

2004 ஓகஸ்ட்  இல்  உயர் நீதிமன்றமும் இது தொடர்பான முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.  யாழ்ப்பாணக் குடிமகன் ஒருவர் தாக்கல் செய்திருந்த மனு மீதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. சின்னப்பு சிவஞானசம்பந்தர் என்பரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான தீர்ப்பில்    மனுதாரர் தனது காணிக்குச் செல்வதற்கும் அங்கு விவசாயம்  செய்வதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இலங்கை அரசியலமைப்பில்  உறுதியளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் மீறப்பட்டிருப்பதை இந்த வழக்கு கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருந்தது. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டார்.

யூன் 05, 2013 இல்  காணி சுவீகரிப்புச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டு பொது மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் 8,382 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டது. பொதுத் தேவைகளுக்கு அல்லாது இராணுவத் தேவைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு சட்டத்தில் இடம்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் இக்காலப் பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், அதிஉயர் பாதுகாப்பு வலயம் காரணமாக 30,000 வீடுகள், 300 பாடசாலைகள், 40 கைத்தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைவிட 42,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலமும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக  தெரிவித்திருந்தார்கள்.

1990 இல் வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களின் எண்ணிக்கை 83,600  என மதிப்பிடப்பட்டிருந்தது. இது உண்மையில் 1981 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணிப்பீட்டின் அடிப்படையிலான எண்ணிக்கையாகும்.  இத்தொகை 1990 இல்  ஒரு இலட்சம் வரையில் அதிகரித்திருந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது.

2005 நொவெம்பரில் யாழ்ப்பாண அரசாங்க செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி அதிஉயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் சுமார் 9,000 பேர் முகாம்களில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைவிட சுமார் 16,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60,000 பேர் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடைய இல்லங்களில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏனையவர்கள் தென்பகுதிக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.

வலிகாமம் வடக்கு தவிர, தென்மராட்சியில் தனங்கிளப்பு மற்றும் அதனையடுத்துள்ள பகுதிகள், காரைநகரில் கடற்படை முகாமையடுத்துள்ள பகுதிகள் என்பனவும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் வலிகாமம் வடக்கில் மக்களுக்கு ஏற்பட்டளவுக்கு அதிகளவு பாதிப்புக்களை அது ஏற்படுத்தவில்லை. அத்துடன் அங்கிருந்து வெளியேறியவர்களின் தொகையும்    வலி வடக்குடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவானதாகவே இருந்தது.

இலங்கையிலேயே தோட்டச் செய்கைக்கும் விவசாயத்துக்கு சிறப்பானது எனக் கூறக்கூடிய நிலம் வலிகாமம் வடக்கில்தான் உள்ளது. மரக்கறிகள் இங்கு பெருமளவு விளைச்சலைக்கொடுத்தது. 1970 களிலில் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள், வெங்காயம், மிளகாய் என்பனதான் இலங்கை முழுவதிலுமே விற்பனை  செய்யப்பட்டது.

மேலும் இலங்கையிலேயே அதிகளவு மீன்களைப் பிடிக்கும் மயிலிட்டி பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டு போனது. இங்கு பிடிக்கப்பட்ட மீன்கள் தென்பகுதிக்கும் பெருமளவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக அந்த மீன்பிடி உற்பத்தியை நாடு இழந்திருக்கின்றது. இவர்களில் ஒரு பகுதியினர் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளியேறி முல்லைத்தீவுப் பகுதிக்குச் சென்று தொழில் செய்தார்கள். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்அவர்கள் மீண்டும் ஏதிலிகளாகிவிட்டனர். அப்படி வெளியேறிய மக்களில் ஒரு சிறு தொகையினரே 25 ஆண்டுகள் கழித்து மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் 6,382  ஏக்கர் காணியில்  முதல் கட்டமாக 1200 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.   குறித்த பகுதியில் மாதிரிக் கிராமம் ஒன்றினை சகல வசதிகளுடனும் அமைத்து மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளப் போவதாக அரசு முதலில் அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த யோசனையை நிராகரித்த காரணத்தால் அது  கைவிடப்பட்டுவிட்டது.

தற்போது வயாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு கிராமசேவைப் பிரிவுகளில் 197 ஏக்கர் காணியும் வலிகாமம் கிழக்கில் வளலாய் கிராம சேவகர் பிரிவில் 233 ஏக்கர் காணியும் ஆக மொத்தம்  430 ஏக்கர் காணி  முதலில் விடுவிக்கப்பட்டுள்ளது.  கடந்த   மார்ச்சு 23 இல் யாழ்ப்பாணம் சென்ற சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் இரணில் விக்கிரமசிங்கி மற்றும் முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க  ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினர்களாக் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்  வளலாய் பகுதியைச் சேர்ந்த காணிச் சொந்தக்காரர்களுக்கு  உறுதிகள்  வழங்கப்பட்டன.

இருந்தும் வயாவிளான் பகுதியில் 266 குடும்பங்களில் 22 குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டது. மீதமான மக்களுடைய வீடுகள் மற்றும் நிலங்களில் படையினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருக்கின்றனர்.  படையினர் புதிதாக  உயர்பாதுகாப்பு வலய வேலிகளை அமைத்து வருவதாகப்  பொது மக்கள் முறையிடுகிறார்கள்.

வளலாயில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சனாதிபதி சிறிசேனா “புதிய அரசாங்கம் என்ற வகையிலேயே நாங்கள் மக்களுடைய எல்லாப் பிரச்சினைகளையும் படிப்படியாகத் தீர்த்துவைத்து வருகிறோம். குறிப்பாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சினைகளை நாம் முன்னுரிமைப்படுத்தி தீர்த்துவைக்க முற்பட்டுள்ளோம். இப்படியான வேலைகள் ஆரம்பிக்கப்படும்போது சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் குறைபாடுகள் இருந்தாலும் கூட நாம் எமது வேலைகளைத் தொடர்ந்தால்த்தான் அவற்றையும் நிவர்த்தி செய்து நிறைவேற்றமுடியும். மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காகவே நாங்கள் இந்த புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம். நாங்கள் உங்கள் பகுதிகளுக்கு வரும்போது இங்குள்ள குறைபாடுகள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உங்கள் அரசியல் தலைவர்கள் எங்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் உங்கள் பிரச்சினைகள் பற்றி அரசியல் தலைவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

எனவே தமிழ் மக்களாகிய உங்களுக்கு பாரதூரமான பல பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் இதன் வாயிலாக அறிந்துவைத்துள்ளோம். நீங்கள் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் எனக்கு வாக்களித்தீர்கள். எனவே நான் தெட்டத்தெளிவாக உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். உங்களுக்கு இருக்கக்கூடிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் எமது ஆட்சிக்காலத்தின்போது தீர்வு காணுவோம் என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

சனாதிபதி சிறிசேனா தலைமையில் ஆன ஆட்சி அமைக்கப்பட்டு  85 நாட்களே ஆகின்றன. எமது விருப்பத்துக்கு ஈடுகொடுக்குமாறு  தமிழ்மக்களை எதிர்நோக்கியுள்ள சிக்கல்களுக்கு இந்த அரசால் தீர்வு காணப்படவில்லை என்பது உண்மையே.  ஆனால் மாற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு வருகின்றன. எமது மக்கள் மீதான இராணுவத்தின் அழுங்குப் பிடி தளர்ந்து வருகிறது.  “எமது ஆட்சிக்காலத்தின்போது தீர்வு காணுவோம் என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்ற சனாதிபதி சிறிசேனாவின்  உறுதி மொழியை நாம் நம்பலாம்.  ஆட்சிமாறினாலும் அதிகாரிகள் மாறவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இராணுவ உயர் மட்டத்தில்தான் மாற்றம் நடந்துள்ளது. முன்னைய அரசுக்கு இன்னமும் விசுவாசகமாக இருக்கும் இடை நிலை அதிகாரிகள் மாற்றப்படவில்லை. அப்படியே இருக்கிறார்கள்.

இராஜபக்சா ஆட்சியில் இராணுவம் உல்லாச விடுதிகள், உணவகங்கள், மாடு வளர்ப்பு, மரக்கறித்தோட்டம், பழத்தோட்டம், முடிதிருத்தும் நிலையங்கள் என வருவாய் வரக்கூடிய தொழில்களில் ஈடுபட்டு வந்தது. அது இப்போதும் தொடர்கிறது. அதனை இழக்க இராணுவம் இலேசில் ஒருப்படாது.

இராணுவத்தினால் பறிக்கப்பட்ட காணிகள் திரும்பக் கையளிக்கப்படும் என்ற நம்பிக்கை அடியோடு பட்டுவிட்ட கட்டத்திலேயே இலங்கையில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது. சனாதிபதி சிறிசேனாவின் பேச்சும் நடவடிக்கைகளும் எமக்கு நம்பிக்கை தருகிறது.

வழக்கம் போல்  ஒட்டாண்டி அரசியல் நடத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இராஜபக்சாவுக்கும் சிறிசேனாவுக்கும் இடையில் வேற்றுமை இல்லை பெயர்தான் வித்தியாசம் என்றார். நல்லகாலமாக தமிழ்மக்கள் அவரது வேண்டுகோள் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது என்று எண்ணி அதனை ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டார்கள்.  இல்லாவிட்டால் மகிந்த இராஜபக்சேயின் இராணுவ அடக்குமுறை ஆட்சி தொடர்ந்திருக்கும். மக்கள்   சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்திருப்பார்கள். ஒரு சதுர அடி நிலம் கூட வலிகாமம்  வடக்கு மக்களுக்கு கிடைத்திராது.

அடுத்து சம்பூர் மீள்குடியேற்றம் பற்றி எழுதுவேன்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்!  நக்கீரன்
http://ekuruvi.com/kani-nilam-vendum-jhi2015/ekuruviTamilNews

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்!- நக்கீரன்

http://www.tamilcnnlk.com/archives/361098.html

 

Return of Mahinda Rajapaksa Will be a Throw Back to the Dark Era of Repressive and Dictatorial Rule

Isaac Newton third law says for every action there is an equal and opposite re-action. What that means is that for every force there is a reaction force that is equal in size, but opposite in direction.

Isaac Newton law of motion not only applies to the physical world, it equally applies to the spiritual world. In common parlance, the word karma describes the entire chain of moral cause and effect wherein the sum of a person’s actions in this and previous states of existence, viewed as deciding their fate in future existences. This principle of spiritual causation is found in most religions. The principle is also found in Western society embedded in maxims like “what comes around, goes around” and in Biblical scriptures such as “A person reaps what he sows.”

People who are in high and responsible positions, if they go against righteousness, righteousness itself will get transformed into a destroyer. Whoever deviates from righteousness, whether they are individual or states, they are responsible for their own actions.

The Rajapaksa family which strode the political stage like a colossus unchallenged and unquestioned before January 09 have been dethroned and reduced to the status of Alibaba and forty thieves who robbed the treasury at their whims and fancies. No one expected the collapse of Rajapaksa’s empire to fall this soon and in this inglorious fashion. Certainly not Rajapaksa and his astrologer.

Daily we now hear news stories about Rajapaksa family’s unbridled corruption, bribery, nepotism, waste of public funds, selective law enforcement and authoritarianism. Under Mahinda Rajapaksa the white van culture flourished and death squads hunted down and murdered rich businessmen for ransom. Many fled the country to save their lives while others disappeared without a trace. An air of nauseating fear gripped Thamils and Muslims businessmen in Colombo. Even if the accusations against Rajapaksa only half true, it is still an unprecedented disaster for good governance.

The latest to be hauled up before the Financial Crimes Investigation Division (FCID) is Shirani Rajapaksa, the former first lady. One does not know the exact charges against her, but Namal Rajapaksa claims “My mother has always stayed away from politics. Does she deserve this harassment? ‘Yahapalanaya’ seems just a facade for this government. Vengeance isn’t ‘good governance.’

Namal uses the word vengeance forgetting how the Rajapaksa family treated Sarath Fonseka. After hailing him as a war hero and the best army commander in the world, Mahinda Rajapaksa and Gotabhaya Rajapaksa went after him like hungry wolves. Sarath Fonseka was arrested as part of a political vendetta after he unsuccessfully challenged Mahinda Rajapaksa at the presidential election in 2010.

He was held incommunicado at the navy headquarters amid lurid allegations by the government that he was plotting to overthrow the president. He was court marshalled before two Military Courts on trumped up charges and sent to jail where he wore prison uniform, ate kiri bath on tin plates and carried water can to the toilet like any other prisoner. To his credit he never asked for any special privileges from his tormentors. He was stripped of his rank, medals, uniform, pension and his name was erased from all military records.

Today, due to twist of fate, Sarath Fonseka is a decorated field marshal while his tormentor Mahinda Rajapaksa is just an ordinary citizen, not even a Member of Parliament and facing corruption charges!

I am no fan of Sarath Fonseka who is accused of committing war crimes, but I resent the uncivilized way he was treated by Mahinda Rajapaksa. So Namal should be careful to talk about political vengeance for the arrest of his mother.

There is also news of another member of the Rajapaksa royal family Pushpa Rajapaksa, spouse of Economic Development minister Basil Rajapaksa, receiving a deposit of Rs. 500 million to the foundation run by her from the Colombo International Container Terminal, a Chinese construction firm. This firm has obtained a contract to construct buildings in the Colombo Port City.

Since January 09, there has been a spate of arrests of Ministers, MPs and stooges of Mahinda Rajapakse on charges of fraud, corruption and theft of government property. Prominent among them is the high profile Basil Rajapaksa, the former Minister of Economic Development on suspicion of misappropriating Rs.70m from the Divi Neguma rural development funds to hold a conference. Another Rs. 70 m was misappropriated for his brother’s election campaign he was in charge. He is also accused of printing and distributing 15,000 Divi Neguma almanacs to promote former president’s campaign.

As minister in charge of Economic Development and reconstruction efforts in the northern and eastern provinces, he wielded enormous powers. His Ministry was placed beyond the reach of the Auditor General something unprecedented in the annals of history. It was a legal ruse to escape audit of financial transactions and accountability.

Basil Rajapaksa was arrested on April 23, 2015 along with the second suspect, Secretary of Divi Neguma Ministry Dr. Nihal Jayathilaka and former of Divi Neguma Project Manager Gen. R.A.A.K. Ranawaka.

Gotabhaya Rajapaksa is accused of providing the wherewithal for Garde Maritime Services (Pvt) Ltd a subsidiary of Avant Garde Security Services (Pvt) Ltd, and incorporated on the 24th June 2011 under the Companies Act (reference: NO.7 of 2007) of Sri Lanka. Avant Garde Maritime Services (Pvt) Ltd entered into a joint venture with Government

Owned Business Undertaking (GOBU) of Rakna Arakshaka Lanka Ltd (RALL) of Sri Lanka to provide infrastructure facilities for international maritime security services. The Parent Company; Avant Garde Security Services (Pvt0 Ltd is the largest security company in Sri Lanka employing over 6,500 personnel. It has an unblemished record of over 17 years of service and providing land based security to many organizations including key blue chip companies, most of the banks and financial institutions, including Central Bank of Sri Lanka. Avant Garde Maritime Services (Pvt) Limited provides comprehensive range of total risk mitigation solutions to the global maritime industry and also engaged in the business of providing of total logistical assistance to vessels transiting the Indian Ocean. Avant Garde Maritime Services has created a network of facilities in strategic locations to ensure maritime security companies are assured of obtaining weapons and associated items for passage through piracy risk area and handing over them to be under the control of AGMS / RALL officers at the relevant destination ports before repatriation of sea marshals. AGMS is a Signatory Company of the ICoC (International Code of Conduct), secured SAMI (Security Association Maritime Industry) membership and in the process of getting affiliated to international maritime agencies.

Police launched investigations following information received by Deputy Inspector General of Police, Southern Range, and D. J. S. Gunawardhana about news on the discovery of a floating armoury at the Galle Port. The armoury belonged to a private security company by the name Avant-garde. A total of 3,154 firearms and 770,059 rounds of ammunition were recovered from seven containers on the ship named Maha Nuwara. The police unearthed evidence linking Gotabhaya to Avant Garde Maritime Services (Pvt) Limited.

On March 6, Pivithuru Hela Urumaya leader Udaya Gammanpila stated that there was a conspiracy to arrest Gotabhaya Rajapaksa and former president Mahinda Rajapaksa.

Gotabhaya Rajapaksa’s name is also coupled with the foul murder of Sunday Leader newspaper chief editor Lasantha Wickrematunga on 8th January,2009 on his way to office in Colombo.

Lasantha Wickrematunga left a posthumous letter that claimed both he and Mahinda Rajapaksa knew who will be behind his death. For the benefit of posterity let me quote excerpts from his letter.

“In the wake of my death I know you will make all the usual sanctimonious noises and call upon the police to hold a swift and thorough inquiry. But, like all the inquiries you have ordered in the past, nothing will come of this one, too. For truth be told, we both know who will be behind my death, but dare not call his name. Not just my life, but yours too, depends on it.

Sadly, for all the dreams you had for our country in your younger days, in just three years you have reduced it to rubble. In the name of patriotism you have trampled on human rights, nurtured unbridled corruption and squandered public money like no other President before you. Indeed, your conduct has been like a small child suddenly let loose in a toyshop. That analogy is perhaps inapt because no child could have caused so much blood to be spilled on this land as you have, or trampled on the rights of its citizens as you do. Although you are now so drunk with power that you cannot see it, you will come to regret your sons having so rich an inheritance of blood. It can only bring tragedy. As for me, it is with a clear conscience that I go to meet my Maker. I wish, when your time finally comes, you could do the same.”

Wickrematunge’s prediction from the grave remains true as no one has been arrested or charged with his murder. A journalist with the Canberra Times reported that the person referenced at “dare not call his name” is Mahindra’s younger brother, Gotabhaya Rajapaksa, ex defense secretary.

When the BBC reporter interviewed Gotabhaya Rajapaksa in February, 1999 and questioned him about Wickrematunge’s premature death the former went berserk. He behaved like a possessed person with eyes bugging, hands shaking, voice pitch rising and casting suspicion on all the former presidents. He derided Wickrematunge as a “tabloid writer” who had many enemies and said anyone could have killed him. He said it was “just another murder.” He ends the interview by calling all dissent and criticism of the government as ‘treason.’

Another prominent minister of the deposed Rajapaksa regime and parliamentarian, Johnston Fernando was arrested on May 05 by FCID on charges of misappropriating state resources. Police Media Spokesperson ASP Ruwan Gunasekera said that the former minister of Co-operatives and Internal Trade has been arrested after being summoned to the FCID to obtain a statement in with regard to the alleged misappropriation of Rupees 5.2 million at Lanka Sathosa. According to the police spokesman, former minister Fernando has been arrested under the Public Property Act.

On May 11 Sajin Vass Gunawardena, MP was arrested by the CID for the alleged misuse of public vehicles belonging to the President Secretariat Office. A total of 120 vehicles belonging to the President Secretariat Office have gone missing and Sajin Vass Gunawardena admitted the offence of transferring 22 vehicles belonging to the presidential secretariat for the use of his private company. The monthly lease payments for these vehicles have been paid by the ex President Mahinda Rajapaksa’s presidential secretariat!

Sajin Vass Gunawardena, a head line news maker, was hand picked by Mahinda Rajapaksa as the Monitoring Minister of the Foreign Ministry. Sajin has been accused of involving in several controversies ranging from fraud, crime, remand time, fraud bureau investigations, unpaid loans, spying and unfulfilled promises. He was widely criticized for his role as CEO of Mihin Lanka and faced several fraud allegations against him.

In September 2014, at a dinner party held in New York, Sajin Vass reputedly dealt a blow to the head of Dr. Chris Nonis, the Sri Lanka’s High Commissioner for Sri Lanka in Britain. The blow to Dr. Noni head almost broke his ear drum!

Mahinda Rajapaksa took under his wing politician like Sajin Vass, other under world characters, murderers and drug smugglers to strengthen his voter support.

Mahinda Rajapaksa during his tenure wasted government funds in forming jumbo cabinet, oversized delegations to UNO, UNHRC and other foreign capitals at state expense. He built the fancy Mattala Rajapaksa International Airport where no planes are landing. He built the Magampura Mahinda Rajapaksa Port (also known as the Port of Hambatotta) where only one ship per month is docking. Despite all the corruption charges against him, he is planning to return to power by contesting the upcoming parliamentary polls as the prime ministerial candidate.

As I have said before, Mahinda Rajapaksa is out, but not down. He still enjoys support from extreme Sinhala nationalists who claim he is related to Lord Buddha and King Dutugemunu.

If the Rajapaksa brothers succeed in staging a come back to politics, once again there will be a throw back to the dark era of repressive and dictatorial rule. Democracy will be put on hold for decades.

On Fri, Apr 3, 2015 at 11:09 AM, Tamilcnn <ahitamilcnn@gmail.com> wrote:

 

கஜேந்திரகுமாரை நாடாளுமன்றத்துக்கு நடக்கும் தேர்தலில் வெல்ல வைப்பதே ‘மாற்றத்துக்கான குரல்’ என்ற முகமூடி அமைப்பின் நோக்கம்!

நக்கீரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்ற பலம் என்பது அவர்கள் மக்களால் மக்களாட்சி முறைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது தான்.

தமிழ்மக்களைப்  பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக நேர்மையான முறையில் சட்டபூர்வமாக நிகழ்ந்த தேர்தல்களின் மூலம் எமது மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ததேகூ  மக்களின் பேராதரவைப்  பெற்ற மாபெரும் அரசியல் அமைப்பு. அதன் அடிப்படையில்தான்  அனைத்துலகச் சமூகம் ததேகூ  க்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.  தமிழ்மக்களுடைய அரசியல் சிக்கல்கள் தொடர்பாக  இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள்  ததேகூ இன் தலைவர்களோடு, குறிப்பாக பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா, திரு மாவை, திரு சுமந்திரன் போன்றோர்களோடு பேசுகிறது.

அண்மையில் தனிப்பட்ட முறையில் கனடாவுக்கு வருகை தந்த திரு சுமந்திரன்  இங்குள்ள வெளியுறவு அமைச்சோடு கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்சு 20) சந்தித்துப் பேசினார். அவர் புறப்படுமுன்னரே அதற்கான நாளையும் நேரத்தையும்   கொழும்பில் உள்ள கனடிய தூதுவர் ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார்.

ததேகூ கடும்போக்குக் கொண்டதென்றோ, நெகிழ்வுத் தன்மை அற்றது என்றோ,  மீண்டும் வன்முறைக்குத் தூபமிடும் விதமான மறைமுக எண்ணங்களைக் கொண்டது என்றோ அனைத்துலக சமூகம் உலகம் கருதுமிடத்து  அதனை  இன்றைய இராஜதந்திர முன்னெடுப்புகளிலிருந்து பன்னாட்டு சமூகம்  ஓரங்கட்டிவிடும்.

அதனால் ததேகூ அதன்  சொல், செயல் இரண்டிலும்  மிகுந்த இராஜதந்திர நுட்பத்தைப் பேண வேண்டியுள்ளது. மிகுந்த அவதானத்துடன்  அடிகளை எடுத்து வைக்க வேண்டியுள்ளது.  மிகுந்த சாதுரியமாக காய்களை நகர்த்த வேண்டியுள்ளது.

ஐநாமஉ பேரவையில்  அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் நகலை எரிப்பது, பின்னர் அதன் கீழ் எழுதப்பட்ட அறிக்கையை வெளியிடுமாறு ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்துவது எமது அரசியல் முன்னெடுப்புக்கு பாதகமானவை.

இலங்கையில் நடைபெற்ற ஆட்சிமாற்றத்துக்கு காரணம்  இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளது இராஜதந்திர நகர்வு என்பது எல்லோரும் அறிந்த உண்மை. தனக்கு எதிராக வெளிநாடுகள் சதி செய்து தன்னைத் தோற்கடித்து விட்டார்கள் என்று மகிந்த இராஜபக்சா  குறிப்பிடுவது இந்தியாவையும் அமெரிக்காவையும்தான்.

இலங்கையில் ஏற்பட்ட அந்த ஆட்சிமாற்றத்துக்கு ததேகூ துணையாக இருந்தது. அதன் மூலம் எமது நலங்களும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நலங்களும் ஒரு கோட்டில் சந்தித்தன.

கஜேந்திரகுமாரும் அவரது ஆதரவாளர்களும் ததேகூ இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறார்கள். அது பொருளற்றது ஆகும்.

வி.புலிகள் இராணுவ சம பலத்தோடு இருந்தபோது பேச்சு வார்த்தைக்குப் போனார்கள். மே 18, 2009 க்குப் பின்னர் அந்தப் பலம் எம்மிடம் இல்லை. உலக அரங்கில் தனித்து விடப்பட்டோம். அதன் பின்னர் திரு சம்பந்தர் மேற்கொண்ட இராஜதந்திர உத்திகள் மூலமே உலக நாடுகளை இப்போது எம் பக்கம் வைத்திருக்கிறோம்.

சனவரி 8 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் சிறிசேனாவை ஆதரிக்குமாறு  ததேகூ மக்களை கேட்டுக் கொண்டது. அந்த வேண்டுகோளுக்கு இணங்க  வடமாகாண தமிழ்வாக்காளர்களில்  75.82 விழுக்காட்டினர் சிறிசேனாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். கிழக்க மாகாணத்தில் 72.01 விழுக்காடு தமிழ்வாக்காளர்கள்  சிறிசேனாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தேர்தல்களைப் புறக்கணிப்பதையே தனது அரசியலாக வரித்துக் கொண்டு செயல்படும் கஜேந்திரகுமார் “இராஜபக்சாவும் சிறிசேனாவுக்கும் இடையில் வேற்றுமை இல்லை,  பெயரில்தான் வேற்றுமை” என்று தத்துவம் பேசி தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னார்.

ஆனால் எமது மக்கள் புத்திசாலிகள்.  சிறிசேனாவுக்கு ஆதரவாக வாக்களித்தது மட்டுமல்ல அவரின் வெற்றிக்கும்  காரணமாகவும் இருந்தார்கள். இது உள்றநாட்டு  தேர்தல் அரசியல் அரங்கில் நாம் சாதித்த பெரிய சாதனை. அரசியல் குருடர், செவிடர் மற்றும் ஊமைகள்தான் அந்த உண்மையை மறுப்பார்கள்.

அந்த உண்மை சனாதிபதி தேர்தலில் தோற்ற மகிந்த இராஜபக்சாவுக்கு துல்லியமாகப் புரிந்திருக்கிறது. “நான் தேர்தலில் தோற்றதற்கு பிரதான காரணம் வட கிழக்கு மாகாணங்களிலும் மலையகத்திலும் வாழும் தமிழ்மக்களின் வாக்கு வங்கியே. அதனால் எனக்கு எதிராக தமிழ்மக்கள் வாக்குகள் போட்ட காரணத்தால்  நான் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இப்போதும்  ஆட்சி அதிகாரம் சிங்களவர்களிடம் இருந்து போய்விடவில்லை….  எனது தோல்விக்கான காரணம்” என சனவரி 9 ஆம் நாள் காலை அவரது இல்லத்திற்கு வந்து அனுதாபம் தெரிவித்த தனது  ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது குறிப்பிட்டார்.

இன்று சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் அகப்பட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த எமது மக்களால் கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது. இராணுவ கெடுபிடி குறைந்துவிட்டது. இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு முன்னர் போல் இல்லை. இராணுவத்துக்குக் கொடுக்கப்பட்ட காவல் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது.  வட கிழக்கு மாகாண சபைகளுக்கு ஆளுநராக இருந்த இராணுவ தளபதிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். திருகோணமலை அரசாங்க அதிபராக இருந்த இராணுவ தளபதி ஆர்.ரி.டி சில்வாவும் மாற்றப்பட்டுள்ளார்.

வீட்டில் பிறந்த நாள் விழா என்றாலும் இராணுவத்தின் முன் அனுமதியைப் பெறவோ இராணுவ தளபதியை அழைத்து மாலை போடவோ மரியாதை செய்யவோ வேண்டியதில்லை.

அரசு மக்களிடம் இருந்து இராணுவம் பறித்த காணிகளை வலிகாமம் வடக்கிலும் சம்பூரிலும் திருப்பிக் கையளிக்கத் தொடங்கியுள்ளது.  சனவரி 8க்கு முன்னர் பறித்த காணிகள் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அடியோடு இல்லாது இருந்தது தெரிந்ததே.

தமிழ்மக்களின் சிக்கல்கள்  முற்றிலும் தனது ஆட்சியில்  தீர்த்து வைக்கப்படும் என்று சனாதிபதி சிறிசேனா யாழ்ப்பாணத்தில் பேசியுள்ளார். தேர்தலின் பின் தேசிய அரசாங்கத்தை உருவாக்கி ஒரு புதிய அரசியல் யாப்பு வரையப்படும் எனக் கூறினார்.

ஆனால் வி.புலிகளின் பெயரைச் சொல்லி பிழைப்பு அரசியல் நடத்தும் கூட்டம் சனாதிபதி சிறிசேனாவின் உருவப்படத்தை ஜெனீவா வீதிகளில் போட்டு எரித்துள்ளார்கள். சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரது உருவப் பொம்மைகளை எரித்த அதே வானரங்கள்தான் இந்த அநாகரிகமான கூத்தையும் செய்துள்ளது.

கனடாவில் ததேகூ செம்மைப்படுத்தப் போவதாக ஒரு குழு  தொழில் அதிபர் பாபு தலைமையில் புறப்பட்டது தெரிந்ததே. செம்மைப்படுத்தப்படுவதற்கு கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசிய ஒருவர் “ததேகூ க்கு கனடாவில் பணம் திரட்டி அனுப்புகிறார்கள். ஆனால் அந்தப் பணம் சரியாகப் பிரித்துக் கொடுக்கப்படுவதில்லை, திருகோணமலைத் தொகுதியில் சம்பந்தர் அவர்களது தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது…………..”என்று பேசினார்.

இப்படி அடி நுனி இன்றிப் பேசித்தான்   ததேகூ செம்மைப்படுத்தப் போகிறார்களாம். மேலும் இவ்வாறு  ததேகூ க்கு பங்களிப்புச் செய்த ஒருவர் கேட்டால் பொருளுண்டு. பொருள் கொடாவர்கள்தான் இப்படிப் பேசுகிறார்கள். இப்படித்தான் போராட்ட காலத்திலும் வி.புலிகளுக்கு ஒரு வெள்ளி கொடாத சிலர் கணக்குக் கேட்டார்கள்!  அது ஒரு தற்காப்பு உத்தியாகும். அப்படிச்   சொன்னால் பணம் கொடுப்பதிலிருந்த தப்பித்து விடலாம் என்பது அவர்களது கணிப்பு.

ததேகூ (கனடா) ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நிதி அறிக்கையை வெளியிடுகிறது. அதற்கு மேலாக ஒவ்வொரு முகாமைத்துவ கூட்டத்திலும் பொருளாளர் நிதி தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்கிறார்.

ததேகூ செம்மைப்படுத்தப் போவதாக வெளியில் சொன்னாலும்  இந்த மாற்றத்துக்கான குரல் எது,  அதன் பின்னால் இருப்பவர்கள் யார், யார்  என்பதை மக்கள் அறிவார்கள்.  நாமும் எற்பட்டிருக்கும் எதிர்ப்பலைகளின் அரசியல் நியாயத்தைப் புரிந்து அதனை மேலும் வளரவிடாமல் நிறுத்தி எமது தேசியப் பேரியத்தின் அரசியல் வலுச் சமநிலையை மீளக் கட்டியமைக்கும் நோக்கில் இணைந்தவர்களாவர்.

இப்போது மாற்றத்துக்கான குரல் என்ற முகமூடியை அணிந்து கொண்டு அதே ஆட்கள் அதே  நோக்கோடு புறப்பட்டிருக்கிறார்கள். பாபு தனது பெயரைப் போட்டுத்தான் தனது அறிக்கையை  வெளியிட்டார். அந்தத் தைரியம் கூட இந்த மாற்றத்துக்கான குரல் குழுவினருக்கு இல்லை. வெறுமனே தொலைபேசி இலக்கங்களை மட்டும்  போட்டிருக்கிறார்கள்.

எற்பட்டிருக்கும் எதிர்ப்பலைகளின் அரசியல் நியாயத்தைப் புரிந்து அதனை மேலும் வளரவிடாமல் நிறுத்தி எமது தேசியப் பேரியத்தின் அரசியல் வலுச் சமநிலையை மீளக் கட்டியமைக்கும் நோக்கில் இணைந்தவர்கள்” எனச் சொல்கிறார்கள்.

பாபு பாடிய பல்லவியைத்தான் இந்தக் குழுவும் பாடுகிறது. “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலுள்ள சிலர் மீதான எதிர்ப்பலைகள் சமகாலங்களில் தாயகத்திலும், கனடாவிலும், மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலுள்ள சிலரது தன்னிச்சையான செயற்பாடுகள் மீதும் மற்றும் எமது தாயக மக்களின் அரசியற் தீர்வுக்கான அடிப்படைகளிற்கு எதிரான அல்லது அடிப்படைகளை நீர்த்துப் போகச் செய்யும் போக்குகளுக்கு எதிராகவும் இவ்வெதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலுள்ள மேற்குறிப்பிட்ட சிலரும் அவர்களை முழுமையாக ஆதரித்து நிற்கும் புலம்பெயர் தேசத்திலுள்ள கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சிலரும் இவ்வெதிர்ப்பலைகளின் ஆழமான அரசியற் தார்ப்பரியத்தை கணக்கிலெடுக்காமல் பொறுப்புணராது செயற்படுகின்றனர்.”“

அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால்  தாங்கள்  அரசியலில் சாணக்கியர்கள். மார்க்கியவல்லி என்ன,  பிஸ்மாக் என்ன  எவராக இருந்தாலும்   அரசியல் மூலோபாயங்கள், உத்திகள், தந்திரங்கள் பற்றி திரு சம்பந்தனும் திரு சுமந்திரனும் தங்களிடம்   பிச்சை வாங்க வேண்டும் என்கிறார்கள்.  தாயக மக்களின் சார்பாகப் பேச ததேகூ யை விட தங்களுக்கு உரிமை உண்டென்கிறார்கள்.

தாயக  மண்ணில் மக்களோடு மக்களாக நிற்கும் ததேகூ க்கு இந்த எதிர்ப்பலைகளின் ஆழமான அரசியற் தார்ப்பரியத்தை கணக்கில் எடுக்காமல் பொறுப்புணராது செயற்படுவதாக 10,000 மைலுக்கு இப்பால் மிகவும் வசதி வாய்ப்போடு வாழ்பவர்கள், அரசியலை பொழுது போக்காக் கொண்டவர்கள், அரசியலில் இருந்து இதுவரை ஒதுங்கியிருந்தவர்கள்  சொல்கிறார்கள்.

இப்படிச் சொல்வதின் மூலம் ததேகூ ஆதரித்து வாக்களித்து வரும் எமது மக்களின் சனநாயகத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். மறுபுறம் தேர்தல்களைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் கஜேந்திரகுமாருக்கு சமபலம் தேடிக் கொடுக்கப் போகிறார்களாம். கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டென்பதை நாம் மறுக்கவில்லை.

வவுனியாவில் கூடிய தமிரசுக் கட்சியின் மத்திய குழு கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

“இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின், மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை இலங்கை தமிழரசுக் கட்சியின் இன்றைய மத்திய செயற்குழு அங்கீகரித்து ஏற்றுக் கொள்கின்றது.இதனைவிட ஒரு கண்டனத் தீர்மானமும் இந்த மத்தியக் குழுவிலே எடுக்கப்பட்டிருக்கின்றது. அண்மைக்காலமாக எமது தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் எமது கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான கௌரவ ம.அ.சுமந்திரன் அவர்களுக்கும் எதிரான நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை ஈழத் தாயகத்திலும் புலத்திலும் நிகழ்த்தியுள்ள விடயங்களை இந்த மத்தியகுழு கண்டிக்கின்றது.”

இதன் பின்னர் கூட்டமைப்பின் தலைமையிலுள்ள சிலர்  தன்னிச்சையாகச்  செயற்படுகிறார்கள் என்ற வாதம் எடுபடாது. அதனை நிறுத்த வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ அவரது கட்சியோ ஒருபோதும் அரசியல் சமநிலையை எட்ட முடியாது. கஜேந்திரகுமாரின் அரசியல் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் – குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்று –  முடங்கிக் கிடக்கிறது. யாழ்ப்பாண குடாநாட்டுக்கு அப்பால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் அவரது கட்சிக்கு ஒரு கிளை கூடக் கிடையாது. அப்படியிருக்க அவர் எப்படி அரசியல் சம பலத்தை எட்டப்போகிறார்? இது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதை போல் அல்லவா இருக்கிறது?

சனவரி 8 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் அந்தத் தேர்தலை புறக்கணிக்குமாறு அறிக்கை விட்டார். அந்த  அறிக்கைக்கு செவிசாய்த்த மக்கள் எத்தனை விழுக்காடு? மேலே குறிப்பிட்டவாறு வட மாகாணத்தல்  75.82  விழுக்காடு மக்கள் சிறிசேனாவை ஆதரித்து  வாக்களித்தார்கள்.  அதன் பின்னராவது இந்த மாற்றத்துக்கான குரல்  கஜேந்திரகுமாரின்  ‘பலத்தை’ அறியவேண்டாமா?  கோட்டானை மாங்குயில் என்றும் வான்கோழியை வண்ண மயில் என்றும் சொல்ல முடியுமா?

இந்த ஆண்டு நடைபெற இருக்கும்  நாடாளுமன்றத் தேர்தலில்  கஜேந்திரகுமாரை வெல்லவைக்க  முயற்சிப்பதுபோல் 2010 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அவரைக்  கரையேற்ற   மாற்றத்தின் குரலின் பின்னால் இருப்பவர்கள்  மெத்தப் பாடுபட்டார்கள். பணம் சேர்த்து அனுப்பினார்கள். சிரிஆர் வானொலியில்  கஜேந்திரகுமார், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் (இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட ததேகூ இன் தலைவர் சம்பந்தரோடு பேசி வேட்பு மனு பெற்றுக் கொடுக்குமாறு கடைசி மணித்துளிவரை என்மூலம் முயற்சி செய்தார்கள்) முகுந்தன், கண்மணி அம்மா போன்றோர் வரிசையில் வந்து முழங்கினார்கள்.  திருமலையில் சம்பந்தரின் கோட்டையை பிடித்து விட்டதாகச் சொன்னார்கள். முடிவு தெரிந்ததே.  கஜேந்திரகுமாரும் அவரது கட்சி வேட்பாளர்களும் கட்டுக்காசை இழந்தார்கள்.

அதே  சமயம்   டக்லஸ் தேவானந்தாவின் கட்சி மேலதிகமாக ஒரு இருக்கையைக் கைப்பற்ற வழி கோலினார்கள்.

இம்முறையும்

வரலாறு மீண்டும் (History may repeat itself)  அரங்கேறலாம்!

 

https://www.colombotelegraph.com/index.php/the-architect-of-modern-singapore-passes-away-peacefully/

On Thu, Mar 26, 2015 at 9:44 PM, Thanga <athangav@sympatico.ca> wrote:

 

Visit  http://colombotelegraph.com/

 

இராஜபக்சா தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் அது  சிங்கள மக்களை விட தமிழ் மக்களுக்குத்தான் அதிக ஆபத்தாக முடியும்!

நக்கீரன்

“மறந்துவிட்டு அல்லது ஏற்றுக் கொண்டு பயணிப்பதா?” என்ற தலைப்பில் தம்பி இராஜ்குமார் சுப்பிரமணியம் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

கட்டுரையாளர் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பாணியில் அதனை எழுதியிருக்கிறார்.  கூழுக்கு அரசர்களைப் பாடும் பழங்காலப் புலவர்களையும் அது நினைவு படுத்துகிறது. கட்டுரையாளரின் உள்நோக்கம் ததேகூ யை பலவீனப்படுத்துவதுதான்.  ததேகூ யை செம்மைப் படுத்தப்  போகிறோம்  என்ற போர்வையில் கஜேந்திரகுமாரை நாடாளுமன்றம் அனுப்புவதுதான் பாபு அன்ட் கோவின் உண்மையான நோக்கம். கஜேந்திரகுமாரோடு கலந்து பேசிவிட்டுத்தான் பாபு ததேகூ செம்மைப்படுத்தும் கூட்டத்தை கூட்டியிருந்தார். இந்தக் கட்டுரையை எழுதிய இராஜ்குமாரின்  நோக்கமும் அதுதான். அதனால்தான் பாபு அன்ட் கோஅமைத்துக் கொடுத்த மேடையில் தோன்றி உப்புச் சப்பில்லாமல் பேசினார்.  அதற்கு ததேகூ (கனடா)  இன் தலைவர் குகதாசன் அதே  மேடையில் தகுந்த பதிலடி கொடுத்தார். ஊடகங்களில் குகதாசனின் பேச்சு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமாரை நாடாளுமன்றம்  செல்வதற்கு   தடையாக இருப்பவர்கள் சம்பந்தன் –  சுமந்திரன் என பாபு அன்ட் கோ, கட்டுரையாளர் மற்றும் சிலர்  நினைக்கிறார்கள்.  உண்மை அதுவல்ல.  அவர் ததேகூ இல் வந்து சேரலாம் என்றல்ல சேருமாறு சுமந்திரன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் கஜேந்திரகுமார்தான் கெடுகுடி சொல் கேளாது என்பது போல நடந்து கொள்கிறார். அவரை புலத்தில் உள்ளவர்கள்தான் அன்றும் கெடுத்தார்கள். இன்றும் கெடுக்கிறார்கள். கஜேந்திரகுமாரின் கல்யாண குணங்களை  வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்.  எல்லாத் தேர்தல்களையும் புறக்கணிக்குமாறு கேட்கும் கஜேந்திரகுமார் இலங்கையின் யாப்புக்கு விசுவாசமாக இருப்பேன், பிரிவினை கேட்க மாட்டேன் என தேர்தலில் நிற்க மனுக் கொடுக்கும் போதும்  வென்று நாடாளுமன்றம் சென்ற பின்னரும் உறுதிமொழி எடுக்க அவர் அணியமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 13 ஏ சட்ட திருத்தத்தை ஏற்க மறுக்கும் கஜேந்திரகுமார் 6 ஆவது சட்ட திருத்தத்தை ஏற்கிறார்.

கட்டுரையில் இராஜ்குமார் “வாக்கு எண்ணிக்கையில் “2004 இலும் 2010 இலும் நடந்த தேர்தல்களில் தமிழர் தேசியக்கூட்டமைப்பினர் இழந்திருக்கும் வாக்கு விகிதாசாரத்தை உற்றுநோக்கும்போது, தொடர்ச்சியாக அவர்கள் வாக்குகளை இன்னும் கூடுதலாக இழந்துகொண்டு வருவதற்கான காரணங்கள் பல உண்டு”  என எழுதுகிறார்.

ஆனால்  அவர் வசதியாக இரண்டு தேர்தல்களும் நடந்த பின்புலத்தை மறந்துவிடுகிறார் அல்லது  மறைத்துவிடுகிறார். 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தல்  வி.புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் செய்த  காலம்.  2010 இல் நடந்த தேர்தலில்  வட மாகாணத்தில் செத்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் எல்லாம் ததேகூ வாக்குப் போட்டார்கள். செல்வராசா கஜேந்திரனுக்கு 112,077 விருப்பு வாக்குகள், பத்மினி சிதம்பரநாதனுக்கு  68,240 விருப்பு வாக்குகள், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு 60,770 விருப்பு வாக்குகள் (இவை 2010 இல் நடந்த தேர்தலில் திருநீலகண்டரின் திருவோடு போல் மறைந்தது வேறு கதை) விழுந்த ‘இரகசியம்’ அதுதான்.  அதனால்தான் 2004 இல் 22 தொகுதிகளில் ததேகூ வெற்றி  பெற்றது.

2010 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் போர் முடிந்து 11 மாதங்களில் நடந்தது.  பெரும்பான்மை மக்கள் மீள்குடியேற முடியாது முகாம்களில் இருந்த காலம். அதற்கு மேலாக ஆளும் கட்சியின் சர்வாதிகாரமும் அதனோடு சேர்ந்திருந்த ஆயுதக் குழுக்களின்  சண்டித்தனம் மற்றும் நாட்டாமை நிலவிய  காலம்.  அவசர காலச் சட்டம் முழுதுமாக நடைமுறையல் இருந்த காலம்.  ததேகூ இன்  வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அச்சத்தோடு தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்த முழுதும் பாதுகாப்பற்ற சூழ்நிலை. ததேகூ இல் போட்டி போடவே வேட்பாளர்கள் அஞ்சிய காலம்.

எனவே 2004 தேர்தலோடு 2010 தேர்தலை ஒப்பிடுவது அரசியல்  நாணயமற்ற செயல். கட்டுரையாளர் 2010 இல் ததேகூ விழுந்த வாக்குகளை 2012 இல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ததேகூ விழுந்த வாக்குகளோடும் 2013 இல் வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ விழுந்த வாக்குகளோடும் ஒப்பிட்டுப் பார்க்க  வசதியாக மறந்து விட்டார். அல்லது வேண்டும் என்றே மறைத்து விட்டார்.  இது அவரது நேர்மையை  கேள்விக்கு உள்ளாக்குகிறது.

2010 க்குப் பின்னர் நடந்த ஒவ்வொரு  தேர்தலிலும்  ததேகூ வாக்கு வங்கி கூடியிருக்கிறதே ஒழிய குறையவில்லை.

2012  கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 193,827 (30.59%).   2008 இல் நடந்த தேர்தலில் ததேகூ போர்ச் சூசூழல் காரணமாக போட்டியிடவில்லை.

2013 வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ பெற்ற வாக்குகள் 353,595 (78.48%)

2010 இல் சனாதிபதி தேர்தலில் ததேகூ ஆதரித்த சரத் பொன்சேகாவுக்கு  வட மாகாணத்தில் விழுந்த வாக்குகள் 184,244 (71.66%)

2015 இல் சனாதிபதி தேர்தலில் ததேகூ ஆதரித்த மைத்திரிபால சிறிசேனாவுக்கு  வட மாகாணத்தில் விழுந்த வாக்குகள் 394,991 (75.82%)

2010 இல் சனாதிபதி தேர்தலில் ததேகூ ஆதரித்த சரத் பொன்சேகாவுக்கு கிழக்கு மாகாணத்தில் விழுந்த வாக்குகள் 386,823 (58.68%) இதில் 40 % தமிழ் வாக்குகள்.

2015 இல் சனாதிபதி தேர்தலில் ததேகூ ஆதரித்த மைத்திரிபால சிறிசேனாவுக்கு  கிழக்கு மாகாணத்தில் விழுந்த வாக்குகள் 583,120 (72.01%) இதில் 40 % தமிழ் வாக்குகள்.

ததேகூ க்கு மக்களிடம் வளர்ந்து வரும் பேராதரவை மேற்கண்ட தரவுகள் எண்பிக்கின்றன. ஆனால் கட்டுரையாளர்  இந்த உண்மைகளை முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல மறைக்கிறார்.

2005 இல் நடந்த சனாதிபதி தேர்தலை புலிகள் புறக்கணித்த காரணத்தாலேயே சனாதிபதி மகிந்த இராஜபக்சா அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அவர்களது கட்டுபபாட்டில் இருந்த கிளிநொச்சித்  தேர்தல் தொகுதியினல்  ஒருவரே வாக்களித்திருந்தார். வி. புலிகள் இராஜபக்சாவின் சாதகத்தை சரியாகக் கணிக்கத் தவறிவிட்டார்கள்.  மகிந்த சிந்தனையில் சொல்லப்பட்டதை உள்வாங்காது விட்டு விட்டார்கள்.  திரு சம்பந்தன் இரணில் விக்கிரமசிங்கியை ஆதரிக்கு மாறு விடுத்த வேண்டுகோளை புலிகள் புறந்தள்ளினார்கள்.

அவரது வேண்டுகோளை மட்டும் வி.புலிகள் ஏற்றிருந்தால் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும்.  முள்ளிவாய்கால் வரை எமது போராட்டம் போகவேண்டி இருந்திராது.

வி.புலிகள் 2001 இல்  உள்ளக சுயாட்சி அடிப்படையில்  இடைக்கால தன்னாட்சி அதிகார சபை திட்ட அறிக்கையை ஜி.எல். பீரிசிடம் கையளித்தார்கள் என்பது உண்மை. அது ஒரு விட்டுக் கொடுப்புத்தான்.   ஆனால் 2002 இல் கிளிநொச்சியில்  நடந்த அனைத்துலக செய்தியாளர் மாநாட்டில் வி.புலிகளின் தலைவர் தமிழீழம்தான் இறுதி இலக்கு என்று கூறினார். இந்த நிலைப்பாடு  மேற்குலக நாடுகளின் அதிருப்தியை தேடியது.  அவர்களது பார்வையில் வி.புலிகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது.

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போது அதுவரை வி.புலிகளை தடைசெய்யாத கனடா மட்டுமல்ல அய்ரோப்பிய ஒன்றியமும் வி.புலிகளைத் தடை செய்தது. இது கதிர்காமரின் கொலை செய்யப்பட்டதன் காரணமாக எழுந்த எதிர்வினையாகும்.

எது எப்படியிருப்பினும் அனைத்துலக அரசியல் அரங்கில் வி.புலிகள் தனித்து விடப்பட்டனர். 31 நாடுகள் வி.புலிகளை தடைசெய்து இருந்தன. ஒரு நாடு கூட வி.புலிகளுக்கு ஆதரவாக இல்லை.  செப்தெம்பர் 11 க்குப் பின்னர் வி.புலிகள் தங்களது தந்திரோபாயங்களை மாற்றி இருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ அது நடை பெறவில்லை.

வி.புலிகளின் போராட்டம் ஏன் தோல்வியில் முடிவடைந்தது என்ற காரணிகளை நாம் கண்டறிய வேண்டும்.    இப்போது இல்லாவிட்டாலும் ஒரு நாள் மீளாய்வுக்கு  உட்படுத்தப்பட வேண்டும். வி.புலிகள் மீது குற்றம் சுமத்த அல்ல.  உண்மையைக் கண்டறிய. அப்போதுதான் வரலாற்றில் விட்ட பிழைகளை நாம்  திருத்திக் கொள்ளவும்  அதிலிருந்து பாடம் படிக்கவும்   வாய்ப்பு உண்டாகும்.

ததேகூ ஒரு தேர்தல் கூட்டணிமாத்திரமே. அது ஒரு கட்சியல்ல. ஒத்த கொள்கையுள்ளவர்களே கட்சியில் இருக்க முடியும். சென்ற சனாதிபதி தேர்தலை கஜேந்திரகுமார் மட்டுமல்ல சுரேஷ் பிரேமச்சந்திரனும் புறக்கணித்தார். அவர் சிறிசேனாவுக்கு ஆதரவாக பரப்புரை செய்யவில்லை. இந்தியா சென்றுவிட்டு சனவரி 8 யை அண்மித்தே நாடு திரும்பினார்.  அவர் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது தான் வேண்டா வெறுப்பாக வாக்குப் போட்டுவிட்டதாக செய்தியாளர்களிடம் சொன்னார். அப்படியென்றால் அவரும் சம்பந்தனும் ஒரு கட்சியில் இருப்பது  எப்படி? சுரேசுக்கு சொன்னது சிவாஜிலிங்கம், அனந்தி இருவருக்கும்  பொருந்தும்.

ஆனால் எமது மக்கள் அதி புத்திசாலிகள். ததேகூ விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அவர்கள் இரண்டு கையாலும் சிறிசேனாவுக்கு வாக்களித்தனர்.

மைத்திரிபால சிறிசேனா ஒரு மிதவாதி. இராஜபக்சா போல் இன – மத வெறியர் அல்ல. அவர் காலத்தில் தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்காவிட்டால் வேறு யாரும் அதனைத் தரப்போவதில்லை. தரவும் மாட்டார்கள். அவரது உருவப் பொம்மையை ஐரோப்பாவில் உள்ள புலிகளின் எச்சங்கள் எரித்தது அவர்களது அரசியல் ஞானசூனியத்தைக் காட்டுகிறது.  இவர்களுக்கு உருவப்பொம்மைகளை எரிப்பது, அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானங்களின் படியை எரிப்பது முழு நேர வேலையாகிவிட்டது.  இன்றைய உலக ஒழுங்கில் இப்படியான எதிர்மறை அரசியல் பொருந்திவராது.

கடந்த  சனவரி 8 இல் நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. காட்சிகள் மாறுகின்றன. அதில் வேகம் குறைவாக இருக்கலாம் ஆனால் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கண்ணில்லாத குருடர்கள், காது கேட்காத செவிடர்கள் தான் அதனை மறுப்பார்கள்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. சனாதிபதி சிறிசேனாவும்  இரணில் விக்கிரமசிங்காவும் சிங்கள – பவுத்த வாக்காளர்களை  மனதில் வைத்துச் சிலவற்றைப் பேச வேண்டியுள்ளது. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  மேலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு  சிறிசேனா தலைவராக இருந்தாலும் கட்சியின் முழுக்கட்டுப்பாடும் அவர் கையில் இல்லை.  ஆனால் சிறிசேனா – இரணில் இருவரும் மகிந்த இராசபக்சா மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று வருவதை விரும்ப மாட்டார்கள். குறிப்பாக சனாதிபதி சிறிசேனா விரும்ப மாட்டார்.

எனவே  இவர்கள் இருவரது கைகளையும்  பலப்படுத்த தமிழர் தரப்பு முன்வர வேண்டும். மகிந்த இராஜபக்சா தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் அது  சிங்கள மக்களை விட தமிழ் மக்களுக்குத்தான் அதிக ஆபத்தாக முடியும்.

தனது தேர்தல் தோல்விக்கு தமிழ்மக்களின் (வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம்) வாக்குவங்கியே காரணம் என்றும்  அதனால் தான் தோற்கவில்லை என்றும் பெரும்பான்மை சிங்கள – பவுத்தர்களது ஆதரவு தனக்கு உண்டென்றும் கூறிவருவது நினைவு கூரத்தக்கது.

LTTE Cadres Who Surrendered To The Army: Where Are They?

August 18, 2013 |

By Veluppillai Thangavelu

The Human Rights Watch (HRW) in its latest report has slammed the Sri Lankan government for failure to make real progress in holding accountable those responsible for the execution style slaying of 17 aid workers on August 4, 2006 despite renewed international calls for action. Seven years have elapsed but the perpetrators responsible for the death of 17 aid workers have not been brought to justice. And this in a country which boasts about 2,300 years old Buddhist civilization and Buddhist values!

On August 4, 2006, gunmen executed 17 Sri Lankan aid workers – 16 ethnic Tamils, four of them women, and a Muslim – with the Paris-based international humanitarian agency Action Contre La Faim (Action against Hunger, ACF) in their office compound in the town of Muttur in eastern Trincomalee district. The killings occurred after several-days battle between the army and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for control of the town. The ACF team had been providing assistance to survivors of the December 2004 Indian Ocean tsunami.

The University Teachers for Human Rights (Jaffna) has published detailed findings on the Muttur killings based on accounts from witnesses and weapons analysis that implicate the Sri Lankan army  in the area at the time. The group reported that two police constables and naval Special Forces commandos were alleged to be directly responsible and that senior police and justice officials were linked to an alleged cover-up.

In July 2007, the Presidential Commission of Inquiry, established after the Muttur killings to investigate 16 major human rights cases, exonerated the army and navy in the massacre and instead blamed LTTE forces or Muslim militia. Families of ACF workers who testified before the commission blamed the army for the shooting.  The commission’s full report to President Rajapaksa has never been made public.

In March 2013, the United Nations Human Rights Council adopted a resolution on Sri Lanka, reiterating the concerns of a 2012 council resolution, which focused on the lack of accountability for human rights violations. The council called upon the Sri Lankan government to “conduct an independent and credible investigation” into alleged rights abuses and “take all necessary additional steps” to meet its legal obligations to ensure justice and accountability for all Sri Lankans.

According to James Ross, legal and policy director of HRW, the government of President Mahinda Rajapaksa in apparent response to increasing international pressure, took long overdue steps by directing state lawyers and investigators to review the case and prepare a comprehensive list of witnesses. This was one of several recent moves by the government to adopt previously disregarded recommendations of its Lessons Learnt and Reconciliation Commission (LLRC) created in 2011 following the defeat of the LTTE in May 2009.

The UN High commissioner for Human Rights, Navi Pillay, is scheduled to visit Sri Lanka towards the end of this month and   HRW has repeated its call for the UN Secretary-General or other UN body to create an independent international investigation into violations by government forces and the LTTE. This investigation should make recommendations for the prosecution of those responsible for serious abuses during the armed conflict, including the ACF case.

President Mahinda Rajapaksa’s government continue to resist taking meaningful steps to investigate and prosecute alleged war crimes by the armed forces during the last phase of the war that ended on May 18, 2009.  During the last 4 years or more the human rights situation in Sri Lanka has gone from bad to worse. Though disappearances and abductions have decreased, crack down on dissenting voices and assault on media freedom have increased. The Northern Province is under tight occupation of the armed forces and the Sinhalese governor is behaving like his name sake during the colonial era. Both the Sinhalese governor and the army commander are exercising unlimited administrative power. The government has refused to restore civilian administration on grounds of non-existing security threat!

On May 13, 2013 Nicolas Beger, Director of Amnesty International (AI) urged the European Union to demand publicly an independent, impartial and internationally-led investigation which holds to account those responsible for crimes under international law.

While  both the HRW and AI have been consistently urging the Sri Lankan government to investigate  and punish those responsible for war crimes, no human rights group has articulated the fate of second rank LTTE cadres who surrendered to the army on May 17/18, 2009  and  since gone missing and their fate unknown.

Sri Lanka under Mahinda Rajapakse is one of the worst violator of fundamental human rights and humanitarian law governing conduct of war. Not only LTTE leaders were killed when they surrendered to the army with white flags in the battle field, scores of others were killed after they surrendered to the army on May 17/18, 2009.

Here is a list of those LTTE cadres who surrendered to the armed forces on 17/18 May, 2009 but their whereabouts unknown.

(1) K.V. Balakumar and his son Sooriyatheepan

(2) V. Ilankumaran (alias Baby Subramanian) Head of the Thamil Eelam Education Department. His wife Vettrichchelvi and daughter Arivumathy.

(3) Yogaratnam Yogi in charge of ’Institute for Conflict Research’ in Vanni

(4) Poet Puthuvai Ratnadurai, Coordinator of LTTE Arts and Cultural Department

(5) K. Paappa, Coordinator LTTE Sports Department

(6) Rajah (Chempiyan) Assistant Coordinator LTTE Sports Department and his 3 children

(7)  Ilanthirayan, LTTE Military spokesman

(8) Veerathevan, Coordinator LTTE  Bank

(9) S.Thangkan,  Political Wing Deputy Chief

(10) Aruna, Thamil Eela Education Department

(11) S. Naren, Asst. Executive Head of TRO

(12) Kuddy, Head of the  LTTE Transport Department

(12) Piriyan, Head of Administrative Service Department and his family

(13) V. Poovannan, Head of the Administrative Service Division of the LTTE

(14) Thangaiah, Administrative Service Department

(15) Malaravan, Administrative Service Department

(16) Pakirathan, Administrative Service Department

(17) Reha, Head of LTTE Medical Division

(18) Selvarajah, Commander Manal Aru Head Quarters

(19) Bhaskaran, Commander Manal Aru Head Quarters

(20) Major Lawrance

(21) Major Kumaran

(22) Prabha, Batticaloa District Commander

(24) Rupan, Coordinator of  Supplies

(25) Babu, Coordinator of  Jewellery Business

(26) Ilamparithy, Executive Head of Political Wing

(27) Elilan, Head of Trincomalee Political Wing

(28) Vijitharan, Executive Secretary, Political Wing

(29) Major Veeman

(30) Sakthy, Coordinator Forestry Division and his family

(31) E.Ravi,   Charge of Houses

(32) Sanjai, Mulliyavalai Divisional Political Wing Coordinator

(33) Para Ratha, Coordinator Justice Department

(34) Kumaravel, Coordinator Air Force Security

(35) Chithrankan Malathy, Commander Manal Aru District

(36) Suhi, Commander

(37) Arunan, Major Sea Tigers

(38) Manoj – Medical Department

(39) Lawrance, Finance Department

(40) Lawrance Thilakar, Coordinator TRO Planning Department

(41) Karikalan, former Commander, Eastern Province

The above list is  by no means complete.

On May 31, 2009, Lankafirst.com website quoting Government Information Department sources, reported that some top Tiger leaders under the custody of the military were going through series of serious investigation by the security forces.

“Former eastern province political wing leader and subsequently in charge of the economic division Karikalan, former spokesman of the LTTE Yogaratnam Yogi, former EROS MP turned advisor to the LTTE V. Balakumar, a former spokesman of the LTTE Lawrence Thilakar, former Deputy political section leader Thangkan , former head of the political section for Jaffna district Ilamparithi, former Trincomalee political wing leader Elilan, former head of the LTTE Sports Department Paappa , former head of the administrative division of the LTTE Puvannan and deputy international head Gnanam are in custody,” it said.

The UTHR-J report mentioned the names of top leaders who surrendered to the army.  Karikalan (former eastern province political wing leader and subsequently in charge of the economic division), Yogaratnam Yogi (former spokesman of the LTTE), Lawrence Thilakar (a former spokesman of the LTTE, a one time head of LTTE office in Paris and later in charge of the Tamil Rehabilitation Organisation), Thangkan (former Deputy political section leader), Ilamparithi (former head of the political section for Jaffna district), Elilan (former Trincomalee political wing leader), Paappa (former head of the LTTE sports division), Puvannan (former head of the administrative division of the LTTE), Gnanam (deputy international head) and Tamilini head of the Women’s political wing.

On June 12, 2009 The Asian Tribune, a mouth piece of Mahinda Rajapaksa’s government, reported that “LTTE Senior V. Balakumar and seven other hardcore Tigers are in the police net, Asian Tribune learns. They are Yogaratnam Yogi, former LTTE spokesman, Baby Subramanian, LTTE stalwart of long years, Lawrence Thilakar, a former head of the LTTE’s International Secretariat, Ilamparithi, Jaffna political leader, Karikalan of the Eastern Province and three others whose names are not immediately available.”

On August 06, the Lanka Guardian published a photograph taken in the army controlled area detention centre showing V. Balakumar and his son seated on a bunk under a tree.  The background of the photograph shows army soldiers moving around the area. According to Lanka Guardian V. Balakumar came to surrender to the Army with white flags together with other senior leaders of the LTTE.  The photograph was taken in the army-controlled area.

A senior Sri Lankan minister wittingly or otherwise has confirmed that some of the top Tamil Tiger leaders, including V. Balakumar and Yogaratnam Yogi, who had surrendered to the government troops during the final days of the war in May 2009, have been killed while in protected military custody.

Former Minister of Rehabilitation and Prisons Reforms, Dew Gunasekera undertook a visit to the north  in July, 2010 and met groups of war widows  told a Colombo-based newspaper on record that among the ‘widows’ whom he had met in Jaffna were wives of Balakumar and Yogaratnam Yogi.

The Minister’s statement indirectly confirms that some of the top leaders of the Tamil Tiger rebels have been killed while in military custody by the government of President Mahinda Rajapaksa, which is already facing international war crime charges for allegedly executing top unarmed Tiger leaders who surrendered with white flags.

It is not known whether Balakumar, Yogi and others were killed in an execution-style murder or tortured to death.

The wives of Elilan and Ilanthirayan gave evidence before the LLRC claiming they saw their husbands bordering an army bus along with Rev. Fr. Francis Joseph, but have never heard of them since.

Ananthi Sasitharan (40) wife of Elilan, former Trincomalee political head of the LTTE in  her testimony before the LLRC  said that her husband Mr. Elilan, and other senior LTTE officials Yogaratnam Yogi and Lawrance Thilakar, both of whom took part in negotiations earlier, and LTTE Political Wing Deputy Chief Thangkan, former Jaffna Political Head Ilamparithi, Head of Administrative Unit Poovannan, Piriyan, Theepan, Sports Wing Chief Raja and his 3 children, Kuddi and Holster Babu were among those surrendered in front of her eyes to the Sri Lankan forces under the coordination of a Catholic Priest at Vadduvaakal in Mullaiththeevu on 18 May, 2009. In addition, the list of names of missing is Poet Rathnathurai, V. Balakumar, LTTE strategist, Karikalan, Head of the Political department, Batticaloa and Ilankumaran (Baby Subramanian) Head of the Educational Department.

Ananthi Sasitharan’ s evidence before the LLRC  was corroborated Mrs.Punitharuban Vanitha the wife of  Ilanthirayan   who said her husband was taken away by the army on 17 May 2009, just before the Tigers suffered their final defeat. She was told, she said, that her husband would be returned after treatment for minor injuries. Mrs.  Vanitha told the LLRC that she has not seen her husband since then. Bobitha Prabhakaran, the wife of Prabha, also said her husband was detained in May last year, and has heard nothing from him since.

Bearing witness in front of Mahinda Rajapaksa’s LLRC in Maanthai West in Mannaar on Sunday, Mrs R. Mironio, the wife of LTTE’s former Mannaar commander Antony Rayappu alias Yaan, said she has not heared from her husband or not told of the whereabouts of him after he surrendered in front of her in SLA controlled territory in Mullaiththeevu on 18 May 2009. The surrender was facilitated by Catholic Priest Rev. Fr. Francis Joseph, she said. The priest was also taken with her husband, but none have heard about them, she said.

On September 18 (Saturday) Mrs. Ananthi Sasitharan was interviewed by BBC (Tamil Oosai) following her testimony before the LLRC. She told BBC (Tamil Oosai) that she and her three daughters witnessed her husband and hundreds of other LTTE members surrendering to the Sri Lanka Army (SLA) soldiers on 18th May 2009, after the war has come to an end. “I have been trying to trace my husband and have not been successful to locate his whereabouts. I have no doubt that Sri Lanka’s president knows where my husband and others who surrendered are being held,” she told the BBC.

“If my husband has disappeared during the war, then there will be reason to think that he may have been killed during the heat of the battle, but having seen him surrender after the fighting has stopped, there is absolutely no reason for me to believe that he is dead,” Ananthi told the BBC.

When asked if she did not fear for her life [from Sri Lanka Government] after talking candidly before Sri Lanka’s commission, Ananthi said, she has never been afraid of death, and that her resolve to live has long been disappeared. She added that she will continue to her efforts to find her husband.

“All countries have betrayed us,” she told BBC (Tamil Oosai) after complaining to the LLRC that SL President should know the whereabouts of her husband and fellow LTTE officials surrendered through a Catholic Priest in Mullaiththeevu on 18 May 2009.

When asked whether she was concerned about repercussions for stating her views publicly from Vanni, the mother of three responded: “I am not afraid. I am prepared to face anything since we don’t now live with the zest for life.”

She further said that, while her three daughters were psychologically traumatised from seeing death and destruction, she is managing to bring them up as best as she can from the income from her employment.

“I had complained by a letter to the Vavuniya, Colombo International Red Cross Society and in person. I had complained to Vavuniya Human Rights Commission regarding my husband, but I did not receive any reply.  Several months had lapsed, but my husband’s whereabouts is still not known.”

A remarkable feature of her interview is her spirit of defiance in the face of adversity and despair. She did not mince her words and always spoke in terms of collective self, as “we” and not “I.” This Eezham Tamil psyche that is seriously concerned more about the sufferings of the nation than individual miseries.

Mrs. Ananthi Sasitharan appealed to the media to bring to light her plea to the attention of world leaders and media outlets to exert pressure upon the Sri Lankan government to release her husband. Despite the pleas from people like Mrs. Ananthi, international media and world diplomats have taken little or no attention to their pleas.

Mrs. Ananthi Sasitharan said he and her three daughters witnessed her husband and hundreds of other LTTE members surrendering to the Sri Lanka Army (SLA) soldiers on May 18, 2009, after the war came to an end.

Mrs. Ananthi Sasitharan, in a letter addressed to Ms. Sooka Yasmin (Executive Director) of Foundation for Human Rights and a Member of UN Experts Panel, on September 15, 2010, wrote: “My husband Sinnathurai Sasitharan on 18.05.2009 at Vanni Mullaiththeevu District in Vadduvaakal Division on the Head of Church Father Francis Xavier with many hundred Tigers surrendered to Mullaiththeevu Sri Lankan Army.

When the LLRC went to Batticaloa many Tamil civilians testified before the panel about missing relatives. Among them were wives of LTTE military spokesman Rasiah Ilanthirayan and  Prabha head of the Tiger intelligence wing in Batticaloa. Both have not been seen since being detained by the army.

The government of President Mahinda Rajapaksa should come clean as to the fate of these LTTE cadres who surrendered to the army on May 17/18, 2009. If they have been summarily executed then details regarding the execution.

Human rights groups like the HRW, AI, International Crisis Group and others should press the Sri Lankan government for an answer. Executing soldiers who surrender to the victors amounts to war crimes and crimes against humanity. These acts violated international human rights and international humanitarian law; some of them may constitute as war crimes. It is vital that those responsible for these atrocities be brought to justice. Failure to do so would send a message that the international community will allow war criminals to escape accountability and justice, and encourage other countries to follow the “Sri Lanka model.”

Soft diplomacy is not knocking any sense into the head of Mahinda Rajapaksa.  He in act defiance has rejected the US sponsored resolution adopted on the 22nd March, 2013 claiming his government is not bound by it.  By rejecting the resolution he is making a mockery of the UN system itself.  According to Failed States Index of the Foreign Policy publication, Sri Lanka is fifth in the second league of twenty failed states for the year 2010.

The question now is how long countries like US, EU, UK and Canada will tolerate Sri Lanka’s nose thumping? So far the government has failed meaningfully to investigate war crimes and crimes against humanity committed by the armed forces. There must be a limit to tolerance.

 

தொழில் அதிபர்   பாபு   கூட்டம் போட்டு வீணாக நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கத் தேவையில்லை! 

றிப் வன் விங்கிள் (Rip Van Winkle)   என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தத் தலைப்பில்  அமெரிக்க நாட்டு எழுத்தாளர் வோஷிங்டன் எர்விங் ஒரு சிறுகதையை 1819 இல்  எழுதினார்.  அது ஒரு கற்பனைக் கதை. கதையின் பின்புலம் அமெரிக்காவில் பிரித்தானியாவுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டம்.

இந்த றிப் வன் விங்கிள் வீட்டில் எப்போதும் தொணதொணத்துக்குக் கொண்டிருக்கும் தனது மனைவியிடம் இருந்து தப்பி ஒரு மலையடிவாரம் சென்றடைகிறார். அங்கே அவருக்குச் சிலர் நாட்டுச் சாராயத்தை ஊத்திக் கொடுக்க அதை அவர் குடிக்கிறார். குடிமயக்கத்தில் அவர் நித்திரையாகி விட்டார். பின்னர் எழுந்து பார்த்த போது தன்னைச் சுற்றி எல்லாமே தலைகீழாக மாறிவிட்டதை உணர்ந்தார். அவரது துப்பாக்கி துருப்பிடித்துப் போய்க் கிடந்தது. அவரது தாடி ஒரு முழத்துக்கு வளர்ந்திருந்தது. தட்டுத்தடுமாறி ஊர் திரும்புகிறார். அங்கே ஒருவரையும் அடையாளம் காணமுடியவில்லை. அவரது மனைவி இறந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தது. அவரது நண்பர்கள் நடந்து முடிந்த  போரில் இறந்து போனார்கள். அது தெரியாத இவர் “வாழ்க மூன்றாவது யோர்ஜ் மன்னர்” எனக் கத்தினார். அவருக்கு யோர்ஜ் மன்னருக்கு எதிரான போரில் யோர்ஜ் வோஷிங்டன் வெற்றி பெற்று அவர் நாட்டின் சனாதிபதியாக வந்துவிட்டது தெரியாமல் இருந்தது.

இந்தக் கதையில் வரும் கதா பாத்திரம் போலவே பாபு என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் தம்பையா இராஜகுலசிங்கம் அவர்கள் நீண்ட நித்திரை கொண்டு விட்டு திடீரென்று எனக்கொரு அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறார். அதன்  தலைப்பு “தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை நோக்கி தமிழீழ அரசியல் தலைமையைச் செம்மைப்படுத்துவோம்!”

தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை தான் தமிழர்களது இலட்சியம் என்பதில் எந்த கருத்து முரண்பாடும் இல்லை. இவரது இலட்சியம் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ்மக்களது  இலட்சியமும் அதுதான். ததேகூ இன் தேர்தல் அறிக்கையை வாசித்தவர்கள் அதனை அறிவார்கள். 2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு

இந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இரு இனங்கள் பகிரப்பட்ட இறையாண்மையூடாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமானதென சில குறிப்பான அரசியல் சாசன விதிமுறைகளும் கொள்கைகளும் அவசியம் என்று கருதுகின்றது.

கீழே தரப்படும் அதிகாரப் பகிரலுக்கான முக்கிய அம்சங்கள் நீடிய சமாதானத்திற்கும் இலங்கையின் அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கும் அபிவிருத்திக்கும் மிக அடிப்படையானவை:

  • தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம். அவர்கள் இலங்கைத் தீவில், சிங்கள மக்களுடனும், ஏனையோருடனும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
  • தொடர்ச்சியான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடமாகும்.
  • தமிழ் மக்கள் சுயநிர்ணய (தன்னாட்சி) உரிமைக்கு உரித்துடையவர்கள்.
  • அதிகாரப் பங்கீடானது இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில், சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையில் நிறுவப்படவேண்டும். இது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
  • அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் உட்பட சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும்.

பாபு இதனைப் படித்திருக்க மாட்டார். அவருக்கு நேரம் இருந்திருக்காது. அவர் வெறுமனே பார்வையாளராகவே இருந்திருக்கிறார். அவரே அப்படி ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.  இனிமேல்த்தான்  பங்காளியாக இருக்கப் போவதாக சொல்கிறார். அது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்ற ஐயுறவு எழுகிறது.  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. அப்படி மீறி அவர் தீவிர அரசியலில் இறங்கினால் அதனை வரவேற்பதில் நான் முதல் ஆளாக  இருப்பேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பெரிய எடுப்பில் நாம் தமிழர் கட்சி (கனடா) என்ற ஒரு அமைப்பை அவர் தொடக்கினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கனடா வந்திருந்தார். ஆண்டுக் கூட்டத்தையும் நடத்தினார்கள். தமிழகத்தில் இருந்து இயக்குநர்  செல்வம், புகழ் பெற்ற கருநாடக இசைப் பாடகி    நித்யசிறீ  இருவரையும் அழைத்திருந்தார்கள். நானும் நுழைவுச் சீட்டு வாங்கிப் போயிருந்தேன். அதன் பின் நாம் தமிழர் கட்சி (கனடா) பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒருவேளை இரகசியமாக இயங்குகிறார்களோ நானறியேன் பராபரமே.

எனது கேள்வி என்னவென்றால் ஒரு கட்சியை ஒழுங்காக நடத்த முடியாத ஒருவர் எப்படி  ஆல்போல் தளைத்து அறுகு போலு வேரோடியிருக்கும் ததேகூ செம்மைப்படுத்தப் போகிறார்? அதுவும் சம்பந்தனையும் சுமந்திரனையும் அகற்றிவிட்டு?

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத குருக்கள் வைகுண்டத்துக்கு வழிகாட்டப் போவதாகச் சொன்னால் மற்றவர்கள் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா?

ததேகூ  செம்மைப்படுத்த  அம்பு, வில், வாள் போன்ற ஆயுதங்களோடு  பாபு புறப்பட்டிருப்பதன் நோக்கம்  சம்பந்தனையும் சுமந்திரனையும் அகற்றிவிட்டு அந்த இடத்தில்   தேர்தல் புறக்கணிப்பு வீரர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலத்தை  அரியாசனத்தில்  இருத்தி மகிடம் சூட்டுவதுதான்.  இந்த அறிக்கை ஒரு முகமூடி.

ஆனால் இந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கல்யாண குணங்கள் என்ன?

ததேகூ இல் இருந்து கஜேந்திரகுமார் தானாகத்தான் வெளியேறினார். அவரை யாரும் வெளியேற்றவில்லை. வெளியேற வேண்டாம் சிக்கல் ஏதாவது இருந்தால் தேர்தலுக்குப் பின்னர் பேசிக் கொள்ளலாம் என அவரிடம் கூறப்பட்டது. ஆனால்  கஜேந்திரகுமார் அதற்கு உடன்படவில்லை. நானும் அவரோடு மூன்று நாள் விவாதித்துப் பார்த்தேன். உள்ளுக்குள் இருந்து போராடுங்கள் கூட்டமைப்பை விட்டு  வெளியேற வேண்டாம் என்று  கெஞ்சிச்  சொன்னேன். அவர் உடன்படவில்லை.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. அவரும் அவரது கட்சிகளும் ததேகூ இல் தாராளமாக சேரலாம். அதற்கான அழைப்பை  திரு சுமந்திரன் கடந்த வாரம் பகிரங்கமாக விட்டிருந்தார்.

வெளியேறிய அவர் தமிழ்க் காங்கிரஸ் கட்சி கையில் இருந்தும் அது போணியாகாது எனத் தெரிந்து கொண்டு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்றொரு கட்சியை பலத்த ஆரவாரத்தோடும்  மேளதாளத்தோடும்  தொடங்கினார்.

திருமலையில் சம்பந்தர், யாழ்ப்பாணத்தில் மாவை, சுரேஷ் ஆகியோரைத் தோற்கடிப்பதுதான் தனதும் தனது கட்சியின் முக்கிய குறிக்கோள் என்றார்.  இப்படி சிரிஆர் வானொலியில் சபதம் செய்ததை  நான் காதால் கேட்டேன்.

இங்கேயுள்ள அவரது தொண்டரடிப் பொடியாழ்வார்கள் அந்தக் கட்சி குறைந்தது 3 இருக்கையைக் கைப்பற்றும் என்று தம்பட்டம் அடித்தார்கள். குறிப்பாக சிரிஆர் வானொலி  முப்பொழுதும் அடித்து முழங்கியது.  முடிவு வந்த போது வெறுமனே  6,352 (4.28 விழுக்காடு) வாக்குகளைப் பெற்று  அந்தக் கட்சி கட்டுக் காசை இழந்தது. அதே போல் திருகோணமலையில் அவரது கட்சியில் போட்டியிட்டவர்கள் 1,182 (0.85)  வாக்குகளைப் பெற்று படுதோல்வி அடைந்தார்கள். அதைவிட பிள்ளையானின் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு 1,712 (1.23) வாக்குகள் கிடைத்தது!

ததேமமு இன் நட்சத்திர வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் கட்டுக்காசை இழந்தனர். 2004 இல் நடந்த தேர்தலில் செல்வராசா கஜேந்திரன் பெற்ற 112,077 விருப்பு வாக்குகள், பத்மினி சிதம்பரநாதன் பெற்ற 68,240 விருப்பு வாக்குகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பெற்ற 60,770 விருப்பு வாக்குகள் திருநீலகண்டரின் திருவோடு போல் அந்த வாக்குகள் மாயமாய் மறைந்தன. தேசிய யானை கூட மிதிவண்டியை மிதித்து மானபங்கப்படுத்தியது. திருமலையிலும் இதே கண்றாவிக் கதைதான். தேர்தலில் 1182  வாக்குகள் பெற்று கட்டுக்காசை அந்தக் கட்சி இழந்தது. அந்தக் கட்சியில் தேர்தலில் நின்றவர்கள் இப்போது வேறு வேறு கட்சிகளுக்கு தாவி விட்டார்கள். அல்லது அரசியலில் இருந்து  ஒதுங்கிவிட்டார்கள்.

தேர்தல் புறக்கணிப்புப் புகழ் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மீண்டும் பப்பாசி மரத்தில் ஏற்றி விழுத்த கனடாவில் உள்ள சிலர் மெத்தப் பாடுபடுகிறார்கள். ஆயிரம் பேர் யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கப் போகிறார்களாம்.

ததேகூ செம்மைப்படுத்தப் போகிறோம் என்று வெளிக்கிட்டிருப்பது கஜேந்திரகுமாருக்கு பட்டம் சூட்ட எடுக்கும் பகீரத முயற்சியின் ஒரு தொடக்கம்தான்.

கஜேந்திரகுமார் கடந்த 5 ஆண்டுகளாக மலட்டு அரசியல் நடத்தி வருகிறார். 2010 இல் தேர்தலுக்கு நின்று கட்டுக் காசை இழந்த பின்னர் சூடுகண்ட பூனை மாதிரி கஜேந்திரகுமார் தேர்தல் பக்கமே தலை வைத்தும் படுக்கவில்லை. 2011 இல்  உள்ளூராட்சி தேர்தல், 2012 இல் கிழக்கு மாகாண சபை தேர்தல், 2013 இல் வட மாகாண சபைத்  தேர்தல் இவற்றில் ஒரு தேர்தலில் ஆவது அவரது கட்சி போட்டியிடவில்லை. எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. அதனால் அந்தக் கட்சிக்கு வட – கிழக்கு மாகாணங்களில் ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூடக் கிடையாது!

இப்போது நடந்து முடிந்த சனாதிபதி தேர்தலையும் புறக்கணிக்குமாறு கேட்டார்கள். இராஜபக்சேயும் இனவாதி சிறிசேனாவும் இனவாதி பெயர்தான் வித்தியாசம் என்றார்கள். 

நடந்து முடிந்த சனாதிபதி தேர்தலில் ததேகூ தமிழ்மக்கள்  இராஜபக்சாக்கு எதிராகவும்  மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவாகவும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விட்டிருந்தது.  அந்த வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 74.40 விழுக்காட்டினரும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 78.47 விழுக்காட்டினரும் சனாதிபதி சிறிசேனவுக்கு வாக்களித்தனர். கிழக்கு மாகாணத்திலும் 72.01 விழுக்காட்டினர் சிறிசேனாவுக்கு வாக்களித்தனர்.

அடுத்து  நடைபெற இருக்கும்  நாடாளுமன்றத் தேர்தலில்  இராஜபக்சாவை வேட்பாளாரக நிறுத்தி அவரை பிரதமராக ஆக்கும் முயற்சி நடைபெறுகிறது. இராஜபக்சாவும் சுதந்திரக் கட்சியில்  பெரும்பான்மை  ஆதரவு தனக்குண்டு என்கிறார். எனவே நாம் நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டியுள்ளது.

வட மாகாணசபைத் தேர்தலை புறக்கணிப்பதற்கு சொல்லப்பட்ட காரணம் ஒன்றுபட்ட வட – கிழக்கு இரண்டையும் இணைத்துத் தேர்தல் நடைபெறவில்லை என்பதுதான். அதாவது 13ஏ சட்ட திருத்தத்தின் மீது அவருக்குக் கோபம். அப்படியென்றால் 6 ஆவது சட்ட  திருத்தத்தின் கீழ் பின்வரும் உறுதிமொழியை வேட்பு மனுதாக்கல் செய்யும் போதும் வெற்றிபெற்று வந்து பதவி ஏற்கும் போதும் எடுப்பது எப்படிப் பொருந்தும்? 

மேலும் 6 ஆவது சட்ட திருத்தம்:

 

157 (ஏ) (1) சிறீலங்காவில் அல்லது வெளிநாட்டில் வாழும் ஒருவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ சிறீலங்காவிற்கு உள்ளே ஒரு தனி அரசை உருவாக்குவதற்கு ஆதரவு, ஊக்கம், நிதியுதவி, வெளிப்படையான பரிந்துரை ஆகியவற்றை செய்ய முடியாது.

 

(2) எந்தவொரு அரசியல் கட்சி அல்லது சபை அல்லது அமைப்பு சிறீலங்காவின் நிலப்பரப்பில் ஒரு தனி அரசை நிறுவுவதற்கான நோக்கத்தை அல்லது குறிக்கோளை வைத்திருக்க முடியாது.

 

(3) யாராவது மேற் குறிப்பிட்ட பந்தி (1) யை மீறிநடந்தால் விசாரணைக்குப் பின்னர் மேல்முறையீடு நீதிமன்றம் அவருக்கு சட்டம் விதித்தபடி –

 

(அ) ஏழு ஆண்டுகளுக்கு மேற்படாத காலத்துக்கு சிவில் உரிமை நீதிமன்றத்தால் மறுக்கப்படலாம்.

(ஆ) அவரது வாழ்க்கைக்குத் தேவையான சொத்துக்கள் தவிர ஏனைய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

(இ) குறித்த நபர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் அவர் தனது பதவியை இழப்பார்.

 

இதற்கு மேலும் பல தண்டனைகளை 6 ஆவது சட்ட திருத்தம் பட்டியல் போட்டுள்ளது.

 

எனவே ததேகூ ஒன்றுபட்ட இலங்கையில் உள்ளக சுயநிருணய அடிப்படையில் ஒரு இணைப்பாட்சி அரசியல் முறைமையைக் கோருகிறது. இல்லை நாம் பிரிவினை கோருகிறோம் தனிநாடுதான் எமது இலக்கு என்று சொன்னால் ததேகூ தடைசெய்யப்படும். அதைத்தான் கட்டுரையாளர் விரும்புகிறாரா? ததேகூ முட்டாள்த்தனமாக நடந்து கொள்ளச் சொல்கிறாரா?

– See more at: http://www.tamilsguide.com/katturaidetails.php?gallid=19&tid=9992#sthash.dpOYNeui.dpuf

விதி 157 ஏ மற்றும் விதி 161(டி)(iii)

…………………………………………….ஆகிய நான் இத்தால்  பயபக்தியோடு தெரிவிப்பதும் சத்தியம் செய்வதும் யாதெனில்  இலங்கை சனநாயக  சோசலிச குடியரசின் அரசியல் யாப்பை ஏற்று அதனைப்  பாதுகாப்பேன் என்றும் நான் நேரடியாகவோ மறைமுகமாவவோ சிறிலங்காவுக்கு உள்ளும்  வெளியிலும்  சிறிலங்காவின் ஆட்புலத்தில்  தனியாக ஒரு அரசை நிறுவுவதை ஆதரிக்கவோ, உடன்படவோ, மேம்படுத்தவோ, நிதியளிக்கவோ, ஊக்கிவிக்கவோ மாட்டேன் எனவும் சத்தியம் செய்கிறேன்.

வட கிழக்கு இணைப்பில்லை, 13 ஏ சட்ட திருத்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்  என்று சொல்லி வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணித்த கஜேந்திரகுமார் இப்போது பிரிவினை கேட்க மாட்டேன் சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு விசுவாசமாக  இருப்பேன் என்றும்  வேட்புமனு தாக்கல் செய்யும் போதும் தற்செயலாக வென்று வந்தபின்னரும் 6 ஆவது சட்டத்துக்கு  மாறாக பிரிவினை கோரமாட்டேன் என்று சத்தியம் செய்வது என்ன நியாயம்? குட்டியோடு (13ஏ) கோபம் ஆட்டோடு (6) நட்பா?

உண்மை என்னவென்றால் சொல்வது எல்லோர்க்கும் எளிது.  அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.   அரசியல் என்பது ஒரு கலை. அந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  யதார்த்த அரசியல் செய்வது எப்படி என்று தெரியாத காரணத்தால்தான் கஜேந்திரகுமார்  அரசியல் பாலை வனத்தில் விடப்பட்டுள்ளார்.   அதனால்தான் அவரது ஆதரவாளர்கள் அவரை எப்படியும் ததேகூ க்குள் கொண்டு வந்து  தலைமைப் பதவியில் இருத்திவிட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அதற்கு  சம்பந்தரும்  சுமந்திரனும் தடையாக இருக்கிறார்கள் என்பதால்தான் அவர்களை அப்புறுப்படுத்துவதற்கு   பாபு அந்த விக்கிரமாதித்தன் போல்  சற்றும் மனம் சளைக்காமல்  முருக்க மரம் ஏறுகிறார்!

“கூட்டமைப்பில் இணைந்திருக்கும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளில் ஒருசிலர் தன்னிச்சையாக செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தத் தவறுவாராயின் கட்சியின் தலைமைப் பீடம் தாமதமின்றி குறிப்பிட்டோர் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” இது பாபு வெளியிட்ட அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டடாகும்.

தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் என்று இவர்கள் குறிப்பிடுவது திரு சம்பந்தனையும் திரு சுமந்திரனையும் ஆகும். அவர்கள் இருவரும் தான் இவர்களுக்குத் தடையாக இருக்கிறார்கள். இருப்பதாக நினைக்கிறார்கள்.   அவர்களை அப்புறப்படுத்திவிட்டால் கஜேந்திரகுமாருக்கு வழி திறந்து விடும் என நினைக்கிறார்கள்.

ஆனால் வவுனியாவில் கடந்த மார்ச்சு 2 இல் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்  பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

“இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின், மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை இலங்கை தமிழரசுக் கட்சியின் இன்றைய மத்திய செயற்குழு அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றது.இதனைவிட ஒரு கண்டனத் தீர்மானமும் இந்த மத்தியக் குழுவிலே எடுக்கப்பட்டிருக்கின்றது.அண்மைக்காலமாக எமது தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் எமது கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான கௌரவ ம.அ.சுமந்திரன் அவர்களுக்கும் எதிரான நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை ஈழத் தாயகத்திலும் புலத்திலும் நிகழ்த்தியுள்ள விடயங்களை இந்த மத்தியகுழு கண்டிக்கின்றது.”

ஆக பாபு கேட்டுக்கொண்டதற்கு மாறாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு சம்பந்தர் மற்றும் சுமந்திரன் மேற்கொண்ட அரசியல் காய் நகர்வுகளை அங்கீகரித்துள்ளது!

இப்போது என்ன செய்ய உத்தேசம்? மத்திய செயற்குழு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களை பாபு கேட்கப் போகிறாரா?

தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும். இதற்குப் பெயர் அரசியல்  சாணக்கியம்.  அந்த சாணக்கியத்தைத்தான் ததேகூ கையாண்டது.  குறிப்பாக தலைவர் சம்பந்தன் கையாண்டார். சென்றமுறை (2010) நடந்த தேர்தலில் சரத்  பொன்சேகாவை ஆதரித்ததும் இதே அடிப்படையில்தான்.

யூன் மாதத்தில்  நடைபெற இருக்கும்  நாடாளுமன்றத் தேர்தலில்  இராஜபக்சாவை வேட்பாளாரக நிறுத்தி அவரை பிரதமராக ஆக்கும் முயற்சி நடைபெறுகிறது. இராஜபக்சாவும் சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை  ஆதரவு தனக்குத்தான் என்கிறார்.

எனவே நாம் நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டியுள்ளது. இப்போதுள்ள அரசை நாம் பலவீனப்படுத்தினால் அது இராஜபக்சாவின் மறு அரசியல் நுழைவுக்கு வழி திறக்கும்.

இதுதான் இன்றைய அரசியல் நிலைமை.  தமிழ்மக்களுக்கு பிரதேச சுயாட்சி  கொடுக்கப்படாவிட்டால்  தேசிய அரசில் ததேகூ பங்கேற்காது என்று  பெருந்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முடிவாக தொழில் அதிபர்   பாபு   கூட்டம் போட்டு வீணாக நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கத் தேவையில்லை.  அவர் விரும்பினால் சம்பந்தனோடு சரி, சுமந்திரனோடு சரி பேசுவதற்கு ஒழுங்கு செய்து கொடுக்க அணியமாக இருக்கிறோம்.

http://www.tamilcnnlk.com/archives/356055.html

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply