About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

2 Comments

 1. அருமையான பதிவு. இளைப்பாறிய உச்ச நீதிமன்ற நீதியரசரை முதலமைச்சராக தெரிவு செய்தால் அந்தப் பதவிக்கு ஒரு கனதி இருக்கும் என ததேகூ, குறிப்பாக இரா.சம்பந்தன் அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அது பிழைத்துவிட்டது. சம்பந்தன் ஐயா விக்னேஸ்வரனது சாதகத்தை சரியாகப் பார்க்கத் தவறிவிட்டார். பதவியேற்ற சில மாதங்களிலேயே விக்னேஸ்வரன் ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கத் தொடங்கிவிட்டார். எனது சொந்தச் செல்வாக்குக் காரணமாகவே நான் தேர்தலில் வெற்றிபெற்றேன் எனது வெற்றிக்கு எந்தக் கட்சியும் உதவவில்லை என்று பேசத் தொடங்கினார்.விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சி அலுவலகப் பக்கம் போகாமல் இருந்து விட்டார்.

  2015 இல் விக்னேஸ்வரன் ஒரு இரவு விருந்து நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. என்னால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது எனது முதுகில் புண் இருக்கிறது இன்னொரு முறை வருவேன் எனச் சொன்னார். ததேகூ விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம் அவர்கள் தன்னை வைத்து பணம் திரட்டப் பார்த்தார்கள் என மற்றவர்களுக்குச் சொன்னார்.

  இவ்வளவிற்கும் 2013 இல் நடந்த மாகாணசபைத் தேர்தலின் போது அவரது தேர்தல் செலவில் கணிசமான தொகையை ததேகூ(கனடா) கொடுத்து உதவியது. அதனை அவருக்கு திருக்குறளை மேற்கோள் காட்டி நினைவூட்டியபோது “நீங்கள் நல்ல தமிழில் எழுதுகிறீர்கள்” என்ற பதில் வந்தது.
  கனடாவுக்கு வர மறுத்த விக்னேஸ்வரன் அதே ஆண்டு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் பயணம் செய்து ததேகூ க்கு எதிரான அமைப்புக்கள் நடத்திய கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது முதுகுப் புண்ணுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
  2015 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது ஆதரவு ததேமமு பக்கம் இருந்தது. கொழும்பில் இருந்து கொண்டு (வெளிநாடு சென்று திரும்பிய கையோடு) அறிக்கை மேல் அறிக்கை விட்டார். அதில் தேர்தல் நாளன்று வீட்டில் இருந்து வெளியே வந்து மாற்றத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். “ததேமமு இல் இருந்து 3 – 4 பேர் நாடாளுமன்றம் போனால் என்ன? அது நல்லதுதானே?” எனத் தனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களோடு பேசினார். ஆனால் மக்கள் விக்னேஸ்வரனது அறிக்கைகளை கண்டு கொள்ளவே இல்லை.

  தேர்தல் முடிவு வந்த போது ததேமமு போட்டியிட்ட 8 தேர்தல் தொகுதிகளில் 7 தேர்தல் தொகுதிகளில் கட்டுக்காசை இழந்தது. எட்டாவது தேர்தல் மாவட்டமான யாழ்ப்பாணத்தில் 6 வாக்குகளால் கட்டுப்பணத்தை தக்க வைத்தது. சோகம் என்னவென்றால் அந்த 6 வாக்குகளால் ஐதேக இல் போட்டியிட்ட விஜயகலா தேர்தலில் வெல்ல முடிந்தது! ததேகூ ஒரு இருக்கையை பறிகொடுத்தது.

  இந்த ஆண்டின் தொடக்கத்தில் விக்னேஸ்வரன் தனது தனிச் செயலாளர், அரசியல் ஆலோசகர் நிமலன் கார்த்திகேயனுடன் கனடா வந்தார். ததேகூ(கனடா) இருப்பதை அவர் கண்டு கொள்ளவே இல்லை. தன்னைச் சந்திக்கக் கேட்டு முறையான அழைப்பு எதுவும் வரவே இல்லை. ரொறன்ரோ மாநகர சபையோடு ஒரு நட்புறவு உடன்பாட்டை எழுதிக் கொண்டார். மார்க்கம் நகரசபையோடு இன்னொரு நட்புறவு உடன்பாட்டை எழுதியதாக அவரது ஆதரவாளர்கள் சொன்னாலும் அப்படியொரு உடன்படிக்கை எழுதப்படவே இல்லை. அவரை மார்க்கம் நகரசபை தலைவர் வரவேற்கவே இல்லை.
  கனடாவில் ததேகூ க்கு எதிரான சக்திகள் நடத்திய கூட்டங்கனில், இரவு விருந்துகளில் கலந்து கொண்டார். அவரது பெயரைச் சொல்லிப் பெருந்தொகைப் பணத்தை கனடிய தமிழர் சிவில் சமூகம் திரட்டியது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டு முடியுந்தருவாயில் அந்தப் பணம் இங்குள்ள வங்கியில் தூங்குவதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக மாகாண சபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது கனடாவில் தனக்குப் பணமோ, சாசோலையோ யாரும் தரவில்லை என ஒரு மழுப்பல் பதிலை விக்னேஸ்வரன் இறுத்தியிருந்தார்.

  மாகாண சபை முதலமைச்சர் நிதி நியதிச் சட்டத்தை நிறைவேற்றி இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டது. முதலமைச்சர் மத்திய அரசோடு மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால் அவரால் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற முடியாத கையறு நிலையில் உள்ளார்.
  2015 இல் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிதியம் (UNDP-Peace Building Fund)) வடக்கு மாகாண விவசாயிகள் தங்கள் விவசாயத்தை மேம்படுத்த USD 150 மில்லியன் டொலர்களை கொடுத்து உதவ முன்வந்தது. ஆனால் பேராசை பிடித்த முதலமைச்சர் தனது மருமகன் நிமலனுக்கு அந்தத் திட்டத்தை கண்காணிக்க மாதம் USD 5,000 டொலர் சம்பளத்தில் சிறப்பு அலுவலர் பதவி ஒன்று வழங்கப்பட வேண்டும் என எழுத்தில் கேட்டார். பதவிகளை நிரப்புவது யூஎன்டிபி இன் வேலை அதற்கான ஒழுங்கு முறைகள் இருக்கின்றன என அதன் வதிவிடப் Subinay Nandy பதில் அளித்திருந்தார். மேலும் “தனது உறவினரை வேலைவாய்ப்பு விதிகளிற்கு முரணானகவும், நீதியற்ற முறையிலும் நியமிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சித்த அதேவேளை அந்த வேலைக்கு நியமிக்கப்படவிருந்த அவரது உறவினர் நிமலன் கார்திகேயன் மேற்கொண்ட “அதீத தலையீட்டு பிரச்சாரத்தால் சாத்தியம் இல்லாமல் போனதாக .[“….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment”] என கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனது மருமகனுக்கு கொழுத்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்த விக்னேஸ்வரன் பேராசைப்பட்ட காரணத்தால் அந்த நிதியுதவியை இழந்தார். இதன் மூலம் வட மாகாண விவசாயிகளுக்கு மன்னிக்க முடியாத இரண்டகம் செய்தார்.

  ஒரேயொரு ஆறுதல். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 10 மாதங்கள்தான் எஞ்சியிருக்கின்றன.

 2. சிங்கக் கொடியைத் தமிழர்கள் மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மை. இப்போதுள்ள சிங்கக் கொடி ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பதில் டி.எஸ் சேனநாயக்கா அவர்ளால் கொண்டுவரப்பட்டது. இந்தக் கொடி கண்டியை ஆண்ட கடைசி மன்னன் சிறி விக்கிரம இராசிங்கன் பயன்படுத்திய கொடியாகும். இந்தக் கொடி கருஞ் சிவப்பு நிறத்தில் மஞ்சள் நிறத்திலான வாளேந்திய சிங்கமொன்றையும் நான்கு மூலைகளிலும் அரச மரத்து இலைகளையும் கொண்டுள்ளது. செம்மஞ்சள் நிறப் பட்டை தமிழரையும், பச்சை நிறப் பட்டை முஸ்லீம்களையும், சிங்கத்துடன் கூடிய கருஞ் சிவப்பு நிறப் பகுதி சிங்களவர்களையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது. சிங்கக் கொடியை இலங்கையின் தேசியக் கொடியாகக் கொண்டுவந்த போது தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் சேனநாயக்காவோடு தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிஜி பொன்னம்பலம் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் பேசி கொடிக்கு வெளியே தமிழர்களுக்கு செந்நிறக் கோடும் முஸ்லிம்களுக்கு பச்சை நிறக் கோடும் (இரண்டும் ஒரே அளவில்) சேர்க்கப்பட்டன. இதனை தமிழ் அரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.
  ஒரு நாட்டின் தேசியக் கொடி அந்த நாட்டில் வாழும் சகல மக்களையும் பிரதிபலிக்கும் குறியீடாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் அந்தக் கொடியையிட்டு பெருமைப்பட வேண்டும். கனடாவில் மேப்பிள் மரத்தின் பதினொரு கூர்களைக் கொண்ட இலையை தேசியக் கொடியின் நடுவில் உள்ள வெள்ளைச் சதுரத்தில் வைத்திருக்கிறார்கள். இந்தக் கொடி ஆயிரத்து அறுநூற்று அறுபத்து ஐந்தில் கொண் வரப்பட்டது. கனடியர்கள் அந்தக் கொடியை வீடுகளில் பறக்க விடுகிறார்கள்.
  பல நாடுகள் அந்த நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட இன மக்கள் வாழ்ந்தால் அவர்களைக் குறிக்க பச்சை, நீலம், மஞ்சள் நிறக் கோடுகளை சேர்த்துக் கொள்கிறார்கள்.
  இந்திய நாட்டின் கொடி மூவர்ணக் கொடி. காவி, பச்சை, வெள்ளை நிறக் கோடுகள் நடுவில் அசோக சக்கரம் வைக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நட்சத்திரங்களை சேர்த்துக் கொள்கிறார்கள். சிங்கக் கொடி, சோழர்களில் புலிக் கொடி போன்ற கொடிகள் பண்டைய இனக் குழுமங்களை அடையாளப்படுத்தும் கொடிகள் ஆகும்.
  சிங்கக் கொடியை கல்வி அமைச்சர் ஏற்ற விரும்பாவிட்டால் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாது இருந்திருக்க வேண்டும். அல்லது சிங்க்க் கொடியை ஏற்றத் தன்னை அழைக்க வேண்டாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏலவே சொல்லியிருக்க வேண்டும். காலத்தையும் இடத்தையும் அறிந்து அமைச்சர் செயல்பட வேண்டும். எப்படி ஆறாம் சட்ட திருத்தத்தின் கீழ் எடுக்க வேண்டிய உறுதிமொழியை காலத்தை யும் இடத்தையும் அறிந்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது போல் சிங்கக் கொடி ஏற்றும் வினையிலும் இராசதந்திரத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அப்படியில்லாது இன்றைய கால கட்டத்தில் அமைச்சர் பொறுப்பற்றவிதமாக நடந்து கொண்டது எதிர்விளைவைத்தான் உண்டாக்கியுள்ளது.

Leave a Reply