வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு பயன் தரும் வரவு செலவுத் திட்டம்

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்குப் பயன் தரும் வரவு செலவுத் திட்டம்

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு பயன் தரும் வரவு செலவுத் திட்டம்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கான முக்கியமான திட்டங்கள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் செங்கல் மற்றும் ஓடுகளைக் கொண்ட 50,000 வீடுகளை நிர்மாணிக்க 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் வீட்டு வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக 2500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் மன்னார் நகரம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

காணாமற்போனவர்களுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் 2018 ஆம் ஆண்டில் முழுமையாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அலுவலகத்தை ஸ்தாபிக்க 1400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கப் பொறிமுறையை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் ஆயுட்காலமானது நீடிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,600 முன்னாள் போராளிகளுக்கு அவர்களின் திறன்களின் அடிப்படையில் தேசிய தொழில்சார் தகைமை சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, தொழில் தகைமையுள்ளவர்களாக அவர்களை உருவாக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 5 முன்னாள் போராளிகளை தொழிலில் இணைத்துக்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு, தொழிலாளர் ஒருவருக்கு ஆகக்கூடியது மாதம் 10,000 ரூபா என்ற வகையில் 50 சதவீத சம்பள மானியம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

வடக்கிலுள்ள மாற்றுத்திறனாளி பெண்களுக்கான விசேட நிலையமொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை சிறிய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்த 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நுண் கடனாளிகளை கிராமிய கூட்டுறவு வங்கிகள், சேமிப்பு மற்றும் கடன் கூட்டுறவு சங்கங்களினூடாக கடன்களிலிருந்து மீட்பதற்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் முதலில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, இதற்கென 1000 மில்லியன் ரூபா
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிவனொளிபாத மலை, மடு, கோணேஸ்வரம் முன்னேஸ்வரம் மற்றும் நல்லூரில் யாத்திரிகர்கள் தங்குமிடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

மயிலிட்டி துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வேறு பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்பவர்கள் தமது பாரம்பரிய வாழ்வாதாரங்களை மீள ஆரம்பிக்க ஒத்துழைப்பு வழங்கப்படவுள்ளது.

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கொழும்பினை இணைத்து யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சியில் இரண்டு உணவு பதனிடும் நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இங்கு விசேடமாக பனங்கருப்பட்டி, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு பதனிடப்படவுள்ளதுடன், அதற்கு 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அச்சுவெலி கைத்தொழில் வலயத்தில் தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கும் கம்பனிகளின் மாதாந்த மின்சாரக் கட்டணத்தில்
50 வீதத்தை இரண்டு வருடங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்பதுடன், வலயத்தின் பொது வசதிகளை மேம்படுத்த 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கந்தளாய் நீதிமன்ற கட்டடத்தொகுதிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கப்படவுள்ளன.

புத்தளம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நந்திக்கடல், நாயாறு, சிலாபம், முந்தல் மற்றும் ஆண்டிக்குளம் உள்ளிட்ட 10 களப்புகளைத் தூய்மைப்படுத்தல், மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், அதற்கான ஆய்வு மற்றும் அபிவிருத்திகளை முன்னெடுத்தலுக்காக1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள சிறிய, நடுத்தர குளங்களை தூர்வார 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்க 3 களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

கடலட்டைகளின் கேள்வியைக் கருத்திற்கொண்டு கிளிநொச்சி – பூநரகரியில் பூரணமான பின்தள இருப்பு வலயம் அமைக்கப்படவுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சகல வசதிகளையும் கொண்ட நூலகமும் தகவல் தொழில்நுட்ப நிலையமும் அமைக்கப்படவுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் அதி நவீன இயந்திரங்களுடனான விசேட சிறுநீரகத் தொகுதியை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, மன்னாரில் நீரியல்வள கைத்தொழில் பூங்காக்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

சிலாபம், மிரிஸ்ஸ, காரைநகர் மற்றும் புலணவெல்ல மீன்பிடித்துறைமுகங்களை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த மட்டக்களப்பு மற்றும் சீனக்குடாவில் உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு உயர்தர பயிற்சி வாய்ப்புக்களை வழங்குவதற்காக கிண்ணியாவில் பல்கலைக்கழக கல்லூரியொன்று நிறுவப்படவுள்ளது.

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டரங்கு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மேலும், கல்முனை மற்றும் சம்மாந்துறையில் பாரிய நகர அபிவிருத்திக்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, இரத்தினபுரி வைத்தியசாலைகளில் புற்றுநோய் அலகுகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

பெருட்தோட்ட மக்களுக்கு 25,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மண்சரிவினால் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த 2800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேயிலை சிறுபற்று நில உடைமையாளர்களின் உற்பத்தித் திறனை விருத்தி செய்வதற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தெனியாய பிரதேச வைத்தியசாலைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசிதகள் வழங்கப்பட்டு, வைத்தியசாலை தரமுயர்த்தப்படவுள்ளது.

இரத்தினபுரி மற்றும் வெலிமடை நீதிமன்ற கட்டடங்களை பாதுகாப்பான இடங்களில் மீள் நிர்மாணம் செய்ய 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/11/114287/

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு பயன் தரும் வரவு செலவுத் திட்டம்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply