சனத்தொகை அதிகரிப்பு விடயத்தில் தமிழரின் நிலைமை வெகு வீழ்ச்சியில்!
அதனால் பெரும் பாதிப்பு நேரும் என எச்சரிக்கிறார் ஐங்கரநேசன்
தோலிக்கத் தமிழ்க் கலவன் பாட சாலையின் பரிசளிப்பு நிகழ்சி நேற்று வெள்ளிக்கிழமை நடை பெற்றது. அதிபர் க.நித்தியானந் தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்ற பல பாடசாலை களில் இன்று முப்பது, நாற்பது மாணவர்கள் மாத்திரமே பயின்று கொண்டிருக்கின்றனர். மாணவர் களின் எண்ணிக்கைக் குறை வால் பல பாடசாலைகளை மூடி விடலாம் என்ற கருத்துகள் கூட முன்வைக்கப்படுகின்றன. இதற்கு நகரங்களில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் மாணவர்கள் பயில விரும்புவதையே பலரும் காரணமாகக் கூறி வருகின்றனர். கிராமப் பாடசாலைகளில் மாண வர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவதற்கு இது ஒரு காரணமாக இருந்தாலும் இதுவே பிரதான காரணம் அல்ல.
யுத்தத்தினால் ஒரு புறம் பெருந் தொகையான தமிழ்மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து போக, இன்னொரு புறம் இனப்பெருக்க வீரியம் உள்ள ஒரு தலைமுறை இளம் சந்ததியும் போரில் அழிந்து போயுள்ளது. இதனால், எங்களது சனத் தொகை குறைந்து வருகிறது. இருக்கின்ற குடும்பங்கள்கூட பல் வேறு காரணங்களால் இரண்டுக்கு மேல் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை. இதுவே பாடசா லைகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து செல்வதற்கான பிரதான காரணமாக உள்ளது.
இன்று எண்ணிக்கையே சகல விடயங்களையும் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக உள்ளது. உண்மையானதா, நீதியானதா, சரியானதா, பிழையானதா என்று பார்க்காமல் பொய்க்கும், அநீதிக்கும், பிழையான விடயங்களுக் கும் பெரும்பான்மைப் பலம் இருந் தால் அது பெரு வெற்றி பெற்று விடுகிறது. தமிழ்மக்கள் குழந்தை களை அதிகளவில் பெற்றுக் கொள்வதில் அக்கறை காட்டாது விட்டால் விரைவில் இலங்கைத் தீவில் சிறுபான்மையிலும் சிறு பான்மையாகத் தமிழினம் மாற வேண்டிய அவலநிலை ஏற்படும் – என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.