மைத்திரிபாலவுக்கு சம்பந்தன் காட்டமான கடிதம்!
வழங்கிய உறுதியைக் காப்பாற்றுமாறும் கோரிக்கை
கேப்பாபிலவுக் காணிகளை
மறுபேச்சின்றிக் கொடுங்கள்!
இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபாலவுக்குக் காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவரும் தமித் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
தமிழ்ப் பிரஜைகளுக்கு உரித்தான முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவுக் காணி என்ற தலைப்பில் அனுப்பப் பட்டுள்ள அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
இந்த விடயம் தொடர்பாக, 2017 ஜூலை 20 ஆம் திகதியும், 2017 ஓகஸ்ட் 11ஆம் திகதியும் நான் தங்களுக்கு அனுப்பிய கடிதங் களுக்கு மேலதிகமாக இதனை எழுதுகின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராசாவும், எம்.ஏ.சுமந்தி ரனும் கடந்த 2017 ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இது விடயமாகத் தங்களைச் சந்தித்து உரையா டியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது 132 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 3 மாத காலத்
தினுள், அதாவது 2017 ஓகஸ்ட் 22 இலிருந்து எதிர்வரும் 23 ஆம் திகதிக்கிடையில் இந்தக் காணி களைத் தங்களால் விடுவிக்க முடியும் என இராணுவம் நம் பிக்கை கொண்டிருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் தனது 2017 ஒக்ரோபர் 10 ஆம் திகதியிடப்பட்ட கடித மூலம் குறித்த 132 ஏக் கர்களும் 2017 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்பு விடுவிக்கப் படும் என எனக்கு அறிவித்திருந்தார்.
குறித்த காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்பட வேண்டுமெனக் கோரி அதன் உரிமையாளர்கள் கடந்த 250 நாள்களுக்கும் மேலாக வெயி லையும் மழையையும் பொருட் படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
எனவே அந்த 132 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணிகள் மிகக் கூடிய விரைவில் விடு விக்கப்படவேண்டுமென நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கி றேன். இந்தக் காணிகள் எதிர் வரும் 23 திகதியளவில் விடுவிக் கப்படும் என மக்கள் மிகுந்த எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
மிகுதியாகவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி 73 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்தக் காணி மக்களின் சம்மதமின்றி இராணுவத்தால் அடாத்தாகக் கையேற்கப்பட்டுள்ளதோடு, பொதுத் தேவை ஒன்றிற்காகக் காணி சுவீகரிக்கும்போது தேவைப் படுத்தப்பட்டவாறு அவை கையேற்கப்படவில்லை. இராணுவம் இந்தக் காணியில் தங்கியிருக்க ஆரம்பித்த காலம் தொடக்கம் அந்தக் காணிகளைத் திருப்பித் தருமாறு மக்கள் தொடர்ச்சியாகக் கோரி வருகின் றனர்.
இந்தக் காணியில் இராணுவம் தொடர்ந்தும் தங்கியிருப்பதை நியாயப்படுத்த முடியாதென்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகி றேன்.
பல பரம்பரரைகளாக தமது மூதாதையரான தமிப் பிரஜைக ளுக்குச் சொந்தமாக இருந்து வந்த இந்தத் தனியார் காணிகளில் இந்த மக்கள் வலுவான பிணைப் பைக் கொண்டுள்ளனர். இந்தக் காணிகளில்தான் அவர்களு டைய மூதாதையர்கள் பரம்பரை யாக வாந்து, தமது சமூக, சமய, தொழில் மற்றும் வதிவிட நோக்கங்களுக்காகப் பயன் படுத்தி வந்துள்ளனர். இந்தப் பிரஜைகள் வேறு மாற்றுக் காணிகளைப் பெறுவதற்கோ அல்லது நட்டஈட்டைப் பெறு வதற்கோ விருப்பமுடை யவர்களாக இல்லை. இந்தக் காணிகளில் அவர்களுக்குரிய உரிமை மிக வலுவானது. அத னால் எத்தகைய மாற்றீடுகளும் அவர்களுக்குத் திருப்தியளிக்காது. இந்தப் பிரஜைகளின் விருப் பங்கள் தட்டிக்கழிக்கப்படாமல் மதிக்கப்படவேண்டியதென்பதை நான் வலியுறுத்திக் கூறுகின் றேன். தமக்குரிய இந்தக் காணிகளை மீளப் பெறுவதற்காக அவர்கள் அதிக துன்பங்களை அனுபவித்துள்ளார்கள் என்பதால் அவர்களுக்கு ஏமாற்றம் ஏற் படக்கூடாது.
இராணுவத்துக்குத் தேவை யாக இருந்தால் போதியளவு வேறு காணிகள் அங்கேயுள்ளன. அங்கே நட்டஈடு எதுவும் செலுத் தாது அவர்கள் தங்கியிருக்க முடியும்.
இந்தக் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இந்த மக்கள் காட்டிவரும் துணிச்ச லான உறுதிப்பாட்டின் அடிப் படையில், தமது காணி மீளப் பெறும் சட்டபூர்வமான அவர்களது உரிமையை மறுப்பது இன நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதில் பாரிய தடையாக அமையும். இது இன நல்லிணக்கத் துக்குப் பாரியளவில் பொதுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆகவே, குறிப்பிட்ட 73 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணி களும் கூடிய விரைவாக அவற் றிற்குரிய பிரஜைகளுக்கு மீளக் கையளிக்கப்பட வேண்டு மென்பதை மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விடயத்தில் தாங்கள் தலையீடு செய்யுமாறு கோருகிறேன் – என்றுள்ளது.(நன்றி – காலைக்கதிர்)
Leave a Reply
You must be logged in to post a comment.