தனது பெயரையும் தனது குழந்தைகளின் பெயர்களையும் தூய தமிழில் வைத்திருக்காவிட்டால் அவன்(ள்) தமிழன்(தமிழச்சி) இல்லை!

தனது பெயரையும் தனது குழந்தைகளின் பெயர்களையும் தூய தமிழில் வைத்திருக்காவிட்டால் அவன்(ள்) தமிழன்(தமிழச்சி) இல்லை!

மணக்க வரும் தென்றலிலே
குளிரா இல்லை? தோப்பில்
நிழலா இல்லை!
தணிப்பரிதாம் துன்பமிது
தமிழகத்தின் தமிழ்த் தெருவில்
தமிழ்தான் இல்லை
தமிழ்நாட்டின் உப்பைத் தின்
றீரன்றோ கணக்காயத்
தந்தை மாரே!
தமிழ்நாட்டின் தமிழர்களின்
தன்னுணர்வு நாட்டுவதைத்
தவிர்ப்பீ ராயின்
உமிழாதோ, வருத்தாதோ
உம்மையே உம் மருமை
உள்ளச் சான்றே?
அமுதூட்ட நஞ்சூட்டி
அகமகிழும் தாயுண்டோ
அருமைச் சேய்க்கே?
கல்லூரித் தலைவரை நான்
கேட்கிறேன் கனிதமிழின்
பேரைச் சொன்னால்
சொல்லூறிப் போகாதோ
வாயூறிப் போகாதோ
தாய் தமிழ்க்கு!

தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்று புரட்சிக் கவிஞர் (1891 – 1964) ஒரு  நூற்றாண்டுக்கு முன்னர் குற்றம் சாட்டினார்.  தமிழின் நிலை இன்றும் அப்படியே இருக்கிறது. இது பற்றி தமிழக அரசோ, அரசியல்வாதிகளோ, தமிழ் அறிஞர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கவலைப்படுவதே கிடையாது.

தமிழ்நாட்டில் வெளிவரும் ஏடுகள் தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து எழுதுகின்றன.  ஒரு எடுத்துக்காட்டு.

ஆமாம். கமல் சவுண்டு சர்வீஸ் இந்த வாரத்திலிருந்து ஸ்டார்ட் ஆகப்போகிறது. சவுண்டு இன்னும் அதிகமாக இருக்கும்” என்றபடி பறந்தார் கழுகார்.

ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ ரிக்கார்டுகளை மருத்துவமனையிடம் அவர் கேட்டுள்ளார். விசாரணைக்காக இதுவரை சுமார் 50 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளார். இந்த லிஸ்டில் …….….

“ என்னோட முதன்மை அசோசியேட் இயக்குநர் மாதிரி வேலை செய்றார். என் டீம் எதுவுமே பண்ணவேண்டாம். அவரே இறங்கி அந்தச் சூழலை செட் பண்ணிடுவார். ‘விடுறா சாரே பண்ணட்டும்’னு என் உதவி இயக்குநர்கள்கிட்ட சொல்லிடுவேன். ஆக்‌ஷன் காட்சிகள்ல ரொம்ப வித்தியாசமாவும், டூப் இல்லாமலும் நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கார். நாம இப்படி இருந்தால் நல்லா இருக்கும்னு சொல்லும்போது அதை ரசிச்சு உள்வாங்கிப் பண்றார். சில விஷயங்கள் மாத்திப் பண்ணலாம்னு ஐடியாக்கள் கொடுப்பார். (யூனியர் விகடன்)

இன்று தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழே இல்லை. எல்லாம் ஆங்கில மயம்.  பலர் ஆங்கிலச் சொலலை அப்படியே தமிழில் எழுதி வைத்துள்ளார்கள். சினிமா நடிகர்கள், நடிகைகள் வாயில் தமிழே வருகுதில்லை. தமிங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். தமிழ்நாட்டு பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் I am fine  என ஆங்கிலத்தில் பதில் வருகிறது. தமிழ்நாட்டில் கற்கை மொழி தமிழ் இல்லை. அலுவலக மொழி தமிழ் இல்லை. வழிபாட்டுத தலங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. இசையில் தமிழ் இல்லை. திரைப்படங்களின் பெயர்களில் தமிழ் இல்லை. இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். இலங்கையில் தமிழ்மொழிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தகைமை கூட தமிழ்நாட்டில் இல்லை.  தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் விளம்பரப் பலகைகளை மலையாளத்தில் நூற்றுக்கு நுர்று விழுக்காடு எழுதிவைத்துள்ளார்கள். நூற்றுக்கு 10 விழுக்காடு மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதி வைத்துள்ளார்கள். மலையாளி, கன்னடன் போன்ற இனத்தவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று ஏன் தமிழர்களிடம் இல்லை? ஏன் தமிழர்கள் பேராசிரியர் பர்வின் சுல்தான உட்பட், தங்கள் பெயரை தமிழில் வைத்திருக்கவில்லை?  ஏன் தொடர்ந்து வட மொழிப் பெயர்களையும் அரபு மொழிப் பெயர்களையும் வைத்திருக்கிறீர்கள்? எவனொருவன்(ள்) தனது பெயரையும் தனது குழந்தைகளின் பெயர்களையும் தூய தமிழில் வைத்திருக்காவிட்டால் அவன்(ள்) தமிழன்)தமிழச்சி இல்லை!



 

 

‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிந்தவர்கள், தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பிரமாணப் பத்திரங்களுடன் தெரிவிக்கலாம்’ எனச் சொல்லியிருந்தார் நீதிபதி ஆறுமுகசாமி. ஜெயலலிதா, அப்போலோவில் சேர்க்கப்பட்டிருந்த 75 நாள்கள் குறித்த டாக்குமென்ட்ஸ், யார் யார் அவரைச் சந்திக்க மருத்துவமனை வந்தார்கள் போன்ற தகவல்கள் மற்றும் ஃபைல்கள் திரட்டப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ ரிக்கார்டுகளை மருத்துவமனையிடம் அவர் கேட்டுள்ளார். விசாரணைக்காக இதுவரை சுமார் 50 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளார். 

மழை வெள்ளத்தைத் தடுக்க தமிழக அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை என மக்கள் குறைபட்டுக் கொண்டதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியன. குப்பை கூடங்கள் அப்புறப்படுத்தாததால் தண்ணீர் வாய்க்கால் வழி ஓடாது தேங்கி நின்றன. பல வீடுகள் தண்ணீரில் மிதப்பதைக் காட்டினார்கள். ஊர்ப் புறங்கங்களிலும் குளம் குட்டைகள் தூர்வாரததால் தண்ணி தேங்கி நின்றது. சில குப்பை கூளங்களைப் பார்க்க அருவருப்பாக இருந்தது. அணைகள் உடைப்பெடுத்ததால் வயல் வெளிகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. பருவமறை வரும் எனத் தெரிந்தும் அரசும், அதிகாரிகளும் வெறுமனே இருந்துவிட்டார்கள் என்பதே உண்மை.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply