யாழ் பல்கலையில் சைக்கிள் கோஷ்டியின் (செவ்வாய் கிரக அரசியல்வாதிகள்) தலையீடு வன்மையாக கண்டிக்கத்தக்கது!
குணாளன் கருணாகரன்
யாழ் பல்கலையில் #சைக்கிள் கோஷ்டியின் (செவ்வாய் கிரக அரசியல்வாதிகள்) தலையீடு வன்மையாக கண்டிக்கத்தக்கது . இன்றைய கலந்துரையாடலின் பின்ணனியிலும் அறிக்கையிலும் தோல்வி அரசியல்வாதி கஜேந்திரகுமாரின் தலையீடு நூறுவீதம் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முந்தினம் தொடக்கம் கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்ற குழப்பவாதிகள் அரசியல் அனுபவமற்ற சில பல்கலைகழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளைச் சந்தித்து தவாறான பாதையில் வழிநடாத்தியுள்ளனர். ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பிலுள்ளவர் மகிந்த ஆதரவு ஆரசியல்வாதியான பத்மினியின் தீவிர ஆதரவாளராவார்.
அதேபோன்று ஆசிரியர் சங்கத்தில் மிக முக்கிய பொறுப்பிலுள்ளவரும் தீவிர மகிந்த ஆதரவாளரே! மேற்படி நபரைக் கடந்த மே மாதம் சந்தித்து வித்தியா வழக்கு கொழும்புக்கு மாற்றப்படுவதனை எதிர்த்து நாங்கள் புங்குடுதீவில் பலபோராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம், நீங்களும் ஆதரவளிக்கவேண்டுமென்று கேட்டதற்கு அவர் மறுத்திருந்தார். ஆனால் கலைப்பீட மாணவர் தலைவர் ஏற்றுக்கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்திற்கு வெளியே கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு தென்னிலங்கையின் கவனத்தினை ஈர்ப்போமென்று எனக்கு உறுதியளித்தனர் மாணவர்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.
போராட்டம் உள்ளேதான் நடைபெற்றது. இதன் பின்னணியில் மேற்படி ஆசிரியர் சங்க நபரே இருந்தாரென்று அறிந்துகொண்டோம். அதேபோன்று அண்மையில் அரசியல் கைதிகள் விடயமாக ஜனாதிபதியை சந்தித்தனர் மாணவப் பிரதிநிதிகள். ஆனால் அது தொடர்பாக கூட்டமைப்பிடம் ஆலோசனைகளோ, முன்அறிவித்தலோ கேட்கவுமில்லை, வழங்கவுமில்லை. அப்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாட அவர்களுக்கு தோணியிருக்கவில்லை போலும்!
ஜனாதிபதித்துமா மைத்ரி அழைக்கிறாரென்று பாய்ந்து விழுந்து போனார்கள். ஒன்றுமே நடக்கவில்லை. பூசிமெழுகிப் பேசி அனுப்பிவிட்டார் ஜனாதிபதித்துமா ! இப்போது திடீரென்று முன்அறிவித்தலேதுமின்றி நாளை கூட்டம் எல்லோரும் வரவேண்டுமென்றால் என்னடா உங்களுக்கு எங்கள் புலிகள் இயக்கம் என்று நெனைப்போ? அது எப்பிடி எப்பிடி?
வராதவனுகளெல்லாம் தமிழர் அபிலாசைகளை மதிக்காதவராம்! ஏன்டா தம்பிகளா குடாநாட்டில் மூன்று வருடகாலத்திற்குள் அப்பாவி இளைஞர், யுவதிகள், சிறுவர்கள் மூவாயிரம் பேரை ஈபிடீபி பலியெடுத்ததே? அதை மறந்துட்டிங்களாடா? அவனை எப்பிடியடா மக்கள் பிரநிதியென்று உள்ளே விட்டு மரியாதை வழங்கினீர்கள்? உங்கட குடும்பத்தில் நடத்திருந்தா இப்பிடியெல்லாம் செய்வீர்களா?
மற்றைய நபர் eprlf ஆனந்தன். அவர்ட மண்டையன் குழு எத்தனை பேரை ரயர் போட்டு எரித்தது தெரியுமாடா உங்களுக்கு தம்பிமாரே? அடுத்தவர் அரசாங்கத்திலே தேசியப்பட்டியல் mp ஆக இருப்பவர். ஏன்டா டேய் அப்ப ஏன்டா அவன் அரசாங்கத்தில இருக்கிறான்? இப்பதான் தோணுச்சா கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென்று ? அடுத்தது பற்றி சொல்லத் தேவையில்லை அண்ணர் சிவாஜி. அவரது கோமாளி அரசியலை நரகலோகம் சென்றாலும் விடமாட்டார் ! வெளங்கிடும். #எழுக_தமிழ்
Leave a Reply
You must be logged in to post a comment.