Political Column 2015 (2)

2015 மற்றும்  2010 இல் நடைபெற்ற சனாதிபதி தேர்தல் முடிவுகள்
தேர்தல்
மகாணம்
ராஜபக்சா
 
சிறிசேனா
 
ஏனையோர்
 
 செல்லுபடி
ராஜபக்சா  
 
சரத்
மாவட்டம்
 
2015
 
2015
 
2015
 
2015
2010
 
2010
வாக்களிப்பு
வாக்குகள்
%
வாக்குகள்
%
வாக்குகள்
%
வாக்குகள்
வாக்குகள்
%
வாக்குகள்
%
%
அனுராதபுரம்
வட மத்தி
281,161
53.59
238,407
45.44
5,065
0.97
524,633
298,448
66.32
143,761
31.34
78.35
பதுளை
ஊவா
249,243
49.15
249,524
49.21
8,303
1.64
507,070
237,579
52.23
198,835
44.55
78.70
மட்டக்களப்பு
கிழக்கு
41,631
16.22
209,422
81.62
5,533
2.16
256,586
55,663
26.27
146,057
68.93
64.83
கொழும்பு
மேற்கு
562,614
43.40
725,073
55.93
8,673
0.67
1,296,360
614,740
52.93
533,022
45.90
77.06
திகமடுல்ல
கிழக்கு
121,027
33.82
233,360
65.22
3,430
0.96
357,817
146,912
47.92
153,105
49.94
73.54
காலி
தெற்கு
377,126
55.64
293,994
43.37
6,691
0.99
677,811
386,971
63.69
211,633
34.83
80.25
கம்பகா
மேற்கு
664,347
49.49
669,007
49.83
9,142
0.68
1,342,496
718,716
61.66
434,506
37.28
79.66
அம்பாந்தோட்டடை
தெற்கு
243,295
63.02
138,708
35.93
4,073
1.05
386,076
226,887
67.21
105,336
31.20
80.67
யாழ்ப்பாணம்
வடக்கு
74,454
21.85
253,574
74.42
12,723
3.73
340,751
44,154
24.75
113,877
63.84
25.66
களுத்துறை
மேற்கு
395,890
52.65
349,404
46.46
6,690
0.89
751,984
412,562
63.06
231,807
35.43
81.01
கண்டி
மத்தி
378,585
44.23
466,994
54.56
10,329
1.21
855,908
406,636
54.16
329,492
43.89
78.26
கேகாலை
சப்புரகாம
278,130
51.82
252,533
47.05
6,108
1.14
536,771
296,639
61.80
174,877
 36.84
78.76
குருநாக்கல்
வட மேற்கு
556,868
53.46
476,602
45.76
8,154
0.78
1,041,624
582,784
63.08
327,594
35.46
78.62
மாத்தறை
தெற்கு
297,823
57.81
212,435
41.24
4,892
0.95
515,150
296,155
65.53
148,510
32.86
78.60
மாத்தளை
மத்தி
158,880
51.41
145,928
47.22
4,214
1.36
309,022
157,953
59.74
100,513
38.01
77.94
மொனராகல
ஊவா
172,745
61.45
105,276
37.45
3,095
1.10
281,116
158,435
69.01
66,803
29.10
77.12
நுவரஎலியா
மத்தி
145,339
34.06
272,605
63.88
8,822
2.07
426,766
151,604
43.77
180,604
52.14
77.19
பொலநறுவை
வட மத்தி
105,640
41.27
147,974
57.80
2,382
0.93
255,996
144,889
64.92
75,026
33.62
80.13
புத்தளம்
வட மேற்கு
197,751
48.97
202,073
50.04
4,026
1.00
403,850
201,981
58.70
136,233
35.59
70.02
இரத்தினபுரி
சப்புரகாம
379,053
55.74
292,514
43.01
8,517
1.25
680,084
377,734
63.76
203,566
34.36
81.24
திருகோணமலை
கிழக்கு
52,111
26.67
140,338
71.84
2,907
1.49
195,356
69,752
43.04
87,661
54.09
68.22
வன்னி
வடக்கு
34,377
19.07
141,417
78.47
4,431
2.46
180,225
28,740
27.31
70,367
66.86
40.33
மொத்தம்
5,768,090
47.58
6,217,162
51.28
138,200
1.14
12,123,452
6,015,934
57.88
4,173,185
40.15
செல்லுபடி
12,123,452
10,393,613
99.03
தள்ளுபடி
140,925
101,838
0.97
வாக்களித்தவர்
12,264,377
81.52
10,495,451
74.50
பதியப்பட்டவர்
15,044,490
பெரும்பான்மை
449,072
1,842,749
நாடு முழுதும் 2010 ஆண்டு பதியப்பட்ட வாக்காளர்களின்  எண்ணிக்கை 14,088,500 ஆகும். இது 2015 இல் 15,044,490 ஆக அதிகரித்தது.  அதாவது 954,990 வாக்குகள்  கூடியுள்ளது.  வாக்களிப்பு விழுக்காடு 2010 இல் 74.50 ஆக இருந்தது.  இம்முறை 81.52 விழுக்காடாக அதிகரித்தது.

சனாதிபதி  மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றிக்குத்  தமிழ்பேசும் மக்கள் அவருக்கு வாக்களித்தது முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது மட்டும் காரணம் அல்ல.  சென்ற 2010 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் பெரும்பான்மை தமிழர் – முஸ்லிம்கள்  சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்தார்கள்.  ஆனால்  2010 ஆண்டு சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் தேர்தல் தொகுதிகளில் சரத் பொன்சேகாவுக்குப் போட்ட வாக்கைவிட அதிக வாக்கு இம்முறை சிறிசேனாவுக்கு விழுந்துள்ளது.   2010 இல் மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் பொன்சேகாவுக்கு வட கிழக்கு மற்றும் நுவர எலியா ஆகிய 6 தேர்தல் மாவட்டங்களில் மட்டும் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன. எஞ்சிய 16 மாவட்டங்களிலும் இராஜபக்சாவுக்ககே  பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன. 2015 ஆம் ஆண்டு தேர்தலில்   இராபக்சாக்கு 10 தேர்தல் மாவட்டங்களிலும்  சிறிசேனாவுக்கு 12 தேர்தல் மாவட்டங்களிலும் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.  அதாவது சிறிசேனா சிங்கள பவுத்த வாக்குகளை இரண்டாகப் பிரித்து பாதியை பிரித்தெடுத்தார்.  அதனைக்  கீழ்க்கண்ட அட்டவணை எடுத்துக் காட்டுகிறது.

அட்டவணை 2

2015 மற்றும்  2010 இல் சிங்கள பெரும்பான்மை தேர்தல் மாவட்டங்களில் (16) நடைபெற்ற சனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒரு ஒப்பு நோக்கு

தேர்தல் மகாணம் ராஜபக்சா   சிறிசேனா   ஏனையோர்    செல்லுபடி ராஜபக்சா     பொன்சேகா    
மாவட்டம்   2015   2015   2015   2015 2010   2010  

வாக்களிப்பு

    வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் வாக்குகள் % வாக்குகள் % %
அனுராதபுரம் வட மத்தி 281,161 53.59 238,407 45.44 5,065 0.97 524,633 298,448 66.32 143,761 31.34 78.35
பதுளை ஊவா 249,243 49.15 249,524 49.21 8,303 1.64 507,070 237,579 52.23 198,835 44.55 78.7
கொழும்பு மேற்கு 562,614 43.4 725,073 55.93 8,673 0.67 1,296,360 614,740 52.93 533,022 45.9 77.06
காலி தெற்கு 377,126 55.64 293,994 43.37 6,691 0.99 677,811 386,971 63.69 211,633 34.83 80.25
கம்பகா மேற்கு 664,347 49.49 669,007 49.83 9,142 0.68 1,342,496 718,716 61.66 434,506 37.28 79.66
அம்பாந்தோட்டை தெற்கு 243,295 63.02 138,708 35.93 4,073 1.05 386,076 226,887 67.21 105,336 31.2 80.67
களுத்துறை மேற்கு 395,890 52.65 349,404 46.46 6,690 0.89 751,984 412,562 63.06 231,807 35.43 81.01
கண்டி மத்தி 378,585 44.23 466,994 54.56 10,329 1.21 855,908 406,636 54.16 329,492 43.89 78.26
கேகாலை சப்புரகாம 278,130 51.82 252,533 47.05 6,108 1.14 536,771 296,639 61.8 174,877 78.76
குருநாக்கலை வட மேற்கு 556,868 53.46 476,602 45.76 8,154 0.78 1,041,624 582,784 63.08 327,594 35.46 78.62
மாத்தறை தெற்கு 297,823 57.81 212,435 41.24 4,892 0.95 515,150 296,155 65.53 148,510 32.86 78.6
மாத்தளை மத்தி 158,880 51.41 145,928 47.22 4,214 1.36 309,022 157,953 59.74 100,513 38.01 77.94
மொனராகல ஊவா 172,745 61.45 105,276 37.45 3,095 1.1 281,116 158,435 69.01 66,803 29.1 77.12
நுவரஎலியா மத்தி 145,339 34.06 272,605 63.88 8,822 2.07 426,766 151,604 43.77 180,604 52.14 77.19
பொலநறுவை வட மத்தி 105,640 41.27 147,974 57.8 2,382 0.93 255,996 144,889 64.92 75,026 33.62 80.13
புத்தளம் வட மேற்கு 197,751 48.97 202,073 50.04 4,026 1 403,850 201,981 58.7 136,233 35.59 70.02
இரத்தினபுரி சப்புரகாம 379,053 55.74 292,514 43.01 8,517 1.25 680,084 377,734 63.76 203,566 34.36 81.24
 16மாவட்டங்கள்   5,299,151 50.64 4,996,446 48.38 100354 0.98 10365,951 5,519109 61.73 3,421514 38.26
22 மாவட்டங்கள்   5,768,090 47.58 6,217,162 51.28 138,200 1.14 12,123,452 6,015,934 57.88 4,173,185 40.15
முழு இலங்கை  
செல்லுபடி    12,123,452 10,393,613 99.03
தள்ளுபடி   140,925 101,838 0.97
வாக்களித்தவர்   12,264,377 81.52 10,495,451 74.5
பதியப்பட்டவர்   15,044,490
பெரும்பான்மை    449,072 1,842,749

மொத்தம் 16 தேர்தல் மாவட்டங்களில் சிறிசேனா தோற்ற 10 தேர்தல் மாவட்டங்களில் அவருக்கு கணிசமான வாக்குகள் விழுந்துள்ளன. சிறிசேனாவுக்கு மொத்தம் 4,996,446 (48.38) இலட்சம் வாக்குகளும்  இராஜபக்சாவுக்கு  5,299,151 (50.64)இலட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.  அதாவது இராஜபக்சாவுக்கு 302,705 (1.26)  அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன.
ஆனால்   வட, கிழக்கு மற்றும் நுவர எலியா ஆகிய  6 தேர்தல்  மாவட்டங்களிலும் விழுந்த வாக்குகளை எடுத்துப் பார்த்தால் சிறிசேனாவுக்கு  781,777 (1,250,716  – 468,939) பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன.  அதாவது பெரும்பான்மை சிங்கள – பவுத்தர்கள் வாழும்  16 தேர்தல் மாவட்டங்களில் இழந்த 302,705 வாக்குகளை எஞ்சிய 6 தேர்தல் மாவட்டங்களில் கிடைத்த  781,777 மேலதிக வாக்குகளால் ஈடுசெய்து 479,072   பெரும்பான்மை வாக்குகளால் சிறிசேனா வெற்றி பெற்றார்.
கீழ்க்கண்ட அட்டவணை 3  கிழக்கில் (மட்டக்களப்பு, திகமடுல்ல, திருகோணமலை) வடக்கில் (யாழ்ப்பாணம், வன்னி) மற்றும் மத்திய மாகாணம் (நுவரஎலியா) இராஜபக்சா மற்றும் சிறிசேனாவுக்கு கிடைத்த வாக்குகளை தனியாகவும் மொத்தமாகவும் காட்டுகிறது.

வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல்  மாவட்டங்களில் சிறிசேனா 394,991 (75.82) இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளார். இதில் 93 விழுக்காடு வாக்குகள் (367,341) தமிழ்மக்களது வாக்குகளாகும்.  கிழக்கில்  சிறிசேனா  583,120 (72.01) இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.  இதில்  40 விழுக்காடு வாக்குகள் (233,248) தமிழ்மக்களது வாக்குகளாகும். எனவே வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்கள் சிறிசேனாவுக்கு ஆதரவாகப் போட்ட   மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 600,589 ஆகும். நுவர எலியாவில் சிறிசேனா 272,605 (63.88) இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளார். இதில்  60 விழுக்காடு (253,522) தமிழ்மக்களது வாக்குகளாகும்.

ஆக வடக்கு, கிழக்கு மற்றும்  மத்திய மாகாணத்தில் சிறிசேனாவுக்கு அண்ணளவாக 854,111 தமிழ்மக்கள் வாக்களித்துள்ளார்கள். இந்த எண்ணிக்கையோடு   கொழும்பு உட்பட  ஏனைய  16  தேர்தல் மாவட்டங்களில்  வாழும் தமிழ்மக்களில் கணிசமான விழுக்காடு  மைத்திரிபால சிறிசேனாவுக்கு  வாக்களித்திருப்பார்கள்.  ஒன்பது மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களது எண்ணிக்கையை கீழ்க்கண்ட அட்டவணை 4 காட்டுகிறது.

இலங்கைத் தமிழர்களதுகுடிப்பரம்பல் (2012)

அட்டவணை 3

மாகாணம் இலங்கைத் தமிழர்கள் %
மலையகத் தமிழர் %
 மத்தி 128,263 5.01% 484,429  
 கிழக்கு 609,584 39.29%    
 வடக்கு 987,692 93.29% 37,753  
 வட மத்தி 12,421 0.99%    
 வட மேற்கு 66,286 2.80%    
 சப்ரகமுவ 74,908 3.90% 104,063  
 தெற்கு 25,901 1.05%    
 ஊவா 30,118 2.39% 154,252  
மேற்கு 335,751 5.77% 61,826  
மொத்தம் 2,270,924 11.21% 842,323 4.2

சனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த இராஜபக்ச, அலரி மாளிகையிலிருந்து வெளியேறி அம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு சனவரி 09 வெள்ளி காலை  திரும்பியிருந்தார். அங்கு கூடியிருந்த பெருமளவிலான ஊர்மக்கள் தோல்வியால் துவண்டு போயிருந்த மகிந்த இராஜபக்ச அவர்களுக்குத் தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்தார்கள். அவர்களைப் பார்த்து இராஜபக்சா உரையாற்றினார்.

“சனாதிபதி தேர்தலில் நான் அடைந்த தோல்விக்குக் காரணம் வடக்கு, கிழக்கு மற்றும் மலைநாட்டில் உள்ள தமிழர்களது வாங்கு வங்கிகளாகும். ஆனபடியால் எக்காரணம் கொண்டும் இந்தத் தோல்வியை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். இப்போதும் ஆட்சி அதிகாரம் சிங்கள மக்களின் கைகளிலிருந்து போய்விடவில்லை. தமிழ்மக்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.”

ஆனால் இராஜபக்சா தனது தோல்விக்குத் தமிழர்களது வாக்குகளே காரணம் என்பது முழுதும் உண்மையல்ல. தேர்தல் பரப்புரையின் போது ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் அமைச்சர்கள் தங்களுக்குத் தமிழர்களின் வாக்குகள் தேவையில்லை என்று வெளிப்படையாகச் சொல்லியிருந்தார்கள். இராஜபக்ச முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்த தனது கட்சியின் தேர்தல் பரப்புரையின் போது தமிழ்மக்கள் பழையதை மறந்து தனக்கு ஆதரவு தருமாறு மட்டும் கேட்டிருந்தார். தமிழ்மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் எதைனையும் தீர்த்து வைப்பதாக எந்த உறுதிமொழியையும் அவர் வழங்கவில்லை. காரணம் இராஜபக்சா அவர்களைப் பொறுத்தளவில் தமிழர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வி.புலிகளைத் தோற்கடித்து தமிழ்மக்களை அவர்கள் பிடியில் இருந்து விடுவித்து அவர்களுக்கு சனநாயகத்தையும் சுதந்திரத்தையும் கொண்டுவந்திருப்பதாக அவர் சொன்னார். 13 ஆவது சட்ட திருத்தத்தில் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் காணி அதிகாரம் மற்றும் காவல்துறை அதிகாரங்கள் எந்தக் கட்டத்திலும் கொடுக்கப்பட மாட்டாது என்று அடித்துச் சொன்னார். காவல்துறை அதிகாரங்களை வட மாகாண சபைக்கு கையளித்தால் அது பிரிவினைக்கு அடிகோலும் என்றார்.

உண்மையில் இராஜபக்சா தனது தேர்தல் வெற்றிக்கு முழுக்க முழுக்க சிங்கள – பவுத்தர்களது வாக்கு வங்கியைத்தான் நம்பியிருந்தார். 2010 ஆம் ஆண்டில் அவர் பெற்ற வெற்றிக்கு சிங்கள – பவுத்த மக்களின் ஆதரவுதான் காரணியாக இருந்தது. 2010 ஆம் ஆண்டு இராஜபக்சா மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள 6 தேர்தல் மாவட்டங்கள் தவிர எஞ்சிய 16 தேர்தல் மாவட்டங்களிலும் வெற்றிபெற்றார். 2010 இல் நடந்த தேர்தலில் 6,015,934 (57.88) இலட்சம் வாக்குகளை எடுத்திருந்தார். இந்தத் தேர்தலில் 5,768,090 (47.58) இலட்சம் மட்டும் பெற்றிருக்கிறார். அதாவது 247,844 (10.30) இலட்சம் குறைவாகப் பெற்றிருந்தார். (மேலேயுள்ள அட்டவணையைப் பார்க்கவும்)

இதே சமயம் 2010 இல் சரத் பொன்சேகா 4,173,185 (40.15) இலட்சம் வாக்குகளைப் பெற்று 1,842,749 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். இப்போது நடந்து முடிந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா 6,217,162 (51.28) இலட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதாவது சரத் பொன்சேகா பெற்ற வாக்குகளைவிட 2,043,977 (11.73) இலட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளார். தமிழர்களில் சுமார் 978,111 பேர் மைத்ரிபால சிறிசேனவுக்கு வாக்கு அளித்துள்ளனர்.

மொத்த இலங்கைக்கும் சேர்த்துப் பார்த்தால், சிறிசேன 62,17,162 வாக்குகளும் இராஜபக்சா57,68,090 வாக்குகளும் பெற்றுள்ளனர். பெரும்பான்மை  449,072 இலட்சம் வாக்குகள் ஆகும்.

தேர்தல் பரப்புரையின்போதுசிறிசேனா  இனப்படுகொலை குறித்து இராஜபக்சா மீதோ இராணுவத்தினர் மீதோ பன்னாட்டு விசாரணைநடத்தமாட்டோம் என பகிரங்கமாகச் சொன்னார், மேலும் வடக்கில் இருந்து இராணுவம் திரும்பப் பெறமாட்டோம் என்றும் சிறிசேனா சொன்னார்.பாதுகாப்புதேவைப்படும் இடங்களில் இராணுவம் தொடர்ந்து இருக்கும்  என்றும் தெளிவாகவே சொன்னார். ஆனாலும் அவற்றையும்
மீறி  மகிந்தாவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற  தமிழ் வாக்காளர்கள் இரண்டு கைகளாலும் வாக்களித்திருக்கிறார்கள்.

இதன் பலனாக இலங்கை அரசியலில் பாரதூரமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்திகள் வீதிகளில் இராணுவத்தினர் எவரையும் பார்க்க முடியவில்லை எனச் சொல்லுகின்றன. வட மாகாண சபை ஆளுநர் அகற்றப்பட்டுள்ளார். முதல் அமைச்சரோடு மல்லுக்கு நின்ற முதன்மை செயலாளர் விஜயலச்சுமி இரமேஷ் இடம் மாற்றப்பட்டுள்ளார். மாகாணசபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும் என பிரதமர் இரணில் விக்கிரமசிங்கி அறிவித்துள்ளார். வடக்கில் இராணுவம் குறைக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உயிருக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடிய ஊடகவியலாளர்கள் நாடு திரும்பலாம் என அரசு அறிவித்துள்ளது. மாமனிதர் யோசேப் பரராஜசிங்கம் கொலை, இரவிராஜ் கொலை, மகேஸ்வரன் கொலை போன்ற அரசியல் கொலைகள் விசாரிக்கப்படும்.   இணையதளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பதவி ஏற்று பத்து நாட்கள்தான் ஆகின்றன. இந்த பத்து நாட்களுக்குள்தான் இந்த மாற்றங்கள் நடந்துள்ளன. நாட்டில் ஊழலற்ற நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் ஆட்சி, சனநாயக விழுமியங்களை போற்றும் ஆட்சி நடைபெற்றால் தமிழர்களது சிக்கல்களில் பாதி தீர்ந்துவிடும்.

இலங்கையில் இனச் சிக்கல் என்று ஒன்றுமில்லை. எல்லோரும் இந்த நாட்டின் சகோதரர்கள் என்று ஒருபுறம் தேனொழுகப் பேசிக் கொண்டு வட கிழக்கை இராணுவ மயப்படுத்தி, சிங்கள மயப்படுத்தி, பவுத்தமயப்படுத்தி தமிழர்களது காணிகளைப் பறித்து நடுத்தெருவில் விட்ட இராஜபக்சாவின் கொடிய ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எமது மக்கள் தமது கையில் உள்ள வாக்குரிமை என்று கூரிய ஆயுதத்தை சனவரி 8 இல் பயன்படுத்தினார்கள். அதன் விளைவுதான் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எமது மக்கள் நிம்மதியாக மூச்சுவிட முடிந்துள்ளது.

இராஜபக்சாவின் ஆட்சி இன்னும் ஏழாண்டு நீடித்திருந்தால் தமிழ்மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது. சனாதிபதி தேர்தலைப் புறக்கணித்திருந்தால் இராஜபக்சா வென்றிருப்பார். அதைத்தான் புறக்கணிப்பாளர்கள் விரும்பினார்களா?   வென்று வந்திருந்தால் அவர் சிங்கள – பவுத்தர்களது சனாதிபதியாகவே தொடர்ந்து இருந்திருப்பார். தென்னிலங்கை வாக்காளர்களில் பாதிக்கு மேல் இராஜபக்சா மூன்றாவது தடவையும் சனாதிபதியாக வருவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இதனை அவரே “எக்காரணம் கொண்டும் இந்தத் தோல்வியை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். இப்போதும் ஆட்சி அதிகாரம் சிங்கள மக்களின் கைகளிலிருந்து போய்விடவில்லை” எனக் கூறினார்.


இராசபக்சாவின் கொடுங்கோல் ஆட்சியை அகற்றியதில் தமிழ்மக்களுக்கும் பங்குண்டு

“13 ஆவது சட்ட திருத்தம் இறுதித் தீர்வல்ல” – எம்.ஏ.சுமந்திரன், நா.உ
செவ்வி கண்டவர்  –  பி.கிருஷ்ணசாமி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) இன் முன்னணித்  தலைவர்களில் ஒருவரான எம்.ஏ. சுமந்திரன்,  நா.உ  சனவரி 28, 2015 நாளிட்ட  சண்டே  ஒப்சேர்வர் நாளேட்டுக்கு அளித்த தனி நேர்காணலில்  ததேகூ இன் தேவைகளை –  தமிழர்  சிக்கலுக்குகான இறுதித் தீர்வு பற்றி  அவர்களின் நிலைப்பாடு, போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின்  வாழ்வாதாரங்கள்,
மீள்குடியேற்றம் போன்றவை தொடர்பாக உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கிழக்கு மாகாண முதலமைச்சர்  பதவி தொடர்பாக எழுந்துள்ள சச்சரவு மற்றும் யாப்பில் உள்ள 13 ஏ திருத்தத்தை அரசு முழுமையாக  நடைமுறைப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக எடுத்துச் சொன்னார்.

அவரின் நேர்காணலின் சில பகுதிகள்:

கேள்வி:   வடக்குக் கிழக்கு மக்களை  ததேகூ  சார்பு படுத்துகிறது.  தமிழ்மக்கள் மற்றும் முஸ்லிம்கள்  புதிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வரப் பேரளவு ஆதரவு கொடுத்திருப்பது  நாட்டின் வேறுபட்ட சமூகங்களுக்கு இடையே இணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வைக் காட்டும் சைகைகளா?

பதில்: ஆம், இந்த சைகை  நல்லது. ஏனெனில்  மைத்திரிபால சிறிசேனா தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எல்லாச் சமூகங்களும் அவருக்கு வாக்களித்துள்ளன.  அவரை மக்கள் பரந்தளவு ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.  இது குறிப்பிடத்தக்க சாதனையாகும். முன்னைய சனாதிபதி, அவரது கூற்றுப்படியே, ஒரு சமூகத்தின் வாக்குகளை மட்டுமே பெற்றிந்தார்.
எல்லா சமூகங்களும் இன்று ஒன்றாக வந்துள்ளன. இதனால் நிலுவையில் உள்ள சிக்கல்கள் தீர்த்துவைக்கப்படுவதற்கு இது நல்ல சமிக்கையாகும்.

கேள்வி: அரசாங்கத்தோடு குறிப்பிட்டு என்னென்ன சிக்கல்களை ததேகூ எடுத்துக் கொண்டுள்ளது?

பதில்: தற்போது நாம் எமது மக்களின் மீள்குடியமர்வு பற்றிய சிக்கலை கையில் எடுத்துள்ளோம். அவர்கள்  தங்களது காணிகளில் மீள்குடியர முடியாமல் இருக்கிறது. காரணம் அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட காணிகள் அவர்களுக்கு மீள்கையளிக்கப்படவில்லை. புதிய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்குத் தடையாக இல்லாத எல்லாக் காணிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. குறிப்பாக வடக்கில் எடுக்கப்பட்ட காணிகள்,  கிழக்கில் சில பகுதிகளில்  எடுக்கப்பட்ட காணிகள் தேசிய பாதுகாப்போடு தொடர்பில்லாதவை.

அந்தக் காணிகளை  இராணுவம் எடுத்து அதில் ஹோட்டல்கள், பண்ணைகள் மற்றும் களியாட்டங்கள், கோல்வ் விளையாட திடல் மற்றும் அது போன்ற நோக்கத்துக்காக எடுக்கப்பட்டவை.

இது மிகவும் பாரதூரமான சிக்கல். காரணம் அந்தக் காணிகளில் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தவர்கள். அந்தக் காணிகள் அவர்களுக்கு மீளக் கொடுக்கப்பட வேண்டும்.
பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தேவைப்படும்  முகாம்களையும் மற்றும் இராணுவ அமைப்புகளையும் அரசாங்கம் வைத்துக் கொள்ளலாம். அவை தவிர்ந்த ஏனைய காணிகள் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இதுதான் அரசாங்கத்துக்கும் ததேகூ க்கும் இடையிலான புரிந்துணர்வாகும்.

நாங்கள் அரசியல் கைதிகளை மற்றும் காரணமின்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுள்ளோம்.

போராளிகள் மீள்வாழ்வு கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியிருக்க போரில் ஈடுபடாதவர்களை  ஆனால் போர்க்காலத்தில் உணவுப் பொதிகளை வி.புலிகளுக்குக் கொடுத்தார்கள் என்ற குற்றம்சாட்டப்பட்டு – அதில் அவர்களுக்குத் தெரிவு இருக்கவில்லை –  கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைச்சாலைகளில் நீண்ட காலம் வாடுகிறார்கள்.  அரசாங்கம் இவர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.
மற்ற சிக்கல் மாகாண சபையின் கட்டமைப்பு மற்றும் அதன் நிருவாகம் பற்றியது.

நாங்கள் மாகாணசபை சட்டப்படி சரியான  இயங்கவேண்டும் என விரும்புறோம். அது அப்படி இயங்குவதற்க கடந்த காலத்தில் முட்டுக்கட்டை போடப்பட்டிருந்தது. நாங்கள் இந்தச் சிக்கல் பற்றி அரசாங்கத்தோடு பேசினோம். அது பற்றி அரசாங்கம் சில நடவடிக்கைகளை புதிய ஆளுநர் நியமனம் மற்றும் புதிய செயலாளர் நியமனம் உட்பட ஏற்கனவே எடுத்துள்ளது.
நிருவாகம் பற்றிய ஏற்பாடுகள் பற்றிய சில மாற்றங்களும்  செய்யப்பட்டுள்ளன. இவை வரவேற்கப்பட வேண்டிய சமிக்கைகளாகும்.

நாலாவது சிக்கல்  நீண்ட கால அரசியல் தீர்வு பற்றியது. இது பற்றி உடனடிக் கவலையில்லை. ஆனால் முதல் 100 நாட்களில் எமது சிக்கல்கள் பற்றிச் சில தொடக்க நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் எனக்   கேட்டுள்ளோம்.    புதிய நாடாளுமன்றம்  கூடும் போது   கணிசமான பணி செய்து முடித்திருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து முறையான கலந்தாய்வு இடம்பெற வேண்டும்.
தமிழ்மக்கள் தொடர்பான நீண்டகால தீர்வு 100 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைக்கு எடுக்க முடியாது என சனாதிபதி மைத்திரிபால

சிறிசேனா சொல்வதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

இப்போது தொடக்க ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும்.  அப்படிச் செய்வதற்கு அரசாங்கம் அக்கறையோடு இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

கேள்வி:   ஒரு பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்ட விரும்புகிறீர்களா?

பதில்:  பேசுவதற்கு ஒன்றுமாறி ஒன்று வந்த அரசாங்கங்களினாலும் வெவ்வேறு சனாதிபதிகளாலும்  முன்வைக்கப்பட்ட பல முன்மொழிவுகள் இருக்கின்றன. அவை பற்றி நாம் மீண்டும் பேச வேண்டும். அந்தவகையில் ஒரேமாதிரியான ஐந்து ஆவணங்கள் இருக்கின்றன. அவையே எதிர்காலத்தில் இடம்பெறும் இருதரப்பு பேச்சு வார்த்தைகளுக்கு அடிப்படையாக இருக்கும் என முன்னாள் சனாதிபதி இராஜபக்சா அவர்களோடு செய்யப்பட்ட ஓர் உடன்பாடு இருக்கிறது.

நாங்கள் உடன்பாடு கண்டோம். ஆனால் உடன்பாடு கண்டபின்னர் அவர் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை இடைநிறுத்தி விட்டார். மீண்டும் அ, ஆ இல்  இருந்து தொடங்குவதற்குப் பதில் ஏற்கனவே நாட்டில் உருவாகிய முன்மொழிவுகளை – காலத்துக்குக் காலம் 1993 – 2006 க்கு இடைப்பட்ட காலத்தில்  அரசாங்கங்கள் முன்மொழிந்த முன்மொழிவுகளை  நாங்கள் பயன்படுத்தலாம்.  ஒரு தீர்வை அடைவதற்கு நாங்கள் இந்த செயல்முறைகளையும் ஆவணங்களையும் அந்த முன்மொழிவுகளில் கூறப்பட்டுள்ள வரம்புக்குள் பயன்படுத்தலாம்.

கேள்வி:  அந்த ஆவணங்களில் இணைப்பாட்சி பற்றிய முன்மொழிவுகள் இருக்கின்றனவா?

பதில்: இராஜபக்சா அரசாங்கத்தோடு பேசும்போது சச்சரவு தொடர்பான சொற்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. நாங்கள் ஒற்றையாட்சி யாப்பு அல்லது இணைப்பாட்சி யாப்பு  என்று முத்திரை குத்தப்படாத ஒரு யாப்பை விரும்புகிறோம்.
கணிசமான அதிகாரப் பகிர்வு   இருக்க வேண்டும் என நாம் கேட்கிறோம்.  அது போலியான,  உதவாத அல்லது நடைமுறைச் சாத்தியம் அற்றதாக இருக்கக் கூடாது.   உண்மையான  நடைமுறைச் சாத்தியமான அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒழுங்குகள் இருக்க வேண்டும். அதைத்தான் நாம் கேட்டுள்ளோம். அது ‘இணைப்பாட்சி’ ‘ஒற்றையாட்சி’ அல்லது வேறு எதைப் போன்றும் இருக்க வேண்டியதில்லை.

கேள்வி:  நாடாளுமன்றத்தில் இருக்கும் சகல கட்சிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்குமா?

பதில்: நிச்சயமாக.  நாங்கள்  எமது முன்மொழிவுகளுக்கு எல்லோரது ஆதரவையும் பெறுவோம். காரணம் எமது முன்மொழிவுகள் அநீதியானது  அல்லது  நியாயமற்றது அல்ல.  அது மிகவும் நியாயமான முன்மொழிவுகளாக இருக்கும்.  அது நான் முன்னர் குறிப்பிட்டது போல ஏற்கனவே அரசாங்கத்தின்  பக்கம் இருந்து வந்த ஆவணங்களின் அடிப்படையில் இருக்கும்.
எனவே யாருக்காவது அவை (ஆவணங்கள்)  தொடர்பாக சிக்கல்கள் ஏதாவது இருக்கும் என நான் எண்ணவில்லை. நாங்கள் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் ஒரு  தீர்வை அடைய அணியமாக இருக்கிறோம்.

கேள்வி:  வட மாகாண சபை பற்றி குறிப்பிட்ட  எதையாவது கேட்கிறீர்களா?

பதில்:  இப்போது வட மகாண சபை பற்றிய ஒழுங்குகள் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பதைக் காட்டுகிறது. 13 ஆவது சட்ட திருத்தம்   முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. உண்மையில் அதைத்தான் முதலில் செய்திருக்க வேண்டும். முன்னாள் சனாதிபதி மகிந்த இராஜபக்சா 13 ஆவது சட்ட திருத்தம்  முழுமையாக நடை முறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியைத் தந்தார். அது மட்டுமல்ல அதிகாரப் பரவலாக்கல் பொருள்பொதிந்ததாக இருப்பதற்கு 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு  மேலாகவும்  செல்லுவேன் என்றும் சொன்னார்.

முதற்படியாக கடதாசியில் இருப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதே நேரம்  அந்தக் கடதாசியில் இருப்பதைப் பற்றி நாம் கலந்துரையாடி அதனைப் பொருள்பொதிந்த அதிகாரப் பகிர்வாக ஒழுங்கு செய்ய வேண்டும்.  எடுத்துக்காட்டாக, ஆளுநர்தான் நிறைவேற்று அதிகாரங்கள் படைத்த  முக்கிய நிறைவேற்று அதிகாரி.  இதன் பொருள்  அதிகாரப் பரவலாக்கல் இல்லை என்பதாகும். ஆளுநர் சனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். சனாதிபதி பதவியில் இருக்கு மட்டும் அந்த நிறைவேற்று அதிகாரங்களை வைத்திருப்பவர்.  ஆளுநரை மத்தியில் இருக்கும் சனாதிபதி நியமிக்கிறார். நியமித்துவிட்டு அவருக்கு அதிகாரங்களைக் கொடுக்கிறார். அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு ‘நான் அதிகாரங்களை பரவலாக்கல்  செய்து விட்டேன்’ என்று  சொல்கிறார். அது அதிகாரப் பரவலாக்கல் அல்ல. நடைமுறையில் சனாதிபதிதான் ஆளுநர் ஊடாக அதிகாரத்தைப்  பயன்படுத்துகிறார்.

இதை நாம் அடியோடு மாற்றுமாறு கேட்கிறோம். அப்போதுதான் அதிகாரம்  மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபைக்கோ அல்லது மக்களுக்கு உண்மையில் கொடுக்கப்படும்.  13ஆவது சட்ட திருத்தத்துக்கு அப்பால் செல்லும் அப்படியான ஒழுங்கினைத்தான் நாம் கேட்கிறோம். அப்போதுதான் அது பொருள் பொதிந்ததாக இருக்கும்.

கேள்வி:  கிழக்கு மாகாண சபைக்கு  ஒரு முதலமைச்சரை நியமிப்பதில் இழுபறி இருப்பதாக ஊடகங்களில் செய்தி வருகின்றன. அது பற்றிய உங்கள் விளக்கம்  என்ன?

பதில்: 2012 இல் கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடந்த போது நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு (ஐமசுமு)  எதிராகப் போட்டியிட்டோம். ஐக்கிய தேசியக் கட்சியும்(ஐதேக) ஐமசுமு க்கு எதிராகப் போட்டியிட்டது.  பின்னர் ஐமசுமு ஓடு சேர்ந்து கொண்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி(சிலமுகா)   அந்தத் தேர்தலின் போது ஐமசுமுன்னணிக்கு எதிராகவே பரப்புரை செய்தது.

ஐதேக மற்றும் ததேகூ இரண்டையும் விட ஆளும் கட்சியை பலமாக எதிர்த்தவர்கள் இந்த சிலசுகா  கட்சியினரே. தேர்தல் முடிவுகள் வந்த போது ததேகூ க்கு 11 இருக்கைகள் கிடைத்தன. சொற்ப வாக்குகளால் ஐமசுமு 12 இருக்கைகளைப் பெற்றது. அதனால் அவர்களுக்கு மேலதிகமாக இரண்டு இருக்கைகள் கிடைத்தன. விமல் வீரவம்சாவின் தேசிய சுதந்திர முன்னணி (தேசுமு) ஒரு இருக்கையை பெற்றது.  அரசாங்க பக்கம் எல்லாமாக 15 இருக்கைகள் இருந்தன.  எமக்கு 11 இருக்கைகள், ஐதேக  க்கு  4 இருக்கைகள். அவர்கள் எங்களுக்கு ஆதரவு தர முன்வந்தார்கள். எனவே எங்கள் தரப்புக்கும் 15 இருக்கைகள்.   ஆக  ஐமசுமுன்னணிக்கும் 15 இருக்கைகள் ததேகூ க்கும் 15 இருக்கைகள். இந்தச் சூழ்நிலையில் சிலமுகா க்கு  7 இருக்கைகள் இருந்தன. இந்த இருக்கைகளை அரசாங்கத்துக்கு எதிராக பரப்புரை செய்தே பெற்றுக் கொண்டது. எனவே இயற்கையாக அந்த 7 இருக்கைகளும் அரசாங்கத்துக்கு எதிரான இருக்கைகளே.

இந்த நிலையில் சிலமுகா, ஐதேக மற்றும் ததேகூ சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்ற யோசனையை நாம்  முன்வைத்தோம். சிலமுகா கேட்காமலேயே  நாமாக முதலமைச்சர் பதவியைக் கொடுக்க முன்வந்தோம். என்ன காரணத்தாலோ அவர்கள் அதனை ஏற்கவில்லை.  மாறாக அவர்கள் சனாதிபதியை போய்ச் சந்தித்தார்கள்.

அவர்கள் ஏதோ சில பேரங்களை செய்து கொண்டு ஐமசுமு மாகாண அரசாங்கத்தை ஆதரித்தார்கள். அதன் பலனாக ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வந்தார்.  சிலமுகா  சில  அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொண்டது.

கிழக்கில் பதினொரு பெரும்பான்மை இருக்கைகளைக் கொண்ட தமிழர்கள் எதிர்வரிசையில் இருப்பார்கள் என்று யாரும் எண்ணவில்லை. ஆனால் இன்று நிலைமை முற்றிலும் வேறானது.  றிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (அஇமகா) வெளியேறிவிட்டது. மேலும் ஒரு சபை உறுப்பினர் பத்திரானவும் வெளியேறிவிட்டார்.  சிலமுகா,  ஐமசுமு இல் இருந்து விலகி மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்கிறது. இந்தப் பின்னணியில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள இருக்கைகள் எத்தனை என்பதை கணித்தோம். எங்களுக்கு 11, ஐமசுமு 10, சிலமுகா 8 மற்றும் ஐதேக 4 இருக்கைகள்.

எனவே இன்று அதிக எண்ணிக்கையள்ள இருக்கைகளை வைத்துள்ள கட்சி என்ற முறையிலும் அமைச்சர் அவையில் அமைச்சர் பதவி எதுவும் இல்லாத நிலையிலும் நாங்கள் சிலமுகா ஓடு பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் முதலமைச்சர் பதவி தந்தாக வேண்டும் என்று நிற்கிறார்கள். அதற்கான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதுகாலவரை அவர்கள் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை ஆதரித்தார்கள். இப்போதும்  முதலமைச்சர் பதவியைக் கேட்கிறார்கள்.

எங்கள் மக்களுக்கு அது நியாயமற்றது என்பதால் நாங்கள் முடியாது என்று சொன்னோம்.  நாங்கள்தான் அந்தப் பதவியைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள். சிலமுகா அதற்கு நேர்மறையான எதிர்வினையைக் காட்டவில்லை.  அவர்கள் மத்திய அரசில் அமைச்சர் பதவிகளை ஏற்றுள்ளார்கள். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குமுறை தமிழர்களது கிளர்ச்சியால்தான் சாத்தியமானது. வேறு யாரும் அப்படிச்  செய்யவில்லை. இருந்தும் அவர்கள் (தமிழர்கள்) நிருவாகத்தில் பங்கெடுக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

எங்களை முன்றாக விட்டுவிட்டு சிலமுகா  முன்னைய ஐமசுமு ஓடு சேர்ந்து நிருவாகத்தை உருவாக்கியது. இது மிகவும் துரதிட்டானது. மிகவும் அநீதியானது.

கேள்வி: கிழக்கில் வேறு சில முஸ்லிம் தலைவர்கள் ததேகூ ஓடு சேர விரும்புகிறார்களா?

பதில்: நாங்கள் றிசாட் பதியுதீனோடும் மற்றவர்களோடும் பேச முடியும். ஆனால் சிலமுகா க்கு கூடுதலான ஆணையிருப்பதால் நாங்கள் அவர்களோடு முதலில் பேசுவதுதான் முறையானது என்று நினைத்தோம். அப்படியே செய்தோம்.

கேள்வி:  நூறு நாள் நிகழ்ச்சிநிரல் பற்றி ததேகூ க்குள் பிரிவினை இருக்கிறதா?

பதில்: இதுவரை யாரும் அப்படி எமக்குச் சொல்லவில்லை. நாங்கள் கட்சித் தலைமைக் குழு மட்டத்திலும் நாடாளுமன்றக் குழு மட்டத்திலும் இதுபற்றிக் கதைத்துள்ளோம்.  யாரும் நூறுநாள் நிகழ்சிநிரல் பற்றித் தங்களுக்கு ஏதாவது மனத்தடங்கல் இருப்பதாகச் சொல்லவில்லை. அவர்கள் அதனை முழுமையாக ஆதரிக்கிறார்கள்.

கேள்வி:  என்டிரிவி தொலைக்காட்சிக்கு அதிகாரப் பரவலாக்கல் பற்றி இரணில் விக்கிரமசிங்கி கொடுத்த நேர்காணல் தொடர்பாக சிறிது சச்சரவு இருப்பதாகத் தெரிகிறது. அது பற்றி விளக்க முடியுமா?

பதில்: பிரதமர் அதிகாரப் பரவலாக்கல் முன்னைய அரசாங்கம் முட்டுக்கட்டை போட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் செய்யப்படும் என்று சொன்னார்.  ஆனால் நாங்கள் எல்லோருக்கும் சொல்லிவிட்டோம். 13 ஆவது சட்ட திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்துவது இனச் சிக்கலுக்கு இறுதித் தீர்வல்ல.  ஒட்டு மொத்தத்தில் பிரதமரது செய்தி என்னவென்றால் அவர் மாகாண சபைகள் மாகாண சபைக்குரிய அதிகாரங்களை எடுத்துக் கொள்வதைத் தான் அனுமதிக்கப் போவதாகச் சொல்கிறார்.
கேள்வி: ததேகூ 17 ஆவது திருத்தம் மற்றும் 19 ஆவது திருத்தம் இரண்டையும் ஆதரிக்குமா?

பதில்: நாங்கள் 17 ஆவது சட்ட திருத்தத்தை ஆதரிப்போம். 19 ஆவது சட்ட திருத்தம்  இன்னமும் வரைவு வடிவத்தில் இருக்கிறது. அது வரும்போது அதனை நாம் ஆதரிப்போம்.

கேள்வி: கிடைக்கும் அறிக்கைகளின்படி வட மாகாண சபை அமைச்சர்கள் தகுதியுள்ள  குடும்பங்களுக்கு  வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உதவிகளைச் செய்து கொடுப்பதற்கு விரிவான திட்டங்களைத் தீட்டுவதாக சொல்லப்படுகிறது. அப்படியான திட்டங்களுக்குப் புலம்பெயர் சமூகத்தின்  நிதியுதவி கிடைக்குமா?

பதில்:  தகுதியுள்ள குடும்பங்களுக்கு சரியான உதவி செய்ய அரசாங்கத்திடம் இருந்தும் வேறு வட்டாரங்கள் இடத்தில் இருந்தும்  நிதியுதவி பெறுவது ஒரு சிக்கலாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் எமது வேலையைச் சரியாகச் செய்தால் வேண்டியளவு நிதியுதவி கிடைக்கும்.

கேள்வி: முன்னைய இராணுவ ஆளுநருக்குப் பதிலாக வட மாகாண சபைக்கு திரு பள்ளிகக்கார என்ற ஒரு சிவிலியனை ஆளுநராக நியமித்திருப்பது பற்றி உங்கள் விளக்கம் என்ன?

பதில்: இது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம். இப்போதுள்ள அரசாங்கம் இராணுவ ஆளுநரை மாற்றியதன் மூலம் தனது வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளது. இரண்டாவதாக திரு பள்ளிகக்கார எல்லோருக்கும் தெரிந்த ஒரு நேர்மையான மனிதர். முதலமைச்சர் அவரோடு உள்ளன்போடு வேலை செய்ய முடியும் என நம்புகிறோம்.  ஆளுநர் முதலமைச்சர் விரும்பும் எதனையும் முடக்க மாட்டார் என்பது மட்டுமல்ல முதலமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனுசரணையாக இருப்பார் என நம்புகிறோம்.
கேள்வி:  ஊடகங்களில் வெளியான  செய்திகளின் படி அரசாங்கம் ததேகூ இடம் காணாமல் போனோர்களை விடுவிக்க அவர்களைப் பற்றிய ஒரு பட்டியலை தருமாறு கேட்டுள்ளது. அப்படியான பட்டியல் உங்களிடம் இருக்கிறதா?

பதில்: எங்களிடம் ஒரு பழைய பட்டியல் இருக்கிறது. அது புதிதாகத் திருத்தப்பட வேண்டும். அதனை நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி:  வடமாகாண மீனவர்களுக்குக்  கேடு விளைவிப்பதாக இருக்கும் இந்தியா – இலங்கை இரண்டுக்கும் இடையில் உள்ள எல்லையைக் கடந்து மீன்பிடிக்கும்  சிக்கல் தீர்க்க முடியாமல் இருக்கிறது?

பதில்: எல்லையைக் கடப்பது முக்கிய சிக்கல் அல்ல. எது முக்கியம் என்றால் மீன்பிடிக்கிற முறைதான். நாங்கள் இது பற்றி இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம்.

அவர்கள் அந்த மீன்பிடி முறை தடைசெய்யப்பட வேண்டும் என்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இந்திய மீனவர்களது படகுகள் ஆழ்கடல் மீன்பிடிக்கு ஏற்றவாறு மீள் வடிவமைக்க வேண்டும். இப்படி மாற்றி அமைப்பதற்கு 6 மாதம்  தொடங்கி ஓர் ஆண்டுகாலம் தேவைப்படலாம். அவர்களுக்கு நாம் கால அவகாசம்  கொடுக்க வேண்டும். அதன் பின் சட்டங்களைக் கொண்டு வந்து றோலர் படகுகளை வைத்து மீன்பிடிப்பதைத்  தடை செய்ய வேண்டும். நாங்கள் எங்களது மீனவர்களுக்கு அதற்குரிய தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி பற்றிய அடிப்படை அறிவை வழங்க வேண்டும் என்று அவர்களை (இந்தியாவை) கேட்டுள்ளோம். (தமிழாக்கம் நக்கீரன்)

(Ekuruvi – February 30-01.2015)


 

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply